Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Removal of Panchayat Union President, Chethupattu Panchayat, Cheyyar Division-Thiruvannamalai District

Published 12 March 2024

Department
Collector, Thanjavur
Type
Extraordinary
Gazette no.
102
Part
Part VI
Notification no.
Notification No.VI(2)/6(a)/2024.--(Roc. No. A3/1454/2023)
Extraordinary Type
Notifications or Orders of interest to a section of the public issued by Heads of Departments, Etc.
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-03-12.Extraordinary_102_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2024 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 00.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY

No. 102] CHENNAI, TUESDAY, MARCH 12, 2024 Maasi 29, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் குறித்த அறிவிக்கை.

(ந.க.அ3/1454/2023/உ.இ(ஊ)செ.கோ)

No.VI(2)/6(a)/2024.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டம், சேத்பட்டு ஊராட்சி ஒன்றியம், கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மீது கீழ்பட்டு ஊராட்சியினை சேர்ந்த பிரதம மந்திரி வீடுகள் திட்ட பயனாளி (PMAY G .No TN129019602) திருமதி.சரஸ்வதி க/பெ எம் ஜி ஆர் என்பவர் கட்டியுள்ள வீட்டிற்கு வீட்டுவரி இரசீது வழங்கவும் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கும், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரும், நிர்வாக அலுவலருமான திருமதி.M.வேண்டா என்பவரும் அவரது கணவர் திரு.K.P.மணி என்பவரும் ரூ.30,000/- (முப்பதாயிரம்) மேற்கண்ட பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்ட பயனாளி திருமதி.சரஸ்வதி என்பவரின் கணவர் திரு. எம் ஜி ஆர் என்பவரிடமிருந்து இலஞ்சமாக பெறும் போது திருவண்ணாமலை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களால் கைது செய்யப்பட்டதின் அடிப்படையில் கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் /நிர்வாக அலுவலர் திருமதி.ம.வேண்டா என்பவரின் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 205 (1)-இன் கீழ் அட்டவணை அ-வில் உள்ள விவரப்படி தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன் சட்டப்பிரிவுகளை கடைபிடிக்காமை மற்றும் மீறியமைக்காக 2 (இரண்டு) குற்றச்சாட்டிற்கான விளக்கங்கள் கோரி கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவருக்கு இரண்டு பக்கங்கள் கொண்ட அறிவிப்பு 05.05.2023 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

அட்டவணை - அ

குற்றச்சாட்டு எண் குற்றச்சாட்டு விவரம்
1. கீழ்பட்டு ஊராட்சியில், 2021-2022 ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டிற்கு வீட்டுவரி ரசீது வழங்க கோரிய திருமதி.சரஸ்வதி என்பரின் கணவர் எம்.ஜி.ஆர் என்பவரிடமிருந்து ரூ.30,000/- கையூட்டு பெற்றதற்காக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் சட்டப்படி அளிக்கப்பட்ட கடமை மற்றும் பொறுப்புகளை மீறி செயல்பட்டுள்ளதும், இலஞ்சம் பெற்றதும் நிருபணமாகியுள்ளது. இது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றச்செயல் புரிந்தமை. மத்திய அரசின் திட்டத்தினை சீர்குலைக்கும் நோக்குடனும் விதிமுறைகளுக்கு புறம்பாகவும், முறைகேடாகவும், கையூட்டு பெற்றுள்ளதும், கைது நடவடிக்கைக்கு உள்ளாகி இருப்பதும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994 பிரிவு- 110,111 மற்றும் 112-இன் படி ஊராட்சி மன்றத் தலைவருக்கு விதிக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஆற்றத் தவறியமை.
2. ஊராட்சி மன்றப் பெண் பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் மூன்றாம் நபரின் தலையீடு இருக்க கூடாது என பல முறை அறிவுறுத்தப்பட்டும், கீழ்ப்பட்டு கிராம ஊராட்சி நிர்வாகத்தில் தங்கள் கணவரின் தலையீடு இருப்பது இந்நிகழ்வின் மூலம் நிருபணமாகியமை.
[ 1 ] VI-2 Ex. (102) 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கான கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் அளித்த விளக்கத்திணை சேத்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் பெறப்பட்டு 06.07.2023 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் சமர்பிக்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவரால் சமரப்பிக்கப்பட்ட பதிலறிக்கையினை பரிசீலிக்கப்பட்டதில் அக்குற்றச்சாட்டுகள் ஆதார முகாந்திரம் இருந்ததாலும், அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாத காரணத்தினாலும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994- பிரிவு 203-ன் கீழ் கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ம.வேண்டா என்பவர் ஊராட்சியின் அனைத்து விதமான நிதிபரிவர்த்தனைகளையும் (கணக்குகளையும்) கையாளுவதினை தற்காலிமாக முடக்கம் செய்தும், 1994- பிரிவு 204-(1),(2)-ன் கீழ் சேத்துப்பட்டு,வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கீழ்பட்டு ஊராட்சியின் அனைத்து விதமான நிதிபரிவர்த்தனைகளையும் தற்காலிகமாக கையாள அனுமதித்தும் உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவரால் தொடரப்பட்ட வழக்கின் (W.P.No.21334/2023 & WM.No.20733/2023) தீர்ப்புரையின் அடிப்படையில் கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ம.வேண்டா என்பவரின் நிதிபரிவர்த்தனை அதிகாரம் முடக்கம் செய்ததை இரத்து செய்து, மீளவும் நிதிபரிவர்த்தனை அதிகாரத்தினை வழங்கி 18.09.2023 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர்/ ஆட்சித் தலைவர் அவர்களால் உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 205 (2)-இன் படி கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஊராட்சி மன்றக் கருத்தினைப்பெற சட்டப்பிரிவு 205-இன் (உட்பிரிவு 3 முதல் 10 வரை) படி ஊராட்சி மன்ற கூட்டத்தினை நடத்தி அதன் கருத்தினை பெற்று அறிக்கை அளிக்க ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் போளூர் வட்டாட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போளூர் வட்டாட்சியரால் கீழ்பட்டு ஊராட்சி மன்றக் கூட்டத்தினை 22.12.2023 அன்று கூட்டி கீழ்பட்டு ஊராட்சியின் கருத்தினை தீர்மானப் பதிவேட்டில் பதிந்து அதன் நகல் சான்றெப்பம் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அக்கூட்டத்தில் மொத்தம் உள்ள 9 வார்டு உறுப்பினர்களில் 9 நபர்களும் கலந்து கொண்டனர். அதில் கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வட்டாட்சியரால் படித்து காண்பிக்கப்பட்டதில் 8 வார்டு உறுப்பினர்கள்(1-வது, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, 6-வது, 7-வது, 9-வது வார்டு) ஊராட்சி மன்றத் தலைவர் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்பதாகவும், 8-வது வார்டு உறுப்பினர் மட்டும் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேற்படி கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித்தலைவரால் பரிசீலிக்கப்பட்டது. அதில் ஊராட்சி மன்றத் தலைவரால் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஏற்கனவே அளித்த விளக்கத்தினை பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் மறுப்பதாக தெரிவித்த கருத்தினை ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித்தலைவரால் ஏற்கப்படுகிறது.

இதன்படி மேலே தெரிவிக்கப்பட்ட முக்கிய காரணிகளை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 205 - இன் பதவி நீக்க நடவடிக்கைக்கான முழு கோப்பினை உற்றுநோக்கியதில் ஊராட்சி நிர்வாகத்தின் நலன் கருதியும், பொது நலன் கருதியும் இவ்வூராட்சி மன்றத் தலைவர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கும் விதிமீறல்களுக்கும் இடமளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது உறுதிபடுத்தப்படுகிறது.

எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன் படியும் விதிமுறைகளுக்குட்பட்டும் நியாயமாகவும் சிற்றூராட்சியின் கருத்தினை பரிசீலனை செய்த பின்பும் எனது உளத்தேர்வின்படியும் என்னால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டதில் குற்றச்சாட்டுகள் மறுத்துரைப்பதற்கு போதுமான ஆதாரங்கள் எடுத்துரைக்க தவறியதாலும் அரசு விதிமுறைகளையும், சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாக எனக்கு தெரியவருவதால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 205(11)-இல் உள்ள ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி கீழ்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ம.வேண்டா என்பவரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்து அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262(1) - இன் கீழ் இந்த பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.

தெ. பாஸ்கரபாண்டியன், ஊராட்சிகளின் ஆய்வாளர்/ திருவண்ணாமலை, 2023 மார்ச் 12. மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 12 March 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-03-12.Extraordinary_102_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-03-12.Extraordinary_102_Part-VI_Section-2.