© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2025 [விலை: ரூ. 9.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 19, 2025 மாசி 7, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 7-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 1/2025
2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்
மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது 2024 -ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 1-ஆம் நாள் அன்று
நடைமுறைக்கு வந்ததாக கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
128-A எனும் 19/2017.
புதிய பிரிவை
உட்புகுத்துதல்.
2. 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 128-ஆம் பிரிவிற்குப் பின்பு பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"128-A. 73-ஆம் பிரிவின்கீழ் எழுப்பப்பட்ட கேட்புகள் தொடர்புடைய வட்டி அல்லது தண்டத்தொகை அல்லது இரண்டையும், குறித்த சில கால அளவுகளுக்கு வரிதள்ளுபடி செய்தல்.- (1) இந்தச் சட்டத்தில் உள்ளடங்கியதற்கு மாறாக எது எவ்வாறிருப்பினும், -
(a) 73-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பு அல்லது 73-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை மற்றும் 73-ஆம் பிரிவின் (9)-ஆம் உட்பிரிவின்கீழ் எந்தவொரு ஆணையும் வெளியிடப்படாதிருப்பின்; அல்லது
(b) 73-ஆம் பிரிவின் (9)-ஆம் உட்பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் 107-ஆம் பிரிவின் (11)-ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 108-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை எதுவும் பிறப்பிக்கப்படாதிருப்பின்; அல்லது
7—IV-2-(T-Sup)—1
[1]2 (c) 107-ஆம் பிரிவின் (11)-ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 108-
ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் 113-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை எதுவும் பிறப்பிக்கப்படாதிருப்பின்,
இவற்றிற்கிணங்கி வரி விதிப்பிற்குள்ளான நபரால்,
வரித்தொகை எதுவும் செலுத்தத்தக்கதாய் இருக்குமிடத்து, 2017-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2020-ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான கால அளவுக்கு அல்லது அதன் பகுதிக்கு, தொடர்புடைய மற்றும் மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும், அத்தகைய தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ, கூறப்பட்ட நபர், நேர்விற்கேற்ப (a) கூறு, (b) கூறு அல்லது (c) கூறில் சுட்டப்பட்ட அறிவிப்பு அல்லது அறிக்கை அல்லது ஆணையின்படி முழுத்தொகையையும் செலுத்துவாராயின், 50-ஆம் பிரிவின்படி வட்டி மற்றும் இந்தச் சட்டத்தின்படி தண்டத்தொகை எதுவும் செலுத்தப்பட வேண்டியதில்லை மற்றும் நேர்விற்கேற்ப, கூறப்பட்ட அறிவிப்பு அல்லது அறிக்கை அல்லது ஆணையைப் பொறுத்து அனைத்து நடவடிக்கைகளும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகளுக்கு உட்பட்டு முடித்து வைக்கப்படுவதாக கருதப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, 74-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து மற்றும், மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் பணிப்புரையினை பின்பற்றி உரிய அலுவலரால், 75-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு இணங்கி, ஓர் ஆணை பிறப்பிக்கப்படுமாயின் அல்லது பிறப்பிக்கப்பட வேண்டுமாயின், கூறப்பட்ட அறிவிப்பு அல்லது ஆணை, இந்த உட்பிரிவின் (a) கூறு அல்லது (b) கூறில் சுட்டப்பட்டவாறு நேர்விற்கேற்ப, ஓர் அறிவிப்பு அல்லது ஓர் ஆணையாக கருதப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக, இந்த உட்பிரிவின்கீழ் நடவடிக்கைகளின் முடிவானது, (b) கூறு அல்லது (c) கூறில் சுட்டப்பட்ட ஆணைக்கு எதிராக, அல்லது முதலாம் வரம்புரையில் சுட்டப்பட்ட மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் பணிப்புரைகளுக்கு எதிராக, 107-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 112-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்கீழ் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்குமிடத்து, அல்லது 117-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 118-ஆம் பிரிவின் (1)- ஆம் உட்பிரிவின்கீழ் மாநில வரி அலுவலரால் ஒரு மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருக்குமிடத்து அல்லது 108-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்குமிடத்து,
அந்நேர்வுகளில், நேர்விற்கேற்ப, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் அல்லது சீராய்வு அதிகார அமைப்பின் ஆணைக்கு இணங்கி கூடுதலாக செலுத்தத்தக்க வரித்தொகை ஏதேனும் இருப்பின், அதனை அந்நபர், கூறப்பட்ட ஆணையின் தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள், செலுத்துவார் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்:
மேலும், வரம்புரையாக, அத்தகைய வட்டி மற்றும் தண்டத்தொகை
ஏற்கனவே செலுத்தப்பட்டிருக்குமிடத்து, அதனை திரும்ப பெற முடியாது.
(2) (1)-ஆம் உட்பிரிவில் உள்ளடங்கியுள்ள எதுவும், தொகையை தவறாக திரும்பப்பெறும் நபரால் செலுத்தப்படும் தொகை எதற்கும் பொருந்துதல் ஆகாது.
3(3) நேர்விற்கேற்ப, கூறப்பட்ட நபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு அல்லது நீதிப்பேராணை மனு, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் இருக்குமாயின் மற்றும் அது (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கூறப்பட்ட நபரால் திரும்ப பெறப்படாதிருக்குமாயின், அத்தகைய நேர்வுகளில், 1-ஆம் உட்பிரிவில் உள்ளடங்கியுள்ள எதுவும் பொருந்துதல் கூடாது.
(4) இந்தச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், (1)-ஆம் உட்பிரிவின்கீழ் குறிப்பிடப்பட்ட தொகை எதுவும், செலுத்தப்பட்டு மற்றும் நடவடிக்கைகள் கூறப்பட்ட உட்பிரிவின்கீழ் முடிக்கப்பட்டுவிட்டதாக கருதப்படுகின்றபோது, நேர்விற்கேற்ப, (1)-ஆம் உட்பிரிவின் (b) கூறு அல்லது (c) கூறில் சுட்டப்பட்டுள்ள ஓர் ஆணைக்கு எதிராக, 107-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அல்லது 112-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் எந்தவொரு மேல்முறையீடும் தாக்கல் செய்யப்படுதல் ஆகாது".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
4 5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 7 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 2/2025
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள்
மற்றும்
மற்றும் சேவைகள் வரி (இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) 2 மற்றும் 3 ஆம் பிரிவுகளானது, 2025 –ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும் மற்றும் 4 ஆம் பிரிவானது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
2-ஆம்
தமிழ்நாடு சட்டம் பிரிவிற்கான
19/2017.
திருத்தம்.
2. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவில், (61) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(61) "உள்ளீடு சேவை விநியோகிப்பவர்" என்பது 25 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள தனித்த நபர்களுக்கு அல்லது அவர்கள் சார்பாக, 9 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்படி வரிவிதிக்கப்படும் சேவைகள் தொடர்பான விலைப்பட்டியல்கள் உள்ளடங்கலான, உள்ளீடு சேவைகள் பெறுவதன் பொருட்டு வரி விலைப்பட்டியல்கள் பெறும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்கும், சேவை வழங்கும் சேவை வழங்குநரின் அலுவலகம் என்று பொருள்படும் மற்றும் 20 ஆம் பிரிவில் வகைசெய்யப்பட்டுள்ள முறையில் அத்தகைய விலைப்பட்டியல்கள் தொடர்பான உள்ளீடு வரி வரவினை பகிர்ந்தளிக்கும் பொறுப்பையுடையதாகும்;".
