Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by the Heads of Departments, which are of interest to a Section of the public. District Collectors - Tamil Nadu Panchayats Act - State Election Commission Notification - Removal of Panchayat Chairman, Tamil Nadu Legal Services Notification - Tamil Nadu Electricity Regulatory Commission - Government Examination Loss of Certificates. Tamil Nadu Electricity Regulatory Commission, Chennai--Tamil Nadu Electricity Regulatory Commission (Renewable Energy Purchase Obligation) Regulations 2023 - Notification No. VI(2)/29/2024.--(Lr.No. TNERC/Legal/1359/D.No.1281/2024)

Published 11 September 2024

Type
Ordinary
Gazette no.
37
Part
Part VI
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2024-09-11.Ordinary_37_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.

2024 [Price: Rs. 4.00 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 37] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 11, 2024 Aavani 26, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , சென்னை

2023ஆம்‌‌ ஆண்டு‌ தமிழ்நாடு‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணைய‌ (புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌

கொள்முதல்‌‌கடப்பாடு)‌ஒழுங்குமுற‌ைவிதிகள்‌ .. .. .. .. .. .. .. 188-195 DTP—VI-2 (37)

[187]188 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , சென்னை

2023ஆம்‌‌ஆண்டு‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணைய‌(புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌கொள்முதல்‌‌கடப்பாடு)‌ ஒழுங்குமுற‌ைவிதிகள்‌

(அறிவிக்கை எண் .த.மி.ஒ.ஆ./புகொக/01/2023, 27-09-2023 நாளிட்டது)

(ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டதின் தமிழாக்கம் )

(Lr.No. TNERC/Legal/1359/D.No.1281/2024)

No. VI(2)/29/2024.

மின்சாரச்‌சட்டம்,‌2003‌இன்‌மத்தியச்‌சட்டம்‌36/2003)‌181-ஆம்‌பிரிவுடன்‌சேர்த்து‌படிக்கப்படும்‌61,‌66‌மற்றும்‌86(1)(e)‌ ஆம்‌பிரிவுகளின்‌மூலம்‌வழங்கப்பட்டுள்ள‌அதிகாரங்களையும்‌மற்றும்‌இதன்பொருட்டு‌அதன‌ைஇயல்விக்கும்‌‌அனைத்துப்‌பிற‌ அதிகாரங்களையும்‌‌செலுத்தி‌மற்றும்‌‌முந்திய‌வெளியீட்டிற்குப்‌‌பின்பு,‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌,‌இதன்‌‌மூலம்‌,‌ பின்வரும்‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌கொள்முதல்‌‌கடப்பாடு‌ஒழுங்குமுற‌ைவிதிகள‌ைஉருவாக்குகிறது‌:

1. குறுந்தலைப்பும் மற்றும் தொடக்கமும் .—

(1)‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகள்‌,‌2023ஆம்‌‌ஆண்டு‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணைய‌(புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌ கொள்முதல்‌‌கடப்பாடு)‌ஒழுங்குமுற‌ைவிதிகள்‌‌என்று‌வழங்கப்‌பெறும்‌.

(2)‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகள்‌,‌அவ‌ைதமிழ்நாடு‌அரசிதழில்‌‌வெளியிடப்பட்ட‌நாளிலிருந்து‌நடைமுறைக்கு‌வரும்‌.

2. பொருள்வரையறைகள் .—

(1)‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகளில்‌,‌தறுவாய்‌‌வேறு‌பொருள்‌‌குறித்தாலன்றி,-

‌ (a)‌"சட்டம்"‌‌என்பது,‌2003ஆம்‌‌ஆண்டு‌மின்சாரச்‌‌சட்டம்‌‌(சட்ட‌எண்‌.36/2003)‌என்று‌பொருள்படும்‌

‌ (b)‌'மத்திய‌முகமை'‌என்பது,‌தேசிய‌மின்சுமைப்‌பகுப்பு‌மையத்த‌ைஇயக்கும்‌முகம‌ைஅல்லது‌மத்திய‌ஆணையத்தால்‌ அவ்வப்போது‌நியமிக்கப்படும்‌அத்தகைய‌பிற‌முகம‌ைஎன்று‌பொருள்படும்‌‌;

‌ (c)‌ 'மத்திய‌ ஆணையம்‌'‌ என்பது,‌ மின்சாரச்‌‌ சட்டத்தின்‌‌ 2(9)ஆம்‌‌ பிரிவில்‌‌ பொருள்வரையற‌ை செய்யப்பட்டவாறான‌ மத்திய‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌‌என்று‌பொருள்படும்‌‌;

‌ (d)‌'சான்றிதழ்'‌என்பது,‌மத்திய‌முகமையினால்‌‌வகுத்துரைக்கப்பட்ட‌நடைமுறைகளுக்கிணங்கி‌அதனால்‌‌வழங்கப்படுதலும்‌ மற்றும்‌‌அவ்வப்போது‌திருத்தி‌அமைக்கப்படும்‌2022ஆம்‌‌ஆண்டு‌மத்திய‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணைய‌(புதுக்கப்பிக்கத்தக்க‌ எரிசக்தி‌உற்பத்திக்கான‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்திச்‌‌சான்றிதழ்கள்‌விதிமுறைகள்‌‌மற்றும்‌‌வரையறைகள்‌)‌ஒழுங்குமுறைவிதிகளின்‌ வகைமுறைகளின்‌கீழ்‌குறித்துரைக்கப்படுதலும்‌‌என்று‌பொருள்படும்‌;

‌ (e)‌'ஆணையம்‌'‌என்பது,‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌‌என்று‌பொருள்படும்‌‌;

‌ (f)‌மாதம்‌என்பது‌ஆங்கில‌(காலண்டர்‌)‌மாதம்

‌ (g)‌"கடப்பாடுடைய‌நிறுவனம்"‌ ‌என்பது‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகளின்படி‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கட்டுப்பாட்டிற்கு‌ சட்டப்படி‌இணங்கி‌3‌மற்றும்‌4‌ஆம்‌ஒழுங்குமுறைவிதியில்‌விவரிக்கப்பட்ட‌நிபந்தனைகள‌ைநிறைவேற்றுவதற்கு‌உட்படுகின்ற,‌ தமிழ்நாடு‌மாநிலத்திலுள்ள‌மின்பகிர்மான‌உரிமம்தாரர்கள்,‌நுகர்வோருக்கு‌சொந்தமான‌மின்கட்டமைப்புடன்‌இணைக்கப்பட்ட‌சுய‌ உபயோக‌மின்னுற்பத்தி‌நிலையங்களின்‌(CGPs‌)‌நுகர்வோர்கள்‌மற்றும்‌திறந்த‌நுழைவுரிம‌ைநுகர்வோர்கள்‌என்று‌பொருள்படும் ‌ (h)‌'திறந்த‌நுழைவுரிம‌ைநுகர்வோர்'‌என்பது‌மின்சாரச்‌சட்டப்‌பிரிவு‌42‌ன்‌(2)‌ம்‌உட்பிரிவின்படி‌திறந்த‌நுழைவுரிம‌ை பெரும்‌நுகர்வோர்‌என‌பொருள்படும்

‌ (i)‌'ஒருங்கிணைந்த‌மின்கொள்முதல்‌‌விலை'‌என்பது‌நீண்டகால‌மின்‌‌வழங்குபவர்கள்‌அனைவரிடமிருந்தும்‌‌முந்திய‌ ஆண்டில்‌‌சுய‌மின்‌‌உற்பத்தி‌செலவு‌உள்ளடங்கலாக,‌ஆனால்‌,‌நீர்ம‌எரிபொருள்‌,‌வணிகர்களிடமிருந்து‌கொள்முதல்‌,‌குறுகிய‌கால‌ கொள்முதல்கள்‌‌ மற்றும்‌‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ ஆதாரங்கள்‌‌ ஆகியவற்றின்‌‌ அடிப்படையிலான‌ கொள்முதல்‌‌ நீங்கலாக‌ மின்‌‌ பகிர்மான‌உரிமம்தாரர்‌‌மின்‌‌கொள்முதல்‌‌செய்துள்ள‌கூட்டு‌சராசரி‌வில‌ைஎன்று‌பொருள்படும்;

‌ (j)‌'மின்‌‌பரிமாற்ற‌களம்'‌என்பது,‌மத்திய‌ஆணையத்தின்‌‌ஒப்புதலளிப்புடன்‌‌செயற்படும்‌‌மின்‌‌பரிமாற்ற‌களம்‌‌என்று‌ பொருள்படும்;

‌ (k)‌ "புதுப்பிக்கத்‌ தக்க‌ ஆதாரங்கள்‌"‌ என்பது,‌ ஆணையத்தினால்‌‌ பிறப்பிக்கப்பட்ட,‌ 2008ஆம்‌‌ ஆண்டு‌ புதிய‌ மற்றும்‌‌ புதுப்பிக்கத்‌தக்க‌ஆதாரங்களிலிருந்து‌செய்யப்படும்‌‌மின்‌‌கொள்முதல்‌‌ஒழுங்குமுற‌ைவிதிகளின்‌‌2(1)(g)‌ஒழுங்குமுற‌ைவிதியில்‌‌ பொருள்வரையற‌ைசெய்யப்பட்டவாறான‌ஆதாரங்கள்‌‌மற்றும்‌நீர்‌மின்திட்டங்கள்‌(உந்தப்பட்ட‌சேமிப்பு‌திட்டங்கள்‌மற்றும்‌சிறிய‌நீர்‌ மின்திட்டங்கள்‌உட்பட)‌என்று‌பொருள்படும்‌‌;

‌ (l)‌ "மாநில‌ முகமை"‌ என்பது,‌ மின்சாரச்‌‌ சட்டத்தின்‌‌ 2(66)ஆம்‌‌ பிரிவின்படி‌ பொருள்வரையற‌ை செய்யப்பட்டவாறான‌ தமிழ்நாடு‌ மாநிலத்திலுள்ள‌ மாநில‌ மின்சுமைப்‌ பகிர்வு‌ மையம்‌‌ அல்லது‌ இந்த‌ ஒழுங்குமுற‌ை விதிகளின்‌‌ 6(7)‌ ஒழுங்குமுற‌ை விதிப்படி‌ஆணையத்தால்‌‌சுட்டியமர்த்ப்பட்ட‌முகம‌ைஎன்று‌பொருள்படும்‌‌;

‌ (m)‌ "ஆண்டு"‌ என்பது,‌ நிதியாண்டு‌ என்று‌ பொருள்படும்‌,‌ அதாவது‌ நடப்பாண்டின்‌‌ ஏப்ரல்‌‌ 1‌ இல்‌ இருந்து‌ அடுத்த‌ ஆண்டின்‌‌மார்ச்‌‌31‌வரையிலான‌கால‌அளவைக்‌‌கொண்டதாகும்‌.

