Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. ADI DRAVIDAR AND TRIBAL WELFARE DEPARTMENT--Modification for Tribal Welfare Board - Notification No. II(1)/ADTW/32/2023.--G.O. Ms. No. 121, Adi Dravidar and Tribal Welfare Department, 8th September 2023

Published 01 November 2023

Type
Ordinary
Gazette no.
43
Part
Part II
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2023-11-01.Ordinary_43_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2023

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 43] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 1, 2023 Aippasi 15, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

108-110 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு தமிழ்நாடு பழங்குடியின நல வாரியம் திருத்தியமைத்தல்

[107]

DTP—II-1—43108 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

No. II(1)/ADTW/32/2023

[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - பழங்குடியினர் மேம்பாடு தமிழ்நாடு பழங்குடியின நல வாரியம் திருத்தியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண். 121, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் [ப.மே.1(2)] துறை 8 செப்டம்பர் 2023, ஆவணி 22, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

படிக்கப்பட்டது:-

1. அரசாணை (நிலை) எண். 48, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (பமே.1) துறை நாள் 20.04.2007

2. அரசாணை (நிலை) எண். 87, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (பமே.1) துறை நாள் 12.07.2007

3. அரசாணை (நிலை) எண். 33, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (பமே.1) துறை நாள் 20.03.2008

4. அரசாணை (நிலை) எண். 119, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (பமே.1) துறை நாள் 15.10.2008

5. இயக்குநர் பழங்குடியினர் நலம், சென்னை-5 அவர்களின் கடிதம் ந.க.எண். பமே அ3/4852/2023, நாள் 20.06.2023 மற்றும் 04.09.2023

ஆணை:-எண். 121, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, 8 செப்டம்பர் 2023.

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அமைச்சரை தலைவராகக் கொண்டு பழங்குடியினர் நல வாரியம் அமைத்து ஆணையிடப்பட்டது. இவ்வாரியத்திற்கு 6 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 13 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்தும் ஆணை வெளியிடப்பட்டது.

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஒரு முதல் நிலைக் குழுவாக செயல்படவும், அரசு சாரா உறுப்பினர்களின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளாக நிர்ணயித்தும், வாரிய உறுப்பினர்களுக்கு அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் விதிகளுக்குட்பட்டு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டது.

3. மேலே மூன்றவாதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உதவி தொகை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டது.

4. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் கீழ்க்காணும் துறைத் தலைவர்களை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக கூடுதலாக சேர்த்து நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.

1. முதன்மை பொறியாளர் (பொது) நெடுஞ்சாலைத்துறை.

2. முதன்மை தலைமை வனப்பாதுகாப்பு அலுவலர்.

5. மேலே ஒன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தின் காலம் முடிவுற்ற நிலையில், மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட பழங்குடியினர் நல இயக்குநர் கடிதத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தை 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 14 அலுவல் சாரா உறுப்பினர்கள் (2 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட), 3 பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆகியோர்களை கொண்டு திருத்தியமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

6. மேலே பத்தி ஐந்தில் குறிப்பிடப்பட்ட பழங்குடியினர் நல இயக்குநரின் பரிந்துரையை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தை மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களை தலைவராக கொண்டும் 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 2 பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய 14 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 3 பழங்குடியினரல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு பின்வருமாறு திருத்தி அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.

I தலைவர் : மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நல்ம்)
II அலுவல் சார்ந்த உறுப்பினர்கள்
1. அரசுச் செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
2. அரசுச் செயலாளர், நிதித்துறை.
3. அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை.
4. மேலாண்மை இயக்குநர், தாட்கோ.
5. இயக்குநர், ஆதிதிராவிடர் நலம்.
6. இயக்குநர், பழங்குடியினர் நலம்-உறுப்பினர் செயலாளர்.
7. முதன்மைப் பொறியாளர் (பொது), நெடுஞ்சாலைத்துறை.
8. முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், சென்னை-600 015.
Nov. 1, 2023] TAMIL NADU GOVERNMENT GAZETTE 109

