Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances - Tamil Supplement Acts (Tamil) -- SUPPLEMENT - Act No. 25 of 2024.--The Tamil Nadu Urban Local Bodies (Second Amendment) Act, 2024.

Published 28 August 2024

Type
Ordinary
Gazette no.
35
Part
Part IV
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-08-28.Ordinary_35_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2024 [விலை: ரூ. 4.00 காசுவிலை: ரூ. 4.00 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 35] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024 ஆவணி 12, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிதமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ன் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 5 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது ஜூலைத் திங்கள் 5 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுமற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-க்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 25/2024.சட்ட எண். 25/2024.

1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை

மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்

மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி

அமைப்புகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

மற்றும்

தொடக்கம்.

(2) (a) 36 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவானது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுத்தல் வேண்டும்.

(b) மற்ற அனைத்து பிரிவுகளும் மாநில அரசு, அறிவிக்கையின் மூலம்

குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2 ஆம் பிரிவிற்கானத் 9/1999.

திருத்தம்.

2. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான), 2 ஆம் பிரிவில்,-

(1) (10) ஆம் கூறில், "நகராட்சி எனும் சொற்றொடருக்காக, "நகராட்சி

மன்றம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (45) ஆம் கூறில், "நகராட்சி எனும் சொற்றொடருக்காக, "நகராட்சி

மன்றம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (46) ஆம் கூறில், "நகராட்சி எனும் சொற்றொடருக்காக, "நகராட்சி

மன்றம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(4) (48) ஆம் கூறில், நகராட்சி எனும் சொற்றொடருக்காக, நகராட்சி

மன்றம் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

3ஆம் பிரிவிற்கானத் 3.முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (h) கூறானது

விட்டுவிடப்படுதல் வேண்டும்.

திருத்தம். 35—IV-2-(T-Sup)—1

[1]2 3-A எனும் பிரிவை

4. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

உட்புகுத்துதல்.

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

3-A. நகராட்சியின் அமைப்பு அல்லது அதன் பரப்பளவு விரிவாக்கத்தின் 3-A. நகராட்சியின் அமைப்பு அல்லது அதன் பரப்பளவு விரிவாக்கத்தின் மீதான மாறுதல் கால வகைமுறைகள்.மீதான மாறுதல் கால வகைமுறைகள்.- (1) நகராட்சியானது அமைக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும்போது அந்த உள்ளூர்ப் பகுதியினை உள்ளடக்கும் நகராட்சியால் அல்லது நகராட்சிக்கு அல்லது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 21/1994) அமைக்கப்பட்ட ஊராட்சியால் அல்லது ஊராட்சிக்கு சொந்தமான அல்லது அதனிடம் உற்றமைந்துள்ள அல்லது அதன் பொறுப்பில் கொண்டுள்ள அனைத்துச் சொத்துக்கள், அதனால் பயன்படுத்தப்படும், அனுபவிக்கப்படும் அல்லது கொண்டிருக்கும் அனைத்து உரிமைகள் எவ்வகையில் இருப்பினும் மற்றும் அனைத்து உரிமை நலன்கள் நேர்விற்கேற்ப, அத்தகைய நகராட்சி அல்லது ஊராட்சிக்கு எதிராகச் சட்ட முறையில் இருந்து வருகிற அனைத்துக் கடப்பாடுகளும் இதன் பொருட்டு பொது அல்லது தனி ஆணையின் மூலமாக அரசு வழங்கக்கூடிய அத்தகைய பணிப்புரைகளுக்குட்பட்டு நகராட்சியின் அமைப்பு அல்லது விரிவாக்கமானது விளம்புகை செய்யப்படும் அறிவிக்கையின் தேதியன்றும் அது முதற்கொண்டும், அவ்வாறு அமைக்கப்பட்ட அல்லது அத்தகைய பரப்பிடங்கள் உள்ளடக்கப்பட்ட நகராட்சியிடம் உற்றமைதல் வேண்டும்.

(2) சென்னைப் பெருநகர் பகுதி தொடர்பான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சேவைகள் தொடர்பான அத்தகைய நிலுவைகள் அல்லது செலுத்தங்கள் தவிர, அத்தகைய அறிவிக்கை தேதியன்று உள்ளவாறான நேர்விற்கேற்ப, நகராட்சி அல்லது ஊராட்சிக்கு கொடுபடவேண்டிய வரிகளின் அனைத்து நிலுவைகள் அல்லது வரி தொகுத்தலின் மூலமான அல்லது செலவுகளுக்காக கொடுபடவேண்டியவை அல்லது இழப்பீடாக அல்லது பிறவாறான பிற செலுத்தங்கள், அமைக்கப்பட்ட அல்லது அத்தகைய பரப்பிடம் உள்ளடக்கப்பட்டுள்ள நகராட்சிக்கு சேர்ந்தடைய வேண்டிய தொகையைப் போலவே வசூலிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய நிலுவைகள் அல்லது செலுத்தங்கள் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி கொடுபட வேண்டிய தொகைகளைப் போன்று வசூலிக்கப்படலாம்.