Sep. 11, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 189

(2)‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகளில்‌‌பொருள்வரையற‌ைசெய்யப்படாமல்‌பயன்படுத்தப்படும்‌சொற்களும்‌மற்றும்‌சொற்றொடர்களும்‌‌ ஆனால்‌,‌ மத்திய‌ ஆணையத்தினால்‌‌ பிறப்பிக்கப்பட்ட‌ சட்டம்‌ அல்லது‌ ஒழுங்குமுற‌ை விதிகளிலோ‌ அல்லது‌ ஆணையத்தினால்‌‌ பிறப்பிக்கப்பட்ட‌பிற‌ஒழுங்குமுற‌ைவிதிகளிலோ‌பொருள்வரையற‌ைசெய்யப்பட்டிருந்தால்,‌அத்தகைய‌சட்டம்‌அல்லது‌ஒழுங்குமுற‌ை விதிகளில்‌‌முறைய‌ேஅவற்றிற்குக்‌‌குறித்தளிக்கப்பட்ட‌அத‌ேபொருள்கள‌ைஉடையனவாகும்‌.

3. புதுப்பிக்கத் தக்க கொள்முதல் கடப்பாட்டின் (RPO) பொருந்துதல்.—

பின்வரும்‌நிறுவனங்கள்‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகளின்‌கீழ்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌‌கடப்பாட்டின‌ை(RPO)‌நிறைவேற்ற‌ கடமைப்பட்டுள்ளன,‌அதாவது:-

‌ (a)‌மின்‌பகிர்மான‌உரிமம்தாரர்;‌ ‌‌

‌ (b)‌ திறந்த‌ நுழைவுரிம‌ை மூலமாகவோ‌ அல்லது‌ வேறுவிதமாகவோ,‌ மரபுமுறையிலான‌ ஆதாரங்களிலிருந்து‌ (அதாவது‌ புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌ஆதாரங்கள்‌தவிர)‌மின்சாரத்த‌ைகொள்முதல்‌செய்து‌நுகரும்‌எந்த‌நபரும்;

‌ (c)‌ மரபுமுற‌ை தொழில்நுட்பத்தின்‌ அடிப்படையில்‌ (அதாவது‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ தொழில்நுட்பம்‌ அல்லாத)‌ 1‌ மெ.வோ.ஆ.‌ க்கும்‌ அதிகமான‌ நிறுவு‌ திறன்‌ கொண்ட‌ சுய‌ உபயோக‌ மின்னுற்பத்தி‌ நிலையத்தின‌ை நிறுவி‌ அத்தகைய‌ மின்நிலையத்திலிருந்து‌ முற்றிலுமாக‌ மின்சாரத்த‌ை தனது‌ இயல்பான‌ மின்உற்பத்தி‌ ஆதாரத்தில்‌ ஏற்படும்‌ மின்வெட்டு‌ /‌ மின்தடையினால்‌காத்திருப்பு‌(அல்லது‌அவசரகால‌காப்பு)‌தேவைகளுக்காக‌நுகரும்‌எந்த‌நபரும்;‌

‌ (d)‌ மரபுமுற‌ை தொழில்நுட்பத்தின்‌ அடிப்படையில்‌ (அதாவது‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ தொழில்நுட்பம்‌ அல்லாத)‌ 1‌ மெ.வோ.ஆ.‌ க்கும்‌ அதிகமான‌ நிறுவு‌ திறன்‌ கொண்ட‌ சுய‌ உபயோக‌ மின்னுற்பத்தி‌ நிலையத்தின‌ை நிறுவி‌ அத்தகைய‌ மின்நிலையத்திலிருந்து‌முற்றிலுமாக‌தனது‌காத்திருப்பு‌(அல்லது‌அவசரகால‌காப்பு)‌தேவையைத்‌தவிர‌இயல்பான‌தேவைகளையும்‌ பூர்த்தி‌ செய்வதற்காக‌ மின்சாரத்த‌ை நுகரும்‌ எந்த‌ நபரும்;‌ இருந்தபோதிலும்,‌ அந்த‌ சுய‌ உபயோக‌ மின்உற்பத்தி‌ நிலையத்தின்‌ புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌மின்உரிமம்தாரருக்கு‌இணையாக‌இருத்தல்‌வேண்டும்.

இருந்தபோதிலும்,‌ கூறு‌ (b),‌ (c)‌ மற்றும்‌ (d)‌ இல்‌ குறிப்பிடப்பட்டுள்ளபடி,‌ மின்‌ பகிர்மான‌ உரிமம்தாரரின்‌ தனிப்பட்ட‌ மின்‌ நுகர்வோர்,‌அவருடைய‌தனிப்பட்ட‌மின்‌திறன்‌நுகர்வின்‌அளவிற்கு‌கடப்பாடு‌நிறுவனமாக‌கருதப்பட‌மாட்டார்.

‌மேலும்,‌இருந்தபோதிலும்,‌மின்‌பகிர்மான‌உரிமம்தாரர்‌அல்லாத‌பிற‌கடப்பாடு‌நிறுவனங்களுக்கான‌கடப்பாடு‌பொருந்துதல்,‌ மாண்புமிகு‌சென்ன‌ைஉயர்நீதிமன்றத்தில்‌நிலுவையில்‌உள்ள‌மனுக்களின்‌தீர்ப்பிற்கு‌உட்பட்டது;

மேலும்,‌இருந்தபோதிலும்,‌நீதிமன்ற‌வழக்குகள்‌உள்ளிட்ட‌ஏதேனும்‌காரணங்களுக்காக‌அல்லது‌வேறு‌ஏதேனும்‌சட்டப்பூர்வமாக‌ செல்லுபடியாகும்‌ காரணங்களுக்காக‌ முந்தைய‌ ஆண்டுகளில்‌ கடப்பாடு‌ நிறுவனங்களுக்கான‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌‌ கடப்பாடு‌ (‌ RPO‌ )‌ நிறைவேற்றப்படாமல்‌ இருந்தால்,‌ அத்தகைய‌ கடப்பாடு‌ நிறுவனங்களுக்கு‌ தீர்ப்பு‌ இறுதியாக‌ வழங்கப்படும்‌ வர‌ை அல்லது‌ தடையாக‌ இருக்கும்‌ வர‌ை புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌‌ கடப்பாடு‌ (‌ RPO‌ )‌ ஐ‌ நிறைவேற்றுவதில்‌ இருந்து‌ விலக்கு‌அளிக்கப்படுகிறது‌மற்றும்‌அதைத்‌தொடர்ந்து‌வரும்‌காலத்தில்‌அந்தந்த‌ஆண்டுகளுக்கான‌கடப்பாடு‌நிறுவனங்களால்‌ நிறைவேற்றப்படவேண்டும்.

4. புதுப்பிக்கத் தக்க மின்சக்தி கொள்முதல் கடப்பாடு.—

(1)‌ கடப்பாடுடைய‌ நிறுவனம்‌‌ ஒவ்வொன்றும்‌,‌ இந்த‌ ஒழுங்குமுறைவிதியின்‌ பின்னிணைப்பு‌ -‌ I‌ ன்‌ வரையறையின்படி‌ ஓர்‌‌ ஆண்டின்‌‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌‌ கடப்பாட்டின்படி‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ ஆதாரங்களிலிருந்து‌ தன்னுடைய‌ மின்‌‌ நுகர்வில்‌‌குறைந்தபட்ச‌விழுக்காட்ட‌ைகொள்முதல்‌‌செய்தல்‌‌வேண்டும்‌.

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ மின்பகிர்மான‌ உரிமம்தாரர்‌ உட்பட‌ மின்‌ பகிர்மான‌ உரிமம்தாரரின்‌ பகுதியில்‌ உள்ள‌ அனைத்து‌ கடப்பாடு‌நிறுவனங்களும்‌ஒர‌ேவிதமான‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌‌கடப்பாடின‌ை(RPO)‌க்‌கொண்டிருக்க‌வேண்டும்;

மேலும்,‌இருந்தபோதிலும்,‌கடப்பாடு‌நிறுவனம்‌அதன்‌சொந்த‌மின்‌உற்பத்தி‌ஆதாரங்களிலிருந்து‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்‌ ஆற்றலின்‌நுகர்வு‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாட்டின்‌(RPO)‌நிறைவேற்றத்திற்கு‌கணக்கில்‌எடுத்துக்கொள்ளப்படும்;

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ மின்‌‌ பரிமாற்ற‌ களத்திடமிருந்து‌ கடப்பாடு‌ நிறுவனத்தால்‌ கொள்முதல்‌ செய்யப்படும்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌மின்‌சக்தி‌கொள்முதல்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌நிறைவேற்றலுக்கு‌கணக்கில்‌எடுத்துக்கொள்ளப்படும்;

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ நிகர‌ அளவீடு‌ /‌ நிகர‌ மின்னோட்டம்‌ ஏற்பாட்டின்‌ கீழ்‌ மின்கட்டமைப்புடன்‌ இணைந்த‌ சூரிய‌ மின்சக்தி‌ஒளி‌வோல்ட்‌மின்உற்பத்தி‌அமைப்பிலிருந்து‌(GISS)‌மின்உற்பத்தி‌மற்றும்‌மின்நுகர்வு‌செய்பவரால்‌உற்பத்தி‌செய்யப்படும்‌ மின்சாரத்தின்‌ அளவானது,‌ அத்தகைய‌ மின்நுகர்வோர்‌ கடப்பாடு‌ நிறுவனமாக‌ இல்லையெனில்,‌ மின்பகிர்மான‌ உரிமம்தாரரின்‌ புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌(RPO)‌நிறைவேற்றலுக்கு‌தகுதியுடையவராவார்;

