| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 361] CHENNAI, FRIDAY, NOVEMBER 8, 2024 Aippasi 22, Kurothi, Thiruvalluvar Aandu-2055
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
[ந.க.எண். COLRD/1756/2022-A6]
No. VI(2)/32(a)/2024.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக வரப்பெற்ற சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநரின் புகார் கடிதம், குலசேகரப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு புகார் மனுக்கள் மற்றும் தென்காசி மாவட்டம், உதவி இயக்குநர் (தணிக்கை)-ஆல் கண்டறியப்பட்ட குறைபாடுகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. ம. முத்துமாலையம்மாள் என்பவருக்கு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (1)(a)-ன்கீழ் விளக்கம் கோரும் அறிவிப்பு வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவரால் குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமாக இல்லாததால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-(2),(3),(4),(5),(6),(7),(8),(9) மற்றும் (10)-களின் படி கிராம ஊராட்சி மன்றத்தினைக் கூட்டி, கிராம ஊராட்சி உறுப்பினர்களின் கருத்தினை பதிவு செய்து விரிவான அறிக்கையினை சமர்ப்பிக்க தென்காசி வருவாய் வட்டாட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதன்படி தென்காசி வருவாய் வட்டாட்சியரால் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டம் 23.01.2024-இல் கூட்டப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
23.01.2024-ல் நடைபெற்ற குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தலைவர் உட்பட 14 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று தெரிவித்து, ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு 5 வார்டு உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். மேலும் 9 வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத்தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை எனத் தெரிவித்து, ஊராட்சி மன்றத்தலைவரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறு தங்களது கருத்துக்களை வருவாய் வட்டாட்சியரின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு எண்:205-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர் அவர்களின் நேர்முக கடிதத்தின்படி குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் சட்டப்பிரிவு 205(11)-ன்கீழ் மேல் நடவடிக்கை எடுக்கும் வகையில் கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கி, ஊராட்சி மன்ற தலைவருக்கு கூடுதல் விளக்கம் கோரும் குறிப்பாணை மீண்டும் வழங்கப்பட்டது.
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARYஊராட்சி மன்றத் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட பதிலறிக்கை மற்றும் வார்டு உறுப்பினர்களின் கருத்துக்களை பரிசீலினை செய்ததில் மொத்தமுள்ள 22 குறைபாடுகளில் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைபாடுகள் 3, 4, 10, 11, 17 ,18 மற்றும் 19 –ஆகவும், ஊராட்சிக்கு நிதியிழப்பு மற்றும் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி நிராகரிக்கக் கூடியதாக 1, 2, 5, 6, 7, 8, 9, 12, 13, 14, 15, 16, 20, 21 மற்றும் 22 எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து திருமதி ம. முத்துமாலையம்மாள் என்பவர் தனது கடமையை செய்யத் தவறியதால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், அவரின் மீதான குற்றச்சாட்டுக்கள் அதற்கான விளக்கங்கள் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்ததில் இவர் ஊராட்சி செயல் அலுவலர்/ஊராட்சி மன்றத் தலைவருக்கான கடமையிலிருந்து தவறியுள்ளது நிரூபணமாவதாக எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன்கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரை குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை வெளியிடப்படுகிறது. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தென்காசி, ஏ.கே. கமல் கிஷோர், 2024 நவம்பர் 8. ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்.