©
GOVERNMENT OF TAMIL NADU
2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 14] CHENNAI, WEDNESDAY, APRIL 3, 2024 Panguni 21, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS Pages.
HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT
Amendment to the Notification under the Tamil Nadu Prohibition Act. .. .. .. 42 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் கோட்டம்,
திருவெண்ணெய்நல்லூர் வட்டம் - சித்தலிங்கமடம் குறுவட்டம் - சித்தலிங்கமடம்
(மேற்கு) வருவாய் கிராமத்தினை சீரமைத்து - T. எடப்பாளையம் எனும் புதிய வருவாய்
கிராமம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.] .. .. .. 42-46 DTP—II-1—14
[41]42 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT
Amendment to the Notification under the Tamil Nadu Prohibition Act.
[G.O. Ms. No. 16, Home, Prohibition and Excise (III), 15th March 2024,
பங்குனி 2, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No. II(1)/HOPE/9/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 18-B of the Tamil Nadu Prohibition Act, 1937 (Tamil Nadu Act X of 1937), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Prohibition and Excise Department Notification No.II(1)/PE/239(d)/81, published at page 2 of Part II-Section 1 of the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 1st May 1981, as subsequently amended:-
Amendment.
In the said Notification, in the TABLE, in the Annexure referred to in the entry "Indian Made Foreign Spirits (brand names of which are specified in the Annexure) other than sacramental wine" in column (1), under the heading "PREMIUM BRANDS", under the sub-heading "Thiruvalargal Accord Distillers & Brewers Private Limited", after the entry "History 1950 Old Special Brandy", the entry "Accord Platinum Premium Pink Vodka" shall be added.
P. AMUDHA, Principal Secretary to Gover nment.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
No. II(1)/REVDM/10/2024.
[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் கோட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் - சித்தலிங்கமடம் குறுவட்டம் - சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமத்தினை சீரமைத்து - T. எடப்பாளையம் எனும் புதிய வருவாய் கிராமம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண் 72, வருவாய் மற்றும் பேரிடர் மேலண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 28 பிப்ரவரி 2024, மாசி 16, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
படிக்கவும்:-
1. அரசாணை (நிலை) எண் 2681, வருவாய்த்துறை, நாள் 01.12.1980.
2. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண் பணி 3(4)/18147/2011, நாள் 19.09.2022 மற்றும் 13.10.2023.
3. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் கடித எண் ந.க.எச்2/777/2010. நாள் 10.06.2021, 30.03.2023 மற்றும் 12.02.2024
ஆணை: எண் 72, வருவாய் மற்றும் பேரிடர் மேலண்மைத் துறை, 28 பிப்ரவரி 2024.
மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில் விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் கோட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சித்தலிங்கமடம் குறுவட்டத்திற்கு உட்பட்ட சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து T.எடப்பாளையம் பகுதியினை தனி வருவாய் கிராமமாக பிரிப்பதன் தேவைப்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கீழ்கண்டவாறு அறிக்கை அளித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்:-
i. சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து T. எடப்பாளையம் கிராம ஊராட்சி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளை பிரித்து தன்னிச்சையாக இயங்கும் T. எடப்பாளையம் வருவாய் கிராம நிருவாகம் இருக்க வேண்டுமென கிராம மக்கள் 14 ஆண்டுகாலமாக தொடர்ந்து கோரிக்கை அளித்து வருவதால், இந்நேர்வினை சிறப்பினமாகக் கருதி விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சித்தலிங்கமடம் குறுவட்டத்திற்குட்பட்ட சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து, T. எடப்பாளையம் கிராம ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக பிரிக்க உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ii. தனியொரு வருவாய் கிராமமாக இருப்பின் மக்கள் தொடர்பு மேம்பட்டு அலைச்சல் குறையும் என கருதப்படுகிறது.
iii. வருவாய் வசூல் நடவடிக்கையினை மேம்படுத்தவும். கிராம நிருவாகத்தை வலுப்படுத்தவும், அரசு இயற்றும் திட்டங்கள் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் நிருவாக நலன் மற்றும் மக்களின் நலன் கருதி மேற்படி T.எடப்பாளையம் கிராம ஊராட்சி பகுதிகளை தனி வருவாய் கிராமமாக பிரிப்பது அவசியமாகிறது.
Apr. 3, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 43iv. தற்போதுள்ள சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமத்தின் விபரங்கள்:
1. சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமமானது சித்தலிங்கமடம் மற்றும் T.எடப்பாளையம் ஆகிய 02 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது ஆகும்.
