Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts Ordinances Tamil Supplement Acts (TAMIL) - Act No. 5 of 2024 An Act to further amend the Tamil Nadu Tender Transparency Act, 1998 .. Act No. 6 of 2024 An Act to further amend the Tamil Nadu Contingency Fund Act, 1954 .. Act No. 7 of 2024 An Act to further amend the The Chennai Unified Metropolitan Transpt Authity Act, 2010 .. Act No. 8 of 2024 An Act to further amend the Tamil Nadu Universities Acts .. Act No. 9 of 2024 An Act to further amend the Tamil Nadu Panchayats Act, 1994.

Published 10 April 2024

Type
Ordinary
Gazette no.
15
Part
Part IV
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-04-10.Ordinary_15_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2024 [விலை: ரூ. 7.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 15] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 10, 2024 பங்குனி 28, சோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 26 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 2/ 2024.

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம்

தொடக்கம்.

திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு

239 ஆம் பிரிவிற்கான 2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின், 239 ஆம்

சட்டம் 21/1994.

திருத்தம்.

பிரிவின், (2) ஆம் உட்பிரிவில், (b) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(b) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளரானவர் தாம் பதவியேற்ற

நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளைக் கொண்டதொரு கால அளவுக்கு அல்லது

அறுபத்து ஐந்து வயது எய்தும் வரையில், இவற்றில் எது முந்தையதோ அது

வரையில் பதவியில் இருத்தல் வேண்டும் மற்றும் அவர் மறுபணியமர்த்தத்திற்கு

தகுதியுடையவர் ஆகார்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசுச் செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை. 15—IV-2-(T-Sup)-1

[1]2 3 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 5/ 2024.

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள்

சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற

மற்றும் தொடக்கம் ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

16-ஆம் பிரிவிற்கான 2. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள்

43/1998.

திருத்தம்.

சட்டத்தின் 16ஆம் பிரிவின் (bb) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(bb) இயக்கம் மற்றும் பராமரிப்பு, திட்டம் அல்லது வசதி மேலாண்மை,

மேற்பார்வை, மனித ஆற்றல் வழங்குதல், வெளித்தரப்பிடமிருந்து பயன்படுத்தப்படும்

பணி, இயந்திரம், கருவி அல்லது வாகனங்களின் குத்தகை மற்றும் காப்பீடு

அல்லாத, தொடர்புடைய அரசு துறையின் செயலாளர், நிதித் துறை செயலாளர்

அல்லது அவரது பிரதிநிதி, கொள்முதல் அமைப்பின் தலைமை செயல் அலுவலர்

அல்லது தலைவர், மற்றும் கொள்முதல் அமைப்பின் ஒரு தொழில்நுட்ப பிரதிநிதி

ஆகியோரை உள்ளடக்கிய குழுவின் முன் ஒப்புதலைப் பெற்ற பின்பு மற்றும்

அரசால் அறிவிக்கப்படலாகும் தொடர்புடைய கல்வி அல்லது ஆராய்ச்சி அல்லது

வணிகம் சாரா நிறுவனங்களிலிருந்து, கொள்முதல் நேர்வு ஒவ்வொன்றிலும்

நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொள்முதல் செய்யப்படும் சேவை;".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசுச் செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.

4 5

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண்.6/ 2024.

1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக: —

குறுந்தலைப்பும் 1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு

தொடக்கமும்.

நிதியத் (திருத்தச்) சட்டம் என வழங்கப்படும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2-ம் பிரிவிற்கான 2. 1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டத்தின்

II / 1954

திருத்தம். 2-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில், "நூற்றைம்பது கோடி ரூபாய்" என்னும்

சொற்களுக்காக, "ஐந்நூறு கோடி ரூபாய்" என்னும் சொற்களானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசுச் செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.

6 7

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 7/ 2024.

2010 ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்புச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர

தொடக்கம்.

போக்குவரத்து அதிகார அமைப்புச் (திருத்த) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடப்படலாகும், அத்தகைய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2-ஆம் பிரிவிற்கான 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2010

44/2010.

திருத்தம்.

ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார

அமைப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவில்,-

(1) (a) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,

அதாவது:-

"(aa) "விரிவான இயக்கத்திட்டம்" என்பது, அறிவிக்கப்பட்ட திட்டமிடல்

பகுதியில் மக்கள் மற்றும் சரக்குகளின் திறமிகு நகர்ப்புற போக்குவரத்து மற்றும்

இயக்கத்திற்கான வகைமுறைக்காக, திட்டமுறைகள் மற்றும் தொடர்புடைய

செயல்களை குறிப்பிட்டுக்காட்டுகின்றதொரு செயல்பாட்டு ஆவணம் என்று

பொருள்படும்;";

(2) (b) கூறுக்குப்பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,

அதாவது:-

தமிழ்நாடு சட்டம் "(ba) "அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதி" என்பது, 1971 ஆம் ஆண்டு

35/1972.