(3) அத்தகைய அறிவிக்கை தேதிக்கு உடனடி முன்பாக நேர்விற்கேற்ப அத்தகைய நகராட்சி அல்லது ஊராட்சியால் விதிக்கப்பட்டு வந்த வரிகள், கட்டணங்கள் மற்றும் தீர்வைகள் அனைத்தும், இந்த சட்டத்தின் வகைமுறைகளின்படி அமைக்கப்பட்ட அல்லது அத்தகைய உள்ளூர்ப் பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ள நகராட்சியால் விதிக்கப்பட்டு வந்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய வரிகள், கட்டணங்கள் மற்றும் தீர்வைகள் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதன்படியும் அல்லது எடுக்கப்பட்ட நடிவடிக்கை எதன்படியும் திருத்தம், நீக்கம் அல்லது மாற்றியமைக்கப்படும் வரையிலும் அதற்கிணங்கிய வகையில் நடைமுறையில் தொடர்ந்து இருத்தல் வேண்டும்.

(4) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் 21/1994) அத்தகைய ஊராட்சியால் அல்லது அதிகார அமைப்பால் அல்லது நபரெவராலும் அல்லது அதற்கு அல்லது அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அத்தகைய நடவடிக்கைகள் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி தொடங்கியிருப்பதைப் போன்று நகராட்சி அல்லது அதிகார அமைப்பு அல்லது நபரால் அல்லது அதற்கு அல்லது அவருக்கு எதிராகத் தொடரப்படுதல் வேண்டும்.

(5) அத்தகைய அறிவிக்கை தேதிக்கு முன்பு அதிகார அமைப்பு எதனாலும், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் 21/1994) எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், அப்போது இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்ததைப்போன்று இந்தச் சட்டத்தின்படி அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு உரிய அதிகார அமைப்பால் எடுக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(6) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கிருந்தபோதிலும், அத்தகைய அறிவிக்கை தேதிக்கு உடனடி முன்பாக நேர்விற்கேற்ப நகராட்சியில் அல்லது ஊராட்சியில் பணியில் இருந்த அலுவலர் அல்லது பணியாளர் ஒவ்வொருவரும் அத்தகைய அறிவிக்கை தேதியன்றும் அது முதற்கொண்டும் அமைக்கப்பட்ட அல்லது அத்தகைய உள்ளூர்ப் பகுதிகள் உள்ளடக்கப்பட்ட நகராட்சியின் அலுவலரொருவராக அல்லது பணியாளரொருவராகக் கருதப்படுதல் வேண்டும்:

3

வரம்புரையாக,-

(a) அமைக்கப்பட்ட அல்லது அத்தகைய உள்ளாட்சி பகுதிகள் உள்ளடக்கப்பட்ட நகராட்சி பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட அத்தகைய அலுவலர் அல்லது பணியாளர் அதன் விளைவாக அத்தகைய அறிவிக்கை தேதிக்கு உடனடி முன்பாக அத்தகைய அலுவலருக்கு அல்லது பணியாளருக்கு சம்பளம் மற்றும் படித்தொகைகள், விடுப்பு, ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வுபெறும் வயது வரம்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பொருந்தக்கூடிய வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் சாதகம் குறையாது இருத்தல் வேண்டும்; மற்றும்

(b) அத்தகைய அறிவிக்கை தேதி வரையிலும் அத்தகைய ஊராட்சியின் அலுவலர் அல்லது பணியாளர் எவராலும் செய்யப்பட்ட பணியானது அமைக்கப்பட்ட அல்லது உள்ளூர்ப் பகுதிகள் உள்ளடக்கப்பட்ட நகராட்சியின்கீழ் செய்யப்பட்ட பணியாகக் கருதப்படுதல் வேண்டும், மற்றும் அவர் ஊதிய உயர்வுகள், விடுப்பு, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை ஆகியவற்றின் நோக்கத்திற்காக, அந்தப் பணியைக் கணக்கிலெடுத்துக்கொள்ளும் உரிமைத் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக, அத்தகைய ஊராட்சியில் பணிபுரியும் அத்தகைய அலுவலர் அல்லது பணியாளரை, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்ளும் அத்தகைய முறையிலும் அத்தகைய உள்ளூர்ப் பகுதிகள் உள்ளடக்கப்பட்ட நகராட்சிப் பணியில் சேர்த்துகொள்ளும்படியான அல்லது 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 104 மற்றும் 105ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பணிக்கு மாற்றம் செய்யும்படியான அல்லது அத்தகைய ஊராட்சியின் பணியிலிருந்து ஆட்குறைப்பு செய்யும்படியான தமது விருப்பத்தை தெரிவிக்க தேர்வுரிமை வழங்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய ஆட்குறைப்பின் போது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பயன்களுக்கு தகுதியுடையவராதல் வேண்டும்.

