Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.- Tamil Supplement Notification by Government - Tamil Translation - G.O. (2D) No. 65, Labour Welfare and Skill Development (J1) Department, 20 August 2024.

Published 13 November 2024

Type
Ordinary
Gazette no.
45
Part
Part II
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2024-11-13.Ordinary_45_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2024

[விலை: [விலை: ரூ. 2.40 ரூ. 2.40 காசுகாசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 45] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 13, 2024 ஐப்பசி 27, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (2 ப) எண் 65, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 20 ஆகஸ்ட் 2024.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 05.03.2019-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் பாகம்-II பிரிவு 2-இல் 1 முதல் 6 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவே/205(m)2019-ஆம் எண் அறிவிக்கைக்குப் பதிலீட்டகற்றீடாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாட்டிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1)-ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் ( 1 ) திங்கள் ஒன்றிற்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( 2 )
மன்டலம்-A மன்டலம்- (1)(1) மன்டலம்-B மன்டலம்- (2)(2) மன்டலம்-C மன்டலம்- (3)(3) மன்டலம்-D மன்டலம்- (4)(4)
ரூ.காசு ரூ.காசு ரூ.காசு ரூ.காசு ரூ.காசு ரூ.காசு ரூ.காசு
I. . பொது வகையினர் : 7390.00 7328.00 7264.00 7214.00
(1) மேலாளர்
(2) விற்பனை மேலாளர்
(3) கள அலுவலர்
(4) வளர்ச்சிப் பணி அலுவலர்
(5) அலவலகப் பொறுப்பாளர்

