Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by the Heads of Departments, which are of interest to a Section of the public. District Collectors - Tamil Nadu Panchayats Act - State Election Commission Notification - Removal of Panchayat Chairman, Tamil Nadu Legal Services Notification - Tamil Nadu Electricity Regulatory Commission - Government Examination Loss of Certificates. Tamil Nadu Electricity Regulatory Commission, Chennai--Tamil Nadu Electricity Regulatory Authority (Forecasting, Planning and Decommissioning of Wind and Solar Power Generation and Related Components) Regulations, 2024 - Notification No. VI(2)/21/2024.--(Lr.No.TNERC/Legal/1361/D.No.997/2024) (Notification No. TNERC/Wind and Solar Power Generation /21-1 /2024/22-1-2024)

Published 24 July 2024

Type
Ordinary
Gazette no.
30
Part
Part VI
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-07-24.Ordinary_30_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.

2024 [Price: Rs. 6.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 30] CHENNAI, WEDNESDAY, JULY 24, 2024 Aadi 8, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய (காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான முன் கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்கத் தீர்வு மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகள்) ஒழுங்குமுறை விதிகள் .. .. .. .. 86-100 DTP—VI-2 (30)

[85]86 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய (காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான முன் கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்கத் தீர்வு மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகள்) ஒழுங்குமுறை விதிகள் (அறிவிக்கை எண் தமிஒஆ / மு & தி காற்றாலை & சூரிய சக்தி / 21 -1 / 2024 / 22-1-2024)

(Lr.No.TNERC/Legal/1361/D.No.997/2024)

No. VI(2)/21/2024.

2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்திய சட்டம் 36 / 2003 ) 86(1) மற்றும் 181(2) (zp) ஆம் பிரிவுகளுடன் சேர்த்துப்படிக்கப்படும் 32 மற்றும் 33 ஆம் பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், இதன் பொருட்டு இயல்விக்கும் அனைத்துப் பிற அதிகாரங்களையும் செலுத்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இதன்மூலம் பின்வரும் திருத்தங்களை செய்கிறது. அதன் வரைவு, மேற்சொன்ன 181ஆம் பிரிவின் (3 ) ஆம் உட்பிரிவின்படி வேண்டுறுத்தப்பட்டவாறு முன்னதாக வெளியிடப்பட்டது.

ஒழுங்குமுறை விதி

1. சிறுதலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்

1.1 இந்த ஒழுங்குமுறைவிதிகள் "2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய (காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான முன்கணித்தல் , திட்டமிடல் மற்றும் விலக்கத் தீர்வு மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகள் ) ஒழுங்குமுறைவிதிகள் " என்று அழைக்கப்படும் .

1.2 இந்த ஒழுங்குமுறை விதிகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் மற்றும் இந்த ஒழுங்குமுறையின் வணிகச் செயலாக்கம் 01-04-2024 முதல் தொடங்கும்.

1.3 இந்த ஒழுங்குமுறை விதிகள் தமிழ்நாடு முழுவதற்கும் பொருந்தும்.

2. பொருள் வரையறைகள்

2.1 சூழ்நிலை வேறுபொருள் குறித்தாலன்றி, இந்த ஒழுங்குமுறைவிதிகள்:

(a) "முழுமையான பிழை" என்பது ஒவ்வொரு காலத் தொகுதியிலும் காற்றாலை (அ) சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களினால் உட்செலுத்தப்பட்ட உள்ளபடியான மின்உற்பத்திக்கும் மற்றும் திட்டமிடப்பட்ட மின்உற்பத்திக்கும் இடையிலான வேறுபாட்டினை திட்டமிடப்பட்ட மின்உற்பத்திக்கு தொடர்புபடுத்தி அதனை பின்வரும் சூத்திரத்தினை பயன்படுத்தி விழுக்காட்டில் கணக்கிடுதலாகும் .

முழுமையான பிழை(%) = 100 x [உள்ளபடியான மின் உற்பத்தி- திட்டமிடப்பட்ட மின் உற்பத்தி] --------------------------------------------------- திட்டமிடப்பட்ட மின்உற்பத்தி இங்கு, திட்டமிடப்பட்ட மின்உற்பத்தி ≠ O;

(b) "சட்டம் " என்பது அவ்வப்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் (36/2003) என்று பொருள்படும் ;

(c) ஒரு "காலத் தொகுதியில் உள்ளபடியான மின் உள்ளிழுப்பு" என்பது, இடைமுக மின்னளவிகளால் அளவிடப்படும் மின்சாரம், ஒரு கொள்முதல்காரரால் உள்ளிழுப்பு செய்யப்பட்டுள்ளது என்று பொருள்படும் ;

(d) ஒரு "காலத் தொகுதியில் உள்ளபடியான மின் உட்செலுத்தல் / மின் உற்பத்தி" என்பது இடைமுக மின்னளவிகளால் அளவிடப்படும் மின்சாரம், ஒரு மின் உற்பத்தியாளரால் (உற்பத்தியாளர்களால்) மின்உற்பத்தி செய்யப்பட்டு மின் கட்டமைப்பில் உட்செலுத்தப்பட்டுள்ளது என்று பொருள்படும் .

(e) "மத்திய ஆணையம் " என்பது 2003 ஆம் ஆண்டு சட்டத்தின் 76 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அமைக்கப்பட்ட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்று பொருள்படும் ;

(f) "தொகுக்கப் பெற்ற மின் பரிமாற்றங்கள் " என்பதற்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் குறித்துரைக்கப்பட்டவாறு இந்திய மின் கட்டமைப்பு விதித் தொகுப்பிலுள்ளவாறான அதே பொருள் கொண்டதாக இருத்தல் வேண்டும் .

(g) "ஆணையம் " என்பது 2003 ஆம் ஆண்டு சட்டத்தின் 82 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்று பொருள்படும்.

(h) "பிரித்தல் (De-pooling)" என்பது ஒரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்தில் விலக்கங்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்களை மின் உற்பத்தியாளர்களுக்கிடையில் பிரித்து பகுத்துக் கொடுத்தல் என்று பொருள்படும் ;

(i) ஒரு காலத் தொகுதியின் "விலக்கம் " என்பது உள்ளபடியான மின் உட்செலுத்தலுக்கும் மற்றும் திட்டமிடப்பட்ட மின் உற்பத்திக்கும் உள்ள வேறுபாடு ஆகும் ;

(j) "மின் பகிர்மான உரிமதாரர்" என்பது மின்சாரச் சட்டம், 2003 இன் பிரிவு 2(17) இல் வரையறுக்கப்பட்டுள்ள மின் பகிர்மான உரிமதாரர் என்று பொருள்படும்;

July 24, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 87

(k) "முன்கணித்தல் " என்பது வானிலையியல் தரவுகள் (data) மற்றும் பிறதொடர்புடைய அளவுருக்களின் அறிவியல் சார்ந்த பகுப்பாய்வு அடிப்படையில் எதிர்காலத்தில் அநேகமாக நிகழக்கூடிய மின் உற்பத்தி பற்றிய கணிப்பு என்று பொருள்படும் .

(l) இந்த ஒழுங்குமுறைவிதிகளுக்கு தொடர்புடைய "சூதாட்டம் " என்பது எந்த மின் உற்பத்தியாளராலும் / தகுதி வாய்ந்த ஒருங்கிணைப்பு முகமையாலும் திட்டமிடப்பட்ட மின் உற்பத்தியை விலக்கங்களுக்கான கட்டணங்கள் மூலம் தகுதிக்கு மேம்பட்ட வணிக இலாபம் அடைவதற்காக ஒரு உள்நோக்கத்தோடு தவறுதலாக அறிவிப்பது என்று பொருள்படும்;

(m) "மின் உற்பத்தி நிறுவனம் அல்லது மின் உற்பத்தியாளர்" என்பது மின்சாரச் சட்டம், 2003 இன் பிரிவு 2(28) இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று பொருள்படும்;

(n) "மின் கட்டமைப்பு விதித் தொகுப்பு" என்பது சட்டத்தின் 86 ஆம் சட்டப் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (h) கூறின்கீழ் ஆணையத்தால் குறித்துரைக்கப்பட்டுள்ள மாநில மின் கட்டமைப்பு விதித்தொகுப்பு என்று பொருள்படும் ;

(o) "இந்திய மின்கட்டமைப்பு விதித் தொகுப்பு" (அல்லது "IEGC") என்பது சட்டத்தின் 79 ஆம் சட்டப் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (h) கூறின்கீழ் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் குறித்துரைக்கப்பட்ட மின் கட்டமைப்பு விதித் தொகுப்பு என்று பொருள்படும் ;

(p) "இடைமுக மின்னளவி'" என்பது அவ்வப்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள 2006 ஆம் ஆண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு (மின்னளவிகளின் நிறுவல் மற்றும் இயக்குதல் ) ஒழுங்குமுறை விதிகளின் கீழ் மத்திய மின்சார அதிகார அமைப்பினால் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள இடைமுக மின்னளவிகள் என்று பொருள்படும் .

(q) "இடையிணைப்பு புள்ளி" என்பது மின்செலுத்தல் அல்லது மின் பகிர்மான அமைப்பு முறையுடன் அமைந்த ஒரு மின் உற்பத்தி வசதியமைப்பின் (facility) இடைமுகப் புள்ளி என்று பொருள்படுவதோடு காற்றாலை அல்லது சூரிய சக்தி வசதியமைப்பைப் பொருத்தமட்டில் இந்த ஒழுங்குமுறை விதிகளின் நோக்கங்களுக்காக, ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்தின் தாழ்வழுத்தப் பக்கத்திலுள்ள உள்வரு (incoming) மின்னூட்டியின் மின்தொடர் தனிப்படுத்தி (Line Isolator) என்று பொருள்படும் ;

(r) "ஒருங்கிணைந்த துணை மின்நிலையம் " என்பது பல்வேறு காற்றாலை அல்லது சூரிய சக்தி மின்னாக்கிகளின் தாழ்வழுத்தப் பக்கத்தில் இணைந்துள்ள கூட்டு மின்மாற்றி (step-up transformer) மற்றும் தொடர்புடைய இணைப்பமைப்பு (associated switchgear) அடங்கிய துணை மின்நிலையம் என்று பொருள்படும் ;

வரம்புரையாக, ஒரு மின் பகிர்மான உரிமதாரரின் அல்லது மாநில மின்செலுத்தல் பணி நிறுவனத்தின் (utility) துணை மின்நிலையத்தில் முடிவுக்கு வருகின்ற பொதுவான அல்லது தனியொரு மின்னூட்டியுடன் மின் உற்பத்தி அலகு (Generating Unit) இணைந்திருக்குமானால் , அத்தகைய துணை மின்நிலையம் இந்த ஒழுங்குமுறை விதிகளின் நோக்கங்களுக்காக அத்தகைய காற்றாலை அல்லது சூரிய சக்தி மின் உற்பத்தியாளரின் ஒருங்கிணைந்த துணை மின்நிலையமாகப் பாவிக்கப்படுதல் வேண்டும் ;

(s) "பெறுபவர் " (Procurer) என்பது திறந்த நுழைவுரிமை ஒழுங்குமுறை விதிகளுக்கிணங்க முறைப்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட பரிமாற்றம் மூலமாக மின்சாரம் பெறும் ஒரு தனி நபர் மற்றும் மின் பகிர்மான உரிமதாரறும் , மின் வணிக உரிமதாரறும் அல்லது ஒரு திறந்த நுழைவுரிமை நுகர்வோரும் அடங்குவர் என்று பொருள்படும் ;

(t) "தகுதியான ஒருங்கிணைப்பு முகமை" (அல்லது தஒமு) என்பது இந்த ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு செயற்பணிகளை ஆற்றுவதற்கும் மற்றும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காகவும் , நிறுவு திறனைப் பொறுத்து ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்துடன் இணைந்துள்ள பெரும்பான்மையான காற்றாலை அல்லது சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களினாலோ அல்லது ஒரு துணை மின்நிலையத்துடன் மற்ற மின்உற்பத்தியாளர்களால் இணைக்கப்படாமல் நேரடியாக இணைக்கப்பட்ட தனியொரு மின் உற்பத்தியாளராலோ நியமனம் செய்யப்பட்ட முகமை அல்லது நிறுவு திறனைப் பொறுத்து மாநிலத்திலுள்ள பெரும்பான்மையான காற்றாலை மின்உற்பத்தியாளர்களாலோ (அ) சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களினாலோ நியமனம் செய்யப்பட்ட ஒரே முகமை என்று பொருள்படும் ;

(u) ஒரு காலத் தொகுதிக்கான (அ) பிற கால அளவிற்கான "திட்டமிடப்பட்ட மின் உற்பத்தி" என்பது திட்டமிடப்பட்ட மின் உற்பத்தியினை மெகாவாட்டிலோ (அ) மெகாவாட் அவரிலோ தகுதியான ஒருங்கிணைப்பு முகமையாலோ (முகமையாளர்களாலோ) / மின்உற்பத்தியாளராலோ (மின்உற்பத்தியாளர்களாலோ) வழங்கப்படுவது என்று பொருள்படும் ;

(v) ஒரு காலத் தொகுதிக்கான (அ) பிற கால அளவிற்கான "திட்டமிடப்பட்ட மின் உள்ளிழுப்பு" என்பது திட்டப்பட்ட மின் உள்ளிழப்பை மெகாவாட்டிலோ (அ) மெகாவாட் அவரிலோ மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் வழங்கப்படுவது என்று பொருள்படும் ;

(w) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலத்தை குறிக்கும்;

(x) "மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கு (காற்றாலை மற்றும் சூரிய சக்தி)" என்பது, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களின் விலக்கங்கள் காரணமாக பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்களுக்கான மாநிலக் கணக்கு என்று பொருள்படும் ;

(y) "மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கு" (DSM) என்பது மின்சாரத்தை விலைக்கு வாங்குபவர்களாலும் மற்றும் மின்சாரத்தை விற்பனை செய்பவர்களாலும் எற்படுகின்ற விலக்கங்கள் பொறுத்து மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் பராமரிக்கப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்துதல்களுக்கான மாநிலக் கணக்கு என்று பொருள்படும் .

