Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Acts and Ordinances (Tamil Supplement) Act No.1 of 2024.--An Act to further amend the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987. -

Published 13 March 2024

Type
Ordinary
Gazette no.
11
Part
Part IV
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-03-13.Ordinary_11_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2024 [விலை: ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 11] சென்னை, புதன்கிழமை, மார்ச் 13, 2024 மாசி 30, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 1 / 2024.

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்

(முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச்

மற்றும் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம் என்று வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2-ஆம் 27/1989.

பிரிவிற்கான

திருத்தம்.

2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடுவதான) 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் 2 ஆம் பிரிவில்,-

(1) (8-b) ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,

அதாவது:-

மையச் சட்டம்

1/1956.

"(8-c) "உழவர் உற்பத்தியாளர் நிறுமம்" என்பது, 1956 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்கீழ், வேளாண் உழவர்களின் குழுவினால், அவ்வாறு உருவாக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட ஓர் உற்பத்தியாளர் நிறுமம் என்று பொருள்படும்;";

(2) 14 ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,

அதாவது:-

[1]

11—IV-2-(T-Sup)-12 "(14-a) "இணையவழி வணிக பணித்தளம்" என்பது 8-B ஆம் பிரிவின்கீழ் வகைசெய்யப்பட்ட, எந்தவொரு வேளாண் விளைபொருளிலும் வணிகம் நடத்துவதற்காகவும் அதனுடன் தொடர்புடைய பொருட்பாடுகளுக்காகவுமான ஒரு மின்னணு பணித்தளம் என பொருள்படும்;"

3. முதன்மைச் சட்டத்தின் 7-D ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

7-D ஆம் பி ரி விற் க ான மாற்றீடு.

"7-D பூசலைத் தீர்த்து வைத்தல்:-நேரடி சந்தைப்படுத்துதல், தனியார் சந்தை முற்றம் அல்லது தனியார் சந்தை துணை முற்றம், 8-A ஆம் பிரிவின்கீழ் உரிமம் வைத்திருப்பவர், சிறப்பு மற்றும் துணை நிலை சந்தைகள் உள்ளடங்கிய சந்தைகளின் உரிமம் கொண்டிருப்பவர்களுக்கு இடையே அல்லது அவர்களுக்குள் எழும் பூசல் எதுவும், தீர்த்துவைத்தலுக்காக தொடர்புடைய சந்தைக்குழுவின் செயலாளருக்கு குறித்தனுப்பப்படுதல் வேண்டும். செயலாளர், பூசல் ஏற்பட்ட தரப்பினர்களுக்கு கேட்பதற்கானதொரு நியாயமான வாய்ப்பை வழங்கிய பின்பு முப்பது நாட்களுக்குள் சுருக்கமான முறையில் சிக்கலைத் தீர்வு செய்தல் வேண்டும்.".

4. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட முதன்மை சட்டத்தின் 7-D ஆம் பிரிவிற்கு

பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

7-E எனும் புதிய பிரிவை உட்புகுத்துதல்.

"7-E. மேல்முறையீடு.- (1) 7-D ஆம் பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட செயலாளரின் ஓர் ஆணையினால் இடருற்ற எந்தவொரு நபரும், அத்தகைய ஆணை கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் முறையிலும் மேல்முறையீட்டு அலுவலரான இயக்குநரிடம் ஒரு மேல்முறையீட்டினை தாக்கல் செய்ய வேண்டும்.

(2) மேல்முறையீட்டு அலுவலர், முப்பது நாட்களுக்குள் தரப்பினர்களுக்கு கேட்பதற்கான நியாயமானதொரு வாய்ப்பு வழங்கிய பின்னர், ஒவ்வொரு மேல்முறையீட்டையும் முடித்து வைத்தல் வேண்டும்:

வரம்புரையாக, மேல்முறையீட்டு அலுவலர் கூறப்பட்ட கால அளவான முப்பது நாட்கள் காலாவதியான பின்னர், உரிய காலவரைக்குள் மேல்முறையீடு தாக்கல் செய்யாததற்கான போதுமான காரணம் மேல்முறையீட்டாளரால் காண்பிக்கப்பட்டால், மேல்முறையீட்டினை ஏற்றுக்கொள்ளலாம்.

