© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2025 [விலை: ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 6] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025 தை 30, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 42/2024
1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு
தொடக்கம்.
நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
23 ஆம் XIII/1958.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—
"(1) (a) 3-A, 4, 5, 6, 11-A மற்றும் 14-A ஆம் பிரிவுகளின் வகைமுறைகள் எவற்றையும் மீறுகிற வேலை வழங்குநர் எவரும், தண்டனைத் தீர்ப்பின் பேரில், முதலாம் குற்றத்திற்கு, ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் மற்றும் இரண்டாம் அல்லது அதற்குப் பிந்தியதான குற்றத்திற்கு, பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
6—IV-2-(T-Sup)—1
[1]2 (b) 7, 9, 10, 11 மற்றும் 12 ஆம் பிரிவுகளின் வகைமுறைகள் எதனையும் மீறுகிற அல்லது 19 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் பிறப்பிக்கப்பட்ட, மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் ஆணை எதற்கும் இணங்கியவாறு ஊதியங்கள் அல்லது இழப்பீட்டை வழங்கத் தவறிய வேலைவழங்குநர் எவரும், தண்டனைத் தீர்ப்பின் பேரில், முதலாம் குற்றத்திற்காக, ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் மற்றும் இரண்டாம் அல்லது அதற்குப் பிந்தியதான குற்றங்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
3தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 43/2024
1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டு (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது 2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 5 ஆம் நாளன்று
நடைமுறைக்கு வந்திருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
XIV/1955
II-ஆம் இணைப்புப் பட்டியலுக்கானத் திருத்தம்.
2. 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குகள் மதிப்பீட்டுச் சட்டத்தின் II–ஆம் இணைப்புப்பட்டியலில்,—
(1) 3 ஆம் உறுப்பின் (ii) ஆம் இனத்திற்காக, பின்வரும்
இனங்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—
"(ii)(A) உயர்நீதிமன்றத்தின் அறிவுசார் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்
சொத்துரிமை பிரிவு தவிர.
(B) உயர்நீதிமன்றத்தின் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவிற்கு,-
பத்தாயிரம் ரூபாய்.
(a) 1999 ஆம் ஆண்டு வணிகக்குறிகள் சட்டத்தின் (மையச் சட்டம் 47/1999) 91 ஆம் பிரிவின்கீழ் வணிகக் குறிகள் பதிவாளரின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு.
ஐந்தாயிரம் ரூபாய்.
(b) 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் (மையச் சட்டம் 14/1957) 72 ஆம் பிரிவின்கீழ் பதிப்புரிமைப் பதிவாளரின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு.
பத்தாயிரம் ரூபாய்.
(c) 1970 ஆம் ஆண்டு காப்புரிமைகள் சட்டத்தின் (மையச் சட்டம் 39/1970) 117-A பிரிவின்கீழ் கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது மைய அரசின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு.
4ஐந்தாயிரம் ரூபாய்.
(d) 1999 ஆம் ஆண்டு சரக்குகளின் புவிசார் குறியீடுகள் (பதிவு செய்தல் மற்றும் பாதுகாத்தல்) சட்டத்தின் (மையச் சட்டம் 48/1999) 31 ஆம் பிரிவின்கீழ் பதிவாளரின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு.
ஐந்தாயிரம் ரூபாய்.
(e) 2001 ஆம் ஆண்டு தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் உழவர்கள் உரிமைச் சட்டத்தின் (மையச் சட்டம் 53/2001) 56 ஆம் பிரிவின்கீழ் அதிகார அமைப்பு அல்லது பதிவாளரின் ஆணை அல்லது முடிவுக்கு எதிரான மேல்முறையீடு.
இரண்டாயிரம் ரூபாய்.
(f) 2015 ஆம் ஆண்டு வணிக நீதிமன்றங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் 4/2016) 13(1-A) ஆம் பிரிவின்கீழ் வணிக நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிரான மேல்முறையீடு.
ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்.".
(g) 2015 ஆம் ஆண்டு வணிக நீதிமன்றங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் 4/2016) 4 ஆம் பிரிவின்கீழ் அை மத் து ரு வாக் க ப்பட் ட உயர்நீதிமன்றத்தின் வணிகப் பிரிவினால், இடைக்கால மனுவில் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிரான மேல்முறையீடு.
(2) 11 ஆம் உறுப்பின் (l) கூறின் (iii) ஆம் இனத்திற்காக, பின்வரும்
இனங்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
ஐம்பது ரூபாய்.
"(iii) (A) உயர்நீதிமன்றத்தின் அறிவுசார் சொத்துரிமைப்
பிரிவு தவிர.
( B ) உ ய ர் நீ தி ம ன் ற த் தின் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவிற்கு,-
(a) 1999 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாய்.
வ ணிக க்கு றிகள் சட்டத்தின் (மையச் சட்டம் 47/1999) 47 மற்றும் 57 ஆம் பிரிவுகளின் கீழ் மனு அல்லது விண்ணப்பம்.
5ஐந்தாயிரம் ரூபாய்.
(b) 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் (மையச் சட்டம் 14/1957) 19A(1) ஆம் பிரிவின்கீழ் மனு.
பத்தாயிரம் ரூபாய்.
(c) 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் (மையச் சட்டம் 14/1957) 19A(2), 23, 31, 31A, 31B, 31C, 31D, 32, 33A மற்றும் 50 ஆம் பிரிவுகளின்கீழ் மனு அல்லது விண்ணப்பம்.
பத்தாயிரம் ரூபாய்.
(d) 1970 ஆம் ஆண்டு காப்புரிமைகள் சட்டத்தின் (மையச் சட்டம் 39/1970) 64 மற்றும் 71 ஆம் பிரிவுகளின் கீழ் மனு.
ஐந்தாயிரம் ரூபாய்.".
(e) 1999 ஆம் ஆண்டு சரக்குகளின் புவிசார் குறியீடுகள் (பதிவு செய்தல் மற்றும் பாதுகாத்தல்) சட்டத்தின் (மையச் சட்டம் 48/1999) 27 ஆம் பிரிவின்கீழ் விண்ணப்பம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.