Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Revenue Administration – Jurisdiction – Tenkasi District – Kadayanallur Revenue Taluk, Kadayanallur Inner Circle – Wards 3 to 15 under Achanputhur Revenue Village – Merger with Lathur Inner Circle in Sengottai Revenue Taluk – Order is issued.

Published 18 December 2024

Department
Revenue and Disaster Management Department
Type
Extraordinary
Gazette no.
414
Part
Part II
Notification no.
Notification No. II(1)/REVDM/30(d)/2024.--G.O. Ms. No. 556, Revenue and Disaster Management Department, Revenue Administration Branch, RA-1(1) Section, 18th December 2024.
Extraordinary Type
Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments.
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2024-12-18.Extraordinary_414_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU

2024

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 2.40 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 414] CHENNAI, WEDNESDAY, DECEMBER 18, 2024 Margazhi 3, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

No. II(1)/REVDM/30(d)/2024.

[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – தென்காசி மாவட்டம் – கடையநல்லூர் வருவாய் வட்டத்தில், கடையநல்லூர் உள்வட்டம் -அச்சன்புதூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட 3 முதல் 15 வார்டுகள் – செங்கோட்டை வருவாய் வட்டத்திலுள்ள, இலத்தூர் உள்வட்டத்துடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.] கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண். 556, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 18 டிசம்பர் 2024, மார்கழி 3, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள் 09.06.2003.

2. மாவட்ட ஆட்சியர், தென்காசி மாவட்டம், கடிதம் எண்.ந.க. COLR/4407/2023/E1, நாள் 15.11.2023 மற்றும் 19.09.2024.

3. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் கடித எண். ந.க.பணி- 6(1)/U/416/2023, நாள் 23.08.2024 மற்றும் 03.10.2024.

ஆணை:- எண்.556, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 18 டிசம்பர் 2024.

மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், தென்காசி மாவட்ட ஆட்சியர், மக்கள் கணக்கெடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு மாநிலத்தில் நிருவாக பிரிவுகளின் எல்லைகள் முடக்கம் 31.12.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூராட்சி எல்லையானது செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களில் (இருவட்டங்களில்) பரவி இருப்பதனை கருத்திற் கொண்டு பொதுமக்கள் மற்றும் நிர்வாக வசதிகளை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட உள்ளூர் நிருவாகத்தினருடன் ஆலோசனை செய்து அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளையும் அருகாமையிலுள்ள செங்கோட்டை வட்டத்தில் இணைப்பது தொடர்பாக தனது கருத்துருவில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

II-1 Ex. (414)

[ 1 ]2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY i தென்காசி மாவட்டத்திலுள்ள அச்சன்புதூர் பேரூராட்சி எல்லையானது அச்சன்புதூர் மற்றும் மேக்கரை ஆகிய இரண்டு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

ii இதில் அச்சன்புதூர் பேரூராட்சியின் 1 வது மற்றும் 2வது வார்டுகள் மேக்கரை வருவாய் கிராமத்திலும், 3வது வார்டு முதல் 15 வது வார்டு வரை உள்ள பகுதிகள் அச்சன்புதூர் வருவாய் கிராமத்திலும் அமைந்துள்ளன.

iii தென்காசி மாவட்ட பிரிவினைக்கு முன்பு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சிவகிரி சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய வட்டங்களிலிருந்து சில வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு கடையநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கடையநல்லூர் வருவாய் வட்டம் அரசாணை (நிலை) எண்.156, வருவாய்த் துறை நாள்.06.04.2015- இன் படி உருவாக்கப்பட்டது.

iv அவ்வாறு கடையநல்லூர் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட போது செங்கோட்டை வட்டத்திலுள்ள அச்சன்புதூர் வருவாய் கிராமம் அதாவது, அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 3 முதல் 15 வரை உள்ள 13 வார்டுகள் கடையநல்லூர் வருவாய் வட்டத்தில் இணைக்கப்பட்டு நாளது தேதி வரை கடையநல்லூர் வட்டத்தில் இயங்கி வருகிறது.

