© தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 3.20 காசு[விலை: ரூ. 3.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 11] சென்னை, புதன்கிழமை, மார்ச் 19, 2025 பங்குனி 5, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண்.208, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (FR13)த் துறை, 2 டிசம்பர் 2024] 1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் 4(c) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (FR13)த் துறையின் 02.12.2024 ஆம் நாளிட்ட 208 ஆம் (நிலை) எண் அரசாணையின் பத்தி 4(v) இல் குறிப்பிடப்பட்டுள்ள வன நிர்ணய அலுவலரை, மேற்சொன்ன அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகார வரம்பெல்லைக்குட்பட்ட நிலப்பகுதியைப் பொறுத்தவரையில், 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ் வன நிர்ணய அலுவலரின் பணிகளைச் செயல்படுத்துவதற்கு இதனால் நேமகம் செய்கிறார்/ ஏற்பளிக்கிறார்.
மேலும், குறிப்பிட்ட ஒரு மாவட்டம் தொடர்பாக, 1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் 4(c) ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட யாதொரு முந்தைய அறிவிக்கைகளிலுள்ள, வன நிர்ணய அலுவலருக்கான ஒவ்வொரு குறிப்புரையும், சந்தர்ப்பம் வேறுபொருள் குறித்தாலன்றி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (FR13)த் துறையின் 02.12.2024 ஆம் நாளிட்ட 208 ஆம் (நிலை) எண் அரசாணையின் பத்தி 4(v) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அம்மாவட்டத்திற்கான வன நிர்ணய அலுவலருக்கான குறிப்புரையாகப் பொருள் கொள்ளப்படும்.
[அரசாணை (நிலை) எண். 219, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (வனம்.9)த் துறை, 2 டிசம்பர் 2024] மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் அறிவிக்கையிடப்பட்ட 2017-ஆம் ஆண்டு ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கிணங்க தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன விதிகளின் 5ஆம் விதியைச் சேர்ந்த துணை விதி (1)-இன் கீழ், தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையத்தைப் பின்வருமாறு இதனால் அறிவிக்கிறார்:-
| (i) | மாண்புமிகு அமைச்சர் (வனம்) | தலைவர் |
| (ii) | அரசு தலைமைச் செயலாளர் | துணைத் தலைவர் |
| (iii) | கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / அரசுச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை | அலுவல் வழி உறுப்பினர். |
| (iv) | கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / அரசுச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை | அலுவல் வழி உறுப்பினர் |
| (v) | கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / அரசுச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை | அலுவல் வழி உறுப்பினர் |
| (vi) | கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / அரசுச் செயலாளர், நீர்வளத் துறை | அலுவல் வழி உறுப்பினர் |
II-2-(11) (T Sup)—1
[ 1 ]2
| (vii) | கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / அரசுச் செயலாளர். கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை | அலுவல் வழி உறுப்பினர் |
| (viii) | கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / அரசுச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை | அலுவல் வழி உறுப்பினர் |
| (ix) | கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / அரசுச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை | அலுவல் வழி உறுப்பினர் |
| (x) | உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் | அலுவல் வழி உறுப்பினர் |
| (xi) | பேராசிரியர் மற்றும் இயக்குநர், தொலையுணர்வு மையம் (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிமோட் சென்சிங்) அண்ணா பல்கலைக்கழகம் | அலுவல் வழி உறுப்பினர் |
| (xii) | முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் | அலுவல் வழி உறுப்பினர் |
| (xiii) | உறுப்பினர் செயலர். தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியம் | அலுவல் வழி உறுப்பினர் |
| (xiv) | சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் மண்டல அலுவலகத்தின் கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் | அலுவல் வழி உறுப்பினர் |
