தமிழ்நாடு அரசு 2024
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண். 44] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 6, 2024
ஐப்பசி 20, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)ன் கீழ் அறிவிக்கை
(ந.க. எண். 8010/இ1/2023)
தமிழ்நாடு அரசிதழ் எண்.23, நாள். 05.06.2024-ன்படி பிரசுரம் செய்யப்பட்டு இவ்வலுவலக கடித எண் 8010/இ1/2023, நாள்.02.07.2024-ன்படி மேற்படி அரசிதழ் நகல் சம்பந்தப்பட்ட சங்க முகவரியான 6-12-15, ஜவுளிக்கடை பஜார், உசிலம்பட்டி என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மீண்டும் மேற்படி சங்கம் அம்முகவரியில் செயல்படவில்லை என்று தெரிவித்து இவ்வலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் 04.07.2024ல் திரும்ப வரப்பெற்றுள்ளது.
எனவே சங்கம் செயல்படாத நிலையில் உள்ளதாலும் அரசிதழ் அறிவிப்பு 05.06.2024ல் வெளியாகி 3 மாதத்திற்குள் இச்சங்க கலைப்பு குறித்து எதிர்ப்புகள் பெறப்படாத நிலையிலும், இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும், ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததும் கீழ்க் குறிப்பிட்ட சங்கத்தின் பெயர் சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன்படி சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்வதற்கான அறிவிப்பு அரசிதழில் பிரசுரம் செய்ய கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிவிப்பு பிரசுரமான நாளில் இருந்து இச்சங்கம் கலைக்கப்பட்டதாக கருதப்படும் என்று இறுதியாக அறிவிக்கப்படுகிறது.
| வரிசை எண். | சங்கத்தின் பதிவு எண் மற்றும் வருடம் | சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி | |||
| (1) | (2) | (3) | |||
| 1 | 98/1991 | உசிலம்பட்டி நட்டாத்தி இந்து நாடார் உறவின்முறை பேரவை, 6-12-15, ஜவுளிகடை பஜார், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம். | |||
த. பூபதி,
மதுரை (தெற்கு), 2024 அக்டோபர் 16.
சங்கங்களின் பதிவாளர் மற்றும்
மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), (கூ.பொ).
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
DTP—VI-1-T-Sup (44)