Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications by Government - Tamil Translations ENVIRONMENT, FOREST AND CLIMATE CHANGE DEPARTMENT--Amendment--G.O.Ms.No.135, Environment, Forest and Climate Change (Forest-12) Department, 11th September 2023. -

Published 10 January 2024

Type
Ordinary
Gazette no.
2
Part
Part III
Section
Section 1A-Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-III_Section-1A-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[விலை: ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 2] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 10, 2024 மார்கழி 25, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

இயற்கை வளங்கள் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை எண். 4, இயற்கை வளங்கள் (MMC1) த்துறை 22 ஆகஸ்ட் 2023.]

1957-ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்தலும் முறைப்படுத்தலும்) சட்டத்தின், (மத்திய சட்டம் 67/1957) 15 ஆம் பிரிவை சேர்ந்த (1), (1A) ஆகிய உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் மேற்கொள்கிறார்.

2) இதனால் மேற்கொள்ளப்படும் திருத்தம் 05.09.2023 அன்றிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,

(1) விதி - 35 B யின், துணை விதி (1)-இன் வரம்பு நிபந்தனையில், "இருபது விழுக்காடு" என்ற சொற்களுக்குப் பதிலாக "ஐம்பது விழுக்காடு" என்ற சொற்கள் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(2) விதி 43க்குப் பின்னர், பின்வரும் விதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது,

"43-A உரிமக் கட்டணம், பரப்பு மதிப்பீடு, சுரங்க பணி (அ) கனிமம் வெட்டியெடுக்கும் பணி நடைபெறாத போது செலுத்தும் குத்தகை, கனிம வள ஆய்வுக் கட்டணம் ஆகியவற்றை திருத்தியமைத்தல்.- பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமக் கட்டணம், பரப்பு மதிப்பீடு, சுரங்க பணி (அ) கனிமம் வெட்டியெடுக்கும் பணி நடைபெறாத போது செலுத்தும் குத்தகை, கனிம வள ஆய்வுக் கட்டணம் ஆகியவற்றின் மாற்றியமைக்கப்பட்ட வீதங்களை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும்.

தொ. எண் பதவி பெயர் மற்றும் துறை
1. அரசு செயலாளர், இயற்கை வளங்கள் துறை தலைவர்
2. அரசு செயலாளர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை உறுப்பினர்
3, அரசு செயலாளர், சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உறுப்பினர்
4. அரசு செயலாளர், நிதித் துறை உறுப்பினர்
5. அரசு செயலாளர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உறுப்பினர்
6. புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் உறுப்பினர் - ஒருங்கிணைப்பாளர்"; மற்றும்

[ 1 ]

III-1a-(2) (T Sup)—12 3) பிற்சேர்க்கை - II, க்கு பதிலாக பின்வரும் பிற்சேர்க்கை அமைத்து கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

