© GOVERNMENT OF TAMIL NADU 2024
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 16.80 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 395A] சென்னை, திங்கள்கிழமை, டிசம்பர் 9, 2024 கார்த்திகை 24, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்
பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:
எண். 35/2024—தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் (உரிமம் வழங்குதல்) திருத்தச் சட்டம் .. 2-8 எண். 36/2024—தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம் .. 9-12 எண். 37/2024— தமிழ்நாடு ஊராட்சிகள் (ஏழாம் திருத்தச்) சட்டம் .. .. .. .. 13-16 எண். 38/2024— தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம் .. .. .. .. .. .. 17-18 எண். 39/2024— தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) திருத்தச் சட்டம் .. .. .. .. 19-24 எண். 40/2024—தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி திருத்தச் சட்டம் .. .. 25-28 எண். 41/2024— தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இரண்டாம் திருத்தச் சட்டம் .. 29-32 எண். 42/2024—சென்னைப் பல்கலைக்கழக திருத்தச் சட்டம் .. .. .. .. 33-34 எண். 43/2024—தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் .. .. 35-40 எண். 44/2024—தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் திருத்தச் சட்டம் .. .. .. 41-42
[1]
DTP—Ex-IV-1 (395A)2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2024-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 35/2024
1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் (உரிமம் வழங்குதல்)
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாக:—
1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுக்
குறுந்தலைப்பு
கட்டடங்கள் (உரிமம் வழங்குதல்) திருத்தச் சட்டம் என்று வழங்கப்பெறும்.
மற்றும்
தொடக்கம்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் மூலம் குறித்திடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் 2 ஆம் பிரிவிற்கான
13/1965.
திருத்தம்.
2. 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் (உரிமம் வழங்குதல்) சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவில்,-
(1) (2) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2) "தகுதிவாய்ந்த அலுவலர்" என்பது, மாவட்ட ஆட்சியர்
என்று பொருள்படும்;";
(2) (4)ஆம் கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(3) (6)ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(6) "உரிமம்" என்பது, இந்தச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட
அல்லது புதுப்பிக்கப்பட்ட உரிமம் என்று பொருள்படும்;".
3, 4 மற்றும் 5 ஆம்
பிரிவுகளுக்கான
3. முதன்மைச் சட்டத்தின் 3,4 மற்றும் 5 ஆம் பிரிவுகளுக்காக, பின்வரும் பிரிவுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
மாற்றீடு.
"3. பொதுக் கட்டடங்களுக்கு உரிமம் வழங்கப்படுதல்.- ஓர் உரிமம் இன்றியும், அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காமலும் எந்தவொரு கட்டடமும் பொதுக்கட்டடமாக பயன்படுத்தப்படுதல் கூடாது.
4. உரிமம் வழங்குதல்.- (1) எந்தவொரு கட்டடத்தையும் ஒரு பொதுக்கட்டடமாக பயன்படுத்தும் எண்ணம் கொண்ட உரிமையாளர் எவரும், தமிழ்நாடு அரசிதழில், அரசால் அறிவிக்கப்படலாகும் இணையவழி வாயிலின் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில், உரிமத்திற்கு விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும்.
(2) (1)ஆம் உட்பிரிவின்கீழ் செய்யப்படும் விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் ஒரு பொறியாளரால் வழங்கப்பட்ட தொடர்புடைய கட்டடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மை சான்றிதழுடன் சேர்த்து, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணமும் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய சான்றிதழ் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3(3) கட்டமைப்பு உறுதித்தன்மை சான்றிதழின் உறுதிப்படுத்துதலுக்கு உட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் அத்தகைய படிவத்திலும், உரிமம் தானே பிறப்பிக்கப்பட்டு இணைய வழியாக வழங்கப்படுதல் வேண்டும். கட்டடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மையின் பராமரிப்பு மற்றும் அதில் குறித்துரைக்கப்பட்டவாறு பொதுமக்கள் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் நிறைவேற்றியதற்கு உட்பட்டு, கட்டட உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள காலஅளவு, உரிமத்தின் செல்லுபடியாகும் காலஅளவாக இருத்தல் வேண்டும்.
(4) (1) முதல் (3) வரையிலான உட்பிரிவுகளில் என்ன அடங்கியிருந்தபோதிலும், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் (உரிமம் வழங்குதல்) திருத்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியில் நிலுவையில் உள்ள, உரிமம் வழங்குவதற்கான அல்லது உரிமம் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் எதுவும் அல்லது உரிமம் வழங்குதல் அல்லது புதுப்பித்தல் மறுக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு அல்லது சீராய்வு எதுவும், 2024 தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் (உரிமம் வழங்குதல்) திருத்தச் சட்டத்திற்கு உடனடிமுன்பு, நடைமுறையில் உள்ளவாறு இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்க தீர்வு செய்யப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக, கட்டடத்தின் உரிமையாளர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், நேர்விற்கேற்ப, உரிமம் வழங்குதல் அல்லது புதுப்பித்தல் அல்லது மேல்முறையீடு அல்லது சீராய்விற்கான நிலுவையிலுள்ள அத்தகைய விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் (1) ஆம் உட்பிரிவின்கீழ் இணையவழி வாயிலின் மூலமாக, உரிமத்திற்கான புதிய விண்ணப்பத்தைச் செய்யலாம்.
5. ஆய்வு.- (1) தகுதிவாய்ந்த அலுவலரானவர், ஒரு பொதுக் கட்டடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மையின் மீதான சந்தேகத்தின் நேர்வில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், தகுதிவாய்ந்த அலுவலரால் அமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப குழுவைக் கொண்டு அத்தகைய பொதுக் கட்டடத்தின் ஆய்வை நடத்தச் செய்தல் வேண்டும்.
(2) அத்தகைய ஆய்விற்குப் பின்பு, வகுத்துரைக்கப்—
படலாகும் அத்தகைய படிவத்தில், அத்தகைய காலத்திற்குள்ளும், அத்தகைய முறையிலும் தகுதிவாய்ந்த அலுவலரிடம் தொழில்நுட்ப குழு அறிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.
(3) தொழில்நுட்பக் குழுவின் அறிவிக்கையின் அடிப்படையில், தகுதிவாய்ந்த அலுவலரானவர், கட்டடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மையை பராமரிப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அத்தகைய பிற வரையறைகள் மற்றும் நிபந்தனைகளைச் செய்யலாம் அல்லது அது பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய பிற ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.".
6 ஆம் மற்றும் 7 4. முதன்மைச் சட்டத்தின் 6ஆம் மற்றும் 7ஆம் பிரிவுகளானது
ஆம் பிரிவுகளை விட்டுவிடப்படுதல் வேண்டும்.
விட்டுவிடுதல்.
9 ஆம் பிரிவிற்கான 5. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்கான
திருத்தம்.
இரண்டாம் வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு10 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவின் (iv) கூறில், "உரிமம் வழங்கப்பட்டது" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "5 ஆம் பிரிவின்கீழ் சுட்டப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அல்லது பிறவாறு" எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்.
11 ஆம் பிரிவிற்கான
7. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பிற்காக, பின்வரும் ஓரத்தலைப்பானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"10 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட ஆணைக்கெதிரான
மேல்முறையீடு.",
(2) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) 10 ஆம் பிரிவின்கீழ் தகுதிவாய்ந்த அலுவலரின் ஆணையினால் பாதிக்கப்பட்ட நபரெவரும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள், வருவாய் நிர்வாக ஆணையரிடம் மேல்முறையீடு செய்யலாம்:
வரம்புரையாக, மேல்முறையீட்டை உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாததற்கு மேல்முறையீட்டாளரிடம் போதுமான காரணம் இருப்பதாக மேல்முறையீட்டு அலுவலரானவர், மனநிறைவடைந்தால், அத்தகைய மேல்முறையீடு எதையும் தாக்கல் செய்வதற்கு மேலும், ஒரு மாதத்திற்கு மிகாத கால அவகாசத்தை தனது நீதிமுறை விருப்புரிமையின் படி அனுமதிக்கலாம்.".
