© GOVERNMENT OF TAMIL NADU
2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 4.00 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY | ||
No. 275] CHENNAI, SATURDAY, AUGUST 24, 2024 Aavani 8, Kurothi, Thiruvalluvar Aandu-2055
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
No. II(1)/REVDM/19(b)/2024.
[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – சென்னை மாவட்டம் – மத்திய சென்னை வருவாய் கோட்டம் – அயனாவரம் வருவாய் வட்டத்தைச் சீரமைத்து கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண்.241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 11 ஜூலை 2024, ஆனி 27,குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
படிக்கவும்:-
1. அரசாணை (நிலை) எண் 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள் 09.06.2003.
2. சென்னை மாவட்ட ஆட்சியரின் கடித ந.க.எண் அ1/3104/2023, நாள் 30.05.2024.
3. கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.பணி.6(1)/இ/7564302/2024, நாள் 11.06.2024.
ஆணை:- எண்.241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு 11 ஜூலை 2024.
மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில், சென்னை மாவட்டத்தில் மத்திய சென்னை வருவாய் கோட்டத்தில் உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்தினைச் சீரமைத்து கொளத்தூர் எனும் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியரிடமிருந்து மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டதில், அயனாவரம் வட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய ஏதுவாக கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் உருவாக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ள வட்ட தலைமையிடமானது அவ்வட்டத்தினை சார்ந்த அனைத்து கிராமங்களிலிருந்தும் பொது மக்கள் எளிதில் அணுகும் தொலைவில் இருக்கும் என்றும், அயனாவரம் வருவாய் வட்டத்திலுள்ள 8 வருவாய் கிராமங்களில் 5 வருவாய் கிராமங்களை அயனாவரம் வட்டத்திலேயே தொடர்ந்து இருத்தி வைத்துக் கொண்டும், மீதமுள்ள 3 வருவாய் கிராமங்களில் கொளத்தூர் எனும் ஒரு வருவாய் கிராமத்தை கொண்டு கொளத்தூர் குறுவட்டமும், சிறுவள்ளூர் மற்றும் பெரவள்ளூர் ஆகிய 2
[ 1 ]
II-1 Ex. (275)2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY வருவாய் கிராமங்களைக் கொண்டு பெரவள்ளூர் குறுவட்டத்தையும் உள்ளடக்கி கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டத்தினை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.
2. மேலும், புதிதாக உருவாக்கப்படவுள்ள கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய 42 பணியிடங்களில் அயனாவரம் வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களிலிருந்து 7 மிகைப் பணியிடங்கள் மற்றும் புதிதாக 35 பணியிடங்களை உருவாக்கலாம் என்றும், ஏற்கெனவே உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்திற்கு புதிதாக ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடமும் தோற்றுவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
3. மேலும், அரசாணை (நிலை) எண்.279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இல் ஒரு வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில், மக்கள் தொகையை தவிர்த்து, மீதமுள்ள கிராமங்களின் எண்ணிக்கை மற்றும் பரப்பளவு பூர்த்தியாகாதபட்சத்தில், அவ்வரசாணையில், "பெருநகர பகுதிகளான சென்னை, மலைப்பகுதியான நீலகிரி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் சேர்க்கப்பட்ட பகுதி போன்ற சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதால் அவைகளை தற்போது செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அளவுக்கோல் (குறித்த நிலை) (Norms) உட்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளதற்கிணங்க" சென்னை மாவட்டத்திலுள்ள, அயனாவரம் வருவாய் வட்டத்தினைச் சீரமைத்து கொளத்தூர், பெரவள்ளூர் மற்றும் சிறுவள்ளூர் ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கி கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதற்கிணங்க சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் வருவாய் வட்டத்தினைச் மறுசீரமைத்து கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
4. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், சென்னை மாவட்டம் ஆகியோரின் கருத்துருக்களை அரசு விரிவாக ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-
i. சென்னை மாவட்டத்திலுள்ள, அயனாவரம் வருவாய் வட்டத்தினை மறுசீரமைத்து கொளத்தூர், பெரவள்ளூர் மற்றும் சிறுவள்ளூர் ஆகிய மூன்று வருவாய் கிராமங்களை உள்ளடக்கி கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு பிற்சேர்க்கை-V, அறிவிக்கை-1-ல் உள்ளவாறு புதிய கொளத்தூர் வருவாய் வட்டம் சென்னை மாவட்டத்தில், மத்திய சென்னை வருவாய் கோட்டத்தில் உருவாக்கப்படுகிறது.