20 ஆம்
3. முதன்மைச் சட்டத்தின் 20 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
பிரிவிற்கான மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
மாற்றீடு.
"20. உள்ளீடு சேவை விநியோகிப்பவரால் வரவினை பகிர்ந்தளிக்கும் முறை.- (1) 25 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள தனித்த நபர்களுக்கு அல்லது அவர்கள் சார்பாக, 9 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்படி வரிவிதிக்கப்படும் சேவைகள் தொடர்பான விலைப்பட்டியல்கள் உள்ளடங்கலான, உள்ளீடு சேவைகள் பெறுவதன் பொருட்டு வரி விலைப்பட்டியல்கள் பெறும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்கும், சேவை வழங்குநரின் அலுவலகம் எதுவும், 24 ஆம் பிரிவின் (viii) கூறின்கீழ் உள்ளீடு சேவை விநியோகிப்பவராக பதிவு பெறுவதற்கு வேண்டுறுத்தப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய விலைப்பட்டியல்கள் தொடர்பான உள்ளீட்டு வரி வரவை பகிர்ந்தளித்தல் வேண்டும்.
6(2) உள்ளீடு சேவை விநியோகிப்பவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மற்றும் அத்தகைய காலத்திற்குள், அத்தகைய முறையில், கூறப்பட்ட உள்ளீடு சேவை விநியோகிப்பவராக அதே மாநிலத்தில் பதிவு பெற்ற ஒரு தனித்த நபரால் செலுத்தப்பட்ட, 9 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்கீழ் வரி விதிப்பிற்கு உட்பட்ட சேவைகள் தொடர்பான மாநில வரி அல்லது ஒருங்கிணைந்த வரி வரவு உள்ளடங்கலாக, அவரால் பெறப்பட்ட விலைப்பட்டியல் மீது விதிக்கப்பட்ட மாநில வரி அல்லது ஒருங்கிணைந்த வரி வரவை பகிர்ந்தளித்தல் வேண்டும்.
(3) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், உள்ளீடு வரி வரவுத் தொகையை உள்ளடக்கியுள்ள ஒரு ஆவணத்தை அளிப்பதன் மூலமாக மாநில வரியின் வரவினை, மாநில வரியாகவோ அல்லது ஒருங்கிணைந்த வரியாகவோ மற்றும் ஒருங்கிணைந்த வரியினை ஒருங்கிணைந்த வரியாகவோ அல்லது மாநில வரியாகவோ விநியோகிக்கப்படுதல் வேண்டும்.".
122A எனும் 4. முதன்மைச் சட்டத்தின் 122 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"122A. சிறப்பு நடைமுறையின் படியான சரக்குகளின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட சில இயந்திரங்களை பதிவு செய்யத் தவறியமைக்கான தண்டத்தொகை:- (1) இந்தச் சட்டத்தில் உள்ளடங்கிய எது எவ்வாறிருப்பினும், 148 ஆம் பிரிவின்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ள இயந்திரங்களை பதிவு செய்வது தொடர்பான, எந்தவொரு சிறப்பு நடைமுறையையும் பொறுத்த வகையிலான சரக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நபரும், கூறப்பட்ட சிறப்பு நடைமுறைக்கு முரணாக செயல்படுகிறாரெனில், அவர், அத்தியாயம் XV-இன் படி அல்லது இந்த அத்தியாயத்தின் பிற வகையங்கள் எதன்படியும் அவரால் செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்பட வேண்டியதுடன் கூடுதலாக, அவ்வாறு பதிவு செய்யப்படாத ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய் தொகைக்கு சமமான ஒரு தண்டத் தொகையைச் செலுத்த பொறுப்புடையவராதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படியான தண்டத்துடன் கூடுதலாக, அவ்வாறு பதிவு செய்யப்படாத ஒவ்வொரு இயந்திரமும், கைப்பற்றுதல் மற்றும் பறிமுதலுக்கு உள்ளாதல் வேண்டும்:
வரம்புரையாக,
(a) அவ்வாறு விதிக்கப்பட்ட தண்டத்தொகை
செலுத்தப்பட்டு விட்டதெனில்; மற்றும்
(b) தண்டத்தொகைக்கான ஆணை பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் அத்தகைய இயந்திரத்தின் பதிவு, சிறப்பு நடைமுறைக்கு இணங்கிய வகையில், செய்யப்பட்டுள்ளதெனில்,
அத்தகைய இயந்திரம் பறிமுதல் செய்யப்படுதல் கூடாது.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
7தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 7 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 3/2025
2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில், தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாக:—
குறுந்தலைப்பு
1. (1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள்
மற்றும்
மற்றும் சேவைகள் வரி (மூன்றாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
2 (a) 6-ஆம் பிரிவானது, 2017–ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(b) 30, 34 மற்றும் 36-ஆம் பிரிவுகளானது 2024–ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(c) 31-ஆம் பிரிவின் (a) மற்றும் (b) கூறுகளானது 2024–ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(d) 32 ஆம் பிரிவானது, 2023–ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(e) மற்ற அனைத்துப் பிரிவுகளும் 2024–ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
9-ஆம் 19/2017.
பிரிவிற்கான
திருத்தம் 2. 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படுவதான) 9-ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், "மனித நுகர்வுக்கான மதுபானம்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "மற்றும் மனித நுகர்வுக்கான மதுபானத்தின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் இயல்பு நீக்கப்படாத மிகையான காரஅமில சமநிலையிலான மது (Extra Neutral Alcohol) அல்லது வடித்துப் பிரித்த சாராயம்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
10-ஆம்
பிரிவிற்கான
திருத்தம் 3. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
11A எனும் 4. முதன்மைச் சட்டத்தின் 11-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
8"11A. பொது நடைமுறையின் விளைவாக விதிக்கப்பட்டிராத அல்லது குறைவாக விதிக்கப்பட்டிருக்கிற சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை மீட்காமலிருப்பதற்கான அதிகாரம்.- இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், அரசு திருப்தி கொள்கிறவிடத்து,
(a) சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகை எதன் மீதும் (அதனின் வரி விதித்தல் அல்லாதவை உள்ளடங்கலாக) மாநில வரி விதித்தல் தொடர்பாக, பொதுவாக ஒரு நடைமுறை நிலவியிருந்தது அல்லது நிலவுகிறது; மற்றும்
(b) அத்தகைய வழங்குகையானது,
(i) கூறப்பட்ட நடைமுறைக்கிணங்க, மாநில வரி விதிக்கப்படவில்லை அல்லது விதிக்கப்பட்டிருக்கவில்லை எனும் நேர்வுகளில், மாநில வரி விதிப்பிற்கு, அல்லது
(ii) கூறப்பட்ட நடைமுறைக்கிணங்க, விதிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்டிருக்கிற தொகையை விட கூடுதலான மாநில வரித்தொகையை விதிப்பதற்கு, அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில் தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வாயிலாக, அத்தகைய வழங்குகை மீது செலுத்தத்தக்க மாநில வரி முழுவதையும் அல்லது நேர்விற்கேற்ப, அத்தகைய வழங்குகைகளின் மீது செலுத்தத்தக்க மிகுதியான மாநில வரி, முழுவதையும் செலுத்துவதற்கும் ஆனால், கூறப்பட்ட நடைமுறைக்கு, எந்த வழங்குகை மீது, மாநில வரி விதிக்கப்படவில்லையோ அல்லது விதிக்கப்பட்டிருக்கவில்லையோ, அல்லது கூறப்பட்ட நடைமுறைக்கு இணங்க குறைவாக விதிக்கப்பட்டதோ அல்லது விதிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த வழங்குகை தொகை எதுவும் செலுத்தப்பட அவசியமில்லை என்றும் பணிக்கலாம்.".
