© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2025 [விலை: ரூ. 5.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 4] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 29, 2025 தை 16, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 36/ 2024.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்
தொடக்கம்.
விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச்
சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
33-ஆம் பிரிவிற்கான 2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச்
27/1989.
திருத்தம்.
சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன் பின்பு இதில்
முதன்மைச்சட்டம் என குறிப்பிடப்படுவதான) 33-ஆம் பிரிவின், (1)-ஆம்
உட்பிரிவில் உள்ள வரம்புரையில், "பதின்மூன்று ஆண்டுகள் மற்றும் ஆறு
மாதங்கள்" எனும் சொற்றொடருக்காக, "பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு
மாதங்கள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4—IV-2-(T-Sup)—1
[1]2 .
செல்லுந்தன்மை. 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2024 ஆம்
ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும்
சந்தைக் குழுக்களின் ஒரு தனி அலுவலரின் அதிகாரங்களை செலுத்தும்
மற்றும் செயற்பணிகளை நிறைவேற்றும் நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டத்தால்
திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின்படி அத்தகைய தனி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகக்
கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள்
30 ஆம் நாள் தொடங்கியும், தமிழ்நாடு அரசிதழில் இந்தச் சட்டம் வெளியிடப்படும்
தேதியுடன் முடிவடையும் காலஅளவின் போது தனி அலுவலர்களால் செய்யப்பட்ட
செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால்
திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன்
செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல்
வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
3தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 37/ 2024.
2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும்
தொடக்கம்.
குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்)
திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
5 ஆம் பிரிவிற்கான 2. 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான
18/2014.
மாற்றீடு.
விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் (இதன்
பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 5 ஆம் பிரிவிற்காக,
பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"5. உரிமம் வழங்குதல்.- (1) மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி,
தங்கும் விடுதியை அல்லது காப்பகம் ஆகியவற்றை நிறுவ, பராமரிக்க அல்லது
நடத்துவதற்கு விரும்பும் ஒவ்வொரு நபரும், தமிழ்நாடு அரசிதழில், அரசால்
அறிவிக்கப்படலாகும் இணைய வலைவாயில் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும்
சான்றிதழ்களுடன் சேர்த்து அத்தகைய மின்னணு வடிவத்தில் உரிமத்திற்கான
விண்ணப்பம் ஒன்றை செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பம் ஒவ்வொன்றும்
வகுத்துரைக்கப்படலாகும் பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்படாத அத்தகைய
கட்டணத்துடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பத்துடன் சேர்த்து
அளிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, உரிமம்
தானாக உருவாக்கப்பட்டு மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
முறையிலும் வடிவிலும் இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும். உரிமமானது
வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு
உட்பட்டு, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து பத்து ஆண்டு காலஅளவிற்கு
செல்லுந்தன்மை உடையதாக இருத்தல் வேண்டும்.
(4) (1) முதல் (3) வரையிலான உட்பிரிவுகளில் அடங்கியுள்ள எது
எவ்வாறிருப்பினும், நேர்விற்கேற்ப, உரிமம் வழங்குவதற்கான அல்லது
புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் எதுவும் அல்லது உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
விவரங்களை மாற்றம் செய்வதற்கான கோரிக்கை எதுவும், உரிமத்தை இரத்து
செய்வதற்கு எதிரான மறுஆய்வு விண்ணப்பம் எதுவும் அல்லது உரிமத்தை
வழங்க அல்லது புதுப்பிக்க மறுத்தலுக்கு அல்லது உரிமத்தை இரத்து அல்லது
இடைநீக்கம் செய்வதற்கு எதிரான மேல்முறையீடு, 2024 ஆம் ஆண்டு
தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள்
(ஒழுங்குமுறைப்படுத்தும்) திருத்தச் சட்டத்தின், தொடக்க தேதியன்று
நிலுவையில் இருப்பின் அவை, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும்
குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்)
திருத்தச் சட்டம் தொடங்கப்படுவதற்கு உடனடி முன்பு, நடைமுறையில்
இருந்தாற்போன்ற இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கியவாறு தீர்வு
செய்யப்படுதல் வேண்டும்:
4வரம்புரையாக, நேர்விற்கேற்ப, நிலுவையில் இருக்கும் அத்தகைய விண்ணப்பம், கோரிக்கை, மறுஆய்வு அல்லது மேல்முறையீடு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் திரும்பப் பெறப்படலாம் மற்றும் நேர்விற்கேற்ப, உரிமத்திற்கான புதிய விண்ணப்பம் அல்லது மாற்றத்திற்கான விண்ணப்பமானது (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டவாறு இணைய வலைவாயில் வழியாக செய்யலாம்.".
