Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.- Tamil Supplement HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT--GOVERNMENT NOTIFICATIONS (TAMIL TRANSLATION)--Amendment Notification - G.O. Ms. No. 16, Housing and Urban Development [UD4(2)] Department, 8th February 2023. G.O. Ms. No. 130, Housing and Urban Development [UD4(2)] Department, 21st September 2023. G.O. Ms. No. 131, Housing and Urban Development [UD4(2)] Department, 21st September 2023. G.O. Ms. No. 61, Housing and Urban Development [I1] Department, 30th March 2023. G.O. D. No. 325, Housing and Urban Development [J2] Department, 15th June 2023. G.O. Ms. No. 127, Housing and Urban Development [I1] Department, 21st July 2023.

Published 22 November 2023

Type
Ordinary
Gazette no.
46
Part
Part II
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2023-11-22.Ordinary_46_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2023

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 46] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 22, 2023 கார்த்திகை 6, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 16, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 08 பிப்ரவரி 2023.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 31.01.1996 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 74 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறையின் II(2)/HOU/218/96 ஆம் எண் அறிவிக்கையில் திருத்துறைப்பூண்டி உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சென்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதாவது:-

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

அவையாவன :-

அட்டவணை

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்

திருத்துறைப்பூண்டி வட்டம்

29. வேளூர்

38. பாமணி

53. கட்டிமோடு

35. நெடும்பாலம்

30. தீவம்மாபுரம்.

[அரசாணை (நிலை) எண். 70, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 04 ஜூலை 2023.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 208 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் II-2-(46) (T Sup)—1

[ 1 ]2 உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2014/1974 ஆம் எண் அறிவிக்கையில் சங்கரன்கோவில் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து, பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதாவது:-

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

அதாவது:-

அட்டவணை

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.

சங்கரன்கோவில் வட்டம்

13. களப்பாகுளம்

27. தெற்கு சங்கரன்கோவில்

15. வடக்குபுதூர்

17. நொச்சிகுளம்

18. பொய்கை

30. கோ.மருதப்புரம்

28. பெரியகோவிலான்குளம்

திருவேங்கம் வட்டம்

30. மலையான்குளம்

18. பெரூங்கோட்டூர்."

[அரசாணை (நிலை) எண். 130, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 21 செப்டம்பர் 2023.] 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், எடப்பாடி உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்த்து, 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 209-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II(2)/RUL/2021/1974 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள அட்டவணையில் பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

அட்டவணை

வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.

05. சித்தூர்

04. செட்டிமாங்குறிச்சி

12. ஆவணிபேரூர் கிழக்கு (பகுதி)

23. குரும்பப்பட்டி

08. வெள்ளரிவெள்ளி.

[அரசாணை (நிலை) எண். 131, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 21 செப்டம்பர் 2023.] தமிழ்நாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கூத்தாநல்லூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியுடன் கீழ்கண்ட வருவாய் கிராமங்களை சேர்த்து, 12.01.2000 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 6-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் II(2)/HOU/30/2000 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார். மேலும் இதற்கான நோக்கமானது மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

3

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப்பதிலாக பின்வரும் அட்டவணை அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

அதாவது:-

அட்டவணை

"வருவாய் கிராமங்களின் பெயர் மற்றும் எண்.

19. அதங்குடி

17. ஆய்குடி

18. சேகரை

16. வக்கராநல்லூர்

26. சித்தன்னக்குடி

25. அகரவேளுக்குடி

34. பழையனூர்

42. சாத்தனூர்

36. கொத்தங்குடி

20. வெள்ளக்குடி

அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் ( கூ.பொ) ,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண். 61, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 30 மார்ச் 2023.] 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.

திருத்தங்கள்

மேற்சொன்ன திட்டதில்,

(1) 21ஆம் பகுதியில், (1) துணைப் பகுதியில் உள்ள அட்டவணையில் தொடர் எண்:10 மற்றும் அது தொடர்பான நிகரான பதிவுகளுக்குப் பதிலாக பின்வரும் தொடர் எண்ணும் அது தொடர்பான நிகர பதிவுகளும் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

''10 XIII தொழில் பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) 3,000 3,000 3,000 3,000.".

அல்லது பலதொழில் நுட்ப

பாடப்பிரிவில் பயில்வோருக்கு

(ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்)

(2) 23ஆம் பகுதியில், துணைப் பகுதி (1) இல் உள்ள இனம் (i)-க்குப் பதிலாக, பின்வரும் இனம் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

''(i) மகப்பேறு ரூ.18.000/-

(பேறுகாலத்தின் ஏழாவது மாதம் முதல்

ஒன்பதாம் மாதம் வரையில் ரூ.9,000/-

வழங்கப்படும். மீதமுள்ள ரூ.9,000/-

குழந்தை பிறந்த இரண்டு முதல்

ஐந்து மாதங்கள் வரையில் வழங்கப்படும்.

4

[அரசாணை (ப) எண். 325, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2)த் துறை, 15 ஜுன் 2023.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி மற்றும் 9 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 21-12-2022 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 1119 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/LWSD/987/2022 ஆம் எண்ணுள்ள அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தினை இதனால் செய்கிறார்.

