Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments. [Revenue Administration - Jurisdiction - Thanjavur District - Pattukottai Revenue Division, Thiruvonam Revenue Taluk - Merger of Pinnaiyur East and Pinnaiyur West revenue villages under Thirunallur Inner Circle - with Thekur Inner Circle in Thanjavur Revenue Division, Orathanadu Revenue Taluk - Order is issued.] - Notification No. II(1)/REVDM/3/2025.--G.O. (Ms.) No. 587, Revenue and Disaster Management Department, Revenue Administration Branch, RA-1(1) Section, 31st December 2024.

Published 22 January 2025

Type
Ordinary
Gazette no.
3
Part
Part II
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2025-01-22.Ordinary_3_Part-II_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 3.20 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 3] CHENNAI, WEDNESDAY, JANUARY 22, 2025 Thai 9, Kurothi, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS Pages.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை வருவாய்

கோட்டம், திருவோணம் வருவாய் வட்டம் - திருநல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட

பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு வருவாய் கிராமங்களை - தஞ்சாவூர்

வருவாய் கோட்டத்தில், ஒரத்தநாடு வருவாய் வட்டத்தில், தெக்கூர் உள்வட்டத்துடன்

இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.] .. .. .. .. 15-17 [வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கன்னியாகுமரி மாவட்டம் - பத்மநாபபுரம் வருவாய்

கோட்டம் - விளவங்கோடு வட்டம், விளவங்கோடு உள்வட்டத்தில், குன்னத்தூர் வருவாய்

கிராமத்தில், புதுக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட 3, 4, 5, 12, 14, 15 ஆகிய வார்டுகளை

- பத்மநாபபுரம் வருவாய் கோட்டம், கிள்ளியூர் வட்டம், பனிக்குளம் உள்்வட்டத்தில்

முஞ்சிறை வருவாய் கிராமத்துடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.] .. 18-22 DTP—II-1—3

[15]16 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

No. II(1)/REVDM/3/2025.

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை வருவாய் கோட்டம், திருவோணம் வருவாய் வட்டத்தில் - திருநல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு வருவாய் கிராமங்களை - தஞ்சாவூர் வருவாய் கோட்டத்தில், ஒரத்தநாடு வருவாய் வட்டத்தில், தெக்கூர் உள்வட்டத்துடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண் 587, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 31 டிசம்பர் 2024, மார்கழி 16, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வ.நி-1(1) பிரிவு, நாள் 27.02.2024 2. மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்டம். கடிதம் எண்.ந.க.30894/2021, நாள் 05.11.2024 மற்றும் 26-12-2024.

3. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.பணி-6(1)/01-01-04/410/2024, நாள் 20.12.2024.

ஆணை: எண், 587, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 31 டிசம்பர் 2024.

மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தனது கருத்துருவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:-

i. அரசாணை (நிலை) எண் 66, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 27.02.2024-இல், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை வருவாய் வட்டங்களைச் சீரமைத்து 45 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டது.

ii. இதில், ஒரத்தநாடு வட்டம், தெக்கூர் குறுவட்டத்தில் இருந்த இரண்டு வருவாய் கிராமங்களான பின்னையூர் மேற்கு (கிராம எண் 35) மற்றும் பின்னையூர் கிழக்கு (கிராம எண் 35/1 ஆகியவற்றை பிரித்து, திருவோணம் வட்டம், திருநல்லூர் குறுவட்டத்தில் சேர்க்கப்பட்டது.

iii. ஒரத்தநாடு வட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட திருவோணம் வட்டத்தில் பின்னையூர் மேற்கு மற்றும் பின்னையூர் கிழக்கு வருவாய் கிராமங்களை இணைத்ததற்கு அக்கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பாக 10.09.2024 அன்று அக்கிராம மக்களிடம் ்கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் பின்வரும் விரங்களை தெரிவித்துள்ளார்.

iv. இந்த இரண்டு கிராமங்களும் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது திருவோணம் வட்டத்திற்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை பின்னையூர் கிராமத்திலிருந்து ஒரத்தநாடு வட்டத்திற்கு 6 கி.மீ தொலைவில் உள்ளது.