13-ஆம்
5. முதன்மைச் சட்டத்தின் 13-ஆம் பிரிவின் (3)-ஆம்
பிரிவிற்கான உட்பிரிவில்,-
திருத்தம்
(i) (b) கூறில், "வழங்குநரால்" எனும் சொற்றொடருக்காக "வழங்குநரால் விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டிய நேர்வுகளில், வழங்குநரால்; அல்லது" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) (b) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(c) பெற்றுக்கொள்பவரால், விலைப்பட்டியல் வழங்கப்பட வேண்டிய நேர்வுகளில், பெற்றுக்கொள்பவரால் விலைப்பட்டியல் வழங்கப்பட்ட தேதி:";
(iii) முதலாம் வரம்புரையில், "அல்லது (b) கூறு" எனும் சொற்களுக்குப் பின்பு, "அல்லது (c) கூறு" எனும் சொற்களானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
16-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்
6. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவின், (4)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(5) (4)-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், 2017-
18, 2018-19, 2019-20 மற்றும் 2020-2021 ஆகிய நிதியாண்டுகளுடன் தொடர்புடைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகைக்கான விலைப்பட்டியல் அல்லது பற்றுக்குறிப்பினைப் பொறுத்து பதிவுபெற்ற நபரானவர், 2021-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட 39-ஆம் பிரிவின்படியான எந்தவொரு விவர அறிக்கையிலும் உள்ளீட்டு வரி வரவினை எடுத்துக் கொள்ள உரிமையுடையவராதல் வேண்டும்.
9(6) ஒரு பதிவுபெற்ற நபரின் பதிவானது 29-ஆம் பிரிவின்படி இரத்து செய்யப்பட்டு, பின்னர், அது 30-ஆம் பிரிவின்படியோ அல்லது மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு அல்லது மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும் தொடர்ந்தோ, பதிவின் இரத்தானது திரும்பப் பெறப்பட்டிருப்பின், மற்றும் பதிவினை இரத்து செய்யும் ஆணையின் தேதியன்று, அத்தகைய விலைப்பட்டியல் அல்லது பற்றுக்குறிப்பைப் பொறுத்து உள்ளீட்டு பயன்பாடு (4)-ஆம் உட்பிரிவின்படி வரையறுக்கப்படாதவிடத்து, கூறப்பட்ட நபர்-
(i) அத்தகைய விலைப்பட்டியல் அல்லது பற்றுக்குறிப்புத் தொடர்புடைய நிதியாண்டினைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதத்தின் முப்பதாம் நாள் அல்லது தொடர்புடைய ஆண்டறிக்கை அளித்தல், இதில் எது முந்தையதோ அது வரையில் தாக்கல் செய்யப்பட்ட; அல்லது
(ii) நேர்விற்கேற்ப, பதிவு இரத்து செய்யப்பட்ட தேதியிலிருந்து அல்லது பதிவு இரத்து செய்யப்பட்டது செல்லுபடியாகும் தேதியிலிருந்து, பதிவு இரத்து திரும்பப் பெறப்பட்ட ஆணையின் தேதி வரையில் மற்றும், பதிவின் இரத்து திரும்பப்பெறப்பட்ட ஆணையின் தேதியிலிருந்து, முப்பது நாட்களுக்குள், இதில் எது பிந்தையதோ அது வரையிலான கால அளவிற்கு, 39-ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்படும் ஓர் அறிக்கையில் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வழங்குகைக்கு அத்தகைய விலைப்பட்டியல் அல்லது பற்றுக்குறிப்பினைப் பொறுத்த உள்ளீட்டு வரிவரவினை எடுத்துக்கொள்வதற்கு உரிமையுடையவராதல் வேண்டும்.".
17-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
7. முதன்மைச் சட்டத்தின் 17-ஆம் பிரிவின், (5)-ஆம் உட்பிரிவின் (i) கூறில், "74, 129 மற்றும் 130-ஆம் பிரிவுகள்" எனும் சொற்றொடருக்காக, "2023-24-ஆம் நிதியாண்டு வரையிலான காலஅளவு எதனையும் பொறுத்து 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
21-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 21-ஆம் பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
30-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
9. முதன்மைச் சட்டத்தின் 30-ஆம் பிரிவின், (2)-ஆம் உட்பிரிவின் வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரையானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"மேலும் வரம்புரையாக, பதிவு இரத்தின் அத்தகைய திரும்பப் பெறுதலானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டிருத்தல் வேண்டும்.".
31-ஆம் 10. முதன்மைச் சட்டத்தின் 31-ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(a) (3)-ஆம் உட்பிரிவில், (f) கூறில், "9-ஆம் பிரிவின்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "வகுத்துரைக்கப்படலாகும் கால அளவிற்குள்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(b) (g) கூறுக்குப் பின்பு, பின்வரும் விளக்கமானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
''விளக்கம்.- (f) கூறின் நோக்கங்களுக்காக, "பதிவு செய்யப்பெறாத வழங்குநர்" எனும் சொற்றொடரானது, 51-ஆம் பிரிவின் கீழ் வரித்தள்ளுபடி நோக்கத்திற்காக மட்டுமே, பதிவு பெற்ற வழங்குநரை உள்ளடக்குதல் வேண்டும்.".
1035-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
11. முதன்மைச் சட்டத்தின் 35-ஆம் பிரிவின் 6-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
39-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
12. முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவின், (3)-ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(3) 51-ஆம் பிரிவின் கீழ் ஆதாரத்திலிருந்து வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டுறுத்தப்பட்டுள்ள பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய படிவத்திலும் முறையிலும் மற்றும் அத்தகைய காலத்திற்குள்ளும், அந்த மாதத்தின் போது செய்யப்பட்ட வரிப்பிடித்தம் ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திற்கும் ஓர் அறிக்கையை மின்னணு வடிவில் அளித்தல் வேண்டும்:
வரம்புரையாக, கூறப்பட்ட பதிவுபெற்ற நபரானவர், அந்தக் கூறப்பட்ட மாதத்தில் ஏதேனும் பிடித்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திற்கும் ஓர் அறிக்கையை அளித்தல் வேண்டும்.".