அச்சன்புதூர் பேரூராட்சி வருவாய் கிராமம் வாரியாக வார்டுகள்

வ . எண் வார்டு எண் வார்டு பெயர் வருவாய் கிராமத்தின் பெயர் வருவாய் வட்டத்தின் பெயர்
1. 1 1 வது வார்டு மேக்கரை செங்கோட்டை
2. 2 2 வது வார்டு மேக்கரை
3. 3 3 வது வார்டு அச்சன்புதூர் கடையநல்லூர்
4. 4 4 வது வார்டு அச்சன்புதூர்
5. 5 5 வது வார்டு அச்சன்புதூர்
6. 6 6 வது வார்டு அச்சன்புதூர்
7. 7 7 வது வார்டு அச்சன்புதூர்
8. 8 8 வது வார்டு அச்சன்புதூர்
9. 9 9 வது வார்டு அச்சன்புதூர்
10. 10 10 வது வார்டு அச்சன்புதூர்
11. 11 11 வது வார்டு அச்சன்புதூர்
12. 12 12 வது வார்டு அச்சன்புதூர்
13. 13 13 வது வார்டு அச்சன்புதூர்
14. 14 14 வது வார்டு அச்சன்புதூர்
15. 15 15 வது வார்டு அச்சன்புதூர்

அச்சன்புதூர் கிராமம் தற்போதுள்ள விவரப்படி:-

நன்செய் 22.91.50 ஹெக்டேர்
புன்செய் 1198.15.50 ஹெக்டேர்
தீர்வை ஏற்பட்ட தரிசு 8.68.00 ஹெக்டேர்
தீர்வை ஏற்படாத தரிசு 7.47.50 ஹெக்டேர்
புறம்போக்கு 332.58.50 ஹெக்டேர்

• ஆக மொத்தம் அச்சன்புதூர் கிராமமானது 1569.81.00 ஹெக்டேர் பரப்பினை கொண்டுள்ளதாக உள்ளது. அச்சன்புதூர் கிராமத்தின் மொத்த பரப்பு 12.50 ச.கி.மீ ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அச்சன்புதூர் கிராமத்தின் மக்கள் தொகை 12,924 ஆகும்.

v. அச்சன்புதூர் கிராமத்தினை செங்கோட்டை வருவாய் வட்டத்துடன் இணைக்கும் நேர்வில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இரண்டு பணியிடம் மட்டும் கடையநல்லூர் வருவாய் வட்டத்திலிருந்து செங்கோட்டை வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும், செங்கோட்டை வட்டத்துடன் இணைக்கும்பட்சத்தில் புதிய குறுவட்டம் ஏதும் உருவாக்கத் தேவையில்லை எனவும் அச்சன்புதூர் கிராமம் கடையநல்லூர் வருவாய் வட்டம் உருவாக்கத்திற்கு முன்னர் செங்கோட்டை வருவாய் வட்டம் இலத்தூர் குறுவட்டத்தில் இயங்கி வந்துள்ளதால், மீண்டும்TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3 2. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தனது கருத்துருவில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்:-

i. அரசாணை நிலை எண்.279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இல் வருவாய் வட்டத்திற்கான ஆட்சி எல்லைகள் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தி செய்வதாகவே உள்ளது. அச்சன்புதூர் கிராமத்தை செங்கோட்டை வட்டத்துடன் இணைத்து மறுசீரமைப்பு செய்ய உள்ள விபரங்கள் கீழ்க்கண்டவாறு சமர்ப்பிக்கப்படுகிறது:-

வ எண் ஆட்சி எல்லை விளக்கங்கள் தற்போதைய வட்டம் அச்சன்புதூர் கிராமம் செங்கோட்டை வட்டத்துடன் சேர்க்கப்பட்ட பின்பு அச்சன்புதூர் கிராமம் கடையநல்லூர் வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பின்பு
1. தலைமையிடம் செங்கோட்டை கடையநல்லூர் செங்கோட்டை கடையநல்லூர்
2. பரப்பளவு (250-2000 ச.கி.மீ) 198.01 520.71 210.51 508.21
3. மக்கள் தொகை (1,00,000 முதல் 5,50,000) 1,28,326 3,14,690 1,41,250 3,01,766
4. வருவாய் கோட்டத்தின் பெயர் தென்காசி தென்காசி தென்காசி தென்காசி
5. சட்டமன்ற தொகுதியின் பெயர் கடையநல்லூர் வாசுதேவநல்லூர் கடையநல்லூர் கடையநல்லூர் வாசுதேவநல்லூர் கடையநல்லூர்
6. பாராளுமன்ற தொகுதியின் பெயர் தென்காசி தென்காசி தென்காசி தென்காசி
7. வருவாய் கிராமங்கள் (குறைந்த அளவு 30 கிராமங்கள்) 19 31 20 30

i மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற இருப்பதையொட்டி ஒரே வட்டத்தில் அனைத்து வார்டுகளும் இருப்பின் வட்ட நிருவாகங்கள் திறம்பட செயல்பட வசதியாகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற தீர்மானத்தில் அச்சன்புதூர் பேரூராட்சியானது பழைய கேரளா மாநிலத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்ததெனவும், பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அச்சன்புதூர் பேரூராட்சியானது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு செங்கோட்டை வட்டத்தின்கீழ் மேக்கரைக்கு தனி கிராம நிருவாக அலுவலகமும், அச்சன்புதூர் கிராம முழுமைக்கும் தனி கிராம நிருவாக அலுவலகமும் இருந்து வந்ததெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ii கடையநல்லூர் வட்டம் உருவாக்கம் செய்த பின்பும் அச்சன்புதூர் பகுதிக்கு மிக அருகில் உள்ள நெடுவயல், வாவா நகரம், வடகரை கீழ்ப்பிடாகை போன்ற பகுதிகளை செங்கோட்டை வட்டத்திலும் சேர்த்துள்ளனர். அச்சன்புதூர் பகுதி மக்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் மற்றும் விவசாய பகுதிகள் அனைத்தும் நெடுவயல், வாவா நகரம், வடகரை கீழ்பிடாகை பகுதியில் அமைந்துள்ளதால் அச்சன்புதூருக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நிலம் தொடர்பான தேவைகளுக்கு கடையநல்லூர் வட்டத்திற்கும், விளைநிலங்கள் மற்றும் விவசாய பகுதி நிலம் தொடர்பான தேவைகளுக்கு செங்கோட்டை வட்டத்திற்கும் மாறி மாறி அலைய வேண்டிய நிலை இருந்து வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவாதை கருத்தில் கொண்டு சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு அச்சன் புதூர் பேரூராட்சியில் அமைந்துள்ள 3 முதல் 15 வார்டுகளை செங்கோட்டை வட்டத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

iii தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கடையநல்லூர் குறுவட்டம் மறுசீரமைப்புக்கு முன் 14 வருவாய் கிராமங்களையும், மறுசீரமைப்புக்கு பின்பு 13 வருவாய் கிராமங்களையும் கீழ்கண்டவாறு உள்ளடக்கியுள்ளது.

கடையநல்லூர் வட்டம், கடையநல்லூர் குறுவட்டம் (மறுசீரமைப்புக்கு முன்)

வருவாய் கிராமத்தின் பெயர் வ. எண்.

குறுவட்டத்தின் பெயர்

வருவாய் கிராமத்தின் எண்.

19 காசிதர்மம்

1 கடையநல்லூர்

குறுவட்டம்

2

22 கனகசபாபதிபேரி

3

13 போகநல்லூர்

4 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

வருவாய் கிராமத்தின் பெயர் வ. எண்.

குறுவட்டத்தின் பெயர்

வருவாய் கிராமத்தின் எண்.

4

14 சொக்கம்பட்டி

5

21 கம்பனேரிபுதுக்குடிபாகம் 1

6

21 கம்பனேரிபுதுக்குடிபாகம் 2

7

16 வைரவன்குளம்

8

15 கிருஷ்ணாபுரம்

9

17 கடையநல்லூர்

கடையநல்லூர் குறுவட்டம்

10

20 அச்சன்புதூர்

11

10 புன்னைவனம்

12

11 மடத்துப்பட்டி

13

12 அரியநாயகிபுரம்

14

23 சேர்ந்தமங்கலம்

மொத்த கிராமங்களின் எண்ணிக்கை – 14

கடையநல்லூர் வட்டம், கடையநல்லூர் குறுவட்டம் (மறுசீரமைப்புக்கு பின்)

வ . எண். குறுவட்டத்தின் பெயர் வருவாய் கிராமத்தின் எண். வருவாய் கிராமத்தின் பெயர்
1 கடையநல்லூர் குறுவட்டம் 19 காசிதர்மம்
2 22 கனகசபாபதிபேரி
3 13 போகநல்லூர்
4 14 சொக்கம்பட்டி
5 21 கம்பனேரிபுதுக்குடிபாகம் 1
6 21 கம்பனேரிபுதுக்குடிபாகம் 2
7 16 வைரவன்குளம்
8 15 கிருஷ்ணாபுரம்
9 17 கடையநல்லூர்
10 10 புன்னைவனம்
11 11 மடத்துப்பட்டி
12 12 அரியநாயகிபுரம்
13 23 சேர்ந்தமங்கலம்
மொத்த கிராமங்களின் எண்ணிக்கை - 13

v தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், இலத்தூர் குறுவட்டம் மறுசீரமைப்புக்கு முன் 5 வருவாய் கிராமங்களையும், மறுசீரமைப்புக்கு பின் 6 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

