Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

L.A. BILL (Tamil)

Published 08 January 2025

Department
Law Department
Type
Extraordinary
Gazette no.
8
Part
Part IV
Notification no.
L.A Bill No. 1 of 2025.--A Bill to repeal the Tamil Nadu Borstal Schools Act, 1925.
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-01-08.Extraordinary_8_Part-IV_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2025 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 8A] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 8, 2025 மார்கழி 24, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 8-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண

விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்

130–ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 1/2025

1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிச் சட்டத்தினை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு.

1. இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர்

சீர்திருத்தப்பள்ளி (நீக்கறவுச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தமிழ்நாடு சட்டம்

தமிழ்நாடு சட்டம் 2. 1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிச் சட்டம்

V/1926.

V/1926-ன் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

நீக்கறவு.

DTP—Ex-IV-1 (8A) [1] 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

நோக்கக்காரண விளக்கவுரை.

1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறார் சட்டம் (தமிழ்நாடு சட்டம் IV/1920) இளம் குற்றவாளிகளின் காவல், வழக்கு விசாரணை, பராமரிப்பு, நலன், கல்வி, ஒழுக்கப்பயிற்சி மற்றும் தண்டனைக்காகவும், சிறார்கள் மற்றும் இளம் நபர்களின் குற்றவழக்குத் தொடர்வுக்காகவும் இயற்றப்பட்டது. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் IV/1920 இன் கீழ் தண்டனைத்தீர்ப்பு அளிக்கப்பெற்ற இளம் குற்றவாளிகளை காவலில் வைப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும், 1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் V/1926) இயற்றப்பட்டது. ஒரு சிறுவனைப் பொறுத்த நேர்வில், 16 வயதிற்கும் குறையாத மற்றும் ஒரு சிறுமியை பொறுத்த நேர்வில், 18 வயதிற்கும் குறையாத, ஆனால், இந்த இருநேர்வுகளிலும் 21 வயதிற்கும் மிகாத இளவயது குற்றவாளிகளின் காவல் வைப்பிற்கும் பயிற்சிக்கும் கூறப்பட்ட சட்டமானது வகைசெய்கிறது; மற்றும் 23 வயதெய்திய பின்பு அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலை செய்யப்படுதல் வேண்டும். 1986 ஆம் ஆண்டு, இந்திய அரசு, 1986 ஆம் ஆண்டு இளைஞர் நீதிச் சட்டத்தை (மையச் சட்டம் 53/1986) இயற்றியது, மற்றும் கூறப்பட்ட சட்டத்தின் 63 ஆம் பிரிவு, கூறப்பட்ட சட்டத்திற்கு நேரிணையான எந்தவொரு சட்டமும் நீக்கறவு செய்யப்பட வகைசெய்கிறது மற்றும் 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறார் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் IV/1920) உட்கிடையாக நீக்கறவு செய்தது. அதனைத் தொடர்ந்து, கூறப்பட்ட (மையச் சட்டம் 53/1986) நீக்கறவு செய்யப்பட்டு, 2000 ஆம் ஆண்டு இளைஞர் நீதிச் (சிறார்களைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்) சட்டம் (மையச் சட்டம் 56/2000) மீண்டும் இயற்றப்பட்டு, (பின்னர்) அதுவும், நீக்கறவு செய்யப்பட்டு, 2015 ஆம் ஆண்டு இளைஞர் நீதிச் (சிறார்களைப் பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்) சட்டமாக (மையச் சட்டம் 2/2016) மீண்டும் இயற்றப்பட்டது. மேற்சொன்ன சட்டம் தொடர்பான மாறுதல்களின் காரணமாக, தண்டனைத்தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் வயது எதுவாக இருப்பினும், குற்றம் இழைக்கப்பட்ட நேரத்தில் 18 வயதிற்குட்பட்ட, குற்றமிழைத்த ஒரு சிறார், கூறப்பட்ட மையச் சட்டம் 2/2016 இன் பாதுகாப்பின்கீழ் வருவார் மற்றும் 1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் V/1926) வருவதில்லை. எனவே கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் V/1926 ஐ நீக்கறவு செய்யப்பட வேண்டியதாகிறது. மேலும், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வானது ஆட்கொணர்வு மனு எண் 1441/2007 முதலானவற்றை தீர்வு செய்கையில், 1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் V/1926) நோக்கம் கடந்துவிட்டதாகவும், அதனை நீக்கறவு செய்யவும் பரிந்துரை செய்தது.

2. இந்தச் சூழ்நிலைகளில், அரசு, கூறப்பட்ட சட்டத்தை நீக்கறவு செய்ய முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

எஸ். ரகுபதி, சட்டத் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,

முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம், சென்னை-9, 2025 ஜனவரி 8.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 08 January 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-01-08.Extraordinary_8_Part-IV_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-01-08.Extraordinary_8_Part-IV_Section-1-T-Sup.