© தமிழ்நாடு அரசு 2024
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 35] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024 ஆவணி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு–2055
பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை
[அரசாணை (நிலை) எண். 68, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் (G2)த் துறை, 29 மே 2024] சேவைகள் அல்லது பலன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, அடையாள ஆவணமாக 'ஆதார்' ஆவணத்தைப் பயன்படுத்துவது, அரசின் சேவை வழங்கல் செயல்முறைகளை எளிதாக்குவதுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உருவாக்கி, பயனாளிகள் தங்கள் உரிமைகளை நேரடியாகவும் வசதியாகவும் தங்குதடையற்ற முறையிலும் பெறுவதற்கு வகை செய்கிறது என்பதாலும்;
பட்டு வளர்ச்சித் துறை (இனி, துறை எனக் குறிப்பிடப்படும்), பட்டு வளர்ச்சி இயக்குநர் வாயிலாக (இனி, செயல்படுத்தும் முகமை எனக் குறிப்பிடப்படும்) செயல்படுத்தப்படும் பின்வரும் திட்டங்களை நிருவகித்து வருவதாலும்.
அதிக மகசூல் தரும் மல்பெரி நடவு செய்வதற்கான நிதியுதவி.
தனி பட்டுப்புழு வளர்ப்புக் குடில் அமைப்பதற்கான நிதியுதவி.
மல்பெரி தோட்டத்தில் நுண்-நீர்ப்பாசன அமைப்புகளை நிறுவுவதற்கான நிதியுதவி
மல்பெரி மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான நிதியுதவி.
உழவர்களுக்குப் பட்டுப்புழு வளர்ப்பதற்கான சாதனங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை வழங்குதல்.
முன்னோடி பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு விசை ஏர்களை (POWER TILLERS) வழங்குதல்.
மாநில அளவில் சிறந்த பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல்.
மாநில அளவில் சிறந்த பட்டு நூற்பாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல்.
மாநில அளவில் சிறந்த பட்டுப்புழு முட்டை உற்பத்தி விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல்.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான உதவி.
பட்டுப்புழு முட்டை உற்பத்தி நிலையம் (தனியார் பட்டுப்புழு முட்டைநேர்த்தி மையங்கள்) நிறுவுவதற்கான ஆதரவு.
இளம் புழு வளர்ப்பு மையங்களை நிறுவுவதற்கான நிதியுதவி.
பலமுனை பட்டு நூற்பு அலகை நிறுவுவதற்கான நிதியுதவி.
தானியங்கி பட்டு நூற்பு அலகை நிறுவுவதற்கான நிதியுதவி.
[ 1 ]
35-II-1-(T Sup)—12 மேற்சொன்ன திட்டங்களின் கீழ், தற்போதுள்ள திட்ட வழிகாட்டிக் குறிப்புகளின்படி, மானியக் கூறுகள் / ஊக்கத்தொகைகள் (இனி, பலன் எனக் குறிப்பிடப்படும்) தகுதிவாய்ந்த நில உரிமையாளர்களுக்கு (இனி பயனாளிகள் எனக் குறிப்பிடப்படும்), செயல்படுத்தும் முகமையால் வழங்கப்படுவதாலும்;
மேற்கூறிய திட்டங்களின் கீழ், மத்திய அரசின் திரள் நிதி / தொகுநிதி மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் திரள் நிதி / தொகுநிதியிலிருந்து தொடர் செலவினங்கள் மேற்கொள்ளப்படுகிறது எனபதாலும்;
தற்போது, 2016 ஆம் ஆண்டு ஆதார் (பயனாளிகளுக்கு நிதி மற்றும் ஏனைய மானியங்கள், பலன்கள் மற்றும் சேவைகளை வழங்குதல்) சட்டத்தின் (மத்திய சட்டம் 18/2016) 7 ஆம் பிரிவின்படி (இனி, மேற்ெ சான்ன சட்டம் எனக் குறிப்பிடப்படும்), தமிழ்நாடு அரசு பின்வருவனவற்றை இதனால் அறிவிக்கிறது, அவையாவன:-
1. (1) இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறத் தகுதியுடைய தனிநபர் ஒருவர், தான் ஆதார் ஆவணத்தை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் அல்லது ஆதார் உறுதிப்படுத்தல் சோதனைக்குத் தன்னை உட்படுத்த வேண்டும்.
(2) திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற விரும்புகிற ஆதார் எண்ணைக் கொண்டிருக்காத அல்லது நாளதுவரையில் ஆதார் ஆவணம் பெறுவதற்குப் பதிவு செய்யாத, யாதொரு தனிநபரும். திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
இருப்பினும். மேற்சொன்ன சட்டத்தின் 3-ஆம் பிரிவின்படி ஆதார் ஆவணம் பெறுவதற்கு உரிமையுடையவராக அவர் இருக்க வேண்டும். மேலும் அத்தகைய நபர் ஆதார் பதிவு மையத்தை (பட்டியல், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளமான www.uidai.gov.in-இல் இடம்பெற்றுள்ளது) அணுகி ஆதார் ஆவணம் பெறுவதற்குப் பதிவு செய்ய வேண்டும்.
(3) 2016 ஆம் ஆண்டு ஆதார் (பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்) ஒழுங்குமுறை விதிகளின் 12-ஆம் ஒழுங்குமுறை விதியின்படி, துறை, அதன் செயல்படுத்தும் முகமை வாயிலாக ஆதார் பதிவு செய்யப்படாத பயனாளிகளுக்கு அவர்கள் ஆதார் பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். தொடர்புடைய வட்டாரம் அல்லது வட்டம் அல்லது தாலுக்காவில் ஆதார் பதிவு மையம் இல்லாத நேர்வில், துறை, ஏற்கனவே உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பதிவாளர்களுடன் ஒருங்கிணைந்து அல்லது தாமே இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பதிவாளராகி. வசதியான இடங்களில் ஆதார் பதிவு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்:
இருப்பினும், தனிநபருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் காலம் வரை, பின்வரும் ஆவணங்களை தனிநபர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய பலன்கள் அத்தகைய தனிநபருக்கு வழங்கப்பட வேண்டும், அதாவது:-
(a) அவர் ஆதார் ஆவணம் பெறுவதற்குப் பதிவு செய்திருந்தால், அவரது ஆதார் பதிவு அடையாளச் சீட்டு மற்றும், (b) பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று, அதாவது:-
(i) புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கு புத்தகம்; அல்லது
(ii) நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை; அல்லது
(iii) கடவுச்சீட்டு; அல்லது
(iv) குடும்ப அட்டை; அல்லது.
(v) வாக்காளர் அடையாள அட்டை; அல்லது
(vi) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அட்டை; அல்லது
(vii) புகைப்படத்துடன் கூடிய உழவருக்கான (கிசான்) கணக்குப் புத்தகம்; அல்லது
(viii) 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் (மத்திய சட்டம் 59/1988) கீழ் உரிமம் வழங்கும் அதிகார மன்றத்தால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம்; அல்லது
(ix) அரசிதழில் பதிவுபெற்ற அலுவலர் அல்லது வட்டாட்சியரால் அதிகாரப்பூர்வ கடித ஏட்டில் வழங்கப்பட்ட அத்தகைய நபரின் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்; அல்லது
(x) துறையால் குறிப்பிடப்படுகிற ஏனைய யாதொரு ஆவணம்:
3மேலும், மேற்சொன்ன ஆவணங்கள், துறையால் இந்நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் சரிபார்க்கப்படலாம்.
2. திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு சிரமமின்றி பலன்களை வழங்கும் பொருட்டு, துறை, மேற்சொன்ன தேவை குறித்து பயனாளிகளுக்குத் தெரியப்படுத்துவற்கு, ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அதன் செயல்படுத்தும் முகமை வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.
3. பயனாளிகளின் கைரேகை சரியாக பதிவாகாத காரணத்தாலும் அல்லது ஏனைய யாதொரு காரணத்தாலும் ஆதார் உறுதிப்படுத்தல் சோதனை தோல்வியுறும் அனைத்து நேர்வுகளிலும் பின்வரும் தீர்வு ஏற்பாட்டு முறைகள் பின்பற்றப்படும், அதாவது:-
(a) கைரேகை தரம் குறைவாக இருக்கும் நேர்வில், கருவிழி அல்லது முக உறுதிப்படுத்தல் சோதனை மேற்கொள்ளப்படும், அவ்வகையில், பயனாளிகளுக்கு சிரமமின்றி பலன்களை வழங்கும் பொருட்டு, துறை, தன்னுடைய செயல்படுத்தும் முகமை வாயிலாக கைரேகை பதிவு உறுதிப்படுத்தல் சோதனையுடன், கருவிழி ஸ்கேனர்கள் மற்றும் முக அமைப்பு உறுதிப்படுத்தல் சோதனைக்கான வசதிகளுக்கு வகை செய்ய வேண்டும்.
(b) கைரேகைப் பதிவுகள் அல்லது கருவிழி ஸ்கேன் அல்லது முக அமைப்பு உறுதிப்படுத்தல் வாயியான உயிரி அளவை சோதனைகள் வெற்றிபெறாத நேர்வுகளில், சாத்தியமான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க நேர்வுகளில் நேர்விற்கேற்ப ஆதார் வாயிலான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அல்லது குறைந்த நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் ஒரு முறை பயன்படுத்தப்படுகிற கடவுச்சொல் வழங்கப்பட வேண்டும்.
(c) உயிரி அளவை (Bio-metric) அல்லது ஆதார் வாயிலான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல் அல்லது குறைந்த நேரத்திற்கு மட்டுமே செல்திறன் கொண்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிற கடவுச்சொல் வாயிலான உறுதிபடுத்தலுக்கு வாய்ப்பில்லாத ஏனைய அனைத்து நேர்வுகளிலும், அச்சிட்டு வழங்கப்பட்ட ஆதார் கடிதத்தின் அடிப்படையில் திட்டத்தின் பலன்கள் வழங்கப்படலாம். அத்தகைய நபர்களின் நம்பகத்தன்மையை ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள உடன் விளைவுக் குடியீடு (QR Code) வாயிலாக சரிபார்க்கப்படலாம். உடன் விளைவுக் குறியீடு படிப்பானுக்கான (QR Code reader) ஏற்பாடு துறை மற்றும் அதன் செயல்படுத்தும் முகமை வாயிலாக வசதியான இடங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
4. மேற்சொன்னவற்றுடன், திட்டத்தின் கீழ் அனைத்து உண்மையான பயனாளிகளும் தமக்குரிய பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்கு, துறை, தன்னுடைய செயல்படுத்தும் முகமை வாயிலாக மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் 19.12.2017 நாளிட்ட நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் தொடர்பான அலுவலக குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, விதிவிலக்கு தொடர்பானவற்றைக் கையாளுவதற்கான ஏற்பாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.
5. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
தர்மேந்திர பிரதாப் யாதவ், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மொழிபெயர்ப்பு) (கூ.பொ.),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.