12 ஆம் பிரிவினை
8. முதன்மைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்
விட்டுவிடுதல்.
வேண்டும்.
13 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
9. முதன்மைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவில், "வருவாய் வாரியம்" எனும் சொற்றொடரானது காணப்படுகிற இடங்களில், "அரசு" எனும் சொல் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
14 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
10. முதன்மைச் சட்டத்தின் 14 ஆம் பிரிவில், "5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
15 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
11. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில், (4) ஆம் உட்பிரிவில், "வருவாய் வாரியம்" எனும் சொற்றொடருக்காக, "அரசு" எனும் சொல் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
16 ஆம் பிரிவிற்கான
12. முதன்மைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவிற்கு
திருத்தம்.
பின்பு, பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும். அதாவது:-
"(3) பொறியாளர் எவரும், கட்டடத்தினை முறையான ஆய்வு செய்யாமல், கட்டமைப்பு உறுதித்தன்மை சான்றிதழை வழங்கினாலோ அல்லது போதாத அல்லது பொய்யான தரவின் அடிப்படையில் கட்டடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மை பற்றி அறிந்தே தவறான சான்றிதழை வழங்கினாலோ,-
(i) அத்தகைய பொறியாளர், இரண்டு இலட்சம் ரூபாய்க்கு மிகாத
தண்டத்தொகைக்கு பொறுப்புடையவராகுதல் வேண்டும்;
(ii) அத்தகைய பொறியாளரின் பதிவானது, தொடர்புடைய மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த அலுவலரால், பராமரிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட பொறியாளர் தேர்ந்த பெயர்ப்பட்டியலிலிருந்து உடனடியாக நீக்கப்படுதல் வேண்டும்;மற்றும்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5 (iii) அத்தகைய பொறியாளர், அரசு அல்லது உள்ளாட்சி அமைப்புகளின்கீழ் பணிகள் எதனையும் மேற்கொள்வதிலிருந்து விலக்கி வைத்தல் வேண்டும்:
வரம்புரையாக, அத்தகைய பொறியாளருக்கு கேட்பதற்கான வாய்ப்பொன்றை வழங்காமல் இந்த உட்பிரிவின்கீழ் ஆணை எதுவும் செய்யப்படுதலாகாது.".
21 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
13. முதன்மைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவில், "இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) 21 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
25 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
14. முதன்மைச் சட்டத்தின் 25 ஆம் பிரிவின், (3) ஆம் உட்பிரிவின் (a) கூறில் உள்ள, "புனித ஜார்ஜ் கோட்டை அரசிதழ்" எனும் சொற்றொடருக்காக "தமிழ்நாடு அரசிதழ்" சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை
தமிழ்நாடு அரசு, மின் ஆளுமையை ஊக்குவிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது மற்றும் இணையவழி வாயிலாக அரசு சேவைகளுக்கு போதுமான மேம்பட்ட அணுகலையும் வழங்குகிறது. இணையவழி திறந்த அணுகலை எங்கிருந்தும் செயல்படுத்துவதற்கும், "எவ்விடத்திலும் எந்நேரமும் சேவைகள்" பொது மக்களுக்கு கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்கும், சிக்கலான தன்மையைக் குறைப்பதன் மூலம் செயல்முறைகள் எளிமைப்படுத்தப்படுகிறது. எளிய ஆளுமையை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காக, அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, பொதுக் கட்டடங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்துவதற்காக, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் (உரிமம் வழங்குதல்) சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 13/1965) திருத்தம் செய்வதற்கு பரிந்துரை செய்துள்ளது.
2. அரசு, கூறப்பட்ட பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கிணங்க கூறப்பட்ட நோக்கங்களுக்காக, தமிழ்நாடு சட்டம் 13/1965ஐ தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
கே.என்.நேரு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 1(2), 3 மற்றும் 7 ஆம் பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, அறிவிக்கையை வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
கே.என்.நேரு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 92024-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 36/2024
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரிச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்தைந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி
மற்றும் அமைப்புகள் கேளிக்கைகள் வரி (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் 20/2017.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரிச் சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவில்,-
(a) (8) ஆம் கூறில், "அனுமதிக்காக கட்டணம்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, பின்வரும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"அல்லது நிறுவனம் எதனின் வளாகத்தில் அல்லது நுழைவுச்சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா அல்லது எந்த முறையிலேனும் வசூலிக்கப்படும் பிற கட்டணங்கள் எவற்றின் மூலமும் நபர்களின் அனுமதிக்காக கட்டணம் செலுத்த வேண்டிய பிற இடம் எதனிலும் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதிலும்." ;
(b) (10) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(10) "நிறுவனம்" என்பது, எந்தவொரு கல்வி நிறுவனம் அல்லது நிறுமம், சங்கம், குழுமம் அல்லது எப்பெயரிலும் அழைக்கப்படும் நபர்களின் பிற கழகம் எதனையும் உள்ளடக்கும்;";
(c) (11) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(11) "உள்ளாட்சி அமைப்பு" என்பது, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம் 9/1999) அமைத்துருவாக்கப்பட்ட அல்லது அமைத்துருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒரு மாநகராட்சி அல்லது ஒரு நகராட்சி மன்றம் அல்லது ஒரு பேரூராட்சி அல்லது 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம் 21/1994) அமைத்துருவாக்கப்பட்ட ஊராட்சி எதனுடைய அதிகாரவரம்பில் கேளிக்கைக்கு வகைசெய்யப்பட்டுள்ளதோ அவை என்று பொருள்படும்;"
(d) (16) ஆம் கூறில், "பிற விளையாட்டுத் தொடர் நடத்தும் எந்த நபரும் அல்லது நபர்களின் அமைப்பும்" எனும் சொற்றொடருக்கு பின்பு, "அல்லது பிற இசைநிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதனையும் நடத்தும், எந்த நபரும் அல்லது நபர்களின் அமைப்பும்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு3 ஆம் பிரிவிற்கான 3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(a) (1) ஆம் உட்பிரிவின் (h) இனத்திற்குப் பின்பு, பின்வரும் இனம்
சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(i) நிறுவனம் எதனின் வளாகத்தில் அல்லது பிற இடங்கள் எதனிலும் நடத்தப்படும் இசைநிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதுவும்.";
(b) (2) ஆம் உட்பிரிவில்,-
(i) (i) கூறில், இரு இடங்களில் காணப்படுகின்ற, "சிறப்பு நிலை நகராட்சிகள்" எனும் சொற்றொடருக்காக, "சிறப்பு நிலை நகராட்சி மன்றங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ii) விளக்கம் I மற்றும் II-க்காக பின்வரும் விளக்கம் மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"விளக்கம்.— (i) ஆம் கூறின் நோக்கங்களுக்காக,-
(a) "மாநகராட்சிகள்" என்பது, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம் 9/1999) அமைத்துருவாக்கப்பட்ட அல்லது அமைத்துருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் "மாநகராட்சிகள்" என்று பொருள்படும்;
(b) "சிறப்பு நிலை நகராட்சி மன்றங்கள்" என்பது, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் 9/1999) அமைத்துருவாக்கப்பட்ட அல்லது அமைத்துருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் நகராட்சி மன்றங்கள் மற்றும் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் 3 ஆம் விதியின் கீழ் சிறப்பு நிலை நகராட்சி மன்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை என்று பொருள்படும்.";
(c) 5 ஆம் உட்பிரிவின் (a), (b) மற்றும் (c) இனங்களுக்காக, பின்வரும்
இனங்கள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்; அவையாவன:-
மாதம் ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய்.
"(a) 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம் 9/1999) அமைத்துருவாக்கப்பட்ட அல்லது அமைத்துருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் மாநகராட்சிகளின் எல்லைகளுக்குள்;
மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய்.