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ ஆதாரங்களின்‌ வங்கி‌ கணக்கு‌ ஏற்பாடு‌ எனில்,‌ மின்பகிர்மான‌ உரிமம்தாரருக்கு‌ வங்கிக்‌ கணக்காக‌ செய்யப்பட்ட‌ மின்னாற்றல்‌ விற்பனையாகக்‌ கருதப்பட்டு‌ மின்பகிர்மான‌ உரிமம்தாரரின்‌ புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடாகக்‌கணக்கிடப்படும்;

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ சுய‌ உபயோக‌ மின்உற்பத்தி‌ நிலைய‌ /‌ திறந்த‌ நுழைவுரிம‌ை நுகர்வோர்(கள்)களால்,‌ தங்களது‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கடப்பாடு‌ (RPO)‌ இணக்கத்திற்கும்‌ அதிகமாக‌ நுகரப்படும்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ மின்சக்திய‌ை மின்பகிர்மான‌உரிமம்தாரரின்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌இணக்கத்திற்காகக்‌கணக்கிடப்படும்;

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ மின்கட்டமைப்புடன்‌ இணைந்த‌ சூரிய‌ மின்சக்தி‌ மின்உற்பத்தி‌ அமைப்பு‌ (GISS)‌ திட்டங்களில்‌ இருந்து‌ மொத்த‌ அளவீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்படும்‌ கொள்முதல்,‌ பரஸ்பரமாக‌ ஒப்புக்கொள்ளப்பட்ட‌ விலையில்‌ செய்யப்பட்ட‌கொள்முதல்/ஆணையம்‌நிர்ணயித்த‌வில‌ைமற்றும்‌மின்‌உற்பத்தியாளர்கள்/‌மின்நுகர்வும்‌மின்னுற்பத்தியும்‌செய்பவர்,‌‌190 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2 புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்திச்‌‌ சான்றிதழ்‌ (REC‌ )‌ கள‌ை கோராத‌ அனைத்து‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்திகளும்,‌ மின்‌ பகிர்மான‌ உரிமம்தாரரின்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌(RPO)‌இணக்கத்திற்காக‌கணக்கிடப்படும்.

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ அவ்வப்போது‌ திருத்தி‌ அமைக்கப்படும்‌ 2022ஆம்‌‌ ஆண்டு‌ மத்திய‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணைய‌(புதுக்கப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌உற்பத்திக்கான‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்திச்‌‌சான்றிதழ்களுக்கான‌விதிமுறைகள்‌‌மற்றும்‌‌ வரையறைகள்‌)‌ ஒழுங்குமுற‌ை விதிகளின்படி‌ வழங்கப்படும்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்திச்‌‌ சான்றிதழ்‌ (REC)‌ களின்‌ கொள்முதல்,‌ புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாட்டை,‌கடப்பாடுடைய‌நிறுவனத்தால்‌நிறைவேற்றப்பட்டதாகக்‌கணக்கிடப்படும்;

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ அந்த‌ நிதியாண்டில்‌ பெறப்பட்ட‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்திச்‌‌ சான்றிதழ்‌ (REC)‌ கள‌ை சுயமாக‌ தக்க‌ வைத்துக்‌ கொள்வதன்‌ மூலம்‌ ஒரு‌ குறிப்பிட்ட‌ நிதியாண்டிற்கான‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கடப்பாட்ட‌ை (RPO)‌ நிறைவேற்றுவதற்கு‌ கடப்பாட்டு‌ நிறுவனம்‌ எண்ணினால்,‌ அது‌ அத்தகைய‌ சுயமாக‌ –தக்க‌ வைத்துக்‌ கொள்வதற்காக‌ மாநில‌ முகமைக்கு‌விண்ணப்பிக்க‌வேண்டும்;

மேலும்,‌ இருந்தபோதிலும்,‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ சான்றிதழ்களைக்‌ கோராத‌ மின்உற்பத்தியர்களிடமிருந்து‌ மட்டும்‌ கடப்பாட்டு‌நிறுவனங்கள்‌கொள்முதல்‌செய்யும்‌அத்தகைய‌மின்சக்தி‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாட்ட‌ைஈடுசெய்வதாகும்.

இருந்தபோதிலும்‌கூட,‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌ஆதாரங்களிலிருந்து‌கொள்முதல்‌செய்வதற்காக‌ஏற்கனவ‌ேமின்உரிமம்தாரரால்‌ எட்டப்பட்டிருக்கும்‌ மின்சக்தி‌ கொள்முதல்‌ உடன்படிக்கைகளில்‌ மொத்தக்‌ கொள்முதல்கள்‌ மேல‌ே குறித்துரைக்கப்பட்டவாறான‌ விழுக்காட்ட‌ைமிஞ்சினாலும்,‌அவர்களின்‌தற்சமய‌உடன்படிக்க‌ைசெல்லத்தக்க‌வரையில்‌தொடரப்படுதல்‌வேண்டும்.

இருந்தபோதிலும்‌ கூட,‌ நீர்‌ மின்சக்தி‌ /‌ சூரிய‌ சக்கி‌ /‌ காற்றால‌ை வழியாக‌ தேக்க‌ மின்சக்தியிலிருந்து‌ குறைந்த‌ பட்ச‌ அளவில்‌ஒரு‌குறிப்பிட்ட‌ஆண்டில்‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்கி‌சான்றிதழ்‌வடிவிலோ‌அல்லது‌மின்சக்தி‌வடிவிலோ‌சந்தையில்‌ கிடைக்கக்கூடியதாக‌இல்ல‌ைஎன்ற‌உண்மைய‌ைகடப்பாட்டு‌நிறுவனம்‌உறுதிப்படுத்தினால்,‌மற்றும்‌ஆணையம்‌இந்த‌உண்மைப்‌ பற்றி‌திருப்தி‌கொள்ளுமாயின்,‌அத்தகைய‌நேர்வுகளில்‌இணைப்பு‌–‌1‌இல்‌குறிப்பிட்டவாறு,‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்கொள்முதல்‌ கடப்பாட்ட‌ைநிறைவேற்றுவதற்காக,‌பிற‌எரிசக்தி‌ஆதாரங்களிலிருந்து‌கொள்முதல்‌செய்தல்‌வேண்டும்‌;

இருந்தபோதிலும்‌ கூட,‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தியைக்‌‌ கொள்முதல்‌‌ செய்வதற்கான‌ அத்தகைய‌ கடப்பாடு,‌ சம்பந்தப்பட்ட‌ கடப்பாடுடைய‌ நிறுவனத்தினால்‌‌ ஏற்கெனவ‌ே செய்யப்பட்டிருந்த‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ ஆதாரங்களிலிருந்து‌ செய்யப்படும்‌‌ கொள்முதல்கள்‌,‌எவையேனுமிருப்பின்‌,‌அவற்றையும்‌உள்ளடக்கும்‌‌;

(2)‌ஆணையத்தினால்‌‌ஏதாவது‌ஒரு‌ஆண்டில்‌‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌‌கடப்பாடு‌குறித்துரைக்கப்படவில்ல‌ைஎனில்‌,‌ இது‌ குறித்து‌ ஆணையத்தினால்‌‌ மாற்றியமைத்தல்‌‌ எதுவும்‌‌ செயற்படுத்தப்படும்‌‌ வரையிலான‌ கால‌ அளவிற்கு‌ அப்பால்‌,‌ முந்திய‌ நிதியாண்டிற்காக‌குறித்துரைக்கப்பட்ட‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌‌கடப்பாடு,‌தொடருதல்‌‌வேண்டும்‌.

(3)‌மேற்கூறியவைகள்‌இருந்தபோதிலும்,‌ஆணையம்‌அதன்‌சொந்த‌இயக்கத்தின்‌அல்லது‌மாநில‌முகமையின்‌பரிந்துரையின்‌ பேரில்‌அல்லது‌மின்‌அமைச்சகத்தால்‌வழங்கப்பட்ட‌வழிகாட்டுதல்களின்‌பேரில்‌அல்லது‌மின்‌பகிர்மான‌உரிமம்தாரரிடமிருந்து‌ விண்ணப்பத்தைப்‌ பெற்றதன்‌ பேரில்,‌ இந்த‌ ஒழுங்குமுறைவிதிகளின்‌ இணைப்பு-I‌ இல்‌ நிர்ணயிக்கப்பட்ட‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌கடப்பாடு‌(RPO)‌சதவீதத்த‌ைமறுபரிசீலன‌ைசெய்யலாம்.

5. மத்திய ஆணையத்தின் ஒழுங்குமுறை விதிகளின்படியான சான்றிதழ்கள் .—

(1)‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகளுக்கு‌உட்பட்டு,‌2022‌ஆம்‌‌ஆண்டு‌மத்திய‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையத்தால்‌அவ்வப்போது‌ திருத்தியமைக்கப்படும்‌(புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌உற்பத்திக்கான‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்திச்‌‌சான்றிதழ்‌விதிமுறைகள்‌‌மற்றும்‌‌ வரையறைகள்‌),‌ஒழுங்குமுறைவிதிகளின்படி‌வழங்கப்பட்ட‌சான்றிதழ்கள்‌,‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌ஆதாரங்களிலிருந்து‌மின்சாரம்‌‌ கொள்முதல்‌‌ செய்வதற்கு‌ கடப்பாடுடைய‌ நிறுவனங்களுக்காக,‌ இந்த‌ ஒழுங்குமுற‌ை விதிகளில்‌‌ விவரிக்கப்பட்டுள்ள‌ சட்டப்பூர்வ‌‌ கடப்பாடுகள‌ைநிறைவேற்றுவதற்காக‌செல்லத்தக்க‌முறையாவணமாகும்‌.

(2)‌ கடப்பாடுடைய‌ நிறுவனம்‌,‌ அவ்வப்போது,‌ ஆணையம்‌‌ பிறப்பிக்கலாகும்‌‌ உத்தரவுக்கு‌ உட்பட்டு,‌ இந்த‌ ஒழுங்குமுற‌ை விதிகளின்படி‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌‌கடப்பாட்ட‌ைநிறைவேற்றுவதற்கான‌சான்றிதழ்கள‌ைகொள்முதல்‌‌செய்வது‌குறித்து‌ மத்திய‌ ஆணையத்தினால்‌‌ அவ்வப்போது‌ திருத்தியமைக்கப்பட்டு‌ அறிவிக்க‌ை செய்யப்பட்ட‌ 2022ஆம்‌‌ ஆண்டு‌ மத்திய‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ைஆணைய‌(புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌உற்பத்திக்கான‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்திச்‌‌சான்றிதழ்‌விதிமுறைகள்‌‌மற்றும்‌‌ வரையறைகள்‌),‌ஒழுங்குமுற‌ைவிதிகளுக்கு‌இசைவாகச்‌‌செயற்படுதல்‌‌வேண்டும்‌.