ஆனால், திருவோணம் வட்டம் 20 கி.மீ தொலைவில் உள்ளது. இதனால், கிராம பொதுமக்கள் அன்றாட கோரிக்கைகளை சான்றுகள், நிலம் சம்பந்தமான பிரச்சனைகள், நில அளவை போன்ற கோரிக்கைகள் நிவர்த்தி செய்திடுவது போன்றவைகள் மிகவும் சிரமமாக உள்ளது

v. ஒரத்தநாடு வட்டத்தில் அணைத்து வசதிகளும் ஒருங்கே உள்ளது இதனை கருத்திற்கொண்டு, பின்னையூர் ஊராட்சி மன்றத்தால் 10.09.2024 அன்று பஞ்சாயத்து தீரமானம் எண் 75-இல் நிறைவேற்றப்பட்டு, கிராம மக்களால் கையொப்பமிடப்பட்டுள்ளது.

vi. மேல்முறையீடு செய்யும் நேர்வுகளில், ்திருவோணம் வட்ட அலுவலகத்திலிருந்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

Jan 22, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 17

vii. இக்கிராமங்களை ஒரத்தநாடு வட்டத்தில் இணைக்கும்பட்சத்தில், மேற்படி கோரிக்கைகள் தொடர்பாக ஒரத்தநாடு வட்டாட்சியரை அணுகிட எளிதாக இருக்கும் எனவும், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவை தஞ்சாவூரில் அமைந்துள்ளதால், மேல்முறையீடு செய்வதற்கு பொதுமக்களுக்கு எளிதாக இருக்கும்.

viii. பின்னையூர் மேற்கு (கிராம எண் 35) மற்றும் பின்னையூர் கிழக்கு (கிராம எண் 35/1) வருகாய் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கை, பட்டுகோட்டை வருவாய் கோட்ட அலுவலர், திருவோணம் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில், திருவோணம் வட்டம், திருநல்லூர் சரகம், பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு ஆகிய கிராமங்களை மீண்டும் ஒரத்தநாடு வட்டத்தில் இணைத்திட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தனது கருத்துருவில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்:-

i. இந்நேர்வில், பின்னையூர் ஊராட்சியினை (பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு வருவாய் கிராமங்களை திருவோணம் வட்டத்திலிருந்து ஒரத்தநாடு வட்டத்தில் சேர்க்கும் நேர்வில் வட்ட எல்லைகளில் மட்டும் மாற்றம் செய்ய வேண்டும்.

ii. புதியதாக வருவாய் கிராமங்கள் ஏதும் தோற்றுவிக்கப்பட வேண்டியதில்லை, கூடுதல் பணியிடம் ஏதும் தோற்றுவிக்கப்பட வேண்டியதில்லை என்பதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படாது.

iii. இதனைத் தவிர்த்து ஒரத்தநாடு வட்டம், தெக்கூர் குறுவட்டமானது திருவோணம் வட்டம் உருவாக்கம் முன்பு 15 வருவாய் கிராமங்களுடன் இயங்கி வந்துள்ளது. வட்டசீரமைப்பிற்கு பின் 13 வருவாய் கிராமங்களாக இருந்து வருகிறது. மீளவும் பின்னையூர் ஊராட்சி (பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு) வருவாய் கிராமங்களை ஒரத்தநாடு வட்டத்தில் சேர்க்கும் நேர்வில் தெக்கூர் குறுவட்டமானது 15 வருவாய் கிராமங்களாக செயல்படும்.

iv. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் மேற்காணும் வருவாய் கிராமங்களை ஒரத்தநாடு வட்டத்தில் சேர்ப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் வரப்பெறவில்லை என தெரிவித்ததன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையினை ஏற்று, பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு வருவாய் கிராமங்களை திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கும் முன்பிருந்தவாறு ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் குறுவட்டத்தில் சேர்க்கலாம்.

v. எனவே, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தனது கருத்துருவில் மேற்காணும் இரண்டு வருவாய் கிராமங்களை ஒரத்தநாடு வட்டத்தில் சேர்ப்பதற்கு எவ்வித ஆட்சேபணையும் வரப்பெறவில்லை என தெரிவித்ததன் அடிப்படையில் பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு வருவாய் கிராமங்களை திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்குவதற்கு முன்பிருந்தவாறு, ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் குறுவட்டத்தில் சேர்க்க கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

4. மேற்கூறிய சூழ்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் கருத்துரு மீதான கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் பரிந்துரையுடன் கூடிய கருத்துருவினை ஏற்று அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:-

i. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டம், திருவோணம் வருவாய் வட்டத்தில், திருநல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட பின்னையூர் கிழக்கு (கிராம எண் 35/1) மற்றும் பின்னையூர் மேற்கு (கிராம் எண் 35) வருவாய் கிராமங்களை மீண்டும் தஞ்சாவூர் வருவாய் கோட்டம், ஒரத்தநாடு வருவாய் வட்டத்தில், தெக்கூர் உள்வட்டத்துடன் இணைக்கப்படுகிறது.

