© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2024 [விலை: ரூ. 6. 40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 22] சென்னை, புதன்கிழமை, மே 29, 2024 வைகாசி 16, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 7 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 12/ 2024.
ஓர் ஆணையத்திடம் அதிகாரம் அளிக்கப்பெற்ற அல்லது ஒப்படைக்கப்பட்ட
நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மை
ஆகியவற்றிற்காக அந்த ஆணையத்தை நிறுவுவதற்காகவும் மற்றும் அதனுடன்
தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்காகவும்
வகை செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில், தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் – I.
குறுந்தலைப்பு,
முன்னுரை.
1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்
அளாவுகை மற்றும் தொடக்கம்.
ஆணையச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. இந்தச் சட்டத்தில், தருவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,- பொருள்
வரையறைகள்.
(a) "அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்" என்பது 26 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின்கீழ் ஆணையத்தால் ஒரு நெடுஞ்சாலை ஒப்படைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு
எதுவும் அல்லது பிற நிறுவனம் என்று பொருள்படும்;
[1]
22—IV-2-(T-Sup)—12 (b) "ஆணையம்" என்பது 3 ஆம் பிரிவின்கீழ் நிறுவப்பெற்ற தமிழ்நாடு
மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்று பொருள்படும்;
(c) "தலைமையாளர்" என்பவர் ஆணையத்தின் தலைமையாளர் ஆவார்;
(d) "பணியாளர்" என்பவர் ஆணையத்தின் முழுநேர வழக்கமான பணியில்
இருக்கும் நபர் ஆவார்;
(e) "நிதியம்" என்பது 15 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ்
அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய நிதியம் என்று
பொருள்படும்;
(f) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(g) "நெடுஞ்சாலை" என்பது 9 ஆம் பிரிவின்கீழ் ஆணையத்திடம் அதிகாரம்
அளிக்கப்பெற்ற, அல்லது ஒப்படைக்கப்பட்ட, நெடுஞ்சாலை எதுவும் அல்லது அதன்
விரிவாக்கம் எதுவும் என்று பொருள்படும்;
(h) "அலுவலர்" என்பவர் ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள
ஆணையத்தின் ஓர் அலுவலர் ஆவார்;
(i) "உறுப்பினர்" என்பவர் ஆணையத்தின் ஓர் உறுப்பினர் ஆவார், இதில்
தலைமையாளரும் உள்ளடங்குவார்;
(j) "வகுத்துரைக்கப்பட்டது" என்பது இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட
விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;
(k) "ஒழுங்குமுறை விதிகள்" என்பது இந்தச் சட்டத்தின்கீழ் ஆணையத்தால்
ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் என்று பொருள்படும்;
(l) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;
தமிழ்நாடு (m) இதில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பொருள் வரையறை செய்யப்படாத,
ஆனால் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில் பொருள் வரையறை
சட்டம் 34/2002.
செய்யப்பட்டுள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்கள், அந்தச் சட்டத்தில் அவற்றிற்கு
முறையே குறித்தொதுக்கப்பட்ட பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
அத்தியாயம் – II.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம்.
தமிழ்நாடு மாநில
3. (1) அரசு, அறிவிக்கையின் வாயிலாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்
நெடுஞ்சாலைகள்
ஆணையம் என்று அழைக்கப்படும் ஓர் ஆணையத்தை, இந்தச் சட்டத்தின்கீழ் அதற்கு
ஆணையத்தை
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்துவதற்கும், அதற்கு குறித்தளிக்கப்பட்ட
நிறுவுதல்.
செயற்பணிகளை புரிவதற்கும் நிறுவலாம்.
(2) ஆணையமானது, மேற்கூறப்பட்ட பெயரால், தொடர்ந்திருக்கும் வழியுரிமையையும்,
பொதுவான இலச்சினையையும் கொண்டிருக்கும் ஒரு கூட்டமைப்பாக இருத்தல்
வேண்டும். இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஆணையமானது அசையும்
மற்றும் அசையாச் சொத்து இரண்டையும் கையகப்படுத்தவும், வைத்திருக்கவும், முடிவு
செய்யவும் மற்றும் ஒப்பந்தம் செய்யவும் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும்
கூறப்பட்ட பெயரால் வழக்கிட வேண்டும் அல்லது வழக்கிடப்படுதல் வேண்டும்.
3(3) ஆணையமானது, தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் வாயிலாக, அரசால்
நியமனம் செய்யப்படும்,-—
(i) ஒரு தலைமையாளர்;
(ii) மூன்று முழுநேர உறுப்பினர்கள்; மற்றும்
(iii) மூன்று பகுதிநேர உறுப்பினர்கள்,
ஆகியோர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(4) தலைமையாளர் மற்றும் உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.
4. (1) உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் பிற பணி நிபந்தனைகள்
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் இருத்தல் வேண்டும்.
உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் பணி நிபந்தனைகள்.
(2) நபர் எவரும் அறுபத்து இரண்டு வயதினை நிறைவெய்திய பிறகு உறுப்பினராக
நியமனம் செய்யப்படுதல் கூடாது அல்லது அறுபத்தைந்து வயதினை நிறைவெய்திய பிறகு
அத்தகைய பதவியில் பணியாற்றுதல் கூடாது.
(3) அரசு, தன்விருப்புரிமையின் பேரில், எந்நேரத்திலும் மூன்று மாத அறிவிப்பு
அல்லது அதற்குப் பதிலாக ஊதியம் மற்றும் படிகள் வழங்குவதன் மூலம் உறுப்பினர்
எவரின் பதவிக்காலத்தையும் முடித்து வைக்கலாம்.
(4) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்
உட்பட்டு, ஓர் உறுப்பினராக இருப்பது அற்றுப்போன எந்தவொரு நபரும், ஓர் உறுப்பினராக
மறுநியமனத்திற்கு தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
5. ஒரு நபர்,--
(a) அரசின் கருத்தில், ஒழுக்கக்கேட்டினை உள்ளடக்கியதற்கான ஒரு
குற்றத்திற்கு குற்றத்தீர்ப்பு அளிக்கப்பெற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பாராயின்;
ஓர் உறுப்பினராக நியமனஞ்- செய்யப்படு வதற்கான தகுதிக் கேடுகள்.
(b) விடுவிப்புப் பெறாத நொடித்தநிலையராக இருப்பாராயின்;
(c) மனச்சீர்கேடு உடையவராகவும் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் அவ்வாறு
விளம்புகை செய்யப்பட்டிருப்பாராயின்;
(d) மைய அல்லது மாநில அரசு எதனின் அல்லது அத்தகைய அரசுக்கு
சொந்தமான அல்லது அதனால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கழகம் அல்லது பொதுத்துறை
நிறுவனத்திலிருந்து பணியறவு அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பாராயின்; அல்லது
(e) அரசின் கருத்தின்படி, ஓர் உறுப்பினராக செயற்பணிகள் ஆற்றுவது
குந்தகமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவாறு, ஆணையத்தில் அத்தகைய நிதிசார் அல்லது
பிற நலன் கொண்டிருப்பாராயின்,
அத்தகைய நபர், ஓர் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதிக்கேடுடையவர்
ஆவார்.