(b) 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம் 9/1999) அமைத்துருவாக்கப்பட்ட அல்லது அமைத்துருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் நகராட்சி மன்றங்களின் எல்லைகளுக்குள்;
(c) 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் (தமிழ்நாடு சட்டம் 9/1999) அமைத்துருவாக்கப்பட்ட அல்லது அமைத்துருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் பேரூராட்சிகளின் எல்லைகளுக்குள்;
மாதம் ஒன்றுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்.";
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11(d) (9) ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(10) நிறுவனம் எதனின் வளாகத்தில் அல்லது பிற இடங்கள் எதனிலும் நடத்தப்படும் இசைநிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதனின் மீதான கேளிக்கைகள் வரியானது அனுமதிக்கான ஒவ்வொரு செலுத்தத்தின் மீது பத்து விழுக்காடு என்ற வீதத்தில் கணக்கிடப்படுதல் வேண்டும்.".
23 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், 1973 ஆம் ஆண்டு "குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டம் (மையச் சட்டம் 2/1974) எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா (மையச் சட்டம் 46/2023)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
29 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 29 ஆம் பிரிவின் (ii) ஆம் கூறில், "நகராட்சிகள்" எனும் சொற்றொடருக்காக, "நகராட்சி மன்றங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
30 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 30 ஆம் பிரிவில், "இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) 21 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 2-ஆம் பிரிவின் (28) ஆம் கூறு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரிச் சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 20/2017) அதில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. எனினும், கல்வி நிறுவனம் உள்ளடங்கலான எந்தவொரு நிறுவனத்தாலும், அனுமதிக்கான கட்டணத்தின் பேரில் நடத்தப்படும் இசைநிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது ஏதேனும் பிற நிகழ்ச்சிகள் மீது கேளிக்கைகள் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் அதிகாரமளிக்கும் எந்தவொரு வகைமுறையும் இல்லை. எனவே, அரசு, மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கும், அனுமதிக்கான கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் பத்து விழுக்காடு வீதத்தில் கேளிக்கைகள் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் தகுந்தவாறான வகைமுறைகளைச் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க, அரசு, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 20/2017-ஐ அந்த நோக்கத்திற்காக தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
கே.என்.நேரு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 132024-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 37/2024
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
மற்றும் (ஏழாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
2 ஆம் பிரிவிற்கான சட்டம் 21/1994.
திருத்தம்.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவில்,-
(i) (2) ஆம் கூறில், "தற்செயலாக நடத்தப்படும் தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "இடைக்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (19) ஆம் கூறில், "வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
9 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
13ஆம் பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின்,-
திருத்தம்.
(i) (1) ஆம் உட்பிரிவில்,-
(a) "வழக்கமான தேர்தல்கள்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) "வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத்
தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (2) ஆம் உட்பிரிவில், "வழக்கமான தேர்தல்கள்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
18ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு22ஆம் பிரிவிற்கான 6. முதன்மைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின்,-
திருத்தம்.
(i) (1) ஆம் உட்பிரிவில், "ஒரு வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "ஒரு பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (2) ஆம் உட்பிரிவில்,
(a) "ஒரு வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "ஒரு பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) "வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத்
தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
29ஆம் பிரிவிற்கான 7. முதன்மைச் சட்டத்தின் 29 ஆம் பிரிவின்,-
திருத்தம்.
(i) (1) ஆம் உட்பிரிவில், "ஒரு வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "ஒரு பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (2) ஆம் உட்பிரிவில்,-
(a) "ஒரு வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "ஒரு பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) "வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத்
தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
31ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 31 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
43ஆம் பிரிவிற்கான 9. முதன்மைச் சட்டத்தின் 43 ஆம் பிரிவின்,-
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவின் (b) கூறில், "ஒரு வழக்கமான அல்லது தற்செயலாக நடத்தப்படும் தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "ஒரு பொது அல்லது இடைக்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2) ஆம் உட்பிரிவில், "வழக்கமான தேர்தல்கள்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (3) ஆம் உட்பிரிவில், "ஒரு வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "ஒரு பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4) (5) ஆம் உட்பிரிவில், "வழக்கமான தேர்தல்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
261 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
10. முதன்மைச் சட்டத்தின் 261 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "வழக்கமான தேர்தல்கள்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
261-A பிரிவிற்கான
திருத்தம்.
11. முதன்மைச் சட்டத்தின் 261-A பிரிவில், "வழக்கமான தேர்தல்கள்" எனும் சொற்றொடருக்காக, "பொதுத் தேர்தல்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 15நோக்கக் காரண விளக்கவுரை
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை நிர்வகிக்கின்ற நடைமுறையிலுள்ள சட்டங்களை நீக்கறவு செய்து, ஒரு விரிவான சட்டம் அதாவது, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 9/1999) இயற்றப்பட்டது. கூறப்பட்ட சட்டத்தில், "வழக்கமான தேர்தல்" மற்றும் "தற்செயலாக நடத்தப்படும் தேர்தல்" எனும் சொற்றொடர்களுக்கு மாற்றாக, "பொதுத் தேர்தல்" மற்றும் "இடைக்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்" எனும் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் தொடர்பான சொற்கூறுகளின் பயன்பாட்டில் சீரான தன்மையை உறுதி செய்வதற்காகவும், அரசியல் கட்சிகள், அலுவலர்கள், பொது மக்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்களிடையே குழப்பத்தை தவிர்ப்பதற்காகவும், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 9/1999) "வழக்கமான தேர்தல்" மற்றும் "தற்செயலாக நடத்தப்படும் தேர்தல்" எனும் சொற்களுக்கு மாற்றாக, "பொதுத் தேர்தல்" மற்றும் "இடைக்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்" எனும் சொற்களாக, மாற்றங்கள் செய்யப்பட்டதன் அடிப்படையில், 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்திலும் (தமிழ்நாடு சட்டம் 21/1994) தேவையான திருத்தங்களைச் செய்ய, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது அரசிடம் கோரியுள்ளது.
2. அரசானது, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்சொன்ன முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடிவுசெய்து, அதற்கிணங்க, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 21/1994-ஐ தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்ட முன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
இ. பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
16 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 172024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 38/2024
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
33-ஆம் 27/1989.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச்சட்டம் என குறிப்பிடப்படுவதான) 33-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவில் உள்ள வரம்புரையில், "பதின்மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடருக்காக, "பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
.
செல்லுந்தன்மை 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும் சந்தைக் குழுக்களின் ஒரு தனி அலுவலரின் அதிகாரங்களை செலுத்தும் மற்றும் செயற்பணிகளை நிறைவேற்றும் நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி அத்தகைய தனி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாள் தொடங்கியும், தமிழ்நாடு அரசிதழில் இந்தச் சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் காலஅளவின் போது தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
18 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக்காரண விளக்கவுரை.
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவானது சந்தைக்குழு ஒன்றின் அலுவல்களை மேலாண்மை செய்ய, முறை ஒன்றுக்கு ஓர் ஆண்டிற்கு மிகாத கால அளவிற்கு தனி அலுவலர் ஒருவரை பணியமர்த்தம் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் கூறப்பட்ட கால அளவை நீட்டிப்பதற்கான ஆணையானது, மொத்தத்தில் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டு நடைமுறையில் இருத்தல் கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு, அரசால் அவ்வப்போது அத்தகைய கால அளவானது நீட்டிக்கப்படலாம். கூறப்பட்ட வகைமுறையின் விளைவாக, பல சந்தைக்குழுக்களுக்கு அதன் அலுவல்களை மேலாண்மை செய்ய தனி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். நடைமுறையில் இருக்கும் அத்தகைய நீட்டிப்பு ஆணையின் அதிகபட்ச கால அளவானது சட்டத்தின் 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையைத் திருத்துவதன் மூலம் மூன்று ஆண்டுகள் கால அளவிற்கு அப்பாலும் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டது. கடைசியாக, நடைமுறையில் இருக்கும் நீட்டிப்பு ஆணையின் அதிகபட்ச கால அளவானது, தமிழ்நாடு சட்டம் 28/2024-னால் பதின்மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறுமாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
2. திருச்சிராப்பள்ளி, கடலூர் மற்றும் தேனி ஆகிய மூன்று சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே மூன்று சந்தைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை, சட்டத்தின் 33-ஆம் பிரிவின்(1)-ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையின்கீழ் அனுமதிக்கப்பட்ட பதின்மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறுமாதங்களுக்கு அப்பால் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டிய கட்டாயத் தேவை இருந்தது.