"பிற்சேர்க்கை-II

A. உரிமக் கட்டண வீதம்

தொ. எண் சிறு கனிமத்தின் பெயர் உரிமக் கட்டண வீதங்கள் (ரூபாயில்) NaN
( 1 ) ( 2 ) ( 3 ) NaN
கன மீட்டர் ஒன்றுக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு NaN
1. கிரானைட் நீங்கலாக, கட்டடம் மற்றும் சாலை கட்டுமானத்திற்கான பொருட்கள் / கற்கள் NaN
(a) கட்டுக் கற்கள், குண்டுக் கற்கள், உடைத்து நொறுக்கப்பட்ட அளவு குறைக்கப்பட்ட கற்களாகிய ஜல்லி, உடைக்கல், அரவைக்கல் மற்றும் சக்கைகல் போன்ற கடினமான கற்கள். 90/- 60/- NaN
(b) கூலாங்கற்கள், மற்றும் நீல வெண்மணிக்கல், தீக்கல் முதலியவற்றின் கட்டிகள் 263/- 100/- NaN
(c) செங்கப்பிக் கற்கள் மற்றும் சரளைக் கற்கள் 56/- 28/- NaN
(d) சாதாரண மண் 56/- 28/- NaN
2. கிரானைட் - (Granite) NaN
(a) கருப்பு கிரானைட் 5210/- 1680/- NaN
(b) சிவப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பு, பச்சை, வெள்ளை அல்லது பல வண்ண கிரானைட்டுகள் அல்லது அழகுப்படுத்துகிற அல்லது அலங்கார கற்களாகவோ பயன்படுத்தப்படும் ஏனைய பாறை கற்கள் 3133/- 1180/- NaN
(c) கிரானைட் கழிவு (i) சரியான பரிமாணமுடைய கற்களாக பயன்படுத்த இயலாத ஒழுங்கற்ற துண்டுகளாக உள்ள கிரானைட் கற்கள் மற்றும் (ii) 15 செமீ x 10 செமீ அளவிற்கும் குறைவான அளவுடைய கிரானைட் துண்டுகள் 265/- 100/- NaN
3. சாதாரண மணல் 160/- 80/- NaN
4. செங்கல், தரை ஓடு (டைல்ஸ்) தயாரிப்பதற்கும், மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் சாதாரண களிமண் / தரை ஓட்டுக் களிமண் 56/- 28/- NaN
5. கட்டுமானப் பொருட்களாகப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும், சுண்ணாம்பு தயாரிப்பதற்கு சூளைகளில் பயன்படுத்தக்கூடிய சுண்ணாம்பு சிப்பி 176/- 78/- NaN
மெட்ரிக் டன் ஒன்றுக்கு NaN
6. உருட்டுக் களிமண் 100/- NaN
7. பேரைட்டுகள் 540/- NaN
8. சுண்ணாம்பு மண் 110/- NaN
9. கால்சைட் 110/- NaN
10. சுண்ணாம்பு 100/- NaN
11. சீனக் களிமண் 100/- NaN
12. களிச் செதில் கல் 540/- NaN
13. சுண்ணாப்பாறை (டோலமைட்) 110/- NaN
14. டுனைட் அல்லது பைராக்ஸனைட் 150/- NaN
15. அடர் அனற் பாறை (ஃபெல்சைட்) 150/- NaN
16. களிக்கல் 135/- NaN
மெட்ரிக் டன் ஒன்றுக்கு NaN
17. தீக்களிமண் 45/- NaN
18. பசும் வெங்கப்பாறை (ஃபுச்சைட்) வெள்ளப்பாறை (குவார்ட்சைட்) 135/- NaN
19. ஜிப்சம் 175/- NaN
20. சிவப்பு, மஞ்சள், அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை 230/- NaN
21. தொடர் எண்கள் 4,6,11 மற்றும் 17இல் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக வெண் களிமண் மற்றும் களிமண் வகைகள் 45/- NaN
22. செங்கப்பிக் கற்கள் (அலோகம்: சிமெண்ட் கிரேடு, இரசாயன கிரேடு) 285/- NaN
23. சுண்ணாம்பு கல் 110/- NaN
24. கச்சா மைக்கா, கழிவு மைக்கா, துருவல் மைக்கா 2,700/- NaN
25. காவிக்கல் 36/- NaN
26. பைரோபிலைட் 270/- NaN
27. படிகக்கல் 230/- NaN
28. வெள்ளப்பாறை (குவார்ட்சைட்) 100/- NaN
29. களிப் பாறை 80/- NaN
30. சிலிக்கா மணல் 160/- NaN
31. அடுக்கடைப்பாறை 60/- NaN
32. நுரைக்கல் அல்லது மாக்கல் அல்லது சோப்புக் கல் 100/- NaN
33. உயர் மதிப்பு கனிமங்கள் அற்ற (அனைத்து வகைகளும்) மணற்கல் 110/- NaN
காரட் ஒன்றுக்கு NaN
34. அகேட் கல் 135/- NaN
35. குருந்தம் 3,510/- NaN
36. மேலே குறிப்பிடப்படாத ஏனைய அனைத்து சிறு கனிமங்கள் சுரங்க குழியில் கனிமத்தின் உள்ளூர் சந்தை மதிப்பில் 30% (முப்பது விழுக்காடு) NaN
3

குறிப்பு: 1. தொடர் எண்கள் 1 முதல் 5 வரை குறிப்பிடப்பட்டுள்ள கனிமங்களைப் பொறுத்த வரையில், போக்குவரத்து அனுமதிகள் கைமுறையாக வழங்கப்பட்டிருப்பின், கன மீட்டர் அடிப்படையில் மட்டுமே உரிமக் கட்டணம் விதிக்கப்படும் மேலும் போக்குவரத்து அனுமதிகள் மின் அனுமதி ஏற்பாட்டு முறை வாயிலாக வழங்கப்படும் நேர்வில் மெட்ரிக் டன்களின் அடிப்படையில் மட்டுமே உரிமக் கட்டணம் விதிக்கப்படும்.