49-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
13. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவின், (8)-ஆம் உட்பிரிவின் (c) கூறில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
50-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
14. முதன்மைச் சட்டத்தின் 50-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவின் வரம்புரையில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
51-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
15. முதன்மைச் சட்டத்தின் 51-ஆம் பிரிவின் (7)-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
54-ஆம்
16. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
(a) (3)-ஆம் உட்பிரிவின் இரண்டாம் வரம்புரையானது
திருத்தம்.
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) (14)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு மற்றும் விளக்கத்திற்கு
முன்பு, பின்வரும் உட்பிரிவு உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(15) இந்தப் பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், சரக்குகளின் பூஜ்யம் மதிப்பிடப்பட்ட வழங்குகையானது ஏற்றுமதி தீர்வைக்கு உட்பட்டதாக இருக்கையில், சரக்குகளின் பூஜ்யம் மதிப்பிடப்பட்ட வழங்குகை கணக்கின் மீதான பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவினை அல்லது சரக்குகளின் பூஜ்யம் மதிப்பிடப்பட்ட வழங்குகையின் கணக்கில் செலுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வரியினைத் திருப்பிக் கொடுத்தலாகாது.".
61-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
17. முதன்மைச் சட்டத்தின் 61-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
1162-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
18. முதன்மைச் சட்டத்தின் 62-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
63-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
19. முதன்மைச் சட்டத்தின் 63-ஆம் பிரிவில் "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
64-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
20. முதன்மைச் சட்டத்தின் 64-ஆம் பிரிவின், (2)-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
65-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
21. முதன்மைச் சட்டத்தின் 65-ஆம் பிரிவின் (7)-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
66-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
22. முதன்மைச் சட்டத்தின் 66-ஆம் பிரிவின் (6)-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
70-ஆம் 23. முதன்மைச் சட்டத்தின் 70-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவிற்குப்
பிரிவிற்கான பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
திருத்தம்.
"(1A) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அழைப்பாணை விடுக்கப்பட்ட அனைத்து நபர்களும், நேரிலோ அல்லது அத்தகைய அலுவலர் கட்டளையிடுகிறவாறு, ஓர் அதிகாரமளிக்கப்பெற்ற பிரதிநிதி மூலமோ, ஆஜராக வேண்டும் மற்றும் அவ்வாறு முன்னிலையாகும் நபரானவர், விசாரணையின் போது உண்மையைத் தெரிவித்தல் வேண்டும் அல்லது தேவைப்படலாகும் வாக்கு மூலங்களை அளித்தலோ அல்லது அத்தகைய ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை முன்னிடுதலோ வேண்டும்.".
73-ஆம் 24. முதன்மைச் சட்டத்தின் 73-ஆம் பிரிவின்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(i) ஒரத்தலைப்பில், "வரியைத் தீர்மானித்தல்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "2023-2024 ஆம் நிதியாண்டு வரையிலான கால அளவு தொடர்பான" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(ii) (11)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(12) இந்தப் பிரிவின் வகைமுறைகளானது, 2023-2024 ஆம் நிதியாண்டு வரையிலான காலஅளவு தொடர்பான வரி தீர்மானித்தலுக்கு பொருந்துதல் வேண்டும்.".
74-ஆம் 25. முதன்மைச் சட்டத்தின் 74-ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(i) ஓரத்தலைப்பில், "வரியைத் தீர்மானித்தல்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "2023-2024 ஆம் நிதியாண்டு வரையிலான காலஅளவு தொடர்பான" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
12(ii) (11) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, மற்றும் 1-ஆம் விளக்கத்திற்கு முன்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(12) இந்தப் பிரிவின் வகைமுறைகளானது, 2023-2024 ஆம் நிதியாண்டு வரையிலான காலஅளவு தொடர்பான வரி தீர்மானித்தலுக்கு பொருந்துதல் வேண்டும்.";
(iii) 2-ஆம் விளக்கமானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
74A-எனும் 26. முதன்மைச் சட்டத்தின் 74-ஆம் பிரிவிற்குப் பின்பு,
புதிய பிரிவை பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"74A. எந்தவொரு காரணத்திற்காகவும் 2024-2025 ஆம் நிதியாண்டு தொடர்பான செலுத்தப்படாத அல்லது குறைவாகச் செலுத்தப்பட்ட அல்லது தவறுதலாக திருப்பிக் கொடுக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, ஆகியவற்றிற்கான வரியைத் தீர்மானித்தல்.- (1) ஏதேனும் வரி செலுத்தப்படவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது அல்லது உள்ளீட்டு வரி வரவினை முறையின்றி பெறப்பட்டுள்ளது அல்லது பயன்படுத்தப்பட்டுள்ளது என உரிய அலுவலருக்குத் தோன்றுகிறவிடத்து, அவர், அவ்வாறு வரி செலுத்தாத, அல்லது குறைவாகச் செலுத்தியுள்ள, அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ள, அல்லது உள்ளீட்டு வரி வரவினை முறையின்றி பெற்றுள்ள அல்லது பயன்படுத்தியுள்ள அத்தகைய வரியைப் பொறுத்து, பொறுப்புடைய நபரின் மீது, அந்நபர் ஏன் 50 ஆம் பிரிவின்படி, அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட தொகையை அதனுடன் செலுத்தத்தக்க வட்டி மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி விதிக்கப்படத்தக்க ஒரு தண்டத்தொகையுடன் சேர்த்து செலுத்தக்கூடாது என்று விளக்கம் கூறும் படி அறிவிப்பினைச் சார்வு செய்தல் வேண்டும்:
வரம்புரையாக, ஒரு நிதியாண்டில் செலுத்தப்படாத அல்லது குறைவாகச் செலுத்தப்பட்ட அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்ட அல்லது முறையின்றி பெறப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரி வரவு ஆகியன ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளதெனில், எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படுதல் கூடாது.
(2) வரி செலுத்தப்படாதது அல்லது குறைவாக செலுத்தப்பட்டது அல்லது உள்ளீட்டு வரி வரவு முறையின்றி பெறப்பட்டது அல்லது பயன்படுத்தப்பட்டது தொடர்புடைய நிதியாண்டிற்கான ஆண்டறிக்கை அளிப்பதற்கான உரிய தேதியிலிருந்து நாற்பத்தி இரண்டு மாதங்களுக்குள்ளாக அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து நாற்பத்தி இரண்டு மாதங்களுக்குள், உரிய அலுவலர், (1)-ஆம் உட்பிரிவின்படி அறிவிப்பு வழங்குதல் வேண்டும்.
(3) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் கால அளவு எதற்காகவும் ஓர் அறிவிப்பு வழங்கப்பட்டிருக்கிறவிடத்து, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அடங்கியுள்ளவை அல்லாத பிற அத்தகைய கால அளவிற்கு வரிவிதிப்பிற்கு உள்ளான நபருக்கு, வரியைச் செலுத்தாத அல்லது குறைவாக செலுத்திய அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்ட அல்லது முறையின்றி பெற்ற அல்லது பயன்படுத்திய உள்ளீட்டு வரி வரவுகள் அடங்கிய ஓர் அறிக்கையை, உரிய அலுவலர் வழங்கலாம்.
