Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances - Tamil Supplement LAW DEPARTMENT--ACTS (TAMIL) - ACT No. 23/2023--An Act for consolidation of lands for implementation of projects of importance in the State and for purposes incidental thereto or incidental thereto.

Published 18 October 2023

Type
Ordinary
Gazette no.
42
Part
Part IV
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-10-18.Ordinary_42_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2023 [விலை: ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 42] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 18, 2023 ஐப்பசி 1, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண்.23/2023.

மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலங்களை ஒருங்கிணைப்பதற்கும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்காகவுமானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு

(சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும்

அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள் வரையறைகள்.

2. இந்தச் சட்டத்தின் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,-

(a) "ஆட்சியர்" என்பது, மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்தச் சட்டத்தின் கீழ் ஆட்சியரின் பணிகளை செயல்படுத்துவதற்கு அரசால் இதற்கென நியமிக்கப்பட்ட அலுவலர் எவரையும் உள்ளடக்கும் என்று பொருள்படும்;

(b) "தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு" என்பது, இந்தச் சட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும், செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கும் அரசினால் அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கப்பட்ட அலுவலர், குழு அல்லது அதிகார அமைப்பு எதுவும் என்று பொருள்படும்;

(c) "நிபுணர் குழு" என்பது, 4 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி

அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று பொருள்படும்;

(d) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;

மையச்சட்டம் 69/1980. (e) இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக "அரசு நிலம்" என்பது, அரசிடம் உற்றமைந்துள்ள அல்லது அரசு உடைமையாக கொண்டிருக்கிற, நிலங்கள் என்று பொருள்படும், ஆனால் 1980-ஆம் ஆண்டு வன (பாதுகாப்புச்) சட்டத்தின் வரம்பெல்லையின் கீழ் நிலம் எதனையும் உள்ளடக்காது;

(f) "உரித்தமுடைய நபர்" என்பது, திட்ட நிலத்தில் அல்லது அதிலிருந்து பத்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வழக்கமாக வசிக்கக்கூடிய நபர் எவரும் என்று பொருள்படும் மற்றும் திட்ட நிலத்தின் பகுதி எதுவும், அவரின் வழியுரிமையில் அல்லது சொந்தத்தில் இருந்தால் அத்தகைய தொலைவிற்கு அப்பாற்பட்டுள்ள நபரெவரையும் உள்ளடக்கும்;

IV-2-42-(T-Sup)-1

[1]2 மையச்சட்டம் 30/2013.

தமிழ்நாடு சட்டம்

31/1978.

தமிழ்நாடு சட்டம்

10/1999. தமிழ்நாடு

சட்டம் 34/2002.

(g) "நிலம் கையகப்படுத்துதல் சட்டம்" என்பது, 2013- ஆம் ஆண்டு நியாயமான இழப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் என்று பொருள்படும் மற்றும் அந்தச் சட்டத்திற்கான நான்காம் இணைப்புப் பட்டியலிலுள்ள சட்டம் எதனையும், 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கும்;

(h) "திட்ட நிலம்" என்பது,-

(i) திட்ட சார்பாளர் உடைமையாக கொண்டிருக்கிற நிலம்;

(ii) நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அத்தகைய நிலங்களை கையகப்படுத்துதலுக்காக அரசு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இருப்பினும், அரசு அல்லது அரசு சார்புடைய முகைமை தவிர நபர் எவருக்கும் சொந்தமான தனியார் நிலங்கள்;

(iii) அரசு நிலங்கள் அல்லது அதன் இடையேயான அரசு சார்புடைய நிலங்கள் அல்லது (i) மற்றும் (ii)-உட்கூறுகளில் சுட்டப்பட்ட நிலங்களை ஒட்டிய நிலங்கள்;

ஆகியன உள்ளடங்கலான திட்டத்திற்கு தேவையான மொத்தமான

நிலங்கள் என்று பொருள்படும்;

(i) "திட்ட சார்பாளர்" என்பது, நூறு ஹெக்டேருக்கு குறையாத பரப்பளவு தேவைப்படும் உள்கட்டமைப்பு, தொழில்துறை, வணிகம் அல்லது வேளாண் தன்மையிலான திட்டம் ஒன்றினை செயல்படுத்துவதற்கு முன்மொழிகின்ற நபர் எவரும் என்று பொருள்படும்;