6. (1) ஆணையமானது, ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்படலாகிறவாறு, ஆணையத்தின் கூட்டங்கள்.
அத்தகைய நேரங்களிலும் அத்தகைய இடங்களிலும் கூடுதல் வேண்டும் மற்றும் அதன்
குறைவெண் உள்ளடங்கலாக, அதன் கூட்டங்களில் அதன் அலுவல் நடவடிக்கைகளை
கட்டுப்படுத்தும் அத்தகைய நெறிமுறை விதிகளைப் பின்பற்றுதலும் வேண்டும்.
4(2) தலைமையாளர், ஏதேனும் காரணத்திற்காக, ஆணையத்தின் ஒரு கூட்டத்தில்
கலந்துகொள்ள முடியாதிருப்பாராயின், கூட்டத்திற்கு வருகைபுரிந்துள்ள உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படும் பிற உறுப்பினர் எவரேனும் கூட்டத்திற்கு தலைமை வகித்தல்
வேண்டும்.
(3) ஆணையத்தின் முடிவிற்காக அதன் கூட்டங்கள் எதனிலும் முன்வைக்கப்பட்ட
அனைத்து பொருட்பாடுகளும், வருகைதந்து வாக்களிக்கும் உறுப்பினர்களின்
பெரும்பான்மை வாக்குகளால் முடிவு செய்யப்படுதல் வேண்டும். வாக்குகள் சமமான
எண்ணிக்கையில் இருக்கும் நேர்வில், தலைமையாளர் அல்லது அவரது வாராமையின்
போது, கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் உறுப்பினர், இரண்டாவது அல்லது அறுதி
செய்யும் வாக்கினைக் கொண்டிருத்தலும், செலுத்துதலும் வேண்டும்.
ஆணையத்
7. ஆணையத்தின் எந்தவொரு செயலும் அல்லது நடவடிக்கைகளும்,--
திலுள்ள
காலியிடம்
(a) ஆணையத்தின் கட்டமைப்பில் காலியிடம் எதனின் அல்லது குறைபாடு
எதுவும் அதன்
எதனின்;
நடவடிக்கைகளை
செல்லத்-
(b) ஆணையத்தின் ஓர் உறுப்பினரின் நியமனத்தில் உள்ள குறைபாடு
தகாததாக
எதனின்;
ஆக்குதல்
கூடாது.
(c) வழக்கின் தகுதிப்பாடுகளை பாதிக்காத வகையில், ஆணையத்தால்
பின்பற்றப்படும் நெறிமுறையில் ஒழுங்கின்மை எதனின்,
காரணத்தினால் மட்டுமே செல்லத்தகாததாக ஆக்கப்படுதல் கூடாது.
ஆணையத்தின்
8. (1) ஆணையம், அதன் செயற்பணிகளை ஆற்றும் நோக்கத்திற்காக, ஒழுங்குமுறை
அலுவலர்கள்,
விதிகளில் குறித்துரைக்கப்படலாகிற அத்தகைய நெறிமுறைகள் மற்றும் வரையறைகளின்
ஆலோசகர்கள்
பேரில் அது தேவையெனக் கருதலாகிறவாறு அத்தகைய எண்ணிக்கையிலான
மற்றும் பிற
அலுவலர்களையும், பிற பணியாளர்களையும் நியமனம் செய்யலாம்.
பணியாளர்களின்
நியமனம்.
(2) ஆணையம், ஒழுங்குமுறைவிதிகளில் குறித்துரைக்கப்படலாகிற அத்தகைய
நெறிமுறைகள் மற்றும் வரையறைகளின் பேரில் அது தேவையெனக் கருதலாகிறவாறு,
அவ்வப்போது, எந்தவொரு நபரையும் ஆலோசகராக அல்லது அறிவுரையாளராக நியமனம்
செய்யலாம்.
அத்தியாயம் – III.
சொத்து மற்றும் ஒப்பந்தங்கள்.
ஆணையத்திடம்
தமிழ்நாடு சட்டம் 9. அரசு, இந்தச் சட்டத்தின் அனைத்து அல்லது ஏதேனும் நோக்கங்களுக்காக,
எந்தவொரு
34/2002.
அவ்வப்போது, அறிவிக்கையின்வழி 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள்
நெடுஞ்சாலை
சட்டத்தின் 3 ஆம் பிரிவின்படி அத்தகையவாறு விளம்புகை செய்யப்பட்ட எந்தவொரு
யையும்
நெடுஞ்சாலையையும் ஆணையத்திடம் அதிகாரம் அளிக்கலாம் அல்லது அதனிடம்
அதிகாரம்
அளிக்க
ஒப்படைவு செய்யலாம்.
அல்லது
ஒப்படைவு
செய்வதற்கான
அரசின்
அதிகாரங்கள்.
5அரசின் 10. (1) ஒரு நெடுஞ்சாலையைப் பொறுத்து, 9 ஆம் பிரிவின்கீழ் அறிவிக்கை
சொத்திருப்பு வெளியிடப்பட்ட தேதியன்றும் அதுமுதலும்—
மற்றும்
கடப்பாடுகளை (a) அந்த நெடுஞ்சாலையின் நோக்கங்களுக்காக அல்லது அது
ஆணையத்திற்கு தொடர்பாக அத்தகைய தேதிக்கு உடனடியாக முன்பு அரசால், அரசுடன் அல்லது
உரிமை மாற்றம் அரசிற்கு நேர்ந்த அனைத்து கடன்கள், கடமைப் பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகள், செய்தல்.
மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் செய்யப்படுவதற்காக ஈடுபட்ட
அனைத்து பொருட்பாடுகள் மற்றும் செயல்களானது ஆணையத்தால், ஆணையத்துடன்
அல்லது ஆணையத்திற்கு நேர்ந்ததாக, மேற்கொள்ளப்பட்டதாக அல்லது செய்யப்பட
ஈடுபட்டதாக கருதப்படுதல் வேண்டும்;
(b) அத்தகைய தேதி வரை அந்த நெடுஞ்சாலைக்காக, அல்லது அதன்
நோக்கங்கள் தொடர்பாகவும் மற்றும் அரசால் மூலதன செலவினமாக அறிவிக்கப்பட்டதுமான,
அரசுக்கு நேர்ந்த அனைத்து தொடராத – செலவினங்களும், வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய நெறிமுறைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு, ஆணையத்திற்கு அரசால்
வழங்கப்பட்ட மூலதனமாக கருதப்படுதல் வேண்டும்;
(c) அத்தகைய தேதிக்கு உடனடியாக முன்பு அந்த நெடுஞ்சாலை
தொடர்பாக அரசுக்கு நிலுவையாக உள்ள அனைத்து பணத்தொகைகளும் ஆணையத்திற்கு
நிலுவையாக உள்ளதாக கருதப்படுதல் வேண்டும்;
(d) அத்தகைய தேதிக்கு உடனடியாக முன்பு அந்த நெடுஞ்சாலை
தொடர்பான பொருட்பாடு எதற்காகவும் அரசால் அல்லது அதற்கெதிராக தொடுக்கப்பட்ட
அல்லது தொடுக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்து உரிமை வழக்குகளும் பிற சட்டமுறை
நடவடிக்கைகளும் ஆணையத்தால் அல்லது அதற்கெதிராக தொடரப்படலாம் அல்லது
தொடுக்கப்படலாம்.