2. மேற்படி, சித்தலிங்கமடம் வருவாய் கிராம கணக்குகளின்படி பரப்பளவு விபரம் பின்வருமாறு:-
| வ . எண் | நிலத்தின் வகைபாடு | பரப்பு (ஹெக்டேரில்) | தீர்வை (ரூபாய்) |
| 01 | நன்செய் | 124.39.0 | 2402.07 |
| 02 | புன்செய் | 187.53.5 | 657.01 |
| 03 | புறம்போக்கு | 147.95.0 | - |
| 04 | கிராம நத்தம் | 5.53.5 | 20.67 |
| 05 | புன்செய் தரிசு | 0.85.0 | 1.47 |
| 06 | நன்செய் தரிசு | 0.31.5 | 5.67 |
| மொத்தம் | 466.57.5 | 3086.89 |
3. சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்தில் மொத்தம் 302 புல எண்கள் உள்ளன. அப்புல எண்கள் முறையே ரீ சர்வே எண் 169 முதல் 382 வரையிலும் மற்றும் 580 முதல் 667 வரையிலான உட்பிரிவுகளை கொண்டுள்ளது.
4. சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமத்தின் மக்கள் தொகை விபரம் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
| வ . எண். | ஊராட்சியின் பெயர் | ஆண் | பெண் | மொத்தம் |
| 01 | சித்தலிங்கமடம் ஊராட்சி | 1453 | 1329 | 2782 |
| 02 | T.எடப்பாளையம் ஊராட்சி | 1987 | 1918 | 3905 |
| மொத்தம் | 3440 | 3247 | 6687 |
v. சித்தலிங்கமடம் (மேற்கு) மற்றும் T.எடப்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்ட அட்டைகளின் விவரம் சேகரிக்கப்பட்டதில் சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்தில் 362 குடும்ப அட்டைகள் மற்றும் T.எடப்பாளையம் பகுதியில் 720 குடும்ப அட்டைகள் உள்ளதாக தெரியவருகிறது.
vi. சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து T.எடப்பாளையம் வருவாய் கிராமத்தினை தனி வருவாய் கிராமமாக பிரித்திடும் நேர்வில் வேறு அண்மையில் உள்ள கிராமத்தின் பகுதிகளை இதனுடன் இணைத்திடும் உத்தேசம் இல்லை. அவ்வாறு T.எடப்பாளையம் வருவாய் கிராமம் பிரிக்கப்படின் அவையே தலைமையிடமாக அமையும். இப்புதிய கிராமத்தினை ஏற்படுத்துவது தொடர்பாக நாளது தேதிவரையில் எத்தரப்பினரிடமிருந்தும் ஆட்சேபனை ஏதும் பெறப்படவில்லை. மேலும், உத்தேசிக்கப்பட்ட T.எடப்பாளையம் கிராமத்தில் ரங்காரெட்டி தாங்கல் 4.61.5 ஹெக்டேர் பரப்பிலும், 2.49.0 ஹெக்டேர் பரப்பில் ஓர் குளமும் உள்ளது. இக்குளமும், ரங்காரெட்டி தாங்கல் நீர்நிலையின் ஆயக்கட்டு பரப்பும் T.எடப்பாளையம் கிராமத்திலேயே அமைந்துள்ளது.