ii. பின்னையூர் கிழக்கு மற்றும் பின்னையூர் மேற்கு ஆகிய கிராமங்களுக்கு ஏற்கெனவே ஒப்பளிப்பு செய்யப்பட்ட கிராம நிருவாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடங்கள் திருவோணம் வருவாய் வட்டத்திலிருந்து ஒரத்தநாடு வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யும்பொழுது, அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரின் குறியீட்டில் (DDO Code) ஏற்படும் மாற்றங்களை காலதாமதமின்றி உரிய முறையில் ஊதியம் பெற வெளியிடப்பட்ட அரசு கடித எண்E.1628150/ஊ.பி/2024-1, நிதித்துறை, நாள் 14.05.2024-இல் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி களஞ்சியம் இணையதளத்தில் பணியிடங்களை மாற்றம் செய்யுமாறு கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.

18 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

No. II(1)/REVDM/4/2025.

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - கன்னியாகுமரி மாவட்டம் - பத்மநாபபுரம் வருவாய் கோட்டம் - விளவங்கோடு வட்டம், விளவங்கோடு உள்வட்டத்தில், குன்னத்தூர் வருவாய் கிராமத்தில், புதுக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட 3, 4, 5, 12, 14, 15 ஆகிய வார்டுகளை - பத்மநாபபுரம் வருவாய் கோட்டம், கிள்ளியூர் வட்டம், பனிக்குளம் உள்வட்டத்தில், முஞ்சிறை வருவாய் கிராமத்துடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண் 588, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 31 டிசம்பர் 2024, மார்கழி 16, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை) எண் 59, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வ.நி-1(1)த் நாள் 18.02.2019.

2. மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி மாவட்டம். கடிதம் எண்.இசட்3/1352757/ 2023, நாள் 01.03.2024.

3. கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.பணி-6(1)/412841/2021, நாள் 19.12.2024.

ஆணை: எண், 588, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 31 டிசம்பர் 2024.

மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தனது கருத்துருவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:-

i. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை பேரூராட்சியின் எல்லையானது விளவங்கோடு வட்டத்திலுள்ள குன்னத்தூர் வருவாய் கிராமத்தின் பகுதிகளையும், கிள்ளியூர் வட்டத்திலுள்ள முஞ்சிறை மற்றும் பைங்குளம் வருவாய் கிராமங்களின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.

ii. அரசாணை (நிலை) எண் 59, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் [வ.நி-1] துறை, நாள் 18.02.2019-இன்படி கிள்ளியூர் வருவாய் வட்டம் புதிதாக தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த விளவங்கோடு வட்டத்தில் புதுக்கடை தேர்வு நிலை பேரூராட்சியில் செயல்பட்டு வந்தது.

iii. ஒருங்கிணைந்த விளவங்கோடு வட்டம் 233. விளவங்கோடு மற்றும் 234, கிள்ளியூர் என்ற இரு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகவும், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் வட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டு வட்ட எல்லைகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னர், குன்னத்தூர் வருவாய் கிராமம் விளவங்கோடு வட்டத்தில் இணைக்கப்பட்டது. குன்னத்தூர் கிராமம் விளாத்துறை ஊராட்சி மற்றும் புதுக்கடை பேரூராட்சி ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது.

iv. குன்னத்தூர் கிராமத்தில், விளாத்துறை ஊராட்சியின் வார்டு எண்கள் 7, 8, 9, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகியவை 233. விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும். புதுக்கடை பேரூராட்சி வார்டு எண்கள் 3, 4, 5, 14, 15 மற்றும் 12 ஆகியவை 234. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டு உள்ளது. வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்ட போதும். 233, விளவங்கோடு மற்றும் 234. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளில் மாற்றமின்றி தொடருகிறது.

v. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகளுக்காக புதுக்கடை பேரூராட்சியின் எல்லைகளை இறுதி செய்வதற்கான சாத்தியங்கள் தொடர்பாக 05.10.2023 அன்று கூட்டம் நடைபெற்றதாகவும், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் தற்போது விளவங்கோடு வட்டம், குன்னத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பேரூராட்சியின் அனைத்து வார்டுகளையும் கிள்ளியூர் வட்டத்தில் உட்படுத்த மன்றத் தீர்மான எண் 119-இன்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

vi. இத்தீர்மானத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக தாலுக்கா அமைக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது புதுக்கடை பேரூராட்சி பகுதிகள் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு என இரண்டு தாலுக்காவிலுமாக சேர்க்கப்பட்டுள்ளமையாலும், கிள்ளியூர் தாலுக்கா அலுவலகம் சென்று வர அருகாமையில் உள்ளமையாலும், பொதுமக்கள் நலன் கருதியும் நிருவாக வசதிக்காகவும் குன்னத்தூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சியின் பகுதிகளை விளவங்கோடு வட்டத்திலிருந்து கிள்ளியூர் வட்டத்தில் சேர்ப்பதற்கு ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அம்முடிவின் அடிப்படையில் புதுக்கடை பேரூராட்சி செயல் அலுவலர், கன்னியாகுமரி மாவட்ட இணை இயக்குநர் (பேரூராட்சிகள்) அவர்களுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார்.

vii. அக்கருத்துருவில் புதிதாக உருவாக்கப்பட்ட கிள்ளியூர் வட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் 1, 2, 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 13 என 9 வார்டுகள் கிள்ளியூர் வட்டத்திலும், 3, 4, 5, 14, 15 ஆகிய 5 வார்டுகள் விளவங்கோடு வட்டத்திலும், 12-வது வார்டு கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு வட்டங்களிலுமாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும், எனவே புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வார்டுகளையும் மொத்தமாக கிள்ளியூர் வட்டத்தின்கீழ் சேர்த்திட ஆவண செய்யுமாறும் செயல் அலுவலர் கோரியுள்ளார்.

Jan 22, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 19

viii. குன்னத்தூர் கிராமத்தின் புல எண்கள் 98 - 144 மற்றும் 146 ஆகியவை புதுக்கடை பேரூராட்சியின் பகுதிகளாக உள்ளது.

ix. விளவங்கோடு வட்டம், குன்னத்தூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சியின் வார்டு எண்கள் 3, 4, 5, 14, 15 மற்றும் 12 ஆகியவற்றை கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை கிராமத்துடன் இணைப்பதால் புதுக்கடை பேரூராட்சி ஒரே வட்டத்தின் (கிள்ளியூர்) கீழ் செயல்பட வசதியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

x. விளவங்கோடு வட்டம் குன்னத்தூர் வருவாய் கிராமத்தின் பேரூராட்சியின் பகுதிகள் மட்டுமே கிள்ளியூர் வட்டத்துடன் இணைக்க வேண்டியுள்ளது என்பதால் அப்பகுதிகள் மட்டுமே பின்வரும் அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது:-

வ. எண் வார்டு எண் வருவாய் கிராமத்தின் பெயர் வருவாய் வட்டத்தின் பெயர்
1. 3 குன்னத்தூர் விளவங்கோடு
2. 4 குன்னத்தூர்
3. 5 குன்னத்தூர்
4. 12 பைங்குளம் மற்றும் குன்னத்தூர் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு
5. 14 குன்னத்தூர் விளவங்கோடு
6. 15 குன்னத்தூர்

விளவங்கோடு வட்டம், குன்னத்தூர் கிராமம் புல எண்கள் 1 முதல் 269 வரையியான புலங்களைக் கொண்டுள்ளது. இக்கிராமத்தின் மொத்த பரப்பளவு 508.48.50 ஹெக்டேர் ஆகும். குன்னத்தூர் வருவாய் கிராமத்தில் புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட புல எண்களின் மொத்த பரப்பான 92.53.00 ஹெக்டேரில் 76.12.50 ஹெக்டேர் பரப்பு ரயத்து புன்செய் வகைபாடும், 10.86.00 ஹெக்டேர் பரப்பு ரயத்து நன்செய் வகைபாடும், 5.54.50 ஹெக்டேர் பரப்பு அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குன்னத்தூர் மற்றும் முஞ்சிறை கிராமங்களின் தற்போதைய பகுதிகள் மற்றும் மறுசீரமைப்பிற்கு பின் உள்ள எஞ்சும் பரப்பு விபரம் குறித்த ஒப்பீடு பின்வரும் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகைபாடு தற்போதைய பரப்பு (ஹெக்) மறு சீரமைப்பிற்கு பின் எஞ்சிய பரப்பு (ஹெக்) குறிப்பு
குன்னத்தூர் முஞ்சிறை குன்னத்தூர் முஞ்சிறை
( 1 ) ( 2 ) ( 3 ) ( 4 )
நன்செய் 73.65.00 26.05. 50 62.79.00 36.91.50 விஞ்சிய 10.86.00 ஹெக். பரப்பளவை குன்னத்தூர் கிராமத்தில் குறைத்து முஞ்சிறை கிராமத்தில் இணைக்கலாம்
புன்செய் 408.04.50 273.16.50 331.92.00 349.29.00 விஞ்சிய 76.12.50 ஹெக். பரப்பளவை குன்னத்தூர் கிராமத்தில் குறைத்து முஞ்சிறை கிராமத்தில் இணைக்கலாம்
தீர்வை ஏற்பட்ட தரிசு 0.27.50 0.07.00 0.27.50 0.07.00 -
தீர்வை ஏற்படாத தரிசு 0.50.00 1.22.50 0.50.00 1.22.50 -
புறம்போக்கு 26.46.50 21.80.50 20.92.00 27.35.00 விஞ்சிய 5.54.50 ஹெக். பரப்பளவை குன்னத்தூர் கிராமத்தில் குறைத்து முஞ்சிறை கிராமத்தில் இணைக்கலாம்
மொத்தம் 508.48.50 322.32.00 415.95.50 414.85.00 விஞ்சிய 92.53.00 ஹெக். பரப்பளவை குன்னத்தூர் கிராமத்தில் குறைத்து முஞ்சிறை கிராமத்தில் இணைக்கலாம்