(3) மேல்முறையீட்டு அலுவலர், அவ்வாறு செய்வது தேவையெனக் கருதுவாராயின், மேல்முறையீடு செய்யப்பட்ட ஆணையின் மீது, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய கால அளவிற்கு ஒரு தடையாணையை வழங்கலாம்.

(4) ஒரு மேல்முறையீட்டின் மீது பிறப்பிக்கப்பட்ட ஆணை இறுதியானதாகவும்

தரப்பினர்களை கட்டுப்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும்.".

8-A ஆம் பிரிவின்

திருத்தம்.

5. முதன்மைச் சட்டத்தின் 8-A ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1) 8 ஆம் பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இயக்குநர் அல்லது இதன்பொருட்டு அவரால் அதிகாரமளிக்கப்பெற்ற ஓர் அலுவலர், மாநிலம் முழுமைக்கும், இணையவழி வணிக பணித்தளம் வழியோ அல்லது பிறவாறாகவோ, வேளாண் விளைபொருள் எதனையும் வாங்குதல் அல்லது விற்றலை பொறுத்தவரையில், வாங்குதல், விற்றல் அல்லது ஏதேனும் பிற வகையில் இயங்குவதற்கு ஒரு நபருக்கு உரிமம் வழங்கலாம். உரிமம் வழங்கப்படுதலுக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்திலும் முறையிலும் மற்றும் அத்தகைய கட்டணத்துடனும் சேர்த்து செய்யப்படுதல் வேண்டும்.";

3

6. அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின் 8-A ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவுகள் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-

8-B மற்றும் 8-C எனும் புதிய பிரிவுகளை உட்புகுத்துதல்.

"8-B. இணையவழி வணிக பணித்தளம்.- (1) நபரெவரும், இந்தப் பிரிவின்கீழ் உரிமம் ஒன்றைப் பெறாமல் ஓர் இணையவழி வணிக பணித்தளத்தை நிறுவுதலும் இயக்குதலும் கூடாது.

(2) இணையவழி வணிக பணித்தளம் ஒன்றை நிறுவுவதற்கும் இயக்குவதற்குமான ஓர் உரிமம் வழங்கப்படுதலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும், இயக்குநரிடம் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரிடமும் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய படிவத்திலும் அத்தகைய முறையிலும், அத்தகைய கட்டணம் மற்றும் பத்து இலட்சம் ரூபாய்க்கும் குறைவில்லாத ஒரு வங்கி உத்திரவாதத்துடன் சேர்த்து செய்யப்படுதல் வேண்டும்.

(3) இயக்குநர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய

அலுவலர் எவரும், ஓர் உரிமத்தை அளிக்கலாம் அல்லது அளிக்க மறுக்கலாம்:

வரம்புரையாக, உரிமம் வழங்கப்படுதலுக்கான எந்தவொரு விண்ணப்பமும், விண்ணப்பதாரருக்கு கேட்பதற்கான ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டாலன்றி நிராகரிக்கப்படுதல் கூடாது.

(4) இந்தப் பிரிவின்கீழ், உரிமம் வழங்கப்பட்ட ஒரு நபர், வகுத்துரைக்கப்படலாகிறவாறு இணையவழி வணிக பணித்தளத்துடன் தொடர்புடைய அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குதல் வேண்டும்.

(5) உரிமம் பெற்றவர், 24 ஆம் பிரிவின்கீழ் விதிக்கப்படும் கட்டணத்திற்கு மிகாமல் சந்தைக் குழுவினால் நிர்ணயிக்கப்படுகிறவாறான அத்தகைய வீதத்தில், எந்தவொரு வேளாண் விளைபொருளின் இணையவழி விற்பனைப் பரிவர்த்தனை ஒவ்வொன்றின் மீதும் பயனாளர் கட்டணத்தை வசூலிப்பதற்கு உரிமையுடையவராகிறார்:

வரம்புரையாக, அந்த வேளாண் விளைபொருள் உற்பத்தியாளரிடமிருந்து பயனாளர் கட்டணம் எதுவும் வ#லிக்கப்படுதல் கூடாது.