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டவாறான

சென்னை பெருநகர திட்டமிடல் பகுதி என்று பொருள்படும்;";

(3)(c) கூறுக்குப்பின்பு, பின்வரும் கூறுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,

அதாவது:-

"(ca) "ஒழுங்குமுறை விதிகள்" என்பது இந்தச் சட்டத்தின்படி அதிகார

அமைப்பினால் செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் என்று பொருள்படும்;

(cb) "இணைப்புப்பட்டியல்" என்பது இந்தச் சட்டத்திற்கான இணைப்புப்

பட்டியல் என்று பொருள்படும்;

(cc) "போக்குவரத்து முதலீட்டுத் திட்டம்" என்பது, ஐந்தாண்டுகள் கால

அளவிற்கு அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதிக்குள் நகர்ப்புற போக்குவரத்துக்கான

விரிவான முதலீட்டுத் திட்டம் என்று பொருள்படும்;

(cd) "நகர்ப்புற போக்குவரத்து" என்பது அதன் அனைத்து சொற்பொருள்

மாறுபாடுகள் மற்றும் இணைச் சொற்றொடர்களுடன் போக்குவரத்தின் அனைத்துத்

தன்மைகளையும் உள்ளடக்கும். அதாவது, அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதியில்

பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகள், வாகனங்கள் மற்றும்

சேவைகளை உள்ளடக்கும் ஆனால் தனியார் போக்குவரத்து வாகனங்கள் மற்றும்

சேவைகளை உள்ளடக்காது மற்றும் இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்படலாகும்

வகைகளுக்குள் போக்குவரத்தின் அனைத்து முறைகள் மற்றும் வழிமுறைகளையும்

உள்ளடக்கும்.".

8

3 ஆம் பிரிவிற்கான

3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவிற்காக,

திருத்தம்.

பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2) அதிகார அமைப்பானது, அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப்

பெறுவதற்கும், வைத்திருப்பதற்கும் அகற்றுவதற்கும் மற்றும் ஒப்பந்தத்தில்

ஈடுபடுவதற்கும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்ட அதிகாரத்துடன்

நிலையான வழியுரிமையையும், பொது இலச்சினையையும் கொண்டதொரு

கூட்டுருமமாக இருத்தல் வேண்டும் மற்றும் மேற்சொன்ன பெயரால் வழக்கிடுதலும்,

வழக்கிடப்படுதலும் வேண்டும்.".

4 ஆம் பிரிவிற்கான

4. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-

"4. அதிகார அமைப்பில் அடங்கியிருப்பவர்கள்,-(1) அதிகார அமைப்பானது,

பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-

(a) முதலமைச்சர், பதவிவழித் தலைமையாளராக இருப்பார்;

(b) சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார

அமைப்பைப் பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர், பதவிவழித் துணைத்

தலைமையாளராக இருப்பார்;

(c) போக்குவரத்துத் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர்,

பதவிவழி இணை-துணைத் தலைமையாளராக இருப்பார்;

(d) மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி, பதவிவழி;

(e) அரசு தலைமைச் செயலாளர், பதவிவழி;

(f) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைமையாளர்,

பதவிவழி;

(g) போக்குவரத்துத் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச்

செயலாளர், பதவிவழி;

(h) நிதித் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்,

பதவிவழி;

(i) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர், பதவிவழி;

(j) நெடுஞ்சாலைத் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச்

செயலாளர், பதவிவழி;

(k) உள் துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்,

பதவிவழி;

(l) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர், பதவிவழி;

(m) திட்டமிடல், வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கத் துறையைப்

பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர், பதவிவழி;

(n) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர், பதவிவழி;

(o) பொது மேலாளர், தென்னக இரயில்வே, சென்னை, பதவிவழி; மற்றும்

(p) அதிகார அமைப்பின் உறுப்பினர்-செயலாளர், இந்திய ஆட்சிப் பணி

அல்லது மத்திய குடிமைப் பணிகள் தொகுதி 'அ' அலுவலர்களுள் இருந்து,

அரசினால் நியமிக்கப்படுதல் வேண்டும்.

(2) அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

நடைமுறைகள், வரையறைகள் மற்றும் நிபந்தனைக்களுக்கிணங்கியவாறு மூன்று

நபர்களுக்கு மிகாத கூடுதல் உறுப்பினர்களை நியமிக்கலாம்.

9

(3) அதிகார அமைப்பின் தலைமையாளர், வாராதிருக்கின்ற காரணத்தினால்

பதவிப் பணிகளை ஆற்ற இயலாதிருக்கின்றபோது, முதுநிலையில் உன்ள துணைத்

தலைமையாளர்களில் ஒருவர், தலைமையாளர் அவருடைய பதவிப் பணிகளை

பொறுப்பேற்றுக் கொள்கிற வரையிலும் தலைமையாளரின் பதவிப்பணிகளை

ஆற்றுதல் வேண்டும்.".

5 ஆம் பிரிவிற்கான 5. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில், "அல்லது இசைந்து தெரிவு

திருத்தம்.