xi. குன்னத்தூர் கிராமத்தின் மேற்படி கலம் 4-இல் கண்ட 92.53.00 ஹெக்டேர் பரப்பினை கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட முஞ்சிறை கிராமத்துடன் இணைக்கும் நேர்வில் அப்பகுதி சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டம் (குழித்துறை), காவல் நிலைய எல்லை20 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1 (புதுக்கடை), ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (முஞ்சிறை), குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றங்கள் (குழித்துறை) ஆகியவற்றின் அகப்பாட்டு எல்லைகளில் மாற்றம் எதுவும் ஏற்படாது என்றும், புதுக்கடை பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் பிறப்பு இறப்பு பதிவுகள் புதுக்கடை பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் தான் தற்போதும் பதிவு செய்யப்படுகிறது என்றும் இதில் மாறுதல்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

xii. பத்திர பதிவுத்துறையை பொறுத்தமட்டில், குன்னத்தூர் கிராமத்திற்கு, இணை சார்பதிவகம் மார்தாண்டம் எண்.2-ம், முஞ்சிறை கிராமத்திற்கு, முஞ்சிறை சார்பதிவகம் என இரு வேறு சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குவதால், குன்னத்தூர் கிராமத்தின் பகுதிகளை முஞ்சிறை கிராமத்துடன் சேர்க்கும்போது அப்பகுதிகளை பொறுத்து தற்போதுள்ள மார்த்தாண்டம் எண்.2 இணை சார்பதிவகத்தின் எல்லைகளில் மாறுபாடு ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளை முஞ்சிறை சார்பதிவகத்துடன் இணைக்க உரிய முன்மொழிவுகளை தனியாக அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.

xiii. பணியரமைப்பு

விளவங்கோடு வட்டம், குன்னத்தூர் வருவாய் கிராமத்தில் உள்ள புதுக்கடை பேரூராட்சி பகுதிகளை கிள்ளியூர் வட்டத்துடன் இணைப்பது தொடர்பாக குன்னத்தூர் கிராமத்தில் அ1 விளம்பரம் செய்யப்பட்டதில், பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனை ஏதும் எழுவில்லை எனவும், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புதுக்கடை தேர்வு நிலை பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9909 ஆகும். இதில், 3122 மக்கள் புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட குன்னத்தூர் வருவாய் கிராமத்திலும், 5007 மக்கள் புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட முஞ்சிறை வருவாய் கிராமத்திலும், 1780 மக்கள் புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட பைங்குளம் வருவாய் கிராமத்திலும் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கடை பேரூராட்சியின் பெரும்பான்மையான மக்கள் தொகையின் எண்ணிக்கை முஞ்சிறை வருவாய் கிராமத்தில் உள்ளது. விளவங்கோடு வட்டத்தில் புதுக்கடை பேரூராட்சிக்குட்பட்ட குன்னத்தூர் கிராம பகுதிகளை (92.53.00 ஹெக்டேர்) கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை கிராமத்துடன் இணைக்கும் நேர்வில் கூடுதலாக கிராமங்கள் தோற்றுவிக்கப்படவில்லை. எனவே, கூடுதலாக கிராம மற்றும் வட்ட பணியமைப்பில் மாறுதல் ஏற்படுத்த வேண்டிய தேவை எழவில்லை.