II-2-(45) (T Sup)—1

[ 1 ]2

பணியாளர்களின் வகைகள் ( 1 ) திங்கள் ஒன்றிற்கான குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( 2 )
மன்டலம்-A மன்டலம்- (1)(1) மன்டலம்-B மன்டலம்- (2)(2) மன்டலம்-C மன்டலம்- (3)(3) மன்டலம்-D மன்டலம்- (4)(4)
ரூ.காசு ரூ.காசு ரூ.காசு ரூ.காசு ரூ.காசு ரூ.காசு ரூ.காசு
(6) உதவி மேலாளர் 6880.00 6815.00 6753.00 6691.00
(7) கணக்காளர்
(8) மேற்பார்வையாளர்
(9) விற்பனை அலுவலர்
(10) கொள்முதல் செய்பவர்
(11) பண்டகசாலைக் காப்பாளர்
(12) முகவர்
(13) விற்பனை மேம்பாட்டுப் பணியாளர்கள்
(14) காசாளர் 6829.00 6753.00 6680.00 6619.00
(15) எழுத்தர்
(16) தட்டச்சர் மற்றும் எழுத்தர்
(17) தட்டச்சர்
(18) சுருக்கெழுத்தர்
(19) விற்பனையாளர்
(20) விற்பனைப் பிரதிநிதி
(21) ஏலம் விடுபவர் (Auction Bidder)
(22) வணிகர்
(23) பட்டி தயாரிப்பவர்
(24) பட்டித் தொகை வசூலிப்பவர் 6767.00 6691.00 6619.00 6553.00
(25) பதிவு செய்யும் எழுத்தர் (Booking Clerk)
(26) பட்டி எழுத்தர் (Bill Clerk)
(27) கிடங்குக் காப்பாளர்
(28) உதவி விற்பனையாளர்
(29) கிடங்குப் பொறுப்பாளர்
(30) உதவிக் கணக்காளர்
(31) வரவேற்பாளர்
(32) கம்பியர் (Lineman)
(33) சரிபார்ப்பு எழுத்தர்
(34) பாதுகாப்புப் பணியாளர்
(35) எடை போடுபவர்
(36) ஓட்டுநர்
(37) ஏவலாள்
(38) காவலாள்
(39) கடை உதவியாள்
(40) துணையாள்
(41) சிப்பம் கட்டுபவர்
(42) உதவியாள்
(43) பொருள்களை வழங்குபவர் 6691.00 6619.00 6541.00 6470.00
(44) செய்தியாள்
(45) மின்தூக்கி இயக்குபவர்
(46) கடைச் சிப்பந்தி
(47) தண்ணீர் கொடுப்பவர்
(48) பெருக்குபவர்
(49) தோட்டக்காரர்
(50) துப்புரவுப் பணியாளர்
IIII. . சிறப்பு வகைப் பணியாளர்கள் : சிறப்பு வகைப் பணியாளர்கள் :
(1) (1) இரசாயன மற்றும் மருந்துப் பொருள் விற்பனைக் கடை : இரசாயன மற்றும் மருந்துப் பொருள் விற்பனைக் கடை :
(அ) மருந்தாளுநர் 7390.00 7328.00 7264.00 7214.00
(ஆ) வேதியியல் வல்லுநர்
(இ) மருந்து கலப்பவர் 6829.00 6753.00 6680.00 6619.00
(2) (2) முடிதிருத்தும் நிலையம் / அழகு நிலையம் : முடிதிருத்தும் நிலையம் / அழகு நிலையம் :
(அ) முடி திருத்துபவர் 6880.00 6815.00 6753.00 6675.00
(ஆ) முடி வெட்டுபவர்
(இ) அழகுபடுத்துபவர்
(3) (3) ஒளிப்பட மெடுக்கும் நிலையங்கள் ஒளிப்பட மெடுக்கும் நிலையங்கள்
(அ) ஒளிப்படம் எடுப்பவர் 6829.00 6753.00 6680.00 6619.00
(ஆ) ஒளிப்படக் கலைஞர்
(இ) உதவி ஒளிப்படக் கலைஞர் 6767.00 6691.00 6619.00 6553.00
(ஈ) ஒளிப்பட உதவியாளர்
(4) பழுது நீக்கும் கடைகள் : (கடிகாரம் / வானொலிப் பெட்டி / மிதிவண்டி) (கடிகாரம் / வானொலிப் பெட்டி / மிதிவண்டி)
(அ) கடிகாரம் பழுது நீக்குபவர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஆ) வானொலிப் பெட்டி பழுது நீக்குபவர் / சரிபார்ப்பவர்
(இ) வானொலி / காணொலிக் கருவி பழுது நீக்குபவர் / சரிபார்ப்பவர்
(ஈ) மிதிவண்டி பொருத்துபவர் 6691.00 6619.00 6541.00 6470.00
(5) (5) மூக்குக் கண்ணாடிக் கடைகள் : மூக்குக் கண்ணாடிக் கடைகள் :
(அ) மூக்குக் கண்ணாடி பொருத்துபவர் / கண்ணாடியை அளவிற்கேற்ப அறுத்து வாங்குபவர் / கொள்முதல் செய்பவர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஆ) ரெஃப்ராக்ஷனரி பணியாளர்
(6) பட அச்சுக் கட்டைத் தயாரித்தல் மற்றும் இரப்பர் முத்திரை தயாரித்தல் :
(அ) செதுக்கி எடுப்பவர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஆ) பட அச்சு கட்டைத் தயாரிப்பவர்
(இ) செதுக்கும் பணி உதவியாளர் 6767.00 6691.00 6619.00 6553.00
(ஈ) வண்ணம் பூசுபவர் / ஓவியர் 6829.00 6753.00 6680.00 6619.00
(7) (7) மின்விளக்கு, ஒலிபெருக்கி பழுதுநீக்கும் கடை : மின்விளக்கு, ஒலிபெருக்கி பழுதுநீக்கும் கடை :
(அ) மின் கம்மியர் / கம்பியாளர் / மின்கருவி பழுதுநீக்குபவர் 6829.00 6753.00 6680.00 6619.00
(ஆ) உதவி கம்பியாளர் 6767.00 6691.00 6619.00 6553.00
(இ) ஒலிவாங்கி இயக்குபவர்
(8) நோய்குறி கண்டறிவதற்கான பரிசோதனைக் கூடம் :
(அ) ரேடியோகிராஃபர் 6829.00 6753.00 6680.00 6619.00
(ஆ) எக்ஸ்-கதிர் படமெடுப்பவர்
(இ) பரிசோதனைக்கூடத் தொழில்நுட்பப் பணியாளர் / பகுப்பாய்வாளர்
(9) சீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள்
(அ) தலைமைக் கணக்காளர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஆ) அலுவலகக் கண்காணிப்பாளர்
(இ) செயலாளர்
(ஈ) தணிக்கையாளர்
(உ) நேர்முக உதவியாளர் 6829.00 6753.00 6680.00 6619.00
(ஊ) இளநிலை வளர்ச்சி / மேம்பாட்டு அலுவர்
(எ) சட்ட உதவியாளர்
(10) (10) உணவகம்-உறைவிடங்கள் : உணவகம்-உறைவிடங்கள் :
(அ) அறைப் பணியாள் 6691.00 6619.00 6541.00 6470.00
(ஆ) வாடிக்கையாளர் திரட்டுபவர்
(இ) கொத்தனார் 6829.00 6753.00 6680.00 6619.00
(ஈ) குழாய் பணியாளர்
(உ) வண்ணம் தீட்டுபவர்
(ஊ) மின் கம்மியர்
(11) (11) அறைகலன் : அறைகலன் :
(அ) தச்சர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஆ) மெருகேற்றுபவர்
(இ) பிரம்புப் பணியாளர்
(12) (12) பல்வகைப் பணியாளர் : பல்வகைப் பணியாளர் :
(அ) இசைக் கருவி விற்பனை நிலையத்திலுள்ள தொழில்நுட்பப் பணியாளர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஆ) குடைகள் தயாரிப்புக் கடையில் குடையைப் பொருத்துதல், தைத்தல், கத்தரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்பவர்
(இ) ஆட்டோமொபைல், தானியங்கி வாகனப் பொருட்களின் விற்பனைக் கடையில் மெருகேற்றுபவர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஈ) பயண / உடைப் பெட்டி (சூட்கேஸ்) அனைத்து வகைப் பைகள் மற்றும் பணப்பைகள் தயாரிப்பாளர்கள். (தோலினால் செய்யப்பட்டவை தவிர)
(உ) பெட்ரோல் பங்க் பணியாளர் 6691.00 6619.00 6541.00 6470.00
(ஊ) ஒளிப்படச் சட்டம் போடும் பணியாளர்/ சட்டம் போடும் பொருட்கள் வெட்டுபவர் 6829.00 6753.00 6680.00 6619.00
(எ) மின்தூக்கி நிறுவும் நிறுவனங்களில் பணிபுரியும் பயிற்சி பெற்ற தொழிலாளர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஏ) குளிர்சாதன தளவாடப் பணியாளர் 6880.00 6815.00 6753.00 6691.00
(ஐ) கடைகளில் பழச்சாறு மற்றும் லஸ்ஸி தயாரிப்பவர் 6767.00 6691.00 6619.00 6553.00
(ஒ) எவர்சில்வர், அலுமினியம் பாத்திரக் கடைகளில் பெயர் பொரிப்பவர் 6829.00 6753.00 6680.00 6619.00
(ஓ) விறகுக்கடையில் விறகு வெட்டுபவர் 6767.00 6691.00 6619.00 6553.00
(ஒள) டயர்களின் அடிப்பாகத்தை மாற்றுதல், புதுப்பித்தல், டியூப் வல்கனைசிங் கடைகளில் டயர் கிரைண்டர் புதுப்பித்தல் 6829.00 6753.00 6680.00 6619.00
(க) மலைப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள், பண்டகசாலை, சேமிப்புக் கிடங்கு, இருப்பு வைக்கப்படும் அறை ஆகியவற்றில் உலரவைத்தல், இருப்பு வைத்தல், தூய்மைப்படுத்துதல், அளவிடுதல், பாரம் ஏற்றுதல் பாரம் இறக்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் 6691.00 6619.00 6541.00 6470.00
(கா) நிருவாகப் பணிநிலை, எழுத்துப் பணிநிலை மற்றும் மேற்சொன்ன வகைப்பாடுகள் எதிலும் சேராத பணி ஆகியவை தவிர, அனைத்துக் கடை மற்றும் வணிக நிலையங்களில் பணிபுரியும் பொதுவான பணியாளர்கள். 6691.00 6619.00 6541.00 6470.00
3 4 5

