Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances - Tamil Supplement Act (Tamil) - Act No. 6 of 2025.--An Act further to amend the Tamil Nadu Panchayats Act, 1994. -- Act No. 7 of 2025.--An Act further to amend the Chennai Metropolitan Water Supply and Sewerage Act, 1978. -- Act No. 8 of 2025.--An Act to provide, in the interest of the general public, for the transfer and vesting of the Chikkaiah Naicker College, Erode, in Government and for matters connected therewith or incidental thereto. -- Act No. 9 of 2025.--An act to provide for the levy and collection of tax on mineral bearing land and the matters connected therewith or incidental thereto.

Published 19 March 2025

Type
Ordinary
Gazette no.
11
Part
Part IV
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-03-19.Ordinary_11_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2025 [விலை: ரூ. 7.20 காசுவிலை: ரூ. 7.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 11] சென்னை, புதன்கிழமை, மார்ச் 19, 2025 பங்குனி 5, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7-ஆம் நாளன்று ஆளுநரின் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 6/2025சட்ட எண். 6/2025

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்

தொடக்கம்.

(திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்திருப்பதாக கருதப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

261-A பிரிவிற்கான 2. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன்பின்பு

21 /1994.

மாற்றீடு.

இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 261-A பிரிவிற்காக,

பின்வரும் பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"261-A. தனி அலுவலர்களின் நியமனம்-

"261-A. தனி அலுவலர்களின் நியமனம்- இந்தச் சட்டத்தில் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதிக்குப் பின்பு அல்லது 2025 ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 05 ஆம் நாள் வரையில், இதில் எது முந்தியதோ அது வரையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிபேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிர்த்து பிற ஊராட்சிகளுக்கு வழக்கமான தேர்தல்கள் நடைபெற்ற பின்பு, நேர்விற்கேற்ப, கூறப்பட்ட கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் அல்லது மாவட்ட ஊராட்சிகளின் முதல் கூட்டம் கூட்டப்படும் நாள் வரையில், நேர்விற்கேற்ப, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் அல்லது மாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் அவற்றின் செயற்பணிகளைப் புரிவதற்கும் தனி அலுவலர்களை நியமிக்கலாம்.".

[1]

11—IV-2-(T-Sup)—12 செல்லுந்தன்மை. 3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாளன்றும் அதுமுதற்கொண்டும்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர்,

இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய

மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிர, பிற கிராம ஊராட்சிகள்,

ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் அல்லது மாவட்ட ஊராட்சிகளின்

அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் அவற்றின் செயற்பணிகளைப்

புரிவதற்கும், அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள், இந்தச்

சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின் 261-A

பிரிவின்கீழ் அத்தகைய தனி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகக்

கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள்

06 ஆம் நாள் தொடங்கியும் அதுமுதற்கொண்டும், தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில்

இந்தச் சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் காலஅளவின்போது

கூறப்பட்ட தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது

எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம்

செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன்

செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல்

வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

3

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7-ஆம் நாளன்று ஆளுநரின் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 7/2025சட்ட எண். 7/2025

1978 ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் 1978 ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு கழிவுநீரகற்றல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப்பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர குடிநீர்

மற்றும் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

4ஆம் பிரிவிற்கான 28/1978.

திருத்தம்.

2. 1978 ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் சட்டத்தின் 4ஆம் பிரிவில், (dd) கூறுக்கு பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(ddd) அரசு துணைச் செயலாளர், நிதித் துறை, பதவி வழி;".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

4 5

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 4-ஆம் நாளன்று ஆளுநரின் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 4-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 8/2025சட்ட எண். 8/2025

பொது மக்கள் நலன் கருதி, ஈரோட்டிலுள்ள சிக்கய்ய நாயக்கர் பொது மக்கள் நலன் கருதி, ஈரோட்டிலுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை, அரசுக்கு உரிமை மாற்றம் செய்தல் மற்றும் ஒப்படைத்தல் கல்லூரியை, அரசுக்கு உரிமை மாற்றம் செய்தல் மற்றும் ஒப்படைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கு வகைசெய்வதற்கானதொரு சட்டம். பொருட்பாடுகளுக்கு வகைசெய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு

மற்றும் தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2022-ஆம் ஆண்டு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, ஈரோடு (உரிமை மாற்றம் மற்றும் ஒப்படைத்தல்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது, அரசு, அறிவிக்கை வாயிலாக குறிக்கலாகும்

அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள் 2. இந்தச் சட்டத்தின், தறுவாயின் பொருள் வேறு பொருள்

வரையறைகள்.