(4) அத்தகைய விவர அறிக்கையின் சார்வானது, (1)-ஆம் உட்பிரிவில் அடங்கியவை அல்லாத பிற அத்தகைய வரிக் கால அளவுகளுக்காக, ஆதரவாகக் கொள்ளப்பட்ட காரணங்களும் முந்தைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட அதே காரணங்களும் ஒன்றே எனும் நிபந்தனைக்குட்பட்டு, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் நபருக்கு அறிவிப்பு சார்வு செய்யப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
13(5) ஏதேனும் வரி செலுத்தப்பட்டிருக்கவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது அல்லது உள்ளீட்டு வரி வரவு முறையின்றி பெறப்பட்டுள்ளது, எனும் நேர்வில், தண்டத்தொகையானது,-
(i) மோசடி அல்லது ஏதேனும் வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்குப் பொருண்மைகளை மறைத்தல் போன்ற காரணங்களுக்காக அல்லாமல், பிற ஏதேனும் காரணத்திற்காக எனில், அத்தகைய நபரின் வரிப்பாக்கியில் பத்து விழுக்காட்டிற்கு இணையாக அல்லது பத்தாயிரம் ரூபாய், இதில் எது அதிகமோ அவ்வாறு இருத்தல் வேண்டும்;
(ii) மோசடி அல்லது ஏதேனும் வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்குப் பொருண்மைகளை மறைத்தல் போன்ற காரணத்திற்காக எனில், அத்தகைய நபரின் வரிப்பாக்கிக்கு நேரிணையாக இருத்தல் வேண்டும்.
(6) உரிய அலுவலர், வரி விதிப்பிற்கு உள்ளான நபரால் செய்யப்பட்ட விண்ணப்பம் ஏதேனும் இருப்பின், அதனை பரிசீலனை செய்த பின்னர், அத்தகைய நபரிடமிருந்து பாக்கியாக உள்ள வரித்தொகை, வட்டி மற்றும் தண்டத்தொகை ஆகியவற்றை தீர்மானித்து ஆணை ஒன்றைப் பிறப்பித்தல் வேண்டும்.
(7) உரிய அலுவலர், (2)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள், (6)-ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை ஒன்றைப் பிறப்பித்தல் வேண்டும்:
வரம்புரையாக, குறிப்பிட்ட காலஅளவிற்குள் உரிய அலுவலரால் ஆணை பிறப்பிக்க இயலாதவிடத்து, ஆணையர் அல்லது உரிய அலுவலரின் படிநிலைக்கு முதுநிலையில் உள்ள ஆனால் தமிழ்நாடு வரி இணை ஆணையரின் படி நிலைக்குக் கீழ் அல்லாத ஆணையரால் அதிகாரமளிக்கப்பட்ட ஓர் அலுவலர், (6)-ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை பிறப்பித்தல் உள்ள தாமதத்திற்கான காரணங்களை எழுத்துருவில் பதிவு செய்யப்பட வேண்டியவற்றைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட காலஅளவு முடிவுறுவதற்கு முன், கூறப்பட்ட காலஅளவினை மேலும் அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம்.
(8) வரி ஏய்ப்பு செய்வதற்காக மோசடி அல்லது வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது பொருண்மைகளை மறைத்தல் போன்ற காரணங்களைத் தவிர ஏதேனும் பிற காரணத்திற்காக வரி செலுத்தப்படாமல் அல்லது குறைவாக செலுத்தப்பட்டு அல்லது தவறுதலாக திருப்பிக்கொடுக்கப்பட்டு அல்லது உள்ளீட்டு வரி வரவு மோசடியாக பெறப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்டு இருக்குமிடத்து, வரி விதிப்பிற்கு உள்ளானவர்,-
(i) (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிப்பு சார்வு செய்யப்படுவதற்கு முன்பு, அத்தகைய வரியினை அவரது சொந்த உறுதிப்படுத்துதலின் பேரில் அல்லது உரிய அலுவலரால் உறுதிப்படுத்தப்பட்டதன் பேரில், 50 ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க அத்தகைய வரித்தொகையினை வட்டியுடன் சேர்த்துச் செலுத்தலாம் மற்றும் அத்தகைய செலுத்தம் பற்றி உரிய அலுவலருக்கு தகவல் அளிக்கலாம் மற்றும் உரிய அலுவலரானவர், அத்தகைய தகவல் கிடைக்கப் பெற்றதன் பேரில், அவ்வாறு செலுத்தப்பட்ட வரி அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி செலுத்தத்தக்க தண்டத்தொகை எதுவும் தொடர்பாக நேர்விற்கேற்ப, (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அறிவிப்பு எதனையும் அல்லது (3)-ஆம் உட்பிரிவின்கீழ் விவர அறிக்கை எதனையும் சார்வு செய்தல் கூடாது;
14(ii) காரணம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்ட அறுபது நாட்களுக்குள், 50-ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க, கூறப்பட்ட வரியினை வட்டியுடன் சேர்த்து செலுத்தலாம் மற்றும் அவ்வாறு செய்ததன் பேரில், எந்தவொரு தண்டத்தொகையையும் செலுத்தப்படுதல் கூடாது மற்றும் கூறப்பட்ட அறிவிப்பினைப் பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும் முடிவுற்றதாக கருதப்படுதல் வேண்டும்.
(9) வரி எதுவும் செலுத்தப்படவில்லை அல்லது குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறுதலாக திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்காக, மோசடி, ஏதேனும் வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது பொருண்மைகளை மறைத்தல் எனும் காரணங்களுக்காக உள்ளீட்டு வரி வரவு மோசடியாக பெறப்பட்டு அல்லது பயன்படுத்தப்பட்டு இருக்குமிடத்து, வரி விதிப்பிற்கு உள்ளானவர்,-
(i) (1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிப்பு சார்வு செய்யப்படுவதற்கு முன்பு, அத்தகைய வரியினை அவரது சொந்த உறுதிப்படுத்துதலின் பேரில் அல்லது உரிய அலுவலரால் உறுதிப்படுத்தப்பட்டதன் பேரில், 50 ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க அத்தகைய வரித்தொகையினை வட்டியுடன் சேர்த்தும், அத்தகைய வரிக்கு இணையாக பதினைந்து விழுக்காடு தண்டத்தொகையைச் செலுத்தலாம் மற்றும் அத்தகைய செலுத்தம் பற்றி உரிய அலுவலருக்கு தகவல் அளிக்கலாம் மற்றும் உரிய அலுவலரானவர், அத்தகைய தகவல் கிடைக்கப்பெற்றதன் பேரில், அவ்வாறு செலுத்தப்பட்ட வரி அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி செலுத்தப்பட்ட தண்டத்தொகை தொடர்பாக, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிப்பு எதனையும் சார்வு செய்தல் கூடாது;
(ii) அறிவிப்பு வழங்கப்பட்ட அறுபது நாட்களுக்குள் 50-ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க கூறப்பட்ட வரியினை வட்டியுடன் சேர்த்தும் அத்தகைய வரிக்கு இணையாக இருபத்தைந்து விழுக்காடு தண்டத்தொகையையும் செலுத்தலாம் மற்றும் அவ்வாறு செய்ததன் பேரில், கூறப்பட்ட அறிவிப்பினைப் பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும் முடிவுற்றதாக கருதப்படுதல் வேண்டும்;
(iii) ஆணை அனுப்பப்பட்டதிலிருந்து அறுபது நாட்களுக்குள், 50-ஆம் பிரிவின்கீழ் செலுத்தத்தக்க கூறப்பட்ட வரியினை வட்டியுடன் சேர்த்து, அத்தகைய வரிக்கு இணையான ஐம்பது விழுக்காடு தண்டத்தொகையையும் செலுத்தலாம் மற்றும் அவ்வாறு செய்ததன் பேரில் கூறப்பட்ட அறிவிப்பினைப் பொறுத்த அனைத்து நடவடிக்கைகளும் முடிவுற்றதாக கருதப்படுதல் வேண்டும்.