ii. புதிதாக உருவாக்கப்படும் கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு பிற்சேர்க்கை-I-இல் உள்ளவாறு 42 பணியிடங்கள் கீழ்கண்டவாறு புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது:-
➢ அயனாவரம் வருவாய் வட்டத்திலிருந்து மறுபரவலமர்த்தல் (Re-deployment) மூலம் 7 பணியிடங்களை மாறுதல் செய்யலாம்.
➢ கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு 35 பணியிடங்கள் பிற்சேர்க்கை-I, கலம் 9-ல் உள்ளவாறு புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது. அதில் ஒரு இரவுக்காவலர் பணியிடம் வெளி முகமை மூலமாக (outsourcing) நிரப்பப்பட வேண்டும்.
➢ கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு புதிதாக, பொதுப் பிரிவில் உருவாக்கப்படும் நிரந்தரப் பணியிடங்களில், ஈப்பு ஓட்டுநர், பதிவுறு எழுத்தர் (தலா ஒரு பணியிடம்) ஆகிய பணியிடங்கள் நீங்கலாக,19 பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக தோற்றுவிக்கப்படுகிறது. அதே போன்று, சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவில் உருவாக்கப்படும் நிரந்தர பணியிடங்களில் ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடம் நீங்கலாக, 6 பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக தோற்றுவிக்கப்படுகிறது.
➢ 2-ஈப்பு ஓட்டுநர் மற்றும் 1-பதிவுறு எழுத்தர் பணியிடங்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு தற்காலிகப் பணியிடங்களாக தோற்றுவிக்கப்படுகிறது.
iii. ஏற்கெனவே உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்திற்கு புதிதாக ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடம் முதல் 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக தோற்றுவிக்கப்படுகிறது.
iv. புதிதாக தோற்றுவிக்கப்படும் 36 பணியிடங்களுக்கு அரசாணை (நிலை) எண் 248, நிதித் (சி.எம்.பி.சி) துறை, நாள் 20.05.2020-ஐ தளர்வு செய்து ஒப்புதல் வழங்கப்படுகிறது.
v. புதிதாக உருவாக்கப்படும் கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு தோராயமாக ஏற்படும் தொடரும் செலவினம் ரூ.2,90,94,360/- (ரூபாய் இரண்டு கோடியே தொண்ணூறு இலட்சத்து தொண்ணூற்று நான்காயிரத்து முந்நூற்று அறுபது மட்டும்) மற்றும் மொத்த தொடரா செலவினம் ரூ.32,22,000/- (ரூபாய் முப்பத்திரெண்டு இலட்சத்து இருபத்திரெண்டாயிரம் மட்டும்) பிற்சேர்க்கை-III-ல் உள்ளவாறு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.
vi. புதிய பணியிடங்கள் தோற்றுவிப்பதில் மனிதவள மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள பணிவிதிகள் பின்பற்ற வேண்டும்.
vii. மிகைப் பணியிடமாக கண்டறியப்பட்டுள்ள பணியிடங்கள் தேவையான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட வேண்டும். காலியாக வைக்க ஆணையிடப்பட்ட பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கக்கூடாது.