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணையில், "பணியாளர் பிரதிநிதிகள்" என்ற தலைப்பின் கீழ், நெடும்பத்தி (2)-இன் தொடர் எண்கள் (1) மற்றும் (4)-இல் உள்ள பதிவுகள் மற்றும் அதற்கு நிகரான பதிவுகளுக்கு பதிலாக, பின்வரும் பதிவுகள், முறையே அமைத்துக்கொள்ளப்பட வேண்டும். அவையாவன:-

(1) திரு. K. நெடுஞ்செழியன் த/பெ. கந்தசாமி, தொழிலாளர் முன்னேற்றப் பேரவை, 13/48, அம்பலவாணவபுரம் பெரிய தெரு, விக்கிரமசிங்கபுரம் - 627 425. உறுப்பினர்
(2) திரு. V.R. பாலசுந்தரம் த/பெ. ராமசாமி (காலஞ்சென்றவர்), தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம், 1848, திருச்சி சாலை (முதல் தளம்) இராமநாதபுரம், கோயம்புத்ததூர் - 641 045. உறுப்பினர்

[அரசாணை (நிலை) எண். 127, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 21 ஜூலை 2023.] 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5) உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் 24.01.2023 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 1-4 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/தொ.ந.தி.மே/49(e)/2023 ஆம் எண்ணுள்ள அறிவிக்கையில் பின்வரும் திருத்தங்கனை இதனால் செய்கிறார்.

திருத்தம்

மேற்சொன்ன அறிவிக்கையில், "A அரசுப் பிரதிநிதிகள்-", என்கிற தலைப்பின் கீழ், தொடர் எண் 4 மற்றும் அது தொடர்பான பதிவுகளுக்குப் பின்னர் பின்வரும் தொடர் எண் மற்றும் அது தொடர்பான பதிவுகள், சேர்க்கப்பட வேண்டும், அதாவது:-

"5. மாவட்ட ஆட்சியர் மாவட்டம். - உறுப்பினர்.".

[அரசாணை (ப) எண். 448, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 18 ஆகஸ்ட் 2023.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், அது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை - 600 006, டி.எம்.எஸ் வளாகத்திலுள்ள தொழிலாளர் நல ஆணையர் 'அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

5

வரைவு அறிவிக்கை

1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 11.09.2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 773 முதல் 774 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் II(2)/LE/748/2019 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். தமிழ்நாடு மாநிலத்தில் சிறிய அளவிலான தேயிலைத் தோட்டத் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழ்காணும் அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு, குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் இதனால் திருத்தியமைக்கிறார்:-

விவர அட்டவணை

சிறிய அளவிலான தேயிலைத் தோட்டத் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு

தொ. எண் பணியாளர் வகையினர் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு)
( 1 ) ( 2 ) ( 3 )
1. எழுத்தர் மற்றும் கணினி இயக்குபவர் திங்களொன்றுக்கு 7564
2. கணக்கர் திங்களொன்றுக்கு 8093
3. காசாளர் திங்களொன்றுக்கு 8699
4. ஏவலர் அல்லது துணையாள் திங்களொன்றுக்கு 6429
5. காவலாள் திங்களொன்றுக்கு 6429
6. இயந்திரக் கம்மியர் திங்களொன்றுக்கு 8699
7. மின் வினைஞர் திங்களொன்றுக்கு 9228
8. மேற்பார்வையாளர் திங்களொன்றுக்கு 7564
9. உதவி மேற்பார்வையாளர் திங்களொன்றுக்கு 6959
10. சுமையுந்து ஓட்டுநர் திங்களொன்றுக்கு 8093
11. சீருந்து ஓட்டுநர் திங்களொன்றுக்கு 7564
12. தூய்மைப் பணியாளர் திங்களொன்றுக்கு 6429
13. தேநீர் தயாரிப்பவர் திங்களொன்றுக்கு 11497
14. உதவி தேநீர் தயாரிப்பவர் திங்களொன்றுக்கு 9228
15. பெருக்குபவர் (முழு நேரம்) திங்களொன்றுக்கு 6429
16. பெருக்குபவர் (பகுதி நேரம்) திங்களொன்றுக்கு 3215
17. தொழிற்சாலைப் பணியாளர்கள் திங்களொன்றுக்கு 229.50
18. *மேலே குறிப்பிடப்படாத ஏனைய யாதொரு வகைப் பணியாளர் திங்களொன்றுக்கு 229.50
6

விளக்கம்:- (1) அகவிலைப்படி: தொழிலாளர்களுக்கு மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது 2001 ஆம் அண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், திங்களொன்றுக்கு கூடுதலாக ரூ.1.37 (ரூபாய் ஒன்று மற்றும் முப்பத்தேழு காசுகள் மட்டும்) அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.

(ii) 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைப்புள்ளி குறியீட்டு அடிப்படையில் ஒவ்வோராண்டின் முறையே சனவரி முதல் நாளன்றும், ஏப்ரல் முதல் நாளன்றும், ஜுலை முதல் நாளன்றும் மற்றும் அக்டோபர் முதல் நாளன்றும் இரண்டாவது முந்தைய காலாண்டிற்கு ஜுலை முதல் அக்டோபர் முதல் நாளிலிருந்தும், சனவரி முதல் நாளிலிருந்தும் மற்றும் ஏப்ரல் முதல் நாளிலிருந்தும் அகவிலைப்படி கணக்கிடப்படும்.

(iii) மேற்கூறிய நடைமுறையின்படி அமைந்த முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) (a) நாட்கூலியைக் கணக்கிடுவதற்கு, திங்கள் ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.

(b) மாத ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(3) ஒரே பணியை அல்லது ஒத்த தன்மை உடைய பணியை மேற்கொள்ளும்போது ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களிடையே யாதோரு பாகுபாடும் காட்டக்கூடாது.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிங்களிலெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (மு.கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 22 November 2023. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2023-11-22.Ordinary_46_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2023-11-22.Ordinary_46_Part-II_Section-2-T-Sup.