6 ஆம் பிரிவை
3. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
விட்டுவிடுதல்.
7 ஆம் பிரிவிற்கான
4. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவில் உள்ள (1) ஆம் உட்பிரிவிற்கான
திருத்தம்.
வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
8 ஆம் பிரிவிற்கான
5. முதன்மைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"8. உரிமத்தை மாற்றியமைத்தல்,- (1) 5 ஆம் பிரிவின்
(3) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப்பிடப்பட்டவாறான,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி அல்லது தங்கும் விடுதி
அல்லது காப்பகத்தின் அமைவிடத்தை மாற்றவோ அல்லது சேவை
எதனின் நோக்கத்தையும் மாற்றவோ விரும்பும் உரிமதாரர் எவரும்,
5 ஆம் பிரிவின்படி புதிய உரிமத்திற்காக விண்ணப்பம் ஒன்றைச் செய்தல்
வேண்டும்.
(2) உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் விவரங்களை மாற்ற
அல்லது தங்கியிருப்பவர்களின் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை அதிகரிக்க
உத்தேசித்துள்ள எந்தவொரு உரிமதாரரும் உரிமத்தை மாற்றுவதற்காக,
5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் வழியாக
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய சான்றிதழ்களுடன் சேர்த்து மின்னணு
வடிவத்தில் விண்ணப்பம் செய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும்,
அத்தகைய இரண்டாயிரம் ரூபாய்க்கு மேற்படாத அத்தகைய கட்டணத்துடன்
சேர்த்து இருத்தல் வேண்டும். சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு,
உரிமமானது தேவையான மாற்றங்களுடன் தானாக உருவாக்கப்பட்டு மற்றும்
அத்தகைய முறையில் இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும்.".
10 ஆம் பிரிவிற்கான
6. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், "உரிமம் வழங்க மறுக்கின்ற
திருத்தம்.
அல்லது" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
11 ஆம் பிரிவிற்கான
7. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்காக பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"11. உரிமத்தை ஒப்படைத்தல்,- 5 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ்
வழங்கப்பட்ட உரிமத்தை அதன் கூறப்பட்ட காலம் முடிவடைந்ததன் பேரில்,
5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் வழியாக,
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு வடிவில் ஆறு மாதங்கள்
அறிவிப்பு கொடுத்து உரிமதாரர் அதனை ஒப்படைப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் அந்நேரத்திற்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவம்
மற்றும் அத்தகைய முறையில், அறிவிப்பு திரும்பப் பெறாவிட்டால், உரிமத்தின்
செயல்பாடு அற்றுபோதல் வேண்டும் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான
விடுதி, தங்கும் விடுதி அல்லது காப்பகம் செயல்படுவதும் நின்றுபோதல்
வேண்டும்."5 12 ஆம் பிரிவிற்கான 8. முதன்மைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (3) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(3) மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான காப்பகமொன்றினைப்
பதிவுசெய்யும் நோக்கத்திற்காக, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான அத்தகைய
காப்பகத்தின் உரிமையாளர் அல்லது மேலாளர், 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட
இணையவலை வாயில் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
சான்றிதழ்களுடன் சேர்த்து அத்தகைய மின்னணு படிவத்தில் பதிவுசெய்வதற்காக
விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும். அளிக்கப்பட்ட சான்றிதழ்களின்
உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, பதிவுச் சான்றிதழ் தானாக உருவாக்கப்பட்டு,
வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் அத்தகைய வடிவத்திலும்
இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும்.
(2) (4) ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
6 7தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 38/ 2024.
2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்
தொடக்கம்.
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் 2. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தின் (இதன்
24/2012.
பிரிவிற்கான திருத்தம்.
பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவின், (i) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"(i) "உள்ளாட்சி அமைப்பு" என்பது, எதன் கீழ் ஆய்விடம், கட்டிடம்,
நினைவிடம் எதுவும் அல்லது வரலாற்று, கட்டிடக்கலை அல்லது கலாச்சார
முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஏதேனும் இடங்கள் ஆகியன உற்றமைந்து அல்லது
பாரம்பரிய கட்டிடம் அல்லது பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்களின்
கண்காணிப்பு அதிகாரம் அரசால் ஒப்படைக்கப்பட்டு அப்போதைக்கு நடைமுறையில்
உள்ள ஏதேனும் சட்டத்தின் கீழ் அமைத்துருவாக்கப்பட்டுள்ளதோ அல்லது
அமைத்துருவாக்கப்பட வேண்டியுள்ளதோ அந்த மாநகராட்சி அல்லது நகராட்சி
மன்றம் அல்லது ஊராட்சி எதுவும் அல்லது பிற அதிகார அமைப்பு எதுவும் என்று
பொருள்படும்.".