32 ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு,

பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

பிரிவிற்கானத்

திருத்தம். (1-A) நபரொருவர், (1) ஆம் உட்பிரிவின்படி நகர்மன்ற தலைவர் அல்லது மன்ற உறுப்பினர் அவ்வாறு பதவியில் இருப்பது அற்றுப்போகும் நேர்வில், அந்தப் பொருட்பாடு ஆணையாளரால் மன்றத்திற்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவிக்கப்படுதல் வேண்டும்..

44 ஆம்

பிரிவிற்கானத் 6. முதன்மைச் சட்டத்தின் 44 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவில், அல்லது நேர்விற்கேற்ப, வரிவிதிப்பு மேல்முறையீடுகள் தீர்ப்பாயம் எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

திருத்தம்.

7. முதன்மைச் சட்டத்தின் 78 ஆம் பிரிவின் (2), (3) மற்றும் (4) ஆம் உட்பிரிவுகளுக்காக, பின்வரும் உட்பிரிவுகளானவை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

(2) (a) நகராட்சிக்குச் சொந்தமான நிலம் எதுவும் அல்லது பிற அசையாச் சொத்து எதனின் விற்பனை, கொடை அல்லது பரிமாற்றம் எதுவும் மன்றத்தால் செய்யப்படுதல் கூடாது:

வரம்புரையாக, நகராட்சி நிலம் எதுவும் அல்லது பிற அசையாச் சொத்து எதுவும் பொது நோக்கம் எதற்காகவும், மைய அல்லது மாநில அரசால் அல்லது மைய அல்லது மாநில பொதுத்துறை நிறுவனங்கள் எதனாலும் வேண்டப்படுமாயின், மன்றமானது அத்தகைய நிலம் அல்லது கட்டடத்தின் விற்பனை, கொடை அல்லது பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கலாம்.

(b) நகராட்சிக்குச் சொந்தமான நிலம் அல்லது பிற அசையாச் சொத்து எதனின் விற்பனை, கொடை அல்லது பரிமாற்றம் எதுவும் அரசின் ஒப்புதலின்றி மன்றத்தால் செய்யப்படுதல் கூடாது.

(c) இந்த உட்பிரிவின்படி அசையாச் சொத்தின் அத்தகைய விற்பனை, கொடை அல்லது பரிமாற்றமானது, அரசால் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் செய்யப்படுதல் வேண்டும்.

4

78 ஆம்

(3) மன்றமானது,-

பிரிவிற்கானத்

(i) வணிகம் சாரா நோக்கங்களுக்காக பொது மக்களுக்கு மூன்றாண்டுகளுக்கு;

திருத்தம்.

(ii) மைய அல்லது மாநில அரசு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது மைய அல்லது மாநில அரசிற்கு சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள சட்டமுறை அமைப்புகளுக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு;

(iii) வணிக விற்பனை வளாங்களின் நேர்வில், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு:

வரம்புரையாக, அத்தகைய உரிமம், குத்தகை அல்லது வாடகைக்கு விடுதலானது ஒரு சமயத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான ஒரு கால அளவிற்காக வழங்கப்படுதல் கூடாது;

(iv) வேளாண் நோக்கத்திற்காக வேளாண் நிலத்தின் நேர்வில், இருபது

ஆண்டுகளுக்கு;

மேற்படாத, ஒரு கால அளவிற்கு, பயன்பாட்டிற்கு அல்லது குடியிருப்பதற்கு அதற்கு சொந்தமான நிலம் அல்லது கட்டடங்களுக்கு உரிமம், குத்தகை வழங்கலாம் அல்லது அதனை வாடகைக்கு விடலாம்:

வரம்புரையாக, தனிப்பட்ட மற்றும் அசாதாரணமான சூழ்நிலைகளில், பின்வரும் நல்லெண்ணத்திலான பொது நோக்கங்களுக்காக, இந்த உட்பிரிவில் வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்கு அப்பால் நீண்டகால குத்தகைக்கு ஒப்புதலளிக்க மன்றத்தை அரசு அனுமதிக்கலாம், அவையாவன:-

(i) கல்வி நோக்கம்;

(ii) மருத்துவ நோக்கம்;

(iii) அறக்கொடை நோக்கம்;

(iv) சமூக நல செயல்பாடுகள்;

(v) சிறுபான்மையினர் நல செயல்பாடுகள்.

(4) (3)ஆம் உட்பிரிவில் வகுத்துரைக்கப்பட்ட காலஅளவின் முடிவிற்குப் பின்பு, உரிமம், குத்தகை அல்லது வாடகைக்கு விடுவதை நீட்டிக்க அல்லது புதுப்பிக்க, அனுமதிக்கப்படுதல் கூடாது மற்றும் அதற்காக செய்யப்பட்ட விண்ணப்பம் எதுவும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்க புதிதாக கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