| (xv) | 2017-ஆம் ஆண்டு வன உயிரின (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் விதி 5(I)-இன் (xvii)ஆம் பகுதியின் கீழ் ஈரநிலச் சூழலியல், நீரியல், மீன்வளம், நிலப்பரப்பு திட்டமிடல் மற்றும் சமூக-பொருளாதாரம் ஆகிய ஒவ்வொரு துறைகளிலிருந்தும் ஒரு வல்லுநர். (அ) டாக்டர்.TV. இராமச்சந்திரா. ஒருங்கிணைப்பாளர், எரிசக்தி மற்றும் ஈரநில ஆராய்ச்சிக் குழுமம் (CES TE 15) சுசுழலியல் அறிவியல் மையம் புதிய உயிரி அறிவியல் கட்டடம், மூன்றாவது தளம், E பிரிவு (D நுழைவாயில் அருகில்), இந்திய அறிவியல் நிறுவனம் (IISC) பெங்களூர் 560 012. (ஈரநிலச் சுழலியல் வல்லுநர்) (ஆ) டாக்டர்.V.செல்வம், 23, தில்லை நடராஜர் சாலை, கனகசபை நகர், சிதம்பரம் -608 001. கடலூர் மாவட்டம். (நீரியல் வல்லுநர்) (இ) டாக்டர்.S.பெலிக்ஸ், மேனாள் துணை வேந்தர். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நிறுவனர் தலைவர். (AQUAFIN) D-3 கிரேஸ் கேசில், வானவில் வாசல் செந்தில் நகர் ஆறாவது தெரு பெருங்குடி, சென்னை 600 096 (மீன்வள வல்லுநர்) (ஈ) டாக்டர்.K.சங்கர் முன்னாள் இயக்குநர். சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON). சுற்றுச்சுழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம். அமைச்சகம். 13/14, ஸ்டேட் பாங்க் காலனி, 7ஆவது குறுக்குத் தெரு விரிவாக்கம், சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை 600 020. (நிலப்பரப்பு திட்டமிடல் வல்லுநர்) | உறுப்பினர்கள் |
| (உ) டாக்டர்.வினீதா ஹூன், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் சமூகம் குறித்த செயல் ஆராய்ச்சி மையம், (Centre for action research on environment science and society), 160 சிவானந்தா சாலை, கில்நகர் விரிவாக்கம் 2, சென்னை - 600 094. (சமூக-பொருளாதார வல்லுநர்) | ||
| (xvi) | முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் / கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் /தலைமை வன பாதுகாவலர் | உறுப்பினர் செயலர் |
2017-ஆம் ஆண்டு ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கான வழிகாட்டிக்குறிப்பின் பத்தி (13)-இன் படி சிவில் சமூகத்திலிருந்து பின்வரும் நபரை அரசு தெரிவு செய்துள்ளது:-
திரு.டார்வின் அண்ணாதுரை 852, கலைவாணர் சாலை, தயாகர் அவென்யூ சிட்லப்பாக்கம் சென்னை- 600 064
மேற்கண்ட வல்லுநர் உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்றாண்டுகளாகும். மாநில அரசின் முதல் வகுப்புக் குழு உறுப்பினர்களுக்கு நிகராக வல்லுநர் உறுப்பினர்களுக்கு பயணப்படிகளும் அகவிலைப்படிகளும் அனுமதிக்கப்படும்.
P.செந்தில்குமார்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர் (கூ.பொ) ,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி(மொழிபெயர்ப்பு)த் துறை.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 244, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறை, 17 டிசம்பர் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 14.03.1990 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 136 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்◌் துறையின் II(2)/வீவந/1343/90 ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளவாறான. அத்தகைய பெரம்பலூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியிலிருந்து, அதனைத் தொடர்ந்து திருத்தப்பட்டுள்ளவாறு, பின்வரும் வருவாய் கிராமங்களை நீக்குவதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-
"வருவாய் கிராமங்களின் எண்ணும் பெயரும்"
03. கீழக்கரை
05. செங்குணம்
25.கல்பாடி (வடக்கு)
26.கல்பாடி (தெற்கு)
79.நொச்சியம்
40. சித்தளி (மேற்கு)
39. சித்தளி (கிழக்கு)
41. பேரளி (வடக்கு)
42. பேரளி (தெற்கு)
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம். அவ்வாறு நீக்குவதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்துப்பூர்வமாக அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் பெறப்பட்டிருப்பின், அவை மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் வரையறைகளுக்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் கருதிப்பார்க்கப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாக 'அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம். புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை 600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
4[அரசாணை (நிலை) எண். 245, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறை, நாள். 17 டிசம்பர் 2024.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
(1) 27.02.2008 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 106ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/HOU/115/2008 ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டவாறான அரியலூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியிலிருந்து பின்வரும் வருவாய் கிராமங்களை நீக்குதல். அவையாவன:-
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்
குன்னம் வட்டம்குன்னம் வட்டம்
49. அழகிரிபாளையம்
50. தொண்டபாடி
81. புஜங்கராயநல்லூர்
82. நொச்சிகுளம்
86. ஆத்தூர்"; மற்றும்
(2) மேற்சொன்ன அரியலூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை கூடுதல் பகுதிகளாக சேர்த்தல் அவையாவன:-
11. அமீனாபாத் பகுதி I முதல் V வரை
6. கோவிந்தபுரம்
23. மல்லூர்
29. கீழப்பழுவூர்
25. பார்ப்பனச்சேரி
30. கருப்பூர் சேனாபதி
22. சிருவளூர்
21. புதுப்பாளையம்."