செங்கோட்டை வட்டம், இலத்தூர் குறுவட்டம் (மறுசீரமைப்புக்கு முன்)

வ . எண். குறுவட்டத்தின் பெயர் வருவாய் கிராமத்தின் எண். வருவாய் கிராமத்தின் பெயர்
1. இ லத்தூர் குறுவட்டம் 4 நெடுவயல்
2. 5 இலத்தூர்
3. 15 குன்னக்குடி
4. 14 பிரானூர்
5. 16 வல்லம்
மொத்த கிராமங்களின் எண்ணிக்கை - 05
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5

செங்கோட்டை வட்டம், இலத்தூர் குறுவட்டம் (மறுசீரமைப்புக்கு பின்)

வ . எண். குறுவட்டத்தின் பெயர் வருவாய் கிராமத்தின் எண். வருவாய் கிராமத்தின் பெயர்
1. இ லத்தூர் குறுவட்டம் 4 நெடுவயல்
2. 5 இலத்தூர்
3. 15 குன்னக்குடி
4. 14 பிரானூர்
5. 16 வல்லம்
6. 20 அச்சன்புதூர்
மொத்த கிராமங்களின் எண்ணிக்கை - 06

எனவே, இரு வேறு வட்டங்களில் ஒரு கிராம பேரூராட்சியின் வார்டுகள் விரவி இருப்பின் வட்ட நிர்வாகம் திறம்பட செயல்படுவதில் இருக்கும் சிரமத்தினை கருத்தில் கொண்டும், இந்நேர்வு குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டத்தில் எவ்வித ஆட்சேபனை வரப்பெறாததால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கோரிக்கையினை ஏற்று, பொதுமக்களின் நலன் கருதி அச்சன்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 1 மற்றும் 2-ஆம் வார்டுகள் தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் இருப்பதை போன்று, மீதமுள்ள 3-15 வார்டுகள் (மொத்தம் 13 வார்டுகளை) தென்காசி மாவட்டத்தில் அச்சன்புதூர் பேரூராட்சி இலத்தூர் குறுவட்டத்தில் இயங்கியது போலவே, தற்போதும் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ள 13 வார்டுகளை முன்பு இருந்தது போலவே கடையநல்லூர் வட்டத்திலிருந்து பிரித்து செங்கோட்டை வட்டம், இலத்தூர் குறுவட்டத்தில் சேர்க்க ஆவண செய்யும்படி கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

3. மேற்கூறிய சூழ்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியரின் கருத்துரு மீதான கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் பரிந்துரையை அரசளவில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டதில், மேற்படி கருத்துரு அரசாணை (நிலை) எண் 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இன்படி வருவாய் வட்டம் எனும் ஆட்சி எல்லையில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்வதால், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் கருத்துருவினை ஏற்று அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:-

i. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வருவாய் வட்டத்தில் அச்சன்புதூர் பேரூராட்சியில் உள்ள அச்சன்புதூர் வருவாய் கிராமத்தின் 3 முதல் 15 வார்டுகள் (மொத்தம் 13 வார்டுகள்) முன்பு இருந்தது போலவே கடையநல்லூர் வருவாய் வட்டம், கடையநல்லூர் குறுவட்டத்திலிருந்து பிரித்து, செங்கோட்டை வருவாய் வட்டம், இலத்தூர் குறுவட்டத்தில் சேர்க்கப்படுகிறது.

ii. கிராம நிருவாக அலுவலர் பணியிடம்-1 மற்றும் கிராம உதவியாளர் பணியிடம்-1 (மொத்தம் பணியிடங்கள்) கடையநல்லூர் வருவாய் வட்டம், கடையநல்லூர் குறுவட்டத்திலிருந்து செங்கோட்டை வருவாய் வட்டம், இலத்தூர் குறுவட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் குறியீட்டில் (DDO Code) ஏற்படும் மாற்றங்களை காலதாமதமின்றி உரிய முறையில் ஊதியம் பெற நிதித்துறையில் வெளியிடப்பட்ட அரசு கடித எண் E.1628150/ ஊ.பி/2024-1, நாள் 14.05.2024-இல் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி களஞ்சியம் இணையதளத்தில் பணியிடங்களை மாற்றம் செய்யுமாறு கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

பெ. அமுதா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 18 December 2024. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2024-12-18.Extraordinary_414_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2024-12-18.Extraordinary_414_Part-II_Section-1.