4 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,-
பிரிவிற்கான திருத்தம்.
(a) (k) மற்றும் (l) இனங்களுக்காக, பின்வரும் இனங்கள் மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(k) செயற்பொறியாளர் (பாரம்பரிய பிரிவு), பொதுப்பணித் துறை,
சேப்பாக்கம், சென்னை, பதவி-வழி;
(l) தலைமை கட்டிடக்கலைஞர், பொதுப்பணித்துறை, சேப்பாக்கம்,
சென்னை, பதவி-வழி;"
(b) (p) இனத்திற்கு பின்பு, பின்வரும் இனம் சேர்க்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
"(q) ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, சென்னை,
பதவி-வழி";
811 ஆம்
4. முதன்மைச் சட்டத்தின் 11ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (n) கூறில்,
பிரிவிற்கான
"உள்ளாட்சி அதிகார அமைப்புகள்" எனும் சொற்றொடருக்காக, "தொடர்புடைய
திருத்தம்.
அதிகார அமைப்புகள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
9தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 39/ 2024.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள்
தொடக்கம்.
நல நிதிய (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) (a) 4 ஆம் பிரிவின் (a) கூறானது 2018 ஆம் ஆண்டு ஜனவரித்
திங்கள் 30 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல்
வேண்டும்.
(b) 4 ஆம் பிரிவின் (b) கூறானது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
திங்கள் 27 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல்
வேண்டும்.
(c) 4 ஆம் பிரிவின் (c) கூறு மற்றும் எஞ்சியுள்ள பிரிவுகளானது,
மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம்
2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச்
49/1987.
பிரிவிற்கான திருத்தம்.
சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
(k) கூறில், "மற்றும் மின்னணு முத்திரைவில்லையை உள்ளடக்கும்" எனும்
சொற்றொடரானது இறுதியில் சேர்க்கப்படுதல் வேண்டும்.
15 ஆம்
3. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான திருத்தம்.
(a) (1) ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள்
நல நிதிய (திருத்தச்)சட்டத்தின் தொடக்க தேதியன்றும் அது முதற்கொண்டும்,
ஏதேனும் மாநில அரசு அல்லது மைய அரசு அல்லது பிற அதிகாரஅமைப்பு
அல்லது பணி வழங்குநரிடமிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை அல்லது
பிற ஓய்வுகாலப் பயன்களைப் பெறுகிற ஒரு வழக்குரைஞர், நிதியத்தின் ஓர்
உறுப்பினராக சேர்ப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவராய் இருத்தல்
கூடாது.";
(b) (3) ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, வழக்குரைஞராக பதிவு பெற்று, அவ்வாறு பதிவுபெற்ற
பின்பு, தாமதமாக நிதியத்திற்கு சேர்க்கை செய்ய வேண்டுமென விரும்பும்
ஒரு நபர், அவரது பதிவுத் தேதியிலிருந்து நிதியத்திற்கு அவர் சேர்க்கை
செய்யப்படும் தேதி வரையிலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஆயிரம் ரூபாய்
கூடுதல் கட்டணமாக செலுத்துதல் வேண்டும்.";
(c) (4) ஆம் உட்பிரிவில்,-
(i) (a) இனத்தில், "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்காக,
"ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(ii) (b) இனத்தில், "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக,
"இரண்டாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
10(iii) (c) இனத்தில், "இருபத்தைந்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக,
"ஒரு இலட்சம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(iv) (d) இனத்தில், "பத்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக,
"இருபதாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(v) பின்வரும் வரம்புரைகளானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, முப்பத்து ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்பு
நிதியத்தின் ஓர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள ஒரு வழக்குரைஞர்,
நிதியத்திற்கு ஆயுட்கால சந்தா அல்லது ஆண்டு சந்தா செலுத்துவதற்குத்
தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக, முப்பத்து ஐந்து வயது நிறைவடைந்த பின்பு
நிதியத்தின் ஓர் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள ஒரு வழக்குரைஞர்,
நிதியத்திற்கு ஆண்டு சந்தா மட்டுமே செலுத்துவதற்கு தகுதியுடைவராக
இருத்தல் வேண்டும் மற்றும் அவர் ஆயுட்கால சந்தா செலுத்துவதற்குத்
தகுதியுடையவராக இருத்தல் கூடாது.";
(d) (6) ஆம் உட்பிரிவில், "ஐம்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்காக,
"பத்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(e) (9) ஆம் உட்பிரிவில், "ஐம்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்காக,
"ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
16 ஆம்
4. முதன்மைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான திருத்தம்.