(5) (a) உரிமக்கட்டணம், குத்தகைக் கட்டணம் அல்லது வாடகையானது,-

(i) முதலாம் ஆண்டிற்கு, நிலம் அல்லது கட்டடம் ஒப்படைக்கப்படும் சமயத்தில்

செலுத்தப்படுதல் வேண்டும்; மற்றும்

(ii) அடுத்துவரும் ஒவ்வொரு ஆண்டிற்கும் முந்தைய ஆண்டின் பிப்ரவரி

28ஆம் நாளுக்கு முன்பு செலுத்தப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, விற்பனை வளாகங்கள் அல்லது பொதுச் சந்தைகளிலுள்ள கடைகளை வாடகைக்கு விடுவதற்காக, அதன் வாடகையானது ஒவ்வொரு மாதமும் வசூல் செய்யப்படுதல் வேண்டும்;

(b) உரிமக் கட்டணம், குத்தகைக் கட்டணம் அல்லது வாடகையானது, நிலுவையின் போது வகுத்துரைக்கப்படும் தேதிக்குள் செலுத்தப்படாததற்காக, பன்னிரெண்டு விழுக்காடு என்ற வீதத்தில் தனி வட்டி விதிக்கப்படுதல் வேண்டும்.

(c) உரிமக் கட்டணம், குத்தகைக் கட்டணம் அல்லது வாடகையானது, உரிமம் அல்லது குத்தகை காலத்தின் போது ஒவ்வொரு ஆண்டிற்கும் ஐந்து விழுக்காடு அதிகரிக்கப்படுதல் வேண்டும்.

82 ஆம்

8. முதன்மைச் சட்டத்தின் 82 ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

பிரிவிற்கானத்

திருத்தம்.

(2-A) (2) ஆம் உட்பிரிவின் (b) மற்றும் (c) கூறுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட அத்தகைய விவர அறிக்கை எதுவும் சொத்து வரியை அத்தகைய மறுகணிப்பு செய்வதற்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் சேர்த்து இருத்தல் வேண்டும்..

5

83 ஆம்

பிரிவிற்கானத் 9. முதன்மைச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் உள்ள வரம்புரையில் (a) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-

திருத்தம்.

(a) சாதாரணமாக வாடகைக்கு விடப்படாத ஒரு வகைக் கட்டடம் எதனின் நேர்வில், மொத்த ஆண்டு மதிப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் வீதத்தில், அடிப்படை மண்டல மதிப்பு அல்லது அடிப்படை தெரு வீதத்தின்படி கணக்கிடப்படுதல் வேண்டும், மற்றும் ஆணையாளரின் கருத்தில், மொத்த ஆண்டு மதிப்பானது நேர்விற்கேற்ப, அடிப்படை மண்டல மதிப்பு அல்லது அடிப்படைத் தெரு வீதத்தின் அடிப்படையில் கணக்கிட முடியாது என்ற நேர்வில், வளாகத்தின் ஆண்டு மதிப்பானது நிலத்தின் மொத்த கணக்கிடப்பட்ட மதிப்பின் மற்றும் கட்டடத்தின் கணக்கிடப்பட்ட தற்போதைய கட்டுமானச் செலவுத் தொகையிலிருந்து, எந்நேர்விலும், அச்செலவுத்தொகையின் பத்து விழுக்காட்டுக்குக் குறையாத மதிப்பிறக்கத்திற்கான ஒரு நியாயமான தொகையினைக் கழித்த பின்பு ஆறு விழுக்காடாக கருதப்படுதல் வேண்டும்..

84 ஆம் 10. முதன்மைச் சட்டத்தின் 84 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (1) ஆம் உட்பிரிவில், முப்பது நாட்கள் எனும் சொற்றொடருக்காக,

திருத்தம்.

ஒரு மாதம் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (3) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

(4) இந்த பிரிவில் அடங்கியுள்ள எதுவும் மைய அல்லது மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகள் அல்லது மைய அல்லது மாநில அரசுகளுக்குச் சொந்தமான அல்லது அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சட்டமுறை அமைப்புகளுக்குப் பொருந்தாது..

97 ஆம் பிரிவிற்கான 11. முதன்மைச் சட்டத்தின் 97 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :-

மாற்றீடு.

97. விடுபட்ட வரிக்கணிப்பினை மதிப்பீடு செய்யும் அதிகாரம் இந்தச் சட்டத்தில் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், காரணம் எதற்காகவும் இந்த அத்தியாயத்தின்படி விதிக்கப்படலாகும் வரிகள் அல்லது கட்டணங்கள் எதையும் செலுத்தும் கடப்பாடுடைய நபரெவரும், அரையாண்டு அல்லது ஆண்டு எதிலும் வரிக்கணிப்பில் விடுபட்டுள்ளார் அல்லது அவர் கணிக்கப்பட வேண்டிய வீதத்திலிருந்து குறைவான வீதத்தில் அரையாண்டு அல்லது ஆண்டு எதிலும் கணிக்கப்பட்டுள்ளாரானால் அல்லது தொடர்புடைய கட்டடம் அல்லது நிலமானது முறையான வரிக்கணிப்பில் விடுபட்டுள்ளதன் விளைவாக அரையாண்டு அல்லது ஆண்டு எதிலும் சொத்து வரியானது முறையாக கணிக்கப்படாத நேர்வில், ஆணையாளரானவர், எந்த நேரத்திலும், அத்தகைய நபருக்கு, செலுத்த வேண்டிய வரி அல்லது கட்டணத்தை கணக்கிட்டு மற்றும் அறிவிப்பு சார்வு செய்யப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் அதனை செலுத்தக் கோரி ஒரு அறிவிப்பினை சார்வு செய்யலாம் மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளானது, இயன்ற அளவில், தொடர்புடைய வரி அல்லது கட்டணத்தின் அரையாண்டு அல்லது ஆண்டில் அந்த வரிக்கணிப்பு செய்யப்பட்டதைப்போன்று, அதற்குப் பொருந்துதல் வேண்டும்:

வரம்புரையாக, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலான வரி நிலுவை அல்லது

கட்டண நிலுவையை வசூலித்தல் கூடாது..

116 ஆம் 12. முதன்மைச் சட்டத்தின் 116 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (i) வரி எனும் சொல்லானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

திருத்தம்.

(ii) நில வருவாயின் நிலுவைத் தொகையாக, எனும் சொற்றொடருக்காக, 116-A ஆம் பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

6

117-B பிரிவிற்கானத்

13. முதன்மைச் சட்டத்தின் 117-B பிரிவில்,-

திருத்தம்.

(1) (2) ஆம் உட்பிரிவின், வரம்புரையில் பணியாளர் எனும் சொல்லுக்காக,

நபர் எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (4) ஆம் உட்பிரிவில், 1924 ஆம் ஆண்டு இராணுவ குடியிருப்புச் சட்டம் (மையச் சட்டம் 11/1924), எனும் சொற்றொடருக்காக, 2006 ஆம் ஆண்டு இராணுவ குடியிருப்புச் சட்டம் (மையச் சட்டம் 41/2006) எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

117-G பிரிவிற்கான

14. முதன்மைச் சட்டத்தின் 117-G பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

மாற்றீடு.

117-G-மேல்முறையீடு.- (1) (தண்டத்தொகை, கட்டணம் மற்றும் வட்டித்தொகை உள்ளடங்கலான) வரிச் செலுத்தம் தொடர்பாக ஆணையாளரின் ஆணை அல்லது முடிவு எதனாலும் பாதிக்கப்பட்ட நபர் அல்லது பணியாளர் எவரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள், வரிவிதிப்பு மேல்முறையீடுகள் குழுவிற்கு மேல்முறையீடு செய்யலாம்.

(2) வரிவிதிப்பு மேல்முறையீடுகள் குழுவின் முடிவு இறுதியானதாகும் மற்றும்

நீதிமன்றம் எதிலும் கேள்விக்குரியதாகாது:

வரம்புரையாக, அத்தகைய முடிவு எதுவும் பாதிக்கப்பட்ட நபருக்கு கேட்கப்படுவதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்கினாலன்றி செய்யப்படுதல் கூடாது..

117-L பிரிவிற்கானத்

திருத்தம்.

15. முதன்மைச் சட்டத்தின் 117-L பிரிவின் (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளுக்காக, பின்வரும் உட்பிரிவுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

(1) எவ்விடத்திலும் விளம்பரப் பலகையை வைக்கக் கருதும் ஓவ்வொரு நபரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் அத்தகைய படிவத்தில் நகராட்சியிடம் தனது பெயரை பதிவு செய்தல் வேண்டும்.

(2) (1) ஆம் உட்பிரிவின்படி பெயர் பதிவு செய்யப்பட்ட நபரெவரும் ஆணையாளரிடம் விளம்பரப் பலகை எதையும் வைப்பதற்கான ஓர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

(2-A) (2) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமத்திற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன், அத்தகைய விவரங்களைக் கொண்ட, அத்தகைய படிவத்தில் ஆணையாளரிடம் செய்யப்படுதல் வேண்டும்..

117-M பிரிவிற்கானத்

16. முதன்மைச் சட்டத்தின் 117-M பிரிவின் (2) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும்

வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

திருத்தம்.

வரம்புரையாக, அரசியல் நிகழ்வின் நேர்வில், அத்தகைய விண்ணப்பமானது, மின்னணுத் திரை அல்லது விளம்பர அட்டை வைக்கப்பட்ட தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாக செய்யப்படுதல் வேண்டும்..

117-O பிரிவிற்கானத்

திருத்தம்.

17. முதன்மைச் சட்டத்தின் 117-O பிரிவில், நில வருவாயின் நிலுவைத் தொகையாக, எனும் சொற்றொடருக்காக , 116-A ஆம் பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

117-P பிரிவிற்கானத்

திருத்தம்.

18. முதன்மைச் சட்டத்தின் 117-P பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், நில வருவாயின் நிலுவைத் தொகையாக, எனும் சொற்றொடருக்காக, 116-A ஆம் பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

117-S பிரிவிற்கான

19. முதன்மைச் சட்டத்தின் 117-S பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

மாற்றீடு.