(3)‌ மின்‌‌ பரிமாற்ற‌ களத்திடமிருந்து‌ கடப்பாட்டு‌ நிறுவனங்களால்‌ வாங்கப்பட்ட‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ மின்சக்தி‌ சான்றிதழ்‌ (REC)‌கள்‌அல்லது‌புதுப்பிக்கப்பட்ட‌மின்சக்தி‌சான்றிதழ்‌(REC)‌கள‌ைசுயமாக‌வைத்திருக்கும்‌பட்சத்தில்‌மாநில‌முகமையால்‌ வழங்கப்பட்ட‌கொள்முதல்‌சான்றிதழ்கள்,‌மாநில‌முகமையில்‌கடப்பாட்டு‌நிறுவனங்களால்‌வைப்பீடு‌செய்யப்படுதல்‌‌வேண்டும்.

(4)‌மேற்கூறியவைகள்‌இருந்தபோதிலும்,‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்சக்தி‌சான்றிதழ்‌(REC)‌இந்தியப்‌பதிவேடு‌இணையதளம்‌மூலம்‌ மின்‌பரிமாற்ற‌களங்களில்‌இருந்து‌கடப்பாட்டு‌நிறுவனங்களால்‌வாங்கப்பட்ட‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்சக்தி‌சான்றிதழ்‌(REC)‌கள‌ை மாநில‌முகம‌ைசார்பற்ற‌முறையில்‌சரிபார்த்து,‌அவற்றின்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கட்டுப்பாட்டின‌ைநிறைவேற்றுவதற்கும்‌ பரிசீலிக்கலாம்.

6. மாநில முகமை.—

(1)‌ மாநில‌ முகம‌ை என்பது‌ இந்த‌ ஒழுங்குமுற‌ை விதிகளுக்கும்‌‌ மற்றும்‌‌ அவ்வப்பொழுது‌ திருத்தியக்கப்படும்‌ 2022ஆம்‌‌ ஆண்டு‌ மத்திய‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணைய‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ உற்பத்திக்கான‌ (புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்திச்‌‌ சான்றிதழ்‌விதிமுறைகள்‌‌மற்றும்‌‌வரையறைகள்‌)‌ஒழுங்குமுற‌ைவிதிகளுக்கும்‌‌உட்பட்டு‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தித்‌‌திட்டங்கள‌ை பதிவு‌ செய்வதற்கும்‌‌ மற்றும்‌‌ அதன்‌‌ செயற்பணிகள‌ை மேற்கொள்வதற்குமாக‌ அதன‌ை அங்கீகரிப்பதற்கும்‌‌ மற்றும்‌‌ பரிந்துர‌ை செய்வதற்குமான‌முகமையாகும்‌.

Sep. 11, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 191

(2)‌மாநில‌முகம‌ைஆணையத்துடன்‌கலந்தாலோசித்து,‌கடப்பாட்டு‌நிறுவனங்கள‌ைபதிவு‌செய்வதற்கும்,‌புதுப்பிக்கத்‌தக்க‌ கொள்முதல்‌ கடப்பாடு‌ RPO‌ ன்‌ இணக்கம்,‌ கண்காணித்தல்‌ மற்றும்‌ அறிக்கையிடல்‌ போன்றவற்றிற்காகவும்‌ அத‌ே நேரத்தில்,‌ இதுபோன்ற‌ செயல்பாடுகள்‌ தொடர்பாக,‌ வலைதள‌ மேடையின்‌ சீரான‌ செயல்பாட்டிற்கான‌ பொருத்தமான‌ நடைமுறைகள‌ை உருவாக்குதலுக்காகவும்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌RPO‌வலை-தள‌மேடைய‌ைஉருவாக்கிப்‌பராமரிக்க‌வேண்டும்.

இருந்தபோதிலும்,‌அத்தகைய‌மேம்பாடு,‌அந்த‌நோக்கத்திற்காக‌உருவாக்கப்பட்ட‌தேசிய‌இணையப‌வலைதள‌மேடையின்‌ கீழ்‌கிடைக்கும்‌திட்டமிடப்பட்ட‌வசதியுடன்‌பொருத்தமான‌முறையில்‌ஒருங்கிணைக்கப்பட‌வேண்டும்.

(3)‌ சான்றிதழ‌ை வழங்குவதற்கு‌ கடப்பாட்டு‌ நிறுவனங்களின்‌ விண்ணப்பம்‌ பெறப்பட்டதும்,‌ மாநில‌ முகமை,‌ கடப்பாட்டு‌ நிறுவனத்தின்‌உரிமையைப்‌பற்றி‌திருப்தி‌அடைந்த‌பின்னர்,‌அந்த‌சான்றிதழ்கள‌ைவழங்குவதற்கான‌கடப்பாட்டு‌நிறுவனத்தின்‌ அங்கீகாரம்‌தொடர்பான‌செயல்முறையைத்‌தொடங்கும்.

(4)‌கடப்பாடுடைய‌நிறுவனங்கள்‌காலாண்டு‌அடிப்படையில்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌RPO‌இன்‌இணங்குதல்‌ பற்றிய‌ விவரங்களையும்,‌ அடுத்த‌ நிதியாண்டின்‌ ஜூல‌ை மாத‌ இறுதிக்குள்‌ கடைசி‌ காலாண்டு‌ உட்பட‌ முழு‌ நிதியாண்டுக்கான‌ விவரங்களையும்‌மாநில‌முகமைக்கு‌சமர்ப்பிக்க‌வேண்டும்.

(5)‌மாநில‌முகமை,‌கடப்பாடுடைய‌நிறுவனங்களால்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கட்டுப்பாட்டிற்கு‌இணங்குவது‌தொடர்பாக,‌ ஆணையத்திற்கு‌ ஆண்டு‌ நில‌ை அறிக்கைய‌ை சமர்ப்பிக்க‌ வேண்டும்‌ மற்றும்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கட்டுப்பாட்டிற்கு‌ இணங்க,‌தேவைப்பட்டால்‌ஆணையத்திற்கு‌தகுந்த‌நடவடிக்கைய‌ைபரிந்துரைக்கலாம்.

(6)‌இந்த‌ஒழுங்குமுறைவிதிகளின்‌கீழ்‌அதன்‌செயல்பாடுகள‌ைநிறைவேற்றுவதற்காக‌மாநில‌முகமைக்கு‌செலுத்த‌வேண்டிய‌ ஊதியம்‌மற்றும்‌கட்டணங்கள‌ைஆணையம்‌அவ்வப்போது‌நிர்ணயிக்கலாம்.

(7)‌மாநில‌முகம‌ைதனது‌செயல்பாடுகள‌ைதிருப்திகரமாக‌நிறைவேற்ற‌முடியவில்ல‌ைஎன்று‌ஆணையம்‌திருப்தியுறுமாயின்,‌ அது‌பொது‌அல்லது‌சிறப்பு‌உத்தரவின்‌மூலமாகவும்,‌எழுத்துப்பூர்வமாக‌பதிவு‌செய்யப்பட‌வேண்டிய‌காரணங்களுக்காகவும்,‌அது‌ கருதுவது‌போல்‌வேறு‌எந்த‌நிறுவனத்தையும்‌மாநில‌முகமையாக‌செயல்பட‌நியமிக்கலாம்.

7. புதுப்பிக்கத் தக்க மின்சக்தி சான்றிதழ்களுக்கான தகுதி மற்றும் பதிவு.—

(1)‌ சான்றிதழ்களின்‌ தகுதி‌ மற்றும்‌ பதிவு‌ மத்திய‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணையத்தால்‌ நிர்வகிக்கப்படும்‌ அவ்வப்போது‌ திருத்தி‌அமைக்கப்படும்‌(புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌உற்பத்திக்கான‌புதுப்பிக்கத்‌தக்க‌ஆற்றல்‌சான்றிதழுக்கான‌விதிமுறைகள்‌ மற்றும்‌நிபந்தனைகள்)‌விதிமுறைகள்,‌2022‌ன்‌படி‌நடைமுறைப்படுத்தப்படும்

(2)‌கடப்பாடுடைய‌நிறுவனங்கள்,‌மாநில‌முகமையுடன்‌ஏற்கனவ‌ேநேரடியாக‌பதிவு‌செய்யப்பட்டவ‌ைஉட்பட‌புதுப்பிக்கத்‌தக்க‌ கொள்முதல்‌கடப்பாடு‌வலைதளத்தில்‌நடைமுறைப்படுத்துவதற்கான‌அறிவிக்கப்பட்ட‌நாளிலிருந்து‌மூன்று‌மாதங்களுக்குள்‌(RPO)‌ வலைத்தளத்தில்‌தங்கள‌ைநிகழ்நிலையில்‌கட்டாயமாக‌பதிவு‌செய்வதோடு‌மாநில‌முகமையால்‌உருவாக்கப்பட்ட‌நடைமுறையின்படி‌ காலாண்டு‌மற்றும்‌வருடாந்திர‌அடிப்படையில்‌தேவையான‌தகவலையும்‌அளிக்க‌வேண்டும்.‌இந்த‌விதிமுறைகள்‌அறிவிக்கப்பட்ட‌ 3‌மாதங்களுக்குள்‌இது‌தொடர்பான‌விரிவான‌நடைமுறைய‌ைமாநில‌முகம‌ைஉருவாக்க‌வேண்டும்.‌

இருந்தபோதிலும்,‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு,‌RPO‌வலைத்தளத்தில்‌முழுமையாக‌செயல்பாட்டிற்கு‌வரும்‌வரை,‌ அத்தகைய‌தகவல்கள்‌மாநில‌முகமைக்கு‌நேரிலோ‌அல்லது‌தபால்‌மூலமாகவோ‌அல்லது‌மின்னஞ்சல்‌மூலமாகவோ‌சமர்ப்பிக்க‌ வேண்டும்.

