© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2023 [விலை: ரூ. 8.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 46] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 22, 2023 கார்த்திகை 6, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.24/2023.
வணிகவரி மற்றும் பதிவுத் துறையினால் நிருவகிக்கப்படும் குறித்த சில வரிகள் தொடர்பான வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின் நிலுவைகளைத் தீர்வு செய்வதற்காகவும், மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும் வகை செய்வதற்கானதொரு சட்டம்.
தமிழ்நாடு சட்டம்
(i) நீக்கறவு செய்யப்பட்ட 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை
1/1959.
வரிச் சட்டம்,
தமிழ்நாடு சட்டம்
(ii) நீக்கறவு செய்யப்பட்ட 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி
24/1971.
(மேல் வரிச்) சட்டம்,
தமிழ்நாடு சட்டம்
(iii) நீக்கறவு செய்யப்பட்ட 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல்
14/1970.
விற்பனை வரிச் சட்டம்,
தமிழ்நாடு சட்டம்
(iv) நீக்கறவு செய்யப்பட்ட 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர வரிச்
6/1981.
சட்டம்,
தமிழ்நாடு சட்டம்
(v) நீக்கறவு செய்யப்பட்ட 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிப்
20/2001.
பரப்பிடங்களுக்குள் பொருட்களை கொண்டு வருவதன் மீதான வரிச் சட்டம்,
தமிழ்நாடு சட்டம்
(vi) நீக்கறவு செய்யப்பட்ட 1990-ஆம் ஆண்டு உள்ளாட்சிப்
13/1990.
பரப்பிடங்களுக்குள் இயக்கூர்திகள் நுழைவின் மீதான வரிச் சட்டம்,
தமிழ்நாடு சட்டம்
(vii) நீக்கறவு செய்யப்பட்ட 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள்
X/1939.
வரிச் சட்டம்,
தமிழ்நாடு சட்டம்
(viii) நீக்கறவு செய்யப்பட்ட 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளம்பரங்கள்
22/1983.
வரிச் சட்டம்,
தமிழ்நாடு சட்டம்
(ix) நீக்கறவு செய்யப்பட்ட 1935-ஆம் ஆண்டு தமிழ்நாடு பந்தய வரிச்
XX/1935.
சட்டம்,
IV-2-46-(T-Sup)-1
[1]2 தமிழ்நாடு சட்டம் (x) 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், மற்றும்
32/2006.
மையச் சட்டம் (xi) 1956-ஆம் ஆண்டு மைய விற்பனை வரிச் சட்டம்;
74/1956.
ஆகியவற்றின்கீழ், நேர்விற்கேற்ப, வரி, தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகையின் நிலுவைகளைத் தீர்வு செய்வதற்காக வகை செய்வது
உகந்ததாக இருப்பதால்;
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு,
1. (1) இந்தச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிகள் (நிலுவைகளைத்
அளாவுகை
தீர்வு செய்தல்) சட்டம் என அழைக்கப் பெறும்.
மற்றும்
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
தொடக்கம்.
(3) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிக்கக்கூடிய
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருள்
2. (1) இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
வரையறைகள்.
(a) "ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி" என்பது, விவர அறிக்கைகள், வரவு-
செலவுப் புத்தகத்தின் படி செலுத்தத்தக்க வரி அல்லது தொடர்புடைய
சட்டத்தின்கீழ் வரிக்கணக்கிடும் அதிகார அமைப்பினால் கணக்கிடப்பட்ட வரி
என்று பொருள்படும், ஆனால் பூசலுக்குள்ளான வரியை உள்ளடக்காது;
(b) "விண்ணப்பதாரர்" என்பவர், தொடர்புடைய சட்டத்தின் கீழ் வரி செலுத்த
பொறுப்புடையவராகும் வணிகர் அல்லது நபர் எவரும் ஆவார்;
(c) "வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவைகள்" என்பது,
நேர்விற்கேற்ப, தொடர்புடைய சட்டத்தின்கீழ் 2021-ஆம் ஆண்டு மார்ச் திங்கள்
31-ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னதாக வரிக்கணிப்பு செய்யப்பட்டுள்ள,
2017-2018 வரையிலான வரிக்கணிப்பு ஆண்டுகள் தொடர்பான மற்றும் இந்தச்
சட்டத்தின்கீழ் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட தேதியன்று வசூலிக்கப்படுவதற்கு
நிலுவையிலுள்ள,-
(i) தொடர்புடைய சட்டத்தின்கீழ் வரிக்கணிப்பின் பேரில்
விண்ணப்பதாரர் ஒருவரால் செலுத்தத்தக்க விற்பனை வரி, கூடுதல் விற்பனை
வரி, மேல் வரி, கூடுதல் மேல் வரி, மதிப்புக்கூட்டு வரி, மைய விற்பனை வரி,
ஆடம்பர வரி, விளம்பர வரி, கேளிக்கைகள் வரி, நுழைவு வரி அல்லது பந்தய
வரி உள்ளடங்கலான வரி;
(ii) தொடர்புடைய சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவரால்
செலுத்தப்படத்தக்க தண்டத்தொகை ; அல்லது
(iii) தொடர்புடைய சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவரால்
செலுத்தப்படத்தக்க வட்டித்தொகை,
என்று பொருள்படும்;
(d) "தீர்வுசெய்தல் சான்றிதழ்" என்பது, தொடர்புடைய சட்டத்தின்கீழ் வரி,
தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை ஆகிவற்றின் நிலுவைகளைத் தீர்வு
செய்வதற்காக, இந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஒரு சான்றிதழ் என்று
பொருள்படும்;
(e) "உறுதிமொழிப் படிவம்" என்பது, குறைக்கப்பட்ட அல்லது சலுகைவீத
வரியில் சரக்குகளை விற்பனை செய்தல் அல்லது கொள்முதல் செய்தலுக்காக
அல்லது வரி விலக்கிற்காக தொடர்புடைய சட்டத்தின்கீழ் வகுத்துரைக்கப்பட்ட
படிவம் அல்லது சான்றிதழ் என்று பொருள்படும்;
3(f) "நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பு" என்பது
3-ஆம் பிரிவின்கீழ் நியமிக்கப்பட்ட ஓர் அதிகார அமைப்பு என்று பொருள்படும்;
(g) "பூசலிலுள்ள வரி" என்பது, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று
அதிகார அமைப்பு, தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் எதனின் முன்பும் எந்த
வரிக்கணக்கிடும் அதிகார அமைப்பிற்கு எதிராக மேல்முறையீடு, சீராய்வு அல்லது
மறுஆய்வு நிலுவையில் உள்ளதோ, தொடர்புடைய சட்டத்தின்கீழ் உள்ள அந்த
வரிக்கணக்கிடும் அதிகார அமைப்பினால் தீர்மானிக்கப்பட்ட வரியின் மொத்த
அல்லது பகுதி என்று பொருள்படும்;
(h) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(i) "தொடர்புடைய சட்டம்" என்பது, நேர்விற்கேற்ப,-
தமிழ்நாடு சட்டம்
(i) நீக்கறவு செய்யப்பட்ட 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது
1/1959.
விற்பனை வரிச் சட்டம்; அல்லது
தமிழ்நாடு சட்டம்
(ii) நீக்கறவு செய்யப்பட்ட 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு விற்பனை
24/1971.
வரி (மேல் வரிச்) சட்டம்; அல்லது
தமிழ்நாடு சட்டம்
(iii) நீக்கறவு செய்யப்பட்ட 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடுதல்
14/1970.
விற்பனை வரிச் சட்டம்; அல்லது
தமிழ்நாடு சட்டம்
(iv) நீக்கறவு செய்யப்பட்ட 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர
6/1981.
வரிச் சட்டம்; அல்லது
(v) நீக்கறவு செய்யப்பட்ட 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிப்
தமிழ்நாடு சட்டம்
பரப்பிடங்களுக்குள் பொருட்களை கொண்டு வருவதன் மீதான வரிச் சட்டம்;
20/2001.
அல்லது
தமிழ்நாடு சட்டம்
(vi) நீக்கறவு செய்யப்பட்ட 1990-ஆம் ஆண்டு உள்ளாட்சிப்
13/1990.
