[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2024
[விலை: [விலை: ரூ. 4.00ரூ. 4.00 காசு காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 21] சென்னை, புதன்கிழமை, மே 22, 2024 வைகாசி 9, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
அறிவிக்கைகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
[அரசாணை (ப) எண் 432, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 30 ஆகஸ்ட் 2022.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இது தொடர்பாக மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்து பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர், DMS வளாகம் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 10-07-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு-2 இல், 664 மற்றும் 665 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவே/562/2019 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாக தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பதநீர் இறக்கும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்கக் குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
II-2-(21) (T Sup)—1
[ 1 ]2
விவர அட்டவணைவிவர அட்டவணை
பதநீர் இறக்கும் தொழிலில் வேலைவாய்ப்பு பதநீர் இறக்கும் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | தொழிலாளர்களின் வகைகள் | நாளொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய ஊதிய வீதவீதங்கள் (ரூ.) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | பைனவெல்லம் தயாரிப்பவர் | 491.00 |
| 2. | உதவியாள் | 491.00 |
| 3. | பதநீர் இறக்குபவர் | 527.00 |
விளக்கங்கள்:-விளக்கங்கள்:- அகவிலைப்படிஅகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 3.04 (மூன்று ரூபாய் நான்கு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாள் அன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியதத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை (2ப) எண் 36, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)]த் துறை, 16 ஜூன் 2023.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி மற்றும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 22-11-2017 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு-2-இல், 878 முதல் 881 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/947/2017 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் வகையினருக்கு வழங்க வேண்டிய குறைந்த அளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
3விவர அட்டவணைவிவர அட்டவணை
யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் வேலைவாய்ப்பு யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் வேலைவாய்ப்பு
I.I. யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் வேலைவாய்ப்பு - அனைத்து மாநகராட்சிகள் யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் வேலைவாய்ப்பு - அனைத்து மாநகராட்சிகள்
| தொடர் எண் | பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | ||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ||
| மாதமொன்றுக்கு ( ரூ . காசு) ( i ) | நாளொன்றுக்கு ( 8 மணி நேரம்) ( ரூ . காசு) ( i i ) | மணி ஒன்றுக்கு ( ரூ . காசு) ( i i i ) | ||
| (1) | பயிற்சி பெறாதவர்கள் | 13000.00 | 500.00 | 62.50 |
| (2) | ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 15000.00 | 577.00 | 72.00 | |
| நிலை II | 14000.00 | 538.00 | 67.00 | |
| (3) | பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 17000.00 | 654.00 | 82.00 | |
| நிலை II | 16000.00 | 615.00 | 77.00 |
II. யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் வேலைவாய்ப்பு - அனைத்து நகராட்சிகள்
| தொடர் எண் | பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | ||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ||
| மாதமொன்றுக்கு ( ரூ . காசு) ( i ) | நாளொன்றுக்கு ( 8 மணி நேரம்) ( ரூ . காசு) ( i i ) | மணி ஒன்றுக்கு ( ரூ . காசு) ( i i i ) | ||
| (1) | பயிற்சி பெறாதவர்கள் | 10000.00 | 385.00 | 48.00 |
| (2) | ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 13000.00 | 500.00 | 62.50 | |
| நிலை II | 12000.00 | 462.00 | 58.00 | |
| (3) | பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 15000.00 | 577.00 | 72.00 | |