3. அதற்கிணங்க, மூன்று சந்தைக்குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆண்டு கால அளவிற்கு நீட்டிப்பு செய்யும் வகையில், அதில் குறிப்பிடப்பட்ட காலத்தை பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களாக அதிகரிக்கவும், 2024-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதிக்கு அப்பால் மூன்று சந்தைக்குழுக்களின் தனி அலுவலர்களின் நடவடிக்கையை செல்லுந்தன்மையுடையதாக்கவும் தமிழ்நாடு சட்டம் 27/1989-ன் 33-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையினை திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
4. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 192024-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 39/2024
2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான
விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தை
திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
5 ஆம் பிரிவிற்கான 18/2014.
மாற்றீடு.
2. 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 5 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"5. உரிமம் வழங்குதல்.- (1) மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி, தங்கும் விடுதியை அல்லது காப்பகம் ஆகியவற்றை நிறுவ, பராமரிக்க அல்லது நடத்துவதற்கு விரும்பும் ஒவ்வொரு நபரும், தமிழ்நாடு அரசிதழில், அரசால் அறிவிக்கப்படலாகும் இணைய வலைவாயில் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும் சான்றிதழ்களுடன் சேர்த்து அத்தகைய மின்னணு வடிவத்தில் உரிமத்திற்கான விண்ணப்பம் ஒன்றை செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பம் ஒவ்வொன்றும் வகுத்துரைக்கப்படலாகும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்படாத அத்தகைய கட்டணத்துடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பத்துடன் சேர்த்து அளிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, உரிமம் தானாக உருவாக்கப்பட்டு மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் வடிவிலும் இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும். உரிமமானது வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து பத்து ஆண்டு காலஅளவிற்கு செல்லுந்தன்மை உடையதாக இருத்தல் வேண்டும்.
20 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(4) (1) முதல் (3) வரையிலான உட்பிரிவுகளில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், நேர்விற்கேற்ப, உரிமம் வழங்குவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் எதுவும் அல்லது உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை மாற்றம் செய்வதற்கான கோரிக்கை எதுவும், உரிமத்தை இரத்து செய்வதற்கு எதிரான மறுஆய்வு விண்ணப்பம் எதுவும் அல்லது உரிமத்தை வழங்க அல்லது புதுப்பிக்க மறுத்தலுக்கு அல்லது உரிமத்தை இரத்து அல்லது இடைநீக்கம் செய்வதற்கு எதிரான மேல்முறையீடு, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) திருத்தச் சட்டத்தின், தொடக்க தேதியன்று நிலுவையில் இருப்பின் அவை, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) திருத்தச் சட்டம் தொடங்கப்படுவதற்கு உடனடி முன்பு, நடைமுறையில் இருந்தாற்போன்ற இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கியவாறு தீர்வு செய்யப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, நேர்விற்கேற்ப, நிலுவையில் இருக்கும் அத்தகைய விண்ணப்பம், கோரிக்கை, மறுஆய்வு அல்லது மேல்முறையீடு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் திரும்பப் பெறப்படலாம் மற்றும் நேர்விற்கேற்ப, உரிமத்திற்கான புதிய விண்ணப்பம் அல்லது மாற்றத்திற்கான விண்ணப்பமானது (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டவாறு இணைய வலைவாயில் வழியாக செய்யலாம்.".
6 ஆம் பிரிவை
3. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்
விட்டுவிடுதல்.
வேண்டும்.
7 ஆம் பிரிவிற்கான
4. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவில் உள்ள (1) ஆம்
திருத்தம்.
உட்பிரிவிற்கான வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
8 ஆம் பிரிவிற்கான
5. முதன்மைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவிற்காக, பின்வரும்
மாற்றீடு.
பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"8. உரிமத்தை மாற்றியமைத்தல்,- (1) 5 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப்பிடப்பட்டவாறான, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி அல்லது தங்கும் விடுதி அல்லது காப்பகத்தின் அமைவிடத்தை மாற்றவோ அல்லது சேவை எதனின் நோக்கத்தையும் மாற்றவோ விரும்பும் உரிமதாரர் எவரும், 5 ஆம் பிரிவின்படி புதிய உரிமத்திற்காக விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும்.
(2) உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் விவரங்களை மாற்ற அல்லது தங்கியிருப்பவர்களின் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தேசித்துள்ள எந்தவொரு உரிமதாரரும் உரிமத்தை மாற்றுவதற்காக, 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் வழியாக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய சான்றிதழ்களுடன் சேர்த்து மின்னணு வடிவத்தில் விண்ணப்பம் செய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய இரண்டாயிரம் ரூபாய்க்கு மேற்படாத அத்தகைய கட்டணத்துடன் சேர்த்து இருத்தல் வேண்டும். சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, உரிமமானது தேவையான மாற்றங்களுடன் தானாக உருவாக்கப்பட்டு மற்றும் அத்தகைய முறையில் இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும்.".
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2110 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், "உரிமம் வழங்க மறுக்கின்ற அல்லது" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
11 ஆம் பிரிவிற்கான 7. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்காக பின்வரும்
மாற்றீடு.
உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"11. உரிமத்தை ஒப்படைத்தல்,- உரிமதாரர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு வடிவில் ஆறு மாதங்கள் அறிவிப்பு கொடுப்பதன் பேரில், உரிமத்தின் கூறப்பட்ட காலம் முடிவடையும்போது, 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் வழியாக, 5 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தை ஒப்படைப்பதற்கு விண்ணப்பிக்கலாம். அந்த நேரத்திற்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவம் மற்றும் அத்தகைய முறையில், அறிவிப்பு திரும்பப்பெறாவிட்டால், உரிமத்தின் செயல்பாடு அற்றுபோதல் வேண்டும் மற்றும் விடுதி, தங்கும் விடுதி அல்லது மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகம் செயல்படுவதையும் நிறுத்தல் வேண்டும்."
12 ஆம் பிரிவிற்கான 8. முதன்மைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (3) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(3) மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகமொன்றினைப் பதிவுசெய்யும் நோக்கத்திற்காக, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான அத்தகைய காப்பகத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர், 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட இணையவலை வாயில் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய சான்றிதழ்களுடன் சேர்த்து அத்தகைய மின்னணு படிவத்தில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும். அளிக்கப்பட்ட சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, பதிவு சான்றிதழ் தானாக உருவாக்கப்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் அத்தகைய வடிவத்திலும் இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும்.
(2) (4) ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
22 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக்காரண விளக்கவுரை.
சட்டமன்றப் பேரவையில், 2024-2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுக் கூட்டத்தொடரின் போது, மாண்புமிகு சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தனிநபர்களால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகளைப் பதிவுசெய்து உரிமம் வழங்குதலுக்கான நடைமுறையை எளிய நிர்வாக முயற்சியின் மூலம் எளிமைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். எளிய நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, அமைத்துருவாக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, மகளிர் மற்றும் கு ழந்தைகளுக்கான விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் காப்பகங்களுங்கு உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தைத் (தமிழ்நாடு சட்டம் 18/2014) திருத்தம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. மேற்கூறப்பட்டவைக்கு, 29.10.2024 தேதியிட்ட சமூகநலன் - மகளிர் உரிமைத்துறையின் அரசாணை (நிலை) எண். 80இன் மூலம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. கூறப்பட்ட அரசாணைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு, கூறப்பட்ட சட்டத்தை திருத்துவது அவசியமாகிறது.