viii. மறுபரவலமர்த்தல் மூலம் கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள் உரிய தளவாடங்களுடன் புதிய வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3ix. அலுவலக பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருள்கள், கணினி மற்றும் அது தொடர்பான பொருள்கள் மற்றும் வாகனங்கள் கொள்முதல் செய்வதில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
x. Post Sanction Ledger (PSL) பெறும் பொருட்டு அரசு கடித எண் 20300/paycell/2021-1, நாள் 09.07.2021-இன்படி மறுபரவல் மற்றும் புதிய பணியிடங்கள் குறித்த விவரங்கள் post mapping செய்யப்பட வேண்டும்.
xi. இது ஒரு புது துணைப் பணி (New Instrument of Service) குறித்த செலவினமாகும். எனவே, புதுப்பணி தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
xii. இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் போன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை, நாள் 14.05.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.\
xiii. புதிதாக தோற்றுவிக்க வேண்டிய பணியிடங்களுள், அலுவலக உதவியாளர் பணியிடம் தவிர மற்ற பணியிடங்களை (இரவுக் காவலர், மசால்சி மற்றும் புல உதவியாளர்) 'வெளிமுகமை' (outsourcing) மூலம் நிரப்பப்பட வேண்டும் என்றும் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படும்போது தமிழ்நாடு அடிப்படைப் பணி சிறப்பு விதிகளில் விதி 4(a)-வுடன் உடனிகழ்வாக அரசாணை (நிலை) எண்.44, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, நாள் 01.03.2015-இல் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் பின்பற்றப்பட வேண்டும்.
xiv. அலுவகத்திற்கான வாடகை பொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று வழங்க வேண்டும்.
xv. தொகுப்பு கிராமங்களை பிரித்து புதிதாக தொகுப்பு கிராமங்களை உருவாக்குதல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
5. மேலே பத்தி 4 (v)-இல் ஒப்பளிக்கப்பட்ட தொடரும் செலவினத் தொகை 2024-2025 நிதி ஆண்டில் (8 மாதத்திற்கு மட்டும்) கீழ்க்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.
I. பணியாளர் சம்பளங்கள்
சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிறபடிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மறுபரவலமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பு/ உப தலைப்புகளில் பற்று வைக்கப்படும்.
| 2053-00-மாவட்ட நிருவாகம் – 094 ஏனைய பணியாளரமைப்பு – மாநிலச் செலவினங்கள் – AB-வட்டப் பணியாளரமைப்புகள்- 301-சம்பளங்கள்-01- அடிப்படை சம்பளங்கள். [IFHRMS DPC 2053 00 094 AB 30101] | ரூ.79,84,800/- |
| 301- சம்பளங்கள்-02-மருத்துவப் படி. [IFHRMS DPC 2053 00 094 AB 30102] | ரூ.60,000/- |
| 301- சம்பளங்கள்-06-வீட்டு வாடகைடப்படி. [IFHRMS DPC 2053 00 094 AB 30106] | ரூ.4,56,800/- |
| 301- சம்பளங்கள்-08-நகர ஈட்டுப்படி. [IFHRMS DPC 2053 00 094 AB 30108] | ரூ.89,600/- |
| 303- அகவிலைப்படி-01- அகவிலைப்படி. [IFHRMS DPC 2053 00 094 AB 30301] | ரூ.39,92,400/- |
| 2029-00-நில வருவாய்-102-நில அளவை நிலவரி ஏற்பாட்டுப் பணிகள்-மாநிலச் செலவினங்கள்-AF-நில அளவை பராமரிப்பு பணி-301-சம்பளங்கள்-01-அடிப்படைசம்பளங்கள். [IFHRMS DPC 2029 00 102 AF 30101] | ரூ.19,36,800/- |
| 301- சம்பளங்கள்-02-மருத்துவப் படி. [IFHRMS DPC 2029 00 102 AF 30102] | ரூ.12,000/- |
| 301- சம்பளங்கள்-06-வீட்டு வாடகைடப்படி. [IFHRMS DPC 2029 00 102 AF 30106] | ரூ.91,200/- |
| 301- சம்பளங்கள்-08-நகர ஈட்டுப்படி. [IFHRMS DPC 2029 00 102 AF 30108] | ரூ.17,920/- |
| 303- அகவிலைப்படி-01- அகவிலைப்படி. [IFHRMS DPC 2029 00 102 AF 30301] | ரூ.9,68,400/- |