III. பழங்குடியின அலுவல் வாரா உறுப்பினர்கள்

வ . எண். பெயர் மற்றும் முகவரி
1. திரு. பொன்னுசாமி, சட்டமன்ற உறுப்பினர், சேந்தமங்கலம் தொகுதி, நாமக்கல் மாவட்டம்.
2. திருமதி கு. சித்ரா, சட்டமன்ற உறுப்பினர், ஏற்காடு தொகுதி, சேலம் மாவட்டம்.
3. திரு. பாலா (எ) பாலசுந்தரம், த/பெ. தங்கையா, எண். 3/159, வாசலூர்பட்டி, தின்னனூர்நாடு, கொல்லிமலை வட்டம், நாமக்கல் மாவட்டம்.
4. திருமதி மஞ்சு, க/பெ. கன்னியப்பன், சஞ்சீவிராயன்பேட்டை முதல் தெரு, திமிரி பேரூராட்சி, வேலூர் மாவட்டம்.
5. திரு. ரவி. த/பெ. கண்ணன், எண். 391, பிள்ளையார் கோவில் தெரு, நெடுபட்டு ஆவூர், திருவண்ணாமலை மாவட்டம்.
6. திருமதி. மல்லிகா, க/பெ. முத்துக்குமார், எண்.70, எம்.ஜி.ஆர். நகர், கிள்ளை பேரூராட்சி பரங்கிப்பேட்டை வட்டம், கடலூர் மாவட்டம்.
7. திரு. வெற்றிகொண்டான், த/பெ. குள்ளன், நடுத்தெரு, மணியார்பாளையம், கல்வராயன்மலை வட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம்.
8. திரு. முருகேசன், த/பெ. வரதன், பெரியமதூர் கிராமம், மாரமங்கலம், ஊராட்சி, பெலாக்காடு அஞ்சல், ஏற்காடு வட்டம், சேலம் மாவட்டம்.
9. திரு. விஜயன் (எ) சங்கர், த/பெ. துரைசாமி, பெரிய எட்டிப்பட்டு கிராமம், தொங்குமலை அஞ்சல், பீஞ்சமந்தை ஊராட்சி, அணைக்கட்டு வட்டம், வேலூர் மாவட்டம்.
10. திரு. சங்கிலி த/பெ. ஆண்டி, பேச்சியம்மன் சோலை (அ) குறவன் வழி, அகமலை ஊராட்சி, தேனி மாவட்டம்.
11. திரு. வெங்கடேசன், த/பெ. திருமலை, செல்லங்குறிச்சி, தேக்கம்பட்டு அஞ்சல், பெத்தநாயக்கன், பாளையம் வட்டம், சேலம் மாவட்டம்.
12. திரு. கு. காளியப்பன், த/பெ. குப்பாகவுண்டர், சேந்தமங்கலம் வட்டம், வாழவந்திகோம்பை பஞ்சாயத்து, காரவள்ளி மெயின் ரோடு, புளியங்காடு, நாமக்கல் மாவட்டம்.
13. திரு. வேலுசாமி, த/பெ. பிச்சாண்டி, சின்ன மயிலாறு, காரையாறு, திருநெல்வேலி மாவட்டம்.
14. திரு. குணசேகரன், த/பெ. ராமன், கலசப்பாடி கிராமம், சித்தேரி அஞ்சல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தருமபுரி மாவட்டம்.
IV. பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள்
வ . எண். பெயர் மற்றும் முகவரி
15. திரு. ரேஞ்சர், த/பெ. திருவாம்மூரான், பணிகண்குப்பம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம்.
16. திரு. பூபதி, த/பெ. சென்றாயன், எண். 3A, இச்சிக்குட்டை காலனி, காளப்ப நாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
17. திரு. அ. அசோக்குமார், த/பெ. அழகப்பன், எண். 7/1, தெற்குத் தெரு, காளப்பநாயக்கன்பட்டி, புதூர், சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம்.
110 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

7. இவ்வாணை அரசாணை (நிலை) எண்.334, நிதி (வரவு-செலவு பொது) துறை, நாள். 22.10.2023 இன்படி நிதித்துறையின் ஒப்புதலின்றி வெளியிடப்படுகிறது.

க. லட்சுமி பிரியா, அரசு செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 01 November 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-11-01.Ordinary_43_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2023-11-01.Ordinary_43_Part-II_Section-1.