விளக்கங்கள்:-விளக்கங்கள்:- (1) அகவிலைப்படிஅகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூ. 40.18 (நாற்பது ரூபாய் பதினெட்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

6

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்:

மற்றும்

(iii) முந்தைய ஆண்டிற்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) வகைப்படுத்தப்பட்ட மண்டலங்கள் பற்றிய விவரம் வருமாறு:- (2) வகைப்படுத்தப்பட்ட மண்டலங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

(i)(i) மண்டலம் மண்டலம் - A:- A:

மாநகராட்சிகள் மற்றும் சிறப்புநிலை நகராட்சிகள் ஆகியவை இதில் அடங்கும்.

(ii)(ii) மண்டலம் மண்டலம் - B:- B:

சிறப்புநிலை நகராட்சிகள் நீங்கலாக ஏனைய நகராட்சிகள் அனைத்தும் இதில் அடங்கும்,

(iii) (iii) மண்டலம் மண்டலம் - C:- C:

நகரியங்கள், பேரூராட்சிகள், பாளையங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

(iv) (iv) மண்டலம் மண்டலம் - D:- D:

A, B A, B மற்றும் C C ஆகிய மண்டலங்களில் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பகுதிகள் நீங்கலாக ஏனைய அனைத்துப் பகுதிகளும் இதில் அடங்கும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியதத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண் 82, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2)த் துறை, 10 செப்டம்பர் 2024.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 27-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையின் பகுதி-I-இல் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சென்ன சட்டத்தின் மேற்சொன்ன பிரிவில் கோரியுள்ளவாறாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்.

மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையி்ன் பகுதி-I-இல், "94. வீட்டுப் பயன்பாட்டுத் துணிநூல் தயாரிப்புத் தொழிலில், அதாவது படுக்கையறைப் பயன்பாட்டுத் துணி வகைகள், குளியலறைப் பயன்பாட்டுத் துணி வகைகள், வரவேற்பறைப் பயன்பாட்டுத் துணி வகைகள், ஒப்பனை செய்யத்தக்க துணி வகைகள், சமையறைப் பயன்பாட்டுத் துணி வகைகள் மற்றும் அத்தகைய இனங்களில் வேலைவாய்ப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்னர், "95. நாப்கின்கள், மருத்துவ கட்டுத்துணிகள் மற்றும் மருத்துவத் தொழில் சார்ந்த பயன்பாட்டிற்கான உடைகள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

கே.வீரராகவராவ், அரசு செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 November 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-11-13.Ordinary_45_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2024-11-13.Ordinary_45_Part-II_Section-2-T-Sup.