| 2035-00-சொத்துக்கள், மூலதனப்பற்று வரவுகள் மீது ஏனைய வரிகளை வசூலித்தல்-101- வேளாண்மை நிலமல்லாத ஏனைய இயங்காச் சொத்துக்கள் மீதான வரிகள்-மாநில செலவினங்கள்- AA- தமிழ்நாடு நகர்ப்பகுதி நிலவரிச் சட்ட நிருவாகம்-301-சம்பளங்கள்-01- அடிப்படை சம்பளங்கள். [IFHRMS DPC 2035 00 101 AA 30101] | ரூ.8,19,200/- |
| 301- சம்பளங்கள்-02-மருத்துவப் படி. [IFHRMS DPC 2035 00 101 AA 30102] | ரூ.4,800/- |
| 301- சம்பளங்கள்-06-வீட்டு வாடகைடப்படி. [IFHRMS DPC 2035 00 101 AA 30106] | ரூ.52,000/- |
| 301- சம்பளங்கள்-08-நகர ஈட்டுப்படி. [IFHRMS DPC 2035 00 101 AA 30108] | ரூ.9,280/- |
| 303- அகவிலைப்படி-01- அகவிலைப்படி. [IFHRMS DPC 2035 00 101 AA 30301] | ரூ.4,09,600/- |
| 2039-00-மாநில ஆயத் தீர்வை-001-நெறிப்படுத்தலும் நிருவாகமும்-மாநிலச் செலவினங்கள்- AD- மாவட்ட பணியாளரமைப்பு- வருவாய்த் துறை பணியாளரமைப்பு-301-சம்பளங்கள்-01- அடிப்படை சம்பளங்கள். [IFHRMS DPC 2039 00 001 AD 30101] | ரூ.13,13,600/- |
| 301- சம்பளங்கள்-02-மருத்துவப் படி. [IFHRMS DPC 2039 00 001 AD 30102] | ரூ.9,600/- |
| 301- சம்பளங்கள்-06-வீட்டு வாடகைடப்படி. [IFHRMS DPC 2039 00 001 AD 30106] | ரூ.78,400/- |
| 301- சம்பளங்கள்-08-நகர ஈட்டுப்படி. [IFHRMS DPC 2039 00 001 AD 30108] | ரூ.15,040/- |
| 303- அகவிலைப்படி-01- அகவிலைப்படி. [IFHRMS DPC 2039 00 001 AD 30301] | ரூ.6,56,800/- |
II. 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளரமைப்புகள் i. 305 அலுவலகச் செலவுகள் -01 தொலைபேசிக் கட்டணங்கள்
தொடரும் செலவினம் ரூ.24,000/- [IFHRMS DPC 2053 00 094 AB 30501]
ii. 305 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் – ரூ.1,00,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30503]
iii. 305 அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் -ரூ.7,00,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30505]
iv. 319 இயந்திரமும் சாதனமும் -01 வாங்குதல் – ரூ.4,72,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 31901]
v. 321 மோட்டார் வண்டிகள் -01 வாங்குதல் – ரூ.18,00,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 32101]
vi. 345 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் -01- பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் ரூ.1,44,000/- [IFHRMS DPC 2053 00 094 AB 34501]
vii. 376 கணினியும் துணை பாகங்களும் – 01 - வாங்குதல் – ரூ.2,50,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 37601] 376-03 எழுதுபொருள் – ரூ.16,667/- [IFHRMS DPC 2053 00 094 AB 37603]
viii. 305 அலுவலகச் செலவுகள் - 02 ஏனைய சில்லரை செலவுகள் – ரூ.1,33,334/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30502]TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5 6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு "புது துணைப் பணி" (New Instrument of Service) குறித்த செலவினமாகும். இதற்கான சட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை எதிர்நோக்கி, இச்செலவினம் முதற்கண் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வ.செ.பொ.1) துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை மானியக் கோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கப்பட்டு சட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான விண்ணப்பத்தை எதிர்பாரா செலவின நிதி விதிகள் 1963-இல் உள்ள அட்டவணை "A" படிவத்துடன் இவ்வரசாணையின் நகலுடன் இணைத்து நிதி (வ.செ.பொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார். மேலும், இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை 2024-2025-ஆம் ஆண்டிற்கான துணைமதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதி (வருவாய்/வ.செ.பொ.1) துறைக்கு அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
7. இவ்வரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.