(z) "மாநில உறுப்பமைவு" என்பது மாநில மின்சுமைப் பகுப்பு மையக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பவறும் மற்றும் மாநில அளவில் மின்னளவியிடல் மற்றும் மின்சக்தி கணக்கு வைத்திருப்பவருமாகிய அத்தகைய தனிநபர் என்று பொருள்படும் ;

(aa) "மாநில மின்சுமைப் பகுப்பு மையம் " (அல்லது "SLDC") என்பது சட்டத்தின் 31 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் நிறுவப்பட்டு மாநில மின் கட்டமைப்பு விதித்தொகுப்பின் வகைமுறைகளுக்கிணங்க மாநில உறுப்பமைவுகளின் திட்டமிடலை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பு வகிக்கும் தமிழ்நாட்டின் மின்சுமைப் பகுப்பு மையம் என்று பொருள்படும் .

(ab) "காலத் தொகுதி" (Time block) என்பது முதல் காலத் தொகுதியின் தொடக்கம் 00-00 மணி காலத்திலோ (அ) ஆணையத்தால் குறித்துரைக்கப்படலாகும் அத்தகையப் பிற காலத்திலோ குறிப்பிடப்பட்ட மின்னளவுருக்கள் மற்றும் அளவுகளை88 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2 மின்னாற்றல் மின்னளவியால் பதிவு செய்வதற்காக மத்திய ஆணையத்தாலும் மற்றும் மாநில ஆணையத்தாலும் அறிவிக்கை செய்யப்படலாகும் ஒரு 15 நிமிட காலம் (அ) ஏதாவது அத்தகைய கால அளவு ஆகும்.

இந்த ஒழுங்குமுறைவிதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் பொருள்வரையறை செய்யப்படாவிட்டாலும் , சட்டம் அல்லது விதிகள் அல்லது அவற்றின்கீழ் செய்யப்பட்ட பிற ஒழுங்குமுறை விதிகளில் பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறு பொருள் கொள்ளப்படுதல் வேண்டும் .

பாகம் அ – பொது

3. நோக்கம்

3.1 மாநில மின் கட்டமைப்பு விதித்தொகுப்பு மற்றும் சட்டத்தில் கருதப்படுகிறவாறு முன்கணித்தல் , திட்டமிடல் மற்றும் அத்தகைய மின் உற்பத்தியாளர்களின் விலக்கத் தீர்வுக்கான அமைப்புமுறை மூலமாக மின் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பினை பேணுவதோடு தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியினை மின்கட்டமைப்புடன் ஒருங்கிணைக்க வசதி செய்வதே இந்த ஒழுங்குமுறை விதிகளின் நோக்கமாகும் .

3.2 மின் அமைப்பு முறையின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையினை பராமரிப்பதற்காக காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி ஆகியவற்றின் முன் கணித்தல்களை வாரத்திற்கு முன்னதான, நாளுக்கு முன்னதான மற்றும் ஒரு நாளுக்குள்ளான இயக்கங்கள் மற்றும் திட்டமிடல் மற்றும் அதனுடைய திட்டமிடலுக்காக நீண்டகால முன்கணித்தல்களை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் .

3.3 மின் கட்டமைப்பின் பாதுகாப்பிற்குட்பட்டு, முடிந்தவரையில் அதிகப்படியான, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு இடமளிப்பதற்காக மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மரபு சார்ந்த (conventional) மின் உற்பத்தி அலகுகளின் இணங்கு தன்மையையும் கட்டமைப்பிற்கிடையேயான இணை மின்தொடர்களின் திறனளவையும் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் .

4. பொருந்துகை

4.1 மாநிலத்திற்குள் மின்செலுத்துதல் அமைப்புடனோ (அ) மின்பகிர்வு அமைப்புடனோ, மாநிலத்திற்குள்ளோ (அ) வெளியோ சுய உபயோகத்திற்காகவோ (அ) விற்பனைக்காகவோ உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை ஒருங்கிணைந்த துணை மின் நிலையங்கள் மூலம் இணைந்துள்ளவை உள்ளடங்கலானவற்றோடு இணைக்கப்பட்ட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களோடு சேர்த்து கலவை (காற்றாலை மற்றும் சூரிய சக்தி) அமைப்புகள் (ஒரு மெகாவாட் திறனுக்கும் குறைவாயுள்ள மின்கட்டமைப்போடு கூடிய சூரிய மின்சக்தி போட்டோ வோல்ட் மின்உற்பத்தி அமைப்பு திட்டங்கள் (மேற்கூரை சூரிய மின்சக்தி போட்டோ வோல்ட் திட்டங்கள் தவிர) ஆகியவற்றுக்கும் இந்த ஒழங்குமுறை பொருந்தும் .

4.2 தேவையெனக் கருதினால் , முழுமையான பிழை, துல்லியமான அலைவரிசை (band) மற்றும் விலக்கக் கட்டணத்தினை வடிவமைத்தல் உள்ளடங்கலாக இந்த ஒழுங்குமுறைவிதிகளை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ ஆணையம் மறு ஆய்வு செய்தல் வேண்டும் .

பாகம் B - தொழில்நுட்ப ஏற்பாடுகள் : முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் விதித்தொகுப்பு

5. முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் விதித்தொகுப்பு

5.1 காற்றாலை / சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்கள் தங்களின் சார்பில் ஒரு தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையினை (QCA) நியமித்தல் வேண்டும் மற்றும் முன்கணித்தலும் மற்றும் திட்டமிடலும் தனித்தனியே விதித்தொகுப்பின் தேவைகளுக்கு இணங்கியிருத்தல் வேண்டும் .

வரம்புரையாக, மாநிலத்திலுள்ள அனைத்து காற்றாலை மற்றும் சூரிய சத்தி மின் உற்பத்தியாளர்கள் தனித்தனியே முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளுக்காக மாநிலத்தின் பெரும்பான்மையான மின்உற்பத்தியாளர்களால் நியமனம் செய்யப்பட்ட ஒரு ஒற்றைத் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையை ஈடுபடுத்துதல் வேண்டும். ஒற்றைத் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையை ஈடுபடுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் முறையே மின்உற்பத்தியாளர்களுக்கும், தகுதியாள ஒருங்கிணைப்பு முகமைக்கும் இடையிலான பரஸ்பர / இடைப்பட்ட ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படும்.

வரம்புரையாக, ஒழுங்குமுறை விதி 6.2 (a) மற்றும் (b)-இன் கீழ் உட்படாத மற்றும் சம்பந்தப்பட்ட பெரும்பான்மையான மின் உற்பத்தியாளர்களால் நியமிக்கப்பட்ட ஒற்றைத் தகுதியான ஒருங்கிணைப்பு முகமை / ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்தின் ஒற்றைத் தகுதியான ஒருங்கிணைப்பு முகமையின் சேவைகளைப் பெற விரும்பாத காற்றாலை / சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்கள், முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் சேவைகளுக்கு மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தின் சேவைகளைப் பெறலாம். எனினும், அத்தகைய மின் உற்பத்தியாளர்கள் ஒழுங்குமுறைவிதி 2(t) யில் வரையறுக்கப்பட்ட தகுதியான ஒருங்கிணைப்பு முகமைக்கான மீதமுள்ள பணிகளை தாமே மேற்கொள்ள கடமைப்பட்டுள்ளனர். எனினும் ஒரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்திற்குள் பல தகுதியான ஒருங்கிணைப்பு முகமை அனுமதிக்கப்படமாட்டாது.

வரம்புரையாக, முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் சேவைகளுக்கான சேவைக் கட்டணங்களுடன் பொருந்தக்கூடிய வரிகளையும் தகுதியான ஒருங்கிணைப்பு முகமை (கள்) / மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்க்கு, மின் உற்பத்தியாளர்களால் செலுத்தப்பட வேண்டும்.

வரம்புரையாக இந்த ஒழுங்குமுறைவிதியின் 2 ஆம் ஒழுங்குமுறைவிதியின் (r) உள் ஒழுங்குமுறைவிதியில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறு, ஒருங்கிணைந்த துணை மின்நிலையமாக அமர்த்தப்பட்ட ஒரு துணை மின்நிலையத்துடன் இணைந்துள்ள ஒரு தனிப்பட்ட மின்உற்பத்தியாளர் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையாக சொந்தமாக கடமையாற்ற விரும்பலாம் அல்லது ஒரு தனிப்பட்ட உறுப்பமைவினை அதனுடைய தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையாக அமர்த்தலாம் .

5.2 முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளுக்காக காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களால் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையை நியமனம் செய்வதை இந்த ஒழுங்குமுறை விதி சட்டப்பூர்வமாக்குகிறது. ஒழுங்குமுறைJuly 24, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 89 விதி 5.22 (h) இன் படி, மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் வெளியிடப்படும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் மின்உற்பத்தியாளர்கள் தகுதியான ஒருங்கிணைப்பு முகமையை நியமனம் செய்யத் தவறினால், அதன்பிறகு அத்தகைய மின்உற்பத்தியாளர்களுக்கு மாநில மின்சுமைப் பகுப்பு மையம் 90 நாட்களுக்குள் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையை நியமனம் செய்யுமாறு இரண்டாவது அறிவிப்பை வெளியிடல் வேண்டும். இந்த ஒழுங்குமுறை விதி வணிகச் செயல்பாட்டிற்கு வரும் தேதியிலிருந்து மின்கட்டமைப்பில் உட்செலுத்தப்படும் மின்சக்திக்கான கட்டுப்படுத்தப்பட்ட விலையில் 125 சதவீதத்தை விலக்கத் தீர்வு கட்டணங்களாக அத்தகைய மின்உற்பத்தியாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுதல் வேண்டும். மேலும், அந்த மின்உற்பத்தியாளர் 90 நாட்களுக்கும் மேலாக தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையை நியமிக்கவில்லை என்றால், அந்த மின்உற்பத்தியாளர் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையை நியமனம் செய்யும் வரையில் அவரது மாதாந்திர கட்டணப் பட்டியலில் இருந்து வசூலிக்கப்படும் முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் கட்டணங்களைத் தவிர, கட்டுப்படுத்தப்பட்ட விலையில் 150 சதவீதத்தை விலக்கக் தீர்வு கட்டணமாக அத்தகைய மின்உற்பத்தியாளரிடமிருந்து வசூலிக்கப்படும்.

வரம்புரையாக தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையினை நியமித்த பிறகு மின் உற்பத்தியாளர்(கள்) திட்டமிடாமல் மின்சக்தியை உட்செலுத்தினால், மாநில மின்சுமைப் பகுப்பு மையம் , உற்பத்தியாளர் (கள்) சார்பாக முன்கணித்தல் மற்றும் திட்டமிடலைச் செய்து உட்செலுத்திய மின்சக்திக்கான கட்டுப்படுத்தப்பட்ட விலையில் 125% அளவிற்கு விலக்கத் தீர்வுக் கட்டணங்கள் அந்த மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும். மாநில மின்சுமைப் பகுப்பு மையம் வழங்கும் இத்தகைய முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் விதித்தொகுப்பின் சேவைகளுக்கான கட்டணங்கள், மின்பகிர்மான உரிமதாரரால் மின் உற்பத்தியாளரின் (கள்) மாதாந்திர மின்கட்டண பட்டியலில் சேர்க்கப்படும்.

5.3 இந்த முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் விதித்தொகுப்பு மாநிலத்திற்குள்ளான மின்செலுத்தல் வலையமைப்பில் (மின்செலுத்தல் மற்றும் மின் பகிர்மான அமைப்புமுறை) இணைந்துள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களின் ஒரு நாளைக்கு முன்னதான / ஒரு நாளைக்குள்ளான திட்டமிடலின் முறை பற்றியும் அதனுடைய ஒன்றரை மணி நேர கால அளவு அடிப்படையிலான திருத்தியமைத்தல்கள் பற்றியும் மற்றும் அத்தகைய திட்டமிடப்பட்ட அளவுகளிலிருந்து அவைகளின் விலக்கங்களின் நடத்தும் முறைகளைப் பற்றியும் குறித்துரைக்கிறது. இந்த ஒழுங்குமுறைவிதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறு காற்றாலை மற்றம் சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்கள் தாமாகவோ அல்லது தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைகள் வாயிலாகவோ முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் விதித்தொகுப்பின் தேவைகளுக்கு இணங்கியிருத்தல் வேண்டும் .

5.4 இந்த ஒழுங்குமுறைவிதியின் நோக்கத்திற்காக தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை மாநில உறுப்பமைப்பாக பாவித்து நடத்தப்படுதல் வேண்டும் .

5.5 காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்உற்பத்தியாளர்களின் பெருன்பான்மையான அங்கீகாரம் பெற்ற ஒவ்வொரு தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையும் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்துடன் பதிவு செய்திடல் வேண்டும் . மாநில மின்சுமைப் பகுப்பு மையத்துடன் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையாகப் பதிவு செய்வதற்கான தகுதி அளவுகோல் மற்றும் கட்டணம், மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் வழங்கப்படும் விரிவான நடைமுறையில் குறிப்பிடப்படுவதை ஒழுங்குமுறைவிதி 5.21 இல் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் ஆணையத்தால் பிறகு ஒப்புதல் அளிக்கப்படும்.

5.6 தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையின் நியமனத்தில் எது உள்ளடங்கியிருந்த போதிலும், கடமைகள் மற்றும் பொறுப்புகள் இந்த ஒழுங்குமுறை விதிகளோடு தொடர்புடைய வகைமுறைகளுக்கு இணங்கியிருப்பது சம்பந்தப்பட்ட மின்உற்பத்தியாளர்களையேச் சார்ந்து இருத்தல் வேண்டும். மின்உற்பத்தியாளர்களுக்கும் அவர்களுடைய தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கும் இடையிலான வணிக மற்றும் பிற விதிமுறைகளும், வரையறைகளும் அவர்களுடைய இடைப்பட்ட ஒப்பந்தங்களாலோ அல்லது ஈடுபடுத்தும் விதிமுறைகளாலோ நிர்வகிக்கப்படுதல் வேண்டும்.

5.7 பின்வருவனவை உட்பட ஆனால் அவற்றிற்கு வரம்பிடப்படாமல் , இந்த ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மின் உற்பத்தியாளர்களால் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை நியமனம் செய்யப்படுதல் வேண்டும் ;

(a) மின்உற்பத்தியாளர்களின் திட்டமிடப்பட்ட மொத்த மின்உற்பத்தி, மின்பயனீட்டுக் கணக்கீடு மற்றும் தரவு சேகரித்தலும் மற்றும் மின்பகிர்மான உரிமதாரர்கள் , மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மற்றும் பிற முகமைகளுடன் அவற்றின் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு;

(b) மின்உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கும் இடையிலான பரஸ்பர / இடைப்பட்ட உடன்படிக்கைகளின் படி மின்உற்பத்தியாளர்களின் அங்கத்தினருக்குள் விலக்கக் கட்டணங்களைப் பிரித்தல் மற்றும் விலக்கக் கட்டணங்களை மாநில மின்சுமைப் பகுப்பு மையம், மின்பகிர்மான உரிமதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட மின்உற்பத்தியாளர்களுக்குத் தெரியப்படுத்துதல்.

(c) காற்றாலை / சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களால் மாநிலத்திற்காக தேர்வு செய்யப்பட்ட ஒற்றைத் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையை பொறுத்தமட்டில், தன்பயன் மின்நுகர்வை சரிசெய்வதற்காகவும் / தமிழ்நாட்டிற்குள்ளேயும் மற்றும் வெளியேயும் தனித்தனியே மின்சாரத்தை விற்பனை செய்வதற்காகவும் மாநிலத்திற்கான மொத்த மின்உற்பத்தியை திட்டமிடுவதற்கு பொறுப்பானவர் ஆவர். மின்உற்பத்தியாளர்களால் ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்திற்குள் ஈடுபடுத்தப்படும் பலதரப்பட்ட தகுதியான ஒருங்கிணைப்பு முகமையாளர்களைப் பொறுத்தமட்டில், தன்பயன் மின் நுகர்வை சரிசெய்வதற்காக திட்டமிடுவதற்காகவும் / தமிழ்நாட்டிற்குள்ளேயும் மற்றும் வெளியேயும் தனித்தனியே மின்சாரத்தை விற்பனை செய்வதற்காகவும் சம்பந்தப்பட்ட தங்களது மின்உற்பத்தியாளர்களின் மின்உற்பத்தியை திட்டமிடுவதற்கு பொறுப்பானவர்கள் ஆவர்.

(d) தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை மற்றும் காற்றாலை / சூரிய சக்தி மின்உற்பத்தியாளர்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் குறைந்தபட்ச கால அளவு இரண்டு ஆண்டுகளாக இருத்தல் வேண்டும். புதிய முன்னேற்பாடு நடைமுறைப்படுத்தும் வரை, தற்போதுள்ள தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை மேலும் 1 வருடம் தொடரும்.

e) மாநில மின்சுமைப் பகுப்பு மையம் அதன் விரிவான நடைமுறையில், தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கான வணிக விதிகள்/நிகர மதிப்பு தேவை, அனுபவம் போன்ற தகுதிகள் மற்றும் பிற அளவுகோல்களைக் குறிப்பிட வேண்டும்.

90 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

5.8 இந்த ஒழுங்குமுறைவிதிகளின் நோக்கங்களுக்காக மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மற்றும் அதனுடைய மின் உற்பத்தியாளர்களுக்கிடையே அந்த ஒருங்கிணைப்பு முகமையாக தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை இருத்தல் வேண்டும் .

5.9 தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை, அது பிரதிநிதித்துவம் செய்யும் மின் உற்பத்தியாளர்களின் தொழில்நுட்ப விவரக் குறிப்பீடுகளை பதிவு செய்யும் காலத்திலோ அல்லது மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் அதனுடைய விரிவான நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய கால அளவிலோ மற்றும் இவ்விவரக் குறிப்பீடுகளில் மாறுதல் இருக்கும்போது குறிப்பிட்ட படிவத்தில் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு அனுப்புதல் வேண்டும் .

5.10. மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு தேவைப்படலாகும் உள்ளபடியான காலத்திற்கான மின் உற்பத்தி தொடர்பான அளவுருக்கள் மற்றும் வானிலை தொடர்புடைய தரவுகளை தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை அளித்தல் வேண்டும் .

5.11 மின் உற்பத்தியாளர்களால் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான மின்கணக்கீட்டை நிர்வகிக்கும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் (மின்னளவிகளை நிறுவுதல் மற்றும் இயக்குதல்) ஒழுங்குமுறை விதிகள், 2006 மற்றும் அதன் திருத்தங்களின் தொடர்புடைய வகைமுறைகளுக்கு உட்பட்டு மின்திறனை கணக்கீடும் தானியங்கி மின் அளவு பதிவிடும் (AMR) வசதி மற்றும் தடையில்லா தரவு பரிமாற்றம் செய்யும் மின்னளவிகளை மின்சக்தி கணக்கீடு செய்வதற்காக நிறுவுதலை தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை(கள்) உறுதி செய்தல் வேண்டும்.

5.12. ஒவ்வொருவகை மின்ஆதாரத்திற்காகவும் மற்றும் மாநிலங்களுக்குள்ளும் / மாநிலங்களுக்கும் இடையேயான மின்பரிமாற்றங்களுக்காவும் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் வழங்கப்பட்டுள்ள விளக்க நடைமுறைப் படிவங்களில் தனித்தனியே மாநிலத்திற்குள் மின்செலுத்தல் அமைப்புடன் இணைக்கப்பட்ட காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் மற்றும் சூரிய மின்உற்பத்தியாளர்கள் தொடர்பான மின்கணித்தல் பற்றியும் மற்றும் நேர்வுக்கேற்ப மாநிலத்திற்குள்ளும் (அ) மாநிலத்திற்கு இடையேயும் மேற்கொள்ளப்பட்டுள்ள மின்விற்பனை ஒப்பந்தங்களைப் பற்றியும் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை அளித்தல் வேண்டும்.

5.13. பாதுகாப்பான மின் கட்டமைப்பு இயக்கத்திற்கு தேவைப்படும் சமநிலையான மின்வள ஆதாரங்களை சமநிலைப்படுத்த சிறந்த முறையில் திட்டமிடுதலுக்காக தேவையெனில் முன்கணிக்கும் முகமைகளை அமர்த்தி மாநிலத்திற்குள்ளான மின்செலுத்தல் வலையமைப்பின் ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையங்களிலும் உட்செலுத்த எதிர்பார்க்கப்படும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்உற்பத்தி தொடர்பான முன்கணிப்பினையும் மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மேற்கொள்ளுதல் வேண்டும் .

5.14. மாநிலத்திற்குள் மின்செலுத்தல் அமைப்புமுறையுடனும் / ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்துடன் இணைக்கப்பட்ட காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்உற்பத்தியாளர்களின் திட்டமிடலை தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைத் தனி அட்டவணைகளில் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும் .

வரம்புரையாக, ஒற்றைத் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை இருக்கையில், மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்உற்பத்தியாளர்களின் மொத்த திட்டமிடலினை, மாநிலத்திற்குள்ளும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மின்பரிமாற்றங்களை, ஒவ்வொரு கால அளவிற்கும் தனித்தனியாக அட்டவணைப்படுத்தி தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும் . எனினும் ஒருங்கிணைந்த துணை மின்நிலையம் வாரியான திட்டமிடலினை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும்

5.15 தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கு மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலை / சூரிய சக்தி மின்உற்பத்தியை திட்டமிடுவதில் சிரமம் இருந்தால், ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையம் வாரியான தனித்தனியாக அட்டவணையை வழங்கலாம், அந்நிலையில், விலக்க கட்டணங்கள் ஒருங்கிணைந்த துணை மின் நிலையம் வாரியாகக் கணக்கிடப்படும்.

5.16. விலக்கம் நிர்ணயம் மற்றும் தீர்வுக்கான காரணங்களுக்காக தனது சொந்த முன்கணிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அட்டவணையை மாதிரி அட்டவணையாக தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு அளிக்க வேண்டும்.

வரம்புரையாக, தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தின் முன்கணிப்பினை பின்பற்றுவதற்கு விருப்பத் தேர்வு செய்தால் , அத்தகைய முன்கணித்தலில் ஏற்படும் பிழைகளின் பின்விளைவுகளினால் திட்டமிடலில் ஏற்படும் விலக்கங்களை சம்பந்தப்பட்ட தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் .

5.17. மின்உற்பத்தியாளர்களுக்கு தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை (கள்) வழங்கும் முன்கணித்தல் மற்றும் திட்டமிடல் சேவைகளுக்காக அவர்களுக்கிடையேயான உடன்படிக்கைகளின்படி ஒப்புக் கொள்ளப்பட்ட அத்தகைய கட்டணங்களை மின்உற்பத்தியாளர்களால் சம்பந்தப்பட்ட தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கு நேரடியாக செலுத்த வேண்டும்.

5.18 மாநில மின் கட்டமைப்பில் கிடைக்கக்கூடிய மற்றும் தேவைக்குமேல் அதிகம் கிடைக்கக்கூடிய மின்திறனை மதிப்பீடு செய்வதற்காக தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை ஒரு நாளுக்கு முன்னதாக மற்றும் ஒரு வாரத்திற்கு முன்னதாக உள்ள அட்டவணையினை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு அளித்தல் வேண்டும் . மாநிலம் முழுவதுமான ஒருங்கிணைப்பு பொறுத்தவரையில், தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை, இடை இணைப்புப் புள்ளிகள் / உற்பத்தி நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள மின் அளவியில் அளவிடப்படும் மின்னுற்பத்தியைக் கொண்டு முன்கணித்தலை வழங்க வேண்டும்.

வரம்புரையாக, ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்திற்கான திட்டமிடல் அளவைத் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைத் தனித்தனியாகத் தொகுத்து அதனை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும் .

5.19 ஒரு நாளுக்கு முன்னதாக உள்ள அட்டவணையானது அடுத்த நாளின் 00-00 மணியிலிருந்து ஒவ்வொரு 15 நிமிட காலத் தொகுதியிலிருந்து அந்த நாளின் அனைத்து 96 காலத் தொகுதியிலும் காற்றாலை அல்லது சூரிய சக்தி மின் உற்பத்தியினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் மற்றும் ஒரு வாரத்திற்கு முன்னதான அட்டவணையானது அடுத்த ஏழு நாட்களுக்கான அதே தகவல்களை கொண்டுள்ளதாக இருத்தல் வேண்டும் .

July 24, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 91

5.20 (a) மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு முன்னறிவிப்பு வழங்கிவிட்டு மாநிலத்திற்குள் மின்செலுத்தல் வலையமைப்புடன் (தொகுக்கப் பெற்ற பரிமாற்றங்கள் நீங்கலாக) இணைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியாளர்களின் அட்டவணையினை தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை திருத்தியமைக்கலாம் .

(b) அத்தகைய திருத்தியமைப்புகள் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ள காலத் தொகுதிக்கு அடுத்து வரும் 6-வது கால அளவு தொகுதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும் .

(c) ஒரு குறிப்பிட்ட நாளில் பெருமமாக 16 திருத்தியமைத்தல்களுக்குட்பட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் 00-00 மணியிலிருந்து ஒவ்வொரு ஒன்றரை மணி நேர கால இடைவெளியிலும் ஒரு திருத்தியமைத்தல் இருக்கலாம் .

5.21 இந்த ஒழுங்குமுறை விதி வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குள் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் சமர்ப்பிக்கப்படும் விரிவான நடைமுறையில் முன்கணிப்பை சமர்ப்பிப்பதற்கானப் படிவங்கள் மற்றும் பிற முறைகள் மற்றும் தேவைகளைப் பற்றி குறித்துரைக்கப்பட்டுள்ளதை ஆணையம் பதினைந்து நாட்களுக்குள் ஒப்புதலளிக்க வேண்டும் .

