Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Declaration of Ban on Liberation Tigers of Tamil Eelam (LTTE) as an Unlawful Association under the Unlawful Activities (Prevention) Act, 1967. (TAMIL)

Published 18 May 2024

Department
Public Department
Type
Extraordinary
Gazette no.
163
Part
Part II
Notification no.
Notification No. II(1)/PUSC/10(m-2)/2024.--[G.O.Ms.No. 375, Public (SC), 18th May 2024.]
Extraordinary Type
Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments.
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2024-05-18.Extraordinary_163_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2024 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 163-A] CHENNAI, SATURDAY, MAY 18, 2024 Vaikasi 5, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

பொதுத் துறை

(மிக கமுக்கம்)

1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின்கீழ், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்குத்

தடை விதித்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண்.375, பொது (மிக கமுக்க)த் துறை, நாள் 18 மே 2024.]

No. II(1)/PUSC/10(m-2)/2024.

புதுதில்லி, மத்திய உள் துறை அமைச்சகத்திடமிருந்து வரப்பெற்ற 14.05.2024-ஆம் நாளிட்ட S.O.1983 (E) ஆம் எண் பின்வரும் அறிவிக்கை மறுவெளியீடு செய்யப்படுகிறது:-

S.O. 1983(E).–தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு (இதன்பின்னர் எல்.டி.டி.ஈ. எனக் குறிக்கப்படும்) என்பது இலங்கையை அடிப்படைத் தளமாகக் கொண்ட, ஆனால், இந்திய மண்ணில் ஆதரவாளர்ளையும், அனுதாபிகளும், முகவர்களையும் கொண்டிருக்கிற ஓர் அமைப்பு என்பதாலும்;

தமிழர்கள் அனைவருக்குமான ஒரு தனி நாடு (தமிழ் ஈழம்) என்ற எல்.டி.டி.ஈ. அமைப்பின் நோக்கம், இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக அமைவதோடு, இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பதற்கும் பிரித்துக் கொடுப்பதற்கும் வழிவகுக்கும் என்பதால் இது சட்டவிரோத நடவடிக்கைகளின் வரம்பிற்குள் வருவதாலும்; 1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின் (சட்டம் எண் 37/1967) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (3) உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மத்திய அரசு, 14.05.2019-ஆம் நாளிட்ட S.O.1730(E)-ஆம் எண் அறிவிக்கையின் வாயிலாக எல்.டி.டி.ஈ.-ஐ ஒரு சட்டவிரோத அமைப்பாக அறிவித்ததாலும்;

இது குறித்துத் தீர்ப்பளிப்பளிப்பதற்காக 1967-ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயம், எல்.டி.டி.ஈ. அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிப்பதற்குப் போதிய காரணத்தைக் கண்டறிந்த பின்னர், 21.11.2019ஆம் நாளிட்ட S.O 4233 (E)ஆம் எண் அறிவிக்கையில் அதன் ஆணை வாயிலாக அத்தகைய அறிவிப்பை உறுதி செய்திருப்பதாலும்;

1967ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின் (37/1967) 6ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் தடை குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு 13.05.2024ஆம் நாளன்றுடன் நிறைவடைகிறது என்பதாலும்;

ஏனையவற்றுக்கிடையே, பின்வரும் காரணங்களின் அடிப்படையில், எல்.டி.டி.ஈ. அமைப்பு தற்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என மத்திய அரசு கருதுவதாலும்:- [ 1 ] II-1 Ex. (163-A) 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