(j) "அரசு சார்புடைய முகமை" என்பது, உள்ளாட்சி அதிகார அமைப்பு, பல்கலைக்கழகம், அரசு நிறுமம் அல்லது மாநில சட்டமன்றத்தின் இயற்றுச் சட்டத்தின் கீழ் அமைத்துருவாக்கப்பட்ட மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள வாரியம் அல்லது அதிகார அமைப்பை உள்ளடக்கியது என்று பொருள்படும்;

(k) "அரசு சார்புடைய நிலம்" என்பது, அரசு சார்புடைய முகமை

உடைமையாக கொண்டிருக்கிற நிலம் என்று பொருள்படும்;

(l) "சிறப்புத் திட்டம்" என்பது, நூறு ஹெக்டேர் நிலத்திற்கு குறையாமல் தேவைப்படும் மற்றும் அரசினால் அத்தகையவாறு அறிவிக்கை செய்யப்படலாகும் திட்டம் எதுவும் என்று பொருள்படும்.

திட்ட நிலத்தினை

ஒருங்கிணைப்-

பதற்கான

3. (1) திட்ட சார்பாளரானவர், திட்ட நிலத்தினை ஒருங்கிணைப்பதற்கான முன்மொழிவு ஒன்றுக்கான விண்ணப்பத்தை வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில் அரசிற்குச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பம்.

(2) திட்ட நிலத்தினை ஒருங்கிணைப்பதற்கான முன்மொழிவானது,-

(a) (i) திட்ட நிலத்தில், ஒட்டு மொத்த சேமிப்பு நீர்

குறைக்கப்படாது; மற்றும்

(ii) வாய்க்கால்களின் கொள்திறம், நீர் செல்வழி அல்லது நீரோட்டத்திற்கான பிற ஏற்பாடுகள் எதுவும், திட்ட நிலத்தின் மேல்நிலை மற்றும் கீழ்நிலை ஆகிய இரண்டு வகையிலும் குறைக்கப்படாது, என வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழுடன் நீரியல் திட்டம் ஒன்று இருத்தல் வேண்டும்;

(b) வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில், திட்ட நிலத்தின் உடைமை

உரிமையின் விவரங்களைக் கொண்ட நில உடைமை உரிமைத் திட்டம்,

(c) வகுத்துரைக்கப்பட்ட படிவத்தில், திட்ட நிலத்தின் பயன்பாட்டின் விவரங்களைக் கொண்ட நிலப் பயன்பாட்டுத் திட்டம், ஆகியவற்றை கொண்டிருத்தல் வேண்டும்.

சிறப்பு திட்டத்தின்

அறிவிக்கை.

4. (1) 3- ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பம் ஒன்றை பெறுவதன் பேரில், வகுத்துரைக்கப்பட்ட காரணிகள் மற்றும் நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அரசு மனநிறைவடைந்தால், இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, இந்தத்திட்டத்தை ஒரு சிறப்பு திட்டமாக அறிவிக்கை செய்யலாம் மற்றும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ள மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பத்தை மேலனுப்புதல் வேண்டும்.

3

(2) கூடிய விரைவில், சிறப்புத் திட்டத்தின் அறிவிக்கையின் பேரில், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அரசானது அமைத்தல் வேண்டும், அதாவது:-

(i) திட்ட நிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்ட நீர்வளத்துறை

கண்காணிப்பு பொறியாளர்-தலைமையாளர்;

(ii) திட்ட நிலத்தின் மீது அதிகார வரம்பைக் கொண்ட கால்நடை

பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குநர்-உறுப்பினர்;

(iii) அரசால் நியமனஞ்செய்யப்பட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு அல்லது

நீர் மேலாண்மை துறையில் சிறந்த நபர் ஒருவர்-உறுப்பினர்;

(iv) அரசால் நியமனஞ்செய்யப்பட்ட கட்டடப் பொறியியல், நீரியல், சூழலியல், சுற்றுச்சூழல் அல்லது தொடர்புடைய பாடங்களின் துறையில் சிறந்த கல்வியாளர் ஒருவர்-உறுப்பினர்; மற்றும்

(v) குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகின்ற மாவட்ட

வருவாய் அலுவலர்.

நில ஒருங்கிணைப்பின்

முன்மொழிவினை

வெளியிடுதல்.

5. (1) நிபுணர் குழுவானது, திட்ட சார்பாளரின் நில ஒருங்கிணைப்பு முன்மொழிவை வெளியிடுதல் வேண்டும் மற்றும் உரித்தமுடைய நபர்களின் கருத்துக்களைக் கண்டறிவதற்கு, வகுத்துரைக்கப்படலாகும் முறையில், பொது விசாரணைக்கான தேதி, நேரம், மற்றும் இடம் பற்றிய போதுமான விளம்பரம் செய்த பிறகு ஒருங்கிணைப்பாளரால் பொது விசாரணை நடத்தப்படுதல் வேண்டும்.