(2) ஆணையத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்ட அரசின் சொத்திருப்புகள்,
உரிமைகள் அல்லது கடப்பாடுகள் பொறுத்து ஏதேனும் பூசல் எழுமாயின், அத்தகைய பூசல்
அரசால் முடிவு செய்யப்படுதல் வேண்டும்.
ஆணையத்திற்காக 11. இந்தச் சட்டத்தின் படியான செயற்பணிகளை ஆற்றுவதற்கு ஆணையத்திற்கு
தமிழ்நாடு
தேவைப்படலாகும் எந்தவொரு நிலமும், 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள்
சட்டத்தின் 15 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்கு
நிலத்தை கையகப்ப டுத்துதல்.
சட்டம் 34/2002
தேவைப்படும் நிலமாக கருதப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய நிலமானது கூறப்பட்ட
சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் ஆணையத்திற்காக கையகப்படுத்தப்படலாம்.
12. (1) (2) முதல் (4) ஆம் உட்பிரிவுகளுக்கு உட்பட்டு, ஒழுங்குமுறைவிதிகளில்
குறித்துரைக்கப்படலாகிற அத்தகைய படிவத்திலும் முறையிலும், இந்தச் சட்டத்தின்
ஆணையத்தால் செய்யப்படும் ஒப்பந்தங்கள்.
படியான செயற்பணிகளை ஆற்றுவதற்கு தேவைப்படலாகும் எந்தவொரு ஒப்பந்தத்தை
மேற்கொள்வதற்கும், புரிவதற்கும் ஆணையம் தகுதிறம் கொண்டிருத்தல் வேண்டும்.
(2) ஆணையத்தால் இதன் பொருட்டு பொதுவாக அல்லது குறிப்பாக
அதிகாரமளிக்கப்படலாகிறவாறு, ஆணையத்தின் தலைமையாளர் அல்லது அத்தகைய
பிற உறுப்பினர் அல்லது அத்தகைய அலுவலரால் ஆணையத்தின் சார்பாக ஒவ்வொரு
ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
(3) ஒழுங்குமுறைவிதிகளில் குறித்துரைக்கப்படலாகிற அத்தகைய ஒப்பந்தங்கள்
அல்லது ஒப்பந்தங்களின் வகைகள் ஆணையத்தின் பொது இலச்சினையால் இடப்படுதல்
வேண்டும்.
(4) அரசு வகுத்துரைக்கலாகும் அத்தகைய மதிப்பு அல்லது தொகையை மிஞ்சும்
எந்தவொரு ஒப்பந்தமும், அரசின் முன் ஒப்பளிப்பைப் பெற்ற பின்னரே செய்யப்படுதல்
வேண்டும்.
6அத்தியாயம் – IV.
ஆணையத்தின் செயற்பணிகள்.
ஆணையத்தின்
13. (1) இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு, 9 ஆம் பிரிவின்கீழ்
செயற்பணிகள்.
வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறு, ஆணையமானது, ஒரு
நெடுஞ்சாலையை நேர்விற்கேற்ப, கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு அல்லது மேலாண்மை
போன்றவற்றை செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் பொதுப்பங்கிற்கு குந்தகமின்றி, ஆணையமானது,--
(a) அதன் நோக்கங்களை எய்துவதற்காக மற்றவற்றிற்கிடையில்,--
(i) நெடுஞ்சாலையை பராமரிப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும்
உடனடியாக மற்றும் நீண்டகால திட்டங்களை தயாரிக்கலாம்;
(ii) பராமரிப்புச் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்கு ஓர்
அறவியல்சார் தள மேலாண்மை முறையை உருவாக்கலாம்;
(iii) நெடுஞ்சாலையின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கு
தரநிலைகளை வகுக்கலாம்;
(iv) சாலைத் துறைக்கு பன்னாட்டு நிதியளிப்பு உள்ளடங்கலாக
தனியார் மற்றும் நிறுவனம் சார்ந்த நிதியை கொண்டு வருதற்கு
மாதிரிகளை உருவாக்கலாம்;
(v) தரமான தனியார் ஒப்பந்ததாரர்களால் நெடுஞ்சாலைகளின்
பராமரிப்பிற்கு செயல்திறன் சார்ந்த பராமரிப்பு முறைகளுக்கு
வழிமுறைகளை உருவாக்கலாம்;
(vi) நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்துதலை
மேற்கொள்வதற்கு நிறுவனம் சார்ந்த வளங்களை திரட்டலாம்;
(vii) தனியார் கூட்டாண்மையையும் இந்த நோக்கங்களுக்கான
வளங்களையும் ஊக்குவிப்பதன் மூலம் நெடுஞ்சாலையை
பராமரித்து தரம் உயர்த்தலாம்;
(b) எந்தவொரு நெடுஞ்சாலையையும் அல்லது அதனை ஒட்டியவாறான
நிலங்களையும் அளவீடு செய்யலாம்;
தமிழ்நாடு (c) அலுவலகங்கள், தொழிற்கூடங்கள், சாலையோர வசதிகள், நகரியங்கள்,
சட்டம் சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அல்லது பண்டகச் சாலைகளை கட்டுமானம்
34/2002.