பரப்பிடங்களுக்குள் இயக்கூர்திகள் நுழைவின் மீதான வரிச் சட்டம்; அல்லது
(vii) நீக்கறவு செய்யப்பட்ட 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டம்
கேளிக்கைகள் வரிச் சட்டம்; அல்லது
X/1939.
(viii) நீக்கறவு செய்யப்பட்ட 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளம்பரங்கள்
தமிழ்நாடு சட்டம்
வரிச் சட்டம்; அல்லது
22/1983.
(ix) நீக்கறவு செய்யப்பட்ட 1935-ஆம் ஆண்டு தமிழ்நாடு பந்தய வரிச்
தமிழ்நாடு சட்டம்
சட்டம்; அல்லது
XX/1935.
தமிழ்நாடு சட்டம்
(x) 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம்;
32/2006.
அல்லது
மையச் சட்டம்
(xi) 1956-ஆம் ஆண்டு மைய விற்பனை வரிச் சட்டம் என்று
74/1956.
பொருள்படும்.
(2) பொருள் அல்லது தறுவாயில் முரணாக ஏதேனும் இருந்தாலன்றி, இந்தச்
சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு, ஆனால், பொருள் வரையறை செய்யப்படாமலுள்ள
சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் அனைத்தும், தொடர்புடைய சட்டத்தில்,
அவற்றிற்கு குறித்தொதுக்கப்பட்ட அதே பொருளையே கொண்டிருத்தல் வேண்டும்.
நியமனம் செய்யப்பட்ட 3. இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, அரசானது,
தமிழ்நாடு சட்டம்
அதிகார அறிவிக்கை வாயிலாக, 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்
19/2017.
அமைப்பு.
சேவைகள் வரிச் சட்டத்தின் 3-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது
அதற்கு மேற்பட்ட அலுவலர்களை, நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பாக
நியமிக்கலாம் மற்றும் அரசு, அந்த அறிவிக்கையில் குறிப்பிடக்கூடியவாறு பரப்பிடம்
அல்லது பரப்பிடங்களின் மீது அத்தகைய அதிகார அமைப்பானது அதிகார
வரம்பினை செலுத்துதல் வேண்டும்.
4தீர்வு செய்தலுக்கான
4. இந்தச் சட்டத்தின் பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு, விண்ணப்பம்
தகுதியுடைமை.
தாக்கல் செய்யப்படும் தேதியன்று, தொடர்புடைய சட்டத்தின்கீழுள்ள அதிகார
அமைப்பு அல்லது தீர்ப்பாயம் எதனின் முன்பும் அல்லது நீதிமன்றம் எதனின்
முன்பும், மேல்முறையீடு அல்லது சீராய்வு அல்லது மறுஆய்வு ஒன்று நிலுவையில்
இல்லாத போது, 2021-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31-ஆம் நாளன்று அல்லது
அதற்கு முன்னதாக வரிக்கணிப்பு செய்யப்பட்டுள்ள 2017-2018 வரையிலான
வரிக்கணிப்பு ஆண்டுகள் தொடர்பான வரி, தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகை நிலுவைகளைத் தீர்வு செய்வதற்கான விண்ணப்பம் ஒன்றினை
செய்வதற்கு தகுதியுடையவராவார்:
வரம்புரை.- இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று, தொடர்புடைய சட்டத்தின்கீழ் அதிகார அமைப்பு அல்லது தீர்ப்பாயம் எதிலும் அல்லது நீதிமன்றம்
எதிலும் மேல்முறையீடு, சீராய்வு அல்லது மறுஆய்வு எதுவும் நிலுவையில் இருக்கும்
நேர்வுகளில், நிலுவைத்தொகையை தீர்வு செய்வதற்கான விண்ணப்பமானது,
நேர்விற்கேற்ப, அதிகார அமைப்பு அல்லது தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தால்
வழங்கப்பட்ட, திரும்ப பெறுவதற்கான ஓர் அனுமதி படியுடன் சேர்த்து செய்யப்படுதல்
வேண்டும்.
மேலும் வரம்புரை.- இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று, தொடர்புடைய சட்டத்தின்கீழ் அதிகார அமைப்பு, தீர்ப்பாயம் எதிலும் அல்லது நீதிமன்றம் எதிலும்
அரசால் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு எதுவும் நிலுவையில் இருக்கும்
நேர்வுகளில், நேரிணையான தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையுடன்
சேர்த்து, பூசலுக்குள்ளான வரியாக அத்தகைய கோருரிமைகளை நடத்தி,
அரசால் கோரப்படும் வரியின்படி, நிலுவைத் தொகையைத் தீர்வுசெய்வதற்கான
விண்ணப்பமானது செய்யப்படுதல் வேண்டும்.
தீர்வு செய்வதற்கான
5. (1) 4-ஆம் பிரிவின் நோக்கத்திற்கான விண்ணப்பமானது, இந்தச்
விண்ணப்பம்.
சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் அல்லது,
அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, அவ்வப்போது, குறித்துரைக்கலாகும்
அத்தகைய தேதிக்குப் பின்னர் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய படிவத்திலும்,
அத்தகைய முறையிலும், 7-ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட வீதங்களில்
தொகையைச் செலுத்தியதற்கான சான்றுடன் சேர்த்து நியமனம் செய்யப்பட்ட
அதிகார அமைப்பிடம் செய்யப்படுதல் வேண்டும்.
(2) வரிக்கணிப்பு ஆண்டு ஒவ்வொன்றிற்கும், தனி விண்ணப்பமொன்று
செய்யப்படுதல் வேண்டும்.
விண்ணப்பதாரரால்
6. (1) நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது,
செலுத்தப்பட
5-ஆம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட
வேண்டிய
விவரங்களின் பிழையின்மையை, தொடர்புடைய பதிவுருக்கள்
தொகையைத்
அனைத்தையும் மேற்கோள்காட்டி சரிபார்த்தல் வேண்டும் மற்றும்
தீர்மானித்தல்.
7-ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட வீதங்களில் செலுத்தத்தக்க தொகையைத்
தீர்மானித்தல் வேண்டும்.
(2) நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது விண்ணப்பதாரரால்,
விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்தப்பட்ட தொகை, (1)-ஆம் உட்பிரிவின்கீழ்
தீர்மானிக்கப்பட்ட தொகையிலிருந்து குறைவாக இருந்தால், வகுத்துரைக்கப்பட்ட
படிவத்தில் விண்ணப்பதாரரால் செலுத்தத்தக்க அதிகப்படியான தொகையை
கோருதல் வேண்டும்.
(3) (1)-ஆம் உட்பிரிவின்கீழ் தீர்மானிக்கப்பட்ட தொகையானது,
அதற்கடுத்த ரூபாய்க்கு முழுமையாக்கப்படுதல் வேண்டும் மற்றும்
இந்நோக்கத்திற்காக, அத்தகைய தொகையானது ஒரு ரூபாயின் ஒரு பகுதியை
கொண்டிருக்குமிடத்து மற்றும் அத்தகைய பகுதியானது ஐம்பது பைசா அல்லது
அதற்கு மேலாக இருந்தால், அதற்கடுத்த எண்ணிக்கையிலான ரூபாயாகக்
கணக்கிடப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய பகுதியானது ஐம்பது பைசாவுக்குக்
குறைவாக இருந்தால், அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதில்லை.
5செலுத்தத்தக்க 7. (1) விண்ணப்பதாரரால் செலுத்தத்தக்க மற்றும் தள்ளுபடி
தொகையினை செய்யப்படவேண்டிய தொகையானது பின்வருமாறு தீர்மானிக்கப்படுதல்
நிர்ணயிப்பதில் வேண்டும்:-
பொருந்தக்
கூடிய வீதம்.