(2) நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரானவர், அரசு சார்புடைய முகமை ஏதேனுமிருப்பின் அதனையும் கலந்தாலோசனை செய்து, திட்ட நிலம் உற்றமைந்துள்ளவர்களிடம் திட்டத்திற்காக அவர்களது நிலத்தை விட்டுக்கொடுப்பதற்கு அவர்களின் ஒப்புதலையும் பெறுதல் வேண்டும்.

வரைவு நில

ஒருங்கிணைப்பு

திட்டம்.

6. (1) நிபுணர் குழுவானது, திட்ட சார்பாளரின் முன்மொழிவின் அடிப்படையில், உரித்தமுள்ள நபர்களின் கருத்துகள் பொருந்தக்கூடியதாயின், அரசு சார்புடைய முகமையின் ஒப்புதல் அல்லது பிறவானவற்றை மற்றும் குழுவின் கருத்துகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும் மற்றும் அதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதலுக்காக சமர்பித்தல் வேண்டும்.

(2) ஒப்புதலின் பேரில், ஆட்சியரானவர் அதை மாவட்ட அரசிதழிலும், இரண்டு முதன்மையான தினசரி நாளிதழ்களிலும் வெளியிடுதல் வேண்டும். அவற்றுள் ஒன்று தமிழில் இருத்தல் வேண்டும். வரைவு ஒருங்கிணைப்புத் திட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து முப்பது நாட்களுக்குள் உரித்தமுள்ள நபர் எவரும் தங்களது ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக ஆட்சியரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

வரம்புரையாக, வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டமானது, திட்ட சார்பாளரின் நிலங்கள் தவிர, வேறு நபர்களின் நிலங்கள் அரசிடம் உற்றமைந்திருந்தாலன்றி, வெளியிடப்படுதல் ஆகாது.

இறுதி நில

ஒருங்கிணைப்புத்

திட்டம்.

7. (1) ஆட்சியரானவர், வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்கள் காலாவதியாகும்போது, வரைவு நில ஒருங்கிணைப்பு திட்டம் மற்றும் ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் எதனையும் பெற்றால், தகுதிவாய்ந்த அதிகார அமைப்புக்கு, அதன் மீதான பரிந்துரையையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

(2) தகுதி வாய்ந்த அதிகார அமைப்பானது, வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டம் பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், திட்ட சார்பாளரால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், இணங்குவதற்கு ஒப்புதல் அளித்தல் வேண்டும் அல்லது அது பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தல் வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின்படி தகுதிவாய்ந்த அதிகார அமைப்பினால் வரைவு நில ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன்பேரில், அது இறுதியானதாகும் மற்றும் இறுதி நில ஒருங்கிணைப்புத் திட்டம் தமிழ்நாடு அரசிதழிலும், அந்தப் பகுதியின் இரண்டு முதன்மையான தினசரி நாளிதழ்களிலும் வெளியிடப்படுதல் வேண்டும். அதில் ஒன்று தமிழில் இருத்தல் வேண்டும்:

4

வரம்புரையாக, திட்ட சார்பாளர் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லையெனில், தகுதிவாய்ந்த அதிகார அமைப்பானது, முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இறுதி நில ஒருங்கிணைப்பு திட்டத்தை ரத்து செய்யலாம் அல்லது மாற்றியமைக்கலாம்:

மேலும் வரம்புரையாக, அத்தகைய ரத்து அல்லது மாற்றமானது திட்ட சார்பாளருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டாலன்றி செய்யப்படுதல் ஆகாது.

மேல்முறையீடு. 8. (1) 7 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் படி ஏற்படுத்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் முடிவு ஒன்றினால் பாதிப்படைந்த நபர் எவரும், இறுதி நில ஒருங்கிணைப்புத் திட்டத்தின் வெளியீட்டுத் தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.

(2) (1) ஆம் உட்பிரிவின்படி, மேல்முறையீடு ஒன்றினை பெற்றதன்பேரில், அரசானது, மேல்முறையீட்டாளருக்கு கேட்பதற்கான வாய்ப்பினை வழங்கிய பின்னர், மேல்முறையீட்டினை இரண்டு மாத கால அளவிற்குள் முடிவு செய்தல் வேண்டும்.