செய்யலாம் மற்றும் உணவகங்கள், பெருவழி சாலையோர உணவகங்கள், சிற்றுண்டிச்
சாலைகள் முதலானவைகளை எந்தவொரு நெடுஞ்சாலையிலோ அல்லது அதன் அருகிலோ
மற்றும் அரசின் முன் ஒப்புதலுடன் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள்
சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் அவ்வாறு விளம்புகை செய்யப்பட்ட பிற ஏதேனும்
நெடுஞ்சாலையிலோ அல்லது அதன் அருகிலோ நிறுவலாம் மற்றும் பராமரிக்கலாம்;
(d) அதன் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டடங்கள், மற்றும் நகரியங்களை
கட்டுமானம் செய்யலாம்;
(e) எந்தவொரு நெடுஞ்சாலையிலும் அதனின் முறையான மேலாண்மைக்காக
ஊர்திகளை இயக்குவதை ஒழுங்குபடுத்தலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்;
7(f) இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆலோசனை மற்றும் கட்டுமான சேவைகளை
உருவாக்கலாம் மற்றும் வழங்கலாம்;
(g) நெடுஞ்சாலைகள் அல்லது அதன் வசதிகள் எதனின் கட்டுமானம், பராமரிப்பு,
மேம்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பாக ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்;
(h) ஆணையத்தின் கருத்தில் உள்ளவாறு, அத்தகைய நெடுஞ்சாலையில்
போக்குவரத்து சீராக நடைபெறுவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் வாய்ப்பு நலங்களை
நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்களுக்கு வழங்கலாம்;
(i) அரசுக்கு சொந்தமான அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு
கூட்டுருமக் குழுமத்திடம் அதன் எந்தவொரு செயற்பணிகளிலும் ஈடுபடுத்தலாம் அல்லது
ஒப்படைவு செய்யலாம்;
(j) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் ஒரு நெடுஞ்சாலையின் பயன்பாடு
தொடர்புடையதான செய்யப்பட்ட சேவைகள் அல்லது வழங்கப்பட்ட நலன்களுக்கு
வகுத்துரைக்கப்படலாகும் சுங்கவரி, மேம்பாட்டு கட்டணங்கள் மற்றும் பயன்பாட்டாளர்
கட்டணங்கள் அல்லது பிற கட்டணங்கள் எதனையும் வசூலிக்கலாம்;
மையச் சட்டம்
(k) 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
18/2013.
நிறுமங்களை உருவாக்கலாம்; மற்றும்
(l) இந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அல்லது குறித்தளிக்கப்பட்ட எந்தவொரு
அதிகாரத்தைச் செலுத்துவதற்கும் அல்லது எந்தவொரு செயற்பணியை ஆற்றுவதற்கும்
தேவைப்படலாகும் அல்லது ஏற்றதான அல்லது இடைநிகழ்வான அத்தகைய அனைத்து
நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.
(3) இந்தப் பிரிவில் உள்ளடங்கியுள்ள எதுவும்—
(a) தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தையும் ஆணையத்தால்
புறக்கணிப்பதை அங்கீகரிப்பதாகவோ; அல்லது
(b) ஆணையம் அல்லது அதன் அலுவலர்கள் அல்லது பிற பணியாளர்கள்
இந்தச் சட்டத்தின்கீழ் பிறவாறு உட்பட்டிராத ஒரு கடமை அல்லது கடப்பாடு பொறுத்து
நடவடிக்கை எதுவும் தொடர்வதற்கு நபர் எவருக்கும் அதிகாரம் அளிப்பதாகவோ,
பொருள் கொள்ளப்படுதல் கூடாது.
அத்தியாயம் – V.
நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை.
ஆணையத்திற்கு 14. சட்டத்தால், மாநில சட்டமன்றப் பேரவையினால் செய்யப்பட்ட உரிய நிதி
அரசால் ஒதுக்கீட்டிற்குப் பின்பு அரசு இதன் பொருட்டு,--
வழங்கப்படும்
கூடுதல் (a) அரசு தீர்மானிக்கலாகிற அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின்
மூலதனம் பேரில் இந்தச் சட்டத்தின்கீழ் அதன் செயற்பணிகளை ஆற்றுவதற்காக அல்லது அதனுடன்
மற்றும் தொடர்புடைய ஏதேனும் நோக்கத்திற்காக ஆணையத்தால் வேண்டுறுத்தப்படலாகிறவாறு மானியங்கள்.
எந்தவொரு மூலதனத்தையும் வழங்கலாம்; மற்றும்
(b) இந்தச் சட்டத்தின்கீழ் அதன் செயற்பணிகளை திறம்பட ஆற்றுவதற்காக,
அரசு, தேவையெனக் கருதலாகும் அத்தகைய பணத்தொகைகளை கடன்கள் அல்லது
மானியங்களின் வாயிலாக அரசு தீர்மானிக்கலாகிறவாறான அத்தகைய வரையறைகள்
மற்றும் நிபந்தனைகளின் பேரில் ஆணையத்திற்குச் செலுத்தலாம்;
8ஆணையத்தின்
15. (1) தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணைய நிதியம் என்று அழைக்கப்படும்
நிதியம்.
ஒரு நிதியம் அமைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அதில்,--
(a) ஆணையத்தால் பெறப்படும் எந்தவொரு மானியம் அல்லது கொடையும்;
(b) ஆணையத்தால் பெறப்பட்ட எந்தவொரு கடன் அல்லது அதனால்
செய்யப்பட்ட கடன் பெறுதல்களும்;
(c) ஆணையத்தால் வசூலிக்கப்பட்ட சுங்கவரி, மேம்பாட்டுக் கட்டணங்கள்,
பயன்பாட்டாளர் கட்டணங்கள் மற்றும் ஏதேனும் பிற கட்டணங்களும்;
(d) ஆணையத்தால் பெறப்படும் ஏதேனும் பிற கட்டணங்களும்;
வரவு வைக்கப்படுதல் வேண்டும்.
(2) அந்த நிதியம்,--
(a) எந்த நோக்கங்களுக்காக அத்தகைய மானியங்கள், கடன்கள் அல்லது கடன்
பெறுதல்கள் பெறப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக மற்றும் அதனோடு தொடர்புடைய
அல்லது அதனுடன் இடைவிளைவான பொருட்பாடுகளை கவனத்தில் கொண்டும் அதன்
செயற்பணிகளை ஆற்றுகையில் ஆணையத்திற்கு ஏற்பட்ட செலவினங்களையும்;
(b) ஆணையத்தின் உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு
வழங்கப்பட்ட ஊதியம், படித்தொகைகள் மற்றும் மதிப்பூதியத்தின் செலுத்தத்தையும்;
(c) ஆணையத்தால் ஈடுபடுத்தப்பட்ட ஆலோசகர்களுக்கும்,
அறிவுரையாளர்களுக்கும் செய்யப்பட வேண்டிய செலுத்தங்களையும்; மற்றும்
(d) இந்தச் சட்டத்தினால் அதிகாரமளிக்கப்படும் குறிக்கோள்கள் மீதும் மற்றும்
நோக்கங்களின் செலவினங்களையும்,
எதிர்கொள்வதற்கு பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
வரவு செலவுத்
16. ஆணையமானது, ஆணையத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட வரவுகள் மற்றும்
திட்டம்.
செலவினங்கள் கொண்ட, அதன் வரவு செலவுத் திட்டத்தை வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய படிவத்திலும் அத்தகைய நேரத்திலும் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் தயார்
செய்தலும் அதனை அரசுக்கு அனுப்புதலும் வேண்டும்.
நிதியங்களின்
17. ஆணையம், ஏதேனும் இருப்பு நிதி உள்ளடங்கலான அதன் நிதிகளை அரசுப்
மூதலீடு.
பத்திரங்களில் அல்லது வகுத்துரைக்கப்படலாகிற அத்தகைய பிற முறையில் முதலீடு
செய்யலாம்.