(10) (8)-ஆம் உட்பிரிவின் (i)-ஆம் கூறின்கீழ் அல்லது (9)-ஆம் உட்பிரிவின் (i)-ஆம் கூறின்கீழ் செலுத்தப்பட்ட தொகையானது, உள்ளபடியே செலுத்தப்பட வேண்டிய தொகைக்கும் குறைவாக உள்ளது என்று உரிய அலுவலர் கருதுகிறவிடத்து, உள்ளபடியே செலுத்தப்பட வேண்டிய தொகைக்குக் குறைவாக உள்ள அத்தகைய தொகையைப் பொறுத்து, (1)-ஆம் உட்பிரிவில் வகைசெய்யப்பட்டுள்ளவாறு அறிவிப்பு வழங்குவதற்கு முற்படுதல் வேண்டும்.
(11) (8)-ஆம் உட்பிரிவின்கீழ் (i)-ஆம் கூறு அல்லது (ii)-ஆம் கூறில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அத்தகைய வரி செலுத்த வேண்டிய உரிய தேதியிலிருந்து முப்பது நாட்கள் காலஅளவிற்குள் சுய வரிக்கணிப்பு செய்யப்பட்ட வரித்தொகை எதையும் அல்லது வரியாக வசூலிக்கப்பட்ட தொகை எதையும் செலுத்தப்படாதவிடத்து, (5)-ஆம் உட்பிரிவின் (i)-ஆம் கூறின்கீழ் தண்டத்தொகை செலுத்தப்படுதல் வேண்டும்.
15(12) இந்தப் பிரிவின் வகைமுறைகளானது, 2024-2025 தொடங்கிய நிதியாண்டிற்குத் தொடர்புடைய வரி தீர்மானித்தலுக்கு பொருந்துதல் வேண்டும்.
விளக்கம் 1.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-
(i) "கூறப்பட்ட அறிவிப்பு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும்" எனும் சொற்றொடரானது, 132-ஆம் பிரிவின் படியான நடவடிக்கைகளை உள்ளடக்குதல் கூடாது.
(ii) வரி செலுத்துவதற்கு பொறுப்புடைய முக்கிய நபருக்கும் வேறு சில நபர்களுக்கும், அதே நடவடிக்கைகளின் கீழ் அறிவிப்பு வழங்கப்படுகிறவிடத்தும் முக்கிய நபருக்கு எதிரான அத்தகைய நடவடிக்கைகள் இந்தப் பிரிவின்கீழ் முடிவுற்றிருக்கிறவிடத்தும், 122 மற்றும் 125-ஆம் பிரிவுகளின்கீழ் தண்டத்தொகை செலுத்துவதற்குப் பொறுப்புடைய அனைத்து நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் முடிவுற்றதாக கருதப்படுதல் வேண்டும்.
விளக்கம் 2.- இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, "மறைத்தல்" எனும் சொல்லானது, இந்தச் சட்டம் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி அளிக்கப்பட்ட அறிக்கை, விவர அறிக்கை, குறிப்புரை அல்லது பிற ஆவணம் எதிலும் வரிவிதிக்கத்தக்க நபர் விளம்புகை செய்வதற்கு வேண்டுறுத்தப்படும் பொருண்மைகள் அல்லது தவகல்களை விளம்புகை செய்யாதிருத்தல் அல்லது ஓர் உரிய அலுவலரால் எழுத்து வடிவில் அளிக்குமாறு கேட்கப்பட்ட தகவல் எதையும் அளிக்கத் தவறுதல் என்று பொருள்படும்.".
75-ஆம் 27. முதன்மைச் சட்டத்தின் 75-ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(a) (1) ஆம் உட்பிரிவில், "74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவின் (2)-ஆம் மற்றும் (7)-ஆம் உட்பிரிவுகள்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(b) (2)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2A) மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு அல்லது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றமானது அறிவிப்பு வழங்கப்பெற்ற நபருக்கு எதிராக, வரி ஏய்ப்பு செய்வதற்காக, மோசடி அல்லது ஏதேனும் வேண்டுமென்றே பொய் அறிக்கை செய்தல் அல்லது பொருண்மைகளை மறைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தினால், 74A-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவின் (ii) கூறின்கீழ் தண்டத்தொகையானது நிலைநிறுத்தக்கூடியதல்ல என்ற முடிவிற்கு வருகிறவிடத்து, அந்த நபரால் 74A-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவின் (ii) கூறின்கீழ் தண்டத்தொகை செலுத்தப்படுதல் வேண்டும்.";
(c) (10)-ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(10) 73-ஆம் பிரிவின் (10) ஆம் உட்பிரிவில் அல்லது 74-ஆம் பிரிவின் (10) ஆம் உட்பிரிவில் அல்லது 74A-ஆம் பிரிவின் (7)-ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலஅளவிற்குள் ஆணை பிறப்பிக்கப்படவில்லையாயின், நீதிமுறையில் தீர்மானிக்கும் நடவடிக்கைகள் முடிவுற்றதாகக் கருதப்படுதல் வேண்டும்.";
16(d) (11)-ஆம் உட்பிரிவில், "74-ஆம் உட்பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவின் (7)-ஆம் உட்பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(e) (12)-ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(f) (13)- ஆம் உட்பிரிவில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
104-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
28. முதன்மைச் சட்டத்தின் 104 ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் விளக்கத்தில், "74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவின் (2)-ஆம் மற்றும் (7)-ஆம் உட்பிரிவுகள்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
107-ஆம்
29. முதன்மைச் சட்டத்தின் 107- ஆம் பிரிவில், -
பிரிவிற்கான
திருத்தம்.
(a) (6)-ஆம் உட்பிரிவில், (b) கூறில் "இருபத்தி ஐந்து" எனும் சொற்றொடருக்காக, "இருபது" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (11)-ஆம் உட்பிரிவில், இரண்டாம் வரம்புரையில், "73-ஆம் பிரிவு அல்லது 74-ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A-ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
109-ஆம்
30. முதன்மைச் சட்டத்தின் 109-ஆம் பிரிவில், -
பிரிவிற்கான
திருத்தம்.
(1) ஆம் உட்பிரிவில், இந்தச் சட்டத்தின்படியான "சீராய்வு அதிகாரஅமைப்பு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது, கூறப்பட்ட பிரிவின்கீழ் அவ்வாறு அறிவிக்கை செய்யப்பட்டிருப்பின், 171-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட வழக்குகளில் ஒரு விசாரணையை நடத்துவதற்கு அல்லது நீதிமுறையில் தீர்மானிக்கும் அமைப்பாக இருத்தல் வேண்டும்" எனும் சொற்றொடரானது சேர்த்தல் வேண்டும்.