8. கொளத்தூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச்செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
9. இந்த அரசாணை நிதித்துறையின் கோ.எண்.7854302/நிதி(வருவாய்)/2024, நாள் 09.07.2024 மற்றும் அ.சா.கு.
எண்.7854302/மை.ம.ஆ.பி/2024, நாள் 10.07.2024-இல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண்.0390 (முன்னூற்று தொண்ணூறு)
(IFHRMS Additional Sanction Ledger No.2024070390) (PSL No. 202407PSL0097)
(ஆளுநரின் ஆணைப்படி)
பிற்சேர்க்கை - I
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024 கொளத்தூர் புதிய வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்
கொளத்தூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் அயனாவரம் வருவாய் வட்டத்திலிருந்து மாறுதல் செய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் பொதுவான பணியாளர் மாதிரி (Generalized Staff Pattern)-இன்படி பின்வருமாறு தரப்படுகிறது.
| தோற்றுவிக்கப்பட வேண்டும் கீழ்க்கண்ட விவரப்படி பணியிடங்கள் புதிய கொளத்தூர் வட்டம் ஏற்படுத்துவதற்கு | பணியிடத்தின் பெயர் | வட்டத்திற்கு நிரந்தரம் / தற்காலிகம் புதிதாக உருவாக்கப்படும் கொளத்தூர் வருவாய் | பணியிடங்கள் அயனாவரம் வட்டத்தில் தற்போதுள்ள | பணியிடங்கள் அயனாவரம் வட்டத்தில் தொடர வேண்டிய | பணியிடங்கள் அயனாவரம் வட்டத்திற்கு கூடுதலாக தேவைப்படும் | வேண்டிய பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்படும் கொளத்தூர் வட்டத்திற்கு மொத்தமாக பணியமர்த்தப்பட | பணியிடங்கள் அயனாவரம் வட்டத்திலிருந்து கொளத்தூர் வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய | தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் கொளத்தூர் வட்டத்திற்கு புதியதாக | பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்பட வேண்டிய அயனாவரம் மற்றும் கொளத்தூர் வட்டங்களுக்கு |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) = (7)-(8) | (10) = (6) + (9) |
| அ) பொதுப்பிரிவு | |||||||||
| 1 | வட்டாட்சியர் | நி | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 2 | தலைமையிடத்து துணை வட்டாட்சியர் | நி | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 3 | மண்டல துணை வட்டாட்சியர் | நி | 2 | 2 | 0 | 2 | 0 | 2 | 2 | ||
| 4 | முதுநிலை வருவாய் ஆய்வாளர் | நி | 6 | 6 | 0 | 6 | 0 | 6 | 6 | ||
| 5 | குறுவட்ட வருவாய் ஆய்வாளர் | நி | 4 | 2 | 0 | 2 | 2 | 0 | 0 | ||
| 6 | இளநிலை வருவாய் ஆய்வாளர் | நி | 2 | 2 | 0 | 2 | 0 | 2 | 2 | ||
| 7 | தட்டச்சர் | நி | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||
| 8 | ஈப்பு ஓட்டுநர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||
| 9 | பதிவுறு எழுத்தர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||
| 10 | அலுவலக உதவியாளர் | நி | 7 | 4 | 0 | 4 | 3 | 1 | 1 | ||
| 11 | இரவுக்காவலர் | வெளி முகமை | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||
| மொத்தம் | 27 | 22 | 0 | 22 | 5 | 17 | 17 | ||||
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) = (7)-(8) | (10) = (6) + (9) | ||||||||||
| ஆ) சமூக பாதுகாப்பு பிரிவு | |||||||||||||||||||
| 1 | தனி வட்டாட்சியர் | நி | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||||||||||
| 2 | முதுநிலை வருவாய் ஆய்வாளர் | நி | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||||||||||
| 3 | இளநிலை வருவாய் ஆய்வாளர் | நி | 2 | 2 | 0 | 2 | 0 | 2 | 2 | ||||||||||
| 4 | தட்டச்சர் | நி | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||||||||||
| 5 | ஈப்பு ஓட்டுநர் | த | 0 | 0 | 1 | 1 | 0 | 1 | 2 | ||||||||||
| 6 | அலுவலக உதவியாளர் | நி | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||||||||||
| மொத்தம் | 6 | 6 | 1 | 7 | 0 | 7 | 8 | ||||||||||||
| இ) நகர்புற நிலவரித்திட்டம் | |||||||||||||||||||
| 1 | தனி வட்டாட்சியர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||||||||||
| 2 | கணக்காளர் (வருவாய் ஆய்வாளர் நிலையில்) | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||||||||||
| மொத்தம் | 2 | 2 | 0 | 2 | 0 | 2 | 2 | ||||||||||||
| ஈ) வட்ட கலால் அலுவலகம் | |||||||||||||||||||
| 1 | வட்ட கலால் அலுவலர் (வட்டாட்சியர் நிலை) | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||||||||||
| 2 | வருவாய் உதவியாளர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | ||||||||||
| 3 | தட்டச்சர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 |
| 4 | அலுவலக உதவியாளர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | |||||
| மொத்தம் | 4 | 4 | 0 | 4 | 0 | 4 | 4 | |||||||
| உ) நில அளவைப் பிரிவு | ||||||||||||||
| 1 | வட்டத்துணை ஆய்வாளர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | |||||
| 2 | முதுநிலை வரைவாளர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | |||||
| 3 | குறுவட்ட நில அளவர் | த | 4 | 2 | 0 | 2 | 2 | 0 | 0 | |||||
| 4 | புல உதவியாளர் | த | 2 | 2 | 0 | 2 | 0 | 2 | 2 | |||||
| 5 | சார் ஆய்வாளர் | த | 1 | 1 | 0 | 1 | 0 | 1 | 1 | |||||
| மொத்தம் | 9 | 7 | 0 | 7 | 2 | 5 | 5 | |||||||
| மொத்த கூடுதல் (அ+ஆ+இ+ஈ+உ) | 48 | 41 | 1 | 42 | 7 | 35 | 36 |
பிற்சேர்க்கை - II
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
கொளத்தூர் புதிய வருவாய் வட்டத்திற்கு புதிதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்
| வ . எண். | பணியிடங்களின் பெயர் | ஊதிய நிலை ( Pay in pay matrix) | புதிய பணியிடம் | ||
| 1. | வட்டாட்சியர் | நிலை-20, ரூ.37,700-1,38,500/- | 4 | ||
| 2. | துணை வட்டாட்சியர் | நிலை-18, ரூ.35,600-1,35,100/- | 3 | ||