பதிவுருக்களைக்

கோருவதற்கான

அரசின் அதிகாரம்.

9. அரசானது, தாமாகவோ அல்லது நபர் எவராலும் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரிலோ, எந்த நேரத்திலும், ஆட்சியர், நிபுணர் குழு அல்லது தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு ஆகியவற்றினால் நிறைவேற்றப்பட்ட ஆணை, தயாரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட திட்டம் எதனுடைய சட்ட உரிமை அல்லது தகுதியுடைமை குறித்து அவர்களை மனநிறைவடையச் செய்வதன் நோக்கத்திற்காக, தகுதி வாய்ந்த அதிகார அமைப்பின் முன்பு நிலுவையிலுள்ள அல்லது அவற்றால் முடிவு செய்யப்பட்ட வழக்கு எதனின் பதிவுருக்களையும் கோரலாம் மற்றும் ஆய்வு செய்யலாம் மற்றும் அது பொருத்தமெனக் கருதலாகும், அதில் குறித்திடலாகும் அத்தகைய ஆணையை நிறைவேற்றலாம்:

வரம்புரையாக, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கேட்பதற்கான வாய்ப்பொன்றினை வழங்காமல், ஆணை அல்லது திட்டம் எதுவும், மாற்றப்படவோ அல்லது மாற்றவோ கூடாது.

நீர் நிலைகளை

பாதுகாத்தல்

10. (1) ஒரு நதி, நீரோடை அல்லது பிற நீர்வழிகள் இயற்கை நிகழ்வுகளால் அதன் போக்கை மாற்றி, நபர் எவருக்கும் சொந்தமான நிலத்தின் வழியாக செல்லும் சந்தர்ப்பங்களில், நிலத்தின் உரிமையாளர், தனக்குச் சொந்தமான நிலத்துக்குப் மாற்றாக அரசு முடிவு செய்யும் நிலம் வழங்கக் கோரி வகுத்துரைக்கப்பட்ட படிவத்திலும் முறையிலும் விண்ணப்பம் ஒன்றை ஆட்சியருக்கு அனுப்பலாம்.

(2) ஆட்சியர், வருவாய் பதிவேடுகளை சரிபார்த்து, இட அமைப்பு விவர மதிப்பீட்டை ஏற்படுத்திய பிறகு, இந்த பொருட்பாடுகளில் தொடர்வதற்கு முதல் நோக்கு உள்ளதெனில், விண்ணப்பத்துடன் அரசுக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும்.

(3) ஆட்சியரின் அறிக்கை பெறப்பட்டதிலிருந்து அறுபது நாட்களுக்குள், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செய்ய, 4 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

(4) அதன் பிறகு, அரசு நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்

பொருத்தமான இறுதி ஆணைகளை வெளியிடுதல் வேண்டும்.

அலுவலர்கள் மற்றும்

மையச்சட்டம் XLV/1860.

பணியாளர்கள்

பொது ஊழியர்களாக

11. இந்தச் சட்டத்தின் படி செயல்படுகின்ற அலுவலர் மற்றும் பணியாளர் ஒவ்வொருவரும் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் பொருள்வரையறைக்குள் வருகின்ற பொது ஊழியராக கருதப்படுதல் வேண்டும்.

இருத்தல்.

நல்லெண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைக்குப்

12. இந்தச் சட்டத்தின் படி நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்கருதப்பட்ட எதற்காகவும், அதிகார அமைப்பு, அலுவலர் அல்லது பிற பணியாளர்கள் எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.

பாதுகாப்பு.

இடர்ப்பாடுகளை

நீக்குவதற்கான

அதிகாரம்.

13. இந்தச் சட்டத்தின் வகைமுறை எதையும் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசு, தமிழ்நாடு அரசிதழில், வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில், இந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதும் உகந்ததுமான அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:

வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் காலாவதியான பின்னர் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.

5

விதிகளைச் 14. (1) அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை மேற்கொள்வதற்காக

செய்வதற்கான விதிகளைச் செய்யலாம்.

அதிகாரம்.

(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில், வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(b) இந்தச் சட்டத்தின் படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இந்தச் சட்டத்தின் கீழ், செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு அத்தகைய விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கு குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிகுமார்,

அரசு செயலாளர்(சட்டமியற்றல்),

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வே. தமிழ்ச்செல்வன், தமிழ்ப்பிரிவு,

சட்டத்துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 October 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-10-18.Ordinary_42_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-10-18.Ordinary_42_Part-IV_Section-2-T-Sup.