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு நபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம், கருதப்பட்டுள்ள நீக்குதல் மற்றும் சேர்த்தல் குறித்து மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனுமிருப்பின். அதனை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனும் பெறப்பட்டிருப்பின்), மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் வரையறைகளுக்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கையை தொடருவதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்) அவற்றை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை -600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண்.251, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ1]த் துறை, 24 டிசம்பர் 2024.] 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் பகுதிகளை மறைமலைநகர் புதிய நகருக்கான இடமாக குறிப்பிடும் அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்:-
புதிய நகருக்கான இடமாக அமையும் பகுதி
| கிராமத்தின் பழைய எண் | கிராமத்தின் புதிய எண் | கிராமத்தின் பெயர் | வட்டம் |
| 155. | - | வளையக்கரணை | குன்றத்தூர் |
| 158. | - | வடமேல்பாக்கம் | |
| 159. | - | காட்டுப்பாக்கம் | |
| 164. | - | கொருக்கன்தாங்கல் | |
| 169. | - | மாடம்பாக்கம் | |
| 168. | - | குத்தனூர் | |
| 160. | - | ஏரிவாக்கம் | |
| 156. | - | நாட்டரசன்பட்டு | |
| 112. | - | ஆதனூர் | |
| 166. | - | கீழக்கழனி | |
| 165. | - | நீலமங்கலம் | |
| 157. | - | சிறுவஞ்சூர் | |
| 167. | - | காவனூர் பகுதி | |
| 167. | - | காவனூர் R.F | செங்கல்பட்டு |
| 36. | 7. | பெருமாள்தாங்கல் | |
| 38. | 6. | ஆப்பூர் | |
| 34. | 8. | சட்டமங்கலம் | |
| 52. | 20. | பனங்கோட்டூர் | |
| 53. | 19. | பேரமனூர் | |
| 35. | 21. | தாலிமங்கலம் | |
| 22. | 15. | களிவந்தப்பட்டு | |
| 57. | 16. | கடம்பூர் | |
| 27. | 14. | காயரம்பேடு | |
| 62. | 54. | விஞ்சியம்பாக்கம் | |
| 50. | 22. | கொளத்தூர் | |
| 30. | 10. | கோனாதி | |
| 29. | 11 | தைலாவரம் | |
| 28. | 12. | வல்லாஞ்சேரி | |
| 31. | 13. | பொத்தேரி | |
| 32. | 17. | நின்னக்கரை | |
| 33. | 9. | காட்டாங்கொளத்தூர் | |
| 51. | 55. | திருக்கச்சூர் | |
| 55. | 57. | சித்தமனூர் | |
| 56. | 18. | கூடலூர் | |
| 58. | 59. | கரும்பூர் | |
| 60. | 58. | செங்குங்றம் | |
| 54. | 56. | கீழக்கரணை | |
| 7. | 16. | காரணைபுதுச்சேரி | வண்டலூர் |
| 8. | 8. | அய்யஞ்சேரி | |
| 6. | 17. | நந்திவரம் | |
| 4. | 7. | ஊரப்பாக்கம் | |
| 5. | 18. | கூடுவாஞ்சேரி |
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மேற்சொன்ன பகுதிகளில் வசிக்கும் யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு, இந்த செயற்குறிப்பு குறித்து யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரைகள் எழுத்துப்பூர்வமாக அரசிடம் அளிக்கலாம் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனும் பெறப்பட்டிருப்பின் மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் படி மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அரசு பரிசீலிக்கும். எழுத்துப்பூர்வமாக மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை -600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
காகர்லா உஷா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ) , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி(மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
அறிவிக்கை
[அரசாணை (2ப) எண் 108, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 16 டிசம்பர் 2024.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும். 11.09.2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு - 2 இல் 773 மற்றும் 774ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் II(2)/தொ.வே/748/2019 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர். தமிழ்நாடு மாநிலத்தில் பசுந்தேயிலைகளைக் கொள்முதல் செய்து தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் (Bought Leaf Tea Factory) பணியமர்த்தப்பட்டுள்ள, கீழ்க்காணும் விவரஅட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு6 வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு முன்னரே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளன்றும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
பசுந்தேயிலைகளைக் கொள்முதல் செய்து தேயிலை தயாரிக்கும்
தொழிற்சாலைகளில் (Bought Leaf Tea Factory) வேலைவாய்ப்பு
| தொ. எண். ( 1 ) | பணியாளர் வகையினர் ( 2 ) | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( 3 ) ( ரூ . காசு) |
| 1. | எழுத்தர் மற்றும் கணினி இயக்குபவர் | திங்களொன்றுக்கு 7564 |
| 2. | கணக்கர் | திங்களொன்றுக்கு 8093 |
| 3. | காசாளர் | திங்களொன்றுக்கு 8699 |
| 4. | ஏவலர் அல்லது துணையாள் | திங்களொன்றுக்கு 6429 |
| 5. | காவலாள் | திங்களொன்றுக்கு 6429 |
| 6. | இயந்திரக் கம்மியர் | திங்களொன்றுக்கு 8699 |
| 7. | மின் வினைஞர் | திங்களொன்றுக்கு 9228 |
| 8. | மேற்பார்வையாளர் | திங்களொன்றுக்கு 7564 |
| 9. | உதவி மேற்பார்வையாளர் | திங்களொன்றுக்கு 6959 |
| 10. | சுமையுந்து ஓட்டுநர் | திங்களொன்றுக்கு 8093 |
| 11. | சீருந்து ஓட்டுநர் | திங்களொன்றுக்கு 7564 |
| 12. | தூய்மைப் பணியாளர் | திங்களொன்றுக்கு 6429 |
| 13. | தேநீர் தயாரிப்பவர் | திங்களொன்றுக்கு 11497 |
| 14. | தேநீர் தயாரிப்பதற்கு உதவுபவர் | திங்களொன்றுக்கு 9228 |
| 15. | பெருக்குபவர் (முழு நேரம்) | திங்களொன்றுக்கு 6429 |
| 16. | *பெருக்குபவர் (பகுதி நேரம்) | திங்களொன்றுக்கு 3215 |
| 17. | தொழிற்சாலைப் பணியாளர்கள் | நாளொன்றுக்கு 229.50 |
| 18. | மேலே குறிப்பிடப்படாத ஏனைய யாதொரு வகைப் பணியாளர் | நாளொன்றுக்கு 229.50 |
{{^{{FOOTNOTE *}}}}குறிப்பு: நாளொன்றுக்கு நான்கு மணி நேரம் அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாகப் பணிபுரியும் தொழிலாளர் பகுதி நேரப் பணியாளராகக் கருதப்படுவார்.
விளக்கம்:- (1) அகவிலைப்படி : பணியாளர்களுக்கு மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன்.
கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் :-
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு சென்னைக்கு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும். நாளொன்றுக்குக் கூடுதலாக ரூ.1.37 (ஒரு ரூபாய் முப்பத்தேழு காசுகள் மட்டும்) அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) ஜூலை முதல் நாளிலிருந்தும், அக்டோபர் முதல் நாளிலிருந்தும், சனவரி முதல் நாளிலிருந்தும் ஏப்ரல் முதல் நாளிலிருந்தும் தொடங்குகின்ற இரண்டாவது முந்தைய காலாண்டிற்கு, 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைப்புள்ளி குறியீட்டு அடிப்படையில் ஒவ்வோராண்டின் முறையே சனவரி முதல் நாளன்றும், ஏப்ரல் முதல் நாளன்றும், ஜூலை முதல் நாளன்றும் மற்றும் அக்டோபர் முதல் நாளன்றும் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) மேலே வரையறுக்கப்பட்டவாறான நடைமுறையின்படி, முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) (a) அன்றாட ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதிய வீதங்களை 26-ஆல் வகுக்க வேண்டும்.
(b) மாதாந்தர ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30- ஆல் பெருக்க வேண்டும்.
7(3) ஒரே பணியை அல்லது ஒத்த தன்மை உடைய பணியை மேற்கொள்ளும்போது ஊதியம் வழங்குவதில் ஆண். பெண் தொழிலாளர்களிடையே யாதொரு வேறுபாடும் காட்டக்கூடாது.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களில்லாம். அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
திருத்த அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 123, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2)த் துறை, 16 டிசம்பர் 2024.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 27-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையின் பகுதி-I-இல் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார். அவ்வாறு திருத்தத்தை மேற்கொள்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் மேற்சொன்ன பிரிவில் கோரப்பட்டவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்.
மேற்சொன்ன சட்டத்தில், விவர அட்டவணையில், பகுதி-I-இல், "95. சானிட்டரி நாப்கின்கள், மருத்துவக் கட்டுத்துணி வகைகள் மற்றும் மருத்துவத் துறைக்கான ஆடைகள் தயாரிப்பு ஆகியவற்றில் வேலைவாய்ப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்னர், "96. தரவுப் பதிவுச் செயற்பாடுகளில் வேலைவாய்ப்பு (அரசு அல்லாதவை)" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
K. வீர ராகவ ராவ், அரசு செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.