117-S. நகராட்சியிடம் உற்றமைந்துள்ள சொத்துக்களில் விளம்பரம் செய்வதற்கான மற்றும் பொதுச் சொத்தினை கட்டுவதற்கான அல்லது பேணுவதற்கான உரிமைகளை வழங்குவதற்கு அதிகாரம். (1) 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தவெளி (சிதைவைத் தடுத்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 2/1959) அல்லது அப்போது நடைமுறையிலுள்ள பிறச் சட்டம் எதனின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஆணையாளரானவர்,-7 117-S பிரிவிற்கானத் (a) ஒப்பந்த அடிப்படையில் விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்கு; அல்லது

மாற்றீடு.

(b) 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 43/1998) வகைமுறைகளின்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதன் மூலம், பொது தனியார் கூட்டுத்திட்டத்தின் அடிப்படையிலான ஒரு பொதுச் சொத்தினை கட்டுவதற்கு அல்லது பேணுவதற்கு,

நபரெவருக்கும் அல்லது நபர்களின் வகையினருக்கும் அல்லது நிறுவனம்

அல்லது அமைப்பு எதற்கும் உரிமை வழங்கலாம்.

(2) (1)ஆம் உட்பிரிவின்கீழ் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை எதுவும், நேர்விற்கேற்ப 117-L பிரிவின் அல்லது 117-M பிரிவின்கீழ் செலுத்தப்பட வேண்டிய உரிமக் கட்டணத்திற்கு கூடுதலாகவும் மற்றும் அதிலிருந்து வேறுபட்டதாகவும் இருத்தல் வேண்டும்.

(3) இந்தப் பிரிவில் உள்ளடங்கிய எது எவ்வாறிருப்பினும், மன்றமானது நகராட்சிக்குச் சொந்தமான அல்லது அதனிடம் உற்றமைந்துள்ள ஒரு பொதுச் சொத்தினை பேணிக்காக்கும் நபரெவரையும் அல்லது நபர்களின் ஒரு வகுப்பினரையும் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பு எதனையும் அதன் சொந்த செலவில், அவற்றின் சொந்த விளம்பரத்தை காட்சிப்படுத்த அனுமதிக்கலாம்..

117-T பிரிவிற்கானத்

திருத்தம்.

20. முதன்மைச் சட்டத்தின் 117 T பிரிவில், இரு இடங்களில் காணப்படும் நில வருவாயின் நிலுவைத் தொகையாக, எனும் சொற்றொடருக்காக, 116-A ஆம் பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

118 ஆம்

பிரிவிற்கானத் 21. முதன்மைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவின், (5) ஆம் உட்பிரிவின் இறுதியில், இயக்குநரிடமிருந்து ஆணைகள் பெற்ற பின்பு எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்.

திருத்தம்.

119 ஆம்

பிரிவிற்கானத் 22. முதன்மைச் சட்டத்தின் 119 ஆம் பிரிவின், ஓரத் தலைப்பில், வைத்தல் எனும் சொற்றொடருக்காக, கட்டுதல் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

திருத்தம்.

120 ஆம் 23. முதன்மைச் சட்டத்தின் 120 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத்

திருத்தம்.

(1) (2) ஆம் உட்பிரிவில், ஆணையாளர் எனும் சொற்றொடருக்காக, சென்னைப் பெருநகர திட்டப் பகுதியின் நேர்வில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் மற்றும் பிறப் பகுதிகளின் நேர்வில் நகர் ஊரமைப்பின் இயக்குநர் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (6) ஆம் உட்பிரிவில், இரு இடங்களில் காணப்படும் ஆணையாளர் எனும் சொற்றொடருக்காக, சென்னைப் பெருநகர திட்டப் பகுதியின் நேர்வில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் மற்றும் பிறப் பகுதிகளில் நேர்வில், நகர் ஊரமைப்பின் இயக்குநர் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

122 ஆம்

பிரிவிற்கானத் 24. முதன்மைச் சட்டத்தின் 122 ஆம் பிரிவில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் எனும் சொற்றொடருக்காக, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

திருத்தம்.

128 ஆம் 25. முதன்மைச் சட்டத்தின் 128 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத் (1) (1) ஆம் உட்பிரிவில்,-

திருத்தம் (a) (a) கூறில், தெருவில் அல்லது பொது இடத்தில் அல்லது நிலத்தில் எனும் சொற்றொடருக்காக, தெரு, பொது இடம், நீர்நிலை, குளம், பிற நீர் ஆதாரங்கள் அல்லது நிலம் எதிலும் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(b). (b) கூறில்,-

(i) தெருவில் அல்லது பொது இடத்தில் அல்லது நிலத்தில் எனும் சொற்றொடருக்காக, தெரு, பொது இடம், நீர்நிலை, குளம், பிற நீர் ஆதாரங்கள் அல்லது நிலம் எதிலும் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) ஏழு நாட்கள் எனும் சொற்றொடருக்காக, பதினைந்து நாட்கள்

எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

8

.

(2). (2) ஆம் உட்பிரிவில், பொதுத் தெரு எதிலும் அல்லது நிலம் எதிலும் எனும் சொற்றொடருக்காக, பொதுத்தெரு, நீர்நிலை, குளம், பிற நீர் ஆதாரங்கள் அல்லது நிலம் எதிலும் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

133 ஆம்

பிரிவிற்கானத்

26. முதன்மைச் சட்டத்தின் 133 ஆம் பிரிவின் (8), (9), (10) மற்றும் (11) ஆம் உட்பிரிவுகளுக்காக, பின்வரும் உட்பிரிவுகளானது மாற்றாக அமைக்கப்படுத்தல் வேண்டும், அவையாவன:-

திருத்தம்.

(8) எந்த அனுமதியும் வழங்கப்படாதவிடத்தும் மற்றும் எந்த பிற விவரங்களையும் அளிப்பதிலுள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்காக விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படாதவிடத்தும், விண்ணப்பதாரர், (6) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட அனுமதி வழங்குவதற்கான காலவரம்பு முடிவுற்ற தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், நேர்விற்கேற்ப, சென்னைப் பெருநகர திட்டப் பகுதியின் நேர்வில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளரிடம் அல்லது பிற பகுதிகளின் நேர்வில் நகர் ஊரமைப்பின் இயக்குநரிடம், அத்தகைய விவரங்களுடன் சேர்த்து கட்டட விண்ணப்பத்தின் படி ஒன்றைத் தாக்கல் செய்யலாம்.

(9) விண்ணப்பம் ஒன்றைப் பெற்றதன் பேரில், நேர்விற்கேற்ப, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அல்லது நகர் ஊரமைப்பின் இயக்குநரானவர், விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களின் சீர்மையை சரிபார்த்த பின்பு மற்றும் முன்மொழியப்பட்ட கட்டடத்தின் கட்டுமானம் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு இணங்கி இருப்பதாக அவர் மனநிறைவு அடைந்தபின்பு, விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் எழுத்து மூலமாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக அனுமதி வழங்கலாம் அல்லது அனுமதி வழங்க மறுக்கலாம்.

(10) (6) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணையாளரால் அல்லது (9) ஆம் பிரிவின்கீழ், நேர்விற்கேற்ப, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளரால் அல்லது நகர் ஊரமைப்பின் இயக்குநரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றை ஆட்சேபிக்கும் நபர் எவரும், அந்த ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் கால அளவிற்குள் அத்தகைய படிவத்தில் அரசிடம் மேல்முறையீடு ஒன்றைச் செய்யலாம் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் சேர்த்து செய்யப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, அரசானது, மனுதாரர் அந்த மேல்முறையீட்டை உரிய காலத்தில் தாக்கல் செய்யப்படாததற்கு போதுமான காரணம் கொண்டிருப்பதாக மனநிறைவு அடைந்திருப்பின், அத்தகைய காலஅளவு முடிவுற்ற பின்பு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம்.

விளக்கம்.- இந்த உட்பிரிவு மற்றும் (11) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, அரசு என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறையின் அரசு என்று பொருள்படும்.

(11) அரசானது, மேல்முறையீட்டுக்கான காரணங்களை பரிசீலனை செய்த பின்பு, நேர்விற்கேற்ப, ஆணையாளர் அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அல்லது நகர் ஊரமைப்பு இயக்குநரின் ஆணையினை உறுதி அல்லது தள்ளுபடி, இரத்து அல்லது எந்த வகையிலும் மாற்றம் செய்யலாம்:

வரம்புரையாக, மேல்முறையீட்டாளருக்கு கேட்கப்படுவதற்கான வாய்ப்பு ஒன்று வழங்கப்படாமல் அவருக்கு குந்தகம் விளைவிக்கும் ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் ஆகாது..

135 ஆம்

27. முதன்மைச் சட்டத்தின் 135 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

பிரிவிற்கானத்

திருத்தம்.

9

(7) (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரம்பிற்குள்ளும் விதிகளுக்கு இணங்கவும் கட்டடம் எதிலும் கட்டமைப்பு, மறுகட்டமைப்பு அல்லது மாற்றம் செய்வதை ஒழுங்குப்படுத்துவதற்கு நபரை அறிவுறுத்தும், கூறப்பட்ட உட்பிரிவின்கீழ் ஆணையாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு எதற்கும் இணங்கி, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நேர்வில், ஆணையாளர், அந்தக் கட்டடத்தை பூட்டிவிடலாம் மற்றும் அடைத்துவிடலாம் அல்லது முறைகேடான கட்டமைப்பை அகற்றிவிடலாம் அல்லது இடித்துவிடலாம். அத்தகைய அகற்றல் அல்லது இடித்தலின் போது நகராட்சிக்கு நேரிட்ட செலவினத்தின் தொகைகளை, 116-A பிரிவின்படியான ஒரு வரி நிலுவைத்தொகையாக தொடர்புடைய நபரிடமிருந்து வசூலித்தல் வேண்டும்..