| நிலை II | 14000.00 | 538.00 | 67.00 |
III. யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் வேலைவாய்ப்பு - அனைத்து பேரூராட்சிகள்
| தொடர் எண் | பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | ||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ||
| மாதமொன்றுக்கு ( ரூ . காசு) ( i ) | நாளொன்றுக்கு ( 8 மணி நேரம்) ( ரூ . காசு) ( i i ) | மணி ஒன்றுக்கு ( ரூ . காசு) ( i i i ) | ||
| (1) | பயிற்சி பெறாதவர்கள் | 8000.00 | 308.00 | 38.50 |
| (2) | ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 11000.00 | 423.00 | 53.00 | |
| நிலை II | 10000.00 | 385.00 | 48.00 | |
| (3) | பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 13000.00 | 500.00 | 62.50 | |
| நிலை II | 12000.00 | 462.00 | 58.00 |
IV. யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் வேலைவாய்ப்பு - கிராம ஊராட்சிகள் நீங்கலாக, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள்
| தொடர் எண் | பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | ||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ||
| மாதமொன்றுக்கு ( ரூ . காசு) ( i ) | நாளொன்றுக்கு ( 8 மணி நேரம்) ( ரூ . காசு) ( i i ) | மணி ஒன்றுக்கு ( ரூ . காசு) ( i i i ) | ||
| (1) | பயிற்சி பெறாதவர்கள் | 6000.00 | 231.00 | 29.00 |
| (2) | ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 9000.00 | 346.00 | 43.00 | |
| நிலை II | 8000.00 | 308.00 | 38.50 | |
| (3) | பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 11000.00 | 423.00 | 53.00 | |
| நிலை II | 10000.00 | 385.00 | 48.00 |
V. யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் வேலைவாய்ப்பு - கிராம ஊராட்சி
| தொடர் எண் | பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | ||
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) | ||
| மாதமொன்றுக்கு ( ரூ . காசு) ( i ) | நாளொன்றுக்கு ( 8 மணி நேரம்) ( ரூ . காசு) ( i i ) | மணி ஒன்றுக்கு ( ரூ . காசு) ( i i i ) | ||
| (1) | பயிற்சி பெறாதவர்கள் | 5000.00 | 192.00 | 24.00 |
| (2) | ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 7000.00 | 269.00 | 34.00 | |
| நிலை II | 6000.00 | 231.00 | 29.00 | |
| (3) | பயிற்சி பெற்றவர்கள் | |||
| நிலை I | 9000.00 | 346.00 | 43.00 | |
| நிலை II | 8000.00 | 308.00 | 38.50 |
யாதொரு உள்ளாட்சி அமைப்பின் கீழ் பணியமர்த்தப்பட்ட நிலைகளின் கீழ் உள்ள பணியாளர்களின் வகைகள்.
பயிற்சி பெறாதவர்கள்
1. தள்ளுவண்டி மஸ்தூர்
2. துப்புரவுப் பணியாளர்கள்
3. பெருக்குபவர்கள்
4. காவலாள்
5. தோட்டக்காரர்
6. சுத்தம் செய்பவர்
7. ஆயாக்கள்
8. மிக்கம்பியாள் உதவியாளர்
9. படகு ஓட்டுபவர்
10. எலி பிடிப்பவர் / நாய் பிடிப்பவர்
11. மசால்ச்சி
12. வால்வை இயக்குபவர் (அடைப்பான் திறந்த மூடுபவர்) (குடிநீர் வழங்கல்)
13. புல் வெட்டுபவர் (பால் பண்ணைகள்)
14. பால் வழங்கும் சிற்றேவலாள்5 15. செயின்மேன்
16. கழிவுநீரை அளவீடு செய்யும் பணியாளர் / நீர் அளவைமானி பணியாளர்
17. வடிகால் நீரை வெளியேற்றுபவர்
18. ஏவலாள்
19. பாதகாவல் பணிப்பொறுப்பாளர்
20. அலுவலக உதவியாளர்
21. மேற்சொன்னவற்றின் கீழ் குறிப்பிடப்படாத ஏனைய யாதொரு பயிற்சி பெறாத வகையினர்.
ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் நிலை I
1. மேலாள்
2. நோய் கட்டுப்பாட்டு மேலாள் (மலேரியா, டெங்கு முதலியவை)
3. பண்டகசாலை மேலாள்
4. குழாய்த் தொடர் பொருத்துபவர்
5. விளையாட்டுத் திடல் பணியாளர் (விளையாட்டுப் பகுதிகள்)
6. பணிமனை மேலாள்
7. கழிவுநீர் மேலாள்
8. துளையிடுபவர்
9. அரைப்பவர்
10. பண்ணை கழிவுநீர் மேலாள்
11. வடிகால் மேலாள்
12. அங்காடி மேலாள்
13. கலவை உர மேலாள்
14. தரவு பதிவு செய்பவர் மற்றும் கணக்காளர்
15. ஓட்டுநர்கள் (கனரக வாகனம் / இலகுரக வாகனம் / POBCAT)
16. மேற்சொன்னவற்றின் கீழ் குறிப்பிடப்படாத ஏனைய யாதொரு, ஓரளவு பயிற்சி பெற்ற வகையினர்.
நிலை II
1. குழாய்ப்பணி உதவியாளர்
2. சுத்தம் செய்பவர்கள் (இயந்திரம், தளவாடங்கள் முதலியவை)
3. பூஸ்டர் மேன் பம்பு
4. உதவி பொருத்துநர்
5. வாயிற்காவலர்
6. மேல் நிலைத் தொட்டி பராமரிப்பவர்
7. தரவு பதிவு செய்பவர்
8. எழுத்தர்
9. வரித்தண்டலர்
10. மின்கலத்தால் இயங்கும் வாகன ஓட்டுநர்கள்
11. மலேரியா நோய் ஒழிப்புப் பணியாளர்கள்
12. குழாய் இயக்குபவர்
13. மேற்சொன்னவற்றின் கீழ் குறிப்பிடப்படாத ஏனைய யாதொரு, ஓரளவு பயிற்சி பெற்ற வகையினர்.
பயிற்சிபெற்றவர்கள் நிலை I
1. இயந்திரக் கம்மியர்
2. மேற்சொன்னவற்றின் கீழ் குறிப்பிடப்படாத ஏனைய யாதொரு பயிற்சி பெற்ற வகையினர்
நிலை II
1. குழாய் பொருத்துநர்கள்
2. கொத்தனார்
3. பொருத்துநர்கள்6 4. மின் கம்மியர்கள்
5. கணினி இயக்குபவர்
6. தொழில்நுட்ப உதவியாளர்
7. மின்கம்பியாள்
8. ஓட்டுநர்கள் (JCB & ஏனைய சிறப்பு வாகனங்கள்)
9. மேற்சொன்னவற்றின் கீழ் குறிப்பிடப்படாத ஏனைய யாதொரு பயிற்சி பெற்ற வகையினர்
விளக்கம்-விளக்கம்-I
பகுதி நேரப் பணியாளர்கள்:பகுதி நேரப் பணியாளர்கள்:
(i) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்:குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்: கால அளவு வீதத்தின் அடிப்படையில் பகுதி நேரப் பணியாளர்கள் பணியமர்த்தப்படும் இடங்களில், நாளொன்றுக்கான அவர்களின் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள், நெடும்பத்தி எண் 3 (ii)-ன் படியும், மணி ஒன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய விதங்கள், அட்டவணைகளின் நெடும்பத்தி எண் 3 (iii)-ன் படியும், கணக்கிடப்பட வேண்டும்.
அகவிலைப்படி:அகவிலைப்படி:- குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், அவர்கள் பணிபுரிந்த நாளின் அல்லது மணியின் வீதாச்சாரத்தைக் கணக்கிட்டு, அகவிலைப்படியானது வழங்கப்பட வேண்டும்.
விளக்கம்-விளக்கம்-II (1)(1) அகவிலைப்படி: அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன், பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது, மாதமொன்றுக்கு ரூ. 31.00 (முப்பத்தொன்று ரூபாய் மட்டும்) கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, சனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான நுகர்வோர் விலைப்புள்ளி குறியீட்டு சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.
(iii) அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளி குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களிடையே எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாத ஊதியத்தைக் கணக்கிட, ஒரு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) ஒரு நாள் ஊதியத்தைக் கணக்கிட, மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(5) நேரத்தின் அடிப்படையிலான ஊதியத்தைக் கணக்கிட, ஒரு நாள் ஊதியத்தை 8 ஆல் வகுக்க வேண்டும்.
(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே ஊதியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்) ந. அருள்,ந. அருள்,
இயக்குநர், (கூ.பொ)
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண். 146 தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (K1)த் துறை, 2 செப்டம்பர் 2023] 1948 ஆம் ஆண்டு தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 34/1948) 1 ஆம் பிரிவைச் சேர்ந்த (5) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்திடம் கலந்தாலோசித்த பின்னரும், மத்திய அரசின் ஒப்பதலுடனும், மேற்சொன்ன சட்டத்தின் விதித்துறைகளை, கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் நெடும்பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் வகையினருக்கு இதனால் நீட்டிக்கிறார். இதன் வரைவு, இச்சட்டத்தின் மேற்சொன்ன பிரிவின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
7அட்டவணை.
