| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY EXTRAORDINARY | ||
No. 81] CHENNAI, THURSDAY, FEBRUARY 20, 2025 Maasi 8, Kurothi, Thiruvalluvar Aandu-2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
No. II(2)/ADTW/166(b)/2025.
[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் நியமனம் செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண். 22, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல(ஆதிந.6)த் துறை, நாள் 20 பிப்ரவரி 2025, மாசி 8, குரோதி திருவள்ளுவர் ஆண்டு-2056.]
படிக்கப்பட்டது:-
1. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையச் சட்டம்,
2021, (தமிழ்நாடு சட்டம் 17/2021)
2. அரசாணை (நிலை) எண்.70, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் [ஆதிந6(2)]
துறை, நாள். 12.10.2021
3. அரசாணை (நிலை) எண்.73, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் [ஆதிந6(2)]
துறை, நாள். 15.10.2021.
4. அரசாணை (2ப) எண்.01, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் [ஆதிந6(2)]
துறை, நாள். 02.01.2025.
-----------
ஆணை:-எண். 22, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல(ஆதிந.6)த் துறை, நாள் 20 பிப்ரவரி 2025
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையச் சட்டம், 2021 (தமிழ்நாடு சட்டம் 17/2021), பிரிவு 3-இன் உட்பிரிவு (2)-இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட நபர்களை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது:-
2 TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY| துணைத் தலைவர் : | திரு. இமயம் (வெ. அண்ணாமலை), கடலூர் மாவட்டம் |
| உறுப்பினர்கள் : | 1. திரு. செ. செல்வக்குமார், கோயம்புத்தூர் மாவட்டம் 2. முனைவர் சு. ஆனந்தராஜா, தஞ்சாவூர் மாவட்டம் 3. திரு. மு. பொன்தோஸ், நீலகிரி மாவட்டம் 4. திரு. பொ. இளஞ்செழியன், திருநெல்வேலி மாவட்டம் |
2. மேலே நியமிக்கப்பட்ட துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது அவர்களின் வயது 65 ஆண்டுகள் நிறைவடையும் தேதி இதில் எது முந்தையதோ அதுவரையில் ஆகும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
க. லட்சுமி பிரியா, அரசுச் செயலாளர்.