© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2024 [விலை: ரூ. 10.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 27] சென்னை, புதன்கிழமை, ஜூலை 3, 2024 ஆனி 19, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 4 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 13/ 2024.
1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தை தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருந்தும்
வகையில், மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு, 1. (1) இந்தச் சட்டம், 2023-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச்
அளாவுகை (தமிழ்நாடு திருத்த) சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும்
தொடக்கம்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
மையச் சட்டம்
I-ஆம் இணைப்புப் 2. 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தின் I-ஆம் இணைப்புப் பட்டியலில், -
II/1899.
பட்டியலிற்கான (1) 3-ஆம் உறுப்பில், "நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம்
திருத்தம்.
ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) 4-ஆம் உறுப்பில், "இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "இருநூறு
ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) 5-ஆம் உறுப்பின், கூறு (j)-ல், "இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக,
"இருநூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
27—IV-2-(T-Sup)—1
[1]2 (4) 10-ஆம் உறுப்பிற்கு பதிலாக, பின்வரும் உறுப்பானது அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"10. நிறுமம் ஒன்றின் சங்க ஐந்து இலட்சம் ரூபாய் பெரும அளவு ஒன்றுக்கு
அமைப்பு விதிகள்
உட்பட்ட பங்கு முதலீட்டின் ஒவ்வொரு பத்து
இலட்சம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு
ஐந்நூறு ரூபாய்.
விலக்களிப்பு.- ஆதாயத்திற்காக உருவாக்கப்படாத மற்றும் 2013-ஆம் ஆண்டு
நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செய்யப்பட்ட சங்க அமைப்பு
எதனின் விதிகள்.";
(5) 17-ஆம் உறுப்பில்,-
(a) "சான்றொப்பமிடப்பட்டிருக்குமாயின்" எனும் சொற்றொடருக்குப் பின்பு,
"இது சொத்து பரிமாற்றத்தை உள்ளடக்கி இருப்பினும் அல்லது இல்லாவிடினும்" எனும்
சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(b) "ஐம்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும்
சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(6) 24-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (i)-ல், "ஐந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "நூறு ரூபாய்"
எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு (ii)-ல், "இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக,
"நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(7) 25-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், "இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(8) 35-ஆம் உறுப்பில், கூறுகள் (a), (b) மற்றும் (c) ஆகியவற்றில், "அல்லது
செலுத்தத்தக்க, முன் பணம் ஏதேனும் இருப்பின்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "திரும்பச்
செலுத்தத்தக்க அல்லது செலுத்த இயலாத முன் பணம் அல்லது பிணை வைப்புத்தொகை"
எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(9) 39-ஆம் உறுப்பிற்கு பதிலாக, பின்வரும் உறுப்பானது அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"39. நிறுமம் ஒன்றின் சங்க அமைப்பாவணம் இருநூறு ரூபாய்.
விலக்களிப்பு.- ஆதாயத்திற்காக உருவாக்கப்படாத மற்றும் 2013-ஆம் ஆண்டு
நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செய்யப்பட்ட சங்க அமைப்பு
எதனின் அமைப்பாவணம்.";
(10) 42-ஆம் உறுப்பில், "பத்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக,
"இருபது ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(11) 45-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (b)-ல், "தொகையின் மதிப்பு" எனும் சொற்றொடருக்கு பதிலாக,
"தொகையின் சந்தை மதிப்பு" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) விளக்கத்தில், பின்வரும் சொற்றொடரானது இறுதியாக சேர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"மற்றும் ஓர் இறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுகள் எவரேனும் இருந்தால்,
அவர்களையும் உள்ளடக்குதல் வேண்டும்.";
3(12) 46-ஆம் உறுப்பில்,-
(a) கூறு A-ன், உட்கூறு (b)-ல், "முந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு B-ன், விளக்கத்தில், பின்வரும் சொற்றொடரானது இறுதியாக சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"மற்றும் ஓர் இறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுகள் எவரேனும் இருந்தால், அவர்களையும் உள்ளடக்குதல் வேண்டும்.";
(13) 48-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (a)-ல், "ஐந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு (b)-ல், "பதினைந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) கூறு (c)-ல், "நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(d) கூறு (d)-ல், "நூற்று எழுபத்தைந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(e) கூறு (e)-ல், "மறுபயன் தொகைக்குச் சமமான சந்தை மதிப்பு" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "அசையா சொத்தின் சந்தை மதிப்பு" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(f) கூறு (f)-ற்கு பதிலாக, பின்வரும் கூறுகளானவை அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
ஆயிரம் ரூபாய்.
"(f) மறுபயனில்லாமல் வழங்கப்பட்டு, அசையாச் சொத்து எதனையும் விற்பனை செய்வதற்கு, குடும்ப உறுப்பினராக உள்ள பகராள் ஒருவருக்கு, அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும் போது.
அசையாச் சொத்தின் சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.
(g) மறுபயனில்லாமல் வழங்கப்பட்டு, அசையாச் சொத்து எதனையும் விற்பனை செய்வதற்கு, குடும்ப உறுப்பினராக அல்லாத பகராள் ஒருவருக்கு, அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும் போது.
(h) பிற நேர்வு எதிலும். அதிகாரமளிக்கப்பட்ட நபர்
ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய்.";
(g) தற்போதுள்ள விளக்கமானது, விளக்கம்-I என மறுஎண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட விளக்கம்-I-ற்குப் பின்பு, பின்வரும் விளக்கமானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"விளக்கம்-II.- இந்த உறுப்பின் நோக்கத்திற்காக, "குடும்பம்" என்ற சொல்லானது 58-ஆம் உறுப்பிற்கான விளக்கத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.";
4(14) 54-ஆம் உறுப்பின், கூறு (b)-ல்,-
(a) உட்கூறு (i)-ல், "எண்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம்
ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) உட்கூறு (ii)-ல், "எழுபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக, "ஆயிரம்
ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(15) 55-ஆம் உறுப்பின் விளக்கத்தில், பின்வரும் சொற்றொடரானது இறுதியாக
சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"மற்றும் ஓர் இறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுகள் எவரேனும் இருந்தால்,
அவர்களையும் உள்ளடக்குதல் வேண்டும்.";
(16) 57-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், "எண்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(17) 58-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், "எண்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(18) 61-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், "நாற்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு
பதிலாக, "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(19) 62-ஆம் உறுப்பின், கூறு (e)-ற்கு பதிலாக, பின்வரும் கூறானது அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(e) அறக்கட்டளையாளர் ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் அல்லது
மற்றொரு அறக்கட்டளையாளருக்கு அல்லது இந்த உறுப்பின் கூறு
அறக்கட்டளையாளர் ஒருவரிடமிருந்து அதே (c)-ன்படி வசூலிக்கப்படலாகும்
அறக்கட்டளையின் பயனாளி ஒருவருக்கு அத்தகைய சிறிய தொகை."
மாற்றப்படும் அறக்கட்டளையின் சொத்து
எதுவும்.
(20) 64-ஆம் உறுப்பின்,-
(i) கூறு (a)-ல், "நூற்று எண்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக,
"ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) கூறு (b)-ல், "நூற்று இருபது ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக,
"ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 14/ 2024.
1994 – ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்)
மற்றும் சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
2 இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1994 ஆம்
தமிழ்நாடு சட்டம்
171- ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 171 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில்,
21/1994.
பிரிவிற்கான "வீட்டு வரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது
திருத்தம்.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3. முதன்மைச் சட்டத்தின் 172 ஆம் பிரிவில், —
172- ஆம் பிரிவிற்கான திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "வீட்டு வரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1), (2), (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளில், "வீட்டு வரி" எனும்
சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
4. முதன்மைச் சட்டத்தின் 177 ஆம் பிரிவில், —
177- ஆம் பிரிவிற்கான திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "நில வருவாய் பணியாளர்" எனும் சொற்றொடருக்காக,
"ஊராட்சி பணியாளர் அல்லது அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிற நபர் எவரையும்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) "ஐந்தாண்டுகளுக்கொருமுறை வீட்டுவரி விதிப்புப் பதிவேடு ஒன்றைத்
தயாரிக்குமாறும் நில வருவாய்த்துறை பணியாளர்களைக்" எனும் சொற்றொடருக்காக,
"ஐந்தாண்டுகளுக்கொருமுறை சொத்து வரி விதிப்புப் பதிவேடு ஒன்றைத் தயாரிக்குமாறும்
ஊராட்சி பணியாளர் அல்லது அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிற நபர் எவரையும்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
188 –ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 188 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில்,
பிரிவிற்கான "வீட்டுவரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக
திருத்தம்.
அமைக்கப்படுதல் வேண்டும்.
I- ஆம் 6. முதன்மைச் சட்டத்தின் I – ஆம் இணைப்புப் பட்டியலில், —
இணைப்புப் (i) I- ஆம் விளக்கத்திலுள்ள வரம்புரையில், "வீட்டு வரி" எனும்
பட்டியலுக்கான சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
திருத்தம்.
வேண்டும்;
6(ii) II- ஆம் விளக்கத்தில் மற்றும் அதன் கீழ் உள்ள இரண்டாம் வரம்புரையில்,
"வீட்டு வரி" எனும் சொற்றொடருக்காக, "சொத்து வரி" எனும் சொற்றொடரானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
7தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 15/ 2024.
2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைச் சட்டத்தினை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர்
ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை (நீக்கறவுச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தமிழ்நாடு சட்டம்
தமிழ்நாடு சட்டம் 2. 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி
32/2020.
32/2020-ன் டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு
நீக்கறவு.
செய்யப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
8 9தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 16/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம்
மற்றும் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
111 ஆம் தமிழ்நாடு
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1994 ஆம்
பிரிவிற்கான சட்டம் 21/1994. ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 111 ஆம் பிரிவின், (j) கூறுக்குப் பிறகு,
திருத்தம்.
பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(k) குடியிருப்பவர் அல்லது குழுவாக குடியிருப்பவர்கள், நலிந்த பிரிவினர்கள்,
பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, அவ்வப்போது,
அரசால் உருவாக்கப்படலாகும் அரசு திட்டங்களுக்குக் கூடுதலாக வீட்டுவசதி, ஊட்டச்சத்து,
சுகாதாரம் மற்றும் குடும்ப நல நடவடிக்கைகளை வகைசெய்வதன் மூலமாக அவர்களுக்கு
தகுந்த பணியை மேற்கொள்ளுதல் அல்லது தேவையான சேவையை வழங்குதல்.".
112 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 112 ஆம் பிரிவில், -
பிரிவிற்கான (1) (n) கூறில், "மற்றும்" என்ற சொல்லானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
திருத்தம்.
(2) அத்தகையவாறு திருத்தம் செய்யப்பெற்ற (n) கூறுக்குப் பின்பு, பின்வரும்
கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(nn) குடியிருப்பவர் அல்லது குழுவாக குடியிருப்பவர்கள், நலிந்த பிரிவினர்கள்,
பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, அவ்வப்போது,
அரசால் உருவாக்கப்படலாகும் அரசு திட்டங்களுக்குக் கூடுதலாக வீட்டுவசதி, ஊட்டச்சத்து,
சுகாதாரம் மற்றும் குடும்ப நல நடவடிக்கைகளை வகைசெய்வதன் மூலமாக அவர்களுக்கு
தகுந்த பணியை மேற்கொள்ளுதல் அல்லது தேவையான சேவையை வழங்குதல்; மற்றும்".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
10 11தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 17/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
தொடக்கம்.
(நான்காம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
144-A எனும் 2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 144 ஆம்
21/1994.
புதிய பிரிவை பிரிவுக்குப் பிறகு பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"144-A. மலக்கசடு மற்றும் கழிவுநீர் மேலாண்மை.- (1) நபரெவரும்,
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்கீழ்
(தமிழ்நாடு சட்டம் 9/1999) வழங்கப்பட்ட செல்லுபடியாகக்கூடிய உரிமமின்றி,
ஊராட்சி எல்லைகளுக்குள் குடியிருப்பு அல்லது வணிக அல்லது நிறுவன
நோக்கங்களுக்காக, பயன்படுத்தப்படும் கட்டடம் எதிலுமிருந்து மலக்கசடு அல்லது
கழிவுநீரைச் சேகரித்தல், கொண்டு செல்லுதல், அல்லது அகற்றுதல் கூடாது:
வரம்புரையாக, அரசின் உள்ளாட்சி அமைப்பு அல்லது சட்டப்பூர்வமான வாரியம்
எதனினாலும், மலக்கசடு அல்லது கழிவுநீரைச் சேகரித்தல், கொண்டு செல்லுதல்,
மற்றும் அகற்றுதலுக்காக அத்தகைய உரிமம் எதுவும் தேவையானதாகாது.
(2) ஊராட்சி எல்லைகளுக்குள் அமைந்திருக்கும் கட்டடம் அல்லது
அதன் பகுதியொன்றின், நேர்விற்கேற்ப, உரிமையாளர் அல்லது அனுபவத்தில்
இருப்பவர்,-
(a) 2016 ஆம் ஆண்டு தேசிய கட்டட நெறி தொகுப்பின் தேவைகளுக்கு
இணங்க கழிவுநீர்த் தொட்டி அல்லது அத்தகைய அமைவிட துப்புரவு அமைப்பின்
கட்டமைப்பினை உறுதி செய்தல் வேண்டும்;
(b) 2016 ஆம் ஆண்டு தேசிய கட்டட நெறி தொகுப்பின்படி கழிவுநீர்த்
தொட்டி அல்லது அமைவிட துப்புரவு அமைப்பின் வடிவ மற்றும் இயக்குமுறை
தேவைகளின்படி முறையான கசடகற்றுதலை நடத்துதல் வேண்டும்;
(c) அவரது கட்டடத்திலிருந்து மலக்கசடு மற்றும் கழிவுநீரை சேகரித்தல்,
கொண்டுசெல்லுதல் அல்லது அகற்றுதலுக்காக உரிமதாரர் ஒருவரைத் தவிர
நபரெவரும் ஈடுபடுத்தப்படவில்லை அல்லது ஈடுபடுத்துமாறு செய்யப்படவில்லை
என்பதை உறுதி செய்தல் வேண்டும்;
(d) 2013 ஆம் ஆண்டு கைகளால் துப்புரவுசெய்யும் பணியாளர்களாக
வேலையமர்த்தம் செய்வதைத் தடை செய்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளித்தல்
சட்டத்தில் (மையச் சட்டம் 25/2013) தடை செய்யப்பட்டவாறான, கழிவுநீர்த்
தொட்டியில் அல்லது அமைவிட துப்புரவு அமைப்பில் அபாயகரமாக சுத்தம்
செய்தலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நபரெவரும் ஈடுபடவில்லை
அல்லது பணியமர்த்தப்படவில்லை என்பதை உறுதி செய்தல் வேண்டும்;
(3) ஒவ்வொரு உரிமதாரரும்—
(a) 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள்
சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) 179-D ஆம் பிரிவின் வகைமுறைகள்
மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு இணங்கலாகவும் (4) ஆம்
உட்பிரிவின்கீழ் ஆய்வாளரால் அறிவிக்கப்படலாகிறவாறான நேரம், வழித்தடம்
மற்றும் வடிகட்டப்படும் இடத்திற்கு உட்பட்டும் உரிமத்தின் வரையறைகள் மற்றும்
நிபந்தனைகளை பின்பற்றுதல் வேண்டும்;
12(b) அகற்றுதல் வசதி அல்லது வடிகட்டப்படும் இடத்தைப்
பயன்படுத்துவதற்கு வகுத்துரைக்கப்படலாகும் முறை ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய்க்கு
மிகாமல் வடிகட்டப்படும் கட்டணம் செலுத்துதல் வேண்டும்;
(c) மலக்கசடுகள் மற்றும் கழிவுநீரை சேகரித்தல், கொண்டு செல்லுதல்
மற்றும் அகற்றுதல் ஆகியவற்றிற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முறையையும்
பதிவு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஊர்திக் குறிப்பேட்டை
பராமரித்தல் மற்றும் ஓர் ஆண்டில், ஒவ்வொரு காலாண்டின் 10 ஆம் நாளுக்கு
முன்னர் ஆய்வாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்;
(4) (a) ஆய்வாளரானவர்,,-
(i) மலக்கசடு அல்லது கழிவுநீரை வடிகட்டுவதற்கான இடம்,
நேரம் மற்றும் வழித்தடம்;
(ii) உரிமதாரர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல்; மற்றும்
(iii) உரிமதாரர்களுக்கு எதிராக புகார்களை பதிவு செய்தல்
அல்லது விதிமீறல்களை தெரியப்படுத்துவதற்கான ஒரு
வழிமுறை
ஆகியவற்றை மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்தல் அல்லது வலைதளம்
அல்லது வலைவாயிலில் பதிவேற்றம் செய்தலும் வேண்டும்.
(b) கழிவுநீரை சிந்துதல் நிகழ்வின் தகவலினைப் பெறுவதன் பேரில்,
உரிமம் வழங்கும் அதிகார அமைப்பானது உடனடியாக உரிமதாரர் அல்லது
குறிப்பிட்ட ஊர்தியின் பொறுப்பிலுள்ள நபரை, கழிவு நீரை கட்டுப்படுத்த,
சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தினை குறைக்க மற்றும் சிந்திய இடத்திலிருந்து
உடனடியாக கழிவுநீர் முழுவதையும் அகற்ற கட்டளையிடுதல் வேண்டும்.
(c) வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய அலுவலர்களை
உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவானது, வடிகட்டுதலுக்காக
அடையாளம் காணப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் மலக்கசடு மற்றும்
கழிவுநீர் வெளியேற்றுவதைத் தடுக்க, குறிப்பிட்ட ஊர்திகளில் பொறுத்தப்பட்ட புவி
இடங்காட்டி அல்லது ஆய்வுசெய்தல் போன்றவை மூலம் ஊராட்சி எல்லைக்குள்
குறிப்பிட்ட ஊர்திகளின் இயக்கத்தைக் கண்காணித்தல் வேண்டும்.
(5) நபரெவரும், இந்தப் பிரிவை மீறினால் அல்லது அதனுடன் இணங்கத்
தவறினால், அவரின் முதல் குற்றத்திற்காக இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை
நீட்டிக்கப்படலாகும் மற்றும் இரண்டாவது அல்லது தொடர்ச்சியான குற்றங்களுக்காக
ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத் தொகையுடன்
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(6) (a) உரிமதாரர், இந்தப் பிரிவின் வகைமுறைகள் எதையும் அல்லது
உரிமத்தின் வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் எதையும் மீறினால், மாவட்ட
அளவிலான கண்காணிப்புக் குழுவானது, உரிமம் வழங்கும் அதிகார அமைப்பிடம்
உரிமத்தை இடைநீக்கம் செய்யுமாறு கோரலாம்.
(b) உரிமதாரர், இந்தப் பிரிவின்கீழ் இரண்டாவது குற்றத்திற்கான
தண்டனை விதிக்கப்பட்டால் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவானது,
உரிமம் வழங்கும் அதிகார அமைப்பிடம் உரிமத்தை ரத்து செய்யுமாறு கோரலாம்.
(7) (a) இந்தச் சட்டத்தில் அல்லது தற்போது நடைமுறையில் உள்ள பிற
சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இந்தப் பிரிவின் படியான
குற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாக அல்லது செய்யப்படுவதாக நம்பப்படுமிடத்தில்,
வட்டார வளர்ச்சி அலுவலரின் (கிராம ஊராட்சிகள்) படிநிலைக்குக் குறையாத
அலுவலர் எவரும், அத்தகைய குற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஊர்தி
அல்லது மோட்டார், குழாய், குழல், கருவி அல்லது உபகரணங்கள் உள்ளடங்கலாக
பிற பொருள்கள் எதையும் கைப்பற்றலாம் மற்றும் காரணமற்ற தாமதம் எதுவுமின்றி,
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முன்பு அதனை முன்வைத்தல் வேண்டும்.
13(b) உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முன்பு அத்தகைய ஊர்தி அல்லது
பிற பொருள் எதுவும் முன்வைக்கப்படுமிடத்து, மற்றும் இந்தப் பிரிவின் கீழ் குற்றம்
ஒன்று செய்யப்பட்டுள்ளதாக அவர் மனநிறைவடைந்தால் அத்தகைய குற்றத்திற்காக
வழக்கு தொடரப்பட்டாலும், இல்லாவிட்டாலும் இந்தப் பிரிவின்கீழ் அக்குற்றவாளி
பொறுப்பாகும் பிற தண்டணை எதற்கும் குந்தகமின்றி அவ்வாறு கைப்பற்றப்பட்ட
ஊர்தி அல்லது பிற பொருள்களை பறிமுதல் செய்ய உதவி இயக்குநரானவர்
(ஊராட்சிகள்) ஆணையிடலாம்:
வரம்புரையாக, பறிமுதல் செய்வதற்கான ஆணை ஒன்றை பிறப்பிப்பதற்கு
முன்பு கைப்பற்றப்பட்ட அத்தகைய ஊர்தி அல்லது பொருளின் உரிமையாளர்
அல்லது அவை, எவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அந்த நபருக்கு,-
(i) பறிமுதல் செய்வதற்கு முன்மொழியப்பட்ட காரணங்களை
அவருக்குத் தெரிவிக்கும் எழுத்து வடிவிலான அறிவிப்பு;
மற்றும்
(ii) பொருட்பாட்டில் எழுத்து வடிவிலான அவரது முறையீடு
ஒன்றினை செய்வதற்கான வாய்ப்பொன்று மற்றும்
கேட்பதற்கான வாய்பொன்று
வழங்கப்படுதல் வேண்டும்.
(c) உதவி இயக்குநரானவர் (ஊராட்சிகள்) (b) கூறின்கீழ் பறிமுதல்
செய்வதற்கான ஆணையை பிறப்பித்த பின்பு, பொதுநலன் கருதி அவ்வாறு
செய்வது உகந்தது என்று கருதினால், பறிமுதல் செய்யப்பட்ட ஊர்தி அல்லது
பொருட்களை பொது ஏலத்தில் விற்பதற்கு அவர் ஆணையிடலாம்.
(d) (c) கூறின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து எதுவும்
விற்கப்படுமிடத்து மற்றும் (b) கூறின்கீழ் செய்யப்பட்ட பறிமுதல் செய்வதற்கான
ஆணையானது (8) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணையொன்றின் மூலம் தள்ளுபடி
அல்லது நீக்கம் செய்யப்படுமிடத்து அத்தகைய ஏலத்தின் செலவுகளை, அல்லது
அதற்கான தற்செயல் செலவுகளை கழித்த பின்பு, அத்தகைய விற்பனையின்
வருமானமானது, அத்தகைய ஆணையில் குறிப்பிட்டவாறான அதன் உரிமையாளர்
அல்லது பறிமுதல் செய்யப்பட்ட நபருக்கு செலுத்தப்படுதல் வேண்டும்.
(8) (a) (7) ஆம் உட்பிரிவின்கீழ் செய்யப்பட்ட ஆணை ஒன்றினால்
பாதிக்கப்பட்ட நபரெவரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் முப்பது
நாள்களுக்குள் ஆய்வாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
(b) மேல்முறையீட்டை தீர்மானிக்கையில், ஆய்வாளர்
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும்
மற்றும் அத்தகைய மேல்முறையீடு மீது ஆய்வாளரின் முடிவு இறுதியானதாகும்
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "அகற்றும் வசதி", "உரிமம்
வழங்கும் அதிகார அமைப்பு", "மலக்கசடு", "உரிமதாரர்", "கழிவுநீர்" மற்றும்
"குறிப்பிட்ட ஊர்தி" ஆகிய சொற்கள் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர
உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) 179-A ஆம்
பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
14 15தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 18/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
தொடக்கம்.
(ஐந்தாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
தமிழ்நாடு
110-A எனும் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 110 ஆம் பிரிவுக்குப்
சட்டம் 21/1994.
புதிய பிரிவை பிறகு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"110-A திடக்கழிவு மேலாண்மை.- (1) ஊராட்சியால், இந்த நோக்கத்திற்காக,
ஊராட்சி எல்லைக்கு உள்ளே அல்லது வெளியே குறிப்பிட்டு ஒதுக்கப்படும்
ஓரிடத்தில் மூலத்திலிருந்து பிரிக்கப்பட்ட கழிவுகளை சேகரித்தல், கொண்டு
செல்லுதல், பதப்படுத்துதல் மற்றும் அறிவியல் பூர்வமாக திடக்கழிவுகளை
அகற்றுதல் போன்ற முறையினை ஏற்றுக் கொள்வதன் மூலம் பொது இடம்
எதனையும் தூய்மையாக வைத்துதிருக்கும் வகையில் திடக்கழிவுகளை
மேலாண்மை செய்வது ஊராட்சியின் கடமையாக இருத்தல் வேண்டும்.
(2) பொதுமக்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால்
உண்டாக்கப்படும் திடக்கழிவுகளை பிரித்து வைத்தல் வேண்டும் மற்றும்
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அதை அப்புறப்படுத்துதல்
வேண்டும் அல்லது ஊராட்சியிடம் ஒப்படைத்தல் வேண்டும்.".
136 ஆம் பிரிவிற்கான 3. முதன்மைச் சட்டத்தின் 136 ஆம் பிரிவில், "கழிவு பொருட்கள்" எனும்
திருத்தம்.
சொல்லுக்காக, "கழிவு பொருட்கள், திடக்கழிவு எனும் சொற்களானது மாற்றாக
அமைக்கப்படுத்தல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
16.
17தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 19/ 2024.
1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பும், 1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும்
தொடக்கமும் அறநிலைக்கொடைகள் (திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
26-ஆம் பிரிவிற்கான சட்டம்
1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக்கொடைகள் சட்டத்தின்
திருத்தம். 22/1959.
26-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில், (e) கூறில் "அல்லது தொழுநோயினால்
அல்லது பிற அருவெறுக்கத்தக்க நோய் எதனாலும் துன்புறுவாராயின்" எனும்
சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
3. முதன்மைச் சட்டத்தின் 53-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், (f) 53-ஆம் பிரிவிற்கான கூறில் "அல்லது தொழுநோயினால் அல்லது வேறு அருவெறுக்கத்தக்க நோயினால் திருத்தம்.
துன்புறுவாராயின்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
66-ஆம் பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின் 66-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,
திருத்தம்.
(j) கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
18 19தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
மே திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்
தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 20/2024.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தை தயாரித்தல்,
ஒப்புதல் செய்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தலுக்கும் தமிழ்நாடு மாநிலத்தில்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கு அவர்களின் மக்கள்தொகை
விகிதாச்சாரத்திற்கு குறையாத வகையில், நிதியை குறித்தொதுக்குவதற்கும்
நிறுவனம் சார்ந்த இயங்குமுறையை செயல்படுத்துவதற்கும் அதனுடன் தொடர்புடைய
அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்காகவுமானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் – I.
முன்னுரை.
குறுந்தலைப்பு, 1. (1) இந்தச் சட்டம் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும்
அளாவுகை மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது மாநில அரசு அறிவிக்கையின் மூலம் குறிக்கக்கூடிய அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருள் வரையறை.
2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,-
(a) "மேம்பாட்டு செயல் திட்டம்" என்பது, ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினருக்காக மாநில மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பெற்ற மேம்பாட்டு செயல்
திட்டம் என்று பொருள்படும்;
(b) "அதிகாரமளிக்கப்பட்ட குழு" என்பது, 5–ஆம் பிரிவின்கீழ்
அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று பொருள்படும்;
(c) "விலக்களிக்கப்பட்ட செலவினம்" என்பது ஊதியம், ஊதிய உதவித்தொகை,
ஓய்வூதியம், நிர்வாக பணியாளர் அமைப்பு, மூலதன செலவினம், அசலை திருப்பிச்
செலுத்துதல், வட்டியை செலுத்துதல் மற்றும் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும்
நிர்வாகத் தன்மையிலான ஏதேனும் பிற செலவினம் என்று பொருள்படும். மேலும் ஒன்றிய
அரசின் திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கு
ஒன்றிய அரசால் விடுவிக்கப்படாத அல்லது குறைவாக விடுவிக்கப்பட்டதன் காரணமாக
செலவளிக்க இயலாத தொகையையும் உள்ளடக்கும்;
(d) "மேம்பாட்டில் உள்ள இடைவெளிகள்" என்பது, மாநில சராசரியுடன்
ஒப்பிடுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொடர்பாக, வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய மேம்பாட்டு குறியீடுகளின் பற்றாக்குறை என்று பொருள்படும்;
(e) "பொது திட்டங்கள்" என்பது, மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் உள்ளடங்கலான அனைத்து சமூக குழுக்களுக்கும் நலன்பயக்கும்,
நலத்திட்ட செலவினங்கள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட திட்டங்கள் என்று
பொருள்படும்;
(f) "ஆதிதிராவிடர்" மற்றும் "பழங்குடியினர்" என்பது இந்திய அரசமைப்பின்
366-ஆம் உறுப்பின், முறையே (24) மற்றும் (25) ஆம் கூறுகளில் அவற்றிற்கு
குறித்தளிக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;
20(g) "சிறப்பு திட்டங்கள்" என்பது, மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினருக்கு மட்டுமே நலன் பயக்கும் நலத்திட்ட செலவினங்களை அறிக்கையில்
உள்ளடக்கப்பட்ட திட்டங்கள் என்று பொருள்படும்;
(h) "மாநிலம்" என்பது, தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;
(i) "மாநில மன்றம்" என்பது, 3 ஆம் பிரிவின் கீழ் அமைத்துருவாக்கப்பட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான தமிழ்நாடு மாநில மன்றம் என்று
பொருள்படும்;
(j) "நலத்திட்டச் செலவினங்களின் அறிக்கை" என்பது நலத்திட்டச் செலவினத்தின்
துறைவாரியான சுருக்கத்தையும், பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதிநிலை
ஒதுக்கீடுகளையும் உள்ளடக்கியுள்ள அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை என்று
பொருள்படும்;
(k) "மாநிலத்தின் மொத்த நலத்திட்டச் செலவின ஒதுக்கீடு" என்பது நலத்திட்டச்
செலவின அறிக்கையில் பட்டியலிடப்பட்ட திட்டங்களுக்காக, ஏற்படுத்தப்பட்ட நிதிநிலை
ஒதுக்கீட்டின் முழுமொத்தத் தொகை என்று பொருள்படும்;
அத்தியாயம் – II
நிறுவனம் சார்ந்த ஒழுங்கமைவு.
3. (1) அரசு, அறிவிக்கையின் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின்
மாநில மன்றத்தின்
மேம்பாட்டுக்கான தமிழ்நாடு மாநில மன்றம் என்று வழங்கப்பெறும் ஒரு மன்றத்தினை
அமைத்துரு-
இந்தச் சட்டத்தின்கீழ் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்துவதற்கும், அதற்கு
வாக்கம்.
குறித்தளிக்கப்பட்ட செயற்பணிகளைப் புரிவதற்கும் அமைத்துருவாக்குதல் வேண்டும்.
(2) மாநில மன்றம் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்,
அவர்களாவர்:-
(a) முதலமைச்சர், பதவி வழித் தலைமையாளராக இருப்பார்;
(b) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை பொறுப்பில்
கொண்டுள்ள அமைச்சர், பதவி வழி;
(c) நிதித்துறையை பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர், பதவிவழி;
(d) வனத்துறையை பொறுப்பில் கொண்டுள்ள அமைச்சர், பதவிவழி;
(e) ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினரைச் சேர்ந்த சட்டமன்ற
உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இருந்து அரசால் நியமனம்
செய்யப்பட வேண்டிய ஐந்து உறுப்பினர்கள், பதவி வழி;
(f) அரசு தலைமைச் செயலாளர், பதவி வழி;
(g) நிதித்துறையை பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர்,
பதவி வழி;
(h) திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையை பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவி வழி;
(i) சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறையை பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவி வழி;
(j) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவி வழி உறுப்பினர் – செயலாளராக இருப்பார்;
மற்றும்
(k) மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகப்
பணிபுரியும் நபர்களிடையே இருந்து அரசால் நியமனம் செய்யப்பட வேண்டிய நான்கு
உறுப்பினர்கள்.
21(3) (2) ஆம் உட்பிரிவின் (e) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்,
நேர்விற்கேற்ப, அவர்கள் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்
வரையில் பதவி வகித்தல் வேண்டும்.
(4) (2) ஆம் உட்பிரிவின் (k) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஓர்
ஆண்டு காலஅளவுக்கு பதவி வகித்தல் வேண்டும்.
(5) அரசு, எந்நேரத்திலும் (2) ஆம் உட்பிரிவின் (e) கூறு அல்லது (k) கூறின்கீழ்
செய்யப்பட்ட நியமனங்கள் எதனையும் இரத்து செய்யலாம் மற்றும் கூறப்பட்ட கூறுகளின்கீழ்
புதிய நியமனங்களை செய்யலாம்.
(6) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
படித்தொகைகள் பெறத் தகுதியுடையவர்களாக இருப்பர்;
(7) மாநில மன்றமானது, ஓர் ஆண்டில் ஒரு முறையேனும் கூடுதல் வேண்டும்.
மாநில மன்றத்தின் 4. மாநில மன்றமானது, பின்வரும் செயற்பணிகளைப் புரிதல் வேண்டும்,
செயற்பணிகள்.
அவையாவன:-
(a) மேம்பாட்டு செயல் திட்டம் தொடர்புடைய கொள்கைப் பொருட்பாடுகளின்
மீது அரசுக்கு ஆலோசனை வழங்குதல்;
(b) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களை
திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலுக்கான நடவடிக்கைகளை எடுத்துரைத்தல்;
(c) அதிகாரமளிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மேம்பாட்டு செயல்
திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்;
(d) மேம்பாட்டு செயல் திட்டத்தை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும்
கண்காணித்தலில் அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு வழிகாட்டுதல்களை அளித்தல்;
மற்றும்
(e) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயற்பணிகளைப் புரிதல்.
அதிகாரமளிக்கப்பட்ட 5.(1) பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில மன்றத்தின்
குழுவினை அதிகாரமளிக்கப்பட்ட குழுவொன்று இருத்தல் வேண்டும், அவர்களாவர்:-
அமைத்துருவாக்குதல்.
(a) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அமைச்சர், பதவிவழித் தலைமையாளராக இருப்பார்;
(b) அரசு தலைமைச் செயலாளர், பதவிவழி;
(c) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(d) நிதித்துறையைப் பொறுப்பில் கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(e) திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையை பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(f) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையைப் பொறுப்பில்
கொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(g) ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், பதவிவழி கூட்டுநராக இருத்தல்
வேண்டும்;
(h) பழங்குடியினர் நலத்துறை இயக்குநர், பதவிவழி இணை கூட்டுநராக
இருத்தல் வேண்டும்;
22(2) எந்தத் துறைகளுக்கு, மேம்பாட்டு செயல் திட்டத்தில் நிதியானது
குறித்தொதுக்கப்பட்டதோ அல்லது குறித்தொதுக்கப்பட முன்மொழியப்பட்டதோ அந்தந்த
துறைகளின் அரசு செயலாளர்கள், அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டத்திற்கு சிறப்பு
அழைப்பாளர்களாக இருத்தல் வேண்டும்.
(3) அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது ஓர் ஆண்டில் குறைந்தது மூன்று முறை
கூடுதல் வேண்டும்.
அதிகாரமளிக்-
6. அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, பின்வரும் செயற்பணிகளைப் புரிதல்
கப்பட்ட
வேண்டும், அவையாவன:-
குழுவின்
(a) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான உரிய
செயற்பணிகள்.
திட்டங்களை வகுத்தல் மற்றும் வடிவமைத்தல்;
(b) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களை
தொடர்புடைய துறைகளால் செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல் மற்றும் மறுஆய்வு
செய்தல்;
(c) மேம்பாட்டு செயல் திட்ட வரைவினை மதிப்பீடு செய்து அதன் ஒப்புதலுக்கு
மாநில மன்றத்தின் முன் வைத்தல்;
(d) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான, தொடர்புடைய
துறைகளின், நடப்பிலுள்ள திட்டங்களின் செயல்பாடு மற்றும் தாக்கத்தை மதிப்பீடு
செய்து அதை மாநில மன்றத்திற்கு தெரிவித்தல்;
(e) ஒரு நிதியாண்டில் பல்வேறு துறைகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக இந்தச் சட்டத்தின்படி ஒதுக்கப்பட்டு செலவிடப்படாத
நிதியின் அளவை இறுதி செய்தல் மற்றும் அடுத்துவரும் நிதியாண்டிற்கு அடுத்த
நிதியாண்டிற்கு முன் கொண்டு செல்லப்படுதல் வேண்டும்;
(f) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயற்பணிகளைப் புரிதல்
வேண்டும்.
முகமைத் துறையும் 7. (1) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது மேம்பாட்டு செயல்
அதன் செயற் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்கு முகமைத் துறையாக இருத்தல் வேண்டும்.
பணிகளும்.
(2) முகமைத் துறையானது,--
(a) மேம்பாட்டு செயல் திட்ட வரைவினை தயாரித்து அதனை
பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் முன்பு வைத்தல்
வேண்டும்.
(b) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள்
செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல் வேண்டும்.
(c) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக இந்தச்
சட்டத்தின்கீழ் குறித்தொதுக்கப்பட்ட நிதிக்கான திட்டமிடல், ஒதுக்கீடு மற்றும்
பயன்பாட்டிற்குத் தேவைப்படலாகிற தரவுத்தளத்தை பராமரித்தல் வேண்டும்;
(d) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான திட்டங்களின்
செயலாக்கத்தின் முன்னேற்றத்தை கண்டறிய வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
முறையில் ஆராய்ச்சி, மதிப்பாய்வு மற்றும் புள்ளியியல் ஆய்வை மேற்கொள்ளுதல்;
(e) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான அத்தகைய
தகவலை தெரிவிப்பதற்கு ஒரு வலைவாயிலை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
முறையில் உருவாக்குதல்; மற்றும்
(f) மேம்பாட்டில் உள்ள இடைவெளிகளின் அடிப்படையில், மேம்பாட்டு
செயல் திட்டத்தை செயல்படுத்துதலில் காலமுறையிலான விளைவுப் பகுப்பாய்வை
மேற்கொள்ளுதல்.
23மாவட்டக் 8. (1) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் கண்காணிப்புக் குழு ஒன்று இருத்தல்
கண்காணிப்புக் வேண்டும்; அது மாவட்டத்தில் மேம்பாட்டு செயல் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு
குழு மற்றும் பொறுப்புக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.
அதன்
செயற்பணிகள்.
(2) மாவட்டக் கண்காணிப்புக் குழுவானது பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்டிருத்தல் வேண்டும், அவர்களாவர்:-
(a) மாவட்ட ஆட்சித் தலைவர், பதவி வழித் தலைவராக இருப்பார்;
(b) மாவட்டத்தில் தேர்தல் தொகுதி முழுமையாகவோ அல்லது
பகுதியாகவோ அமையப்பெற்ற, அரசால், நியமனம் செய்யப்பட வேண்டிய, முன்னுரிமையாக
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்த ஐந்திற்கும் மிகாத மாநில சட்டமன்ற
அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதவிவழி;
(c) திட்ட இயக்குநர் – மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை, பதவி வழி;
(d) மாவட்ட வருவாய் அலுவலர், பதவி வழி;
(e) மாவட்ட வன அலுவலர், பதவி வழி;
(f) இணை இயக்குநர், வேளாண்மை, பதவி வழி;
(g) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,
பதவிவழி கூட்டுநராக இருத்தல் வேண்டும்,
(h) ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ள மாவட்டத்தின் திட்ட அலுவலர், பதவிவழி இணை கூட்டுநராக
இருத்தல் வேண்டும்.
(3) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான மேம்பாட்டு செயல்
திட்டத்தில் நிதி குறித்தொதுக்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட முன்மொழியப்பட்ட
அந்தந்த துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள், மாவட்டக் கண்காணிப்புக்
குழுவின் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக இருத்தல் வேண்டும்.
(4) (2) ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்,
நேர்விற்கேற்ப அவர்கள் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்
வரையில் பதவி வகித்தல் வேண்டும்.
(5) அரசு, எந்நேரத்திலும் (2) ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் செய்யப்பட்ட
நியமனங்கள் எதனையும் இரத்து செய்யலாம் மற்றும் கூறப்பட்ட கூறுகளின்கீழ் புதிய
நியமனங்களை செய்யலாம்.
(6) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படலாகும்
அத்தகைய படித்தொகைகள் பெறத் தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
(7) மாவட்டக் கண்காணிப்புக் குழுவானது மாவட்டத்தில் மேம்பாட்டு செயல்
திட்டம் செயல்படுத்தப்படுவதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து,
முகமைத் துறைக்கு முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
அத்தியாயம்-III
மேம்பாட்டு செயல் திட்டத்தை தயாரித்தல் மற்றும் நிதியை குறித்தொதுக்குதல்.
மேம்பாட்டு செயல் 9. (1) முகமைத் துறையானது, தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசித்து
திட்டத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டில் உள்ள இடைவெளிகளை மதிப்பீடு
தயாரித்தல்.
செய்தும், அதன் பின்பு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மேம்பாட்டு
செயல் திட்டத்தின் வரைவு ஒன்றை தயாரித்தும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம்
ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திற்கு முன்பாக அதன் பரிசீலனைக்காகவும் அதன்
ஒப்புதலுக்காகவும் முன்னிடுதல் வேண்டும்.
24(2) அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, மேம்பாட்டு செயல் திட்டத்தின் வரைவை
மதிப்பீடு செய்து, தாம் பொருத்தமெனக் கருதலாகும் மாற்றமைவுகளுடனோ அல்லது
இல்லாமலோ மாநில மன்றத்திடம் அதன் ஒப்புதலுக்காக முன்னிடுதல் வேண்டும்.
(3) மாநில மன்றமானது, மேம்பாட்டு செயல் திட்டத்தின் வரைவை ஆய்வு
செய்து, தாம் பொருத்தமெனக் கருதலாகும் மாற்றமைவுகளுக்கிணங்க ஒப்புதல் அளித்தல்
வேண்டும்.
ஆதிதிராவிடர்
10. (1) அரசு, ஒவ்வொரு நிதியாண்டிலும், மாநிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும்
மற்றும்
பழங்குடியினர் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்திற்கு குறையாத, மாநிலத்தின் மொத்த
பழங்குடியினரின்
நலத்திட்டச் செலவின ஒதுக்கீட்டிலிருந்து வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில்
மேம்பாட்டுக்கான
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான நிதியை குறித்தொதுக்குதல்
நிதியை குறித்-
வேண்டும்.
தொதுக்குதல்.
(2) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக, (1)-ஆம்
உட்பிரிவின் கீழ் ஒரு துறைக்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் குறித்தொதுக்கப்பட்டு,
செலவிடப்படாத தொகை எவையேனுமிருப்பின், ஒதுக்கப்பட்ட நிதியின் விலக்களிக்கப்பட்ட
செலவினத்தைத் தவிர, அடுத்துவரும் நிதியாண்டிற்கு அடுத்த நிதியாண்டிற்கு
முன்கொண்டு செல்லப்படுதல் வேண்டும், ஆனால் அந்த ஆண்டிற்கும் அப்பால்
முன்கொண்டு செல்லப்படுதல் கூடாது.
(3) அவ்வாறு முன்கொண்டு செல்லப்பட்ட நிதியிலிருந்து மூன்றில் இரண்டு
பங்கு அதே துறைக்கு ஒதுக்கப்படுதல் வேண்டும் மற்றும் மீதமுள்ள மூன்றில் ஒரு
பங்கு தனி கணக்கின் கீழ் முகமைத் துறைக்கு ஒதுக்கப்படுதல் வேண்டும். அத்தகைய
முன்கொண்டு செல்லப்பட்ட நிதியானது, அவ்வப்போது, அரசால் வழங்கப்படும்
வழிகாட்டுதலுக்குட்பட்டு அந்தந்த துறைகளால் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
(4) (1)-ஆம் உட்பிரிவின்படியான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின்
மேம்பாட்டுக்கான நிதியானது, அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு இணங்க
ஒவ்வொரு நிதியாண்டிற்கும் குறித்தொதுக்கப்படுதல் வேண்டும்.
குறித்
11. 10-ஆம் பிரிவின்கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான
தொதுக்கப்பட்ட நிதியை குறித்தொதுக்கப்படும் போது, பின்வரும் செலவினங்கள் அதில்
நிதியில்
உள்ளடக்கப்படலாம், அவையாவன:--
செலவினங்கள்
(a) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே பயனளிக்கும் சிறப்பு
உள்ளடக்கப்-
திட்டங்களைப் பொறுத்த வரையில், அத்தகைய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட
படுதல்.
செலவினத்தின் நூறு விழுக்காடு:
(b) பொது திட்டங்களைப் பொறுத்த வரையில், நேர்விற்கேற்ப, மாநிலத்தில்
உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தில்
அல்லது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான அத்தகைய திட்டங்களின்
பயனாளர்களின் எண்ணிக்கையில் இதில் எது அதிகமோ, அதில் அத்தகைய
திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட செலவினத்தின் ஒரு பகுதி; மற்றும்
(c) பிரிக்கமுடியாத உள்கட்டமைப்புப் பணிகள் உள்ளடக்கிய திட்டங்களைப்
பொறுத்த வரையில், அது பொருத்தமெனக் கருதலாகும் திட்ட செலவுத் தொகையின்
ஒரு பகுதி.
திட்டங்களை
12. ஒவ்வொரு துறையும், மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின்
முன்மொழிதல். மேம்பாட்டில் உள்ள இடைவெளிகளை வகுத்துரைக்கப்படும் முறையில் அளவீடு செய்து,
ஒரு கலந்தாயத்தக்க நடைமுறையின் மூலம் அவர்களின் மேம்பாடு சார்ந்த தேவைகளுக்கு
முன்னுரிமையளித்து திட்டங்களை முகமைத் துறையின் மூலமாக அதிகாரமளிக்கப்பட்ட
குழுவிடம் முன்மொழியலாம்.
முன்மொழியப்பட்ட
13. அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, முகமைத் துறையால் முன்மொழியப்பட்டவை
திட்டங்களின் எவையேனுமிருப்பின், அத்திட்டங்களை மதிப்பீடு செய்து திட்டங்களை இந்தச் சட்டத்திற்கு
மதிப்பீடு.
இணங்கியிருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
25அத்தியாயம் – IV.
பல்வகை.
வெளிப்படைத் 14. (1) அரசானது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான
தன்மை மற்றும் திட்டங்களை செயல்படுத்துதலில், அதன் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத்தன்மை
பொறுப்புத் மற்றும் பொறுப்புத்தன்மையை உறுதி செய்தல் வேண்டும்.
தன்மை.
(2) அரசு, மேம்பாட்டு செயல் திட்டத்தை செயற்படுத்தும் தகுநிலை மீதான
ஆவணங்களை தொடர்புடைய புள்ளியியல் தரவுகளுடன் சேர்த்து, இந்தச் சட்டத்தின்கீழ்
உருவாக்கப்பட்ட வலைவாயிலில் மற்றும் அரசால் அறிவிக்கப்படலாகும் பிற வலைவாயில்
அல்லது பொது வெளி எதனிலும் வெளியிடுதல் வேண்டும்.
ஆண்டறிக்கை.
15. முகமைத் துறையானது, அந்த நிதியாண்டின் போது துறைவாரியான சாதனைகள்
மற்றும் குறித்தொதுக்கப்பட்ட பயன்படுத்தப்படாத நிதிகளின் தகுநிலை அடங்கிய
மேம்பாட்டு செயல் திட்ட செயல்படுத்துதலின் வெளிப்பாடு மற்றும் விளைவின் மீது
ஒவ்வொரு நிதியாண்டைப் பொறுத்தும், ஓர் ஆண்டறிக்கையை சட்டமன்றப் பேரவையின்
முன் வைத்தல் வேண்டும்.
இடர்பாடுகளை 16. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்பாடு
நீக்குவதற்கான ஏதேனும் எழுமாயின், அரசு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆணையின்
அதிகாரம்.
மூலம், இடர்பாட்டினை நீக்குவதற்கு தேவையானது அல்லது உகந்தது என அதற்கு
தோன்றுகிறவாறு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாதவாறு
அத்தகைய வகையங்களைச் செய்யலாம்:
வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்
தேதியிலிருந்து இரண்டு ஆண்டு கால அளவு முடிவடைந்த பின்னர் பிறப்பிக்கப்படுதல்
கூடாது.
விதிகளைச் 17. (1) அரசானது, அறிவிக்கை மூலம், இந்தச் சட்டத்தின் அனைத்து அல்லது
செய்வதற்கான ஏதேனும் வகைமுறைகளைச் செயல்படுத்துவதற்கான விதிகளைச் செய்யலாம்.
அதிகாரம்.
(2) குறிப்பாக மற்றும் முன்சென்ற அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்குக்
குந்தகமின்றி, அத்தகைய விதிகள் பின்வரும் அனைத்து அல்லது ஏதேனும்
பொருட்பாடுகளுக்கு வகைசெய்யலாம், அவையாவன:--
(a) மேம்பாட்டில் உள்ள இடைவெளிகளை அளவிடுவதற்கான மேம்பாட்டுக்
குறியீடுகள் மற்றும் அத்தகைய அளவீட்டிற்கான முறை;
(b) மாநில மன்றம் மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழுவின் நியமன
உறுப்பினர்களுக்கு செலுத்தத்தக்க படித்தொகைகள்;
(c) மாநில மன்றம் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அத்தகைய
பிற செயற்பணிகள்;
(d) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான
திட்டங்களை செயற்படுத்துவதன் முன்னேற்றத்தை கண்காணிக்க முகமைத் துறைகளால்
மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, மதிப்பாய்வு மற்றும் புள்ளியியல் ஆய்வை மேற்கொள்ளுதல்;
(e) வலைவாயிலில் தெரிவிக்க வேண்டிய தகவலின் வகைகள் மற்றும்
அத்தகைய தெரிவித்தலின் முறை;
(f) மேம்பாட்டு செயல் திட்டத்தை தயாரிக்கும் முறை;
(g) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக 10-ஆம்
பிரிவின்கீழ் நிதியை குறித்தொதுக்கும் முறை; மற்றும்
(h) இந்தச் சட்டத்தின்கீழ் வேண்டுறுத்தப்படக்கூடிய அல்லது
வகுத்துரைக்கப்படக்கூடிய ஏதேனும் பிற பொருட்பாடுகள்.
26(3) (a) இந்தச் சட்டத்தின் கீழ் வகுக்கப்படும் அனைத்து விதிகளும் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்ட ஒரு நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு
வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகளும், அவை
குறிப்பிட்ட ஒரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி,
அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்படும் விதி அல்லது அறிவிக்கை அல்லது
பிறப்பிக்கப்படும் ஆணை ஒவ்வொன்றும் அது வகுக்கப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட
பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்படுதல் வேண்டும்;
மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அதை அடுத்து வரும்
கூட்டத்தொடரோ, முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை
அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது
செய்யுமாயின் அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ அல்லது ஆணையோ
வகுக்கப்படுதலோ பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவு
செய்யுமாயின், அதன் பின்பு அந்த விதியோ அறிவிக்கையோ அல்லது ஆணையோ
அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செயல் வடிவம் பெறுதல் வேண்டும்
அல்லது நேர்விற்கேற்ப செயல் வடிவம் பெறாது போதல் வேண்டும். எனினும் அவ்வாறு
மாற்றியமைப்பது அல்லது செயல் வடிவம் பெறாது போகச் செய்வது எதுவும், அந்த
விதியின்படியோ அறிவிக்கையின்படியோ அல்லது ஆணையின்படியோ முன்னதாகச்
செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.