Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Bills (Tamil)

Published 14 February 2024

Department
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT
Type
Extraordinary
Gazette no.
44
Part
Part IV
Notification no.
Bill No. 2 of 2024—A Bill to repeal the Tamil Nadu Puratchi Thalaivi Dr. J Jayalalithaa Memorial Foundation Act, 2020.
Extraordinary Type
Tamil Nadu Bills.
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2024-02-14.Extraordinary_44_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU 2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 44A] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 14, 2024 மாசி 2, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம்

பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:

எண். 1/2024—தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம். .. .. .. .. 2-3 எண். 2/2024—தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை

(நீக்கறவுச்) சட்டம். .. .. .. .. .. .. .. 4-6

[1]

DTP—Ex-IV-1 (44A)2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 14-ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக்

காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்

130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 1/2024

1994–ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு

1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்

மற்றும்

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

171-ஆம்

தமிழ்நாடு சட்டம் 2 இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பிரிவிற்கான

21/1994.

திருத்தம்.

2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 171 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், "வீட்டு வரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

3. முதன்மைச் சட்டத்தின் 172 ஆம் பிரிவில், —

172- ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(1) ஓரத்தலைப்பில், "வீட்டு வரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (1), (2), (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவில், "வீட்டு வரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

4. முதன்மைச் சட்டத்தின் 177 ஆம் பிரிவில், —

177-ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(1) ஓரத்தலைப்பில், "நில வருவாய் பணியாளர்" எனும் சொற்றொடருக்காக, "ஊராட்சி பணியாளர் அல்லது அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிற நபர் எவரையும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) "ஐந்தாண்டுகளுக்கொருமுறை வீட்டுவரி விதிப்புப் பதிவேடு ஒன்றைத் தயாரிக்குமாறும் நில வருவாய்த்துறை பணியாளர்களைக்" எனும் சொற்றொடருக்காக, "ஐந்தாண்டுகளுக்கொருமுறை சொத்து வரி விதிப்புப் பதிவேடு ஒன்றைத் தயாரிக்குமாறும் ஊராட்சி பணியாளர் அல்லது அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிற நபர் எவரையும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

188–ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

5. முதன்மைச் சட்டத்தின் 188 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில், "வீட்டுவரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

I-ஆம்

6. முதன்மைச் சட்டத்தின் I – ஆம் இணைப்புப் பட்டியலில், —

இணைப்புப்

பட்டியலுக்கான

திருத்தம்.

(i) I- ஆம் விளக்கத்திலுள்ள வரம்புரையில், "வீட்டு வரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) II- ஆம் விளக்கத்தில் மற்றும் அதன் கீழ் உள்ள இரண்டாம் வரம்புரையில், "வீட்டு வரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3

நோக்கக் காரண விளக்கவுரை

ஆறாவது மாநில நிதி ஆணையமானது, "வீட்டு வரி" என்ற சொல், வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும், மற்ற வகை கட்டடங்களுக்கு அல்ல என்ற தவறான கருத்துப்பதிவை ஏற்படுத்துகிறது என்ற காரணத்திற்காக, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் 21/1994) விதிக்கப்படும் 'வீட்டுவரி' என்ற பெயரிட்டுமுறையை, 'சொத்து வரி' என மாற்றம் செய்வதற்கு பரிந்துரை செய்துள்ளது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, "வீட்டுவரி" எனும் பெயரிட்டுமுறையை, "சொத்து வரி" என மாற்றம் செய்வதற்கு, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 171, 172, 177, 188 ஆம் பிரிவுகளையும் I ஆம் இணைப்புப் பட்டியலையும் தக்கவாறு திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

இ. பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,

முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 பிப்ரவரி 14.

4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5

2024-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 14- ம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண

விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்

130 ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 2/2024

2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைச் சட்டத்தினை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு.

1. இந்தச் சட்டம் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை (நீக்கறவுச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தமிழ்நாடு சட்டம்

தமிழ்நாடு சட்டம் 32/2020.

32/2020-ன்

நீக்கறவு.

2. 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் காரண விளக்கவுரை

2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைச் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 32/2020), சென்னை போயஸ் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெ ஜெயலலிதா (மறைவு) அவர்கள் வசித்த இடமான 'வேதா நிலையத்தை' ஒரு நினைவு இல்லமாக மாற்றியமைப்பதற்கும், பராமரிப்பதற்கும், அதனை மேலாண்மை செய்வதற்குமான நீண்ட கால ஏற்பாடுகளாக ஓர் அறக்கட்டளையை நிறுவுவதற்காக இயற்றப்பட்டது. மாண்பமை மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிப்பேராணை மனு எண்கள்.9285 மற்றும் 10135/2020 மற்றும் நீதிப்பேராணை மனு எண்.1708/2021-ன் 24.11.2021-ஆம் தேதியிட்ட தீர்ப்பில், 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு பெறுவதற்கும் வெளிப்படைத்தன்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் கீழான (மையச் சட்டம் 30/2013) நடவடிக்கைகளை இரத்து செய்து, அதன் வழியில், மேற்கூறிய நிலம் மற்றும் கட்டடத்தினை கையகப்படுத்தி மறைந்த முதலமைச்சரின் சட்டப்பூர்வ வாரிசுகளான, இந்நீதிப்பேராணை மனுதாரர்களிடம் வேதா நிலையத்தின் சாவியினை ஒப்படைக்கவும் ஆணை பிறப்பித்தது. மாண்பமை உயர்நீதிமன்றத்தினால் ஆணையிடப்பட்டவாறு அக்கட்டடத்தின் சாவி மேற்படி நீதிப்பேராணை மனுதாரர்களிடம் வழங்கப்பட்டது. மேற்கூறியவாறாக, தமிழ்நாடு சட்டம் 32/2020 இயற்றப்பட்டதன் நோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில், அச்சட்டம் காலாவதியாகிவிட்டது. எனவே அரசானது, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 32/2020-ஐ நீக்கறவு செய்ய முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

மு.பெ. சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,

முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 பிப்ரவரி 14.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 14 February 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-02-14.Extraordinary_44_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2024-02-14.Extraordinary_44_Part-IV_Section-1.