2. குவாரிகளின் குழிகளை அளவிடும் போது, கனிமத்தின் அளவு கன மீட்டரில் அளவிடப்பட வேண்டும், மேலும் கரடுமுரடான கல்லின் அளவை 2.75 என்றவாறான அடர்த்தியை கொண்டு மதிப்பிட வேண்டும்.

b. பரப்பு மதிப்பீட்டிற்கான கட்டண விதம்

தொடர் எண் சிறு கனிமத்தின் பெயர் ஆண்டொன்றிக்கு எக்டேர் ஒன்றிக்கு பரப்பளவு மதிப்பீட்டின் வீதம் (ரூபாயில்)
( 1 ) ( 2 ) ( 3 )
1. கட்டுக் கற்கள் மற்றும் குண்டுக் கற்கள் உடைத்து நொறுக்கப்பட்ட அளவு குறைக்கப்பட்ட கற்களாகிய ஜல்லி, உடைக்கல், அரவைக்கல் மற்றும் சக்கைகல் போன்ற கடினமான கற்கள், சாதாரண மணல், செங்கப்பிக் கற்கள், சாதாரண மண், சரளைக் கற்கள், செங்கல் மற்றும் தரை ஓடு தயாரிப்பு மற்றும் மட்பண்டங்கள் செய்வதற்கு பயன்படுத்தகூடிய சாதாரண களிமண் / ஓட்டு களிமண், கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கத் தேவையான சுண்ணாம்பு தயாரிப்பதற்காக சூளைகளில் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு சிப்பி மற்றும் சிறுகற்கள், கூழாங்கற்கள் மற்றும் நீல வெண்மணிக்கல், வெள்ளப்பாறை, தீக்கல் போன்றவற்றின் கட்டிகள், வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் சிற்பங்கள் செதுக்குவதற்கு பயன்படுத்தப்படும் நுரைக்கல் மற்றும் பிற கற்கள் 500/-
2. அகேட், உருட்டு களிமண், பேரைட்டுகள், சுண்ணாம்பு மணல், கால்சைட், சுண்ணாம்பு, சீனக் களிமண், குருந்தம், களி செதில் கல், சுண்ணப்பாறை, டுனைட் அல்லது பைராக்ஸனைட், ஃபெல்சைட், களிக்கல், தீக்களிமண், பசும் வெங்கப்பாறை (ஃபுைஷட்) வெள்ளப்பாறை (குவார்ட்சைட்), ஜிப்சம், சிவப்பு, மஞ்சள், அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை, வெண்களிமண், செங்கப்பிக் கற்கள் (அலோகங்கள்: சிமெண்ட் கிரேடு, இரசாயன கிரேடு), சுண்ணாம்புக்கல், கச்சா மைக்கா, கழிவு மைக்கா, துருவல் மைக்கா, காவிக்கல், பைரோஃபிலைட், படிகக்கல் வெள்ளப்பாறை (குவார்ட்சைட்), மணல் (ஏனையவை), களிப்பாறை, சிலிக்கா மணல், அடுக்கடைப்பாறை, நுரைக்கல் (அல்லது) மாக்கல் (அல்லது) சோப்பு கல் 1,000/-
3. கிரானைட் - கருப்பு மற்றும் வண்ணமுடையது 1,000/-
4. மேலே குறிப்பிடப்படாத ஏனைய அனைத்து வகையான சிறு கனிமங்கள் 1,000/-
4