112-ஆம்
31. முதன்மைச் சட்டத்தின் 112-ஆம் பிரிவில், -
பிரிவிற்கான
திருத்தம்.
(a) (1)-ஆம் உட்பிரிவில், "மேல்முறையீடு தாக்கல் செய்யும் நபருக்கு, மேல்முறையீடு செய்ய கருதப்பட்டுள்ள ஆணை அனுப்பப்பட்ட தேதியில் இருந்து," எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முன்பு மேல்முறையீடு தாக்கல் செய்வதற்காக, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற தேதி; இதில் எது பிந்தையதோ, அது" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
(b) (3)-ஆம் உட்பிரிவில், " கூறப்பட்ட ஆணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் முன்பு விண்ணப்பம் தாக்கல் செய்யும் நோக்கத்திற்காக, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற தேதி; இதில் எது பிந்தையதோ, அது" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
(c) (6)-ஆம் உட்பிரிவில், "(1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட காலஅளவு முடிவடைந்த பின்பு", எனும் சொற்றொடருக்குப் பின்பு, "(3) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட காலஅளவு முடிவடைந்த பின்பு, மூன்று மாதங்களுக்குள் ஒரு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதை அனுமதித்தல்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
17(d) (8)-ஆம் உட்பிரிவின், (b) கூறில்,-
(i) "இருபது விழுக்காடு" எனும் சொற்றொடருக்காக, "பத்து விழுக்காடு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) "ஐம்பது கோடி ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "இருபது கோடி ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
122-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
32. முதன்மைச் சட்டத்தின் 122-ஆம் பிரிவில், (1B) உட்பிரிவில், "மின்னணு வணிகம் இயக்குகிற நபர் எவரும்" எனும் சொற்றொடருக்காக, "52 ஆம் பிரிவின்கீழ் ஆதாரத்தில் வரி வசூலிப்பதற்குப் பொறுப்புடைய மின்னணு வணிகம் இயக்குகிற நபர் எவரும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
127-ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
33. முதன்மைச் சட்டத்தின் 127-ஆம் பிரிவில், "73 ஆம் பிரிவு அல்லது 74 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது 74A ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
171-ஆம் 34. முதன்மைச் சட்டத்தின் 171-ஆம் பிரிவில்,–
பிரிவிற்கான (a) (2)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரையும் விளக்கங்களும்
திருத்தம்.
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:–
"வரம்புரையாக, அரசு, அறிவிக்கையின் மூலம், மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், பதிவுசெய்யப்பட்ட நபரால் உள்ளீட்டு வரி வரவுகள் பெறப்பட்டுள்ளதா அல்லது உண்மையில் அவரால் வழங்கப்பட்டுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டின் விலையில் சமமான குறைப்பை ஏற்படுத்துகின்ற வரி வீதத்தில் குறைப்பு உள்ளதா என்பது பொறுத்த ஆய்வுக்கான எந்தவொரு கோரிக்கையையும் ஏற்கப்படுதல் ஆகாது.
விளக்கம் 1– இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, "ஆய்வுக்கான கோரிக்கையானது" பதிவுசெய்யப்பட்ட நபரால் உள்ளீட்டு வரி வரவுகள் பெறப்பட்டுள்ளதா அல்லது உண்மையில் அவரால் வழங்கப்பட்டுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இரண்டின் விலையில் சமமான குறைப்பை ஏற்படுத்துகின்ற வரி வீதத்தில் குறைப்பு உள்ளதா என்பது பொறுத்த ஆய்வு கோரி விண்ணப்பதாரரால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்து வடிவிலான விண்ணப்பம் என்று பொருள்படும்.";
விளக்கம் 2.– இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, "அதிகாரஅமைப்பு" எனும் சொற்றொடரானது "மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்" என்பதையும் உள்ளடக்கும்.".
III-ஆம்
இணைப்புப்
பட்டியலுக்கான 35. முதன்மைச் சட்டத்தின் III-ஆம் இணைப்புப்பட்டியலில், 8-ஆம் பத்திக்குப் பின்பு மற்றும் விளக்கம்-1 ற்கு முன்பு, பின்வரும் பத்திகள் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:–
திருத்தம்.
"9. காப்பீடு செய்தவர் செலுத்தும் கட்டணத்தின் முழுத் தொகை மீதான மைய வரி, மாநில வரி மற்றும் ஒருங்கிணைந்த வரியை முன்னணி காப்பீட்டாளர் செலுத்தும் நிபந்தனைக்கு உட்பட்டு, இணைக் காப்பீட்டு ஒப்பந்தங்களில் காப்பீடு செய்தவருக்கு, முன்னணி காப்பீட்டாளரும் இணை காப்பீட்டாளரும் இணைந்து வழங்கும் காப்பீட்டுச் சேவைகளுக்காக, முன்னணி காப்பீட்டாளரால், இணை காப்பீட்டாளருக்கு இணை காப்பீட்டுக் கட்டணத்தைப் பங்கீடு செய்யும் நடவடிக்கை.
1810. கூறப்பட்ட ஒப்புக்கொண்ட தரகு அல்லது மறுகாப்பீட்டு தரகு உள்ளடங்கலாக, காப்பீட்டாளரால் மறுகாப்பீட்டாளருக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த மறுகாப்பீட்டு கட்டணத்தில் மறுகாப்பீட்டாளரால் மைய வரி, மாநில வரி, மற்றும் ஒருங்கிணைந்த வரி செலுத்தப்படுகிறது என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, காப்பீட்டாளரால் மறுகாப்பீட்டாளருக்கு செலுத்தப்பட்ட மறுகாப்பீட்டு கட்டணத்திலிருந்து குறைக்கப்படும் ஒப்புக்கொண்ட தரகு அல்லது மறுகாப்பீட்டுத் தரகுக்காக மறுகாப்பீட்டாளருக்குக் காப்பீட்டாளரால் செய்யப்படும் சேவைகள்.".
செலுத்தப்பட்ட
வரி அல்லது
திருப்பப்பட்ட
உள்ளீட்டு வரி
வரவு திரும்ப
36. அனைத்து முக்கிய நேரங்களிலும், இச்சட்டத்தின் 6-ஆம் பிரிவு நடைமுறையில் இருந்தாற்போன்று, செலுத்தப்பட்ட அல்லது திருப்பப்பட வேண்டியதல்லாத ஆனால், அவ்வாறு செலுத்தப்பட்ட வரி அல்லது திருப்பப்பட்ட உள்ளீட்டு வரி வரவு அனைத்தும் திரும்ப வழங்கப்படுதல் ஆகாது.
வழங்கப்படுதல்
ஆகாது.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
19தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 21 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 4/2025
1925-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிச் சட்டத்தினை
நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர்
சீர்திருத்தப்பள்ளி (நீக்கறவுச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 1 ஆம் நாள் அன்று
நடைமுறைக்கு வந்ததாக கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
தமிழ்நாடு சட்டம் 2. 1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி சட்டம்
V/1926.
V/1926-ன் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
நீக்கறவு.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
20 21தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 21 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
சட்ட எண். 5/2025
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடைசெய்கின்ற சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடைசெய்கின்ற (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் 44/1998.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடைசெய்கின்ற சட்டத்தின் 2 ஆம் பிரிவில் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான),-
(1) (a) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
(a) "துன்பம் விளைவித்தல்" என்பது, உடல் ரீதியாகவோ, வாய்மொழியாகவோ, வாய்மொழி அல்லாததாகவோ, எண்மமுறையிலோ, மின்னணு ரீதியாகவோ அல்லது வேறு எந்த வழியிலும், அச்சுறுத்துதல் அல்லது வசைபாடுதல் அல்லது காயம் ஏற்படுத்துதல் அல்லது தொந்தரவு அல்லது தாக்குதல் அல்லது பலத்தைப் பயன்படுத்துதல் உட்பட, மிரட்டுதல், பயம் அவமானத்தை அல்லது சங்கடத்தை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தக்கூடிய, ஓர் ஆணின் பண்பற்ற அநாகரீகமான நடத்தை, செய்கை அல்லது செயல் எதுவும் என்று பொருள்படும்;";
(2) (c) கூறில், "1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டம் (மையச் சட்டம் XLV/1860) எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) மற்றும் 2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (மையச் சட்டம் 46/2023)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், "மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்குச் சிறைத்தண்டனையுடன் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் " எனும் சொற்றொடருக்காக, "முதல் தண்டனைத் தீர்ப்பின் பேரில் ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் இரண்டாம் அல்லது தொடர்ச்சியான தண்டனைத்தீர்ப்பின் பேரில் ஐந்தாண்டுகளுக்கு குறையாத, ஆனால் பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனையுடன் பத்து இலட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
224-A 4. முதன்மைச் சட்டத்தின் 4-A பிரிவில்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில், "இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மையச்சட்டம் XLV/1860) 294, 354 அல்லது 509 ஆம் பிரிவுகள்" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 74, 75, 76, 77, 78, 79 அல்லது 296 ஆம் பிரிவுகள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2) ஆம் உட்பிரிவில்,-
(a) (i) கூறில், "ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவுக்குச் சிறைத்தண்டனை வகைகளில் ஏதாவதொன்றும், ஐம்பதாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "ஆயுட்காலத்திற்கு அதாவது அந்த நபரின் எஞ்சியுள்ள இயற்கையான ஆயுட்காலத்திற்கு சிறைத்தண்டனையும் இரண்டு இலட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் அல்லது மரண தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (ii) கூறில், "பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவுக்குச் சிறைத்தண்டனை வகைகளில் ஏதாவதொன்றும், ஐம்பதாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் " எனும் சொற்றொடருக்காக, "பதினைந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவுக்குச் சிறைத்தண்டனை வகைகளில் ஏதாவதொன்றும் , இரண்டு இலட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் " எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (iii) கூறில், "பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவுக்குச் சிறைத்தண்டனை வகைகளில் ஏதாவதொன்றும் , இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "பதினைந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவுக்குச் சிறைத்தண்டனை வகைகளில் ஏதாவதொன்றும் , ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4-B பிரிவிற்கான 5. முதன்மைச் சட்டத்தின் 4-B பிரிவில்,-
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில், "இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 294, 354 (மையச்சட்டம் XLV/1860) அல்லது 509 ஆம் பிரிவுகள்" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 74, 75, 76, 77, 78, 79 அல்லது 296 ஆம் பிரிவுகள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2) ஆம் உட்பிரிவில், "பத்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவுக்குச் சிறைத்தண்டனை வகைகளில் ஏதாவதொன்றும் , ஐம்பதாயிரம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "பதினைந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவுக்குச் சிறைத்தண்டனை வகைகளில் ஏதாவதொன்றும் , இரண்டு இலட்சம் ரூபாய்க்குக் குறையாத அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
234-C பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 4-C பிரிவில், "இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் (மையச்சட்டம் XLV/1860) 294, 354 அல்லது 509 ஆம் பிரிவுகள்" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 74, 75, 76, 77, 78, 79 அல்லது 296 ஆம் பிரிவுகள்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
5 ஆம் 7. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான (1) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
திருத்தம்.
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) கல்வி நிலையம் , விடுதி, கோயில் அல்லது பிற வழிப்பாட்டிடம் , திரைஅரங்கு, உணவு விடுதி, உணவகம், மருத்துவமனை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான காப்பகம் அல்லது விடுதி எதுவும் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், வணிக வளாகங்கள் அல்லது பிற வளாகம் எதனையும் பொறுப்பில் கொண்டிருக்கிற நபரெவரும் ,-
(a) கண்காணிப்பு படக்கருவிகள், விளக்குகளை பொறுத்துதல் உள்ளடங்கலான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் அவ்வளாகத்திற்குள்ளாக பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடுக்க வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் ;
(b) பாதிக்கப்பட்ட நபரொருவரால் செய்யப்பட்ட புகாரின் பேரில் , பெண்ணிற்குத் துன்பம் விளைவிப்பது குறித்து காவல் துறையினருக்கு சம்பவம் நிகழ்ந்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் தகவல் அளித்தல் வேண்டும்.";
(2) (2) ஆம் உட்பிரிவில், "இரண்டாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "ஐம்பதாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
6 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், "ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "இருபத்தைந்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
7 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
9. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "ஐந்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "எழுபத்தைந்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
7-B மற்றும் 7-C 10. முதன்மைச் சட்டத்தின் 7-A பிரிவிற்கு பின்பு, பின்வரும்
ஆகிய பிரிவுகளை பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"7-B. கைது செய்யப்படக்கூடிய மற்றும் பிணையில் விடமுடியாத குற்றங்கள்.- இந்தச் சட்டத்தின் 4, 4-A, 4-B மற்றும் 7-C ஆகிய பிரிவிகளின்கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களானது, கைது செய்யப்படக்கூடிய மற்றும் பிணையில் விடமுடியாத குற்றங்களாக இருத்தல் வேண்டும்.
247-C. பாதுகாப்பு ஆணை.- (1) நிர்வாகத் துறை நடுவர், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தின்பேரிலோ அல்லது பிறவாராகவோ, தொடர்புடைய புலனாய்வு அலுவலரின் அறிக்கையைப் பெற்றபின்பும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கேட்பதற்கான வாய்ப்பொன்று வழங்கிய பின்பும், முதல் நோக்கில், இந்தச் சட்டத்தின் 4-ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் அல்லது 2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 74, 75, 76, 77, 78, 79 அல்லது 296 ஆம் பிரிவின்கீழ் தண்டனைக்குரிய குற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மனநிறைவு அடைவதன் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட முறையிலோ அல்லது வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ அல்லது மின்னணு அல்லது தொலைபேசி தொடர்பு அல்லது மூன்றாம் தரப்பினர் மூலமாகவோ எந்த வடிவத்திலும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதைத் தடைசெய்யும் பாதுகாப்பு ஆணையை பிறப்பிக்கலாம்.
(2) குற்றம் சாட்டப்பட்டவர், பாதுகாப்பு ஆணையை மீறுவது, இந்தச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றமாகும், மேலும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனை வகைகளில் ஏதாவதொன்றும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுதல் வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.