ஆணையத்தின்
18. (1) ஆணையம், அரசின் இசைவுடன் அல்லது அதற்கு அரசால் அளிக்கப்பட்டுள்ள
கடன்
ஏதேனும் பொது அல்லது சிறப்பு அதிகாரத்தின் வரையறைகளுக்கு இணங்க,
பெறுதலுக்கான
இந்தச் சட்டத்தின் படியான அதன் அனைத்து அல்லது ஏதேனும் செயற்பணிகளை
அதிகாரம்.
ஆற்றுவதற்கு அது தேவையெனக் கருதலாகிறவாறு, பத்திரங்கள், கடனீட்டுப் பத்திரங்கள்
அல்லது அத்தகைய பிற முறையாவணங்கள் வழங்குவதன் மூலம் எந்தவொரு நிதி
ஆதாரத்திலிருந்தும் பணம் கடன் பெறலாம்.
(2) ஆணையம், இந்தச் சட்டத்தின் கீழ் அதன் அனைத்து அல்லது ஏதேனும்
செயற்பணிகளை ஆற்றுவதற்கு அரசு வகுத்துரைக்கலாகும் அத்தகைய வரம்புகளுக்கு
உட்பட்டு, அதற்கு தேவைப்படலாகும் அத்தகைய தொகைகளை மிகைப்பற்றின் மூலம்
அல்லது பிறவாறாக தற்காலிகமாக கடன் பெறலாம்.
9(3) (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையத்தால் செய்யப்பட்ட கடன் பெறுதல்களைப்
பொறுத்து, அசல் தொகையின் திரும்பச் செலுத்தம் மற்றும் அதன் வட்டி செலுத்தத்திற்கு,
அரசு, அது தக்கதெனக் கருதும் அத்தகைய முறையில், பொறுப்புறுதி அளிக்கலாம்.
ஆண்டறிக்கை.
19. ஆணையமானது, ஒவ்வொரு நிதியாண்டின் போதும், அதன் நடவடிக்கைகளின்
முழு கணக்கு விபரம் அடங்கிய அதன் ஆண்டறிக்கையை வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய படிவத்திலும் அத்தகைய காலத்திலும் தயார் செய்தல் வேண்டும் மற்றும் அதன்
படியொன்று அரசிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
20. ஆணையத்தின் கணக்குகளானது, மாநிலத் கணக்காய்வுத் தலைவருடன்
கலந்தாலோசித்து தணிக்கை செய்யப்பட்டு பேணிவரப்படுதல் வேண்டும் மற்றும்
கணக்குகள் மற்றும் தணிக்கை.
தணிக்கையாளரின் அறிக்கையுடன் சேர்த்து தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின்
படியானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் அத்தகைய தேதிக்கு
முன்பும் அரசிடம் அளிக்கப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் – VI.
பல்வகை
21. ஆணையமானது, 30-ஆம் பிரிவின்கீழ் ஒழுங்குமுறை விதிகளைச்
செய்வதற்கான அதன் அதிகாரங்களைத் தவிர, அது தேவையெனக் கருதலாகும் இந்தச்
அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.
சட்டத்தின்படியான அதன் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள் எதனையும், அந்த
ஆணையில் குறித்துரைக்கப்படலாகும் நிபந்தனைகள் மற்றும் வரம்புகள் ஏதேனுமிருப்பின்
அ்வற்றிற்கு உட்பட்டு, ஆணையத்தின் தலைவருக்கு அல்லது பிற உறுப்பினர் எவருக்கும்
அல்லது அலுவலர் எவருக்கும் எழுத்துருவிலான பொதுவான அல்லது சிறப்பு ஆணையின்
மூலமாக ஒப்படைவு செய்யலாம்.
22. ஆணையத்தின் ஆணைகள், முடிவுகள் மற்றும் பிற முறையாவணங்கள்
அனைத்தும், தலைமையாளரின் அல்லது பிற உறுப்பினர் எவரின் அல்லது இதன்பொருட்டு
ஆணையத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலுவலர் எவரின் கையொப்பம் மூலமாக
சான்றளிக்கப்படுதல் வேண்டும்.
ஆணையத்தின் ஆணைகள் மற்றும் பிற முறையா வணங்களை சான்றளித்தல்.
மையச் சட்டம்
ஆணையத்தின் 23. இந்தச் சட்டத்தின்படி, செயல்படுகின்ற அல்லது செயல்படுவதாகப் புலப்படுகின்ற
XLV/1860.
ஆணையத்தின் உறுப்பினர், அலுவலர் மற்றும் பணியாளர் ஒவ்வொருவரும், இந்தியத்
தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் பொருளின்படி ஒரு பொது
ஊழியராகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது ஊழியர்களாக இருத்தல்.
24. இந்தச் சட்டம், விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகளின் கீழ் அலுவலக
செயற்பணிகளை ஆற்றுகையில் அல்லது அதிகாரங்களைச் செலுத்துகையில்,
நல்லெண்ணத்தில் அவர்களால் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட செயல்
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
எதையும் பொறுத்து, ஆணையத்தின் உறுப்பினர்கள், அலுவலர்கள் அல்லது பணியாளர்கள்
எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை
எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
குறித்த சில 25. ஆணையமானது, ஆணையம் மற்றும் அரசு மற்றும் அத்தகைய குழுமத்தின்
பணிகளை இடையே ஒப்புக்கொள்ளப்படலாகும் அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின்
மேற்கொள்வதற்கு பேரில் அரசாலோ அல்லது பிற குழுமம் எதனாலுமோ வேண்டப்படலாகும் பிற பணி
ஆணையத்திற்கான அல்லது சேவைகள் எதனின் அல்லது பிற பணிகள் அல்லது சேவைகளின் வகை அதிகாரம்.
எவற்றின் நிறைவேற்றத்தையும் மேற்கொள்ளலாம்.
1026. (1) அரசு, எந்நேரத்திலும், பொது நலனுக்காக அவ்வாறு செய்வது தேவையென
அல்லது உகந்ததெனக் கருதுமாயின், எழுத்துருவில் ஆணை வாயிலாக, நெடுஞ்சாலை
எதனின் கட்டுமானத்தை, மேம்பாட்டை, பராமரிப்பை மற்றும் மேலாண்மையை அந்த
ஆணையில் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய தேதியிலிருந்தும் அத்தகைய
காலஅளவிற்கும் உள்ளாட்சி அமைப்பு எதனிடமும் அல்லது அரசுக்கு சொந்தமான அல்லது
அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனம் எதனிடமும் ஒப்படைக்குமாறு ஆணையத்தைப்
நெடுஞ்சாலை எதனின் ஆணையத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு அரசிற்கான அதிகாரம்.
பணிக்கலாம், மற்றும் ஆணையமானது, அத்தகைய பணிப்புரைக்கு இணங்கி நடக்க
கட்டுப்பட்டதாகும்.
(2) நெடுஞ்சாலை எதனின் கட்டுமானத்தை, மேம்பாட்டை, பராமரிப்பை
மற்றும் மேலாண்மையை (1) ஆம் உட்பிரிவின்கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திடம்
ஆணையத்தால் ஒப்படைக்கப்பட்டிருக்கையில், ஆணையமானது, அத்தகைய
நெடுஞ்சாலையைப் பொறுத்து இந்தச் சட்டத்தின்படியான அதன் அனைத்து
அதிகாரங்களையும் செயற்பணிகளையும் செலுத்துவதும் ஆற்றுவதும் அற்றுப்போதல்
வேண்டும் மற்றும் அரசினால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க
அத்தகைய அதிகாரங்களும் செயற்பணிகளும், அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்தால்
செலுத்தப்படுதலும் ஆற்றப்படுதலும் வேண்டும்:
வரம்புரையாக, அரசு, பொதுவான அல்லது சிறப்பு ஆணையின் வாயிலாக, அந்த
ஆணையில் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகளை,
அரசின் முன்ஒப்புதல் பெற்ற பின்பு மட்டுமே, அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனத்தால்
செலுத்தப்படுதலோ ஆற்றப்படுதலோ வேண்டும்.
(3) அரசானது, எழுத்துருவில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக,
(1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள காலஅளவை அது தேவையெனக் கருதுகிறவாறு
குறைக்கலாம் அல்லது நீட்டிக்கலாம்.
(4) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை ஒன்று செயற்பாட்டில் இருக்கின்றபோது,
அரசானது, நெடுஞ்சாலையின் கட்டுமானம், மேம்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்காக
நிதியத்திலிருந்து அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திற்கு பணத்தொகை எதனையும்
மாற்றியளித்தல் உள்ளடங்கலாக, ஒரு நெடுஞ்சாலையைப் பொறுத்து இந்தச் சட்டத்தின்கீழ்
ஆணையத்தின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும், செயற்பணிகளை ஆற்றுவதற்கும்
அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்தை இயல்விக்கத் தேவைப்படலாகும் அத்தகைய
பணிப்புரைகளை ஆணையத்திற்கு அவ்வப்போது வழங்கலாம் மற்றும் அத்தகைய
பணிப்புரை ஒவ்வொன்றையும் ஆணையமானது இணங்கி நடத்தல் வேண்டும்.
(5) நெடுஞ்சாலை எதனையும் பொறுத்து, (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஓர் ஆணை
அற்றுப்போவதன் பேரில்,--
(a) அத்தகைய நெடுஞ்சாலை பொறுத்து, அதிகாரமளிக்கப்பட்ட
நிறுவனமானது, இந்தச் சட்டத்தின்படியான ஆணையத்தின்
அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகளை செலுத்துவதும் ஆற்றுவதும்
அற்றுப்போதல் வேண்டும்;
(b) அத்தகைய நெடுஞ்சாலை தொடர்பாக அதனிடம் வழங்கப்பட்ட
பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கும் அதிகாரமளிக்கப்பட்ட
நிறுவனமானது, பணத்தொகை எதனையும் அல்லது பிற
சொத்திருப்புகள் உள்ளடங்கலான சொத்து எதனையும் ஆணையத்திடம்
ஒப்படைத்துவிடுதல் வேண்டும்; மற்றும்
(c) அத்தகைய நெடுஞ்சாலை பொறுத்து, இந்தச் சட்டத்தின்
வகைமுறைகளுடன் இணங்கியவாறு, ஆணையமானது அத்தகைய
அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகளை தொடர்ந்து செலுத்துதலும்
ஆற்றுதலும் வேண்டும்.
1127. (1) அரசானது, எந்நேரத்திலும்,--
(a) ஆணையமானது கடுமையான நெருக்கடி நிலையின் காரணத்தால்இந்தச்
சட்டத்தினாலோ அதன் வழியாலோ, ஆணையமானது அதன் மீது
ஆணையத்தை கலைத்துக் கைக்கொள்ள அரசிற்கான அதிகாரம்.
விதிக்கப்பட்ட செயற்பணிகள் மற்றும் கடமைகளை ஆற்றுவதற்கு
இயலாதிருக்கிறது என்று கருதுமாயின்;
(b) இந்தச் சட்டத்தின்கீழ் அரசால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் எதற்கும்
இணங்கி நடக்கவோ அல்லது இந்தச் சட்டத்தினாலோ அல்லது
அதன் வழியாலோ விதிக்கப்பட்ட செயற்பணிகள் மற்றும் கடமைகளை
ஆற்றுவதிலோ ஆணையம் தொடர்ந்து தவறுகை புரிந்துள்ளது எனக்
கருதுமாயின்; அல்லது
(c) பொது நலனுக்காக அவ்வாறு செய்வது தேவையானதென சூழ்நிலை
நிலவுவதாகக் கருதுமாயின், அரசானது, அறிவிக்கையின் வாயிலாக,
அவ்வறிவிக்கையில் குறித்துரைக்கப்படலாகிறவாறு, ஓர் ஆண்டிற்கு
மிகாமல், அத்தகைய காலஅளவிற்கு ஆணையத்தை கலைத்துக்
கைக்கொள்ளலாம் மற்றும் அத்தகைய காலஅளவு முடிவுறுவதன்
பேரில், அரசானது, ஓர் ஆண்டிற்கு மிகாத மற்றொரு காலஅளவிற்கு,
கலைத்துக் கைக்கொள்ளும் காலஅளவை நீட்டிக்கலாம்:
வரம்புரையாக, (b) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக, இந்த
உட்பிரிவின்கீழ் ஓர் அறிவிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, அரசானது, ஆணையத்தை
ஏன் கலைத்துக் கைக்கொள்ளக் கூடாது என்பதற்கான காரணத்தை காட்டுமாறு நியாயமான
வாய்ப்பு ஒன்றினை வழங்குதல் வேண்டும் மற்றும் ஆணையத்தின் விளக்கங்கள் மற்றும்
ஆட்சேபனைகள் எவையேனுமிருப்பின், அவற்றை பரிசீலனை செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணையத்தை கலைத்துக் கைக்கொள்ளும் ஓர்
அறிவிக்கையை வெளியிடுவதன் பேரில்,--
(a) கலைத்துக் கைக்கொள்ளப்படும் தேதியிலிருந்து அனைத்து
உறுப்பினர்களும் அத்தகைய பதவி வகித்தலானது அற்றுபோதல்
வேண்டும்;
(b) இந்தச் சட்டத்தின்கீழ் ஆணையத்தால் செலுத்தப்படக்கூடிய
அல்லது ஆற்றப்படக்கூடிய அதிகாரங்கள், செயற்பணிகள் மற்றும்
கடமைகளானது, அரசு பணிக்கலாகும் அத்தகைய நபர் அல்லது
நபர்களால் செலுத்தப்படுதல் அல்லது ஆற்றப்படுதல் வேண்டும்.