C. சுரங்க பணி (அ) கனிமம் வெட்டியெடுக்கும் பணி நடைபெறாத போது செலுத்தும் குத்தகை

தொடர் எண் சிறு கனிமத்தின் பெயர் ஆண்டொன்றுக்கு ஒரு எக்டேருக்கு சுரங்க பணி (அ) கனிமம் வெட்டியெடுக்கும் பணி நடைபெறாத போது செலுத்தும் குத்தகை வீதம் ( ரூபாயில்)
( 1 ) ( 2 ) ( 3 )
1. கட்டுக் கற்கள் மற்றும் குண்டுக் கற்கள் உடைத்து நொறுக்கப்பட்ட அளவு குறைக்கப்பட்ட கற்களான ஜல்லி, உடைக்கல், அரவைக்கல் மற்றும் சக்கைகல், உள்ளிட்ட கரடு முரடான கற்கள், செங்கப்பி கற்கள், சாதாரண மணல், கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்க தேவையான சுண்ணாம்பு தயாரிப்பதற்காக சூளைகளில் பயன்படுத்தப்படும் சுண்ணாம்புச் சிப்பி மற்றும் சிறுகற்கள். 1,00,000/-
2. சரளை, சாதாரண மண், செங்கல் மற்றும் தரை ஓட்டு தயாரிப்பு மற்றும் பிற மட்பாண்டங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும், சாதாரண களிமண் / ஓட்டு களிமண், கூழாங்கற்கள் மற்றும் நீல வெண்மணிக்கல், வெள்ளப்பாறை, தீக்கல் போன்றவற்றின் கட்டிகள், வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் சிற்பங்கள் செதுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நுரைக்கல் மற்றும் பிற கற்கள் 80,000/-
3. அகேட், உருட்டுக் களிமண், பேரைட்டுகள், சுண்ணாம்பு மணல், கால்சைட், சுண்ணாம்பு, சீனக் களிமண், குருந்தம், களி செதில் கல், சுண்ணப்பாறை, டுனைட் அல்லது பைராக்ஸனைட் அடர் அனற் பாறை (ஃபெல்சைட்), களிக்கல், தீக்களிமண், பசும் வெங்கப்பாறை (ஃபுைஷட்) வெள்ளப்பாறை (குவார்ட்சைட்), ஜிப்சம், சிவப்பு, மஞ்சள், அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை (ஜாஸ்பர்), வெண்களிமண், மற்றும் ஏனைய களிமண் வகைகள், செங்கப்பி கற்கள் (அலோகங்கள்: சிமெண்ட் கிரேடு, இரசாயன கிரேடு), சுண்ணாம்புக்கல், கச்சா மைக்கா, கழிவு மைக்கா, துருவல் மைக்கா, காவிக்கல், பைரோஃபிலைட், படிகக்கல் வெள்ளப்பாறை (குவார்ட்சைட்), மணல் (ஏனையவை), களிப்பாறை, சிலிக்கா மணல், அடுக்கடைப்பாறை, நுரைக்கல் (அல்லது) மாக்கல் (அல்லது) சோப்பு கல் 80,000/-
4. கிரானைட்கள் - கருப்பு மற்றும் வண்ணமுடையது 2,00,000/-
5. மேலே குறிப்பிடப்படாத ஏனைய அனைத்து வகையான சிறு கனிமங்கள் 80,000/-

D. கிரானைட்டுக்கான கனிமவள ஆய்வுக் கட்டணம்

தொடர் எண் சிறு கனிமத்தின் பெயர் கனிமவள ஆய்வுக் கட்டணம் / ஒரு எக்டேருக்கு / ஆண்டுக்கு (ரூபாயில்)
( 1 ) ( 2 ) ( 3 )
1 . கிரானைட்கள் (எந்த வண்ணமாக இருப்பினும்) 1 , 00,000/-

K. பனீந்திர ரெட்டி,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (மு.கூ.பொ).

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

5

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை

அறிவிக்கை

[அரசாணை ( நிலை ) எண். 135, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற (வனம் 12)த் துறை, 11 செப்டம்பர் 2023.] 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 5/1882) 35 மற்றும் 36 ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு வெட்டுமரம் போக்குவரத்து விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார்.

திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், விதி 2A-இல், "விதி 4" என்னும் சொற்றொடருக்குப் பின்னர் பின்வரும் சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

"அல்லது இணையவழி தேசிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு ஏற்பாட்டு முறை (http:/ntps.nic.in) வாயிலாகப் பெறப்பட்ட யாதொரு மின் போக்குவரத்து அனுமதிச்சீட்டு / தடையின்மைச் சான்றிதழ்"

சுப்ரியா சாஹு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ).

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் ( மொழிபெயர்ப்பு ) துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 January 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-III_Section-1A-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-01-10.Ordinary_2_Part-III_Section-1A-Sup.