(i) 2009-ஆம் ஆண்டு மே திங்களின்போது இலங்கையில் நடைபெற்ற இராணுவத் தாக்குதலில் எல்.டி.டி.ஈ. தோல்வியுற்ற பின்னரும், 'தனி ஈழம்' என்ற கொள்கையை அவர்கள் கைவிடாமல், நிதி திரட்டியும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டும் தனி 'ஈழம்' அமைப்பதற்காக மறைமுகமாக செயல்பட்டு வருவதுடன் எஞ்சியுள்ள எல்.டி.டி.ஈ. தலைவர்கள் அல்லது இயக்கத்தினர் சிதறியுள்ள அவ்வியக்க செயல்வீரர்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளையும் உள்நாட்டளவிலும் பன்னாட்டு அளவிலும் அவர்களது படையை உயிர்த்தெழச் செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்;

(ii) எல்.டி.டி.ஈ. ஆதரவு நிலைப்பாடுடையோர் பொதுமக்களிடையே பிரிவினைவாதப் போக்கினைத் தொடர்ந்து வளர்த்து வருவதுடன் இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில், எல்.டி.டி.ஈ. ஆதாரவாளர்களின் எண்ணிகையை அதிகரித்து வருகின்றனர். இது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுவாகச் சிதைக்கும் ஆற்றலைக் கொண்டதாகும்;

(iii) அயல்நாடுகளில் வாழும் எல்.டி.டி.ஈ. அமைப்பின் அனுதாபிகள், எல்.டி.டி.ஈ. அமைப்பின் தோல்விக்கு இந்திய அரசுதான் காரணம் எனக் கூறி தமிழர்களிடையே இந்தியாவிற்கு எதிரான கருத்தைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதனைத் தடுக்காவிட்டால் மத்திய அரசின் மீதும் இந்திய அரசமைப்பின் மீதும் தமிழர்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது;

(iv) தடை நடைமுறையில் உள்ளபோதிலும், எல்.டி.டி.ஈ. ஆதரவு நிலைப்பாடுடைய அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் நடவடிக்கைகள் கவனத்திற்கு வரப்பெற்றிருப்பதுடன், இந்த அமைப்பினர்கள் எல்.டி.டி.ஈ. அமைப்புக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன;

(v) தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அவர்களின் அமைப்பு மீதான இந்தியாவின் கொள்கையையும், அவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் மாநில நிருவாகத்தின் செயலையும் பகைமையுடன் எதிர்த்து வருகின்றனர்;

(vi) தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆதரவு நிலைப்பாடுடையவர்கள் அல்லது அவர்களை பின்பற்றுபவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சட்டவிரோதமாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துதல், உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்ட 14.05.2019 ஆம் நாளிட்ட S.O 1730 (E) எண்ணிட்ட கடைசி அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து அவர்களுக்கு எதிராக 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன;

மேலும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பொது அமைதிக்கும் தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த அமைப்பை ஒரு சட்டவிரோதமான அமைப்பாக அறிவிக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசு கருதுவதாலும்;

மேலும், மத்திய அரசு கருத்து தெரிவிக்கையில் – தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்து, பின்வரும் செயல்களில், அதாவது-

(i) இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு பாதகமாக, அதனுடைய சீர்குலைக்கும், தனியாட்சி மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகள்; மற்றும்

(ii) அதன் வலுவான இந்தியாவிற்கு விரோதமான நடவடிக்கைகள் – இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே தழிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு சட்ட விரோதமான அமைப்பு என உடனடியாக செயலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, தற்போது 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3 ஆம் பிரிவின் (1) மற்றும் (3) உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை (LTTE) சட்ட விரோத அமைப்பாக இதனால் அறிவித்து, மேற்சொன்ன சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ், பிறப்பிக்கக்கூடிய எந்த ஒரு ஆணைக்கும் உட்பட்டு, இந்த அறிவிக்கை அரசிதழில் வெளிடப்படும் நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு செயலில் இருக்கும் என்று கட்டளையிடுகிறது.

(கோ.எண்.11034/2/2024-CT-II)

அபிஜித் சின்ஹா,

இணைச் செயலாளர்.

க. நந்தகுமார்,

செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 May 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-05-18.Extraordinary_163_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2024-05-18.Extraordinary_163_Part-II_Section-1.