3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் தனது கருத்துருவில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்:-

i. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை பேரூராட்சியானது, தொடக்கத்தில் ஒருங்கிணைந்த விளவங்கோடு வட்டம், குன்னத்தூர் கிராமத்தில் அமைந்திருந்தது. பின்பு, கிள்ளியூர் வட்டம், அரசாணை (நிலை) எண்.59, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் [வ.நி-1(1)] துறை, நாள் 18.02.2019-இன்படி தனியாக பிரிக்கப்பட்டபோது புதுக்கடை பேரூராட்சியில் உள்ள 1 முதல் 15 வார்டுகளில் 3, 4, 5, 14 மற்றும் 15 ஆகிய வார்டுகள் விளவங்கோடு வட்டம் குன்னத்தூர் கிராமத்திலும், வார்டு எண்.12 மட்டும் விளவங்கோடு வட்டம், குன்னத்தூர் கிராமத்திலும் மற்றும் கிள்ளியூர் வட்டம் பைங்குளம் கிராமத்திலும் அமைந்துள்ளதாக தெரிய வருகிறது. இதர வார்டுகள் அனைத்தும் (1, 2, 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 13) ஆகிய மொத்தம் 9 வார்டுகள் கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை கிராமத்தில் இணைந்துள்ளது. இதனைத் தவிர்த்து, குன்னத்தூர் வருவாய் கிராமமானது விளாத்துறை என்ற மற்றமொரு ஊராட்சி வார்டினையும், அவ்வார்டு எண்களில் 7, 8, 9, 11 மற்றும் 15 வரை கொண்டுள்ளதாக உள்ளது.

ii. தற்போது, குன்னத்தூர் கிராமம் 1 முதல் 269 புல எண்களை கொண்டதாக உள்ளது. மொத்த பரப்பு 508.48.50 ஹெக்டேர் ஆகும். இவற்றுள் 98 முதல் 146 வரை புல எண்கள் மட்டும் புதுக்கடை பேரூராட்சிக்கு உட்பட்டதாகும். 98 முதல் 146 வரை உள்ள புல எண்களின் மொத்த பரப்பு 92.53.00 ஹெக்டேர். அதில் 76.12.50 ஹெக்டேர் பரப்பு ரயத்து புன்செய்யாகவும், 10.86.00 ஹெக்டேர் ரயத்து நன்செய்யாகவும் மீதமுள்ள 5.54.50 ஹெக்டேர் பரப்பு அரசு புறம்போக்கு எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேற்காணும் புதுக்கடை பேரூராட்சியின் 92.53.00 ஹெக்டேர் பரப்பினை விளவங்கோடு வட்டம் குன்னத்தூர் வருவாய் கிராமத்தில் குறைத்து கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை கிராமத்தில் இணைக்கும் நேர்வில், அப்பகுதி சம்மந்தப்பட்ட கல்வி மாவட்டம் (குழித்துறை), காவல் நிலைய எல்லை (புதுக்கடை), ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (முஞ்சிறை) குற்றவியல் மற்றும் சிவில் நீதிமன்றங்கள் (குழித்துறை) ஆகியவற்றின் எல்லைகளில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், புதுக்கடை பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் பிறப்பு இறப்பு பதிவுகள் புதுக்கடை பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் தான் தற்போதும் பதிவு செய்யப்படுகிறது என்றும் இதில் மாறுதல்கள் இல்லை எனவும் தெரிய வருகிறது.

iii. மேலும், குன்னத்தூர் வருவாய் கிராமத்தில் உள்ள புதுக்கடை பேரூராட்சி பகுதிகளை கிள்ளியூர் வட்டத்துடன் இணைப்பது தொடர்பாக குன்னத்தூர் வருவாய் கிராமத்தில் அ1 விளம்பரம் செய்யப்பட்டதில் பொதுமக்களிடமிருந்து எவ்வித ஆட்சேபனையும் எழவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், புதுக்கடை பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 9909 ஆகும். இவற்றுள், 3122 மக்கள் தொகை குன்னத்தூர் வருவாய் கிராமத்திலும் 5007 மக்கள் தொகை முஞ்சிறை வருவாய் கிராமத்திலும் 1780 மக்கள் தொகை மட்டும் பைங்குளம் கிராமத்தில் உள்ளது. இவற்றுள் முஞ்சிறை வருவாய் கிராமத்தில் மட்டும் புதுக்கடை பேரூராட்சியின் பெரும்பான்மையான மக்கள்தொகை உள்ளதாக தெரிய வருகிறது. மேலும், குன்னத்தூர் கிராம பகுதியிலிருந்து 92.53.00 ஹெக்டேர் கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை கிராமத்தில் இணைக்கும் நேர்வில் கூடுதலாக கிராமங்கள் ஏதும் தோற்றுவிக்கப்பட வேண்டியதில்லை. எனவே, கிராம மற்றும் வட்ட பணியமைப்பில் மாறுதல் ஏற்படுத்த வேண்டிய தேவை எழாது.