| நிறுவனங்களின் விளக்கம் (1) | நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் (2) |
| தற்காலிக அடிப்படையில் அல்லது ஒப்பந்த அடிப்படையில் அல்லது இரண்டிலும் பத்து அல்லது மேற்பட்ட நபர்களைப் பணியமர்த்தியுள்ள, அல்லது முந்தைய பன்னிரெண்டு மாதங்களில் ஏதேனும் நாளில் நாட்கூலி அடிப்படையில் பணியமர்த்தம் செய்த, மாநகராட்சி, நகராட்சி மன்றங்கள் உட்பட நகராட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசால் அமைக்கப்பட்ட ஏனைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள். | 1948 ஆம் ஆண்டு தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டத்தின் 1 ஆம் பிரிவைச் சேர்ந்த (5) உட்பிரிவின் கீழ் மேற்சொன்ன சட்டத்தின் விதித்துறைகள் ஏற்கெனவே செயலிற்குக் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்துப் பகுதிகள். |
[அரசாணை (ப) எண். 500 தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (J2)த் துறை, 5 அக்டோபர் 2023] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XI/1948) 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியிலும் 9 ஆம் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், வைரம் வெட்டும் மற்றும் பட்டைத்தீட்டும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கான குறைந்தளவு ஊதியங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தமிழ்நாடு அரசிற்கு ஆலோசனை வழங்குவதற்காக பின்வரும் நபர்களைக் கொண்ட குழு ஒன்றினை இதனால் நியமிக்கிறார்:-
தனி நபர்கள்:தனி நபர்கள்:-
| (1) | தொழிலாளர் துறையின் இணை ஆணையர் கோயம்புத்தூர். | தலைவர் |
| (2) | தொழிலாளர் துறையின் உதவி ஆணையர், (செயலாக்கம்), கோயம்புத்தூர். | செயலாளர் |
| (3) | வருவாய் கோட்ட உதவி இயக்குநர். பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை, கோயம்புத்தூர். | உறுப்பினர் |
வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-:-
| (1) | திரு. M. செல்வராஜா, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை, சாமி பண்டார தெரு, சிந்தாரிப்பேட்டை, எண்.65/26, சென்னை-600 002. | உறுப்பினர் |
| (2) | திருமதி S. சுகுணாதேவி, இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், ராஜேஷ்வரி நகர், தொப்பம்பட்டி, எண்.4-539, கோயம்புத்தூர்-641 017. | உறுப்பினர் |
| (3) | திருமதி N. ஈஸ்வரி, இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு, எண்.69/166B,கிழக்குத் தெரு, கொளண்டம்பாளையம் நாயக்கன்பாளையம், கோயம்புத்தூர்-641 020. | உறுப்பினர் |
தொழிலாளர்களின் பிரதிநிதிகள்தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-:-
| (1) | திரு. N. பாஸ்கரன், எண்.67/22, சுபsr என்க்லேவ், அழகேசன் சாலை-2, சாய்பாபா காலனி கோயம்புத்தூர்-641 011. | உறுப்பினர் |
| (2) | திரு. V. நித்தியானந்தம், எண்.1-B, லட்சுமி விநாயகர் கோயில் தெரு, காந்தி நகர், ஈக்காட்டுந்தாங்கல், சென்னை-600 032. | உறுப்பினர் |
| (3) | திரு. B. முத்துவெங்கட்ராம், எண் 301-A, ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001. | உறுப்பினர் |
[அரசாணை (ப) எண். 577, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2 )த் துறை, 31 அக்டோபர் 2023.] 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு மலைத்தோட்டத் தொழிலாளர் விதிகளின் 54 ஆம் விதியைச் சேர்ந்த (1) துணைவிதியின் (iii) மற்றும் (iv) ஆம் பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 03.05.2023 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2 இல் 367 முதல் 368 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/தொ/ந.தி.வ./429/2023 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார்.
திருத்தம்.
மேற்சொன்ன அறிவிக்கையில் II- வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-'' ™என்னும் தலைப்பின் கீழ் 3 மற்றும் 4 ஆம் தொடர் எண்களிலுள்ள பதிவுகள் மற்றும் அவை தொடர்புடைய நிகரான பதிவுகளுக்குப் பதிலாகப் பின்வரும் பதிவுகள் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
3. திரு. T.J. வர்கீஸ் வைத்யன், தலைவர் தமிழ்நாடு மலைத்தோட்டத் தொழிலாளர்கள் சங்கம்,
42,A.T.T. காலனி, கோயம்புத்தூர் - 642 018.
4. திரு. வினோதன் கந்தையா, தலைவர், சேர்வராயன் மலைத்தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், எண். 50/28, மேல்மாடி, சாரதா கல்லூரிச்சாலை, S.M. கார் சர்வீஸ் சென்டர் அருகில், அஸ்தம்பட்டி, சேலம்-636 007.".
[அரசாணை (நிலை) எண். 187, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 26 டிசம்பர் 2023.] தமிழ்நாடு 1982-ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்துதலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள இணையம் சாா்ந்த சுதந்திரமான தன்விருப்பப் பணிகளில் ஈடுபட்டுள்ள உடலுழைப்புத் தொழிலாளர்களின் நலனுக்காக "தமிழ்நாடு இணையம் சாா்ந்த சுதந்திரமான தன்விருப்பப் பணிகளில் ஈடுபட்டும் தொழிலாளர்களுக்கான நல வாாியம் (Tamil Nadu Platform Based Gig Worker's Welfare Board) ஒன்றை இதனால் அமைக்கிறார்.