2. அதற்கிணங்க, கூறப்பட்ட நோக்கத்திற்காக, தமிழ்நாடு சட்டம் 18/2014ஐ தக்கவாறு திருத்தம் செய்வதென அரசு, முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்டமுடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
பி. கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 23சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 1(2), 2, 5, 7 மற்றும் 8 ஆம் பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
பி. கீதா ஜீவன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
24 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 252024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 40/2024
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்
மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 1 ஆம் நாள் அன்று
நடைமுறைக்கு வந்ததாக கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
128-A எனும் 19/2017.
புதிய பிரிவை
உட்புகுத்துதல்.
2. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 128 ஆம் பிரிவிற்குப் பின்பு பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"128-A. 73 ஆம் பிரிவின்கீழ் எழுப்பப்பட்ட கேட்புகள் தொடர்புடைய வட்டி அல்லது தண்டத்தொகை அல்லது இரண்டையும், குறித்த சில கால அளவுகளுக்கு வரிதள்ளுபடி செய்தல்.- (1) இந்தச் சட்டத்தில் உள்ளடங்கியதற்கு மாறாக எது எவ்வாறிருப்பினும், -
(a) 73 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பு அல்லது 73 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை மற்றும் 73 ஆம் பிரிவின் (9) ஆம் உட்பிரிவின்கீழ் எந்தவொரு ஆணையும் வெளியிடப்படாதிருப்பின்; அல்லது
(b) 73 ஆம் பிரிவின் (9) ஆம் உட்பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் 107 ஆம் பிரிவின் (11) ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 108 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை எதுவும் பிறப்பிக்கப்படாதிருப்பின்; அல்லது
(c) 107 ஆம் பிரிவின் (11) ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 108 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் 113 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை எதுவும் பிறப்பிக்கப்படாதிருப்பின்,
இவற்றிற்கிணங்கி வரி விதிப்பிற்குள்ளான நபரால்,
வரித்தொகை எதுவும் செலுத்தத்தக்கதாய் இருக்குமிடத்து, 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான கால அளவு தொடர்புடைய அல்லது அதன் பகுதிக்கு, மற்றும் மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும், அத்தகைய தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ, கூறப்பட்ட நபர், நேர்விற்கேற்ப (a) கூறு, (b) கூறு அல்லது (c) கூறில் சுட்டப்பட்ட அறிவிப்பு அல்லது அறிக்கை அல்லது ஆணையின்படி முழுத்தொகையையும் செலுத்துவாராயின், 50 ஆம் பிரிவின்படி வட்டி மற்றும் இந்தச் சட்டத்தின்படி தண்டத்தொகை எதுவும் செலுத்தப்பட வேண்டியதில்லை மற்றும் நேர்விற்கேற்ப, கூறப்பட்ட அறிவிப்பு அல்லது அறிக்கை அல்லது ஆணையைப் பொறுத்து அனைத்து நடவடிக்கைகளும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகளுக்கு உட்பட்டு முடித்து வைக்கப்படுவதாக கருதப்படுதல் வேண்டும்:
26 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுவரம்புரையாக, 74 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து மற்றும், மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் பணிப்புரையினை பின்பற்றி உரிய அலுவலரால், 75 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு இணங்கி, ஓர் ஆணை பிறப்பிக்கப்படுமாயின் அல்லது பிறப்பிக்கப்பட வேண்டுமாயின், கூறப்பட்ட அறிவிப்பு அல்லது ஆணை, இந்த உட்பிரிவின் (a) கூறு அல்லது (b) கூறில் சுட்டப்பட்டவாறு நேர்விற்கேற்ப, ஓர் அறிவிப்பு அல்லது ஓர் ஆணையாக கருதப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக, இந்த உட்பிரிவின்கீழ் நடவடிக்கைகளின் முடிவானது, (b) கூறு அல்லது (c) கூறில் சுட்டப்பட்ட ஆணைக்கு எதிராக, அல்லது முதலாம் வரம்புரையில் சுட்டப்பட்ட மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் பணிப்புரைகளுக்கு எதிராக, 107 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 112 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்குமிடத்து, அல்லது 117 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 118 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் மாநில வரி அலுவலரால் ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருக்குமிடத்து அல்லது 108 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்குமிடத்து,
அந்நேர்வுகளில், நேர்விற்கேற்ப, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் அல்லது சீராய்வு அதிகார அமைப்பின் ஆணைக்கு இணங்கி கூடுதலாக செலுத்தத்தக்க வரித்தொகை ஏதேனும் இருப்பின், அதனை அந்நபர், கூறப்பட்ட ஆணையின் தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள், செலுத்துவார் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்:
மேலும், வரம்புரையாக, அத்தகைய வட்டி மற்றும் தண்டத்தொகை
ஏற்கனவே செலுத்தப்பட்டிருக்குமிடத்து, அதனை திரும்ப பெற முடியாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் உள்ளடங்கியுள்ள எதுவும் தொகையை தவறாக திரும்பப்பெறும் நபரால் செலுத்தப்படும் தொகை எதற்கும் பொருந்துதல் ஆகாது.
(3) நேர்விற்கேற்ப, கூறப்பட்ட நபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு அல்லது நீதிப்பேராணை மனு, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் இருக்குமாயின் மற்றும் அது (1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கூறப்பட்ட நபரால் திரும்ப பெறப்படாதிருக்குமாயின், அத்தகைய நேர்வுகளில், 1 ஆம் உட்பிரிவில் உள்ளடங்கியுள்ள எதுவும் பொருந்துதல் கூடாது.
(4) இந்தச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், (1) ஆம் உட்பிரிவின்கீழ் குறிப்பிடப்பட்ட தொகை எதுவும், செலுத்தப்பட்டு மற்றும் நடவடிக்கைகள் கூறப்பட்ட உட்பிரிவின்கீழ் முடிக்கப்பட்டுவிட்டதாக கருதப்படுகின்றபோது, நேர்விற்கேற்ப, (1) ஆம் உட்பிரிவின் (b) கூறு அல்லது (c) கூறில் சுட்டப்பட்டுள்ள ஓர் ஆணைக்கு எதிராக, 107 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 112 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் எந்தவொரு மேல்முறையீடும் தாக்கல் செய்யப்படுதல் ஆகாது.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 27நோக்கக் காரண விளக்கவுரை
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 19/2017), மாநிலத்திற்குள் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இவ்விரண்டின் வழங்குகைகளின் மீது மாநில அரசால் வரிவிதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் வகைசெய்கிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றமானது, செப்டம்பர் 09, 2024 அன்று நடைபெற்ற அதன் 54 ஆவது கூட்டத்தில், மற்றவற்றுக்கிடையில், தவறான திரும்பப்பெறுதல் தொடர்பான கேட்பு அறிவிப்புகளைத் தவிர, 2017-2018, 2018-2019 மற்றும் 2019-2020 ஆம் நிதி ஆண்டுகளுக்காக, 2017 ஆம் ஆண்டு மையச் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் (மையச் சட்டம் 12/2017) மற்றும் மாநில சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட கேட்பு அறிவிப்புகள் தொடர்பான வட்டி மற்றும் தண்டத்தொகையை நிபந்தனையுடன் தள்ளுபடி செய்யவும் கூறப்பட்ட பரிந்துரையை 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 1 ஆம் நாள் அன்று முதல் நிறைவேற்றவும் பரிந்துரைத்தது.