(c) ஆணையத்திற்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள
சொத்தானது, (3) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையம் மறுஅமைப்பாக்கம்
செய்யப்படும் வரை, அரசிடம் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின் கீழ் கலைத்துக் கைக்கொள்ளப்படும் காலஅளவு
அல்லது நீட்டிக்கப்பட்ட காலஅளவு முடிவுறும் தேதியன்றோ அதற்கு முன்னரோ அரசு,
ஆணையத்தை மறுஅமைப்பாக்கம் செய்யலாம். (2) ஆம் உட்பிரிவின் (a) கூறின் கீழ்
தமது பதவியைவிட்டகன்ற நபர் எவரும், உறுப்பினர்களாக மறுஅமர்த்தம் செய்யப்பட
தகுதியுடையவர் ஆதலும் வேண்டும்.
(4) அரசானது, இந்தப் பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனின் மற்றும்
அத்தகைய நடவடிக்கைக்கு காரணமமான சூழ்நிலைகளின் விரிவான அறிக்கையுடன் (1)
அல்லது (3) ஆம் உட்பிரிவுகளின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கையை, கூடிய விரைவில்
சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்படுதல் வேண்டும்.
12பணிப்புரைகள்
28. அரசானது, அவ்வப்பொழுது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக
இல்லாத கொள்கை முடிவுகளின் மீது ஆணையத்திற்கு தான் தக்கதெனக் கருதுகிற
பணிப்புரைகளை வழங்கலாம் மற்றும் அத்தகைய பணிப்புரைகளுக்கு ஆணையமானது
வழங்க அரசுக்கு உள்ள அதிகாரம்.
செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
விதிகளைச்
29. (1) அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது
எதனையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
செய்வதற்கு அரசின் அதிகாரம்.
(2) குறிப்பாகவும், முன் சென்ற அதிகாரத்தின் பொதுப்பங்கிற்கு குந்தகமின்றியும்
அத்தகைய விதிகள், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்குமோ அல்லது அவற்றில்
எவற்றிற்குமோ வகை செய்யலாம், அவையாவன:-
(a) இந்தச் சட்டத்தின்படி வெளிப்படையாக வேண்டுறுத்தப்படும் அல்லது
அனுமதிக்கப்படும் அனைத்து பொருட்பாடுகளும் விதிகளில்
வகுத்துரைக்கப்படுதல்;
(b) உறுப்பினர்களின் பணி நிபந்தனைகள்;
(c) தலைமையாளர் மற்றும் உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும்
கடமைகள்;
(d) எந்த வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நெடுஞ்சாலை
எதனின் நோக்கங்களுடன் தொடர்பாக அல்லது அரசினால் அல்லது
அரசிற்கு ஏற்பட்ட தொடரா செலவினமானது, 10-ஆம் பிரிவின்
(1)-ஆம் உட்பிரிவின் (b) கூறின்படி மூலதன செலவினமாக கருதப்படுதல்
வேண்டுமோ அந்த வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்;
(e) ஆணையமானது, எந்தப் படிவத்தில் மற்றும் எந்த நேரத்தில் 16-ஆம்
பிரிவின் கீழ் வரவு செலவுத் திட்டத்தையும், 19-ஆம் பிரிவின் கீழ்
ஆண்டறிக்கையும் தயாரித்தல் வேண்டுமோ அந்தப் படிவம் மற்றும்
நேரம்;
(f) 17-ஆம் பிரிவின் கீழ் ஆணையம் அதன் நிதிகளை முதலீடு செய்யும்
முறை;
(g) ஆணையத்தின் கணக்குகளானது, பராமரிக்கப்படும் மற்றும் தணிக்கை
செய்யப்படும் முறை மற்றும் 20-ஆம் பிரிவின் கீழ் தணிக்கையாளரின்
அறிக்கையுடன் சேர்த்து தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின்
படியானது எந்தத் தேதிக்கு முன்னர் அரசிடம் அளிக்கப்பட வேண்டுமோ
அந்த தேதி.
(3) இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது வழங்கப்பட்ட
அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும்
அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
13(4) இந்தச் சட்டத்தின் கீழ், செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது
அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர்
கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது
அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு
முன்பு அத்தகைய விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை ஏதொன்றிலும் மாறுதல்
எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அந்த விதி அல்லது ஆணை அல்லது
அறிவிக்கையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல்
வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அறிவிக்கை
அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கு
குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
30. (1) ஆணையமானது, அறிவிக்கையின் மூலம் அரசின் முன் ஒப்புதலுடன் இந்தச்
சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்தச் சட்டத்தின் வகைமுறைகள்
அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு முரணாக இல்லாத ஒழுங்குமுறைவிதிகளை
செய்யலாம்.
ஒழுங்குமுறை விதிகளைச் செய்வதற்கு ஆணையத்தின் அதிகாரம்.
(2) குறிப்பாக, மேற்கூறிய அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு குந்தகமின்றி,--
(a) ஆணையத்தின் கூட்டங்களின் நேரம் மற்றும் இடம் மற்றும் அத்தகைய
கூட்டங்களின் அலுவல் நடவடிக்கைக்காக பின்பற்றப்பட வேண்டிய
நெறிமுறை;
(b) ஆணையத்தின் அலுவலர்கள், ஆலோசகர்கள், அறிவுரையாளர்கள்
மற்றும் பிற பணியாளர்களின் பணி வரையறைகளும் நிபந்தனைகளும்,
ஆளெடுத்தல் முறை மற்றும் மதிப்பூதியம்;
(c) ஆணையத்தால் செய்யப்படும் ஓர் ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தங்களின்
வகையின் படிவம் மற்றும் முறை;
(d) ஆணையத்தின் பொது இலச்சினை ஒட்டப்பட வேண்டிய ஒப்பந்தங்கள்
அல்லது ஒப்பந்தங்களின் வகைகள்;
(e) நெடுஞ்சாலைகள் மீதான இடையூறுகளை தடுக்கும் முறையானது அதன்
சாதாரண செயல்பாட்டிற்காக தடைசெய்யப்படுதல் வேண்டும்;
(f) ஆணையத்தால் குறித்துரைக்கப்பட்ட இடங்களைத் தவிர நெடுஞ்சாலையில்
ஊர்தி அல்லது சரக்கூர்தி எதனையும் நிறுத்துவதை அல்லது
காத்திருக்கச் செய்வதை தடை செய்யும் முறை;
(g) நெடுஞ்சாலையின் பகுதி எதனையும் அணுகுவதை தடைசெய்யும்
அல்லது கட்டுப்படுத்தும் முறை;
(h) நெடுஞ்சாலையின் மீதும் மற்றும் அதனைச் சுற்றியும் விளம்பரங்களை
ஒழுங்குபடுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் முறை;
(i) பொதுவாக நெடுஞ்சாலையின் திறம்பட மற்றும் முறையான பராமரிப்பு
மற்றும் மேலாண்மை செய்வது,
போன்ற அனைத்து அல்லது ஏதேனும் பொருட்பாடுகளுக்கு ஒழுங்குமுறை
விதிகளைச் செய்யலாம்.
14இடர்பாடுகளை
31. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்பாடு ஏதேனும்
நீக்குவதற்கான
எழுமானால், அரசு தமிழ்நாடு அரசிதழில் ஓர் ஆணை வெளியிடுவதன் வாயிலாக, இந்தச்
அதிகாரம்.
சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாமல் அந்த இடர்பாட்டை நீக்குவதற்குத்
தேவையான அல்லது உகந்ததாக அதற்குத் தோன்றுகின்ற, அத்தகைய வகைமுறைகளைச்
செய்யலாம்.
வரம்புரையாக, இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டாண்டு
காலஅளவு முடிவடைந்த பின்னர், அத்தகைய அறிவிக்கை எதுவும் வெளியிடப்படுதல்
கூடாது.
அத்தியாயம் – VII.
ஆணையத்திடம் ஒப்படைவு செய்யப்பட்ட ஒரு நெடுஞ்சாலைக்கு 2001-ஆம் ஆண்டு
தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் பொருந்துகை.
குறித்த சில
32. 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் 8 முதல் 14, 26 முதல்
மாற்றமை-
55, 57 முதல் 61, 63 முதல் 65 மற்றும் 70 ஆம் பிரிவுகள், பின்வரும் மாற்றமைவுகளுக்கு
வுகளுக்கு
உட்பட்டு ஆணையத்திடம் அதிகாரம் அளிக்கப்பட்ட அல்லது ஒப்படைவு செய்யப்பட்ட ஒரு
உட்பட்டு
நெடுஞ்சாலைக்கு "உரிய மாற்றங்களுடன்" பொருந்துதல் வேண்டும், அவையாவன:-
ஆணையத்திற்கு
தமிழ்நாடு
சட்டம்
34/2002-இன்
பொருந்துகை.
(1) 8 ஆம் பிரிவில்,--
(a) (1) ஆம் உட்பிரிவில், "கோட்டம் ஏதொன்றின் நிர்வாகி, அறிவிக்கையின்
மூலம், அந்தக் கோட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை எதன் தொடர்பாகவோ
அல்லது பரப்பிடம் எதன் தொடர்பாகவோ" எனும் சொற்றொடருக்காக,
"ஆணையம் அறிவிக்கையின் மூலம், நெடுஞ்சாலை எதன்
தொடர்பாகவும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(b) (2) ஆம் உட்பிரிவில், "நிர்வாகி" எனும் சொற்றொடருக்காக,
"ஆணையம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(c) (3) ஆம் உட்பிரிவில், "நிர்வாகி, மாநில தலைமை நிர்வாகியின்
ஒப்புதல் பெற்று" எனும் சொற்றொடருக்காக, "ஆணையம்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(d) (4) ஆம் உட்பிரிவில், "மாநில தலைமை நிர்வாகி" எனும்
சொற்றொடருக்காக, "ஆணையம்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) 9, 11, 12, 14, 26, 27, 28, 30 முதல் 32, 34, 35, 37, 39, 44 முதல் 46, 53,
54 மற்றும் 59 முதல் 61 ஆம் பிரிவுகளில் "மாநில தலைமை நிர்வாகி" மற்றும் "நிர்வாகி"
எனும் சொற்றொடர்களுக்காக, அவை காணப்படுகின்ற இடங்களில் "ஆணையம்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
15(3) 13 ஆம் பிரிவில்,--
(a) (1) ஆம் உட்பிரிவில், "ஒவ்வொரு கோட்டத்தின் நிர்வாகி" மற்றும்
"அந்தக் கோட்டத்தின்" எனும் சொற்றொடர்களுக்காக, முறையே
"ஆணையம்" மற்றும் "அந்தப் பரப்பிடம்" எனும் சொற்றொடர்களானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (2) ஆம் உட்பிரிவில் "நிர்வாகி" எனும் சொற்றொடருக்காக, "ஆணையம்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (3) ஆம் உட்பிரிவில்,--
(i) "மாநில தலைமை நிர்வாகியிடம் ஒப்புதல் பெற்ற பின்" எனும்
சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(ii) (a) கூறில், "நிர்வாகி" எனும் சொற்றொடருக்காக, "ஆணையம்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4) 33, 41 மற்றும் 43 ஆம் பிரிவுகளில் "நிர்வாகி" மற்றும் "மாநில தலைமை
நிர்வாகி" எனும் சொற்றொடர்களுக்காக, அவை காணப்படும் இடங்களில் முறையே
"ஆணையம்" மற்றும் "அரசு" எனும் சொற்றொடர்களானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
(5) 42 ஆம் பிரிவில், "அவரின் கோட்டத்திலுள்ள எந்தவொரு நெடுஞ்சாலையிலும்
நிர்வாகி", எனும் சொற்றொடருக்காக, "எந்தவொரு நெடுஞ்சாலையிலும் ஆணையம்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(6) 47 ஆம் பிரிவில்,
(i) (b) கூறிற்குப் பின்னர், "அல்லது" எனும் சொற்றொடரானது
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(ii) (c) கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(7) 55-ஆம் பிரிவில்,--
(i) (1) ஆம் உட்பிரிவில் "எந்தவொரு ஆணையமும்" எனும்
சொற்றொடருக்காக, "ஆணையம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்,;
(ii) (2) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:--
"(2) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலஅளவு முடிவுற்ற பின்னர் (1)
ஆம் உட்பிரிவின்கீழ் எந்தவொரு விண்ணப்பமும் அரசுக்கு செய்யப்படுதல் கூடாது".
(8) 57-ஆம் பிரிவில், "மாநில தலைமை நிர்வாகிக்கோ அல்லது வேறெந்த
நிர்வாகிக்கோ" எனும் சொற்றொடருக்காக, "ஆணையத்திற்கு" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(9) 58-ஆம் பிரிவில், "மாநில தலைமை நிர்வாகியோ அல்லது வேறெந்த
நிர்வாகியோ" எனும் சொற்றொடருக்காக, "ஆணையம்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
16(10) 63-ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், (a) கூறில், "மாநில தலைமை
நிர்வாகி அல்லது நிர்வாகி அல்லது அலுவலர் அல்லது நபர் எவருக்கும்", எனும்
சொற்றொடருக்காக, "ஆணையம் அல்லது அலுவலர் அல்லது பணியாளர்கள்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப் பிரிவுத்) துறை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச்சட்டம் (தமிழ்நாடு சட்ட எண். 1/2024)
பிழைத்திருத்தம் (ERRATUM)
மார்ச் 13, 2024 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழின் (வெளியீட்டு எண். 11) பகுதி IV - பிரிவு 2-இல் வெளியிடப்பட்டுள்ள, 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச் (தமிழ்நாடு சட்ட எண் 1/2024) சட்டத்திற்கான இணைப்புப் பட்டியலில், பக்கம் 5ல், வரிசை எண்.33 இல் முந்திரிப்பருப்புகள் என்பதற்கு பதிலாக முந்திரிக் கொட்டைகள் என படிக்கப்படுதல் வேண்டும்.
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர், சட்டத்துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.