(6) இணையவழி வணிக பணித்தளத்தின் மூலமான வேளாண் விளைபொருளின் வர்த்தகமானது, வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையில் செய்யப்படுதல் வேண்டும்.

8.C. இணையவழி வணிக பணித்தளத்துடனான ஒருங்கிணைவு.- தனியார் சந்தை முற்றம் அல்லது தனியார் சந்தை துணை முற்றத்தின் உரிமம் பெற்றவர், வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய முறையில், இணையவழி வணிக பணித்தளத்துடனான ஒருங்கிணைவிற்கான அனுமதிக்காக, அரசிடம் அல்லது அதன் ஏதேனும் முகமையிடம் விண்ணப்பிக்கலாம்.".

10 ஆம் பிரிவின்

திருத்தம்.

7. முதன்மைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவில், 2 ஆம் உட்பிரிவில் (a) கூறின் வரம்புரைக்காக பின்வரும் வரம்புரைகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"வரம்புரையாக, உழவர்களில் ஒருவர், உழவர் உற்பத்தியாளர் நிறுமம் ஒன்றைச் சேர்ந்தவராய் இருத்தல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக, அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி எதனையும் பொறுத்து ஒன்றுக்கும்

மேற்பட்ட வேளாண் விளைபொருள் அறிவிக்கை செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அத்தகைய

நியமனமானது, நடைமுறையில் கூடுமானவரையில், அந்த அறிவிக்கை செய்யப்பட்ட

பகுதியில் உள்ள அறிவிக்கை செய்யப்பட்ட அனைத்து வேளாண் விளைபொருள்

உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாத்தல் வேண்டும்;".

4

24 ஆம் பிரிவின் 8. முதன்மைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

"வரம்புரையாக, ஒரு மாநிலத்திற்குள் அறிவிக்கை செய்யப்பட்ட சந்தைப் பகுதி எதனிலும் வாங்கப்படும் அல்லது விற்பனை செய்யப்படும் அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் விளைபொருள் எதன் மீதும் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் கட்டணம் எதுவும் விதிக்கப்படுதல் கூடாது.";

(2) (2) ஆம் உட்பிரிவிற்கு, வரம்புரைக்குப் பின்பு, பின்வரும்

வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"மேலும் வரம்புரையாக, அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் விளைபொருள் எதுவும், கட்டணம் விதிக்க கடப்பாடுடையதல்ல அல்லது செலுத்தத்தக்க கட்டணம் இந்தப் பிரிவின்கீழ் ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டது என்பதை மெய்ப்பிக்கும் சுமை, நேர்விற்கேற்ப, அத்தகைய கடப்பாடின்மை அல்லது அத்தகைய செலுத்தத்தைக் கோரும் நபரின் மீது இருத்தல் வேண்டும்.".

9. முதன்மைச் சட்டத்தின் 46 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது;-

46-A எனும் புதிய பிரிவை உட்புகுத்துதல்.

"46-A. செயலாளரின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகள்.- செயலாளரானவர்,-

(i) சந்தைக்குழுவின் தலைமைச் செயல் அலுவலராக இருத்தல்

வேண்டும்;

(ii) சந்தைக்குழுவால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை

நடைமுறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்;

(iii) சந்தைக்குழுவின் பணியாளர் மீதான கட்டுப்பாடு மற்றும்

கண்காணிப்பைச் செலுத்துதல் வேண்டும்;

(iv) சந்தைக்குழுவால் விதிக்கப்படும் அல்லது அதற்கு கொடுக்கப்பட வேண்டிய கட்டணங்கள் மற்றும் பிற தொகைகள் வ#லிப்பதை உறுதி செய்தல் வேண்டும்;

(v) சந்தைக்குழுவின் பொருட்டு, பெறப்பட்ட அனைத்து தொகைகள் மற்றும் செய்யப்பட்ட செலுத்தத்திற்காக பொறுப்புடையவராதல் வேண்டும்;

(vi) சந்தைக் குழு மற்றும் துணைக்குழுக்களின் கூட்டங்களில்

கலந்து கொள்ளுதல் மற்றும் விவாதத்தில் பங்கேற்றல் வேண்டும்;

வரம்புரையாக, செயலாளர், வாக்களிப்பதற்கு உரிமையுடையவராகார்.