(a) (5) ஆம் உட்பிரிவில், "ஐந்து இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்"
எனும் சொற்றொடர் காணப்படுகின்ற, இரு இடங்களில், "ஏழு இலட்சம் ரூபாய்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (5) ஆம் உட்பிரிவில், அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட, "ஏழு இலட்சம்
ரூபாய்" எனும் சொற்றொடர் காணப்படுகின்ற, இரு இடங்களில், "பத்து இலட்சம்
ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட (5) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும்
உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(5) நிதியத்தின் ஓர் உறுப்பினர் இறந்துவிட்டால், நேர்விற்கேற்ப, அவரால்
பெயர்குறிக்கப்பட்டவர் அல்லது சட்டப்படியான வாரிசுக்கு-
(a) ஓர் உறுப்பினர், முப்பத்து ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்னர்
வழக்குரைஞராக பதிவு செய்திருப்பின், பத்து இலட்சம் ரூபாய்;
(b) ஓர் உறுப்பினர், முப்பத்து ஐந்து வயது நிறைவடைந்த பின்னர்
ஆனால், ஐம்பது வயது நிறைவடைவதற்கு முன்னர் வழக்குரைஞராக பதிவு
செய்திருப்பின், ஐந்து இலட்சம் ரூபாய்;
(c) ஓர் உறுப்பினர், ஐம்பது வயது நிறைவடைந்த பின்னர், ஆனால்,
அறுபது வயது நிறைவடைவதற்கு முன்னர் வழக்குரைஞராக பதிவு
செய்திருப்பின், இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்;
(d) ஓர் உறுப்பினர், அறுபது வயது நிறைவடைந்த பின்னர் வழக்குரைஞராக
பதிவு செய்திருப்பின், ஒரு லட்சம் ரூபாய் தொகையானது செலுத்தப்படுதல்
வேண்டும். வரம்புரையாக, அத்தகைய உறுப்பினர், அவரது இறப்பிற்கு
முன்பு, ஏதேனும் மாநில அரசு அல்லது மைய அரசு அல்லது பிற அதிகார
அமைப்பு அல்லது பணி வழங்குநரிடமிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை
அல்லது பிற ஓய்வுகாலப் பயன்களைப் பெற்றிருந்தால், நேர்விற்கேற்ப, அவரால்
பெயர் குறிக்கப்பட்டவருக்கோ அல்லது சட்டப்படியான வாரிசுக்கோ, இந்த
உட்பிரிவின்கீழ் தொகையைப் பெறுவதற்கு உரிமையுடையவர் ஆகார்".
1121 ஆம்
5. முதன்மைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் உள்ள,
பிரிவிற்கான திருத்தம்.
(b) கூறில், "இருபத்து ஐந்து ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "ஐந்நூறு
ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
22 ஆம்
6. முதன்மைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,-
பிரிவிற்கான திருத்தம்.
(a) "பத்து ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "நூற்று இருபது ரூபாய்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, வழக்கரைஞர் குழாம், வழக்குரைஞர் குழாமத்தின்
மின்னணு முத்திரைவில்லை இணைய வலைவாயில் வழியாக, மின்னணு
முத்திரைவில்லைகளையும் வழங்கலாம்.".
23 ஆம்
7. முதன்மைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,
பிரிவிற்கான திருத்தம்.
"முப்பது ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "நூற்று இருபது ரூபாய்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
12 13தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 40/ 2024.
1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதியச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதிய (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கான 25/1999.
திருத்தம்.
2. 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர்களின் நலநிதியச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2-ஆம் பிரிவின் (o) கூறின் இறுதியில், "மற்றும் மின்னணு முத்திரை வில்லையும் உள்ளடங்கும்", எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்.
12 ஆம் பிரிவிற்கான 3. முதன்மைச் சட்டத்தின் 12-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(a) "பத்து ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "இருபது ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, வழக்குரைஞர் குழாமின் மின்னணு முத்திரை வில்லை இணைய வலைவாயில் மூலம், மின்னணு முத்திரை வில்லையை வழக்குரைஞர் குழாம் வெளியிடலாம்.".
16 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், "நான்கு இலட்சம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "ஏழு இலட்சம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.