(a) இந்தச் சட்டத்தின்கீழ் தீர்வு செய்தலுக்காக விண்ணப்பிக்கும்
தேதியில் ஒரு வரிக்கணிப்பு ஆண்டுக்கான வரி, தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகையின் மொத்த நிலுவை ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் மேற்பட்டு
மற்றும் பத்து இலட்சம் ரூபாய் வரை இருக்குமிடத்து, அவருக்கு மிகவும் நலம்
பயக்கும் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின்கீழ் தொகை செலுத்துவதற்கு
விண்ணப்பதாரர் ஒரு தெரிவுரிமை கொண்டிருப்பார்:-
(i) வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின்
மொத்த நிலுவைகளில் இருபது விழுக்காட்டை செலுத்துதல் மற்றும்
அத்தகைய செலுத்தத்தின் பேரில் செலுத்தத்தக்க வரி, தண்டத்தொகை மற்றும்
வட்டித்தொகையின் எஞ்சியுள்ள நிலுவைத் தொகைகள் தள்ளுபடி செய்யப்படுதல்
வேண்டும்; அல்லது
(ii) (1) அனுமதிக்கப்பட்ட வரியில், தண்டத்தொகையின் பத்து
விழுக்காட்டுடன் சேர்த்து, அறுபத்து ஆறு விழுக்காடு மற்றும் வட்டித்தொகையின்
பத்து விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய செலுத்தத்தின் பேரில்
எஞ்சியுள்ள செலுத்தத்தக்க அனுமதிக்கப்பட்ட வரி, தண்டத்தொகை மற்றும்
வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(2) பூசலுக்குள்ளான வரியில், தண்டத்தொகையின் பத்து
விழுக்காட்டுடன் சேர்த்து, முப்பத்தி மூன்று விழுக்காடும் மற்றும் வட்டித்தொகையின்
பத்து விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய செலுத்தத்தின் பேரில்
எஞ்சியுள்ள செலுத்தத்தக்க பூசலுக்குள்ளான வரி, தண்டத்தொகை மற்றும்
வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(3) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது
அவை இரண்டின் நிலுவைத்தொகை தொடர்புடையதாக இருக்குமிடத்து
மற்றும் வரி நிலுவை இல்லாதிருப்பின், வட்டித்தொகையின் பத்து விழுக்காடும்,
தண்டத்தொகையின் பத்து விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய
செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள செலுத்தத்தக்க வட்டித்தொகை அல்லது
தண்டத்தொகை அல்லது அவை இரண்டும் தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(b) இந்தச் சட்டத்தின்கீழ் தீர்வு செய்தலுக்காக விண்ணப்பிக்கும்
தேதியில் ஒரு வரிக்கணிப்பு ஆண்டுக்கான வரி, தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகையின் மொத்த நிலுவை, பத்து இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு மற்றும்
ஒரு கோடி ரூபாய் வரையிலும் இருப்பின், விண்ணப்பதாரர்,-
(i) அனுமதிக்கப்பட்ட வரியில், தண்டத்தொகையின் பத்து
விழுக்காட்டுடன் சேர்த்து, அறுபத்து ஆறு விழுக்காடு மற்றும் வட்டித்தொகையின்
பத்து விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய செலுத்தத்தின் பேரில்
எஞ்சியுள்ள செலுத்தத்தக்க அனுமதிக்கப்பட்ட வரி, தண்டத்தொகை மற்றும்
வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(ii) பூசலுக்குள்ளான வரியில், தண்டத்தொகையின் பத்து
விழுக்காட்டுடன் சேர்த்து, முப்பத்தி மூன்று விழுக்காடும் மற்றும் வட்டித்தொகையின்
பத்து விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய செலுத்தத்தின் பேரில்
எஞ்சியுள்ள செலுத்தத்தக்க பூசலுக்குள்ளான வரி, தண்டத்தொகை மற்றும்
வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
6(iii) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது அவை
இரண்டின் நிலுவைத்தொகை தொடர்புடையதாக இருக்குமிடத்து மற்றும்
வரி நிலுவை இல்லாதிருப்பின், தண்டத்தொகையின் பத்து விழுக்காடும்,
வட்டித்தொகையின் பத்து விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய
செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள செலுத்தத்தக்க தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகை அல்லது அவை இரண்டும் தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(c) இந்தச் சட்டத்தின்கீழ் தீர்வு செய்தலுக்காக விண்ணப்பிக்கும் தேதியில் ஒரு
வரிக்கணிப்பு ஆண்டுக்கான வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின்
மொத்த நிலுவை, ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்டு மற்றும் பத்து கோடி ரூபாய்
வரையிலும் இருப்பின், விண்ணப்பதாரர்,-
(i) அனுமதிக்கப்பட்ட வரியில், தண்டத்தொகையின் பதினைந்து
விழுக்காட்டுடன் சேர்த்து, எழுபத்து ஐந்து விழுக்காடு மற்றும் வட்டித்தொகையின்
இருபது விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய செலுத்தத்தின் பேரில்
எஞ்சியுள்ள செலுத்தத்தக்க அனுமதிக்கப்பட்ட வரி, தண்டத்தொகை மற்றும்
வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(ii) பூசலுக்குள்ளான வரியில், தண்டத்தொகையின் பதினைந்து
விழுக்காட்டுடன் சேர்த்து, ஐம்பது விழுக்காடு மற்றும் வட்டித்தொகையின் இருபது
விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள
செலுத்தத்தக்க பூசலுக்குள்ளான வரி, தண்டத்தொகை மற்றும் வட்டித்தொகை
தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(iii) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது அவை
இரண்டின் நிலுவைத்தொகை தொடர்புடையதாக இருக்குமிடத்து மற்றும் வரி
நிலுவை இல்லாதிருப்பின், தண்டத்தொகையின் பதினைந்து விழுக்காடும்,
வட்டித்தொகையின் இருபது விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய
செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள செலுத்தத்தக்க தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகை அல்லது அவை இரண்டும் தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(d) இந்தச் சட்டத்தின்கீழ் தீர்வு செய்தலுக்காக விண்ணப்பிக்கும் தேதியில் ஒரு
வரிக்கணிப்பு ஆண்டுக்கான வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின்
மொத்த நிலுவை, பத்து கோடி ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின், விண்ணப்பதாரர்,-
(i) அனுமதிக்கப்பட்ட வரியில், தண்டத்தொகையின் பதினைந்து
விழுக்காட்டுடன் சேர்த்து, தொண்ணூறு விழுக்காடு மற்றும் வட்டித்தொகையின்
முப்பது விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய செலுத்தத்தின் பேரில்
எஞ்சியுள்ள செலுத்தத்தக்க அனுமதிக்கப்பட்ட வரி, தண்டத்தொகை மற்றும்
வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(ii) பூசலுக்குள்ளான வரியில், தண்டத்தொகையின் பதினைந்து
விழுக்காட்டுடன் சேர்த்து, அறுபது விழுக்காடு மற்றும் வட்டித்தொகையின் முப்பது
விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள
செலுத்தத்தக்க பூசலுக்குள்ளான வரி, தண்டத்தொகை மற்றும் வட்டித்தொகை
தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
(iii) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது அவை
இரண்டின் நிலுவைத்தொகை தொடர்புடையதாக இருக்குமிடத்து மற்றும் வரி
நிலுவை இல்லாதிருப்பின், தண்டத்தொகையின் பதினைந்து விழுக்காடும்,
வட்டித்தொகையின் முப்பது விழுக்காடும் செலுத்துதல் மற்றும் அத்தகைய
செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள செலுத்தத்தக்க தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகை அல்லது அவை இரண்டும் தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும்;
7(2) தொடர்புடைய சட்டத்தில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும்,
நேர்விற்கேற்ப, வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை செலுத்தத்தின்
போது திரண்ட வட்டித்தொகையும் கூட, இந்தச் சட்டத்தின்கீழ் தள்ளுபடி
செய்யப்படும்.
குறித்த சில 8. தொடர்புடைய சட்டம் அல்லது இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எது
தொகைகளின் எவ்வாறிருப்பினும், இந்தச் சட்டத்தின் தொடக்க தேதியன்று, ஒரு வரிக்கணிப்பு
மொத்த தள்ளுபடி.
ஆண்டுக்கான வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின் மொத்த
நிலுவை, ஐம்பதாயிரம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருப்பின், அந்தத்
தேதியன்று முழுத்தொகையையும் தள்ளுபடி செய்யப்படுதல் வேண்டும் மற்றும்
வரிவிதிக்கப்பட்டவர், வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின் அத்தகைய
நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான அவருடைய கடப்பாட்டிலிருந்து
விடுவிக்கப்படுதல் வேண்டும்.