(3)‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ஆதாரங்களிலிருந்து‌ மின்சாரம்‌‌ உற்பத்தி‌ செய்வதில்‌‌ ஈடுட்டுள்ள‌ மின்‌‌ உற்பத்தி‌ நிறுவனம்‌,‌ பின்வரும்‌‌நிபந்தனைகள‌ைநிறைவேற்றுமானால்‌,‌மாநில‌முகமையிடமிருந்து‌அங்கீகாரம்‌பெறுவதற்கு‌தகுதியுடையதாகும்‌‌:

‌ (a)‌ அது,‌ ஆணையத்தின்‌‌ நிர்ணயிக்கப்பட்ட‌ முன்னுரிமையுடைய‌ மின்கட்டணத்தில்‌‌ அல்லது‌ ஆணையத்தால்‌ அங்கீகரிக்கப்பட்ட‌ போட்டி‌ ஏலத்தின்‌ மூலம்‌ நிர்ணயிக்கப்பட்ட‌ மின்கட்டணத்தில்‌ மின்சாரத்த‌ை விற்பதற்கு,‌ அத்தகைய‌ மின்‌‌ உற்பத்தி‌தொடர்பான‌திறனுக்கான,‌மின்‌‌கொள்முதல்‌‌உடன்பாடு‌எதனையும்‌‌கொண்டிருக்கலாகாது‌;‌மற்றும்‌

‌ (b)‌ அது‌ உற்பத்தி‌ செய்யப்பட்ட‌ மின்சாரத்த‌ை ஒன்று‌ (i)‌ தமிழ்நாடு‌ மாநிலத்திலுள்ள‌ மின்பகிர்மான‌ உரிமம்தாரருக்கு‌ ஒருங்கிணைந்த‌மின்கொள்முதல்‌‌விலைக்கு‌மிகாமல்‌‌விற்றல்‌‌அல்லது,‌(ii)‌பரஸ்பர‌‌சம்மதம்‌கொண்ட‌விலையில்‌‌பிற‌உரிமம்தாரர்‌‌ எவருக்கும்‌‌ அல்லது‌ திறந்த‌ நுழைவுரிம‌ை நுகர்வோருக்கு‌ விற்றல்‌‌ அல்லது‌ சந்த‌ை நிர்ணயித்த‌ விலையில்‌‌ மின்பரிமாற்ற‌ களம்‌‌ மூலமாக‌விற்றல்‌.

8. ஒருங்கிணைந்த மின்கொள்முதல் விலையினை தீர்மானித்தல்.—

ஒரு‌குறிப்பிட்ட‌நிதியாண்டிற்கான‌மின்‌கொள்முதல்‌விலையின‌ைநிர்ணயிப்பதற்காக,‌மின்‌பகிர்மான‌உரிமம்தாரர்‌தொடர்ந்து‌ வரும்‌நிதியாண்டின்‌செப்டம்பர்‌30‌ஆம்‌தேதிக்குள்‌மின்‌கொள்முதல்‌விலையின‌ைகணக்கிடுவதற்கான‌மனுவ‌ைஆணையத்திடம்‌ சமர்ப்பிக்க‌வேண்டும்.‌மின்சாரம்‌வாங்குவதற்கான‌ஒருங்கிணைந்த‌வில‌ைதொடர்பான‌உத்தரவு‌வெளியாகும்‌வரை,‌முந்தைய‌ ஆண்டு‌மின்‌கொள்முதல்‌விலை,‌மின்சாரம்‌வாங்குவதற்கான‌உத்தேச‌ஒருங்கிணைந்த‌மின்கொள்முதல்‌விலையாகக்‌கருதப்படும்.‌ ஆணையத்தால்‌ மின்சாரம்‌ வாங்குவதற்கான‌ ஒருங்கிணைக்கப்பட்ட‌ விலைக்கான‌ உத்தரவ‌ை வெளியிட்ட‌ பிறகு,‌ மின்சாரம்‌ வாங்குவதற்கான‌ இறுதி‌ ஒருங்கிணைந்த‌ விலைக்கும்,‌ மின்சாரம்‌ கொள்முதலுக்கான‌ உத்தேச‌ ஒருங்கிணைந்த‌ விலைக்கும்‌ இடைய‌ே உள்ள‌ வித்தியாசம்‌ அடுத்த‌ இரண்டு‌ மாத‌ பட்டியல்களில்‌ சமமாகவோ‌ அல்லது‌ நிதியாண்டிற்கான‌ மின்‌ கொள்முதல்‌ விலையின‌ைஆணையம்‌நிர்ணயிக்கும்‌ஆணையின்படி‌சமம்‌செய்யப்படும்.

192 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

9. தவறுகையின் விளைவு.—

கடப்பாடுடைய‌ நிறுவனங்கள்‌,‌ நேர்வுக்கேற்ப,‌ இந்த‌ ஒழுங்குமுற‌ை விதிகளில்‌‌ வக‌ை செய்யப்பட்டவாறு,‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌‌கடப்பாட்டின‌ைநிறைவேற்றாதிருந்தும்,‌சான்றிதழ்கள‌ைகொள்முதல்‌‌செய்யாமல்‌இருக்குமேயானால்‌,‌மாநில‌முகம‌ை ஆணையத்தின்‌உத்தரவின்படி‌,‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌‌கடப்பாட்டின்‌‌யூனிட்டுகளிலுள்ள‌பற்றாக்குறையின்‌‌மற்றும்‌‌வரிகள்‌ மற்றும்‌ வசூல்‌ கட்டணங்கள்‌ உட்பட‌ தொடர்புடைய‌ ஆண்டில்‌ மின்‌ பரிமாற்றங்கள்‌ மூலம்‌ வர்த்தகம்‌ செய்யப்படும்‌ அதிகபட்ச‌ புதுப்பிக்கத்‌தக்க‌மின்சக்தி‌சான்றிதழ்‌(REC)‌விலையின்‌‌அடிப்படையின்‌‌பேரில்‌‌ஆணையம்‌‌நிர்ணயிக்கலாகும்‌‌தொகையினை,‌மாநில‌ முகமையினால்‌‌உருவாக்கப்பட்டு‌மற்றும்‌‌பேணி‌வரப்படும்‌‌தனிப்பட்ட‌நிதியத்தில்‌‌வைப்பீடு‌செய்யுமாறு‌அத்தகைய‌கடப்பாடுடைய‌ நிறுவனத்திற்கு‌உத்தரவிடலாம்‌‌தவிர‌திறந்த‌நுழைவுரிம‌ைமூலம்‌மின்சாரம்‌பெறுவதற்கு‌தவறிய‌நிறுவனங்களுக்கான‌அனுமதி‌ தட‌ைசெய்யப்படும்.‌

இருந்தபோதிலும்‌,‌அவ்வாறு‌உருவாக்கப்பட்ட‌நிதியம்‌,‌சான்றிதழ்கள‌ைவாங்குவதற்காக‌ஆணையத்தினால்‌‌உத்தரவிடப்படலாகும்‌‌ முறையில்‌‌பயன்படுத்தப்படுதல்‌‌வேண்டும்‌:

மேலும்,‌ இருந்தபோதிலும்‌,‌ ஆணையம்‌,‌ அந்நிதியத்திலுள்ள‌ தொகையிலிருந்து,‌ கடப்பாடுகள‌ை நிறைவேற்றுவதிலுள்ள‌ பற்றாக்குறையின்‌‌ அளவுக்கு‌ தேவைப்படும்‌‌ எண்ணிக்கையிலான‌ சான்றிதழ்கள‌ை மின்‌‌ பரிமாற்ற‌ களத்திடமிருந்து‌ கொள்முதல்‌‌ செய்வதற்கு‌மாநில‌முகமையின்‌‌ஒரு‌அலுவலருக்கு‌அதிகாரமளிக்கலாம்‌:

இருந்தபோதிலும்‌கூட,‌மின்‌‌பகிர்மான‌உரிமம்தாரர்‌,‌ஆணையத்தினால்‌‌உத்தரவிடப்பட்ட‌தொகையை,‌உத்தரவு‌தெரிவிக்கப்பட்ட‌ 15‌நாட்களுக்குள்‌‌வைப்பீடு‌செய்யத்தவறுவாராயின்‌,‌தம்முடைய‌உரிம‌நிபந்தனைய‌ைமீறியவராவார்‌.

(2)‌ கடப்பாடுடைய‌ நிறுவனம்‌‌ எதுவும்‌,‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ ஆதாரங்களிலிருந்து‌ தேவையான‌ விழுக்காட்டளவு‌ மின்சாரத்தைக்‌‌கொள்முதல்‌‌செய்வதற்குரிய‌கடப்பாட்டிற்கு‌இணங்கி‌நடக்கத்‌‌தவறுகிறவிடத்து,‌அது,‌மேற்சொன்ன‌சட்டத்தின்‌‌ 142ஆம்‌‌பிரிவின்படி‌ஆணையத்தினால்‌‌முடிவு‌செய்யப்படலாகும்‌‌தண்டனைக்கும்‌‌உள்ளாதல்‌‌வேண்டும்‌‌:

இருந்தபோதிலும்,‌சான்றிதழ்கள்‌‌கிடைக்கவில்ல‌ைஎன்றால்‌,‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌‌கடப்பாட்டிற்கு‌இணங்கி‌நடப்பதில்‌‌ உண்மையாகவ‌ேஇடர்ப்பாடு‌ஏற்படும்‌‌நேர்வில்‌,‌கடப்பாடுடைய‌நிறுவனம்‌,‌தேவைப்படுகிற‌இணங்கி‌நடத்தல‌ைஅடுத்த‌ஆண்டிற்குக்‌‌ கொண்டு‌போவதற்கு‌தகுதியின்‌அடிப்படையில்‌ஆணையம்‌பரிசீலிக்க‌அனுமதி‌கோரி‌ஆணையத்த‌ைஅணுகலாம்‌.

10. ரத்து மற்றும் சேமிப்பு.—

(1)‌ இந்த‌ விதிமுறைகளில்‌ வேறுவிதமாக‌ வழங்கப்பட்டுள்ளதைத்‌ தவிர்த்து,‌ தமிழ்நாடு‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணையம்‌ (புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌கொள்முதல்‌கடமை)‌விதிமுறைகள்,‌2010‌மற்றும்‌அதன்‌அனைத்து‌அடுத்தடுத்த‌திருத்தங்கள்‌மற்றும்‌ அதன்‌நடைமுறைகள்‌இந்த‌விதிமுறைகள்‌நடைமுறைக்கு‌வந்த‌தேதியிலிருந்து‌ரத்து‌செய்யப்படும்.

