© தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 2] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 8, 2025 மார்கழி 24, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 200, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 11 நவம்பர் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து, 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 220 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2151/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கீழ் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அவையாவன:-
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணையில், "64. குருக்கள்குளம் பகுதி "என்ற சொற்றொடருக்குப் பின்னர் பின்வருபவை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-
அட்டவணை
வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெயர்
5. பொன்னாங்கன்னி பகுதி
6. சிங்கம்மாள்புரம் பகுதி
7. வெங்கடேஸ்வர புரம் பகுதி
8. குருக்கள்குளம் பகுதி
9. வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி
20. தைலாகுளம்
21. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி
22. அத்திகுளம் செங்குளம் பகுதி
23. படிக்காசுவைத்தான்பட்டி
25. அயன் நாச்சியார்கோவில் பகுதி
[அரசாணை (நிலை) எண். 201, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 11 நவம்பர் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், சாத்தூர் உள்ளூர் II-2-(2) (T Sup)—1
[ 1 ]2 திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 204 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/1994/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அவையாவன:-
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், அட்டவணையில் "சாத்தூர் (பிட்-I)" என்ற சொற்றொடருக்குப் பின்னர் பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-
7. படந்தால்
8. சத்திரப்பட்டி
9. சாத்தூர் (பிட்-II)
10. கத்தாளம்பட்டி
29. சின்னகொல்லபட்டி
30. ஓ.மேட்டுப்பட்டி
[அரசாணை (நிலை) எண். 211, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 19 நவம்பர் 2024.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார், அவையாவன.
(1) பின்வரும் வருவாய் கிராமங்களை உடுமலைப்பேட்டை உள்ளூர் திட்டமிடல் பகுதியிலிருந்து நீக்குவதாக அறிவித்து 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 209-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2022/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தினை இதனால் செய்கிறார். அவையாவன:-
"வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும்.
39. பூலாங்கிணறு
76/2. திருவேங்கடபுரம்
(லாலிபட்டி)"; மற்றும்
(2) மேற்சொன்ன உடுமலைப்பேட்டை உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் கூடுதல் பகுதிகளை சேர்த்தல், அவையாவன:-
"வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும்.
57. பெரியவாளவாடி
58. வேலூர்
74. பள்ளப்பாளையம்.".
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் பகுதிகளை நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் கருதப்பட்டது குறித்த யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்துப்பூர்வமாக அரசிடம் அளிக்கலாம்.
மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள். ஏதேனுமிருப்பின் அவற்றை எழுத்துப்பூர்வமாக, அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 212, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 19 நவம்பர் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், அருப்புக்கோட்டை உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து, 19.06.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 327 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் நிருவாகத் துறையின் II(2)/RUL/3033/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணையில் "296" அருப்புக்கோட்டை (பகுதி)" என்ற சொற்றொடருக்குப் பின்னர் பின்வருபவை சேர்த்துக் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-
342. கஞ்சநாயக்கன்பட்டி
43. அருப்புக்கோட்டை (ஊரகம்)
12. பெரியபுளியம்பட்டி பகுதி
15. மேட்டுத் தொட்டியான்குளம்
16. செம்பட்டி
[அரசாணை (நிலை) எண். 214, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ I)]த் துறை, 20 நவம்பர் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், செங்கல்பட்டு புதிய நகரத்திற்காக பின்வரும் பகுதிகளை தளப்பகுதியாக குறிப்பிடுவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
புதிய நகரத்திற்கான தளப்பகுதியை உருவாக்கும் பகுதி
(வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்)
11. அழகுசமுத்திரம்
43. ஆலப்பாக்கம்
48. அம்மணம்பாக்கம்
65. அஞ்சூர்
29. ஆத்தூர்
36. செங்கல்பட்டு
27. செட்டிபுண்ணியம்
30. எடையாங்கொடுமாந்தாங்கல்
35. அனுமந்தை
26. அனுமந்தபுரம்
44. அனுமந்தபுத்தேரி விரிவாக்கம் காப்பு வனம்
40. இருங்குன்றம்பள்ளி
66. ஈச்சங்கரணை
4. ஜானகிபுரம்
62. கச்சாடிமங்கலம்
31. காந்தலூர்
60. கருநிலம்
7. கீழவேடு
63. கொண்டமங்கலம்
28. கோங்காடு
67. கோவிலாந்தாங்கல்
50. குண்ணவாக்கம்
45. மேலமையூர்
6. மேலேரிப்பாக்கம்
16. மோசிவாக்கம்
8. நெம்மேலி
8. நெம்மேலி காப்பு வனம் விரிவாக்கம்
42. ஓரத்தூர்
39. ஒழலூர்
38. பழவேலி
34. பரனூர்
53. பாரேரி
49. பட்ரவாக்கம்4 34. பரனூர் விரிவாக்கம் காப்பு வனம்
27. பெருந்தண்டலம்
18. பொன்விளைந்தகளத்தூர்
72. பொருந்தவாக்கம்
33. புலிப்பாக்கம்
10. புல்லேரி
32. ராஜகுளிப்பேட்டை
25. சாஸ்திரம்பாக்கம்
58. செங்குன்றம் காப்பு வனம்
58. செங்குன்றம் பகுதி
70. சென்னேரி
61. சிங்கபெருமாள்கோவில்
15. சோகண்டி
43. தண்டரை
64. தென்மேல்பாக்கம்
68. தேனூர்
5. திருமணி
5. திருமணி விரிவாக்கம் காப்பு வனம்
52. திருத்தேரி
52. திருத்தேரி காப்புவனம்
69. திருவடிசூலம்
9. துஞ்சம்
46. வல்லம்
46. வல்லம் காப்புவனம்
41. வேதநாரயணபுரம்
42. வேண்பாக்கம்
26. வெங்கடாபுரம்
24. வில்லியம்பாக்கம்
51. வீராபுரம்
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் பெறப்பட்டிருப்பின், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசு அவற்றை பரீசீலிக்கும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின் அவற்றை அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
காகர்லா உஷா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மு.கூ.பொ) , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி(மொழிபெயர்ப்பு)த் துறை.
5தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 102, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (M2)த் துறை, 23 அக்டோபர் 2024] 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 8-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு 2 இதன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 16-01-2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு-2 இல் 77 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)தொவேவா/47/2019 ஆம் எண் அறிவிக்கை மற்றும் 6.02.2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு-2 இல் 172-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)தொவேவா/119/2019 ஆம் எண் அறிவிக்கைக்குப் பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு. S. ஆனந்த் M.E.F.I.E., என்பவரை மேற்சொன்ன சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளராக இதனால் நியமிக்கிறார்.
K. வீர ராகவ ராவ், அரசு செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ) , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி(மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.