2. கூறப்பட்ட பரிந்துரைக்கு செயல்வடிவம் கொடுக்க, 2017 ஆம் ஆண்டு மையச் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது, 2024 ஆம் ஆண்டு நிதிச் (எண்.2) சட்டத்தின் (மையச் சட்டம் 15/2024) 146 ஆம் பிரிவின் மூலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்புடைய திருத்தத்தை மேற்கொள்வதற்காக, அரசானது, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 19/2017) தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
பி. மூர்த்தி,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
28 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 1(2) மற்றும் 2 ஆம் பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்ட நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
பி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 292024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 41/2024
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள்
மற்றும் மற்றும் சேவைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) 2 மற்றும் 3 ஆம் பிரிவுகளானது 2025 –ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும் மற்றும் 4 ஆம் பிரிவானது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2-ஆம் 19/2017.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவில், (61) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(61) "உள்ளீடு சேவை விநியோகிப்பவர்" என்பது 25 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள தனித்த நபர்களுக்கு அல்லது அவர்கள் சார்பாக, 9 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்படி வரிவிதிக்கப்படும் சேவைகள் தொடர்பான விலைப்பட்டியல்கள் உள்ளடங்கலான, உள்ளீடு சேவைகள் பெறுவதன் பொருட்டு வரி விலைப்பட்டியல்கள் பெறும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்கும் சேவை வழங்குநரின் அலுவலகம் என்று பொருள்படும் மற்றும் 20 ஆம் பிரிவில் வகைசெய்யப்பட்டுள்ள முறையில் அத்தகைய விலைப்பட்டியல்கள் தொடர்பான உள்ளீடு வரி வரவினை பகிர்ந்தளிக்கும் பொறுப்பையுடையதாகும்;".
20 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 20 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
பிரிவிற்கான மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
மாற்றீடு.
"20. உள்ளீடு சேவை விநியோகிப்பவரால் வரவினை பகிர்ந்தளிக்கும் முறை.- (1) 25 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள தனித்த நபர்களுக்கு அல்லது அவர்கள் சார்பாக, 9 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்படி வரிவிதிக்கப்படும் சேவைகள் தொடர்பான விலைப்பட்டியல்கள் உள்ளடங்கலான, உள்ளீடு சேவைகள் பெறுவதன் பொருட்டு வரி விலைப்பட்டியல்கள் பெறும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குநரின் அலுவலகம் எதுவும், 24 ஆம் பிரிவின் (viii) கூறின்கீழ் உள்ளீடு சேவை விநியோகிப்பவராக பதிவு பெறுவதற்கு வேண்டுறுத்தப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய விலைப்பட்டியல்கள் தொடர்பான உள்ளீட்டு வரி வரவை பகிர்ந்தளித்தல் வேண்டும்.
(2) உள்ளீடு சேவை விநியோகிப்பவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மற்றும் அத்தகைய காலத்திற்குள், அத்தகைய முறையில், கூறப்பட்ட உள்ளீடு சேவை விநியோகிப்பவராக அதே மாநிலத்தில் பதிவு பெற்ற ஒரு தனித்த நபரால் செலுத்தப்பட்ட, 9 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்கீழ் வரி விதிப்பிற்கு உட்பட்ட சேவைகள் தொடர்பான மாநில மற்றும் ஒருங்கிணைந்த வரி வரவு உள்ளடங்கலாக, அவரால் பெறப்பட்ட விலைப்பட்டியல் மீது விதிக்கப்பட்ட மாநில வரி அல்லது ஒருங்கிணைந்த வரி வரவை பகிர்ந்தளித்தல் வேண்டும்.
30 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(3) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், உள்ளீடு வரி வரவுத் தொகையை உள்ளடக்கியுள்ள ஒரு ஆவணத்தை அளிப்பதன் மூலமாக மாநில வரியின் வரவினை, மாநில வரியாகவோ அல்லது ஒருங்கிணைந்த வரியாகவோ மற்றும் ஒருங்கிணைந்த வரியினை ஒருங்கிணைந்த வரியாகவோ அல்லது மாநில வரியாகவோ விநியோகிக்கப்படுதல் வேண்டும்.".
122A எனும்
4. முதன்மைச் சட்டத்தின் 122 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"122A. சிறப்பு நடைமுறையின் படியான சரக்குகளின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட சில இயந்திரங்களை பதிவு செய்யத் தவறியமைக்கு தண்டம்.- (1) இந்தச் சட்டத்தில் உள்ளடங்கிய எது எவ்வாறிருப்பினும், 148 ஆம் பிரிவின்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ள இயந்திரங்களை பதிவு செய்வது தொடர்பான, எந்தவொரு சிறப்பு நடைமுறையையும் பொறுத்த வகையிலான சரக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நபரும், கூறப்பட்ட சிறப்பு நடைமுறைக்கு முரணாக செயல்படுகிறாரெனில், அவர், அத்தியாயம் XV-இன் படி அல்லது இந்த அத்தியாயத்தின் பிற வகையங்கள் எதன்படியும் அவரால் செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டியதுடன் கூடுதலாக, அவ்வாறு பதிவு செய்யப்படாத ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய் தொகைக்கு சமமான ஒரு தண்டத்தை செலுத்த பொறுப்புடையவராதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படியான தண்டத்துடன் கூடுதலாக, அவ்வாறு பதிவு செய்யப்படாத ஒவ்வொரு இயந்திரமும், கைப்பற்றுகை மற்றும் பறிமுதலுக்கு உள்ளாதல் வேண்டும்:
வரம்புரையாக,
(a) அவ்வாறு விதிக்கப்பட்ட தண்டம் செலுத்தப்பட்டு விட்டதெனில்;
மற்றும்
(b) தண்டத்திற்கான ஆணை பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் அத்தகைய இயந்திரத்தின் பதிவு, சிறப்பு நடைமுறைக்கு இணங்கிய வகையில், செய்யப்பட்டுள்ளதெனில்,
அத்தகைய இயந்திரம் பறிமுதல் செய்யப்படுதல் கூடாது.".
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 31நோக்கக் காரண விளக்கவுரை
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது, (தமிழ்நாடு சட்டம் 19/2017), மாநிலத்திற்குள் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இவ்விரண்டின் வழங்குகைகளின் மீது மாநில அரசால் வரிவிதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் வகைசெய்கிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 50 மற்றும் 52- வது கூட்டங்களில், மற்றவற்றுக்கிடையில், 2017-ஆம் ஆண்டு மையச் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தில், (மையச் சட்டம் 12/2017) திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைத்தது. மேற்கூறிய பரிந்துரைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க, மைய அரசானது, 2024-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் (மையச் சட்டம் 8/2024) 11 முதல் 13 வரையிலான பிரிவுகள் வழியாக, 2017 ஆம் ஆண்டு மையச் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை திருத்தம் செய்துள்ளது. கூறப்பட்ட திருத்தத்திற்கேற்ப, 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 19/2017) தக்கவாறு திருத்தம் செய்யப்படுதல் வேண்டும். அதற்கிணங்க, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 19/2017-ஐ தக்கவாறு திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
பி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
32 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 3 ஆம் பிரிவு குறித்துரைக்கப்பட்ட நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
பி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 332024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 42/2024
1923 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக
மற்றும் தொடக்கம்.
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
5-ஆம் VII/1923.
பிரிவிற்கானத்
திருத்தம்.
2. (இதன் பின்பு இதில், முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1923 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவின் (a) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(a) மனச் சீர்கேடுற்றவர்;".
40-ஆம்
பிரிவிற்கானத்
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 40 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், "அல்லது காது கேளாத – வாய் பேசாதவர் அல்லது தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
34 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை.
இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் புது டெல்லியிலுள்ள இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை ஆகியன, மாநில சட்டங்களை தகுந்தவாறு திருத்தம் செய்வதன்மூலம், தொழுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கெதிரான, பாகுபாட்டினை நீக்க வேண்டும் என கோரியுள்ளன. மேலும், 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் (மையச் சட்டம் 49/2016) வகைமுறையின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளை நீக்குவதையும் சமூகத்தில் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு சம வாய்ப்பினை வழங்குவதையும் உறுதி செய்வது அரசின் கடமையாகும். எனவே, காது கேளாத – வாய் பேசாத அல்லது தொழு நோயால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கு, 1923 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் VII/1923), 5 மற்றும் 40 ஆம் பிரிவுகளை திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.