(2)‌ அப்படி‌ ரத்து‌ செய்தாலும்,‌ ரத்து‌ செய்யப்பட்ட‌ விதிமுறைகளின்‌ கீழ்‌ செய்யப்பட்ட‌ அல்லது‌ நோக்கத்திற்காக‌கூறப்படும்‌ எதுவும்,‌ இந்த‌ ஒழுங்குமுறைவிதிகளுக்கு‌ இணங்காதிருப்பினும்,‌ இந்த‌ ஒழுங்குமுறைவிதிகளின்‌ கீழ்‌ செய்யப்பட்டதாக‌ அல்லது‌ நோக்கத்திற்கு‌கூறப்பட்டதாக‌கருதப்படும்.

(3)‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌(புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌கொள்முதல்‌கடமை)‌விதிமுறைகள்,‌2010ல்‌ இருந்து‌எழும்‌ஏதேனும்‌உரிமைகள்‌மற்றும்‌பொறுப்புகள்,‌இதன்‌மூலம்‌ரத்து‌செய்யப்பட்டிருப்பினும்,‌இந்த‌விதிமுறைவிதிகளுக்கு‌ இனங்காதிருந்தால்,‌அதன்‌கட்டமைப்பிற்குள்‌உள்ள‌விதிமுறையின்படி‌தீர்வு‌காணப்படும்.

11. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு அதிகாரம் .—

ஆணையம்‌,‌தான‌ேமுற்பட்டு‌அல்லது‌புதுப்பிக்கத்‌தக்க‌ஆதாரங்களிலிருந்து‌மின்‌‌உற்பத்தி‌செய்யும்‌‌எந்த‌நபரின்‌‌அல்லது‌ மின்‌‌பகிர்வு‌உரிமம்தாரரின்‌‌அல்லது‌சுய‌உபயோகிப்பாளர்களின்‌‌அல்லது‌திறந்த‌நுழைவுரிம‌ைநுகர்வோரின்‌‌விண்ணப்பத்தின்‌‌ பேரில்‌‌ இந்த‌ ஒழுங்குமுற‌ை விதிகள‌ை மறு‌ ஆய்வு‌ செய்யலாம்‌,‌ அவற்றில்‌‌ சேர்க்கலாம்‌,‌ அதைத்‌‌ திருத்தலாம்‌‌ அல்லது‌ அத‌ை மாற்றலாம்‌‌மற்றும்‌‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகளின்‌‌வகைமுறைகள‌ைநிறைவேற்றுவதிலுள்ள‌இடர்ப்பாடு‌எதனையும்‌‌நீக்குவதற்கு‌ உரிய‌ஆணைகள்‌‌பிறப்பிக்கலாம்‌.

12. இதர.—

(1)‌ இந்த‌ ஒழுங்குமுற‌ை விதிகளில்‌ உள்ள‌ எதுவும்,‌ காலத்திற்கேற்ப‌ அமலில்‌ உள்ளவாறு‌ நீதியின‌ை நிலைநாட்ட‌ அல்லது‌ ஆணையம்‌ அல்லது‌ வேறு‌ எந்த‌ சட்டத்தின்‌ செயல்முறைய‌ை துஷ்பிரயோகம்‌ செய்வதைத்‌ தடுப்பதற்கு‌ தகுந்த‌ உத்தரவு‌ பிறப்பிப்பதற்க்கு‌ஆணையின்‌அதிகாரத்த‌ைமட்டுப்படுத்தவோ‌அல்லது‌பாதிக்கவோ‌கூடாது.

(2)‌ இந்த‌ ஒழுங்குமுற‌ை விதிகளில்‌ உள்ள‌ எதுவும்,‌ ஆணையம்,‌ ஒரு‌ விஷயத்தின்‌ அல்லது‌ விஷயங்களின்‌ சிறப்புச்‌ சூழ்நிலைகளைக்‌கருத்தில்‌கொண்டு,‌எழுத்துப்பூர்வமாகப்‌பதிவு‌செய்யப்பட‌வேண்டிய‌காரணங்களுக்காக,‌அத்தகைய‌விஷயத்த‌ை அல்லது‌விஷயங்களின்‌வகையின‌ைகையாளும்‌போது‌அவ்வாறு‌செய்வது‌அவசியம்‌அல்லது‌பொருத்தமானது‌என்று‌கருதினால்,‌ இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகளின்‌எந்த‌விதிகளுக்கும்‌முரணான‌நடைமுறைய‌ைமேற்கொள்வத‌ைதடுக்காது.

13.‌ஆணையம்‌எந்த‌நேரத்திலும்,‌இந்த‌ஒழுங்குமுற‌ைவிதிகளில்‌எதையும்‌எந்த‌நேரத்திலும்,‌மாற்றியோ,‌வேறுவிதமாகவோ,‌ மாறுதல்‌செய்தோ‌அல்லது‌திருத்தியோ‌அமைக்கலாம்.

14.‌ இந்த‌ ஒழுங்குமுறைவிதிகள்‌ மற்ற‌ விதிமுறைகள்/குறியீடுகள்‌ மற்றும்‌ அவ்வப்போது‌ வெளியிடப்படும்‌ திருத்தங்கள்‌ ஆகியவற்றுடன்‌கூடுதலானதாகும‌ேஅன்றி‌இழிவுபடுத்தும்‌விதமாக‌இருத்தல்‌ஆகாது.

(தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையத்தின்‌‌ஆணைப்படி)

சென்னை-600‌032,‌ 2024‌ஆகஸ்ட்‌23.‌

சி.‌வீரமணி, செயலாளர்,

‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்.

Sep. 11, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 193

இணைப்பு-I (புதுப்பிக்கத் தக்க கொள்முதல் கடப்பாடுக்கான குறைந்தபட்ச சதவீதம்)

(1)‌ மின்‌ பகிர்மான‌ உரிமம்தாரர்,‌ சுய‌ உபயோக‌ மின்‌ உற்பத்தி‌ நிலைய‌ உரிமையாளரான‌ நுகர்வோர்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு‌ மாநிலத்தில்‌குறுகிய‌கால‌திறந்தவெளி‌நுழைவுரிம‌ைநுகர்வோர்கள்‌உட்பட‌ஒவ்வொரு‌கடப்பாடுடைய‌நிறுவனமும்,‌புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கடப்பாட்டின்‌ (RPO)‌ கீழ்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ ஆதாரங்களில்‌ இருந்து‌ மின்சாரத்த‌ை கீழ்கண்டவாறு‌ வாங்க‌வேண்டும்:

வருடம்‌ காற்றால‌ைபுதுப்பிக்கத்‌ தக்க‌கொள்முதல்‌ கடப்பாடு புனல்மின்‌புதுப்பிக்கத்‌ தக்க‌கொள்முதல்‌ கடப்பாடு பிற‌புதுப்பிக்கத்‌தக்க‌ கொள்முதல்‌கடப்பாடு மொத்த‌புதுப்பிக்கத்‌ தக்க‌கொள்முதல்‌ கடப்பாடு
2023-24 1.60% 0.66% 24.81% 27.08%
2024-25 2.46% 1.08% 26.37% 29.91%
2025-26 3.36% 1.48% 28.17% 33.01%
2026-27 4.29% 1.80% 29.86% 35.95%
2027-28 5.23% 2.15% 31.43% 38.81%
2028-29 6.16% 2.51% 32.69% 41.36%
2029-30 6.94% 2.82% 33.57% 43.33%

‌ (a)‌‌மார்ச்‌31,‌2022க்குப்‌பிறகு‌இயக்கப்பட்ட‌காற்றால‌ைமின்‌திட்டங்களுக்கு,‌‌காற்றால‌ைபுதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌ கடப்பாடு,‌உற்பத்தி‌செய்யப்படும்‌மின்‌சக்தியின்‌மூலமாக‌மட்டும‌ேநிறைவேற்றப்படும்.‌மேலும்,‌31.03.2022‌வர‌ைஇயக்கப்பட்ட‌ காற்றால‌ைமின்‌திட்டங்களுக்கு,‌‌காற்றால‌ைபுதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு,‌மொத்த‌மின்‌சக்தி‌நுகர்வில்‌7%‌மற்றும்‌ அதற்கு‌மேல்‌நுகரப்படும்‌காற்றால‌ைமின்சக்திகளின்‌மூலமாகவும்‌நிறைவேற்றப்படும்.

‌ (b)‌மார்ச்‌8,‌2019க்குப்‌பிறகு‌இயக்கப்பட்ட‌பெரிய‌நீர்‌சக்தி‌மின்‌திட்டங்கள்‌(LHPs)‌அல்லது‌இறைப்பு‌நீர்‌தேக்கி‌ திட்டங்கள்‌ (PS Ps)‌ உள்ளிட்ட‌ சிறு‌ நீர்‌ மின்‌ திட்டங்கள்‌ (SHPs)‌ ஆகியவற்றிலிருந்து‌ நீர்‌ மின்‌ கொள்முதல்‌ கடப்பாடு‌ (HPO)‌ நிறைவேற்றப்பட‌வேண்டும்.

‌ (c)‌மேல‌ே(a)‌மற்றும்‌(b)‌இல்‌குறிப்பிடப்படாத‌எந்தவொரு‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்சக்தி‌மின்‌திட்டத்திலிருந்தும்‌உற்பத்தி‌ செய்யப்படும்‌மின்‌ஆற்றலின்‌மூலம்‌மற்ற‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌RPO‌ஐ‌நிறைவேற்றலாம்.