2. மேலும், அரசாணை (நிலை) எண் 2681. வருவாய்த்துறை, நாள் 01.12.1980-இல் புதிய கிராம நிருவாக அலுவலர் பணியிடம் உருவாக்க நிர்ணயிக்கப்பட்ட வரையறைகள் மற்றும் கிராம பிரிவினைக்குப் பின்னர் சித்தலிங்கமடம் (மேற்கு) மற்றும் T.எடப்பாளையம் கிராமங்களின் விவரங்கள் பின்வருமாறு அமைகின்றன:-
| நிபந்தனை விவரம் | நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்கள் | நிபந்தனை ( சித்தலிங்கமடம்(மேற்கு) ( கிராம பிரிவினைக்கு பின்னர்) | நிபந்தனை ( T . எடப்பாளையம்) (கிராம பிரிவினைக்கு பின்னர்) |
| மக்கள் தொகை | 3500 முதல் 5000 வரை | 2782 (பூர்த்தியாகவில்லை) | 3905 (பூர்த்தியாகிறது) |
| பட்டாதாரர்களின் எண்ணிக்கை | 1500 முதல் 2000 வரை | 723 (பூர்த்தியாகவில்லை) | 629 (பூர்த்தியாகவில்லை) |
| நன்செய் (ஏக்கரில்) | 2000 முதல் 2500 வரை | 303.50 ஏக்கர் (பூர்த்தியாகவில்லை) | 0 (பூர்த்தியாகவில்லை) |
| புன்செய் (ஏக்கரில்) | 4000 முதல் 5000 வரை | 117.51 ஏக்கர் (பூர்த்தியாகவில்லை) | 358.52 ஏக்கர் (பூர்த்தியாகவில்லை) |
| நிலவருவாய் (தீர்வை (ரூபாய்) | 20000 முதல் 25000 வரை | 2525.39 ரூபாய் (பூர்த்தியாகவில்லை) | 561.30 ரூபாய் (பூர்த்தியாகவில்லை) |
(i) மேலும், T. எடப்பாளையம் வருவாய் கிராமமாக இருப்பதால் தொடர் மாறுதல் ஏற்படாது என்பதற்கான விவரம்:
அ) T.எடப்பாளையம் தனி வருவாய் கிராமமாக இருப்பதால் சித்தலிங்கமடம் (மேற்கு) என ஏற்கெனவே உள்ள வருவாய் கிராம எல்லை மற்றும் பரப்பளவில் மட்டுமே மாறுதல்கள் ஏற்படும். T.எடப்பாளையம் கிராம ஊராட்சி ஏற்கெனவே இயங்கி வருவதால் சட்டமன்ற / நாடாளுமன்ற தொகுதிகளில் மாறுதல்கள் ஏற்படாது. மேலும், நிலவியல் ரீதியாக ஒரு தொகுதியாகவே அமைகின்றன.
ஆ) இதனை தவிர்த்து, சித்தலிங்கமடம் (மேற்கு) வட்டத்திலிருந்து T.எடப்பாளையம் வருவாய் கிராமத்தினை பிரிப்பது தொடர்பாக கிராம எல்லைகளை பிரித்தல் மற்றும் மறுவரையறை செய்தல் தொடர்பான குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், அக்குழுவினர் மேற்படி வருவாய் கிராமங்களை பிரிப்பது மற்றும் கிராமங்களை மறுவரையறை செய்தல் தொடர்பாக பின்வரும் விவரங்களை அளித்துள்ளார்கள் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்:-
உத்தேசிக்கப்பட்டுள்ள T.எடப்பாளையம் வருவாய் கிராமம் பிரிக்கப்படுவதால் புல எண்களின் விவரம்
| 585 முதல் 589 வரை | 05 புல எண்கள் |
| 591 முதல் 611 வரை | 21 புல எண்கள் |
| 617 மற்றும் 618 வரை | 02 புல எண்கள் |
| 620 முதல் 667 வரை | 48 புல எண்கள் |
| மொத்தம் | 76 புல எண்கள் |
எஞ்சியுள்ள சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமத்தில் அமைய உள்ள புல எண்களின் விபரம்
| 169 முதல் 382 வரை | 214 புல எண்கள் | ||
| 580 முதல் 584 வரை | 05 புல எண்கள் | ||
| 590 | 01 புல எண் | ||
| 612 முதல் 616 வரை | 05 புல எண்கள் | ||
| 619 | 01 புல எண் | ||
| மொத்தம் | 226 புல எண்கள் | ||
இ) T.எடப்பாளையம் தனி வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சியாக இருப்பதால், சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து பிரிக்கப்படும் போது தொடர்புடைய T.எடப்பாளையம் ஊராட்சியின் ஆளுகையிலேயே அமைகிறது. எஞ்சியுள்ள சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமம் அக்கிராம ஊராட்சியின் ஆளுகையிலேயே அமைகிறது. புதிய உள்ளாட்சி, நகராட்சி ஆளுகை மாறுதல்கள் ஏதுமில்லை.
ஈ) T.எடப்பாளையம் மற்றும் சித்தலிங்கமடம் (மேற்கு) ஆகிய கிராமங்கள் தலைமையிடங்களிலிருந்து அமைந்துள்ள தொலைவு விவரம்.