| 3. | முதுநிலை வருவாய் ஆய்வாளர் | நிலை-10, ரூ.20,600-75,900/- | 9 | ||
| 4. | இளநிலை வருவாய் ஆய்வாளர் | நிலை-8, ரூ.19,500-71,900/- | 4 | ||
| 5. | தட்டச்சர் | நிலை-8, ரூ.19,500-71,900/- | 3 | ||
| 6. | ஈப்பு ஓட்டுநர் (கொளத்தூர்-2, அயானவரம்-1) | நிலை-8, ரூ.19,500-71,900/- | 3 | ||
| 7. | பதிவுறு எழுத்தர் | நிலை-2, ரூ.15,900-58,500/- | 1 | ||
| 8. | அலுவலக உதவியாளர் | நிலை-1, ரூ.15,700-58,100/- | 3 | ||
| 9. | இரவு காவலர் | வெளிமுகமை | 1 | ||
| 10. | துணை ஆய்வாளர் (நிலஅளவைப் பிரிவு) | நிலை-12, ரூ.35,600-1,30,800/- | 1 | ||
| 11. | வட்ட சார் ஆய்வாளர் (நிலஅளவைப் பிரிவு) | நிலை-11, ரூ.35,400-1,30,400/- | 1 | ||
| 12. | முதுநிலை வரைவாளர் (நிலஅளவைப் பிரிவு) | நிலை-11, ரூ.35,400-1,30,400/- | 1 | ||
| 13. | புல உதவியாளர் | நிலை-1, ரூ.15,700-58,100/- | 2 | ||
| மொத்தம் | - | 36 | |||
பிற்சேர்க்கை - III
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் வருவாய் வட்டத்திற்கான
தொடரும் / தொடரா செலவினம்
| வ . எண் | விவரம் | தொகை ரூபாயில் ( ஒரு வருடத்திற்கு) | 2024-2025 ஆம் ஆண்டு 8 மாதத்திற்கான தொகை ரூபாயில் |
| 1 | பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள் ( ஆ ண் டெ ா ன் றி ற் கு தோராயமாக) (குறைந்தபட்ச ஊதியம்) | 2,84,67,360 | 1,89,78,240 |
| 2 | வாடகை | தனியே அனுப்பப்படும் | - |
| 3 | மின்சாரக் கட்டணம் | 1,50,000 | 1,00,000 |
| 4 | எரிபொருள் | (வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர்) (9000 X 2) X 12 =2,16,000 | 1,44,000 |
| 5 | தொலைபேசி கட்டணம் | 36,000 | 24,000 |
| 6 | சில்லரை செலவினம் | 2,00,000 | 1,33,334 |
| 7 | கணினி உதிரி பாகங்கள் | 25,000 | 16,667 |
| மொத்தம் | 2,90,94,360/- | 1,93,96,241/- |
(ஆ) தொடரா செலவினங்கள்
| வ . எண் | விவரம் | எண்ணிக்கை | தொகை ரூபாயில் |
| 1 | தளவாடங்கள் (Furnitures) | -- | 7,00,000 |
| 2 | ஈப்பு (Vehicles) ஒன்றிற்கு ரூ.9,00,000/- வீதம் | 2 | 18,00,000 |
| 3 | தொலைபேசி இணைப்பு | 2 | 2,000 |
| 4 | கணினி (Computer Accessories Purchase) ஒன்றிற்கு ரூ.50,000/- | 5 | 2,50,000 |
| 5 | அச்சு பதிவு இயந்திரம் (Printers) ஒன்றுக்கு ரூ.40,000/- | 5 | 2,00,000 |
| 6 | ஜெராக்ஸ் மெஷின் | 1 | 1,30,000 |
| 7 | பேக்ஸ் (Fax and Scanner) | 1 | 50,000 |
| 8 | குளிர் சாதனம் | 2 | 80,000 |
| 9 | தீயணைப்பான் | 1 | 10,000 |
| மொத்தம் | 32,22,000/- |
பிற்சேர்க்கை - IV அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
ஆட்சி எல்லைப்பட்டியல் – கொளத்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்தலுக்கான படிவம்
வட்டச்சீரமைப்பிற்கு பின்
| வ . எண் | ஆட்சி எல்லை விளக்கங்கள் | மத்திய சென்னை கோட்டம் | |
| அயனாவரம் வட்டம் | கொளத்தூர் வட்டம் | ||
| 1. | தலைமையிடம் | அயனாவரம் | கொளத்தூர் |
| 2. | பரப்பளவு (ச.கி.மீ) | 9.06 | 6.24 |
| 3. | மக்கள்தொகை | 3,70,728 | 3,78,168 |