(2)‌நிதியாண்டு‌2022-23‌முதல்,‌அனைத்து‌நீர்‌மின்‌திட்டங்களின்‌(HPPs)‌மின்‌ஆற்றல்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌ கடப்பாடின்‌ஒரு‌ பகுதியாகக்‌ கருதப்படும்.‌ நீர்‌மின்‌கொள்முதல்‌ கடப்பாடு‌ HPO‌ பாதை,‌ முன்னர்‌அறிவிக்கப்பட்டபடி,‌ மார்ச்‌8,‌ 2019க்குப்‌ பிறகு‌ இணைக்கப்பட்ட‌ நீர்‌ மின்‌ திட்டங்களுக்கு‌ (இறைப்பு‌ நீர்‌ தேக்கி‌ திட்டங்கள்‌ (PSPs)‌ மற்றும்‌ சிறு‌ நீர்நிலைத்‌ திட்டங்கள்‌(SHPகள்)‌உட்பட)‌தொடர்ந்து‌பொருந்தும்.‌மார்ச்‌8,‌2019க்கு‌முன்‌இயக்கப்பட்ட‌அனைத்து‌நீர்‌மின்‌திட்டங்களில்‌ இருந்து‌ இலவச‌ மின்சாரம்‌ உட்பட‌ மற்ற‌ அனைத்து‌ அனைத்து‌ நீர்‌ மின்‌ திட்டங்களின்‌ மின்‌ ஆற்றல்,‌ 'பிற‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌கடப்பாடு‌RPO'‌பிரிவின்‌கீழ்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடின்‌பகுதியாகக்‌கருதப்படும்.

(3)‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கடப்பாடு‌ RPO‌ என்பது‌ மின்சாரத்தின்‌ மொத்த‌ நுகர்வு‌ சதவீதமாக‌ மின்‌ ஆற்றல்‌ அடிப்படையில்‌கணக்கிடப்படும்.

(4)‌மார்ச்‌8,‌2019‌முதல்‌மார்ச்‌31,‌2030‌வர‌ைஇயக்கப்பட்ட‌தகுதியான‌நீர்‌மின்‌திட்டங்களிலிருந்து‌(இறைப்பு‌நீர்‌தேக்கி‌ திட்டங்கள்‌ PSP‌ மற்றும்‌ சிறிய‌ நீர்நிலைத்‌ திட்டங்கள்‌ (SHP)‌ உட்பட)‌ பெறப்பட்ட‌ மின்சாரத்தில்‌ இருந்து‌ நீர்‌ மின்‌ கொள்முதல்‌ கடப்பாடின‌ைHPO‌நிறைவேற்றப்படலாம்.

பெரிய‌நீர்‌மின்‌திட்டங்கள்‌(LHPs)‌என்பது‌25‌MW‌க்கும்‌அதிகமாக‌நிறுவப்பட்ட‌திறன்‌கொண்ட‌நீர்‌மின்‌திட்டங்கள்‌ மற்றும்‌சிறிய‌நீர்நில‌ைதிட்டங்கள்‌(SHPs)‌என்பது‌25‌MW‌வர‌ைநிறுவப்பட்ட‌திறன்‌கொண்ட‌நீர்‌மின்‌திட்டங்கள்‌ஆகும்.

(5)‌மாநில‌/‌மின்‌பகிர்மான‌உரிமம்தாரரின்‌நீர்‌மின்‌கொள்முதல்‌கடப்பாட்டின‌ை(HPO)‌நிறைவேற்றுவதற்கு‌8‌மார்ச்,‌2019க்குப்‌ பிறகு‌ இயக்கப்பட்ட‌ நீர்‌ மின்‌ திட்டங்கள்‌ (இறைப்பு‌ நீர்‌ தேக்கி‌ திட்டங்கள்‌ PSPs‌ உட்பட)‌ மற்றும்‌ சிறு‌ நீர்நிலைத்‌ திட்டங்கள்‌ (SHPs)‌ ஆகியவற்றிலிருந்து‌ மாநிலத்திற்கு‌ வழங்கப்படும்‌ இலவச‌ மின்சாரத்தில்‌ உள்ளூர்‌ பகுதி‌ மேம்பாட்டு‌ நிதிக்கான‌ (LADF)‌ பங்களிப்பைத்‌தவிர்த்து‌மாநில/மின்‌பகிர்மான‌உரிமம்தாரருக்குள்‌பயன்படுத்தப்பட்டால்,‌அத்தகைய‌காலத்தில்‌ஒப்பந்தத்தின்படி‌ நிறைவேற்றப்படலாம்.‌ இலவச‌ மின்சாரம்‌ (உள்ளூர்‌ பகுதி‌ மேம்பாட்டிற்கு‌ பங்களிக்கபடாத)‌ நீர்மின்‌ கொள்முதல்‌ கடப்பாடு‌ HPO‌ நிறைவேற்றலுக்கு‌தகுதியுடையதாக‌இருக்கும்.

(6)‌மேல‌ேகுறிப்பிட்டுள்ள‌இலவச‌மின்சாரம்‌நீர்மின்‌கொள்முதல்‌கடப்பாடு‌நிறைவேற்றலுக்கு‌போதுமானதாக‌இல்லையெனில்,‌ அதன்‌நீர்மின்‌கொள்முதல்‌கடப்பாடின‌ைHPO‌நிறைவேற்ற‌மாநிலம்‌கூடுதல்‌நீர்‌மின்சாரத்த‌ைவாங்க‌வேண்டும்‌அல்லது‌நீர்மின்‌ உற்பத்திக்கு‌இணையான‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌சான்றிதழ‌ைவாங்க‌வேண்டியிருக்கும்.

194 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

(7)‌ நீர்மின்‌ திட்டங்களின்‌ திருத்தப்பட்ட‌ இயக்கப்படுத்தலுக்கான‌ அட்டவணையைப்‌ பொறுத்து,‌ மேல‌ே உள்ள‌ நீர்மின்‌ கொள்முதல்‌கடப்பாடு‌(HPO)‌பாதையானது‌வருடாந்திர‌அடிப்படையில்‌திருத்தியமைக்கப்படும்.

(8)‌ வெளி‌ நாட்டிலிருந்து‌ இறக்குமதி‌ செய்யப்படும்‌ நீர்‌ மின்சாரம்‌ நீர்மின்‌ கொள்முதல்‌ கடப்பாடு‌ நிறைவேற்றலுக்கு‌ (HPO)‌ பொருந்தாது.

(9)‌ 31‌ மார்ச்‌ 2022‌ க்கு‌ பிறகு‌ இயக்கப்பட்ட‌ காற்றால‌ை மின்‌ சக்தி‌ திட்டங்களிருந்து‌ குறிப்பிட்ட‌ ஆண்டில்‌ பெறப்பட்ட‌ காற்றால‌ை புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கடப்பாடிற்கு‌ மிஞ்சிய‌ கூடுதலான‌ மின்‌ ஆற்றல்‌ அல்லது‌ 8‌ மார்ச்‌ 2019‌ க்கு‌ பிறகு‌ இயக்கப்பட்ட‌தகுதியுடைய‌நீர்மின்‌சக்தி‌திட்டங்களிருந்து‌(இறைப்பு‌நீர்‌தேக்கி‌திட்டங்கள்‌மற்றும்‌சிறு‌நீர்மின்‌சக்தி‌திட்டங்கள்‌ உட்பட)‌குறிப்பிட்ட‌ஆண்டில்‌பெறப்பட்ட‌நீர்மின்‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடிற்கு‌மிஞ்சிய‌கூடுதலான‌மின்‌ஆற்றல்‌ ஆகியவற்றின்‌ எவையேனும்‌ ஒன்ற‌ை கொண்டு‌ குறிப்பிட்ட‌ ஆண்டிற்கான‌ பிற‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கடப்பாடின்‌ குறைபாட்டின‌ைநிறைவேற்றிக்‌கொள்ளலாம்.‌மேலும்‌குறிப்பிட்ட‌ஆண்டில்‌காற்றால‌ைபுதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌ குறைபாட்டின‌ை குறிப்பிட்ட‌ஆண்டில்‌ நீர்மின்‌ சக்தி‌ நிலையங்களில்‌ இருந்து‌ பெறப்பட்ட‌ நீர்மின்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கடப்பாடிற்கு‌மிஞ்சிய‌கூடுதலான‌மின்‌ஆற்றல‌ைகொண்டு‌அல்லது‌நேர்மாறாகவோ‌நிறைவேற்றிக்‌கொள்ளலாம் (10)‌நுகரப்படும்‌மொத்த‌மின்‌ஆற்றலில்‌பின்வரும்‌சதவீதம்,‌மின்‌தேக்கி‌/மூலம்‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்‌ஆற்றலாக‌இருத்தல்‌ வேண்டும்.

நிதியாண்டு மின்தேக்கி‌(‌மின்‌நுகர்வின்‌அடிப்படையில்‌)
2023-24 1.0%
2024-25 1.5%
2025-26 2.0%
2026-27 2.5%
2027-28 3.0%
2028-29 3.5%
2029-30 4.0%

(11)‌மேற்கூறப்பட்டுள்ள‌பத்தி‌(10)‌இல்‌உள்ள‌மின்‌ஆற்றல்‌தேக்க‌கடப்பாடானது‌மின்சாரத்தின்‌மொத்த‌நுகர்வு‌சதவீதமாக‌ மின்‌ ஆற்றல்‌ அடிப்படையில்‌ கணக்கிடப்படும்‌ மற்றும்‌ மின்‌ ஆற்றல்‌ தேக்க‌ அமைப்பில்‌ சேமிக்கப்பட்ட‌ மொத்த‌ மின்‌ ஆற்றலில்‌ வருடாந்திர‌அடிப்படையில்‌குறைந்தபட்சம்‌85%‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌ஆதாரங்களில்‌இருந்து‌கொள்முதல்‌செய்யப்பட்டால்‌ மட்டுமே,‌நிறைவேற்றப்பட்டதாக‌கருதப்படும்

(12)‌ மேற்கூறிய‌ பத்தி‌ (1)‌ ல்‌ குறிப்பிடப்பட்டவாறு‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ ஆதாரங்களில்‌ இருந்து‌ சேமிக்கப்பட்ட‌ மின்‌ ஆற்றல்‌அளவிற்கான‌மின்னாற்றல்‌தேக்க‌கடப்பாடு‌மொத்த‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாட்டின்‌நிறைவேற்றலின்‌ஒரு‌ பகுதியாக‌ஏற்றுக்கொள்ளப்படும்.

(13)‌விதிமுறைகள்‌மற்றும்‌இந்த‌அட்டவணையில்‌குறிப்பிடப்பட்டுள்ள‌நிபந்தனைகளுக்கு‌உட்பட்டு‌இந்த‌அட்டவணையின்‌ பத்தி‌1‌மற்றும்‌பத்தி‌10‌இல்‌குறிப்பிடப்பட்டுள்ள‌ஒவ்வொரு‌வகைக்கும்‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்‌சக்தி‌கொள்முதல்‌கடப்பாடுக்கான‌ குறைந்தபட்ச‌சதவீதம்‌தனித்தனியாக‌நிறைவேற்றப்பட‌வேண்டும்.