137 ஆம்

பிரிவிற்கானத் 28. முதன்மைச் சட்டத்தின் 137 ஆம் பிரிவில், நில வருவாயின் நிலுவைத் தொகையாக, எனும் சொற்றொடருக்காக, 116-A பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

திருத்தம்.

145 ஆம்

பிரிவிற்கானத்

திருத்தம்.

29. முதன்மைச் சட்டத்தின் 145 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், நில வருவாயின் நிலுவைத் தொகையாக, எனும் சொற்றொடருக்காக, 116-A பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

155 ஆம்

பிரிவிற்கானத்

திருத்தம்.

30. முதன்மைச் சட்டத்தின் 155 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் வரம்புரையில், அந்தக் கட்டடத்தில் ஏற்கனவே இருந்துவரும் அகற்றுதலுக்கான பிற வழிமுறை எதனையும் தொடர்தல் கூடாது" எனும் சொற்றொடருக்காக, கழிவு நீர்த்தொட்டி, கழிவு நீர்க்குட்டை அல்லது கழிவு நீரகற்றும் வாகனங்கள் போன்ற கழிவுநீர் அகற்றுதலுக்கான பிற வழிமுறைகள் எவற்றையும் தொடர்தல் அல்லது பின்பற்றுதல் கூடாது எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

161-A பிரிவிற்கானத்

திருத்தம்.

31. முதன்மைச் சட்டத்தின் 161-A பிரிவின் (3) ஆம் உட்பிரிவில், நில வருவாயின் நிலுவைத் தொகையாக, எனும் சொற்றொடருக்காக, 116-A பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

170 ஆம்

பிரிவிற்கானத்

திருத்தம்.

32. முதன்மைச் சட்டத்தின் 170 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், நில வருவாயின் நிலுவைத் தொகையாக, எனும் சொற்றொடருக்காக, 116-A ஆம் பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

173 ஆம்

பிரிவிற்கானத்

திருத்தம்.

33. முதன்மைச் சட்டத்தின் 173 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (b) கூறில் குற்றவியல் நீதித்துறை நடுவர் எனும் சொற்றொடருக்காக, ஆணையாளர் அல்லது குற்றவியல் நீதித்துறை நடுவர் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

175 ஆம்

பிரிவிற்கானத்

திருத்தம்.

34. முதன்மைச் சட்டத்தின் 175 ஆம் பிரிவின் (11) ஆம் உட்பிரிவில், நில வருவாயின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடருக்காக, 116-A பிரிவின்கீழ் வரியின் நிலுவைத் தொகையாக எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

194 ஆம்

பிரிவிற்கானத் 35. முதன்மைச் சட்டத்தின் 194 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (a) கூறுக்காக, பின்வரும் கூறுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

திருத்தம்.

(a) வகுத்துரைக்கப்படலாகும் மின்னணு வழிமுறைகள் மூலம் அத்தகைய

நபருக்கு கூறப்பட்ட ஆவணத்தை அனுப்புவதன் மூலம்; அல்லது

(aa) அத்தகைய நபருக்கு கூறப்பட்ட ஆவணத்தை கொடுப்பதன் மூலம்

அல்லது வழங்குவதன் மூலம்; அல்லது

36. முதன்மைச் சட்டத்தின் 198 ஆம் பிரிவில்,- 198 ஆம்

பிரிவிற்கானத்

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில், விதிகளைச் செய்யலாம் எனும் சொற்றொடருக்காக, பின்னுற அல்லது முன்னுற விதிகளைச் செய்யலாம் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

10

(2) (3) ஆம் உட்பிரிவில்,-

(a) சிறப்பு நிலை நகராட்சிகள், எனும் சொற்றொடருக்காக, சிறப்பு நிலை நகராட்சி மன்றங்கள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) தேர்வு நிலை மற்றும் முதல் நிலை நகராட்சிகள், எனும் சொற்றொடருக்காக, தேர்வு நிலை மற்றும் முதல் நிலை நகராட்சி மன்றங்கள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) இரண்டாம் நிலை நகராட்சிகள் எனும் சொற்றொடருக்காக, இரண்டாம் நிலை நகராட்சி மன்றங்கள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

199-A பிரிவினை

37. முதன்மைச் சட்டத்தின் 199 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

199-A. தமிழ்நாடு சட்டம் II/1888ன் பெருந்துகை.-1888 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுமக்கள் கூடுமிடங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் II/1888) வகைமுறைகள் நகராட்சிகளுக்கு பொருந்துதல் வேண்டும்.

200 ஆம்

38. முதன்மைச் சட்டத்தின் 200 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கானத்

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவின் (h) கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(2) (3) ஆம் உட்பிரிவின் (e) கூறில், நகராட்சிகள் எனும் சொற்றொடருக்காக, அவை காணப்படுகின்ற இரண்டு இடங்களிலும், நகராட்சி மன்றங்கள் எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு) த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 August 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-08-28.Ordinary_35_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-08-28.Ordinary_35_Part-IV_Section-2-T-Sup.