Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by the Heads of Departments, which are of interest to a Section of the public. District Collectors - Tamil Nadu Panchayats Act - State Election Commission Notification - Removal of Panchayat Chairman, Tamil Nadu Legal Services Notification - Tamil Nadu Electricity Regulatory Commission - Government Examination Loss of Certificates. COLLECTORS AND LOCAL AUTHORITIES--Tiruvannamalai District, Tiruvannamalai Panchayat Union, Palayanur Village Panchayat, Notification of Dismissal of Panchayat Council President - Notification No. VI(2)/22/2024.--(Roc. No. 1587/2020/A2)

Published 07 August 2024

Type
Ordinary
Gazette no.
32
Part
Part VI
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-08-07.Ordinary_32_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.

2024 [Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 32] CHENNAI, WEDNESDAY, AUGUST 7, 2024 Aadi 22, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பழையனூர் கிராம

ஊராட்சி, ஊராட்சி மன்றத்தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட அறிவிக்கை .. 102-103

[101]

DTP—VI-2 (32) 102

[Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பழையனூர் கிராம ஊராட்சி, ஊராட்சி மன்றத்தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட அறிவிக்கை

(ந.க. எண் 1587/2020/அ2-உ.இ(ஊ) தி.கோ)

No. VI(2)/22/2024.

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய விவரவுரையின் படி ஒன்று இணைத்து ஏழு தினங்களுக்குள் பதிலளிக்கும் வகையில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அவர்களால் 16.06.2023 அன்று கீழ்குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு கடிதம் சார்வு செய்யப்பட்டது.

1. திரு. சீ.அஞ்சலை க/பெ. சீனுவாசன் - 1வது வார்டு உறுப்பினர்.

2. திரு. சி.ரகு த/பெ. சின்னகண்ணு - 2வது வார்டு உறுப்பினர்.

3. திரு. வெ.கோவிந்தராஜு த/பெ. வெங்கடசாமி - 3வது வார்டு உறுப்பினர்.

4. செல்வி. பெ.சுமதி க/பெ. முருகன் - 4வது வார்டு உறுப்பினர்.

5. திருமதி. கோ.தேவகி க/பெ. கோவிந்தன் - 5வது வார்டு உறுப்பினர்.

6. திருமதி. கோ.சரசு க/பெ. கோவிந்தராஜ் - 6வது வார்டு உறுப்பினர்.

7. திருமதி. லோ.சுமதி க/பெ. லோகநாதன் - 7வது வார்டு உறுப்பினர்.

8. திரு. மு.ஆயிமுத்து த/பெ. முனுசாமி- 8வது வார்டு உறுப்பினர்.

9. திரு. ரா.சங்கர் த/பெ. ராஜேந்திரன் - 9வது வார்டு உறுப்பினர்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன் கீழ் சட்டப்பூர்வமான அறிவிப்பு குறித்து பழையனூர் சிற்றூராட்சி அலுவலகத்தில் 30.06.2023 அன்று முற்பகல் 11.00 மணியளவில் அனைத்து சிற்றூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளதை தெரிவிக்கும் 02.06.2023 ஆம் தேதியிட்ட அழைப்பாணை 16.06.2023 அன்று அனைத்து சிற்றூராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு சார்வு செய்யப்பட்டது.

30.06.2023 அன்று காலை 11.00 மணிக்கு திருவண்ணாமலை வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய விவர அறிக்கையினை அனைத்து சிற்றூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் வட்டாட்சியரால் வாசித்து காண்பிக்கப்பட்டு தலைவர் மீதான குற்றச்சாட்டு குறித்த மன்றத்தின் கருத்து தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான கூட்டத்தில் மொத்தம் உள்ள 9 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களில் வருகை புரிந்த 8 சிற்றூராட்சி உறுப்பினர்களிடம் குற்றச்சாட்டு குறித்து மன்றக் கருத்தினை கோரப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிவிப்பு படித்து காண்பிக்கப்பட்டதில் 8 வார்டு உறுப்பினர்களில் 7வது மற்றும் 8வது வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்பதாகவும், 2வது, 3வது, 5வது மற்றும் 6வது வார்டு உறுப்பினர்கள் மறுப்பதாகவும், மற்றும் 4-வது வார்டு உறுப்பினர் எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டப்பூர்வமான அறிவிப்பு தொடர்பாக திருமதி.வெ.துர்காதேவி, பழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண். W.P.No.22950/2023, 29.09.2023- நாளிட்ட தீர்ப்பாணைக்கிணங்க பழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.வெ.துர்காதேவி என்பவரை 13.10.2023 அன்று திருவண்ணாமலை கோட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு வருகை புரிந்திட தெரிவிக்கப்பட்டதை, தொடர்ந்து அவர் சம்மந்தப்பட்ட ஆவணங்களை நேரில் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

ஆனால், பழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.வெ.துர்காதேவி என்பவரால் ஆவணங்களை நேரில் பார்வையிட்டு நாளது தேதி வரையில் பதிலறிக்கை ஏதும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், பழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. வெ.துர்காதேவி என்பவருக்கு மீண்டும் ஒரு வாய்பாக 02.02.2024 அன்று நேரில் மீள சம்மந்தப்பட்ட ஆவணங்களை பார்வையிட தெரிவிக்கப்பட்டது. ஆனால் திருமதி. வெ. துர்காதேவி அவர்களால் நாளது வரை ஆவணங்களை பார்வையிடப்படவில்லை.

Aug. 7, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 103 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரால் நேர்முக விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதற்கு, அழைப்பாணையினை பெற்றுக் கொள்ள திருமதி. வெ. துர்காதேவி என்பவர் மறுத்துவிட்டார். இவர் தொடர்ந்து மேற்படி சட்டப்பூர்வமான அறிவிப்பில் தொகை ரூ.1,65,13,599/-(ரூபாய் ஒரு கோடியே அறுபத்து ஐந்து இலட்சத்து பதிமூன்றாயிரத்து ஐந்நூற்று தென்னூற்று ஒன்பது மட்டும்) நிதி முறைகேட்டிற்கு பதிலளிக்காமலும் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பாணையினை உதாசினப்படுத்தியதோடு காலம்தாழ்த்தி வருவதால் திருமதி.வெ.துர்காதேவி என்பவர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன் படி 30.12.2022 தேதியிட்ட சட்டப்பூர்வமான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையிலும், சிற்றூராட்சியின் கருத்தினைப் பரிசீலனை செய்தும், எனது உளத்தேர்வின்படியும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன் அடிப்படையில் இவ்வறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதல் திருமதி.வெ.துர்காதேவி க/பெ. வெங்கடேசன் என்பவரின், பழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை, தெ. பாஸ்கர பாண்டியன், 2024 ஜூலை 15. ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 August 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-08-07.Ordinary_32_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-08-07.Ordinary_32_Part-VI_Section-2.