தடைக்கட்டுகள்.
9. தொடர்புடைய சட்டத்தில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும்,
இந்தச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படக்கூடிய வரி, தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகையின் நிலுவைகள் எதுவும், சூழ்நிலைகள் எதனின் கீழும்,-
(a) உள்ளீட்டு வரிவரவு கணக்கு மூலம் செலுத்துதலாகாது;
(b) மிகுதியான தொகை எதற்கும் எதிராக சரிக்கட்டப்படுதலாகாது; அல்லது
(c) திருப்பிக் கொடுக்கப்படுதலாகாது.
நிலுவைகளை 10. (1) 6-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் தீர்மானிக்கப்பட்ட
தீர்வு செய்தல் தொகையினை செலுத்தியது பற்றி மனநிறைவடைந்ததன் பேரில், நியமனம்
மற்றும் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, ஆணை ஒன்றின் வாயிலாக, வரி,
சான்றிதழை தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவைகளைத் தீர்வு செய்தல் வேண்டும்
வழங்குதல்.
மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் தீர்வு செய்தல் சான்றிதழ்
ஒன்றினை வழங்குதல் வேண்டும் மற்றும் அதன்பேரில் விண்ணப்பதாரர் அத்தகைய
வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவையினை செலுத்தும்
பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்தையும்
பொறுத்த அளவில், தீர்வு செய்தல் சான்றிதழானது தனித்தனியாக வழங்கப்படுதல்
வேண்டும்.
வரம்புரை.- அரசால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடானது, அதிகார
அமைப்பு, தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் எதனின் முன்பும் நிலுவையில் இருக்கும்
நேர்வில், தீர்வு செய்தல் சான்றிதழ் வழங்கப்படுமிடத்து, அரசானது உடனடியாக
மேல்முறையீட்டினை திரும்பபெறுதல் வேண்டும்.
(2) நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, எழுத்து வடிவில்
பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக வரி, தண்டத்தொகை அல்லது
வட்டித்தொகையைத் தீர்வு செய்ய மறுக்கலாம்:
வரம்புரை.- இந்த உட்பிரிவின்படியான ஆணை எதுவும், அவ்வாறு
ஆணை வழங்க மறுப்பதற்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு நியாயமானதொரு
வாய்ப்பினை அந்த விண்ணப்பதாரருக்கு அளிக்காமல், பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(3) நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, (1)-ஆம்
உட்பிரிவின்படியான சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு
நாட்களுக்குள், எந்நேரத்திலும், பதிவுருவில் பார்த்த மாத்திரத்திலேயே
தென்படுகின்ற பிழை எதனையும் சரிசெய்து அச்சான்றிதழை மாற்றியமைக்கலாம்:
வரம்புரை.- விண்ணப்பதாரரை எதிர்மாறாகப் பாதிக்கின்ற அத்தகைய
சரிசெய்தல் எதுவும், அத்தகைய சரிசெய்தலுக்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு
நியாயமானதொரு வாய்ப்பினை அந்த விண்ணப்பதாரருக்கு அளிக்காமல்,
செய்யப்படுதல் கூடாது.
8மேல்முறையீடு. 11. 10-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட ஆணை
ஒன்றினால் பாதிக்கப்பட்ட நபர் எவரும், இதன் பொருட்டு அரசு, அறிவிக்கை
வாயிலாகக் குறிப்பிடலாகும் கூடுதல் வணிகவரி ஆணையாளரின் படிநிலைக்குக்
குறையாத அலுவலர் ஒருவரிடம் மேல்முறையீடு ஒன்றினைச் செய்யலாம். கூறப்பட்ட
அலுவலரானவர், மேல்விசாரணைக்குப் பின்பு நியமனம் செய்யப்பட்ட அதிகார
அமைப்பின் ஆணையை உறுதி செய்தோ அல்லது ஆணையை நீக்கம் செய்தோ
அல்லது புதிய தீர்வு செய்தல் ஆணை ஒன்றினை பிறப்பிக்கவேண்டி நியமனம்
செய்யப்பட்ட அதிகார அமைப்பிற்கு கட்டளை வழங்கியோ மேல்முறையீட்டினை
முடிவு செய்தல் வேண்டும்.
சீராய்வு. 12. (1) ஆணையாளர், தனது சொந்த நடவடிக்கையின் பேரில், எழுத்து
வடிவில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, எந்நேரத்திலும்,
ஆணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள்,
பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அவற்றில் எடுக்கப்பட்ட முடிவின்
பிழையின்மை, சட்ட முறைமை அல்லது பொருத்தமுடைமை குறித்து அவர்
மனநிறைவடைவதற்கு, 10-ஆம் பிரிவு அல்லது 11-ஆம் பிரிவின்கீழ்
வழங்கப்பட்ட ஆணை எதனையும் கோரி ஆய்வு செய்யலாம் மற்றும்
எந்நேர்விலும் அத்தகைய ஆணை அல்லது முடிவு எதுவும் திருத்தியமைக்கப்பட,
அறவு செய்யப்பட, எதிர்மாறாக்கப்பட அல்லது மறு பரிசீலனைக்காகத்
திருத்தியனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று ஆணையாளருக்கு தோன்றுமானால்
அவர் அதன்படியே ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
(2) நபர் எவருக்கும் அவருடைய கருத்தினை எடுத்துரைப்பதற்கு
வாய்ப்பொன்று அளிக்கப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய நபருக்கு குந்தகம் அளிக்கும்
வகையில் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதலாகாது.
தீர்வு செய்யப்பட்ட
13. 10-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட தீர்வு செய்தல் சான்றிதழ் ஒன்று,
வழக்குகளை
அதற்கு தொடர்புடைய நிலுவைகளின் தீர்வு செய்தலை பொறுத்தவரையில்
மீண்டும்
இறுதியானதாக இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய தீர்வு செய்தல்
தொடர்வதற்கு
சான்றிதழில் அடங்கியுள்ள பொருட்பாடு எதுவும், மேல்முறையீடு, சீராய்வு அல்லது
தடை.
மறு ஆய்வு நடவடிக்கை எதிலும் அல்லது தொடர்புடைய சட்டத்தின்படியான பிற
நடவடிக்கை எதிலும் மீண்டும் விசாரணையைத் தொடங்குதல் கூடாது.
சான்றிதழை
14. (1) 13-ஆம் பிரிவில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், முக்கிய
திரும்பப்
தகவல் அல்லது விவரங்களை மறைத்ததன் மூலமாகவோ, அல்லது சரியற்ற அல்லது
பெறுதல்.
பொய்யான தகவலை அல்லது விவரங்களை அளித்ததன் மூலமாகவோ, 10-ஆம்
பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படியான தீர்வு செய்தல் சான்றிதழை விண்ணப்பதாரர்
ஒருவர் பெற்றுள்ளார் என நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்புக்குத்
தோன்றுகிறவிடத்து, சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டு
காலஅளவிற்குள் நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, எழுத்துவடிவில்
பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக மற்றும் விண்ணப்பதாரருக்கு
அதற்குரிய காரணம் காட்டுவதற்கு நியாயமான வாய்ப்பு ஒன்றினை வழங்கியப்
பின்பு, சான்றிதழை திரும்பப் பெறலாம்.
(2) (1)-ஆம் உட்பிரிவின்கீழ் சான்றிதழ் ஒன்று திரும்பப் பெறப்பட்டதன்
நேர்வில், 5-ஆம் பிரிவின்கீழ் விண்ணப்பத்துடன் சேர்த்து, விண்ணப்பதாரரால்
செலுத்தப்பட்ட தொகையானது, தொடர்புடைய சட்டத்தின்கீழ் தொடர்புடைய
வரிக்கணிப்பு ஆண்டிற்காக செலுத்தத்தக்க தொகையினை பொறுத்த
செலுத்தமாகக் கருதப்படுதல் வேண்டும்.