2. இச்சட்ட முன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
முனைவர். கோவி. செழியன், உயர்கல்வித்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 352024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2024
2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார்
மற்றும் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) (a) 5 ஆம் பிரிவைத் தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளும்
உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) 5 ஆம் பிரிவானது,-
(i) இணைப்புப் பட்டியலின் வரிசை எண் 1-ற்கு எதிரான பதிவுகளுடன் தொடர்புடையதாக உள்ளதைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 20 ஆம் நாள் முதற்கொண்டு;
(ii) இணைப்புப் பட்டியலின் வரிசை எண் 2-ற்கு எதிரான பதிவுகளுடன் தொடர்புடையதாக உள்ளதைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25 ஆம் நாள் முதற்கொண்டு;
(iii) இணைப்புப் பட்டியலின் வரிசை எண்கள் 3, 4 மற்றும் 5-ற்கு எதிரான பதிவுகளுடன் தொடர்புடையதாக உள்ளதைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 26 ஆம் நாள் முதற்கொண்டு;
(iv) இணைப்புப் பட்டியலின் வரிசை எண் 6-ற்கு எதிரான பதிவுகளுடன் தொடர்புடையதாக உள்ளதைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டு மே திங்கள் 27 ஆம் நாள் முதற்கொண்டு;
(v) இணைப்புப் பட்டியலின் வரிசை எண் 7-ற்கு எதிரான பதிவுகளுடன் தொடர்புடையதாக உள்ளதைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 26 ஆம் நாள் முதற்கொண்டு;
(vi) இணைப்புப் பட்டியலின் வரிசை எண் 8-ற்கு எதிரான பதிவுகளுடன் தொடர்புடையதாக உள்ளதைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 15 ஆம் நாள் முதற்கொண்டு,
நடைமுறைக்கு வருவதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
36 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு2 ஆம் பிரிவிற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
14/2019.
2. 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவில்,-
(1) (r) கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(2) (t) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(tt) "NMC" என்பது, 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின்கீழ் (மையச் சட்டம் 30/2019) அமைத்துருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் என்று பொருள்படும்;";
(3) (w) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(w) "தனியார் பல்கலைக்கழகம்" என்பது, 9 ஆம் பிரிவின் கீழ்
அமைத்துருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் என்று பொருள்படும்;";
(4) (y) கூறில், "MCI" எனும் சொற்றொடருக்காக "NMC" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) மாநிலச் சட்டமன்ற சட்டத்தின் வாயிலாக, ஏதேனும் ஆதரவளிக்கும் அமைப்பின் மூலம், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு அரசு அனுமதிக்கலாம்.".
9 ஆம் பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"9. "இணைப்புப் பட்டியலில் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்த்தல்.- ஆதரவளிக்கும் அமைப்பானது, கருத்துரு கடிதத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளது என அரசு மனநிறைவு அடைவதன் பேரில், மாநிலச் சட்டமன்ற சட்டத்தின் வாயிலாக, தனியார் பல்கலைக்கழகத்தின் பெயருடன் சேர்த்து, அதன் அமைவிடம் மற்றும் அதன் ஆதரவளிக்கும் அமைப்பின் விபரங்கள் ஆகியவற்றை, இணைப்புப் பட்டியலில் சேர்த்தல் வேண்டும்.".
இணைப்புப்
பட்டியலுக்கான
மாற்றீடு.
5. முதன்மைச் சட்டத்தின் இணைப்புப் பட்டியலுக்காக, பின்வரும் இணைப்புப் பட்டியலானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :-
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 37"இணைப்புப்பட்டியல்.
[9 ஆம் பிரிவைக் காண்க]
| வரிசை எண் | தனியார் பல்கலைக்கழகத்தின் பெயர் மற்றும் அமைவிடம் (முகவரி). | ஆதரவளிக்கும் அமைப்பின் பெயர் மற்றும் முகவரி. | ஆதரவளிக்கும் அமைப்பின் பதிவு விபரங்கள். |
| (1) | (2) | (3) | (4) |
| 1. | தனலெஷ்மி சீனிவாசன் பல்கலைக்கழகம், என்.ஹெச்.45, திருச்சி சென்னை பெருவழிச்சாலை, (சமயபுரம் சுங்கச்சாவடி அருகில்), சமயபுரம் அஞ்சல், மண்ணச்சநல்லூர் தாலுகா, திருச்சி மாவட்டம் – 621 112. | திருவாளர். தனலெஷ்மி சீனிவாசன் அற மற்றும் கல்வி நிறுவனம், 274/சி, துறையூர் ரோடு, பெரம்பலூர் – 621 212. | தமிழ்நாடு, பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 21.01.1994 அன்று புத்தக எண். 4இல், எண். 3/1994, தொகுதி – 38, பக்கங்கள் 111-118-இன் படி அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. |
| 2. | பல்கலைக்கழகம், ஸ்ரீஅனுசுயா சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கீழ்இடையலம் கிராமம் மற்றும் அஞ்சல் திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம் – 604 302. | ஆழ்வார்கள் ஆய்வு மையம், எண்-1, முதல் பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர், அடையாறு, சென்னை – 600 020. | தமிழ்நாடு, அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் 12.01.2017 அன்று புத்தக எண்-IVஇல், எண் 7/2017 இன் படி அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. |
| 3. | ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம். | ஏ.ஆர்.ஆர். அறநிறுவனம், எண் 31/B, ஜவகர்லால் நேரு சாலை, (100 அடி ரோடு) திருநகர், வடபழனி, சென்னை– 600 026. | தமிழ்நாடு, சென்னை கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 18.07.2012 அன்று புத்தகம் 4-இல் எண் 525/2012– இன்படி அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. |
| 4. | என் எம் வி பல்கலைக்கழகம், முத்துராமலிங்கபுரம் கிராமம், அருப்புக்கோட்டை தாலுகா, விருதுநகர் மாவட்டம். | வீரையன் சரஸ்வதி அறநிறுவனம், எண் 103, பழைய எண் 51, சம்பத் நகர், பிரதான சாலை, ஈரோடு– 638 011. | தமிழ்நாடு, ஈரோடு இணை 1- இன், இணை-2 சார்பதிவாளர் அலுவலகத்தில் 27.07.2015 அன்று புத்தகம் IV-இல் 169 / 2015– இன்படி அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டது. |
| 5. | ஜேப்பியார் பல்கலைக்கழகம், செம்மஞ்சேரி கிராமம், சோழிங்கநல்லூர் தாலுகா, சென்னை மாவட்டம் – 600 119. | ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை, புதிய எண். 29 A, பழைய எண். 12, கணபதி தெரு, இராயபேட்டை, சென்னை-600 014. | தமிழ்நாடு, சென்னை மத்திய இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் 05.05.1987 அன்று புத்தகம் 4, தொகுதி 16, பக்கங்கள் 163 முதல் 173-வரையில், எண்.100 / 1987– இன்படி அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. |
| 6. | தக்க்ஷஷீலா பல்கலைக்கழகம், ஓங்கூர் (போஸ்ட்), திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்- 604 305. | மயிலம் சுப்ரமணியசுவாமி நிறுவனம், எண் 54, மீனாட்சி நகர், பூந்தோட்டம், விழுப்புரம் -605 602. | இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் துறை, மைய அமைச்சகம், மையப் பதிவு, நிறுமங்களின் பதிவாளர் அலுவலகத்தில் 13.10.2020 அன்று 2013ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டம் (மையச் சட்டம் 18/2013) இன்கீழ் நிறுமமாகப் பதிவு செய்யப்பட்டு, பெருநிறுவன அடையாள எண் U 8 0 9 0 0 T N 2 0 2 0 N P L 1 3 8 6 0 0 வழங்கப்பட்டுள்ளது. |
| 7. | ஜாய் பல்கலைக்கழகம், ராஜா நகர், அழங்கானேரி, வடக்கன்குளம், ராதாபுரம் தாலுகா திருநெல்வேலி மாவட்டம்-627 116. | செல்வம் கல்வி மற்றும் அறக்கட்டளை, ராஜா நகர், வடக்கன்குளம், திருநெல்வேலி, தமிழ் நாடு-627 116. | பனங்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் I தொகுதி 663–இல் எண்.712/ 1985–இன்படி அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது. |