(vii) சந்தைக்குழுவால் குறிப்பிடப்பட்ட பொருட்பாடுகளுக்கு

அறிவுரை வழங்குதல் வேண்டும்;

(viii) சந்தைகளில் அனைத்து கட்டுமான பணிகளைக்

கண்காணித்தல் வேண்டும்;

(ix) சந்தைகளின் முறையான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு

ஆய்வு மேற்கொள்ளுதல் வேண்டும்.".

இணைப்புப்

10. முதன்மைச் சட்டத்தின் இணைப்புப் பட்டியலுக்காக, பின்வரும் இணைப்புப் பட்டியலானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

பட்டியலின் மாற்றீடு.

5

"இணைப்புப் பட்டியல்

[2(1) ஆம் பிரிவைக் காண்க]

வேளாண் விளைபொருளின் பெயர்கள்

1. நெல்.

2. சோளம் (Jower).

3. கம்பு (Bajra).

4. கேழ்வரகு

5. மக்காச்சோளம்.

6. தினை.

7. குதிரைவாலி.

8. வரகு.

9. சாமை.

10. துவரம்பருப்பு ( முழுத்துவரை ).

11. கருப்பு உளுந்து ( முழு உளுந்து ).

12. பச்சைப்பயறு ( முழுப் பச்சைப்பயறு ).

13. கொண்டைக்கடலை

( முழுக்கொண்டைக்கடலை ).

14. மொச்சை.

15. காராமணி.

16. கொள்ளு.

17. கல்லுப்பயறு.

18. வேர்க்கடலை ( தோலோடு உள்ள அல்லது தோல் நீக்கப்பட்ட

முழு கடலை ).

19. நல்லெண்ணெய் அல்லது எள் விதை அல்லது எள்.

20. ஆமணக்கு (தோலோடு உள்ள அல்லது தோல் நீக்கப்பட்ட).

21. சூரியகாந்தி விதைகள் அல்லது கொட்டைகள்.

22. பருத்தி விதைகள்.

23. வேப்ப விதைகள்.

24. புகையிலை.

25. செங்காந்தள் விதைகள்.

26. மரவள்ளிக்கிழங்குகள்.

27. மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்.

28. பூண்டு.

29. கொத்தமல்லி (தனியா விதைகள்).

30. ஏலக்காய்.

31. பாக்கு (முழுமையானது அல்லது உடைக்கப்பட்டது).

32. புளி (தோல் மற்றும் விதைகளுடன் அல்லது இல்லாமல்).

33. முந்திரிப்பருப்புகள்.

6

34. இஞ்சி (இஞ்சி, சுக்கு).

35. அனைத்து வகை மஞ்சள் (பூடு அல்லது விரலி).

36. கரும்பு வெல்லம் (வெல்லப்பொடி, பழுப்புச் சர்க்கரை).

37. பனைவெல்லம்.

38. அனைத்துவகை கச்சா இரப்பர் மெல்லிய வெளிறிய மரப்பால்,

மெல்லிய அடிப்பகுதி மற்றும் மையவிலக்கப்பட்ட இரப்பர் மரப்பால்,

எஸ்டேட் ப்ரவுன் மெல்லிய இரகங்கள் உள்ளடங்கலாக அனைத்து

வகையான இரப்பர் விரிப்புகள்.

39. அனைத்து வகை பருத்திபட்டு.

40. தேங்காய் (இளநீர் நீங்கலாக அனைத்துவகையிலும்).

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசுச் செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவுத்) துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 March 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-03-13.Ordinary_11_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-03-13.Ordinary_11_Part-IV_Section-2-T-Sup.