(14)‌ இந்த‌ இணைப்பில்‌ உள்ள‌ வரையறைகள்,‌ இந்திய‌ அரசின்‌ மின்சக்தி‌ அமைச்சகத்தால்‌ முன்னர்‌ திருத்தப்பட்டாலன்றி,‌ மார்ச்‌31,‌2030‌வரையிலான‌காலத்திற்குப்‌பொருந்தும்.

சென்னை-600‌032,‌ 2024‌ஆகஸ்ட்‌23.‌

சி.‌வீரமணி, செயலாளர்,

‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு) விதிமுறைகள், 2023க்கு வடிவமைப்பதற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை விளக்கும் விளக்க அறிக்கை.

1.‌அறிவிக்க‌ைஎண்.த.மி.ஒ.ஆ/புகொக/19‌/1,‌தேதி-‌07-12‌2010,‌இன்‌படி‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌ (புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌கொள்முதல்‌கடப்பாடு)‌விதிமுறைகள்‌2010‌ன‌ைதமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌(இனி‌ "ஆணையம்"‌ என்று‌ குறிப்பிடப்படுகிறது)‌ குறித்துரைத்து‌ 22-12-2010‌ அன்று‌தமிழ்நாடு‌அரசிதழில்‌ வெளியிடப்பட்டு,‌ பின்னர்‌ அவ்வப்போது‌திருத்தி‌அமைக்கப்பட்டது.

2.‌மத்திய‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌(புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌உற்பத்திக்கான‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்‌ஆற்றல்‌ சான்றிதழ்‌அங்கீகாரம்‌மற்றும்‌வழங்கலுக்கான‌விதிமுறைகள்‌மற்றும்‌நிபந்தனைகளுக்கான‌விதிமுறைகள்‌மற்றும்‌நிபந்தனைகள்)‌ 2010‌ன‌ைரத்து‌செய்து,‌2022‌ம்‌ஆண்டு‌09-05-2022‌அன்று‌மத்திய‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌(புதுப்பிக்கத்‌தக்க‌ எரிசக்தி‌ உற்பத்திக்கான‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ மின்‌ ஆற்றல்‌ சான்றிதழ்களுக்கான‌ விதிமுறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்)‌ மத்திய‌ ஆணையம்‌அறிவித்துள்ளது.

Sep. 11, 2024] TAMIL NADU GOVERNMENT GAZETTE 195

3.‌ 2016‌ ஆம்‌ ஆண்டின்‌ மின்‌ கட்டணக்‌ கொள்கையின்‌ பத்தி‌ 6.4‌ (1)‌ இன்‌ விதியின்படி,‌ இந்திய‌ அரசின்‌ மின்சக்தி‌ அமைச்சகம்,‌ நிதியாண்டு‌ 2021-22‌ க்கு‌ அப்பால்‌ நிதியாண்டு‌ 2029-30‌ வர‌ை F.No.09/13/2021-RCM,‌ 22.07.22‌ மற்றும்‌‌ 19-09-2022‌ தேதியிட்ட‌ திருத்தத்தில்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ கொள்முதல்‌ கடப்பாடு‌ (RPO)‌ பாதைய‌ை அறிவித்துள்ளது.‌ மின்சக்தி‌அமைச்சகத்தின்‌கூறப்பட்ட‌அறிவிப்பு‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்சக்தி‌கொள்முதல்‌கடப்பாடு‌RPO‌கூறுகள‌ைமின்‌ஆற்றல்‌ தேக்கி‌ கடப்பாடின‌ை உள்ளடக்கி‌ மறுவரையற‌ை செய்துள்ளது.‌ மேலும்‌ அந்தந்த‌ மாநிலங்களுக்கான‌ நீர்மின்‌ சக்தி‌ கொள்முதல்‌ கடப்பாடு‌(HPO)‌மற்றும்‌மின்‌ஆற்றல்‌தேக்கி‌கடப்பாடுகள்‌ஆகியவற்ற‌ைஉள்ளடக்கி‌புதுப்பிக்கத்‌தக்க‌மின்சக்தி‌கொள்முதல்‌ கடப்பாடு‌(RPO)‌பாதைய‌ைஅறிவிக்குமாறு‌மாநில‌ஆணையங்களுக்கு‌அந்த‌அறிவிப்பு‌பரிந்துரைக்கிறது.

4.‌ புதிய‌ மற்றும்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ அமைச்சகம்‌ ஆணையத்திற்கு‌ அனுப்பப்பட்ட‌ 15-12-2022‌ தேதியிட்ட‌ நேரடி‌ கடிதத்தில்,‌மின்சக்தி‌அமைச்சகத்தால்‌அறிவிக்கப்பட்ட‌தேசிய‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌கொள்முதல்‌கடப்பாடு‌RPO‌பாதைக்கு‌ ஏற்ப‌ அதன்‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ கொள்முதல்‌ கடப்பாடு‌ RPO‌ பாதையின‌ை சீரமைக்க‌ தேவையான‌ நடவடிக்கைகள‌ை எடுக்குமாறு‌கோரப்பட்டுள்ளது.

5.‌மத்திய‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்‌CERC‌(புதுப்பிக்கத்‌தக்க‌மின்‌ஆற்றல்‌உற்பத்திக்கான‌சான்றளிக்கப்பட்ட‌ புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்திக்கான‌விதிமுறைகள்‌மற்றும்‌நிபந்தனைகள்)‌விதிமுறைகள்,‌2022‌மற்றும்‌2022‌ம்‌ஆண்டு‌ஜூல‌ை மாதம்‌ 22ஆம்‌ தேதியில்‌ மின்சக்தி‌ அமைச்சகத்தால்‌ வெளியிடப்பட்ட‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ கொள்முதல்‌ கடப்பாடு‌‌ RPO‌பாத‌ைஆகியவற்றில்‌வழங்கப்பட்டுள்ள‌வரையறைகள‌ைகணக்கில்‌கொண்டு‌புதிய‌புதுப்பிக்கத்‌தக்க‌எரிசக்தி‌கொள்முதல்‌ கடப்பாடு‌(RPO)‌இணக்க‌விதிமுறைகள‌ைஉருவாக்குவது‌பொருத்தமானதாக‌ஆணையம்‌கண்டறிந்துள்ளது.

6.‌இந்திய‌அரசின்‌மின்சக்தி‌அமைச்சகத்தால்‌நிர்ணயிக்கப்பட்ட‌புதுப்பிக்கத்‌தக்க‌கொள்முதல்‌கடப்பாடு‌வளைவுப்பாதையின‌ை செயல்படுத்தும்‌ வகையில்‌ 2003ஆம்‌ ஆண்டு‌ மின்சார‌ சட்டத்தின்‌ (மத்திய‌ சட்டம்‌ 36‌ /‌2003‌ )‌ 181‌ ஆம்‌ பிரிவுடன்‌ சேர்த்துப்‌ படிக்கப்படும்‌ பிரிவுகள்‌ 61,‌ 66‌ மற்றும்‌ 86(1)(e)‌ கூற்றின்படி‌ தனக்கு‌ வழங்கப்பட்ட‌ அதிகாரங்களையும்‌ மற்றும்‌ இதன்‌ பொருட்டு‌ அதன‌ை இயல்விக்கும்‌ அனைத்துப்‌ பிற‌ அதிகாரங்களையும்‌ செலுத்தி,‌ தமிழ்நாடு‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணையம்,‌ இதன்‌ மூலன்‌ 2010‌ ஆம்‌ ஆண்டு‌ தமிழ்நாடு‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணையம்‌ (புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌ கொள்முதல்‌ கடப்பாடு‌)‌ ஒழுங்குமுற‌ை விதிகள‌ை ரத்து‌ செய்து,‌ 2023‌ ஆம்‌ ஆண்டு‌ தமிழ்நாடு‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணையம்‌ (புதுப்பிக்கத்‌ தக்க‌ எரிசக்தி‌கொள்முதல்‌கடப்பாடு)‌ஒழுங்குமுற‌ைவிதிகள‌ைகுறித்துரைத்துள்ளது.

7.‌ இந்துஸ்தான்‌ துத்தநாகம்‌ மற்றும்‌ ராஜஸ்தான்‌ மின்சார‌ ஒழுங்குமுற‌ை ஆணையம்‌ (RERC)‌ ஆகியோருக்கு‌ இடையில்‌ மாண்புமிகு‌இந்திய‌உச்ச‌நீதிமன்றத்தில்‌தாக்கல்‌செய்யப்பட்ட‌வழக்கு‌இறுதிக்கட்ட‌நிலைய‌ைஅடைந்துள்ள‌நிலையில்‌தன்பயன்‌ மின்‌ உற்பத்தி‌ நிலையங்கள்‌ (CGP)‌ மற்றும்‌ திறந்த‌ நுழைவுரிம‌ை வாடிக்கையாளர்களுக்கு‌ புதுப்பிக்கத்‌ தக்க‌ கொள்முதல்‌ கட்டுப்பாட்டின‌ை(RPO)‌நடைமுறைபடுத்துவது‌மாண்புமிகு‌சென்ன‌ைஉயர்நீதிமன்றத்தில்‌நிலுவையில்‌உள்ள‌மனுக்களின்‌இறுதி‌ தீர்ப்ப‌ைபொறுத்த‌ேஅமையும்.‌மற்ற‌அமைப்பினருக்கு‌இதன்‌செயல்பாடு‌ஒழுங்குமுற‌ைவிதிமுறையின்‌அரசிதழில்‌அச்சிடப்பட்ட‌ தேதியில்‌இருந்து‌உடனடியாக‌நடைமுற‌ைபடுத்தப்படும்.

(தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையத்தின்‌உத்தரவின்படி)

சென்னை-600‌032,‌ 2024‌ஆகஸ்ட்‌23.‌

சி.‌வீரமணி, செயலாளர்,

‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ‌‌தமிழ்நாடு‌மின்சார‌ஒழுங்குமுற‌ைஆணையம்.

‌

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 11 September 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-09-11.Ordinary_37_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2024-09-11.Ordinary_37_Part-VI_Section-2.