| 4. | வருவாய் கோட்டத்தின் பெயர் | மத்திய சென்னை கோட்டம் | மத்திய சென்னை கோட்டம் |
| 5. | சட்டமன்ற தொகுதியின் பெயர் | வில்லிவாக்கம் | வட சென்னை |
| 6. | பாராளுமன்ற தொகுதியின் பெயர் | மத்திய சென்னை | வட சென்னை |
| 7. | நகராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்) | இல்லை | இல்லை |
| 8. | ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை (பெயருடன்) | இல்லை | இல்லை |
| 9. | பேரூராட்சிகளின் எண்ணிக்கை (பெயருடன்) | இல்லை | இல்லை |
| 10. | உள் வட்டங்களின் எண்ணிக்கை | 2 | 2 |
| 11. | வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை | 5 | 3 |
| 12. | கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை | இல்லை | இல்லை |
| 13. | தலைமையிடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமத்தின் தூரம் | கொன்னூர் கிராமம் – 3.4 கி.மீ | சிறுவள்ளூர் கிராமம்- 3.9 கி.மீ |
| 14. | மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
பிற்சேர்க்கை – V
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
அறிவிக்கை – 1
தமிழ்நாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் சென்னை மாவட்டம், அயனாவரம் வருவாய் வட்டத்தைச் சீரமைத்து கொளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் கீழ்க்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள 3 வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு செயல்படும்:-
| வட்டத்தின் பெயர் | குறுவட்டங்களின் விவரம் | வ . எண் | கிராமத்தின் எண் | கிராமத்தின் பெயர் |
| கொளத்தூர் | கொளத்தூர் | 1 | 1 | கொளத்தூர் |
| பெரவள்ளூர் | 2 | 1 | பெரவள்ளுர் | |
| 3 | 2 | சிறுவள்ளூர் |
அறிவிக்கை – 2
அயனாவரம் வட்டத்தில் வட்டச்சீரமைப்புக்கு முன்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக பின்வருமாறு:-
| தற்போதுள்ள வட்டத்தின் பெயர் | குறுவட்டங்களின் விவரம் | வ . எண் | கிராமத்தின் எண் | கிராமத்தின் பெயர் |
| அயனாவரம் | கொளத்தூர் | 1 | 1 | கொளத்தூர் |
| பெரவள்ளுர் | 2 | 1 | பெரவள்ளுர் | |
| 3 | 2 | சிறுவள்ளூர் | ||
| 4 | 3 | சின்னசெம்பரம்பாக்கம் | ||
| கொன்னூர் | 5 | 1 | கொன்னூர் | |
| 6 | 2 | மல்லிகைச்சேரி | ||
| அயனாவரம் | 7 | 1 | அயனாவரம் – (பகுதி-I) | |
| 8 | 2 | அயனாவரம் - (பகுதி-II) |
அறிவிக்கை – 3
அயனாவரம் வட்டத்தில் வட்டச்சீரமைப்புக்கு பின்னர் உள்ள கிராமங்களின் பெயர்கள் குறுவட்டங்கள் வாரியாக
பின்வருமாறு:-
| தற்போதுள்ள வட்டத்தின் பெயர் | குறுவட்டங்களின் விவரம் | வ . எண் | கிராமத்தின் எண் | கிராமத்தின் பெயர் |
| அயனாவரம் | கொன்னூர் | 1 | 1 | கொன்னூர் |
| 2 | 2 | மல்லிகைச்சேரி | ||
| அயனாவரம் | 3 | 1 | அயனாவரம் – (பகுதி-I) | |
| 4 | 2 | அயனாவரம் - (பகுதி-II) | ||
| 5 | 3 | சின்னசெம்பரம்பாக்கம் |
வே. ராஜாராமன் அரசு செயலாளர் PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU