© தமிழ்நாடு அரசு 2024
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 2] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 10, 2024 மார்கழி 25, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 157, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 08 நவம்பர் 2023.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், நாமக்கல் உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்ப்பதுடன், 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 206 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II(2)/RUL/2002/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், இந்த அட்டவணைக்குப் பதிலாக பின்வரும் அட்டவணை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
அட்டவணை
வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெயர்
61. கீழ்சாத்தம்பூர்
[அரசாணை (நிலை) எண். 159, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 10 நவம்பர் 2023.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஏற்காடு உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்ப்பதுடன் 06.11.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 557 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II(2)/RUL/4633/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
II-2-(2) (T Sup)—1
[ 1 ]2 திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், இந்த அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
அட்டவணை
வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெயர்
20. நாகலூர்
67. மஞ்சக்குட்டை
9. அசம்பூர்
6. தலைச்சோலை
12. மைலப்பட்டி
61. புத்தூர்
05. பில்லேரி
66. செம்மடுவு
[அரசாணை (நிலை) எண். 160, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 10 நவம்பர் 2023.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், திருச்செங்கோடு உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்ப்பதுடன், 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 219-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2147/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் உள்ள அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
அட்டவணை
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
58. கைலாசம்பாளையம் (பகுதி)
47. கவுண்டம்பாளையம் (எ) குமாரமங்கலம்
45. போக்கம்பாளையம்
44. அத்திபாளையம்
37. ஆண்டிபாளையம்
35. வரகூராம்பட்டி".
[அரசாணை (நிலை) எண். 161, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 10 நவம்பர் 2023.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், இராசிபுரம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து, 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 219 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II(2)/RUL/2145/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப் பதிலாக பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
அட்டவணை
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
23. இராசிபுரம் (பகுதி)
24. முத்துகாளிப்பட்டி
22. கோனேரிப்பட்டி (பகுதி)
81. தொட்டியம்பட்டி சந்திரசேகரபுரம்
சி. சமயமூர்த்தி, அரசு செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மொழிபெயர்ப்பு, கூ.பொ) ,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.
3தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 145, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 02 செப்டம்பர் 2023.] தமிழ்நாடு 1982-ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6-ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5) உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26.02.2010 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெளியீட்டின் பாகம் -II பிரிவு 2-இல், 2 முதல் 3 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ.வே/123 (a-2)/2010-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை பதிலீட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியம் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பின்வரும் உறுப்பினர்களை இதனால் நேமகம் செய்கிறார். அவை வருமாறு:-
A.அரசுப் பிரதிநிதிகள்
1. மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைவர் சென்னை-600 006.
2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் உறுப்பினர் மேம்பாட்டுத்துறை, சென்னை-600 009.
3. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, சென்னை-600 009. உறுப்பினர் 4. முதன்மை செயலாளர், தொழிலாளர் நல ஆணையர், சென்னை-600 006. உறுப்பினர் 5. ஆணையர், நகராட்சி நிருவாக இயக்குநரகம், சென்னை-600 028. உறுப்பினர் B.வேலையளிப்போர் பிரதிநிதிகள்.-
1. திரு. எம். செல்வராஜ்
உறுப்பினர் எண். 3/198, கோனார் தெரு, ஒடுக்கூர், புதுக்கோட்டை.
2. திரு. எம். கொளஞ்சியப்பன்
உறுப்பினர் உறுப்பினர்
எண். 68/3, பொன்னுசாமி நகர், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம்.
3. திரு. கே. வேல்முருகன்
உறுப்பினர் எண். 13, அம்பேத்கர் நகர், மங்கலம்பேட்டை, பேரூர்-606 104.
4. திரு. டி. செல்வம்
உறுப்பினர் எண். 1/38, கோட்டைசாமி நகர், நிலையூர் முதன்மைச் சாலை, திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டம்-625 005.
5. திரு. ஆர். முத்துகுமார்
உறுப்பினர் எண். 26, தமிழ்ச் சாலை, பாண்டியன் நகர், பெத்தனியாபுரம்,
மதுரை மாவட்டம்-625 016.
C.உடலுழைப்புத் தொழிலாளர் பிரதிநிதிகள்:
1. திரு. பி.வி. சரவணன்
உறுப்பினர் த/பெ. பி.ஜி. வெங்கடாசலம், தொழிலாளர் முன்னேற்றப் பேரவை (LPF),
எண். 661, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, சென்னை-600 002.
2. திரு. பி. கருப்பையன்
உறுப்பினர் த/பெ. ஆர். பக்கிரிசாமி, இந்திய தொழிற் சங்க மையம் (CITU),
எண். 169/4, விக்னேஸ்வரா நகர் விரிவாக்கம், பாதிரிக்குப்பம், கடலூர்-607 401.
3. திரு. சி. சந்திர குமார்
உறுப்பினர் த/பெ. சிங்காரம், அகில இந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு (AITUC),
எண். 117, கீழ ராஜ வீதி, தஞ்சாவூர்-613 001.
4. திரு. ஆர் வெங்கடாசலபதி
உறுப்பினர் த/பெ. ரகுபதி, ஹிந்து மஸ்தூர் சபை (HMS), எண். 193/B, ரயில்வே காலணி,
காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-600 008.
45. திரு. வி. பெருமாள்சாமி
உறுப்பினர் த/பெ. ஆர். வெங்கடாசலம், இந்திய தேசிய தொழிற் சங்க காங்கிரஸ் (INTUC),
எண். 2/84, விநாயகர் கோவில் தெரு, வக்கம்பாளையம், கருப்பம்பாளையம்
அஞ்சல், ஆனைமலை வட்டம், கோயம்புத்தூர்-642 004.
[அரசாணை (நிலை) எண். 177, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 18 நவம்பர் 2023.] 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4ஆம் பிரிவுடன் படிக்கப்பட்ட 3ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர் 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தங்கனை இதனால் மேற்கொள்கிறார். அவையாவன:-
திருத்தங்கள்
மேற்சொன்ன திட்டத்தில்,-
(1) பகுதி 1-இல், (3)-ஆத் துணைப்பகுதியில் "இனங்கள் 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45, 51, 52, 54, 58, 59, 60 மற்றும் 62" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "இனங்கள் 6, 10, 11, 12, 13, 17, 18, 19, 22, 24, 28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 மற்றும் 62" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்:
(2) பகுதி 2-இல்,-
i துணைப் பகுதி (g)-யில், "இனம் 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45, 51, 52, 54, 58, 59, 60 மற்றும் 62" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "இனங்கள் 6, 10, 11, 12, 13, 17, 18, 19, 22, 24, 28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 மற்றும் 62" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்:
ii துணைப்பகுதி (i)- யில் "இனங்கள் 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45, 51, 52, 54, 58, 59, 60 மற்றும் 62" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "இனங்கள் 6, 10, 11, 12, 13, 17, 18, 19, 22, 24, 28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 மற்றும் 62" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்:
[அரசாணை (நிலை) எண். 182, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 30 நவம்பர் 2023.] 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 29 - ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர்கள் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.
திருத்தம்
மேற்சொன்ன விவர அட்டவணையில், இனம் 70 - க்குப் பின்னர் பின்வரும் இனம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
7.1 இணையம் சார்ந்த சுதந்திரமான தன்விருப்பப் பணிகளில் (platform based gig works) வேலைவாய்ப்பு".
குமார் ஜெயந்த், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர் (மொழிபெயர்ப்பு, கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.