வரம்புரையாக, நடைமுறையினை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பணிந்தனுப்புவதற்கு முன்னர் வரைவு நடைமுறையினை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்டவர்களின் கலந்தாய்வை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் ஒப்புதலுக்கான அத்தகைய வரைவு நடைமுறை சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்கள் மற்றும் மின்சுமைப் பகுப்பு மையத்தின் பதிலுடன் அட்டவணைப்படுத்தப்பட்ட வடிவத்தில் இணைக்கப்படுதல் வேண்டும் 5.22 (5)ம் ஒழுங்குமுறைவிதி (21) ஆம் உள் ஒழுங்குமுறைவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான நடைமுறையானது பின்வருவனவற்றை கொண்டிருத்தல் வேண்டும் :

(a) மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைகளை பதிவுசெய்தல் மற்றும் பதிவை நீக்குதலுக்கான கட்டணங்கள் மற்றும் தண்டத்தொகைகள் செலுத்தல் உட்பட நடைமுறை மற்றும் தேவைகள் ;

(b) தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைகளிடமிருந்து மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு தேவைப்படும் தகவல் , தரவுகள் மற்றும் படிவங்களை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

(c) தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கும் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்குமிடையே தகவல் மற்றும் தரவுகளைப் பரிமாற்றம் செய்வதற்கான தகவல் தொடர்பு முறை மற்றும் நெறிமுறை;

(d) மாநில மின்சக்தி கணக்கியல் கட்டமைப்பிற்குள்ளான காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி பரிமாற்றத்திறனுடைய மின்சக்தி மற்றும் விலக்க கணக்குகளை இந்த ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள கோட்பாட்டிற்கிணங்கிய விளக்கமான உதராணங்களுடன் கூடிய வழிகாட்டுதல்கள்;

(e) முன்கணித்தல் மற்றும் திட்டமிடலை தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைகளால் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கான இயக்கமுறை ;

(f) தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைகளால் மாநில ஒருங்கிணைந்த தீர்வில் ஏற்படும் தவறுகை நிலைமைகள் மற்றும் அவர்களை நடத்தும் முறை;

(g) நேர்விற்கேற்ப, மின்உற்பத்தியாளர்(கள்) / தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை(கள்)களால் கடனுறுதிக் கடித வடிவிலான கட்டணப் பாதுகாப்பு இயக்கமுறை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு ஆதரவாக அளித்தல்;

(h) வணிகச் செயல்பாட்டின் தேதிக்கு முன்னர் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையை நியமிக்க வலியுறுத்தி அனைத்து மின் உற்பத்தியாளர்களுக்கும் ஒரு மாதத்திற்கு முன் அறிவிப்பு வெளியிடல்;

(i) தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கான தகுதி மற்றும் பிற அளவுகோல்கள்.

5.23 முன்கணித்தல் அடிப்படையில் அட்டவணையில் இருந்து விலக்கல்களின் வணிகரீதியான தாக்கத்தை மின் உற்பத்தியாளர்கள் ஏற்க வேண்டும்.

5.24 மாநில நிறுவனங்கள் தங்கள் உபகரணங்கள் மற்றும் மின் சுமைகளை இந்திய மின் கட்டமைப்பு விதித்தொகுப்பு மற்றும் தமிழ்நாடு மின் கட்டமைப்பு விதித்தொகுப்பு ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்க இயக்க வேண்டும்.

5.25 சூதாட்டத்தில் ஈடுபடுதலை நடத்தும் முறை

(a) தனது சொந்த தேவையற்ற வணிக ஆதாயத்திற்காகவோ (அ) மின்உற்பத்தியாளரின் ஆதாயத்திற்காகவோ (அ) முன்கணித்தல் தொடர்பான ஆபத்தைத் தவிர்ப்பதற்காகவோ தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையால் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு திட்டமிடப்பட்ட மின்உற்பத்தியினை எந்த தவறான உள்நோக்கம் கொண்ட அறிவிப்பாக்கவோ (அ) குறைந்த அளவாகவோ அறிவிப்பது என்பது சூதாட்டமாகக் கருதப்படும் மற்றும் இந்த ஒழுங்குமுறை விதிகளை மீறுவதாகக் கட்டமைக்கப்படும்.

(b) மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் சூதாட்டத்தில் ஈடுபடுதல் அடையாளம் காணப்பட்டபின்னர் , அதவாது தவறான உள்நோக்கம் கொண்டு திட்டமிப்பட்ட மின் உற்பத்தி விதிக்கப்படலாகும். விலக்கக் கட்டணங்களுக்கு மூன்று மடங்கு தண்டத்தொகையை, தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை / மின்உற்பத்தியாளர் செலுத்துவதற்கு பொறுப்புடையதாக இருத்தல் வேண்டும் .

(c) மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் வெளியிடப்படும் செயல்முறையின் படி மாநில ஒருங்கிணைந்த விலக்கத் தீர்வு இயக்கமுறைக்கு தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையால் (யாளர்களால்) / மின்உற்பத்தியாளரால் (யாளர்களால்) தண்டத்தொகை செலுத்தப்படுதல் வேண்டும் .

(d) விரிவான நடைமுறையில் வரையறுத்துள்ளபடி, உரிய அறிவிப்பு வழங்கிய பின்னர் , தவறாக அறிவித்தல் நிகழ்வுகள் தொடருமெனில் , மாநில மின்சுமைப் பகுப்பு மையம் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையின் பதிவினை ரத்து செய்யலாம் .

92 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

(e) திட்டமிடப்பட்ட மின்உற்பத்தி பூஜ்ஜியமாக இருக்கும் நிலையில் காற்றாலை / சூரிய சக்தி மின்உற்பத்தியாளர் (கள்) மூலம் ஒரு குறிப்பிட்ட 15 நிமிட காலத் தொகுதியில் உள்ளபடியான உற்பத்தி இருந்தால், அந்த மின்உற்பத்தியாளரிடமிருந்து விலக்கத் தீர்வு கட்டணங்களாக உட்செலுத்தப்பட்ட மின்சக்திக்கான கட்டுப்படுத்தப்பட்ட விலையில் 125 சதவீதம் வரை வசூலிக்கப்படும்.

6. தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை நியமனம் செய்தலின் அடிப்படைக் கொள்கைகள்

6.1. ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்துடன் இணைந்துள்ள மின் உற்பத்தியாளர்கள்

(i) மாநிலம் முழுவதற்குமான ஒற்றை தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையாகவோ அல்லது (ii) மின் உற்பத்தியாளர்கள் இணைந்துள்ள அந்தந்த ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்திற்கான தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்காகவோ அல்லது (iii) ஒழுங்குமுறைவிதி 5.1 ல் வரையறைக்கப்பட்டவாறு மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தின் முன்கணித்தலை தழுவுவாதற்காகவே ஒரு நபரையோ அல்லது உறுப்பமைவினையோ நியமனம் செய்யலாம் .

வரம்புரையாக, ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்திற்காக பெரும்பான்மையான மின்உற்பத்தியாளர்களால் நியமிக்கப்பட்ட தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையானது, அந்த ஒருங்கிணைத்த துணை நிலையத்தின் அனைத்து மின்னுற்பத்தியாளர்களுக்கும் ஒரு தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையாக கருதப்படும்.

வரம்புரையாக மேலும், பல்வேறு ஒருங்கிணைந்த துணை மின் நிலையத்திற்கும் ஒரே தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை நியமிக்கப்படலாம் ஆனால் ஒரு ஒருங்கிணைந்த துணை மின் நிலையத்திற்கு பல தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைகள் அனுமதிக்கப்படலாகது.

வரம்புரையாக மேலும், அத்தகைய தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை(கள்) நியமனம் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் மின் உற்பத்தியாளர்களால் நியமனம் செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், ஒழுங்குமுறைவிதி 5.15ல் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

6.2 தகுதியான ஒருங்கிணைப்பு முகையின் நியமனம் பின்வரும் வழிகளில் மேற்கொள்ளப்படும்-

a) மாநிலம் தழுவிய ஒருங்கிணைப்புக்காக பெரும்பன்மையான காற்றாலை/சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களால் அவரவர் நிறுவுத்திறன் அடிப்படையில், தனித்தனியாக நியமிக்கப்பட்ட ஒற்றைத் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை;

b) ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்தின் அங்கமான மின்உற்பத்தியாளர்களால் பெரும்பன்மை முறையில் அவரவர் நிறுவுத்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்திற்கான நியமனம் செய்யப்பட்ட தகுதியான ஒருங்கிணைப்பு முகமை. ஒரு ஒருங்கிணைத்த துணை மின்நிலையத்திற்கான தகுதியான ஒருங்கிணைப்பு முகமை மற்ற ஒருங்கிணைத்த துணை மின்நிலையங்களுக்கும் தகுதியான ஒருங்கிணைப்பு முகமையாக இருக்கலாம்.

c) ஒரே ஒரு மின் உற்பத்தியாளர் மட்டும் இணைக்கப்பட்டுள்ள எந்த ஒருங்கிணைந்த துணை மின் நிலையத்திலும், அத்தகைய மின் உற்பத்தியாளரே தாமாக தகுதியான ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படலாம் அல்லது தகுதியான ஒருங்கிணைப்பு முகமையாக வேறு முகமையை நியமிக்கலாம்.

6.3. தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை தங்கள் சார்பில் இந்த ஒழுங்குமுறைவிதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள அலுவற்செயற்பணிகளை மேற்கொள்வதற்கும் மற்றும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் தொழில்நுட்பமாக மற்றும் நிதி நிலையில் தகுதி வாய்ந்ததாக உள்ளது என்பதை மின்உற்பத்தியாளர்கள் தாங்களே மனநிறைவு கொள்ளுதல் வேண்டும் .

6.4. தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையின் அலுவல் தொடர்பான விதிமுறைகள் பின்வரும் நோக்கங்கள் குறித்தான வகைமுறைகளை உள்ளடக்குதல் வேண்டும் :

(a) தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை மற்றும் மின்உற்பத்தியாளர்களின் பங்குகள் மற்றும் பொறுப்புகள் ;

(b) மின்னளவியிடல் , பட்டியலிடல் மற்றும் மின்சக்தி கணக்கு வைப்பு ஏற்பாடுகள் ;

(c) பிரித்தலுக்கான அடிப்படைக் கொள்கைகள் உள்ளடங்கலாக விலக்கக் கட்டணங்களை மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வசூல் செய்வதற்கான முறையியல்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வு;

(d) செலுத்தலுக்கான பாதுகாப்பு இயக்கமுறை மற்றும் தொடர்புடைய வகைமுறைகள் ;

(e) புறக்கணிப்பு மற்றும் அவர்களின் தணிப்பு நிகழ்வுகள்;

(f) மின்உற்பத்தியாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் முன்கணித்தல் தேவைகளை வழங்குவதற்கான கட்டணங்கள் அவர்களால் பரஸ்பர முறையில் தீர்க்கப்படவேண்டும்;

பகுதி சி - வணிக ஏற்பாடுகள்

7. மாநிலத்திற்குள்ளான மின் பரிமாற்றங்களுக்கான விலக்கத் தீர்வு

7.1 மாநிலத்திற்குள் மின்செலுத்தல் வலையமைப்புடன் இணைந்துள்ள சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டிற்குள் விற்பனை செய்யும் மின்சாரத்திற்கான விலை அவர்களின் உள்ளபடியான மின்உற்பத்தி அடிப்படையில் கொள்முதல் செய்பவர்களால் தீர்வு செய்யப்படுதல் வேண்டும் மற்றும் இந்த ஒழுங்குமுறைவிதிகளில் குறித்துரைக்கப்பட்டவாறு விலக்கத் தீர்வு நடவடிக்கைகள் மின்உற்பத்தியாளர்களால் முறையே மேற்கொள்ளப்படுதல் வேண்டும் . மின் உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு மாதாந்திர பட்டியலிலும் ஒழுங்குமுறைவிதி 7.2-இன் கீழான வகைமுறைகளின்படி தற்காலிக விலக்கக் கட்டணங்களை பட்டியலிடல் மாதத்தின் மொத்த மின்உற்பத்தி அலகுகளுக்கான கட்டுப்படுத்தப்பட்ட விலையில் செலுத்த வேண்டும் மற்றும் நிதியாண்டின் இறுதியில் இறுதித் தீர்வு அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மேற்கொள்ளப்படும்.

July 24, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 93

7.2 தமிழ்நாட்டிற்குள் மின் விற்பனை அல்லது தன்பயன் மின்நுகர்வினைப் பொருத்தமட்டில் , ஒரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்தில் காற்றாலை அல்லது சூரிய மின் சக்தி உற்பத்தியாளரின் உள்ளபடியான மின் உட்செலுத்தல் திட்டமிடப்பட்ட மின்உற்பத்தியிலிருந்து மாறுபடுமானால் , மிகை அல்லது குறைவுக்கான விலக்கக் கட்டணமானது மின்உற்பத்தியாரால் பின்வரும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மூலமாக மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கில் செலுத்தப்படுதல் வேண்டும் .

அட்டவணை 1: தமிழ்நாட்டிற்குள் விற்பனைக்காகவோ அல்லது தன்பயன் நுகர்வுக்காகவோ குறைவான அல்லது மிகுதியான காற்றாலை மின் உட்செலுத்தலுக்கான விலக்கக் கட்டணம்

வ . எண் 15 நிமிட காலத் தொகுதியிலான முழுமையான பிழை விழுக்காடு அளவில் மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கில் செலுத்த வேண்டிய விலக்கக் கட்டணம் (காற்றாலை மற்றும் சூரிய சக்தி)
1 15 விழுக்காட்டிற்கு குறைவானதாகவோ அல்லது சமமாகவோ இருத்தல் ஒன்றுமில்லை
2 15 விழுக்காட்டிற்கு மிகையாக ஆனால் 20 விழுக்காட்டிற்கு குறைவாக அல்லது சமமாக இருத்தல் யூனிட் ஒன்றுக்கு ரூ.0.25 வீதம்
3 20 விழுக்காட்டிற்கு மிகையாக ஆனால் 30 விழுக்காட்டிற்கு குறைவாக அல்லது சமமாக இருத்தல் 15 விழுக்காட்டிற்கு அப்பால் மற்றும் 20 விழுக்காடு வரையிலும் குறைவு அல்லது மிஞ்சிய அளவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.0.25 வீதம் + 20 விழுக்காடுக்கு அப்பால் மற்றும் 30 விழுக்காடு வரையிலுமான மீதி மின்சக்திக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.0.50 வீதம்
4 30 விழுக்காட்டிற்கு மிகுதியாக இருத்தல் 15 விழுக்காட்டிற்கு அப்பால் மற்றும் 20 விழுக்காடு வரையிலும் குறைவு அல்லது மிஞ்சிய அளவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.0.25 வீதம் + 20 விழுக்காட்டிற்கு அப்பால் மற்றும் 30 விழுக்காடு வரையிலும் குறைவு அல்லது விஞ்சிய அளவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.0.50 வீதம் + 30 விழுக்காட்டிற்கு அப்பால் மீதி மின்சக்திக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.25 வீதம் .

அட்டவணை 2: தமிழ்நாட்டிற்குள் விற்பனைக்காகவோ அல்லது தன்பயன் நுகர்வுக்காகவோ குறைவான அல்லது மிகுதியான சூரிய சக்தி மின் உட்செலுத்தலுக்கான விலக்கக் கட்டணம்

வ . எண் 15 நிமிட காலத் தொகுதியிலான முழுமையான பிழை விழுக்காடு அளவில் மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கில் செலுத்த வேண்டிய விலக்கக் கட்டணம் (காற்றாலை மற்றும் சூரிய சக்தி)
1 10 விழுக்காட்டிற்கு குறைவானதாகவோ அல்லது சமமாகவோ இருத்தல் ஒன்றுமில்லை
2 10 விழுக்காட்டிற்கு மிகையாக ஆனால் 20 விழுக்காட்டிற்கு குறைவாக அல்லது சமமாக இருத்தல் யூனிட் ஒன்றுக்கு ரூ.0.25 வீதம்
3 20 விழுக்காட்டிற்கு மிகையாக ஆனால் 30 விழுக்காட்டிற்கு குறைவாக அல்லது சமமாக இருத்தல் 10 விழுக்காட்டிற்கு அப்பால் மற்றும் 20 விழுக்காடு வரையிலும் குறைவு அல்லது மிஞ்சிய அளவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.0.25 வீதம் + 20 விழுக்காடுக்கு அப்பால் மற்றும் 30 விழுக்காடு வரையிலுமான மீதி மின்சக்திக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.0.50 வீதம்
4 30 விழுக்காட்டிற்கு மிகுதியாக இருத்தல் 10 விழுக்காட்டிற்கு அப்பால் மற்றும் 20 விழுக்காடு வரையிலும் குறைவு அல்லது மிஞ்சிய அளவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.0.25 வீதம் + 20 விழுக்காட்டிற்கு அப்பால் மற்றும் 30 விழுக்காடு வரையிலும் குறைவு அல்லது விஞ்சிய அளவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.0.50 வீதம் + 30 விழுக்காட்டிற்கு அப்பால் மீதி மின்சக்திக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.25 வீதம் .

ஒரு நிதியாண்டில் , காற்றாலை / சூரிய சக்தி மின்உற்பத்தியாளரால் (களால்) விலக்கம் தொடர்பாக மாநில விலக்க ஒருங்கிணைப்புக் கணக்கில் (காற்றாலை மற்றும் சூரிய சக்தி) செலுத்தப்படும் மொத்த விலக்கக் கட்டணங்களானது, அலகு ஒன்றுக்கு உச்சவரம்பாக கட்டுப்படுத்தப்பட்ட விலையான 3 பைசாவை, மாநிலம் முழுவதுமான ஒட்டுமொத்த வருடாந்திர மின்உற்பத்தி அலகுளுடனோ / ஒருங்கிணைந்த துணை மின்நிலையம் (களின் ) மொத்த வருடாந்திர உற்பத்தியுடனோ பெருக்கி கணக்கிடுதல் வேண்டும் . நிதியாண்டில் கட்டுப்படுத்தப்பட்ட தொகையை விட விலக்கக் கணக்கு விவர அறிக்கையின்படி மிகையாக செலுத்தப்பட்டத் தொகை ஏதாவது இருப்பின் , அத்தொகையானது நிதியாண்டின் இறுதியில் அடுத்த பட்டியலில் வட்டியின்றி சரிசெய்து கொடுக்கப்பட வேண்டும் .

வரம்புரையாக, ஒழுங்குமுறைவிதி 4.2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆணையம் உச்சவரம்பு விகிதங்களை மறு நிர்ணயம் செய்யலாம்.

94 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

7.3 ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையம் , தனிப்பட்ட மின் உற்பத்தியாளர்கள் மற்றும் மாநிலம் முழுவதுமான மொத்த மின்உற்பத்தி மற்றும் காலத் தொகுதி வாரியான திட்டமிடல்கள் , உட்செலுத்தப்பட்ட உள்ளபடியான மின் உற்பத்தி மற்றும் விலக்கங்கள் குறித்தான பதிவுருக்கள் மற்றும் கணக்குகளை தனித்தனியாக மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மற்றும் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை பராமரித்தல் வேண்டும் .

7.4 ஒழுங்குமுறைவிதி 14-இல் குறித்துரைக்கப்பட்டவாறு, தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை, ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்தில் ஒவ்வொரு மின்உற்பத்தியாளரின் மின்சக்தி விலக்கங்கள் மற்றும் விலக்கக் கட்டணங்களைத் தனித்தனியாக பிரிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் .

7.5 சம்பந்தப்பட்ட மின்உற்பத்தியாளர்கள், மின்பகிர்மான உரிமதாரர் வழியாக மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திடம் விலக்கக் கட்டணத் தீர்வினை மேற்கொள்ள வேண்டும்.

7.6 சூறாவளி, கனமழை, வெள்ளம், பலத்த காற்று போன்ற அசாதாரண வானிலை காரணமாக ஏற்படும் கட்டாய மின் உற்பத்தி இழப்பினால் உருவாகும் விலக்கல்கள், ஆறு மணி நேரத்திற்கு முன்பே மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தில் தகுதியான ஒருங்கிணைப்பு முகமையினால் தெரிவிக்கப்பட்டால், மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தினால் உண்மைநிலை சரிபார்க்கப்பட்டபின்னர் விலக்கல் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் .

8. மாநிலங்களுக்கிடையேயான மின் பரிமாற்றங்களுக்கான விலக்கத் தீர்வு

8.1 மாநிலத்திற்குள் மின்செலுத்தல் அமைப்புமுறை அல்லது மின்பகிர்மான அமைப்புமுறையுடன் . இணைந்துள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியில் விற்பனை செய்யும் மின்சாரத்திற்கான விலை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (CERC) ஒழுங்குமுறைவிதியின் அடிப்படையில் , பெறுபவர்களால் (Procurers) தீர்வு செய்யப்படுதல் வேண்டும் . தகுதியான ஒருங்கிணைப்பு முகமை / மின்உற்பத்தியாளர்கள் மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனை அட்டவணையை மாநிலத்திற்குள்ளான பரிவர்த்தனைகளுடன் ஒருங்கிணைக்க அனுமதிக்கப்படமாட்டாது.

8.2 தொடர்புடைய மின்உற்பத்தியாளர் ஒரு தனிப்பட்ட மின்னூட்டி / மின்னளவு ஏற்பாடுகளின் வழியாக இணைந்திருந்தால் மட்டுமே, ஒரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்தில் மாநிலங்களுக்கிடையேயான மின்பரிமாற்றங்கள் அனுமதிக்கப்படுதல் வேண்டும் .

8.3 இந்த ஒழுங்குமுறைவிதிகளுக்கிணங்க மாநிலங்களுக்கிடையேயான மின் பரிமாற்றங்களில் நுழைய விரும்பும் மின்உற்பத்தியாளர் , தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை வழியாக, அதனுடைய மின்உற்பத்திக்கான தனிப்பட்ட திட்டத்தினை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கும் தொடர்புடைய மண்டல மின்சுமைப் பகுப்பு மையத்திற்கும் (RLDC) பணிந்தனுப்புதல் வேண்டும் .

8.4 உட்செலுத்தப்பட்ட மின்சக்தி அளவின் அடிப்படையில் அத்தகைய மின் உற்பத்தியாளருக்கான விலக்கத் தீர்வு கணக்கினை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் தயாரித்தல் வேண்டும் .

8.5 மாநிலத்திற்குள்ளான மின்செலுத்தல் வலையமைப்புடன் இணைந்துள்ள மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியில் மின்சாரம் விற்பனை செய்யும் மின் உற்பத்தியாளர்களின் அதிகமான / குறைவான மின் உட்செலுத்தலுக்கான விலக்கக் கட்டணங்கள் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய (விலக்கல் தீர்வு பொறிமுறை மற்றும் தொடர்புடைய விஷயங்கள்) ஒழுங்குமுறைவிதி 2022 –லும் மேலும் அவ்வவ்போது வெளியிடப்படும் திருத்தங்களில் குறித்துரைக்கப்பட்டவாறு இருத்தல் வேண்டும் மற்றும் இதற்கான கணக்கு வைப்பு மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் தனியாக செய்யப்படுதல் வேண்டும் .

9. மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாநிலத்திற்குள்ளான மின் பரிமாற்றங்கள் : பிற வகைமுறைகள்

9.1 ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்திலும் ஒவ்வொரு புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆதாரத்திற்குமான அதாவது, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாநிலத்திற்குள்ளான மின் பரிமாற்றங்கள் தொடர்பான விலக்கங்கள் தனித்தனியாக ஒருங்கிணைத்த துணை மின்நிலையம் (அ) மாநில அளவில் கணக்கு வைக்கப்படுதல் வேண்டும் .

9.2 மாநில மின் சுமை பகுப்பு மையம் திட்டமிட்ட மின் உற்பத்தி மற்றும் உள்ளபடியான மின் உற்பத்தி ஆகியவற்றிற்கான விலக்கல்களை கணக்கிட்டு மின் உற்பத்தியாளர்கள் செலுத்தவேண்டிய விலக்கல் கட்டணத்தை தீர்மானம் செய்து மாநிலத்திற்குள்ளான மின் பரிமாற்றங்களுக்கான பட்டியலை அவ்வாறாக மாதாந்திர முறையில் பட்டியலிடப்படும்

9.3 மாநிலங்களிடையிலான மின் பரிமாற்றங்களை பொறுத்தவரை, மாநில மின் சுமை பகுப்பு மையம் திட்டமிட்ட மின் உற்பத்தி மற்றும் உள்ளபடியான மின் உற்பத்தி ஆகியவற்றிற்கான விலக்கல்களை கணக்கிட்டு நிலைமைக்கேற்ப செலுத்தப்படவேண்டிய / பெறப்பட வேண்டிய விலக்கல் கட்டணத்தை முடிவு செய்து, மாதாந்திர விலக்கல் கணக்கு விவரங்களை தகுதியான ஒருங்கிணைப்பு முகமை (கள்)/ மின் உற்பத்தியாளர்(கள்) பார்வைக்காக மாநில மின் சுமை பகுப்பின் இணையதளத்தில் பதிவிடப்படும், அதன்படி தகுதியான ஒருங்கிணைப்பு முகமை / மின் உற்பத்தியாளர்(கள்) மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கில் (காற்றாலை மற்றும் சூரிய சக்தி) செலுத்தல் வேண்டும்

9.4 மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கில் (காற்றாலை மற்றும் சூரிய சக்தி) வசூலிக்கப்பட்ட தொகைகள் மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கில் (விலக்கத் தீர்வு இயக்கமுறை) ஏற்படும் குறைவுத் தொகைகளை ஈடுசெய்வதற்கு பயன்படுத்தப்படுதல் வேண்டும் .

9.5 மாநில மின்சுமைப் பகுப்பு மையம் , காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்உற்பத்தி தொடர்பான மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாநிலத்திற்குள்ளான மின்பரிமாற்றங்களுக்கான தனித்தனியான மின்சக்தி மற்றும் விலக்கக் கணக்குகளை தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கு வழங்குதல் வேண்டும் . அத்தகைய முகமை தொடர்புடைய மின் உற்பத்தியாளர்களின் விலக்கக் கட்டணங்களை தீர்வு செய்தல் வேண்டும் .

July 24, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 95

பாகம் D - செயற்படுத்தல் ஏற்பாடுகள்

10. மின்னளவியிடல்

10.1 மின்னளவியை நிர்வகிக்கும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்பட்டவாறு ஒவ்வொரு துணை மின்நிலையத்திலும் / உற்பத்தியாளரிடமும் மின்சக்தியை காலத்தொகுதியில் பதிவிடும் திறனுள்ள மின்சக்தி மின்னளவி (பிரதான மற்றும் சரிபார்க்கும்) இருத்தல் வேண்டும். இந்த மின்னளவிகள் தானியங்கி மின்னளவி அளவீடுகள் அமைப்பு முறையிலிருந்து கட்டளை அறிவுரை (command instruction) மூலமாக கால அளவு ஒத்தியக்கல் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் .

10.2 மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தில் இருக்கும் நடப்பிலுள்ள தானியங்கி மின்னளவி அளவீடுகள் அமைப்பு முறை ஏற்பாடுகளிலுள்ள தரவுகள் மின் உற்பத்தியாளர்களால் நியமிக்கப்பட்ட தகுதியான ஒருங்கிணைப்பு முகமை (களுடன்) பகிரப்படும். தகுதியான ஒருங்கிணைப்பு முகமை (கள்) மாநில மின் சுமை பகுப்பு மையத்தால் பகிரப்பட்ட சம்பந்தப்பட்ட தரவுகளை பெற்றுக்கொண்டு, பரிமாற்றம் மற்றும் பகுப்பாய்வு செய்யும் அமைப்பினை அம்மையத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு இல்லாவண்ணம் தாமாகவே ஏற்பாடுகளை செய்திடல் வேண்டும். தகுதியான ஒருங்கிணைப்பு முகமை ஒரு வலைதள முகப்பினை உருவாக்கி, உள்ளபடியான காலத்திற்கான திட்ட அட்டவணை மற்றும் உள்ளபடியான மின் உற்பத்தி விவரங்களை பங்குதாரர்கள் கண்காணிக்க அதனை அணுகும் வகையில் ஏற்பாடு செய்தல் வேண்டும். மாநில மின்சுமைப் பகுப்பு மையம், தகுதியான ஒருங்கிணைப்பு முகமை(களின்) கோரிக்கைக்கிணங்க, தகுதியான ஒருங்கிணைப்பு முகமை(களின்) முன்கணித்தல் நடவடிக்கைகளுக்கு துணைபுரியும் நோக்கத்திற்காக உள்ளபடியான காலத்திற்கான தரவுகளை வழங்க வேண்டும். எவ்வாறாயினும், அத்தகைய முன்னறிவிப்பில் ஏற்படக்கூடிய பிழையானது முற்றிலும் தகுதியான ஒருங்கிணைப்பு முகமை(களின்) பொறுப்பாகும். தானியங்கி மின்னளவி அளவீடுகள் அமைப்புமுறை செயலற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில், காற்றாலை/சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களுக்கான விலக்கல் தீர்வு அமைப்பின் கட்டணங்களைக் கணக்கிடுவதற்காக மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தின் கோரிக்கை கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து மூன்று பணிநாட்களுக்குள் உரிய உரிமதாரர் வாராந்திர 15 நிமிட நேர தொகுப்பின் தரவுகளை வழங்க வேண்டும். மின் உற்பத்தியை அளவிடும் மின் அளவுகள் (பிரதான/சரிபார்க்கும்) முடிந்தவரை எல்லா நேரத்திலும் செயல்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மின் அளவியின் தரவு இல்லாத நேரத்தில், உரிய காலத்திற்கான வரலாற்றுத் தரவுகளின்படி மதிப்பிடப்பட்ட யூனிட்டுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும். பழுதடைந்த மின் அளவி ஏதேனும் இருந்தால், 30 நாட்களுக்குள் மின் உற்பத்தியாளரால் மாற்றப்பட வேண்டும், அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட உரிமதாரர் மின் அளவியினை புதியதாக மாற்றியமைத்து தேவையான கட்டணங்கள் மின் உற்பத்தியாளரின் மாதந்திர மின் பட்டியலில் சரிசெய்யப்படும்.

10.3 மாநில மின் சுமை பகுப்பு மையம் ஒவ்வொரு 15-நிமிட காலஅளவுக்கான மின் உற்பத்தி அளவீடுகளை தகுதியான ஒருங்கிணைப்பு முகமைக்கு மாதாந்திர அடிப்படையில் வழங்கும் மேலும் அத்தகைய தரவுகள் ஒவ்வொரு மாதத்திற்கும் விரிவான நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட காலத்திற்குள் பகிரப்பட வேண்டும்.

10.4 தகுதியான ஒருங்கிணைப்பு முகமை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் வழங்கிய மின் அளவீடுகளை ஒருங்கிணைத்து, திட்டமிடப்பட்ட மின் உற்பத்தியுடன் ஒப்பிட்டு, மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு மாதாந்திர அடிப்படையில் விலக்கல்களை தெரிவிக்கும்.

10.5 விலக்கல் கட்டணங்கள் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் "திட்டமிடப்பட்ட மின் உற்பத்தி" மற்றும் "உள்ளபடியான மின் உற்பத்தி" விவரங்களின் அடிப்படையில் 15 நிமிட காலஅளவு வாரியாக கணக்கிடப்படும்.

10.6 கலப்பின (காற்றாலை /சூரிய சக்தி ) மின் உற்பத்தி அமைப்பிற்கு, காற்றாலை /சூரிய சக்தி மின் உற்பத்திக்கான மின் அளவீடு அமைப்புகள் தனித்தனியாக செய்யப்பட்டு, அதன்படி, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான விலக்கல்கள் தனித்தனியாகக் எடுத்துக்கொள்ளப்படும். அந்தந்த அளவீட்டு முறையானது மத்திய மின்சார அதிகார அமைப்பின் (மின் அளவிகளை நிறுவுதல் மற்றும் இயக்குதல்) விதிமுறைகள், 2006 மற்றும் அதில் வெளியிடப்பட்ட திருத்தங்களின்படி இருக்க வேண்டும்.

11. மாநில மின்சுமைப் பகுப்பு மையத்துடன் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையின் தகவல் தொடர்பு

11.1 மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் குறிப்பிடப்பெற்ற விரிவான நடைமுறை பின்வரும் நோக்கங்களுக்காக மட்டும் வரம்பிடப்படாமல் , அவைகள் உட்பட, தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை மற்றும் மாநில மின்சுமைப் பகுப்பு மையம் ஆகியவைகளுக்கிடையே கடைப்பிடிக்கத்தக்க தகவல் பரிமாற்ற நெறிமுறை குறித்தும் விவரிக்க வேண்டும் :

a) ஒரு நாளைக்கு முன்பான, ஒரு வாரத்திற்கு முன்பான மற்றும் நாளுக்கான திட்டமிடல் மற்றும் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கான ஏதாவது திருத்தியமைத்தல்கள் தொடர்பான தகவல் தொடர்பு.

b ) ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்தில் காலத் தொகுதி நேரம் வாரியான திட்டமிடப்பட்ட உற்பத்தி மற்றும் உள்ளபடியான மின்உற்பத்தி தரவு தொடர்பான தகவல் தொடர்பு.

c) மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திடமிருந்து தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கான மின் கட்டமைப்பு கட்டுப்பாடுகள் மற்றும் குறைக்கப்பட்ட நிலை தொடர்பான தகவல் தொடர்பு.

11.2 மாநில மின்சுமைப் பகுப்பு மையம் தனக்கும் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்குமிடையேயானத் தகவல் தொடர்புக்காக தேவையான தகவல் தொழில் நுட்பவியலை சாத்தியமாக்கும் தகவல் தொடர்பு மேடை மற்றும் தகவல் தொடர்புக்கான மென்பொருள் ஆகியவைகளை கொண்டிருத்தல் வேண்டும் .

11.3 மாநில மின்சுமைப் பகுப்பு மையம் அனைத்து மின் உற்பத்தியாளர்களின் திட்டமிடல்கள் மற்றும் விலக்கங்களுக்கான நடப்பிலுள்ள தரவுகளை அடைவதற்கு வசதி செய்யும் பொருட்டு தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பான தகவல் தொடர்பு மென்பொருள் உள்நுழை விவரங்களை அளித்தல் வேண்டும் .

96 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

11.4 பின்வருவன உட்பட, ஆனால் அவற்றிற்கு வரம்பிடப்படாமல் , தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பான தகவல் தொடர்பு மேடை மற்றும் மென்பொருள் மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மற்றும் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமை ஆகியவைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவாக இருத்தல் வேண்டும் :

a) மின் உற்பத்தியாளர் மின் தடங்கல்கள் மற்றும் அவற்றிற்கான காரணங்கள்

b) தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையால்/ மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் / உரிமம்தாரரால் செலுத்தப்பட / பெறப்பட வேண்டிய விலக்கக் கட்டணங்கள்

c) புலத் தன்மைகள் மற்றும் காற்றுச் சுழலிகள் சூரிய மின்தேக்கிகள் முதலியனவற்றின் விவரங்கள் . '

d) தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையால் ஒருங்கிணைந்த துணைமின் நிலையம் / மின் உற்பத்தியாளர்கள் வாரியான தருவாக்குகள் உட்பட கையாளப்பட்டுள்ள திட்டமிடல்கள் மற்றும் மின் உற்பத்தி.

12.0 விலக்கக் கணக்கு வைப்பு

12.1 மாநிலத்திற்கான விலக்கத் தீர்வு முறையியல் பின்வருமாறு இருத்தல் வேண்டும் :

a) மாநில மின்சுமைப் பகுப்பு மையம் முழுமையான பிழையினை கணக்கிடுதல் வேண்டும் . அதாவது, ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையம் தொடர்பான திட்டமிடப்பட்ட மின்உற்பத்திக்கும் மற்றும் உள்ளபடியாக உட்செலுத்தப்பட்ட மின்உற்பத்தியின் வேறுபாடு மற்றும் 7 ஆம் மற்றும் 8 ஆம் ஒழுங்குமுறைவிதிகளுக்கிணங்க விலக்கக் கட்டணத்திற்காக அவ்வாறாக செலுத்தப்படவேண்டிய / பெறப்படவேண்டிய தொகைகளை தீர்மானித்தல் வேண்டும்.

b) மாநிலத்திற்கு மொத்தமாக மாநில புற எல்லையில் செலுத்தவேண்டிய அல்லது பெறவேண்டிய விலக்கக் கட்டணங்கள் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் கணக்கிடப்படுதல் வேண்டும் .

c) காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியின் விலக்கத்தினால் ஏற்படும் விழைவுகள் மற்றும் மாநில புற எல்லையில் விலக்கக் கட்டணத்தில் அதனுடைய பங்களிப்பு ஆகியவற்றினை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் கணக்கிடுதல் வேண்டும் மற்றும் அவற்றிற்கான மாநில விலக்க ஒருங்கிணை கணக்கினை (காற்றாலை மற்றும் சூரிய சக்தி) தனித்தனியாக பராமரிக்க வேண்டும் .

13. விலக்கத் தீர்வுக்கான செலுத்துதல் அமைப்புமுறை மற்றும் செலுத்துதலில் பாதுகாப்பு

13.1 ஒவ்வொரு மின் உற்பத்தியாளரும் ஒழுங்குமுறைவிதி 7 ல் குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த மாதத்திற்குரிய மொத்த விலக்கக் கட்டணத் தொகையினை மாநில அளவிலான மொத்த தொகையாகவோ / ஒருங்கிணைந்த துணை மின்நிலையம் வாரியாகவோ / மின் உற்பத்தியாளர் வாரியாகவோ மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திடம் செலுத்துதல் வேண்டும்

13.2 தானியங்கி மின் அளவீடு (AMR)/ பொதுவான மின்னளவியில் மின்னளவிடும் கருவி (CMRI) அமைப்புகள் மூலம் பெறப்பட்ட உள்ளபடியான மின் உற்பத்தியின் அடிப்படையில், ஒவ்வொரு யூனிட் மின் உற்பத்திக்கும் ஒழுங்குமுறைவிதி 7.2 ல் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புத் தொகையின் அடிப்படையில், மின் உற்பத்தியாளர்கள் விலக்கல் கட்டணங்களுக்கானத் தொகையை தற்காலிகமாக செலுத்த வேண்டும். மின் உற்பத்தியாளர் விலக்கல் கட்டணங்களை தமது மாதாந்திர பட்டியல் அடிப்படையில் மின் பகிர்மான உரிமதாரர் வழியாக மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு செலுத்த வேண்டும்.

13.3 விலக்கல் கட்டணங்கள் செலுத்த வேண்டிய தேதிக்கு அப்பால் தாமதமானால், ஒவ்வொரு தாமதத்திற்கும் 0.06% எளிய வட்டி விதிக்கப்படும். மேலும், விலக்கல் கட்டணங்களில் ஏதேனும் அதிகப்படியான அல்லது பற்றாக்குறை இருந்தால், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் சரிசெய்யப்பட்டு, ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் 60 நாட்களுக்குள் மின் பகிர்மான உரிமதாரர் வழியாக மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வசூல் அல்லது மின் உற்பத்தியாளர்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறுதல் / சரிசெய்தல் செய்யப்படும்.

வரம்புரையாக விலக்கக் கட்டணங்களுக்கான, பட்டியல் வெளியிடப்பட்ட 12 நாட்களுக்கப்பால் விலக்கக் கட்டணங்கள் மற்றும் அதன் மீதான வட்டி, ஏதாவது இருப்பின் , அவைகளை செலுத்தத் தவறும் நேர்வில் விலக்கங்களுக்கான செலுத்தல்கள் அல்லது அவற்றின் மீதான வட்டி பெறப்படவேண்டிய தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைகளுக்கு / மின் உற்பத்தியாளர்களுக்கு மாநில ஒருங்கிணை விலக்கக் கணக்கில் (காற்றாலை மற்றும் சூரிய சக்தி) இருப்பிலுள்ள மீதித் தொகையிலிருந்து வழங்கப்படுதல் வேண்டும் .

14. விலக்கக் கட்டணங்களைப் பிரித்தல்

14.1 ஒவ்வொரு மின் உற்பத்தியாளர்களின் விலக்கக் கட்டணங்களை மின் உற்பத்தியாளர்களின் உள்ளபடியான மின் உற்பத்தியின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையால் பிரிக்கப்பட்டு விலக்கல் கட்டணங்களின் வருடாந்திர தீர்வு காணும் வகையில் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு அறிவித்தல் வேண்டும் .

15. குறைத்தலுக்கான தகவல் அளித்தல்

15.1 நெருக்கடியான சூழ்நிலைகளில் நம்பகமான மற்றும் பாதுகாப்பான மின் கட்டமைப்பு இயக்கத்திற்காக மின் உட்செலுத்தல் தொடர்பாக ஏதாவது குறைத்தல் இருந்தால் அதனை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த செய்தித் தொடர்பு மூலமாக தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கு தெரிவித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய குறைத்தலுக்கு விலக்கக் கட்டணங்கள் செலுத்த வேண்டியதில்லை.

15.2 ஒரு நாளின் சில காலத் தொகுதிகளில் மின்தொடர் பராமரிப்பாலோ அல்லது பிற காரணங்களினாலோ ஏதாவது குறைத்தல் திட்டமிடப்பட்டு மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தினால் தெரிவிக்கப்பட்டால் தகுதி வாய்ந்த ஒருங்கிணைக்கும் முகமை மின் உற்பத்தி செய்யும் இடத்தில் மின் உற்பத்தியை குறைப்பதோடு அவ்வாறாக மின் திட்டமிடலையும் மாற்றியமைப்பதற்கு பொறுப்பாக வேண்டும் . தவறினால் தேவைக்கேற்ப மின் திட்டமிடலை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மாற்றியமைத்தல் வேண்டும் .

July 24, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 97

15.3 இந்த ஒழுங்குமுறைவிதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் தனித்தனியாக "காற்றாலை மற்றும் சூரிய சக்தி" மின்உற்பத்திக்கான புதுப்பிக்கத்தக்க குறைப்பு மேலாண்மைக்கான விரிவான நடைமுறையை ஆணையம் வெளியிடும்.

16. மின்சக்தி கணக்கு வைப்பு

16.1 10 ஆம் ஒழுங்குமுறைவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடைமுக மின்னளவியின் பதிவுகளின் அடிப்படையில் மின்சக்தி கணக்கு வைப்பு மேற்கொள்ளப்படுதல் வேண்டும் ..

16.2 மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்த மின்நிலையத்திற்குள்ளான விலக்கங்கள் தொடர்பான அனைத்து கணக்குகளும் வாராந்தர அடிப்படையில் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையால் தயார் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அவை தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அமைப்புமுறை மற்றும் மென்பொருள் வழியாக மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தினால் அணுகத்தக்க வகையில் இருக்க வேண்டும்.

16.3 செயல்முறைக்குள்ளாக்கப்பட்ட தரவுகளை (processed data) மாதாந்திர அடிப்படையில் சம்பந்தப்பட்ட தகுதியான ஒருங்கிணைக்கும் முகமைக்கு குறிப்பிட்ட படிவத்தில் ஒருங்கிணைந்த துணை மின்நிலையம் / மின் உற்பத்தியாளர்களிடம் மாதாந்திர மின்சக்தி கணக்கு தயார் செய்வதற்காக மாநில மின்சுமைப் பகுப்பு மையம் அனுப்புதல் வேண்டும் .

16.4 பதினைந்து நாட்களுக்குள் தகுதியான ஒருங்கிணைக்கும் முகமையால் முரண்பாடுகள் ஏதாவது தெரிவிக்கப்பட்டால் , சரிபார்ப்புக்குப் பின்னர் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் உடனடியாக திருத்தம் செய்யப்படவேண்டும் .

16.5 காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்கள் மற்றும் மின்சாரம் பெறுபவர்களின் ஒவ்வொரு காலத் தொகுதிக்கான மின்சக்தி கணக்கு வைப்பு பட்டியலை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் மாதாந்தர அடிப்படையில் பட்டியலிடலுக்காக தயார் செய்தல் வேண்டும் மற்றும் அந்த தரவுகளை மின் பகிர்மான உரிமதாரருக்கு அனுப்பி வைக்க வேண்டும் . மாநில மின்சுமைப் பகுப்பு மையம் வகுத்துள்ள நடைமுறையின்படி மின் பகிர்மான உரிமதாரரின் பட்டியலிடல் மையம் மின்சாரம் பெறுபவர்களுடனான மின்சக்தி கணக்கு வைப்பு, பட்டியல்களை எழுப்புதல் மற்றும் தீர்வு செய்தல் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும் . ஆனால், 15 நிமிட காலத் தொகுதி வாரியான மின்உற்பத்தித் தரவை மின்பகிர்மான உரிமதாரருக்குப் பகிர்வதற்கு மாநில மின்சுமைப் பகுப்பு மையம் பொறுப்பாகும்.

16.6 5 ஆம் ஒழுங்குமுறைவிதியின் 22 ஆம் உள் ஒழுங்குமுறைவிதிக்கிணங்க சம்பந்தப்பட்டவர்களின் கலந்தாய்வு மேற்கொண்டு மின்சக்தி கணக்கு வைப்பு தொடர்பான ஒரு விரிவான நடைமுறையினை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் தயார் செய்தல் வேண்டும் மற்றும் : அதனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக பணிந்தனுப்ப வேண்டும் .

பாகம் E - பலவகை

17. திருத்தம் மேற்கொள்வதற்கான அதிகாரம்

ஆணையம் இந்த ஒழுங்குமுறைவிதிகளின் ஏதாவது வகைமுறைகளை, எந்த நேரத்திலும் மாற்றவோ, மாற்றியமைக்கவோ அல்லது திருத்தமோ மேற்கொள்ளலாம் .

18. மாநில அதிகாரக் குழுவின் நிர்வாக அமைப்பு மற்றும் அரசியலமைப்பு

18.1 இந்த ஒழுங்குமுறைவிதிகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் ஆணையம் மாநில அதிகாரக் குழுவை உருவாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, அத்தகைய குழுவிற்கான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் வணிகமுறை விதிகளை மாநில மின்சுமைப் பகுப்பு மையம் உருவாக்கும்.

18.2 மாநில அதிகாரக் குழு

a) வளங்களின் உகந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்காக மாநிலங்களுக்குள் மின்சக்தி பரிமாற்றத்தை ஒருங்கிணைத்து எளிதாக்குதல்.

b) மாநில முகமைகள் இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதைக் கண்காணித்து, நிதியாண்டின் முடிவிலிருந்து முப்பது நாட்களுக்குள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் வருடாந்திர இணக்க அறிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

c) நடைமுறைச் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்கான நடைமுறை(களை) மாற்றியமைக்க மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு வழிகாட்டவும்.

d) தகுந்த மாற்றங்கள்/செயல்பாட்டு நடைமுறைகளை வழங்குதல், நடைமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் இந்த ஒழுங்குமுறைவிதிகளில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தல் ஆகியவற்றுக்கு தேவையான ஆதரவையும் ஆலோசனையையும் ஆணையத்திற்கு வழங்கவும்.

வரம்புரையாக எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்த நேரத்திலும் அது இல்லாத காரணத்தால் மாநில அதிகாரக் குழுவை அமைக்காதது மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை எந்த வகையிலும் பாதிக்கப்படலாகாது அல்லது இந்த ஒழுங்குமுறைகளின் கீழ் செய்யப்பட்ட வரையறைகள் அல்லது எந்தவொரு ஆணை அல்லது நடவடிக்கையும் செயலாற்றலாகாது.

19. ரத்து மற்றும் சேமிப்பு

19.1 இந்த ஒழுங்குமுறைவிதிகளில் வழங்கப்பட்டுள்ளதைத் தவிர்த்து, "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (முன்கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்கல் தீர்வு மற்றும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி உற்பத்திக்கான தொடர்புடைய பொருட்கூறுகள்) விதிமுறைகள், 2019" மற்றும் அதன் நடைமுறைகள் இந்த ஒழுங்குமுறைவிதி நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து ரத்து செய்யப்படும்.

98 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

19.2 முந்தைய "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (முன்கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்கல் தீர்வு மற்றும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான தொடர்புடைய பொருட்கூறுகள்) விதிமுறை, 2019-இன் படி செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட அல்லது செய்யப்பட்டதாகக் கூறப்படும் எதுவும், சட்டப்பூர்வமானதாக கருதப்படுவதுடன் மற்றும் செல்லுபடியாகும்.

19.3 முந்தைய "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (முன்கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்கல் தீர்வு மற்றும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான தொடர்புடைய பொருட்கூறுகள்) ஒழுங்குமுறைகள், 2019" மூலம் எழும் எந்த உரிமைகள் மற்றும் பொறுப்புகள் அதன் கட்டமைப்பிற்குள் தீர்க்கப்படும்.

20. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்

இந்த ஒழுங்குமுறைவிதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஏதாவது இடையூறுகள் எழுமானால் , இடையூறுகளை நீக்குவதற்கு தேவைப்படுவதாக கருதப்படும் , சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரண்பாடற்ற பொதுவான அல்லது குறிப்பிட்ட ஆணை வாயிலாக அத்தகைய வகைமுறைகளை ஆணையம் செய்யலாம் .

21. தளர்த்துவதற்கான அதிகாரம்

எழுத்து மூலமாக பதிவு செய்யப்படும் காரணங்களுக்காகவும் மற்றும் தளர்த்துதல் வழங்குவதால் பாதிக்கப்படலாகும் தரப்பினர்களுக்கு கேட்கப்படுவதற்கான வாய்ப்பு நல்கிய பின்னர் ஆணையம் தானாகவோ அல்லது அக்கறையுள்ள ஒரு நபரால் அதன் முன்னர் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரிலோ இந்த ஒழுங்குமுறைவிதிகளின் ஏதாவது வகைமுறைகளை பொதுவான தனிச் சிறப்பாணை மூலமாக தளர்த்தி உத்தரவிடலாம் .

22. நெறியுறுத்துதல்களை வெளியிடுவதற்கான அதிகாரம்

2003 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் இந்த ஒழுங்குமுறைவிதி ஆகியவைகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, ஒழுங்குமுறைவிதியினை செயற்படுத்துவதற்கும் , பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மற்றும் இந்த ஒழுங்குமுறைவிதியின்படி ஆணைகள் மற்றும் நெறியுறுத்துதல்களைப் பிறப்பிப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு பொருட்கூறுகள் குறித்தும் , இந்த ஒழுங்குமுறைவிதியின் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு தேவைப்படுவதாக கருதப்படும் ஆணைகள் மற்றும் நெறியுறுத்துதகக்களை ஆணையம் அவ்வப்போது பிறப்பிக்கலாம் .

சென்னை-600 032, 2024 ஜூலை 3.

சி வீரமணி, செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (முன்கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்கல் தீர்வு மற்றும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான தொடர்புடைய பொருட்கூறுகள்) விதிமுறைகள், 2024க்கு முன்னெடுத்துச் செல்லும் காரணம் மற்றும் சூழ்நிலைகளை விளக்கும் விளக்க அறிக்கை:

1. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (இனி "ஆணையம்" என்று குறிப்பிடப்படுகிறது) முன்னதாக 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்உற்பத்திக்கான முன்கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்க தீர்வு மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகள் ஒழுங்குமுறைவிதிகளை அறிவிக்கை எண் தமிஓஆ/மு & தி காற்றாலை & சூரிய சக்தி/21-1/நாள் 1-3-2019 அன்று அறிவித்து தமிழ்நாடு அரசிதழில் 20-3-2019 அன்று வெளியிட்டது.

2. மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின்படி, காற்றாலை /சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்கள் பெரும்பான்மையின் கொள்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின்நிலையத்திற்கும் "தகுதியான ஒருங்கிணைப்பு முகமை" (QCA) நியமிக்க வேண்டும். விலக்கலின் சதவீதம் திட்டமிடப்பட்ட மின்னுற்பத்தியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. முன்னதாக, மத்திய ஆணையம் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (விலக்கல் தீர்வு இயக்கமுறை மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகள்) விதிமுறைகள், 2014 மற்றும் அவ்வப்போது அதன் திருத்தங்களை வெளியிட்டு மாநிலங்களுக்கு இடையேயான மின்சாரப் பரிவர்த்தனைக்கு ஒரு காலத் தொகுதியின் சராசரி அதிர்வெண்ணில் விலக்கல் கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது.

4. இதற்கிடையில், மத்திய ஆணையம் அறிவிப்பு எண்.L-1/260/2021/CERC, தேதி 14-03-2022, மேற்கண்ட 2014 விதிமுறைகளை ரத்து செய்து, புதிய மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (விலக்கல் தீர்வு பொறிமுறை மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகள்) விதிமுறைகளை 2022 ல் அறிவித்தது.

5. மேற்கூறியவற்றை மத்திய ஆணையம் ரத்து செய்யும் போது, 2014 விதிமுறைகள் அதிர்வெண் இணைக்கப்பட்ட விலக்கல் கட்டணங்கள் என்ற கருத்தை நீக்கிவிட்டு வில க்கலுக்கான கட்டணங்கள் என்ற புதிய கருத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தி ன் (விலக்கல் தீர்வு இயக்கமுறை மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகள்) விதிமுறைகள், 2022 இன் படி, ஒரு காலத் தொகுதியின் விலக்கலுக்கான சாதாரண கட்டண விகிதமானது, அனைத்து மின் சந்தைகளின் ஒரு நாளைக்கு முந்தைய சந்தைப் பிரிவுகளின் எடையுள்ள சராசரி பகுதி தீர்வு விலை (ACP); அல்லது அனைத்து மின் சந்தைகளின் நிகழ் நேர சந்தைப் பிரிவுகளின் எடையுள்ள சராசரி பகுதி தீர்வு விலை ACP; அல்லது அனைத்து பிராந்தியங்களின் எடையுள்ள சராசரி துணை சேவைக் கட்டணம் ஆகியவற்றின் அதிகபட்ச விலைக்கு இணையாக இருத்தல் வேண்டும்July 24, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 99 6. மத்திய ஆணையம் விலக்கல் தீர்வு இயக்கமுறையின் காரணங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகளின் விதிமுறைகளின் காரணமான அறிக்கையில், குறைந்த / மின்னுற்பத்தி இல்லாத நிகழ்வுகளில் திட்டமிடப்பட்ட மின்னுற்பத்தியுடன் உள்ளடக்க முடியாது என்று மேற்கோள் காட்டியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், உகந்த மற்றும் உண்மையான முன்கணித்தலை உறுதி செய்யும் நோக்கில், மத்திய ஆணையம், கிடைக்கக்கூடிய திறனுக்கு இயல்பான பிழை சதவீதத்தை வரையறுக்க முடிவு செய்துள்ளது.

7. இப்போது, முழுமையான பிழையின் சதவீதத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம், விலக்கல் தீர்வு பொறிமுறையை மிகவும் பொருத்தமாகக் கொண்டு வருவதற்காக மாற்றப்பட்டது. குறிப்பாக தமிழ்நாடு போன்ற புதுப்பிக்கத்தக்க மின்சக்தி வளம்நிறைந்த மாநிலங்களில், கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி (காற்றாலை மற்றும் சூரியசக்தி) மின் திறன் ஏற்கனவே 15.85 GW யைத் தாண்டியுள்ள நிலையில், திட்டமிடலிலிருந்து எவ்வளவு விலக்கலிருப்பினும், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் CERC ஆல் வரையறுக்கப்பட்டுள்ளபடி முழுமையான பிழையின் சதவீதத்தின் நிகழ்தகவு பூஜ்ஜியமாக இருக்கும் நிலையில், "முழுமையான பிழை சதவிகிதம்" சூத்திரத்தின் வகுக்கும் எண்ணில் "கிடைக்கும் திறன்" பயன்படுத்தப்பட்டால், இது விலக்கல் தீர்வு இயக்கமுறையின் முக்கிய நோக்கத்தை தோற்கடிக்கும். இது திட்டமிடல் அட்டவணையில் இருந்து விலக்கல் பற்றிய சிறந்த புரிதலை வழங்கும் மற்றும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்கள் / தகுதியான ஒருங்கிணைப்பு முகமை(கள்) மூலம் முன்கணித்தல் இயக்கமுறையை மேம்படுத்துவதற்கான நல்ல அறிகுறியாக இருக்கும்.

8. மேலும், தொடர்புடைய இரண்டு கூறுகளை உள்ளடக்கிய சரியான கணித அணுகுமுறையுடன் முழுமையான பிழையின் சதவீதத்தைக் கண்டறிவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும், அதாவது. முழுமையான பிழையை (உண்மையான மற்றும் மதிப்பிடப்பட்ட மதிப்புக்கு இடையிலான வேறுபாடு) மதிப்பிடப்பட்ட மதிப்பால் (திட்டமிடப்பட்ட மின் உற்பத்தி) வகுப்பதன் மூலம் பிழையின் சதவீதத்தை அடையும். முழுமையான பிழைக்கான சூத்திரத்தை உருவாக்கும் போது பின்வரும் கருத்துகளும் சரியான முறையில் எடுக்கப்படுகின்றன:

a. சதவீதப் பிழைக்கான சூத்திரம், இரண்டில் ஒன்று அளவுருக்களை மேலிலக்க எண் மற்றும் வகுக்கும் எண்ணாக கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும்.

b. முந்தைய ஒழுங்குமுறைவிதியில் வரையறுக்கப்பட்ட முழுமையான பிழையானது தொடர்பில்லாத அளவுருவாக (கிடைக்கும் திறன்) வகுக்கும் எண்ணாக கொண்டுள்ளது.

c. புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மின்னுற்பத்தியினை ஒரு நாளுக்கு முன்னதான முறையில் மற்ற மின்உற்பத்தி ஆதாரங்களுடன் சேர்த்து முன்கணித்தல் / திட்டமிடல் அட்டவணையை கணக்கில் கொண்டு மின்கட்டம்மைப்பு மின்தேவைகள் திட்டமிடப்படுகிறது

d. புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மின்னுற்பத்தியில் அத்தகைய முன்கணித்தலில் எந்த விலக்கலும் மின்கட்டமைப்பு இயக்குபவர் மற்றும் பயனீட்டமைப்பிற்கு சுமையாகும். முந்தைய ஒழுங்குமுறைவிதிகளில் கூறப்பட்டுள்ளபடி விலக்கலை கிடைக்கக்கூடிய திறனுடன் வகுப்பதன் மூலம், பிழையானது எல்லையற்றதாக மாறும் மற்றும் ஒழுங்குமுறை தேவையற்றதாக அல்லது முக்கியமற்றதாக மாறும்.

e. மேலும், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மின்னுற்பத்தி நடைமுறையில் அதன் அதிகபட்ச திறனை, அதாவது கிடைக்கும் திறனை எட்டவில்லை. 15 ஜிகாவாட் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்உற்பத்தி திறன் கொண்ட தமிழ்நாடு மாநிலத்தில், "கிடைக்கும் திறனில்" அதிகபட்ச உற்பத்தி 35% யை தாண்டவில்லை. வகுக்கப்படும் எண்ணிலக்கத்தில் " கிடைக்கும் திறன் " பயன்படுத்துவதன் மூலம், பெரும்பாலான காலத் தொகுதிகளுக்கான விலக்கல் 10 சதவிகிதத்திற்குள் மட்டுமே மாறுதல்கள் இருப்பதை ஒரு ஆய்வு வெளிப்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், சூத்திரத்தின் வகுக்கப்படும் எண்ணிலக்கத்தில் உள்ள "கிடைக்கும் திறன்" ஒரு கூறு என்று கருதுவது உண்மையான சதவீத விலக்கலைப் பிரதிபலிக்காது, எனவே வகுக்கப்படும் எண்ணிலக்கத்தில் "திட்டமிடப்பட்ட மின்உற்பத்தி" என்ற சொல் மிகவும் பொருத்தமானது. எனவே, மற்ற மரபு முறையான (conventional) மின் உற்பத்தியாளர்களைப் போலவே பிழை சதவீதத்தை வரவழைக்கப் பயன்படும் "திட்டமிடப்பட்ட மின்உற்பத்தி" அடிப்படையில் முழுமையான பிழை சதவீதத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரத்தை ஆணையம் முன்மொழிந்தது. இந்த ஒழுங்குமுறையின் விரும்பிய முடிவை அடைய, மின் உற்பத்தியாளர்கள் மற்றும் மின்கட்டமைப்பு இயக்குபவர்க்கு சம நிலைப்பாட்டை வழங்குகிறது.

9. தற்சமயம் கிடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி காற்றாலை / சூரிய சக்தி மின் உற்பத்தியை மிகவும் துல்லியமாக கணிப்பது கடினம் மற்றும் மாநில புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு மத்திய மின்சார அதிகார அமைப்பு, மின் அமைச்சகம் கோப்பு எண்.CEA-EC-15-13/3/2018-RA பிரிவு-பாகம்(1)/134 ல் முழுமையான பிழையின் சதவீதத்தை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஒழுங்குமுறைவிதியில் நிர்ணயித்துள்ளபடி அமைவதற்கு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை கருத்தில் கொண்டு, அவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், ஆணையம் முறையாக விலக்கல் கட்டணங்களை குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு 3 பைசா என நிர்ணயித்துள்ளது.

10. காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்ஆற்றலை முன்கணித்தலுக்கான தொழில்நுட்பம், மத்திய ஆணையம், 2014 ஆம் ஆண்டின் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (விலக்கல் தீர்வு இயக்கமுறை மற்றும் தொடர்புடைய பொருட்கூறுகள்) விதிமுறைகள் மூலம் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான விலக்கல் தீர்வை அறிமுகப்படுத்தியதிலிருந்து, மென்பொருள் கருவிகள், துல்லியமான வானிலை முன்னறிவிப்பு போன்றவற்றால் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே, காற்றாலை / சூரிய சக்தி மின்உற்பத்தியாளர்கள் காற்றாலை/சூரிய சக்தி மின்ஆற்றலை முன்னறிவிப்பதில் சிறந்த நிலையில் இருக்க வேண்டும்.

11. விலக்கல் தீர்வு இயக்கமுறையின் முழு நோக்கமும், புதுப்பிக்கத்தக்க மின்சக்தியின் நிலையற்ற தன்மையினாலும் மற்றும் மின்கட்டமைப்பின் சிறந்த நிர்வாகத்திற்கு உதவும் வகையிலும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியின் முன்னறிவிப்பதில் அதிக துல்லியத்தை கொண்டு வருவது ஆகும். மேலும், இந்த ஒழுங்குமுறைவிதி புதுப்பிக்கத்தக்க மின்சக்தி மின்உற்பத்தியாளர்களிடையே அதிக100 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2 ஒழுக்கத்தை உறுதி செய்வதுடன், இருக்கின்ற ஆதாரங்களை கொண்டு சிறந்த மின் சுமை மேலாண்மை மற்றும் மின்கட்டமைப்பு அதிர்வெண் ஆகியவற்றை இந்திய மின்சார கட்டமைப்பு குறியீடு பரிந்துரைக்கும் வரம்பிற்குள் கொண்டு வரும்.

12. மாநில மின்சுமைப் பகுப்பு மையம் வழங்கிய அறிவுறுத்தலின்படி கட்டாயக் குறைப்பு காரணமாக ஏற்படும் விலக்களுக்கான விலக்கல் கட்டணம் சுமத்தப்படுவதில் இருந்து விலக்கு அளித்து புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி உற்பத்தியாளர்களின் நலன் இந்த ஒழுங்குமுறைவிதியில் பாதுகாக்கப்படுகிறது. அதோடு, சூரிய சக்தி / காற்றாலை மின்னுற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஆணையம் தனித்தனியாக "காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி குறைப்பு மேலாண்மைக்கான விரிவான நடைமுறைகளை" வெளியிடும்.

13. மேற்கூறியவற்றின் பார்வையில், ஒழுங்குமுறைவிதி 2.1(a) ல் வந்த முழுமையான பிழையின் சதவீதத்திற்கான சூத்திரம் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக உள்ளது. மேலும், இது அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்கிறது, எனவே ஆணையம் அதை மிகவும் பொருத்தமானதாகக் கருதுகிறது.

14. மேலும், மாநிலத்திற்குள் உள்ள பல தகுதியான ஒருங்கிணைப்பு முகமைகள் இருப்பின் மாநில மின்சுமைப் பகுப்பு மையத்திற்கு திட்டமிடல் மற்றும் விலக்கல் தீர்வைச் செயல்படுத்துவதற்கு பல்வேறு தொடர்புகளை கையாள்வது சிக்கல் மற்றும் நடைமுறைக்கு சாத்தியமற்ற நிலை என கருதப்படுகிறது. எனவே, தடையற்ற செயலாக்கத்திற்காக மாநிலம் முழுவதும் ஒருங்கிணைப்பதற்கான காற்றாலை / சூரிய சக்தி மின்உற்பத்தியாளர்கள் தனித்தனியே பெரும்பான்மை முறையில் ஒற்றை தகுதியான ஒருங்கிணைப்பு முகமையை தேர்வு செய்வது சிறந்தது அதே நேரத்தில், மின்உற்பத்தி நிலையங்கள் தாங்களாகவே முன்னறிவிப்பதற்கும், திட்டமிடுவதற்கும் உள்ள உரிமை மற்றும் பொறுப்பை நீர்த்துப்போகாதவாறு காற்றாலை / சூரிய சக்தி மின்னுற்பத்தியாளர்கள், ஒருங்கிணைந்த துணை மின்நிலைய வாரியாக தகுதியான ஒருங்கிணைப்பு முகமையை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எனவே, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தியாளர்கள் திட்டமிடலை மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தின் நேரடி உதவியுடனோ அல்லது உதவில்லாமலோ அல்லது மாநிலம் தழுவிய ஒருங்கிணைப்பிற்காக தகுதியான ஒருங்கிணைப்பு முகமை மூலமோ அல்லது பெரும்பான்மை முறையில் ஒவ்வொரு ஒருங்கிணைந்த துணை மின் நிலையத்திற்கும் தகுதியான ஒருங்கிணைப்பு முகமையை நியமித்து திட்டமிடல் செய்யலாம்

15. தொழில்நுட்ப, வணிக மற்றும் செயலாக்க வழிமுறைகளில் மேற்கூறிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான முன்கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்கல் தீர்வுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்குவது மற்றும் காற்றாலை மற்றும் சூரிய சக்தியின் விலக்கலுக்கான உச்சவரம்பு விகிதங்களை மறு நிர்ணயம் செய்வது பொருத்தமானது என ஆணையம் கண்டறிந்துள்ளது. மாநில மின்சுமைப் பகுப்பு மையத்தால் நடத்தப்பட்ட முன்னோடி ஆய்வு மற்றும் அதன்படி ஆணையம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (முன்கணித்தல், திட்டமிடல் மற்றும் விலக்கல் தீர்வு மற்றும் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான தொடர்புடைய பொருட்கூறுகள்) விதிமுறைகளை 2024 னை உருவாக்கி, ஏற்கனவே உள்ள விதிமுறைகள் 2019 ஐ முறையாக ரத்து செய்கிறது.

(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி)

சென்னை-600 032, 2024 ஜூலை 3.

சி வீரமணி, செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 24 July 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-07-24.Ordinary_30_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-07-24.Ordinary_30_Part-VI_Section-2.