© தமிழ்நாடு அரசு 2024
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 31] சென்னை, புதன்கிழமை, ஜூலை 31, 2024 ஆடி 15, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 109, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.4(2)]த் துறை, 07 ஜூன் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 31.01.2016 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 11 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/HOU/22/2016 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வேதாரண்யம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமத்தின் பகுதியைச் சேர்ப்பதற்கான அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
வருவாய் கிராமங்கள்
48. கடினல்வயல்
49. ஆதனூர்
51. நெய்விளக்கு
52. தேத்தாக்குடி தெற்கு
53. பெரியகுத்தகை
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள். 'அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
II-2-(31) (T Sup)—1
[ 1 ]2 [அரசாணை (நிலை) எண். 110, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.4(2)]த் துறை, 7 ஜூன் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 20.07.2016 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 412 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/HOU/442/2016 ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
''வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.
வருவாய் கிராமங்கள்
46. ஜெயங்கொண்டசோழபுரம் பகுதி
45/1. அங்கராயநல்லூர் மேற்கு பகுதி
45/2. அங்கராயநல்லூர் கிழக்கு
31. பிராஞ்சேரி பகுதி
30. கீழக்குடியிருப்பு பகுதி
43. பெரியவளையம் பகுதி
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம்.
மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள். 'அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 111, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.4(2)]த் துறை, 7 ஜூன் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 31.08.2011 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 316 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/வீ.வ/386/2011 ஆம் எண் அறிவிக்கையில் புஞ்சை புளியம்பட்டி உள்ளூர் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கப்பட்ட அத்தகைய பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
வருவாய் கிராமங்களின்
எண் மற்றும் பெயர்.
39. புஞ்சை புளியம்பட்டி பகுதி
(நொச்சிகுட்டை)
40. நல்லூர்.
38. மாதம்பாளையம்.
37. மாராயிபாளையம்.
73. செல்லப்பம்பாளையம்.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம், சேர்க்கக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்து யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம்.
மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனும் பெறப்படுமாயின் அவை மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின்படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எழுத்துவடிவில், அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
காகர்லா உஷா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்) 3
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
[அரசாணை (ப) எண். 458, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2)த் துறை, 27 ஜூன் 2024.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியிலும் 9 ஆம் பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் பணிபுரிவோருக்கான (அரசு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக) குறைந்தளவு ஊதியங்களைத் திருத்தியமைக்கும் பொருட்டு விசாரணை மேற்கொண்டு தமிழ்நாடு அரசிற்கு ஆலோசனை வழங்குவதற்காக பின்வரும் நபர்களைக் கொண்ட குழு ஒன்றினை இதனால் நியமிக்கிறார்:-
தனி நபர்கள்:-
| (1) | தொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையர், சென்னை. | தலைவர் |
| (2) | தொழிலாளர் துறையின் உதவி ஆணையர்-II, வட்டம் (செயலாக்கம்), சென்னை. | செயலாளர் |
| (3) | உதவி இயக்குநர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை-600 006. | உறுப்பினர் |
| (4) | திரு. A.N. இராமன், இந்திய விலைமதிப்பீட்டுக் கணக்கர்கள் நிறுவனம் (The Institue of Cost Accountants of India), எண். 10. P.N. முத்துக்குமாரசாமி சாலை, பேபி நகர், வேளச்சேரி சென்னை-600 042. | உறுப்பினர் |
வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-
| (1) | திரு. B. குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை, எண்.10/2, வசந்தா கார்டன், 2-ஆவது சந்து, அயனாவரம், சென்னை-600 023. | உறுப்பினர் |
| (2) | திரு. R. ரமேஷ் சுந்தர், இந்திய தொழிற்சங்க மையம் (CITU), 112-A, பாலாஜி நகர், (குபேரன் நகர், 14-ஆவது தெரு விரிவாக்கம்) மடிப்பாக்கம், சென்னை-600 091. | உறுப்பினர் |
| (3) | திரு. G.K..முரளிதரன், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) 270/560, M.T.H. சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை-600 050. | உறுப்பினர் |
| (4) | டாக்டர் A.R. சாந்தி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) A1, அம்மன் அபார்ட்மென்ட்ஸ், 41, சாவடித் தெரு, பல்லாவரம், சென்னை-600 043. | உறுப்பினர் |
| (5) | திரு. G. உதய குமார், குளோபல் செவிலியர் சங்கம் (Global Nurses Association), எண். 4/200, கசத்தோப்பு, பெரியன்குப்பம் ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்-635 814 | உறுப்பினர் |
| (6) | டாக்டர் T.R. உதய குமார், இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், எண்.2,5-B-பிரிவு, ஹாசினி பேரடைஸ், 25-ஆவது தெரு, அஷ்டலட்சுமி நகர், ஆலப்பாக்கம், சென்னை-116. | உறுப்பினர் |
தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-
| (1) | டாக்டர் T. செந்தமிழ்ப்பாரி, இந்திய மருத்துவக் கழகம், தமிழ்நாடு மாநிலக் கிளை, மனை எண்.48, 4-ஆவது குறுக்குத் தெரு, மகாகவி பாரதி (MKB) நகர், வியாசர்பாடி, சென்னை-600 0039. | உறுப்பினர் |
| (2) | டாக்டர் R. அன்புராஜன், இந்திய மருத்துவக் கழகம், தமிழ்நாடு மாநிலக் கிளை, மருத்துவ இல்லம் மற்றும் மருத்துவமனை வாரியம், பீஸ் நல மையம், 48H/5, தெற்கு புற வழிச்சாலை, புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி-627 005. | உறுப்பினர் |
| (3) | டாக்டர் G.S. குமார், G.S. மருத்துவமனை, எண்.70/B, காந்தி சாலை, கள்ளக்குறிச்சி-600 202. | உறுப்பினர் |
| (4) | டாக்டர் S. ஷெர்லி, தலைமை மருத்துவர், புற்றுநோய் சிகிச்சை மையம் (இந்திய மகளிர் கூட்டமைப்பு (WIA), அடையாறு, எண். 23, ஜம்புலிங்கம் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-600 034. | உறுப்பினர் |
| (5) | திரு. J. அடேல், நலப் பணியாளர்கள் கூட்டமைப்பு (இந்தியா), தமிழ்நாடு பிரிவு, 1/117, முத்துக்கிருஷ்ணன் நகர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 3-ஆவது தெரு, ராஜகம்பீரம், மதுரை-625 107. | உறுப்பினர் |
| (6) | டாக்டர் K. முத்துசாமி, பிரைம் இந்தியா மருத்துவமனை நிறுவனர், 1051, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை-600 106. | உறுப்பினர் |
[அரசாணை (நிலை) எண். 54, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 2 ஜூலை 2024.] 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/2018) 1 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டம் செயலுக்கு வரும் நாளாக 02.07.2024-ஐ இதனால் நிருணயம் செய்கிறார்.
அறிவிக்கை-II [அரசாணை (நிலை) எண். 54, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 2 ஜூலை 2024.] 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 20/2023) 1 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டம் செயலுக்கு வரும் நாளாக 02.07.2024-ஐ இதனால் நிருணயம் செய்கிறார்.
குமார் ஜயந்த்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்) தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.