| வ . எண் | வருவாய் கிராமம் | திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் | விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் |
| 1 | சித்தலிங்கமடம் (கிழக்கு) | 10 கி.மீ | 35 கி.மீ |
| 2 | சித்தலிங்கமடம் (மேற்கு) | 11 கி.மீ | 36 கி.மீ |
| 3 | T.எடப்பாளையம் | 15 கி.மீ | 40 கி.மீ |
3. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சித்தலிங்கமடம் குறுவட்டத்திற்குட்பட்ட சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து, T.எடப்பாளையம் கிராம ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக பிரிப்பது தொடர்பான பின்வரும் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன:-
i. அரசாணை (நிலை) எண். 279, வருவாய்த்துறை நாள். 09.06.2003-இல் மாவட்டங்கள் / கோட்டங்கள் / வட்டங்கள் பிரித்தல் தொடர்பான வரையறைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. கிராமத்தினை பிரிப்பதற்கான விதிமுறைகள் எதும் மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
Apr. 3, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 45ii. புதிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் உருவாக்க தேவையான வரையறைகள் தொடர்பான அரசாணை (நிலை) எண் 2681, வருவாய்த்துறை, நாள் 01.12.1980-இல் புதிய வருவாய் கிராமமாக பிரிக்கப்பட வேண்டிய T.எடப்பாளையம் கிராமத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை மட்டுமே பூர்த்தியடைகிறது.
iii. கிராமத்தில் வகைபாடு வாரியான நிலப்பரப்பு, நிலவரி கேட்பு தொகை போன்ற இனங்கள் மேற்கண்ட அரசாணையின்படி அளவுகோல்கள் பூர்த்தியடையவில்லை.
vi. இருப்பினும் அப்பகுதி மக்கள் 14 ஆண்டுகாலமாக T.எடப்பாளையம் கிராமத்தினை தனி வருவாய் கிராமமாக பிரிக்க தொடர்ந்து கோரிக்கை அளித்து வருவதாலும், இந்நேர்வினை சிறப்பினமாகக் கருதி விழுப்புரம் மாவட்டம். திருவெண்ணெய்நல்லூர் வட்டம். சித்தலிங்கமடம் குறுவட்டத்திற்குட்பட்ட சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து, T.எடப்பாளையம் கிராம ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக பிரிக்க உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
4. எனவே, இந்நேர்வில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து உயர் அலுவலர்களைக் கொண்ட குழுவின் அறிக்கை ஆகியோரின் பரிந்துரையின் அடிப்படையிலும், பொது மக்களின் நலன் கருதியும், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம். சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமத்திலிருந்து T.எடப்பாளையம் பகுதியினை தனி வருவாய் கிராமமாக பிரிக்க உரிய அரசாணை பிறப்பிக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
5. மேலும், மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட, மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் மொத்தம் 66 வருவாய் கிராமங்கள் உள்ளன என்றும், மேற்படி 66 வருவாய் கிராமங்களில், சித்தலிங்கமடம் (கிழக்கு) மற்றும் சிந்தலிங்கமடம் (மேற்கு) கிராமங்களுக்கு கிராம எண் 01. திருவெண்ணெய்நல்லூர் (வடக்கு) மற்றும் திருவெண்ணெய்நல்லூர் (தெற்கு) கிராமங்களுக்கு கிராம எண் 28 மற்றும் ஏமப்பூர் (வடக்கு) மற்றும் ஏமப்பூர் (தெற்கு) கிராமங்களுக்கு கிராம எண் 42 என ஆறு கிராமங்களுக்கும் ஒரே எண் வழங்கப்பட்டுள்ளது என்றும். அதன்படி 66 வருவாய் கிராமங்களுக்கான கிராம எண் 63-ல் முடிகிறது. எனவே. சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து பிரிக்கப்படும் T.எடப்பாளையம் கிராமத்திற்கு கிராம எண் 64 என வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
6. மேற்காணும் சூழ்நிலையில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் விழுப்புரம் மாவட்டம் ஆகியோரின் கருத்துருக்கள் மற்றும் வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து உயர் அலுவலர்களைக் கொண்ட குழுவின் அறிக்கை ஆகியவற்றினை அரசு விரிவாக ஆய்வு செய்து, கீழ்கண்டவாறு ஆணையிடுகிறது:-
i. இந்நேர்வினை சிறப்பினமாகக் கருதி, விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் கோட்டம். திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சித்தலிங்கமடம் குறுவட்டத்திற்குட்பட்ட சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து T. எடப்பாளையம் பகுதியினை பிரித்து புதிதாக T.எடப்பாளையம் தனி வருவாய் கிராமமாக உருவாக்கப்படுகிறது.
ii. சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்திலிருந்து புதிதாக பிரிக்கப்படும் T. எடப்பாளையம் கிராமத்திற்கு கிராம எண் 64 என வழங்கப்படுகிறது.
iii. சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமத்தின் கிராம நிருவாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் புதிதாக உருவாக்கப்படும் T.எடப்பாளையம் வருவாய் கிராமத்தையும் சேர்த்து கவனிப்பார்கள்.