தொடர்புடைய
15. நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பானது, தொடர்புடைய
சட்டத்தின்கீழ்
சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரரின் மீது அப்போதைக்கு அதிகார வரம்பு பெற்றுள்ள,
அதிகார
தொடர்புடைய சட்டத்தின்கீழ், நேர்விற்கேற்ப, வரிக்கணக்கீட்டு அதிகார அமைப்பு,
அமைப்புகளுக்கு மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, சீராய்வு அதிகார அமைப்பு அல்லது தீர்ப்பாயம்
அனுப்பவேண்டிய அல்லது நீதிமன்றத்திற்கு,-
தகவல்கள்.
9(a) 5-ஆம் பிரிவின்கீழ் விண்ணப்பதாரரால் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்ட
விவரத்தை;
(b) நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பினால் 10-ஆம் பிரிவின்கீழ்
பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனின் விவரத்தை;
(c) 10-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின் கீழான சான்றிதழ் எதனின்
தோற்றத்திலுள்ள பிழை எதுவும் சரி செய்யப்பட்ட விவரத்தை;
(d) 14-ஆம் பிரிவின்கீழ் சான்றிதழ் எதுவும் திரும்பப் பெறப்பட்ட விவரத்தை;
மற்றும்
(e) அது, தேவையெனக் கருதக்கூடிய அத்தகைய பிற பொருட்பாடுகளை
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் அத்தகைய முறையில் மற்றும்
அத்தகைய கால அளவிற்குள், தகவல் தெரிவித்தல் வேண்டும்.
வணிகவரி 16. வணிகவரி ஆணையாளர், இந்தச் சட்டத்தின் நோக்கங்களை
ஆணையாளரின் நிறைவேற்றுவதற்காக நியமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்புகளுக்கு
அதிகாரங்கள்.
அவர் பொருத்தமெனக் கருதலாகும் அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும்
அவ்வப்போது வழங்கலாம்:
வரம்புரை.- இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து ஓர் ஆண்டு
காலாவதியான பிறகு அத்தகைய அறிவுறுத்தல்கள் அல்லது கட்டளைகள் எதுவும்
வழங்கப்படுதல் கூடாது.
நியமனம் 17. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் செய்யப்பட்ட விண்ணப்பம்,
செய்யப்பட்ட செய்யப்பட்ட விவரவுரை, முன்வைக்கப்பட்ட பதிவுருக்கள் அல்லது ஆவணங்கள்
அதிகார அல்லது இந்தச் சட்டத்தின்படியான நடவடிக்கை எதனின் போதும் அல்லது இந்தச்
அமைப்புகளின் சட்டத்தின் நோக்கங்களுக்கான நடவடிக்கையில் வழங்கப்பட்ட சாட்சியம் அல்லது
முன்னிலையில் கொடுக்கப்பட்ட உறுதிமொழி ஆவணம் அல்லது வாக்குமூலம் ஆகியவற்றில்
தாக்கல் அடங்கியுள்ள அனைத்து விவரங்களானது மந்தணமானதாகக் கருதப்படுதல்
செய்யப்பட்ட வேண்டும் மற்றும் வெளியிடப்படுதல் கூடாது.
விவரங்களை
வெளியிடு-
வதற்குத் தடை.
(2) (a) இந்தச் சட்டத்தின்படியான அல்லது 1860-ஆம் ஆண்டு
மையச் சட்டம்
இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்படியான அல்லது அப்போதைக்கு
XLV/1860
நடைமுறையிலுள்ள வேறு ஏதேனும் சட்டத்தின்படியான குற்றச்செயல் ஒன்றிற்காக
புலனாய்வு அல்லது குற்ற வழக்கின் நோக்கத்திற்காக; அல்லது
(b) இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக அதை அவரிடம் வெளியிடத்
தேவை ஏற்பட்டிருக்கிறவிடத்து இச்சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்தும்
நபர் எவருக்கும்; அல்லது
(c) கேட்புத்தொகை எதனையும் மீளப்பெறும் செயல்முறை எதிலும் இந்தச்
சட்டத்தின்கீழ் சட்டப்படியான பணி அமர்த்துகையால் ஏற்பட்ட; அல்லது
(d) அரசு, ஒரு தரப்பினராக உள்ள மற்றும் இந்தச் சட்டத்தின்படியான
நடவடிக்கை எதிலும் எழுகிற பொருட்பாடு எதனோடும் தொடர்புடைய உரிமை
வழக்கு எதிலும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு; அல்லது
(e) முத்திரைத்தாள் போதுமற்றதாகவுள்ள ஆவணங்களை பறிமுதல் செய்ய
1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தின்படி தமக்குரிய அதிகாரங்களை
மையச் சட்டம் II/1899.
ஒரு பொது ஊழியரால் சட்டப்படி செலுத்தப்படுவதன் மூலம் ஏற்பட்ட; அல்லது
(f) (i) இந்திய அரசின் அலுவலர் ஒருவருக்கு, அல்லது10 (ii) அரசுடன் பரிமாற்ற அடிப்படையில் வெளியிடுதலுக்கான
ஏற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தியாவிலுள்ள ஏதேனும் மாநிலம்
அல்லது நடுவணரசின் எல்லைகுட்பட்ட அரசின் அலுவலர் ஒருவருக்கு; அல்லது
(g) வணிகவரி ஆணையாளரின் அனுமதியைப் பெற்ற பின்பு அரசின்
வணிகவரித் துறை அல்லாத பிற துறை எதனின் அலுவலர் ஒருவர் ஆகியோருக்கு,
விவரங்கள் எவற்றையும் வெளியிடுவதற்கு, (1)-ஆம் உட்பிரிவில்
அடங்கியுள்ள எதுவும் பொருந்துதலாகாது:
வரம்புரை.- இக்கூறின்படி அத்தகைய விவரங்களை விதிவிலக்கான
நேர்வுகளில் மட்டுமே வழங்குதல் வேண்டும் மற்றும் அத்தகைய விவரங்களைப்
பெறும் அலுவலர் எவரும் அவற்றை மந்தணமானதாக வைத்திருத்தல் மற்றும்
இயற்றுச்சட்டம் எதன்படியான அல்லது அதனையொட்டி, வழங்கப்பட்ட
அதிகாரங்களைச் சட்டப்படி செலுத்தும் போது மட்டுமே அவற்றைப் பயன்படுத்த
வேண்டும்.
(3) இதில் அடங்கிய எதுவும், வகுத்துரைக்கப்பட்ட முறையில் தீர்வு செய்தல்
சான்றிதழின் வெளியீடு அல்லது விண்ணப்பம் எதனின் நிராகரித்தலை தடுத்தல்
கூடாது.
நல்லெண்ணத்தில்
18. (1) இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட அல்லது செய்யப்படவேண்டிய
எடுக்கப்படும்
செயல் எதற்காகவும் அரசின் அலுவலர் அல்லது பணியாளர் எவருக்கெதிராகவும்
நடவடிக்கைக்குப் உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற நடவடிக்கை எதுவும், அரசின் முன்
பாதுகாப்பு.
ஒப்புதலின்றி தொடரப்படுதல் ஆகாது.
(2) இந்தச் சட்டத்தின்கீழ் அல்லது அதனால் விதிக்கப்பட்ட கடமைகளை
செயலுருத்துகையில் அல்லது செயல்பாடுகளை நிறைவேற்றுகையில், அந்தச்
செயலானது நல்லெண்ணத்தில் செய்யப்பட்டால், அரசு அலுவலர் அல்லது
பணியாளர் எவரும் உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கு எதிலும் அத்தகைய
செயல் எதனையும் பொறுத்து பொறுப்புடையவராகார்.
இடர்பாடுகளை
19. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்பாடு
நீக்குவதற்கான ஏதேனும் எழுமானால், அரசானது, ஆணை ஒன்றின் மூலமாக இந்தச் சட்டத்தின்
அதிகாரம்.
வகைமுறைகள் எதற்கும் முரணாக இல்லாத வகையில் அத்தகைய இடர்பாட்டை
நீக்கலாம்:
வரம்புரை.- அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டம் நடைமுறைக்கு
வரும் தேதியிலிருந்து ஓர் ஆண்டு காலாவதியான பின்னர் செய்யப்படுதல்
ஆகாது.
விதிகளைச்
20. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக,
செய்வதற்கான முன்னோக்கியதாகவோ அல்லது பின்னோக்கியதாகவோ, விதிகளைச் செய்யலாம்.
அதிகாரம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகள் அனைத்தும்
தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு
தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட தேதியில்
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
11(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும்,
அவை குறிப்பிட்டதொரு தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென
வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட
தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின்கீழ், செய்யப்பட்ட விதி அல்லது அறிவிக்கை அல்லது
பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது
பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு
வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர்
அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய விதி அல்லது
அறிவிக்கை அல்லது ஆணை ஏதொன்றிலும் மாற்றம் எதையும் சட்டமன்றப் பேரவை
செய்யுமாயின் அல்லது அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையானது
செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப் பேரவை
முடிவு செய்யுமாயின் அதன்பின்னர் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது
ஆணை அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே, நேர்விற்கேற்ப,
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நடைமுறைக்கு வராதுபோதல்
வேண்டும். எனினும், அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி,
அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல்
எதனின் செல்லுந்தன்மைக்கு குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வே. தமிழ்ச்செல்வன், தமிழ்ப்பிரிவு,
சட்டத்துறை.
12 13தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.25/2023.
2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்
சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்
மற்றும் சேவைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இந்தச் சட்டத்தில் வேறுவிதமாக வகை செய்யப்பட்டவாறல்லாமல்,-
(i) 2 முதல் 24 வரையிலான பிரிவுகளானது (14 முதல் 19-ஆம்
பிரிவுகள் தவிர) 2023–ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1-ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ii) 14 முதல் 19 வரையிலான பிரிவுகளானது 2023-ஆம்
ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக்
கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
10-ஆம் பிரிவின் 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
19/2017.
திருத்தம். 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்
10-ஆம் பிரிவில்,-
(1) (2)-ஆம் உட்பிரிவில், (d) கூறில், "சரக்குகள் அல்லது" எனும்
சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(2) (2A)–ஆம் உட்பிரிவில், (c) கூறில், "சரக்குகள் அல்லது" எனும்
சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
16-ஆம் பிரிவின் 3. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(1) இரண்டாம் வரம்புரையில், "அவரது வெளியீட்டு வரி பொறுப்புடன்,
அதன் மீதான வட்டியுடன், சேர்த்துக்கொள்ளப்படும்" எனும் சொற்றொடருக்காக,
"50-ஆம் பிரிவின்கீழ் செலுத்தப்படக்கூடிய வட்டியுடன் சேர்த்து அவரால்
செலுத்தப்படும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) மூன்றாம் வரம்புரையில், "அவரால் செலுத்தப்படுவதன்" எனும்
சொற்றொடருக்குப் பின்பு, "வழங்குநருக்கு" எனும் சொல்லானது உட்புகுத்தப்படுதல்
வேண்டும்.
17-ஆம் பிரிவின் 4. முதன்மைச் சட்டத்தின் 17-ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (3)–ஆம் உட்பிரிவில், விளக்கத்தில், "கூறப்பட்ட இணைப்புப்
பட்டியலின் 5-ஆம் பத்தியில் குறித்துரைக்கப்பட்டவை தவிர" எனும்
சொற்றொடருக்காக, பின்வருவன மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,
அவையாவன:-
"(a) கூறப்பட்ட இணைப்புப் பட்டியலின் 5-ஆம் பத்தியில்
குறித்துரைக்கப்பட்ட செயல்கள் அல்லது நடவடிக்கைகளின் மதிப்பைத் தவிர;
மற்றும்
(b) கூறப்பட்ட இணைப்புப் பட்டியலின் 8-ஆம் பத்தியின் (a)
கூறினைப் பொறுத்து வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய செயல்கள் அல்லது
நடவடிக்கைகளின் மதிப்பைத் தவிர.";
14(2) (5)-ஆம் உட்பிரிவில், (f) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
மையச் சட்டம் "(ff) 2013-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின், 135-ஆம் பிரிவில்
18/2013.
சுட்டப்பட்ட கூட்டுரும சமூகப் பொறுப்பின்கீழ் அவருடைய பொறுப்பு தொடர்பான
செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்படுகிற,
வரிவிதிக்கத்தக்க நபரால் பெறப்படும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது
இரண்டும்;".
23-ஆம் பிரிவின்
5. முதன்மைச் சட்டத்தின் 23-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவிற்காக,
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும் மற்றும் 2017-ஆம்
ஆண்டு ஜீலை திங்கள் 1-ஆம் நாளன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகக்
கருதப்படுதல் வேண்டும், அதாவது :-
"(2) 22-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவு அல்லது
24-ஆம் பிரிவிற்கு முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும், அரசானது,
மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை வாயிலாக, அதில்
குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும்
உட்பட்டு, இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படலாகும்
நபர்களின் வகையினரைக் குறித்துரைக்கலாம்.".
30-ஆம் பிரிவின்
6. முதன்மைச் சட்டத்தின் 30-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(1) "ரத்து ஆணை சார்வு செய்யப்பட்ட தேதியிலிருந்து முப்பது
நாட்களுக்குள் வகுத்துரைக்கப்பட்ட முறையில்" எனும் சொற்றொடருக்காக,
"வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், அத்தகைய காலத்திற்குள்
மற்றும் அத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
37-ஆம் பிரிவின்
7. முதன்மைச் சட்டத்தின் 37-ஆம் பிரிவில், (4)–ஆம் உட்பிரிவிற்கு பின்பு,
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(5) பதிவு பெற்ற நபர் ஒருவர், கூறப்பட்ட விவரங்களை அளிப்பதற்கான
உரிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அளவு காலாவதியான பின்பு,
ஒரு வரி கால அளவிற்காக, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் வெளிப்புற வழங்குகைகள்
பற்றிய விவரங்களை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல் ஆகாது:
வரம்புரை.- அரசு, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை
வாயிலாக, அதில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கும்
கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு, கூறப்பட்ட விவரங்களை அளிப்பதற்கான உரிய
தேதியிலிருந்து கூறப்பட்ட கால அளவான மூன்று ஆண்டுகள் காலாவதியான
பின்பும் கூட, (1)-ஆம் உட்பிரிவின் கீழ் ஒரு வரி கால அளவிற்காக, வெளிப்புற
வழங்குகைகள் பற்றிய விவரங்களை அளிப்பதற்கு பதிவு பெற்ற நபர் அல்லது
பதிவு பெற்ற நபர்களின் வகையினரை அனுமதிக்கலாம்.".
39-ஆம் பிரிவின்
8. முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவில், (10)-ஆம் உட்பிரிவிற்கு
திருத்தம்.
பின்பு, பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(11) பதிவு பெற்ற நபர் ஒருவர், கூறப்பட்ட அறிக்கையை அளிப்பதற்கான
உரிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அளவு காலாவதியான பின்பு, ஒரு
வரி கால அளவிற்காக, அறிக்கை ஒன்றை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல்
ஆகாது:
வரம்புரை.- அரசு, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை
வாயிலாக, அதில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கும்
கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு, கூறப்பட்ட அறிக்கையை அளிப்பதற்கான உரிய
தேதியிலிருந்து கூறப்பட்ட கால அளவான மூன்று ஆண்டுகள் காலாவதியான
பின்பும் கூட, ஒரு வரி கால அளவிற்காக, அறிக்கையை அளிப்பதற்கு பதிவு
பெற்ற நபர் அல்லது பதிவு பெற்ற நபர்களின் வகையினரை அனுமதிக்கலாம்.".
1544-ஆம் பிரிவின் 9. முதன்மைச் சட்டத்தின் 44-ஆம் பிரிவானது, அதன் (1)-ஆம் உட்பிரிவு
திருத்தம்.
என மறு எண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட
(1)-ஆம் உட்பிரிவிற்குப் பிறகு, பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(2) பதிவு பெற்ற நபர் ஒருவர், கூறப்பட்ட ஆண்டறிக்கையை
அளிப்பதற்கான உரிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அளவு
காலாவதியான பின்பு, ஒரு நிதியாண்டிற்காக, (1)-ஆம் உட்பிரிவின்கீழ்
ஆண்டறிக்கையை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல் ஆகாது:
வரம்புரை.- அரசு, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை
வாயிலாக, அதில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கும்
கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் ஒரு நிதியாண்டிற்கான
கூறப்பட்ட ஆண்டறிக்கையை அளிப்பதற்கான உரிய தேதியிலிருந்து
கூறப்பட்ட கால அளவான மூன்று ஆண்டுகள் காலாவதியான பின்பும் கூட,
ஓர் ஆண்டறிக்கையை அளிப்பதற்கு பதிவு பெற்ற நபர் அல்லது பதிவு பெற்ற
நபர்களின் வகையினரை அனுமதிக்கலாம்.
52-ஆம் பிரிவின் 10. முதன்மைச் சட்டத்தின் 52-ஆம் பிரிவில், (14)-ஆம் உட்பிரிவிற்குப்
திருத்தம்.
பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(15) இயக்குபவரானவர், கூறப்பட்ட விவரவுரையை அளிப்பதற்கான
உரிய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அளவு காலாவதியான பின்பு,
(4)-ஆம் உட்பிரிவின்கீழ் விவரவுரை ஒன்றை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல்
ஆகாது:
வரம்புரை.- அரசு, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை
வாயிலாக, அதில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கும்
கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு, (4)-ஆம் உட்பிரிவின்கீழ் விவரவுரையை
அளிப்பதற்கான உரிய தேதியிலிருந்து கூறப்பட்ட கால அளவான மூன்று
ஆண்டுகள் காலாவதியான பின்பும் கூட, ஒரு விவரவுரையை அளிக்க இயக்குபவர்
அல்லது இயக்குபவர்கள் வகையினரை அனுமதிக்கலாம்.".
54-ஆம் பிரிவின் 11. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவில்,
திருத்தம்.
"தற்காலிகமாக ஏற்றுக் கொண்ட உள்ளீட்டு வரிவரவுத் தொகையைத் தவிர்த்து"
எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
56-ஆம் பிரிவின் 12. முதன்மைச் சட்டத்தின் 56-ஆம் பிரிவில், "மேற்சொன்ன உட்பிரிவின்கீழ்
திருத்தம்.
விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து அத்தகைய வரியைத் திருப்பிக்
கொடுக்கும் தேதி வரையில் அறுபது நாட்கள் முடிவடைந்த பின்பு உடனடியாக
வரும் தேதியிலிருந்து" எனும் சொற்றொடருக்காக, "வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய முறையிலும் அத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும்
உட்பட்டு கணக்கிடப்படக்கூடிய, அத்தகைய விண்ணப்பத்தைப் பெற்றுக்
கொண்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்கு மேற்பட்டு, அத்தகைய வரியைத்
திரும்பப் பெறும் தேதி வரையிலான தாமதத்தின் கால அளவிற்காக" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
62-ஆம் பிரிவின் 13. முதன்மைச் சட்டத்தின் 62-ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (2)–ஆம் உட்பிரிவில், "முப்பது நாட்கள்" எனும் சொற்றொடருக்காக,
"அறுபது நாட்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
(2) அவ்வாறு திருத்தியமைக்கப்பட்ட (2)-ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும்
வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
16"வரம்புரை.- பதிவு பெற்ற நபர், (1)-ஆம் உட்பிரிவின்கீழ் வரிக்கணிப்பு
ஆணையைச் சார்வு செய்த அறுபது நாட்களுக்குள் செல்லுந்தன்மையுள்ள
அறிக்கையை அளிக்கத் தவறுகிறவிடத்து, அவர் மேலும் அறுபது நாட்கள் கால
அளவிற்குள், கூறப்பட்ட வரிக்கணிப்பு ஆணையைச் சார்வு செய்த அறுபது
நாட்களுக்கு மேற்பட்டு தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் நூறு ரூபாய் கூடுதல்
தாமதக் கட்டணத்தைச் செலுத்துவதன் பேரில், அந்த அறிக்கையை அளிக்கலாம்,
மற்றும் அவர் அத்தகைய நீட்டிக்கப்பட்ட கால அளவிற்குள் செல்லுந்தன்மையுள்ள
அறிக்கையை அளிக்கிற நேர்வில், கூறப்பட்ட வரிக்கணிப்பு ஆணையானது திரும்ப
பெற்றதாகக் கொள்ளப்படுதல் வேண்டும். ஆனால், 50-ஆம் பிரிவின் (1)-ஆம்
உட்பிரிவின்கீழ் வட்டியை அல்லது 47-ஆம் பிரிவின்கீழ் தாமதக்கட்டணத்தை
செலுத்தும் பொறுப்பு தொடருதல் வேண்டும்.".
109-ஆம்
14. முதன்மைச் சட்டத்தின் 109 பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
பிரிவிற்கான
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
மாற்றீடு.
"109. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்- இந்த அத்தியாயத்தின்
மையச் சட்டம் வகைமுறைகளுக்குட்பட்டு, 2017-ஆம் ஆண்டு மையச் சரக்குகள் மற்றும்
12/2017.
சேவைகள் வரிச்சட்டத்தின்கீழ் அமைத்துருவாக்கப்பட்ட சரக்குகள் மற்றும்
சேவைகள் வரித் தீர்ப்பாயமானது இந்தச் சட்டத்தின்கீழ் மேல்முறையீட்டு அதிகார
அமைப்பு அல்லது சீராய்வு அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட ஆணைகளுக்கு
எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமாக
இருத்தல் வேண்டும்.
110-ஆம் பிரிவை
15. முதன்மைச் சட்டத்தின் 110-ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்
விட்டுவிடுதல்.
வேண்டும்.
114-ஆம் பிரிவை
16. முதன்மைச் சட்டத்தின் 114-ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்
விட்டுவிடுதல்.
வேண்டும்.
117-ஆம் பிரிவின்
17. முதன்மைச் சட்டத்தின் 117-ஆம் பிரிவில்-
திருத்தம்.
(1) (1)-ஆம் உட்பிரிவில், "மாநில நீதியர் ஆயம் அல்லது வட்டார
நீதியர் ஆயங்கள்" எனும் சொற்றொடருக்காக, "மாநில நீதியர் ஆயங்கள்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (5)-ஆம் உட்பிரிவில், இரு இடங்களில் காணப்படுகின்ற, "மாநில
நீதியர் ஆயம் அல்லது வட்டார நீதியர் ஆயங்கள்" எனும் சொற்றொடருக்காக,
"மாநில நீதியர் ஆயங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
118-ஆம் பிரிவின்
18. முதன்மைச் சட்டத்தின் 118-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,
திருத்தம்.
(a) கூறில், "தேசிய நீதியர் ஆயம் அல்லது மண்டல நீதியர் ஆயங்கள்" எனும்
சொற்றொடருக்காக, "முதன்மை நீதியர் ஆயம்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
119-ஆம் பிரிவின்
19. முதன்மைச் சட்டத்தின் 119-ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) "தேசிய அல்லது மண்டல நீதியர் ஆயங்கள்" எனும்
சொற்றொடருக்காக, "முதன்மை நீதியர் ஆயம்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) "மாநில நீதியர் ஆயம் அல்லது வட்டார நீதியர் ஆயங்கள்"
எனும் சொற்றொடருக்காக, "மாநில நீதியர் ஆயங்கள்" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
17122-ஆம் பிரிவின்
20. முதன்மைச் சட்டத்தின் 122-ஆம் பிரிவில், (1A)-ஆம் உட்பிரிவிற்குப்
திருத்தம்.
பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது :-
"(1B) (i) அத்தகைய வழங்குகையைச் செய்ய, இந்தச் சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி பதிவு செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்ட ஒரு நபர் அல்லாத பிற பதிவு செய்யப்படாத நபரின் மூலம், சரக்குகளின் அல்லது சேவைகளின் அல்லது அவை இரண்டின் வழங்குகையை அனுமதிக்கின்ற;
(ii) அத்தகைய, மாநிலங்களுக்கு இடையேயான வழங்குகையைச் செய்ய தகுதியற்ற ஒரு நபரின் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகளின் அல்லது சேவைகளின் அல்லது அவை இரண்டின் வழங்குகையை அனுமதிக்கின்ற; அல்லது
(iii) இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட ஒரு நபரால், அதன் மூலமாக செய்யப்படும் சரக்குகளின் வெளிப்புற வழங்குகை எதனின், 52-ஆம் பிரிவின் (4)-ஆம் உட்பிரிவின்கீழ் அளிக்கப்பட வேண்டிய விவர அறிக்கையில் சரியான தகவல்களை அளிக்கத் தவறுகின்ற,
எந்தவொரு மின்னணு வணிகம் இயக்குபவரும், 10-ஆம் பிரிவின்கீழ் வரி செலுத்தும் ஒரு நபர் அல்லாத பிற ஒரு பதிவு பெற்ற நபரால் செய்யப்பட்டுள்ள அத்தகைய வழங்குகையில் உள்ளடங்கியுள்ள வரித்தொகைக்குச் சமமான தொகை
அல்லது பத்தாயிரம் ரூபாய், இதில் எது அதிகமோ, அந்தத் தண்டத்தொகையைச்
செலுத்துவதற்கு பொறுப்புடையவராதல் வேண்டும்.".
132-ஆம் பிரிவின் 21. முதன்மைச் சட்டத்தின் 132-ஆம் பிரிவில், (1)–ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(1) (g), (j) மற்றும் (k) கூறுகளானவை விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(2) (l) கூறில்,-
(a) "(a) முதல் (k) வரையிலான கூறுகள்" எனும் சொற்றொடருக்காக, "(a) முதல் (f) கூறுகள் மற்றும் (h) மற்றும் (i) கூறுகள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (iii)-ஆம் உட்கூறில், "பிற குற்றம் எதனையும்" எனும் சொற்றொடருக்காக, "(b) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமொன்று" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (iv)-ஆம் உட்கூறில், "அல்லது (g) கூறு அல்லது (j) கூறு"
எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
138-ஆம் பிரிவின் 22. முதன்மைச் சட்டத்தின் 138-ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (1)-ஆம் உட்பிரிவில், முதலாம் வரம்புரையில்,-
(i) (a) கூறுக்காக, பின்வரும் கூறானது, மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(a) 132-ஆம் பிரிவின் (1)–ஆம் உட்பிரிவின் (a) முதல் (f) வரை, (h), (i) மற்றும் (l) கூறுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றங்கள் எதனையும் பொறுத்து ஒருமுறை சமரசம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நபர்;";
(ii) (b) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(iii) (c) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(c) 132-ஆம் பிரிவின் (1)–ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் ஒரு
குற்றம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு நபர்;";
(iv) (e) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(2) (2)–ஆம் உட்பிரிவில், "பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லது உள்ளடங்கியுள்ள வரியின் ஐம்பது விழுக்காடு, இதில் எது அதிகமோ, மற்றும் முப்பதாயிரம் ரூபாய்க்கு அல்லது வரியின் நூற்றி ஐம்பது விழுக்காடு, இதில் எது அதிகமோ, அதற்கு
குறையாத அதிகபட்ச தொகைக்கு" எனும் சொற்றொடருக்காக, "உள்ளடங்கியுள்ள
வரியின் இருபத்தைந்து விழுக்காடு மற்றும் உள்ளடங்கியுள்ள வரியின் நூறு
விழுக்காடுக்கு மேற்படாத அதிகபட்ச தொகைக்கு" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
18158-A எனும் 23. முதன்மைச் சட்டத்தின் 158-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும்
பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவை உட்புகுத்துதல்.
" 158-A. வரிவிதிக்கத்தக்க நபரால் அளிக்கப்பட்ட தகவல் பகிர்தலின் அடிப்படையிலான இசைவு- (1) 133, 152 மற்றும் 158-ஆம் பிரிவுகளில் என்ன அடங்கியிருந்த போதிலும், ஒரு பதிவு செய்யப்பெற்ற நபரால் அளிக்கப்பட்ட பின்வரும் விவரங்கள், (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, மற்றும் மன்றத்தின் பரிந்துரையின் பேரில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு மற்றும் அத்தகைய முறையிலும், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் அத்தகைய பிற அமைப்புகளுடன் பொது வலைவாயிலில் பகிரலாம், அவையாவன:-
(a) 25-ஆம் பிரிவின்கீழ் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் அல்லது 39-ஆம் பிரிவின்கீழ் அல்லது 44–ஆம் பிரிவின்கீழ் தாக்கல் செயய்ப்பட்ட அறிக்கை;
(b) விலைப்பட்டியல் தயாரிப்பதற்கான பொது வலைவாயிலில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள், 37-ஆம் பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட வெளிப்புற வழங்குகைகளின் விவரங்கள் மற்றும் 68-ஆம் பிரிவின்கீழ் ஆவணங்கள் தயாரிப்புக்கான பொது வலைவாயிலில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள்;
(c) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற விவரங்கள்.
(2) (1)–ஆம் உட்பிரிவின்கீழ் விவரங்கள் பகிர்தலின் நோக்கங்களுக்காக,-
(a) (1)-ஆம் உட்பிரிவின் (a), (b) மற்றும் (c) கூறுகளின்கீழ்
அளிக்கப்பட்ட விவரங்களைப் பொறுத்து வழங்குநரின் ; மற்றும்
(b) (1)-ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் அளிக்கப்படும் விவரங்கள் பொறுத்தும், மற்றும் (1)–ஆம் உட்பிரிவின் (c) கூறின்கீழ் அளிக்கப்படும் அத்தகைய விவரங்கள் பெறுநரின் அடையாளத் தகவலை உள்ளடக்குவதாக மட்டும் இருக்கின்றவிடத்து பெறுநரின்,
இசைவானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் முறையிலும் பெறப்படுதல் வேண்டும்.
(3) அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்த போதிலும், இந்தப் பிரிவின்கீழ் பகிரப்படும் தகவலின் விளைவாக எழும் பொறுப்பு எதனின் தொடர்பாக அரசு அல்லது பொது வலைவாயிலுக்கு எதிராக எந்தவொரு வழக்கும் தொடுக்கப்படுதல் ஆகாது மற்றும் தொடர்புடைய வழங்குகையின் மீது அல்லது தொடர்புடைய அறிக்கையின்படி வரி செலுத்தும் பொறுப்பில் பாதிப்பு எதுவும் இருத்தல் ஆகாது.".
III-ஆம்
24. (1) முதன்மைச் சட்டத்தின் III-ஆம் இணைப்புப் பட்டியலில், அதனின் 7 மற்றும் 8–ஆம் பத்திகள் மற்றும் விளக்கம் 2 ஆகியன 2017-ஆம் ஆண்டு ஜீலை 1-ஆம் நாளிலிருந்து செயலுக்கு வருமாறு அதனில் உட்புகுத்தப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.
(2) அனைத்து முக்கியமான நேரங்களில் (1)-ஆம் உட்பிரிவானது நடைமுறையில் இருந்து, ஆனால், அவ்வாறு வரி வசூலிக்கப்படாமல் இருந்தால், வசூலிக்கப்பட்டுள்ள அனைத்து வரியும் திருப்பிக் கொடுக்கப்படுதல் ஆகாது.
இணைப்புப் பட்டியலில் உள்ள குறித்த சில செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு முன்மேவு விலக்களிப்பு.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வே. தமிழ்ச்செல்வன், தமிழ்ப்பிரிவு,
சட்டத்துறை.
19தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.26/2023.
1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல்
மற்றும் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, 2023 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
12-B ஆம் 2. 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின் 12-B ஆம்
XX/1951.
பிரிவிற்கான பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக, அதன் கீழுள்ள விளக்கம் மற்றும் வரம்புரை நீங்கலாக,
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) 1947 ஆகஸ்டு 15-ஆம் நாளுக்குப் பின்பு, சட்டமன்றப்பேரவையின்
அல்லது சட்டமன்ற மேலவையின் அல்லது இரண்டின் ஓர் உறுப்பினராக இருந்த நபர்
ஒவ்வொருவருக்கும், மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுதல்
வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வே. தமிழ்ச்செல்வன், தமிழ்ப்பிரிவு,
சட்டத்துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.