செய்யப்படுதல்" என்ற சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

6 ஆம் பிரிவிற்கான 6. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1)(1) ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையானது விட்டு விடப்படுதல்

வேண்டும்;

(2)(2) ஆம் உட்பிரிவில், "அரசு'' என்ற சொற்றொடருக்காக

அது காணப்படுகிற இரண்டு இடங்களிலும், "அதிகாரஅமைப்பு'' என்ற

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

7 ஆம் பிரிவிற்கான 7. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-

"7. அதிகார அமைப்பின் உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கம் செய்தல்.—

நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் பதவி வகிக்க பொருத்தமற்றவராக அல்லது

அதிகார அமைப்பின் கருத்தில் அவரை அதிகார அமைப்பின் உறுப்பினர்

பதவியிலிருந்து நீக்குவதற்கு உகந்த தவறான நடத்தை அல்லது அசட்டைக்

குற்றத்தை செய்வதராயிருக்கிறார் என்பதாக அதிகார அமைப்பிற்குத்

தோன்றுமானால், அதிகார அமைப்பானது, அத்தகைய உறுப்பினருக்கு, காரணம்

காட்டுவதற்கு ஒரு நியாயமான வாய்ப்பினை அளித்த பின்பு, ஆணை ஒன்றின்

வாயிலாக அத்தகைய உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.".

8. முதன்மைச் சட்டத்தின், 8 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும். 8 ஆம் பிரிவை

விட்டுவிடுதல்.

9 ஆம் பிரிவிற்கான 9. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக,

திருத்தம்.

பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1) அதிகாரஅமைப்பின் உறுப்பினர்- செயலாளரானவர், அதிகார அமைப்பின்

முதன்மை செயல் அலுவலராக இருத்தல் வேண்டும்.";

(2) (2) ஆம் உட்பிரிவில், "அது தேவையெனக் கருதுகிற'' என்ற

சொற்றொடருக்குப் பின்பு, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில்"

என்ற சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.

10 ஆம் பிரிவிற்கான 10. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவுகளானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-

"10. அதிகார அமைப்பின் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள்.- அதிகார

அமைப்பானது, இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக, பின்வரும் அதிகாரங்களையும்

செயற்பணிகளையும் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-

(a) அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதியில் நகர்ப்புற போக்குவரத்துக்காக,

கொள்கையை வகுத்தல் மற்றும் ஒழுங்குமுறை விதிகள், பணிப்புரைகள் மற்றும்

வழிகாட்டு நெறிமுறைகளை கட்டமைத்தல்;

(b) பயணிகள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்து மற்றும் ஒருங்கிணைந்த

நிலப்பயன்பாடு மற்றும் போக்குவரத்து திட்டமிடல் ஆகிய துறைகளில்

ஒருங்கிணைப்பு அதிகார அமைப்பாக செயல்படுதல்;

10

(c) விரிவான இயக்கத் திட்டம், போக்குவரத்து முதலீட்டுத் திட்டங்கள்,

ஆண்டு வரவு செலவு திட்டங்கள் மற்றும் பிற திட்டங்கள் மற்றும் நிலையான

நகர்ப்புற போக்குவரத்துக்குத் தேவையான துணை திட்டங்கள் ஆகியவற்றை

அங்கீகரித்தல் மற்றும் அவற்றின் உடன்பாடுகளை கண்காணித்தல் மற்றும்

தணிக்கை செய்தல்;

(d) நகர்ப்புற போக்குவரத்து நிதியத்திலிருந்தோ அல்லது அரசின் ஒப்புதலுடன்

கடனாகப் பெறப்படும் நிதிகளிலிருந்தோ, அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதியில்

போக்குவரத்து முதலீட்டுத் திட்டங்களின் நிதி உதவியினை எளிதாக்குதல்;

(e) செயற்குழுவின் செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மற்றும் அதிகார

அமைப்பின் பிற அலுவலர்களையும் பணியாளர்களையும் மேற்பார்வையிடுதல்

மற்றும் மேற்கூறியவற்றின் மீது கட்டுப்பாட்டினை செயல்படுத்துதல்;

(f) பொதுப் பயணியர் போக்குவரத்து முறைகள், துணைப் போக்குவரத்து

முறைகள் மற்றும் தெரு, தெரு அல்லாத நிறுத்தங்களுக்காக செயற்குழுவினால்

பரிந்துரைக்கப்பட்ட கட்டண அமைப்புமுறை மற்றும் அதிகார அமைப்பினால்

முடிவு செய்கிறவாறான அத்தகைய பிற கட்டணங்கள், விலைகள் மற்றும் செலவு

கட்டணங்கள் ஆகியவற்றை அங்கீகரித்தல்;

(g) போக்குவரத்து அமைப்புமுறையை மேம்படுத்துவதற்காக,

தேவைப்படுகிறவிடத்து, இருப்புப்பாதைகள், தேசிய நெடுஞ்சாலைகள், கடல்

துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றைப் பொறுத்து ஒன்றிய அரசுக்கு

பரிந்துரைகளை ஏற்படுத்துதல்; மற்றும்

(h) அரசால் அதனிடம் அவ்வப்போது ஒப்படைக்கப்படலாகும் அத்தகைய பிற

அலுவல் பணிகளை நிறைவேற்றுதல்.

10A. செயற்குழு.- (1) பின்வரும் உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழு ஒன்று

இருத்தல் வேண்டும், அதாவது:-

(a) அரசு தலைமைச் செயலாளர், பதவிவழி தலைமையாளராக இருப்பார்;

(b) நிதித்துறையினைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்,

பதவிவழி;

(c) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையினைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர், பதவிவழி;

(d) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையினைப் பொறுப்பில்

கொண்டுள்ள அரசுச் செயலாளர், பதவிவழி;

(e) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர்,

பதவிவழி;

(f) போக்குவரத்து ஆணையர், பதவிவழி;

(g) பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர், பதவிவழி;

(h) நகராட்சி நிர்வாகத்தின் இயக்குநர், பதவிவழி;

(i) பெருநகர சென்னை மாநகரத்தின் காவல் ஆணையாளர், பதவிவழி;

(j) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்,

பதவிவழி;

(k) சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை

இயக்குநர், பதவிவழி;

(l) தென்னக இரயில்வேயின் பொது மேலாளர், பதவிவழி;

11

(m) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், சென்னை மண்டல

அலுவலகத்தின் பொது மேலாளர், பதவிவழி; மற்றும்

(n) சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார

அமைப்பின் உறுப்பினர்- செயலாளர், பதவிவழி;

(2) செயற்குழுவானது, இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக, அதாவது:-

(a) அனைத்து பொது பயணிகள் போக்குவரத்து முறைகள் மற்றும்

தொடர்புடைய உள்கட்டமைப்புகளின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கான

விரிவான இயக்கத் திட்டம், போக்குவரத்து முதலீட்டு திட்டங்கள், பிற திட்டங்கள்

மற்றும் துணை திட்டங்கள் ஆகியவற்றை தயாரித்தல் மற்றும் தொடர்புடைய

போக்குவரத்து முகமைகள் மூலம் அதை செயல்படுத்துவதற்காக அதிகார

அமைப்புக்கு பரிந்துரைத்தல்;

(b) விரிவான இயக்கத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக தொடர்புடைய

முகமைகளுக்கு நிதியங்களை குறித்தளிப்பதற்காக அதிகார அமைப்பின்

இசைவுடன் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களைத் தயாரித்து அரசுக்கு அவற்றை

பரிந்துரை செய்து அனுப்புதல்;

(c) பொதுப் பயணிகளுக்கான போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவது,

அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதியில் சிறப்பு தன்மையதான சில போக்குவரத்து

மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை செயல்படுத்துவதுடன் கூட, அவற்றின்

செயல்பாடுகளை முறைப்படுத்துவது உள்ளடங்கலான, பல்வேறுபட்ட போக்குவரத்து

திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணித்தலும், ஒருங்கிணைத்தலும்,

மேம்படுத்துதலும், மேற்பார்வையிடுதல்;

(d) அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதியில் போக்குவரத்து நிலைமைகளில்

ஏற்படும் மாற்றங்களுக்கிணங்க காலமுறையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து

திட்டத்தைக் காலத்திற்கேற்றாற்போல் மாற்றியமைத்தல்;

(e) விரிவான இயக்கத் திட்டம் செயல்படுத்துவதை கண்காணித்தல்,

ஒருங்கிணைத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்;

(f) அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதியில் இயக்கத்தினை பாதிக்கக்கூடிய

பொருண்மைகளின் மீதான முடிவுகளை எடுத்தல் மற்றும் விரிவான இயக்கத்

திட்டத்தின் ஒட்டு மொத்த செயல்திறனுக்கு இடையூறு விளைவிக்கும்

முகமை அல்லது உள்ளாட்சி அமைப்பு எவற்றாலும் நடவடிக்கைகள் எதுவும்

தொடங்கப்படவில்லை என்பதை உறுதி செய்தல்;

(g) தடங்களை காலமுறைதோறும் ஆய்வு செய்வதன் வாயிலாக

பெருமளவிலான பொதுப் பயணியர் போக்குவரத்து முறைகள் மற்றும் துணைப்

போக்குவரத்து முறைகளுக்கான தடத்தை முறைப்படுத்துதல்;

(h) காலமுறையான மதிப்பீட்டின் அடிப்படையில் பொதுப்பயணிகள்

போக்குவரத்து முறைகள் மற்றும் துணை போக்குவரத்து முறைக்கான கட்டண

அமைப்புமுறையை பரிந்துரைத்தல்;

(i) சாலை பாதுகாப்பு குழு ஒன்றை மேலாண்மை செய்து வருதல்;

(j) முகவாண்மைகளுக்கு இடையேயான கோரிக்கைகள் இணக்கமாய்

இருப்பதை முயன்று பெறுதல் மற்றும் அத்தகைய முகவாண்மைகளுக்கு இடையே

ஏற்படக் கூடிய வேறுபாடுகளைத் தீர்த்தல்;

(k) துணைக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் துணைக்குழுக்களுக்கான

உறுப்பினர்களை நியமனம் செய்தல்;

(l) பொதுப் பயணியர் போக்குவரத்து முறைகள் மற்றும் துணைப்

போக்குவரத்து முறைகள் செயற்பாட்டினை அல்லது திறனை மேம்படுத்துவதற்கு

தேவையான படிப்புகளையும் தேவையான ஆய்வுகளையும் தொடங்குதல் மற்றும்

தரவுத்தளம் ஒன்றை பேணி வருதல்;

12

(m) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை செயல்படுத்தும் நோக்கத்திற்காக,

அவர்களின் உதவி அல்லது தேவையெனக் கருதலாகும் நிபுணர்களை நியமனம்

செய்தல்;

(n) விரிவான போக்குவரத்து திட்டத்திற்குள் அடங்காத பொதுப் பயணியர்

போக்குவரத்து முறைகள் தொடர்பான தொடர் முகவாண்மைகளின் பிற

செயற்பாடு கட்டமைப்பினையும் அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதியில் ஒன்று

சேர்த்து ஒருங்கிணைப்பதற்கான மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான

நடவடிக்கைகளை முறைப்படுத்துதல்; போன்ற அதிகாரங்களையும்

செயற்பணிகளையும் கொண்டிருத்தல் வேண்டும்.

(3) செயற்குழுவானது, அத்தகைய நேரங்களிலும், இடங்களிலும் கூடுதல்

வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அதன் கூட்டங்களில் அலுவல்

தொடர்பான அத்தகைய நடைமுறைகளை கடைபிடித்தல் வேண்டும்.".

11 ஆம் பிரிவிற்கான

11. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"11. இணங்கி நடப்பதிலிருந்து விதிவிலக்கு.- அரசானது, பொது நலன்

கருதி, அது பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு,

பொது அல்லது சிறப்பு ஆணையின் மூலம், அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதியில்

போக்குவரத்து முறையைத் திட்டமிடுதல், இயக்குதல் அல்லது நிர்வகித்தல்

ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முகமை எதற்கும், அதிகார அமைப்பின் எந்தவொரு

முடிவிற்கும் இணங்குவதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.".

12 ஆம் பிரிவிற்கான

12. முதன்மைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"12. அதிகார அமைப்பின் கூட்டங்கள்.-(1) அதிகார அமைப்பானது,

தேவையாகிறவிடத்தெல்லாம் கூடுதல் வேண்டும் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில்

வகுத்துரைக்கப்படலாகும் நடைமுறை விதிகளை பின்பற்றுதல் வேண்டும்:

வரம்புரையாக, அதிகார அமைப்பானது குறைந்தது ஆண்டுக்கு ஒரு

முறையாவது கூடுதல் வேண்டும்.

(2) காலியிடம் ஏதேனும் இருத்தல் அல்லது குறைவெண்ணில் பற்றாக்குறை

அல்லது அதிகார அமைப்பின் கட்டமைப்பு அல்லது கூட்டங்களை நடத்துவதில்

குறைபாடு, ஆகியவை ஏதேனும் இருப்பதன் அடிப்படையில் மட்டுமே அதிகார

அமைப்பின் செயல் அல்லது நடவடிக்கையானது, செல்லா நிலையது ஆகாது.

(3) அதிகாரஅமைப்பானது, போக்குவரத்து, கட்டமைப்பு பொறியியல், நிதி,

சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல் அல்லது பொது நிர்வாகம் ஆகிய துறைகளில்

நிபுணத்துவம் பெற்ற நபர்களை அல்லது பொருத்தமெனக் கருதலாகும் சிறப்பு

வாய்ந்த அல்லது உயர் புகழ் பெற்ற நபர்களை சிறப்பு அழைப்பாளர்களாக

அதிகார அமைப்பின் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதற்கு அத்தகைய

எண்ணிக்கையில் அழைக்கலாம். சிறப்பு அழைப்பாளர்கள் விவாதத்தில்

பங்கேற்கலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமையினைப் பெற்றிருத்தல் கூடாது.".

14 ஆம் பிரிவிற்கான

13. முதன்மைச் சட்டத்தின் 14 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"14. ஒப்படைவு செய்தல்.- அதிகார அமைப்பு அல்லது செயற்குழுவானது

பொது அல்லது சிறப்பு ஆணையின் மூலம் ஆணையில் குறித்துரைக்கப்படலாகும்,

அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, அதிகார அமைப்பு அல்லது செயற்குழு

தேவையெனக் கருதலாகும், அதன் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள்

எதனையும், அதிகார அமைப்பின் அதன் உறுப்பினர் எவரிடமும் அல்லது அலுவலர்

எவரிடமும் ஒப்படைவு செய்யலாம்.".

13

15 ஆம் பிரிவிற்கான

14. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில், "அதிகார அமைப்பானது

திருத்தம்.

நியமனம் செய்வதற்கு உரிமை உண்டு" எனும் சொற்றொடருக்காக, "அதிகார

அமைப்பானது நியமனம் செய்யலாம்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

17 ஆம் பிரிவிற்கான

15. முதன்மைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"17. நகர்ப்புற போக்குவரத்து நிதியம்.- (1) அதிகார அமைப்பானது, "நகர்ப்புற

போக்குவரத்து நிதியம்" என்று அழைக்கப்படுகின்ற தனக்கு சொந்தமான

நிதியத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(2) அரசானது அதிகார அமைப்பின் செயல்பணிகளுக்காக,

தேவையெனக் கருதப்படக்கூடிய தொகைகளை ஒவ்வொரு நிதியாண்டிலும்

அதிகார அமைப்பிற்கு செலுத்தலாம் மற்றும் நிதியத்திற்கான நிதியைப் பெறும்

பிற மூலம் எதனையும் அவ்வப் போது அறிவிக்கலாம்.

(3) அவ்வப்போது, அரசால் செலுத்தப்படலாகும் தொகைகள் அனைத்தும்

மற்றும் அதிகார அமைப்பின் வரவுகள் அனைத்தும் அத்தகைய நிதியத்தில் வரவு

வைக்கப்படுதல் வேண்டும்.

(4) இந்தச் சட்டத்தின்படி அல்லது இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக,

போக்குவரத்து முதலீட்டு திட்டங்களுக்கு நிதியளித்தல் உள்ளடங்கலாக,

அதிகார அமைப்பினால் செய்ய நேர்ந்த செலவுகள் அனைத்தும் மேற்சொன்ன

நிதியத்திலிருந்து செலவு செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய செலவு

செய்யப்பட்ட பிறகு மீதமுள்ள உபரித் தொகை எதுவும், வகுத்துரைக்கப்படலாகும்

அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படுதல் வேண்டும்."

19 ஆம் பிரிவிற்கான

16. முதன்மைச் சட்டத்தின் 19 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றீடு.

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"19. ஆண்டறிக்கை.- (1) அதிகார அமைப்பானது ஒவ்வொரு நிதியாண்டின்

இறுதிக்குப் பிறகு, முந்தைய நிதியாண்டின் போது தன்னுடைய நடவடிக்கைகள்

குறித்து, விவரங்களை அளிக்கிற அறிக்கை ஒன்றை வகுத்துரைக்கப்படலாகும்

அத்தகைய தேதிக்கு முன்பு அத்தகைய படிவத்தில் தயாரித்து அரசுக்கு

பணிந்தனுப்புதல் வேண்டும் மற்றும் அந்த அறிக்கையானது அடுத்த நிதியாண்டின்

போது அதிகார அமைப்பால் பெரும்பாலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள்

எவையேனும் இருப்பின் அவை குறித்த விவரங்களை அளித்தல் வேண்டும்.

(2) அரசானது, அதனைப் பெற்ற பிறகு கூடிய விரைவில், அத்தகைய

அறிக்கை ஒவ்வொன்றும் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுமாறு

செய்வித்தல் வேண்டும்." .

20 ஆம் பிரிவிற்கான 17. முதன்மைச் சட்டத்தின் 20 ஆம் பிரிவானது, அந்தப் பிரிவின்,

திருத்தம்.

(1) ஆம் உட்பிரிவாக மறுஎண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறு

எண்ணிடப்பட்டவாறான (1) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2) அதிகார அமைப்பு மற்றும் ஏதேனும் பிற அதிகார அமைப்பு எதிலும்,

உள்ளாட்சி அமைப்பு, கூட்டாண்மை அமைப்பு, அரசுத்துறை அல்லது முகவாண்மை

எதனின் இடையே பூசல் எதுவும் ஏற்படுகின்ற நேர்வில், அது அரசால் தீர்க்கப்படுதல்

வேண்டும் மற்றும் அரசின் முடிவே இறுதியானதாக இருத்தல் வேண்டும் மற்றும்

அத்தகைய பூசலில் ஈடுபட்டுள்ள தரப்பினரைக் கட்டுப்படுத்துதல் வேண்டும்:

வரம்புரையாக அரசானது, தொடர்புடைய தரப்பினருக்கு கேட்கும் வாய்ப்பு

ஒன்றினை வழங்காமல், பூசல் எதனின் தொடர்பாகவும் ஆணை ஒன்றினை

பிறப்பித்தல் கூடாது.".

14

இணைப்புப்பட்டியல்

(2(cd) ஆம் பிரிவைக் காண்க)

போக்குவரத்தின் முறைகள் மற்றும் வழிமுறைகள்

1. பேருந்துகள்.

2. தண்டூர்திப் பாதை.

3. மெட்ரோ ரயில் பாதை.

4. கம்பி வட மின்சார பேருந்து.

5. தொங்கூர்தி.

6. பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு.

7. இலகு ரயில் போக்குவரத்து.

8. நகரங்களுக்கிடையேயான இரயில்வே / புறநகர் இரயில்.

9. படகுகள்.

10. துரித நீர்வழிப் போக்குவரத்து.

11. வெகுஜன போக்குவரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற தனியார் வாகனங்கள் உள்ளடங்கலாக, அதன் எரிபொருள் அல்லது உந்து விசை வகையைப் பொருட்படுத்தாத வேறு முறைகள் எதுவும்.

12. துணைப்போக்குவரத்து-தனிநபர் மற்றும் போன்ற பல பயணங்களுக்காக வாடகை அடிப்படையில் அந்த நபருக்குக் கிடைக்கக்கூடிய அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதிக்குள் உள்ள இயக்குபவர்களால் வழங்கப்பட்ட அமைப்புகளையும் இது உள்ளடக்கும்.

(a) தானியங்கி மூவுருளி உந்துக்கள்/பகிர் தானியங்கி மூவுருளி உந்துக்கள்/மின்னனு மூவுருளி உந்துக்கள்;

(b) மீட்டர் பொருத்தப்பட்ட சீருந்து, வாடகைக்கு எடுக்கப்படும் சீருந்து அல்லது பகிர்-சீருந்து;

(c) சிற்றுந்து/மூடுஉந்து;

(d) திரளாக இயக்கப்படும் போக்குவரத்து வாகனம் எதுவும்;

(e) துணைப் போக்குவரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற எரிபொருள் மற்றும் உந்து விசை அமைப்பைப் பொருட்படுத்தாத வேறு முறைகள் எதுவும்.

13. எரிபொருள் உந்து விசையினால் பயன்படுத்தாத அல்லது மாசுபாட்டினை ஏற்படுத்தாத மிதிவண்டி, மூவுருளி மிதிவண்டி மற்றும் பிற பசுமை வகைப்போக்குவரத்து எதுவும்.

14. நகர்ப்புற சரக்கு.- அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதிக்கு இடையேயும், வெளியேயும் மற்றும் அவற்றுக்குள்ளும் பொருட்கள் சரக்குகள்/சுமைகள் ஆகியவற்றை சுமந்து செல்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ள சரக்கு வாகனங்களின் இயக்கங்கள்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசுச் செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.

15

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

சட்ட எண்.8/ 2024.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

பகுதி-I.

முன்னுரை.

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்

தொடக்கம் சட்டங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பகுதி-II.

1981-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

14-ஆம் பிரிவிற்கான 2. 1981-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின்

1/1982.

திருத்தம்.

(1) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறின் வரம்புரையில், "ஐம்பத்தெட்டு வயதினை"

எனும் சொற்றொடருக்காக, "அறுபது வயதினை" எனும் சொற்றொடரானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-III.

1981-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

14-ஆம் பிரிவிற்கான 3. 1981-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்தின் 14 ஆம்

2/1982.

திருத்தம்.

பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறின் வரம்புரையில், "ஐம்பத்தெட்டு

வயதினை" எனும் சொற்றொடருக்காக, "அறுபது வயதினை" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-IV.

1985-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

15-ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 4. 1985-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச் சட்டத்தின் 15 ஆம்

திருத்தம்.

23/1985.

பிரிவின் (3) ஆம் உட்பிரிவிற்கான இரண்டாம் வரம்புரையில், "ஐம்பத்தெட்டு

வயதினை" எனும் சொற்றொடருக்காக, "அறுபது வயதினை" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-V.

1990-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

13-ஆம் பிரிவிற்கான 5. 1990-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகச்

31/1990.

திருத்தம்.

சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறின் வரம்புரையில்,

"ஐம்பத்தெட்டு வயதினை" எனும் சொற்றொடருக்காக, "அறுபது வயதினை"

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

16

பகுதி-VI.

1997-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

14-ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 6. 1997-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்தின் 14 ஆம்

திருத்தம்.

45/1997.

பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறின் வரம்புரையில், "ஐம்பத்தெட்டு

வயதினை" எனும் சொற்றொடருக்காக, "அறுபது வயதினை" எனும்

சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி-VII.

2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

13 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 7. 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டத்தின்

திருத்தம்.

27/2002.

13 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், (b) கூறின் வரம்புரைக்காக, பின்வரும்

வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"வரம்புரையாக, பதிவாளர் அறுபது வயதினை நிறைவெய்தியதும் அல்லது

இந்தக் கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலஅளவு முடிவடைந்ததும், இவற்றில்

எது முந்தையதோ அதன் பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்;".

பகுதி-VIII.

2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

14 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 8. 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச் சட்டத்தின்,

திருத்தம்.

32/2002. 14-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (ii) ஆம் கூறின் வரம்புரைக்காக, பின்வரும்

வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"வரம்புரையாக, பதிவாளர் அறுபது வயதினை நிறைவெய்தியதும் அல்லது

இந்தக் கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலஅளவு முடிவடைந்ததும், இவற்றில்

எது முந்தையதோ அதன் பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்;".

பகுதி-IX.

2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

12 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் 9. 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகச்

திருத்தம்.

33/2008.

சட்டத்தின் 12 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், (b) கூறின் வரம்புரைக்காக

பின்வரும் வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"வரம்புரையாக, பதிவாளர் அறுபது வயதினை நிறைவெய்தியதும் அல்லது

இந்தக் கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலஅளவு முடிவடைந்ததும், இவற்றில்

எது முந்தையதோ அதன் பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்;".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசுச் செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.

17

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-

சட்ட எண்.9/ 2024.

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்

தொடக்கம்.

(ஆறாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும் அத்தகைய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

159 ஆம் 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)

21/1994.

பிரிவிற்கான 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 159 ஆம் பிரிவிற்காக,

மாற்றீடு.

பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"159. தொழில் உரிமம் வழங்குதல்.-(1) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய

வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, செயல் அலுவலரால்

வழங்கப்பட்ட ஒரு தொழில் உரிமமின்றி ஊராட்சியின் வரம்பிற்குள், பொது அல்லது

தனியாரின் இடம் எதிலும், அவ்வப்போது அரசினால் அறிவிக்கப்படலாகும் தொழில்

அல்லது வணிகத்தின் வகை எதையும் நபரெவரும் மேற்கொள்ளுதல் கூடாது

மற்றும் அத்தகைய தொழில் உரிமமானது, வகுத்துரைக்கப்படலாகும் முறையில்

புதுப்பிக்கப்படலாம்:

வரம்புரையாக, அரசு அல்லது மைய அரசின் அல்லது 1987 ஆம் ஆண்டு

தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்)

சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) கீழ் நிறுவப்பெற்ற அல்லது நிறுவப்பெற்றதாக

கருதப்படும் ஒரு சந்தைக் குழுவின், பயன்பாட்டில் அல்லது கட்டுப்பாட்டின் கீழ்

உள்ள இடம் எதனையும் பொறுத்த வரையில் தொழில் உரிமம் அவசியமானது

ஆகாது.

(2) தொழில் உரிமத்திற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும்,

வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய கட்டணத்துடன் சேர்த்து, அத்தகைய

படிவத்தில் மற்றும் அத்தகைய முறையில் செயல் அலுவலரிடம் செய்யப்படுதல்

வேண்டும்.

(3) அத்தகைய விண்ணப்பத்தை பெற்றதன் பேரில், விண்ணப்பமானது

முறையாக இருப்பின், செயல் அலுவலரானவர், தொழில் உரிமத்தை வழங்குதல்

வேண்டும்:

வரம்புரையாக, தொழில் உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம் எதுவும்,

கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்று வழங்கப்படாமல் மறுக்கப்படுதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, தொழில் உரிமத்திற்கான விண்ணப்பமானது,

அதனைப் பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாள்கள் கால அளவிற்குள் தீர்வு

செய்யப்படாதிருப்பின், அதன்படி விண்ணப்பிக்கப்பட்ட தொழில் உரிமமானது,

கூறப்பட்ட காலஅளவு முடிவுறுவதன் பேரில் வழங்கப்பட்டதாக கொள்ளப்படுதல்

வேண்டும்.

160 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 160 ஆம் பிரிவில், "ஊராட்சி ஒன்றிய குழு"

பிரிவிற்கான எனும் சொற்றொடருக்காக, "ஆய்வாளர்" எனும் சொற்றொடரானது மாற்றாக

திருத்தம்.

அமைக்கப்படுதல் வேண்டும்.

18

161 ஆம்

4. முதன்மைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கான

(1) (2) ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

திருத்தம்.

(2) (4) ஆம் உட்பிரிவில், "ஊராட்சி ஒன்றிய குழு" எனும்

சொற்றொடருக்காக, "ஆய்வாளர்" எனும் சொற்றொடரானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

II ஆம் இணைப்புப்

5. முதன்மைச் சட்டத்தின் II ஆம் இணைப்புப் பட்டியலில், (3) ஆம்

பட்டியலுக்கான நிரலிலுள்ள உள்ளீட்டிற்காக, அதனின் (1) ஆம் நிரலிலுள்ள 159 ஆம் பிரிவிற்கு

திருத்தம்.

எதிரே, பின்வரும் உள்ளீடானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"தொழில் உரிமம் இல்லாமல் தொழில் அல்லது வணிகம் எதனையும்

மேற்கொள்ளுதல்.".

III ஆம் இணைப்புப்

6. முதன்மைச் சட்டத்தின் III ஆம் இணைப்புப் பட்டியலில், (3) ஆம்

பட்டியலுக்கான நிரலிலுள்ள உள்ளீட்டிற்காக, அதனின் (1) ஆம் நிரலிலுள்ள 159 ஆம் பிரிவிற்கு

திருத்தம்.

எதிரே, பின்வரும் உள்ளீடானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"தொழில் உரிமம் இல்லாமல் தொழில் அல்லது வணிகம் எதனையும்

மேற்கொள்ளுதல்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசுச் செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 10 April 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-04-10.Ordinary_15_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-04-10.Ordinary_15_Part-IV_Section-2-T-Sup.