Jan 22, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 21

iv. புதுக்கடை தேர்வு நிலை பேரூராட்சியின் கீழ் உள்ள வார்டுகளை கிள்ளியூர் வட்டத்துடன் இணைத்து மறுசீரமைப்பு செய்யப்படும் நேர்வில் ஆட்சி எல்லைகளில் ஏற்படும் மாறுதல்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ. எண் ஆட்சி எல்லை விளக்கங்கள் தற்போதைய விபரம் எஞ்சிய குன்னத்தூர் கிராமம் விஞ்சிய முஞ்சிறை கிராமம்
மறுசீரமைப்பிற்கு பின்
1 கிராமத்தின் பெயர் குன்னத்தூர் முஞ்சிறை குன்னத்தூர் முஞ்சிறை
2 பரப்பளவு (ஹெக்டேர்) 508.48.50 322.32.00 415.95.50 414.85.00
3 புல எண்கள் 1 முதல் 269 வரை 289 முதல் 437 மற்றும் 505 முதல் 550 வரை 1 முதல் 97, 140, 142, 143, 147 – 269 வரை 98 – 139, 141, 144, 145, 146 வரை மற்றும் 289 முதல் 437 மற்றும் 505 முதல் 550 வரை
4 உள்ளாட்சி அமைப்பு புதுக்கடை பேரூராட்சி (வார்டு எண்கள் 3,4,5,14,15) விளாத்துறை ஊராட்சி (வார்டு எண்கள் 7, 8, 9, 11-15 வரை) புதுக்கடை பேரூராட்சி (வார்டு எண்கள் 1, 2, 6, 7, 8, 9, 10, 11, 13) மற்றும் முஞ்சிறை ஊராட்சி விளாத்துறை ஊராட்சி (வார்டு எண்கள் 7, 8, 9, 11-15 வரை) புதுக்கடை பேரூராட்சி (வார்டு எண்கள் 1-15 வரை) மற்றும் முஞ்சிறை ஊராட்சி
5 வருவாய் வட்டத்தின் பெயர் விளவங்கோடு கிள்ளியூர் விளவங்கோடு கிள்ளியூர்
6 வருவாய் கோட்டத்தின் பெயர் பத்மநாபபுரம் பத்மநாபபுரம் பத்மநாபபுரம் பத்மநாபபுரம்
7 சட்டமன்ற தொகுதியின் பெயர் 233, விளவங்கோடு மற்றும் 234, கிள்ளியூர் 234, கிள்ளியூர் 233, விளவங்கோடு 234, கிள்ளியூர்
8 பாராளுமன்ற தொகுதியின் பெயர் கன்னியாகுமரி கன்னியாகுமரி கன்னியாகுமரி கன்னியாகுமரி

v. எனவே, இந்நேர்வினை தொகுத்து, எதிர்வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பினை முன்னிட்டு மேற்படி பேரூராட்சியின் அனைத்து பகுதிகளையும் ஒரே வருவாய் வட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டியுள்ளதாலும், பொது மக்களின் நலன் மற்றும் நிருவாக வசதியினை கருத்தில் கொண்டும், விளவங்கோடு வட்டம், குன்னத்தூர் வருவாய் கிராமத்தில் புதுக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட 3, 4, 5, 12, 14, 15 ஆகிய வார்டுகளை கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை கிராமத்தில் சேர்க்கும் நேர்வில் வட்ட எல்லைகளில் மட்டுமே மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.

vi. மேற்படி சூழ்நிலையில், எவ்விதமான புதிய வருவாய் கிராமங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் ஏதும் தோற்றுவிக்கப்படவில்லை என்பதாலும், மேற்படி வார்டுகளை கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை கிராமத்தில் இணைப்பது தொடர்பாக எவ்வித ஆட்சேபனையும் எழவில்லை என்பதால், மேற்படி வார்டுகளை விளவங்கோடு வட்டம் குன்னத்தூர் வருவாய் கிராமத்திலிருந்து பிரித்து (வார்டு எண்கள் 3, 4, 5, 14, 15) மற்றும் வார்டு எண்.12 (பைங்குளம் மற்றும் குன்னத்தூர் வருவாய் கிராமங்களிலிருந்தும் பிரித்தும்) கிள்ளியூர் வருவாய் வட்டம் முஞ்சிறை வருவாய் கிராமத்தில் முழுமையாக இணைக்க ஆவண செய்யும்படி கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

4. மேற்கூறிய சூழ்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கருத்துரு மீதான கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் அவர்களின் பரிந்துரையுடன் கூடிய கருத்துருவினை ஏற்று அரசு பின்வருமாறு ஆணையிடுகிறது:-

i. மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆயத்த பணிகளுக்கான நிருவாக நலன் கருதியும், பொதுமக்களின் வசதிக்கேற்பவும் புதுக்கடை தேர்வுநிலை பேரூராட்சிகுட்பட்ட அனைத்து வார்டுகளும் ஒரே வருவாய் வட்டத்தின்கீழ் அமையும் வகையில், விளவங்கோடு வட்டம், விளவங்கோடு உள்வட்டத்தில், குன்னத்தூர் வருவாய் கிராமத்திலிருந்து வார்டு எண்கள் 3, 4, 5, 14, 15 மற்றும் பைங்குளம் மற்றும் குன்னத்தூர் வருவாய் கிராமங்களிலிருந்து வார்டு எண் 12 ஆகிய 6 வார்டுகளை கிள்ளியூர் வருவாய் வட்டம், பனிக்குளம் உள்வட்டத்திலுள்ள முஞ்சிறை வருவாய் கிராமத்தில் முழுமையாக இணைக்கப்படுகிறது.

22 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1

ii. புதுக்கடை தேர்வு நிலை பேரூராட்சியின் கீழுள்ள வார்டுகளை கிள்ளியூர் வட்டத்துடன் இணைத்து மறுசீரமைப்பு செய்யப்படும் நேர்வில், ஆட்சி எல்லைகளில் ஏற்படும் மாறுதல்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு:-

வ. எண் ஆட்சி எல்லை விளக்கங்கள் தற்போதைய விபரம் எஞ்சிய குன்னத்தூர் கிராமம் விஞ்சிய முஞ்சிறை கிராமம்
மறுசீரமைப்பிற்கு பின்
1 கிராமத்தின் பெயர் குன்னத்தூர் முஞ்சிறை குன்னத்தூர் முஞ்சிறை
2 பரப்பளவு (ஹெக்டேர்) 508.48.50 322.32.00 415.95.50 414.85.00
3 புல எண்கள் 1 முதல் 269 வரை 289 முதல் 437 மற்றும் 505 முதல் 550 வரை 1 முதல் 97, 140, 142, 143, 147 – 269 வரை 98 – 139, 141, 144, 145, 146 வரை மற்றும் 289 முதல் 437 மற்றும் 505 முதல் 550 வரை
4 உள்ளாட்சி அமைப்பு புதுக்கடை பேரூராட்சி [வார்டு எண்கள் 3, 4, 5, 14, 15 மற்றும் 12 (பைங்குளம் மற்றும் குன்னத்தூர்)] விளாத்துறை ஊராட்சி (வார்டு எண்கள் 7, 8, 9, 11-15 வரை) புதுக்கடை பேரூராட்சி (வார்டு எண்கள் 1, 2, 6, 7, 8, 9, 10, 11, 13) மற்றும் முஞ்சிறை ஊராட்சி விளாத்துறை ஊராட்சி (வார்டு எண்கள் 7, 8, 9, 11-15 வரை) புதுக்கடை பேரூராட்சி (வார்டு எண்கள் 1-15 வரை) மற்றும் முஞ்சிறை ஊராட்சி
5 வருவாய் வட்டத்தின் பெயர் விளவங்கோடு கிள்ளியூர் விளவங்கோடு கிள்ளியூர்
6 வருவாய் கோட்டத்தின் பெயர் பத்மநாபபுரம் பத்மநாபபுரம் பத்மநாபபுரம் பத்மநாபபுரம்
7 சட்டமன்ற தொகுதியின் பெயர் 233, விளவங்கோடு மற்றும் 234, கிள்ளியூர் 234, கிள்ளியூர் 233, விளவங்கோடு 234, கிள்ளியூர்
8 பாராளுமன்ற தொகுதியின் பெயர் கன்னியாகுமரி கன்னியாகுமரி கன்னியாகுமரி கன்னியாகுமரி

(ஆளுநரின் ஆணைப்படி)

பெ. அமுதா,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 22 January 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-01-22.Ordinary_3_Part-II_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2025-01-22.Ordinary_3_Part-II_Section-1.