iv. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள T.எடப்பாளையம் வருவாய் கிராமத்திற்கான அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும்.
v. பிரிவினைக்கு முன்னர் சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமத்தின் விபரங்கள்:-
| வ . | எண் நிலத்தின் வகைபாடு | பரப்பு (ஹெக்டேரில்) | தீர்வை (ரூபாய்) | ||
| 01 | நன்செய் | 124.39.0 | 2402.07 | ||
| 02 | புன்செய் | 187.53.5 | 657.01 | ||
| 03 | புறம்போக்கு | 147.95.0 | - | ||
| 04 | கிராம நத்தம் | 5.53.5 | 20.67 | ||
| 05 | புன்செய் தரிசு | 0.85.0 | 1.47 | ||
| 06 | நன்செய் தரிசு | 0:31.5 | 5.67 | ||
| மொத்தம் | 466.57.5 | 3086.89 | |||
சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய்க் கிராமமானது சித்தலிங்கமடம் மற்றும் T.எடப்பாளையம் ஆகிய 02 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது ஆகும்.
| வ . எண் | ஊராட்சியின் பெயர் | ஆண்/ 2011-இன்படி | பெண்/ 2011-இன்படி | மொத்தம் | ||
| 01 | சித்தலிங்மடம் ஊராட்சி | 1453 | 1329 | 2782 | ||
| 02 | T. எடப்பாளையம் ஊராட்சி | 1987 | 1918 | 3905 | ||
| மொத்தம் | 3440 | 3247 | 6687 | |||
சித்தலிங்கமடம் (மேற்கு) கிராமத்தில் மொத்தம் 302 புல எண்கள் உள்ளன. அப்புல எண்கள் முறையே ரீ சர்வே எண் 169 முதல் 382 வரையிலும் 580 முதல் 667 வரையிலான உட்பிரிவுகளை கொண்டுள்ளது.
| விஸ்தீரணம் ஹெக்டேரில் | புல எண்களின் எண்ணிக்கை | மக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி | ஊராட்சி |
| 466.57.5 | 302 புல எண்கள் (ரீ சர்வே எண் 169 முதல் 382 வரை மற்றும் 580 முதல் 667 வரை) | 6687 | 1. சித்தலிங்கமடம் (பகுதி ஊராட்சி) 2. T.எடப்பாளையம் ஊராட்சி |
vi. பிரிவினைக்கு பின்னர் சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமம்
(அ) சித்தலிங்கமடம் (மேற்கு) வருவாய் கிராமம்
| விஸ்தீரணம் ஹெக்டேரில் | மொத்த புல எண்களின் எண்ணிக்கை | மக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி | ஊராட்சி |
| 294.48.5 | 226 புல எண்கள் (169 முதல் 382 வரை - 214 புல எண்கள் 580 முதல் 584 வரை - 05 புல எண்கள் 590-01 புல எண் 612 முதல் 616 வரை - 5 புல எண்கள் 619 - 01 புல எண்) | 2782 | சித்தலிங்கமடம் (பகுதி ஊராட்சி) |
(ஆ) புதிய T. எடப்பாளையம் வருவாய் கிராமம்
| விஸ்தீரணம் ஹெக்டேரில் | மொத்த புல எண்களின் விபரம் | மக்கள்தொகை ( 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) | ஊராட்சி |
| 172.09.0 | 76 புல எண்கள் (585 முதல் 589 வரை - 5 புல எண்கள் 591 முதல் 611 வரை - 21 புல எண்கள் 617 மற்றும் 618 வரை - 02 புல எண்கள் 620 முதல் 667 வரை - 48 புல எண்கள்) | 3905 | T.எடப்பாளையம் ஊராட்சி |
vii. T.எடப்பாளையம் கிராமத்தில் ரங்காரெட்டி தாங்கல்-4.61.5 ஹெக்டேர் பரப்பிலும், 2.49.0 ஹெக்டேர் பரப்பில் ஒரு குளமும் உள்ளது. இக்குளமும் ரங்காரெட்டி தாங்கல் நீர்நிலையின் ஆயக்கட்டு பரப்பும் T.எடப்பாளையம் கிராமத்திலேயே அடங்கும்.
viii. இவ்வரசாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வருவாய் கிராமம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் செயல்படும்.
ix. T.எடப்பாளையம் புதிய வருவாய் கிராமம் உருவாக்குவது குறித்த ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
7. இந்த அரசாணை நிதித்துறையின் கோ. எண். 11933/நிதி (வருவாய்)/2024, நாள் 27.02.2024-இல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
வே. ராஜாராமன், அரசு செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU