[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2024
[விலை: [விலை: ரூ. 2.40ரூ. 2.40 காசு காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 20] சென்னை, புதன்கிழமை, மே 15, 2024 வைகாசி 2, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 132, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.4(2)]த் துறை, 21 செப்டம்பர் 2023.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பூம்புகார் உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து, 03.09.1980ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 628ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/HOU/3859/80ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதாவது:-
திருத்தம்திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்குப் பதிலாக பின்வரும் அட்டவணை அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
அட்டவணைஅட்டவணை
வருவாய் கிராமங்களின்
எண் மற்றும் பெயர்.
சீர்காழி வட்டம்
61 இராதாநல்லூர்.
77 திருவெண்காடு.
55 பெருந்தோட்டம்-2
தரங்கம்பாடி வட்டம்
40 மேலப்பெரும்பள்ளம்.
அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ) ,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் (மொழிபெயர்ப்பு)த் துறை.
II-2-(20) (T Sup)—1
[ 1 ]2 [அரசாணை (நிலை) எண். 171, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 30 நவம்பர் 2023.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், குடியாத்தம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்ப்பதற்கும், 10.04.1974ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 207ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2011/74ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை செய்வதற்கான அவரது நோக்கத்தையும் இதனால் அறிவிக்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ், ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், உள்ள "அட்டவணை"க்குப்பதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-
அட்டவணைஅட்டவணை
வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
14. நெல்லூர்பேட்டை.
18. செருவங்கி.
19. தாழையாத்தம்.
17. சேவூர்.
23. அம்மணாங்குப்பம்.
33. சேத்துவண்டை.
[அரசாணை (நிலை) எண். 34, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.4(2)]த் துறை, 16 பிப்ரவரி 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஈரோடு உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை இதனால் சேர்ப்பதுடன் 25.09.1974ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 495ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/4115/74ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டுள்ளவாறு, அவ்வாறு செய்வதற்கான நோக்கம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணைக்கு பதிலாக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
அட்டவணைஅட்டவணை
வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெயர்.
10. நொச்சிபாளையம்
சி. சமயமூர்த்தி, அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ) ,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (ப) எண். 102, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 8 பிப்ரவரி 2023.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 7 மற்றும் 9ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 02-02-2022 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் பாகம் II-பிரிவு 2-இல் 68 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/LWSD/71/2022 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அதாவது:-
3திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில். அட்டவணையில், பணியாளர் பிரதிநிதிகள் என்னும் தலைப்பின் கீழ் நெடும்பத்தி (1) இல் தொடர் எண் (1) இல் உள்ள பதிவுகள் மற்றும் அவற்றுக்கு நிகரான தொடர்புடைய பதிவுகளுக்குப் பதிலாக முறையே பின்வரும் பதிவுகள் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும். அவையாவன:-
1. திரு. ஆர். பெரியசாமி, .. உறுப்பினர்
தொழிலாளர் முன்னேற்றப் பேரவை,
எண்.34, பி.வி.ஏ. இல்லம், புகழ் வீதி,
ஈரோடு முதன்மைச் சாலை,
வேலாயுதம்பாளையம் வட்டம்,
கரூர் மாவட்டம்-639 117.
[அரசாணை (நிலை) எண். 109, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 7 ஜூலை 2023.] தமிழ்நாடு 1982ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பிணையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், 2021 ஆம் ஆண்டு பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார், அதாவது:-
திருத்தம்
மேற்சொன்ன தி்ட்டத்தில், 17 ஆம் பகுதியைச் சேர்ந்த (2) உட்பகுதியின் இனம் (a) இல் "ரூ.1,25,000" என்னும் சொற்றொடருக்குப் பதிலாக "ரூ.2,00,000" என்னும் சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 125, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I2)த் துறை, 21 ஜூலை 2023.] 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனை குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள்(கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்:-
திருத்தங்கள்
மேற்சொன்ன திட்டத்தில்,-
(1) பகுதி 15 இல்,-
(a) உட்பகுதி (1) இல், அட்டவணையில்,-
(i) தொடர் எண்கள் 8 மற்றும் 9 இல், நெடும்பத்தி (3) இல், "(ஒவ்வொரு கல்வியாண்டும்" என்னும் சொற்றொடருக்குப் பின்னர் "(தொடர் எண்.12 இல் உள்ள தொழில்முறைப் பாடப்பிரிவுகள் நீங்கலாக)" என்ற சொற்றொடர் முறையே சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்:
(ii) தொடர் எண்.11 இல் உள்ள பதிவுகள் மற்றும் அதுதொடர்பான நிகரான தொடர்புடைய பதிவுகளுக்குப் பின்னர், பின்வரும் தொடர் எண் மற்றும் அது தொடர்பான நிகரான தொடர்புடைய பதிவுகள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும், அவையாவன:-
| "12 | EE(1) | இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மைக் கழகம் (IIM), ஆகியவற்றில் முறையான தொழில்முறை பாடப்பிவுகளைப் பயில்வோருக்கும் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு பயில்வோருக்கும் (ஒவ்வொரு கல்வியாண்டும்) | வழங்கத்தக்க உண்மையான கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளாக ரூ.50,000/- | வழங்கத்தக்க உண்மையான கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளாக ரூ.50,000/- | வழங்கத்தக்க உண்மையான கல்விக் கட்டணம் முழு விடுதிக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளாக ரூ.50,000/- | வழங்கத்தக்க உண்மையான கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளாக ரூ.50,000/- |
(b) உட்பகுதி (3)க்குப் பின்னர், பின்வரும் உட்பகுதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"(3-a) தொடர் எண் 12-இல் குறிப்பிடப்பட்டுள்ள உதவித் தொகைக்கான விண்ணப்பம், அட்டவணை II இல் உள்ள படிவம் EE (1) இல் படிப்பில் சேர்ந்த பின்னர் அல்லது படிப்பை நிறைவு செய்வதற்கு அல்லது தேர்ச்சி பெறுவதற்கு முன்னர் அளிக்கப்பட வேண்டும்.";
(2) அட்டவணை II இல், படிவம் EE க்குப் பின்னர், படிவம் EE (1) சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
4"படிவம் - EE (1)
[பகுதி 15(3-a)-ஐக் காண்க]
இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திலும் (IIT) இந்திய மேலாண்மைக் கழகத்திலும் (IIM) மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம்.