| 8. | செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம், கீழத்தனூர் கிராமம், திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்- 604 305. | செயின்ட் அல்போன்சா அறக்கட்டளை, கே.எம்.எம்.சி செயின்ட் தேவசகாயம் நகர், முட்டம்-இரணியல் சாலை, முட்டம், கன்னியாகுமரி மாவட்டம் -629 202. | தமிழ்நாடு, மனவளக்குறிச்சி, வடசேரி, சார் பதிவாளர் அலுவலகத்தில் 30.03.2011 அன்று புத்தகம் IV எண்.76/2011– இன்படி அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டது.". |
| செல்லுபடித்தன்மை. 6. நீதிமன்றம் எதனின் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஜனவரி 20, 2021 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி-II-2 ஆம் பிரிவில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/HE/53(a)/2021, பிப்ரவரி 25, 2021 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி-II-2 ஆம் பிரிவில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/HE/132(c)/2021, பிப்ரவரி 26, 2021 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி-II-2 ஆம் பிரிவில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/HE/132(i)/2021, பிப்ரவரி 26, 2021 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி-II-2 ஆம் பிரிவில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/HE/132(j)/2021, பிப்ரவரி 26, 2021 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி-II-2 ஆம் பிரிவில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/HE/132(k)/2021, மே 27, 2022 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி-II-2 ஆம் பிரிவில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/HE/411(f)/2022, ஜூலை 26, 2022 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி-II-2 ஆம் பிரிவில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/HE/609(c)/2022 மற்றும் மார்ச்சு 15, 2024 ஆம் தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி-II-2 ஆம் பிரிவில் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/HE/185(d)/2024 தொடர்பாக, மேற்சொன்ன அறிவிக்கைகள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து தமிழ்நாடு அரசிதழில், இந்தச் சட்டம் வெளியிடப்பட்ட தேதி வரையில், செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட செயல்கள் அல்லது நடவடிக்கைகள் அனைத்தும், நோக்கங்கள் அனைத்திற்காக, 5 ஆம் பிரிவினால் மாற்றாக அமைக்கப்பட்டவாறு இணைப்புப் பட்டியலானது, அத்தகைய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட அனைத்து தேவையான நேரங்களிலும் நடைமுறையில் இருந்தாற் போன்று சட்டத்திற்கு இணங்க, எப்பொழுதும் செல்லத்தக்கதாக செய்யப்பட்டது அல்லது எடுக்கப்பட்டது என்று கருதப்படுதல் வேண்டும். |
நோக்க காரண விளக்கவுரை.
2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், (தமிழ்நாடு சட்டம் 14 / 2019) அதன் இணைப்புப் பட்டியலில் பல்கலைக்கழகத்தின் பெயர், அதன் அமைவிடம் மற்றும் ஆதரவளிக்கும் அமைப்பின் விபரங்களைச் சேர்ப்பதன் மூலம், ஆதரவளிக்கும் அமைப்பு எதனாலும், ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான அனுமதி அளிப்பதற்கு அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது. உறுதிக் கடிதத்தின் நிபந்தனைகளை ஆதரவளிக்கும் அமைப்பு பூர்த்தி செய்திருக்கிறது என மனநிறைவு கொண்ட பின்னர், அரசால், இணைப்புப் பட்டியலைத் திருத்தம் செய்வதற்குக் கூறப்பட்ட சட்டத்தின் 9 ஆம் பிரிவு வகைசெய்கிறது. அதற்கிணங்க, அறிவிக்கைகளின் வாயிலாக அதை திருத்தம் செய்து இணைப்புப் பட்டியலில் இதுவரை எட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2. பல்கலைக்கழக மானியக் குழுவானது, 1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுச் சட்டத்தின் (மையச் சட்டம் III/1956) 2(f) பிரிவின்கீழ், ஒரு பல்கலைக்கழகம், நாடாளுமன்றத்தின் சட்டத்தாலோ அல்லது மாநிலச் சட்டமன்றப் பேரவையின் சட்டத்தாலோ நிறுவப்படலாம் என்று எடுத்துரைக்கிறது. மேலும் இணைப்புப்பட்டியலின் சட்டத் திருத்தமானது, மாநிலச் சட்டமன்றப் பேரவையின் சட்டத்தால் செய்யப்படுதல் வேண்டுமேயன்றி, மாநில அரசால் அறிவிக்கை வெளியிடுவதன் வாயிலாக செய்யப்படுதல் கூடாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு எடுத்துரைக்கிறது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழுவானது மாநிலச் சட்டமன்றத்தின் சட்டத்தின் மூலம் இணைப்புப்பட்டியலில் அவற்றின் பெயர்களை சேர்ப்பதன் மூலம் மேற்சொன்ன தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுமாறு கோரியது.
3. மேற்கூறியதன் காரணமாக, அச்சட்டத்தின் இணைப்புப்பட்டியலில் கூறப்பட்ட எட்டு தனியார் பல்கலைக்கழகங்களையும் சேர்ப்பதற்கு, 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 14/2019) தக்கவாறு திருத்தம் செய்யவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்கிய வகையில், கூறப்பட்ட சட்டத்தின் குறித்தசில வகைமுறைகளை தக்கவாறு திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
4. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
முனைவர் கோவி. செழியன், உயர்கல்வித் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
40 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 412024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130 ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 44/2024
1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு
மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
23 ஆம் XIII/1958.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—
"(1) (a) 3-A, 4, 5, 6, 11-A மற்றும் 14-A ஆம் பிரிவுகளின் வகைமுறைகள் எவற்றையும் மீறுகிற வேலை வழங்குநர் எவரும், தண்டனைத் தீர்ப்பின் பேரில், முதலாம் குற்றத்திற்கு, ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் மற்றும் இரண்டாம் அல்லது அதற்குப் பிந்தியதான குற்றத்திற்கு, பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்;
(b) 7, 9, 10, 11 மற்றும் 12 ஆம் பிரிவுகளின் வகைமுறைகள் எதனையும் மீறுகிற அல்லது 19 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் பிறப்பிக்கப்பட்ட, மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் ஆணை எதற்கும் இணங்கியவாறு ஊதியங்கள் அல்லது இழப்பீட்டை வழங்கத் தவறிய வேலைவழங்குநர் எவரும், தண்டனைத் தீர்ப்பின் பேரில், முதலாம் குற்றத்திற்காக, ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் மற்றும் இரண்டாம் அல்லது அதற்குப் பிந்தியதான குற்றங்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.".
42 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை
இந்திய அரசு, நாட்டில் தொழில் புரிதலை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் அதன் முயற்சியின் ஒரு பகுதியாக, நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களின்கீழ் வரும் சிறு குற்றங்களை, குற்றமற்றவையாக ஆக்கியுள்ளது மற்றும் மாநிலச் சட்டங்களின்கீழ் வரும் சிறு குற்றங்களையும் குற்றமற்றவையாக மாற்றுவதை ஆய்வு செய்ய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் XIII/1958), உணவு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர்களின் பணி நிபந்தனைகளை முறைப்படுத்துவதற்கு வகைசெய்கிறது மற்றும் கூறப்பட்ட சட்டத்தின் 23 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவானது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளுக்கு வகைசெய்கிறது.
2. எனவே, அரசானது சிறைத்தண்டனையை நீக்குவதற்கு மற்றும் உணவு நிறுவனங்களின் வேலை வழங்குவோர் உணவு தொழில் புரிதலை எளிதாக்க உதவுவதன் பொருட்டு, கூறப்பட்ட சட்டத்தில் சிறு குற்றங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள 3-A, 4, 5, 6, 11-A மற்றும் 14-A பிரிவுகளின் மீறலுக்கு, அபராத தண்டனைக்கு மட்டும் வகைசெய்ய முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட சட்டத்தின் 23 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவை தக்கவாறு திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
சி. வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம், சென்னை-9, 2024 டிசம்பர் 9.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.