[அரசாணை (நிலை) எண். 24, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 1 மாா்ச் 2024.] 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (5) உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 05.09.2007 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்IIபிரிவு 2 இல் 350 மற்றும் 351 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும்தாழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் II(2)/LE/542/2007 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் உறுப்பினா்களை தமிழ்நாடு வீட்டுப் பணியாளா்கள் நல வாாிய உறுப்பினர்களாக நியமனம் செய்கிறாா், அதாவது:-
| 1. | மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், சென்னை600 009. | தலைவர் |
| 2. | அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை600 009. | உறுப்பினர் |
| 3. | அரசு முதன்மைச் செயலாளர், நிதித்துறை, சென்னை600 009. | உறுப்பினர் |
| 4. | அரசு செயலாளர் / சட்டத்துறை சென்னை-600 009. | உறுப்பினர் |
| 5. | முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் நல வாாிய ஆணையர், சென்னை600 006. | உறுப்பினர் |
| 6. | காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநா், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிாிவு, அசோக் நகா், சென்னை-600 083. | உறுப்பினர் |
| 7. | இயக்குநர், சமூக நல இயக்குநரகம், சென்னை-600 015. | உறுப்பினர் |
| 1. | திருமதி. பெ. தெய்வானை, த/ பெ. பொியமுத்து, எண். 64, மறைமலை நகா், கடையக்குடி அஞ்சல், புதுக்கோட்டை622 003. | உறுப்பினர் |
| 2. | திரு. ஆ. ராதாகிருஷ்ணன், த/பெ. ஆறுமுகம் எண். 34இ-14, புதுத் தெரு, கணேசபுரம் அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம்-637 001. | உறுப்பினர் |
| 3. | திருமதி அ. நளினி, க/பெ. S. அன்பழகன், எண். 3/2A1, தெற்கு தெரு, ஊட்டத்தூர் அஞ்சல், லால்குடி வட்டம், திருச்சி621 109. | உறுப்பினர் |
| 4. | திரு. மக்கள் கோ. ராஜன், த/பெ. கோவிந்தசாமி, எண். 30, RKV, நகர், முதல் தெரு, திருநகர் காலனி, ஈரோடு638 003. | உறுப்பினர் |
| 5. | ர. ஷீஜா, த/பெ. T.N. ரகுநாதன், எண். 15/66, கஜபதி தெரு, ஷெனாய் நகர், சென்னை600 030. | உறுப்பினர் |
| 1. | திருமதி. ப. கிளாரம்மாள், த/பெ. A.M. பணிப்பிச்சை, தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் சங்கம், தொழிலாளர் முன்னேற்றக் கூட்டமைப்பு (LPF), எண். 91/72, தாமஸ் காலனி, S.S. காலனி அஞ்சல், மதுரை-625 016. | உறுப்பினர் |
| 2. | திருமதி. ரா. மணிமேகலை, க/பெ. ராஜா தம்பிதுரை, சென்னை மற்றும் புறநகர் வீட்டுப் பணியாளர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) எண். 52, குக்ஸ் சாலை, ஓட்டேரி, பெரம்பூர் சென்னை-600 012. | உறுப்பினர் |
| 3. | திருமதி. வஹிதா நிஜாம், த/பெ. சையத் இஸ்மாயில், தமிழ்நாடு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITCU) வீட்டுப் பணியாளர் சங்கம், அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் (AITCU) எண். 55A, முதல் குறுக்குக் தெரு, அனைத்திந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் (AIBEA) நகர், திருவான்மியூர், சென்னை-600 041. | உறுப்பினர் |
| 4. | திரு. கோ. மனோகரன், த/பெ. R. கோவிந்தராஜ், ஹிந்த் மஸ்தூர் சபா (HMS), எண். 22/2, திருச்சி சாலை, கோயம்புத்தூர்-641 005. | உறுப்பினர் |
| 5. | அருட்சகோதரி மு. ஜோசபின் அமலா வளர்மதி, த/பெ முத்து, தேசிய வீட்டுப் பணியாளர்கள் இயக்கம், எண். 607, வாசு பிளாக், சித்ரா அவென்யூ, சூளைமேடு, சென்னை-600 094. | உறுப்பினர் |
[அரசாணை (நிலை) எண். 27, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1 )த் துறை, 13 மாா்ச் 2024.] 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்:-
திருத்தம்
மேற்சொன்ன திட்டத்தில், 17-B பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களக்கு அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவு வழங்குதல் "என்ற சொற்றொடருக்கு பதிலாக 17-BB பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் கட்டணமின்றி உணவு வழங்குதல்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்படவேண்டும்.
குமார் ஜெயந்த்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்) ந. அருள்,ந. அருள்,
இயக்குநர், (மொ.பெ) (கூ.பொ)
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.