பெறுநர்
தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)
..........................................மாவட்டம்.
1. பதிவுபெற்ற உடலுழைப்புத் தொழிலாளரின் பெயர் :
2. (a) பதிவு எண் மற்றும் முதல் பதிவு செய்த நாள்
(அசல் அடையாள அட்டை இணைக்கப்பட வேண்டும்) :
(b) இறுதியாகப் புதுப்பித்த நாள், புதுப்பிக்கப்பட்ட காலம்
குறிப்பிடப்பட வேண்டும்
3. முழு முகவரி, அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்
4. பதிவு பெற்ற உடலுழைப்புத் தொழிலாளரின் குடும்ப உறுப்பினர்கள்
விவரங்கள்:
| தொ. எண் | பெயர். | பதிவு பெற்ற உடலுழைப்புத் தொழிலாளருடனான உறவுமுறை | வயது |
| (1) | (2) | (3) | (4) |
5. கல்வி உதவித் தொகை கோரப்படும் மகனின் / மகளின் விவரங்கள்:
| தொ. எண் | பெயர். | பிறந்த நாள் | பயிலும் பாடத் திட்டத்தின் பெயர். | பாடத் திட்டத்தின் கால அளவு. | கல்லூரியின்/ நிறுவனத்தின் பெயர் மற்றும் முழு முகவரி |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
குறிப்பு:- பதிவு பெற்ற உடலுழைப்புத் தொழிலாளரின் மகன் / மகள் மேற்சொன்ன பாடத்திட்டத்தில் பயில்கிறார் என்பதையும் அன்றாடம் வந்து செல்பவரா அல்லது விடுதியில் தங்கியிருந்து பயில்கிறாரா என்பதையும் குறிப்பிட்டு, கல்லூரியின் / கல்வி நிறுவனத்தின் முதல்வரிடமிருந்து / இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
6. ஏற்கெனவே வாரியத்திடமிருந்து உதவித் தொகை பெற்றுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை
| தொ. எண் | பெயர். | மகன் / மகள் | உதவித் தொகை பெறப்பட்ட பாடத் திட்டம். | உதவித் தொகை பெற்ற ஆண்டு | உதவித் தொகை (ரூ.) |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) |
பதிவு பெற்ற உடலுழைப்புத் தொழிலாளரின் கையொப்பம் / கைப்பெருவிரல் ரேகைப் பதிவு5
விண்ணப்பதாரரின் உறுதிமொழி விண்ணப்பதாரரின் உறுதிமொழி *
மேலே அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் நான் அறிந்த வரையிலும் சரியெனவும் உண்மையெனவும் இதனால் நான் உறுதியளிக்கிறேன். மேலே அளிக்கப்பட்டுள்ள யாதொரு தகவலும் பொய்யென அறியப்படும் நேர்வில், உதவித்தொகையாகப் பெற்ற தொகை முழுவதையும் திருப்பியளிப்பதாக இதனால் நான் ஒப்புக்கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஏனைய யாதொரு நல வாரியம் அல்லது வாரியங்களிலிருந்து அல்லது ஏனைய யாதொரு அரசுத் திட்டங்களின் கீழ் இதேபோன்ற உதவித் தொகையை நான் கோரிப்பெறவில்லை எனவும் இதனால் நான் உறுதியளிக்கிறேன்.
பதிவுபெற்ற உடலுழைப்புத் தொழிலாளரின் இடம்:
நாள்:
கையொப்பம்/கைப்பெருவிரல் ரேகைப் பதிவு *ஏதேனும் தவறாக உறுதிமொழி / சான்றளிப்பு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
சான்றிதழ்*சான்றிதழ்*
விண்ணப்பத்தில் அளித்துள்ள விவரங்கள் அனைத்தும் உண்மையென இதனால் நான் சான்றளிக்கிறேன்.
இடம்: உறுப்பினர்கள்,.....................தமிழ்நாடு........................நல வாரியம் / சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பின் பதிவு பெற்ற தொழிற்சங்கத்தின் தலைவர் / செயலாளர்/ சம்பந்தப்பட்ட தொழிலின் உதவி ஆய்வாளர் / வேலைவாய்ப்புச் சான்றிதழ் அளிப்பதற்கு அனுமதியுள்ள ஏனைய யாதொரு அலுவலர்.
*ஏதேனும் தவறான உறுதிமொழி / சான்றளிப்பு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பளிப்பு
பதிவுபெற்ற உடலுழைப்புத் தொழிலாளரான *திரு/திருமதி............ (பதிவு எண்.............) என்பவரின் (*மகன் / *மகள்) *செல்வன் / செல்வி* ...................... என்பவருக்கு உரிய சரிபார்ப்பிற்குப் பின்னர், கல்வி உதவித்தொகையாக ரூ......................../- (ரூபாய்..............மட்டும்) இதனால் நான் ஒப்பளிப்பு செய்கிறேன்.
அலுவலக முத்திரை:
இடம்: தொழிலாளர் நல உதவி ஆணையர் நாள்: (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)................மாவட்டம். பொருந்தாதவற்றை அடித்துவிடவும்.".
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ) ,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.