குறித்தாலன்றி,-

a) "குறிக்கப்பட்ட நாள்" என்பது இந்தச் சட்டம் நடைமுறைக்கு

வரும் நாள் என்று பொருள்படும்;

b) "கல்லூரி" என்பது இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவாறான நிலம் மற்றும் கட்டடங்களுடன் பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, ஈரோடு என்று பொருள்படும்;

c) "ஆணையாளர்" என்பது 6-ஆம் பிரிவின்படி

பணியமர்த்தப்பட்ட ஆணையாளர் என்று பொருள்படும்;

d) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;

e) "உரித்தமுடைய நபர்" என்பது இந்தச் சட்டத்தின்படி அரசிடம் இந்த கல்லூரியின் ஒப்படைப்பின் காரணமாக வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டில் உரித்தம் கோரும் அல்லது கோர உரிமையுள்ள நபர்கள் அனைவரையும் உள்ளடக்கும்.

கல்லூரியின் உரிமை

மாற்றம் மற்றும்

ஒப்படைப்பு.

3. குறிக்கப்பட்ட நாள் அன்றும் அது முதற்கொண்டும், கல்லூரி மற்றும் உரித்தமுடைய நபர்களின் உரிமை, உரிமை மூலம் மற்றும் உரித்தமானது அரசுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக மற்றும் முழுமையாக ஒப்படைக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.

ஒப்படைப்பின்

விளைவு.

4. (1) 3-ஆம் பிரிவின்படி அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கல்லூரியின் சொத்துக்கள் அனைத்தும், அவ்வாறு ஒப்படைக்கப்பட்டதன் மூலம், பொறுப்பு, கடப்பாடு, அடைமானம், பற்று, மீள் உரிமை அல்லது அவற்றை பாதிக்கும் பிற வில்லங்கம் எதிலிருந்தும் விட்டுவிடுதல் மற்றும் விடுவிக்கப்படுதல் வேண்டும் மற்றும் எவ்வகையிலும் அத்தகைய சொத்துக்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அல்லது அத்தகைய சொத்துக்களின் முழுமை அல்லது பகுதி எதன் தொடர்பாக சொத்துப் பேணுநர் எவரையும் பணியமர்த்தும் நீதிமன்றம் எதனின் பற்றுகை, தடைக்கட்டளை அல்லது தீர்ப்பாணை அல்லது ஆணை எதுவும் திரும்ப பெற்றதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

6

(2) கல்லூரி தொடர்பான அங்கீகாரம், இணைப்பு, உரிமம் அல்லது பிற ஆவணம் எதுவும் குறிக்கப்பட்ட நாளுக்கு முன்பு, எந்த நேரத்திலும் உரித்தமுடைய நபரின் பெயரிலோ, அல்லது கல்லூரியின் பெயரிலோ வழங்கப்பட்டுள்ளவிடத்து, அரசு அல்லது பிற அதிகார அமைப்பு எதுவும், அத்தகைய தேதியிலும் அது முதற்கொண்டும், குறிக்கப்பட்ட உரித்தமுடைய நபரிடம் இருக்கும் அத்தகைய அங்கீகாரம், இணைப்பு, உரிமம் அல்லது பிற ஆவணம், ஏதேனும் இருப்பின், அத்தகைய அங்கீகாரம், இணைப்பு, உரிமம் அல்லது பிற ஆவணம் அதற்கு வழங்கப்பட்டதைப் போல மாற்றியமைக்கப்பட்டதாகக் கொள்ளப்பட்டு மற்றும் உரித்தமுடைய நபர், எவரேனும் இருப்பின் அவர் அத்தகைய உரிமம் அல்லது அத்தகைய பிற ஆவணம் எதையும் வைத்திருப்பதைப் போன்று மீதமுள்ள கால அளவிற்கு அத்தகைய அங்கீகாரம், இணைப்பு, உரிமம் அல்லது பிற ஆவணத்தை வைத்திருத்தல் வேண்டும்.

(3) இச்சட்டத்தின்படி அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள சொத்து எதனின் அடைமானம் பெற்றவர் ஒவ்வொருவரும் மற்றும் அத்தகைய சொத்து எதன் தொடர்பாகவும் பற்று, மீள் உரிமை அல்லது பிற உரித்தம் வைத்திருக்கும் நபர் ஒவ்வொருவரும் குறிக்கப்பட்ட நாளிலிருந்து அறுபது நாட்கள் காலத்திற்குள் அத்தகைய அடைமானம், பற்று, மீள் உரிமை அல்லது பிற உரித்தத்தின் தகவல் ஒன்றினை எழுத்து மூலம் ஆணையருக்கு அளித்தல் வேண்டும்.

(4) ஐயப்பாடுகளை நீக்குவதற்காக, (3)-ஆம் உட்பிரிவில் குறிக்கப்பட்ட சொத்து எதனின் அடைமானம் பெற்ற அல்லது அத்தகைய சொத்து எதிலும் பற்று, மீள் உரிமை அல்லது பிற உரித்தம் எதுவும் வைத்திருக்கும் பிற நபர் எவரும் அவரது உரிமைகள் மற்றும் உரித்தங்கள், அடைமானத் தொகையின் செலுத்தம் அல்லது முழுமையான அல்லது பகுதியாக நிலுவைத் தொகைகளுக்கு இணங்க இச்சட்டத்தின்படி செலுத்தப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகையிலிருந்து கோர உரிமையுடையவராதல் வேண்டும்.

குறித்த சில

பணியாளர்களின்

மாற்றம்.

5. (1) குறிக்கப்பட்ட நாளுக்கு முன்பு, கல்லூரியில் பணிபுரிந்து வந்த நபர் ஒவ்வொருவரும், கூறப்பட்ட தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும் அரசுப் பணியாளராகுதல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவில் குறிக்கப்பட்ட நபர் ஒவ்வொருவரும், அவர் பணியமர்த்தப்பட்ட தேதியில் அவருக்கு பொருந்தக்கூடிய நிபந்தனைகளுக்குட்பட்டு, அதே காலத்திற்காக, அதே ஊதியத்திற்கு மற்றும் ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை போன்றவற்றில் அதே உரிமை மற்றும் சிறப்புரிமைகளின் பேரில் அரசின் கீழ் பதவி வகித்தல் வேண்டும் மற்றும் அவர் பணியமர்த்தப்பட்ட நாளில் அவர் கொண்டிருந்திருக்கும் அதே பொருட்பாடுகளையும் இந்தச் சட்டமானது நடைமுறையில் இருந்திராததைப் போன்று கொண்டிருத்தல் வேண்டும்.

(3) (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட பணியாளர்களின் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வு மற்றும், கல்லூரியில் எழும் காலியிடங்களை நிரப்புவதற்கான முறையானது, அரசு, ஆணையின் மூலம், இதன் பொருட்டு குறிப்பிடப்பட்டவாறாக இருத்தல் வேண்டும்.

ஆணையாளரின்

பணியமர்த்தம்

மற்றும் இழப்பீடு

வழங்குதல்.

6. (1) இச்சட்டத்தின்படி அரசிடம் நிலம் மற்றும் சொத்துக்கள் ஒப்படைத்த கல்லூரியில் உரித்தமுடைய நபர் ஒவ்வொருவரும், இதன் பின்பு வழங்கப்பட்டவாறான இழப்பீட்டினை பெறுவதற்கும், செலுத்தப்படுவதற்கும் உரிமையுடையவராதல் வேண்டும். அத்தகைய ஒவ்வொரு நபரும் (2)-ஆம் உட்பிரிவின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஆணையாளருக்கு விண்ணப்பம் ஒன்றினை செய்தல் வேண்டும்.

(2) உரித்தமுடைய நபர்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டினை முடிவு செய்யும் நோக்கத்திற்காக, அரசானது அறிவிக்கை வாயிலாக ஆணையாளர் ஒருவரை பணியமர்த்துதல் வேண்டும்.

7

மையச்சட்டம் 30/2013.

(3) (2)–ஆம் உட்பிரிவின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஆணையாளரானவர், நிலம் மற்றும் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட சொத்துக்களின் சந்தை மதிப்பினை தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தச் சட்டத்தின் 26, 27, 28 மற்றும் 29-ஆம் பிரிவுகளின் வகைமுறைகளை, பின்பற்றுதல் மற்றும் உரித்தமுடைய நபர்களுக்கு அதன்மீது செலுத்த வேண்டிய இழப்பீட்டினை முடிவு செய்தல் வேண்டும்.

(4) ஆணையாளரானவர் அறைக்கலன்கள், தளவாடங்கள், இருப்புகள், துணைக்கருவிகள், வினைக்கருவிகள் போன்ற அசையும் சொத்துக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் உரித்தமுடைய நபர்களுக்கு அதன்மீது செலுத்தப்படவேண்டிய இழப்பீட்டினை முடிவு செய்தல் வேண்டும்.

(5) அசையா மற்றும் அசையும் சொத்துக்களுக்காக உரித்தமுடைய நபர்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையினை இறுதி செய்த பிறகு, ஆணையாளரானவர் செலுத்தம் செய்வதற்காக அரசுக்கு அதனை பரிந்துரைத்தல் வேண்டும்.

தொகையினை

பங்கீடு

செய்தல்.

7. (1) இழப்பீட்டில் நபர்கள் பலர், உரித்தம் கோருமிடத்து, ஆணையாளரானவர், அவரது கருத்தில், இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு உரிமையுள்ள நபர்களை மற்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை தீர்மானிக்க வேண்டும்.

(2) 6-ஆம் பிரிவின்படி இழப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ள போது, அதே அல்லது அதன் பகுதி எதையும் பங்கீடு செய்தல் அல்லது அதே அல்லது அதன் பகுதி எதையும் செலுத்தப்பட வேண்டிய நபர்களைப் பொறுத்து, பூசல் எதுவும் எழுந்தால், ஆணையாளர் அத்தகைய பூசலை நீதிமன்றத்தின் முடிவுக்காக குறித்தளிக்கலாம்.

தொகையைச்

செலுத்துதல்.

8. (1) இழப்பீட்டுத் தொகை ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டு மற்றும் ஆணையாளரால் அரசுக்கு பரிந்துரை செய்யப்படுமிடத்து, அரசானது, அத்தகைய தொகையை உரிமையுள்ள நபர் அல்லது நபர்களுக்கு செலுத்துதல் வேண்டும்.

(2) 6-ஆம் பிரிவின் கீழ் ஆணையாளரால் இழப்பீட்டுத் தொகையானது தீர்மானிக்கப்படுமிடத்து, அத்தகைய தீர்மானத்தின்படி அதற்கு உரிமையுள்ள நபர்களுக்கு தீர்மானிக்கப்பட்ட தொகையை அரசானது செலுத்துதல் வேண்டும் மற்றும் (3)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்பாரா நிகழ்வுகளினால் தடுக்கப்பட்டாலன்றி அவர்களுக்குச் செலுத்துதல் வேண்டும்.

(3) ஆணையாளரால் தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைக்கு உரிமையுள்ள நபர்கள் அதைப் பெற இசைவளிக்கவில்லை எனில், அல்லது நிலம் மற்றும் சொத்துக்களை உடைமை மாற்றம் செய்வதற்கு தகுதியான நபர் இல்லை எனில் அல்லது இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு உரிமை மூலத்தில் பூசல் ஏதேனும் இருப்பின், அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை, அரசானது நீதிமன்றத்தில் வைப்பீடு செய்தல் வேண்டும்.

வரம்புரையாக, உரித்தமுடையவரென ஒப்புக்கொள்ளப்பட்ட நபர் எவரும் இழப்பீட்டுத் தொகை போதுமான நிலை குறித்த எதிர்ப்புடன் அத்தகைய தொகையைப் பெறலாம்:

மேலும் வரம்புரையாக, இந்தச் சட்டத்தின்படி தீர்மானிக்கப்பட்ட தொகை எதனின் முழு அல்லது பகுதி எதையும் பெறும் நபரெவரின், அதற்கு சட்டபூர்வமாக உரிமையுள்ள நபருக்கு அதனை செலுத்தும் பொறுப்பை இதில் உள்ளடங்கிய எதுவும் பாதித்தல் ஆகாது.

8

நீதிமன்றத்தில்

வைப்பீடு

செய்யப்பட்ட

தொகையின்

முதலீடு.

9. 8-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் தொகை எதுவும் வைப்பீடு செய்யப்பட்டிருக்குமிடத்து, நீதிமன்றம் தாமாக முன்வந்தோ அல்லது அத்தகைய தொகையில் உரித்தமுடைய அல்லது உரித்தமுடையதாக கோரும் தரப்பினரால் அல்லது தரப்பினர் எவரின் பொருட்டு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேரில், அது பொருத்தமென கருதலாகும் அத்தகைய அரசு அல்லது அரசால் ஏற்பளிக்கப்பட்ட பிற கடனீட்டுப் பத்திரங்களில், அதை முதலீடு செய்வதற்காக ஆணையிடலாம் மற்றும் அத்தகைய முதலீடு அவற்றின் வட்டி அல்லது பிற வருமானங்கள் சேர்க்கப்பட்டு மற்றும் அத்தகைய தொகையானது வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொடர்புடைய நிலம் மற்றும் சொத்துக்களிலிருந்து அவர்கள் பெறக்கூடிய அல்லது அதற்கு ஏறக்குறையதான நலனை அதில் உரித்தமுடைய நபருக்கு அளிக்கலாகும் அத்தகைய முறையில் செலுத்தலாம்.

ஆணையாளரிடம்

.

வைக்கப்பட

வேண்டிய உரிமைக்

கோரிக்கை

10. உரித்தமுடைய நபருக்கு எதிராக உரிமைக்கோரிக்கையை கொண்ட நபர் ஒவ்வொருவரும் குறிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் ஆணையாளரிடம் அத்தகைய உரிமைக் கோரிக்கையை அளித்தல் வேண்டும்:

வரம்புரையாக, கூறப்பட்ட முப்பது நாட்கள் கால அளவிற்குள் உரிமைக்கோருநர் உரிமைக் கோரிக்கையை அளிப்பதிலிருந்து போதுமான காரணத்தினால் தடுக்கப்பட்டதாக ஆணையாளர் மனநிறைவு அடைந்தால், அவர் மேலும் முப்பது நாட்கள் கால அளவிற்குள் உரிமைக் கோரிக்கையை ஏற்கலாம். ஆனால், அதன் பின்பு ஏற்க இயலாது.

உரிமைக்

கோரிக்கைகளின்

ஏற்பு அல்லது

மறுப்பு.

11. (1) உரிமைக் கோரிக்கைகளைப் பெற்றதன் பேரில் ஆணையாளர் அதை ஆய்வு செய்ய வேண்டும், மற்றும் ஆய்விற்குப் பிறகு, உரிமைக் கோரிக்கையின் உண்மைத்தன்மையுடன் அவர் மனநிறைவு அடைந்தால், ஒவ்வொரு உரிமைகோருநரும் தனது உரிமை கோரிக்கைக்கான ஆதாரத்தை குறிப்பிட்ட தேதியன்றோ அல்லது அதற்கு முன்போ தாக்கல் செய்ய வேண்டிய அல்லது பங்கிட்டு அளிப்பதற்காக, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பலனிலிருந்து விலக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்தல் வேண்டும்.

(2) அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தேதியின் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் அறிவிக்கையானது, ஆணையாளர் பொருத்தமெனக் கருதலாகும் ஆங்கில மொழி தினசரி நாளிதழின் ஒரு இதழ் மற்றும் தமிழ் மொழி தினசரி நாளிதழின் ஒரு இதழிலும் விளம்பரமாக அளித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய அறிவிக்கை ஒவ்வொன்றும், அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் உரிமைகோருபவர் தனது கோரிக்கைக்கான ஆதாரத்தை, ஆணையாளரிடம் தாக்கல் செய்யும்படி அழைத்தல் வேண்டும்.

உரிமைக்

கோருநர்களுக்கு

ஆணையாளரால்

பணத்தை

பிரித்தளிக்கப்

படுதல்.

12. 11-ஆம் பிரிவின்படி உரிமைக் கோரிக்கை ஒன்றை ஏற்றுக் கொண்டபின்பு, உரிமைக் கோரிக்கைத் தொகையை செலுத்துவதற்காக ஆணையாளர் அரசுக்கு பரிந்துரைத்தல் வேண்டும். அத்தகைய உரிமைக் கோரிக்கையின் தொடர்பாக செலுத்த வேண்டிய தொகையானது, அத்தகைய தொகை செலுத்தப்பட வேண்டிய நபர் அல்லது நபர்களுக்கு செலுத்தப்படுதல் வேண்டும் மற்றும் பணம் செலுத்துகையில் அத்தகைய உரிமைக் கோரிக்கை தொடர்பாக உரித்தமுடைய நபரின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

சட்டமானது

அனைத்து

பிற சட்டங்களை

விட மேலோங்கி-

யிருத்தல்.

13. தற்போது நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் அல்லது நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பாணை அல்லது ஆணையில் உள்ளடங்கிய அதனுடன் முரண்பாடான எது எவ்வாறிருப்பினும் இச்சட்டத்தின் வகைமுறைகளானது மேலோங்கி இருத்தல் வேண்டும்.

9

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக "சட்டம்" என்பது தீர்ப்பு, ஒப்பந்தம், தீர்வு, முறையாவணம் அல்லது சேவை ஒப்பந்தம் எதையும் உள்ளடக்கும்.

அரசால்

ஏற்பளிப்பு

செய்யப்பட்டாலன்றி

ஒப்பந்தங்களின்

செயல்பாடு

முடிவுறுதல்.

14. (1) உரித்தமுடைய நபரினால் சேவை, விற்பனை அல்லது வழங்குகை எதற்காகவும் செய்யப்பட்ட மற்றும் குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னர் நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் ஒவ்வொன்றும், குறிக்கப்பட்ட நாளிலிருந்து நூற்று எண்பது நாட்கள் கால அளவு முடிவடையும் நாளிலிருந்து, அத்தகைய ஒப்பந்தம் காலாவதியாகும் முன், அரசால் எழுத்துப்பூர்வமாக, ஏற்பளிக்கப்பட்டாலன்றி, செயல்பாடு முடிவுறுதல் வேண்டும் மற்றும் அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்பளிக்கையில் அரசு பொருத்தமெனக் கருதும் அத்தகைய திருத்தங்களை அல்லது மாற்றங்களை செய்யலாம்.

வரம்புரையாக, அரசு ஒப்பந்தம் ஒன்றை ஏற்பளிக்க தவிர்த்தல் கூடாது மற்றும் அத்தகைய ஒப்பந்தம் அளவுக்கு மேற்பட்ட பொறுப்பு வாய்ந்த அல்லது தவறான எண்ணத்தில் செய்யப்பட்டுள்ளதாக அல்லது கல்லூரியின் நலனுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளதென மனநிறைவு அடைந்தாலன்றி, ஒப்பந்தம் ஒன்றில் மாற்றத்தையோ அல்லது திருத்தத்தையோ அரசு செய்தல் கூடாது.

(2) ஒப்பந்த தரப்பினருக்கு கேட்பதற்கான நியாயமான வாய்ப்பை வழங்கினாலன்றி மற்றும் ஒப்பந்தத்தை ஏற்பளிக்க மறுப்பதற்கான அல்லது அதில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்வதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தாலன்றி அரசானது, ஒப்பந்தம் ஒன்றை ஏற்பளிப்பதை தவிர்க்ககூடாது மற்றும் அதில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் எதையும் செய்தல் கூடாது.

தண்டங்கள்.

15. (a) கல்லூரியின் ஒரு பகுதியாக அமைந்த சொத்து எதனையும் அவரது உடைமை, பொறுப்பு அல்லது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள, அரசிடமிருந்து அல்லது அரசால் இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட நபர் எவரிடமிருந்தும் அத்தகைய சொத்தினை தவறாக நிறுத்தி வைக்கும் நபரெவரும்; அல்லது

(b) கல்லூரியின் ஒரு பகுதியாக அமைந்த சொத்து எதனையும் தவறான முறையில், அடைய அல்லது தக்க வைத்துக் கொண்ட அல்லது அவரது உடைமை பொறுப்பு அல்லது கட்டுபாட்டில் இருக்கலாகும் அத்தகைய கல்லூரி தொடர்பான ஆவணம் எதையும் வேண்டுமென்றே அரசிடம் அல்லது அரசு குறிப்பிடும் நபர் எவருக்கும் கொடுக்க மறுக்கும் அல்லது அளிக்கத் தவறும், கல்லூரி தொடர்பான அவர் பொறுப்பில் உள்ள சொத்து, கணக்குப்புத்தகம், பதிவேடு அல்லது பிற ஆவணங்கள் எதையும் அரசிடம் அல்லது அரசால் குறிப்பிடப்படும் நபர் எவரிடமும் வழங்கத் தவறும் நபரெவரும்; அல்லது

(c) கல்லூரியின் ஒரு பகுதியாக அமைந்த சொத்து எதனையும் தவறாக அகற்றும் அல்லது அழிக்கும், அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் பொய்யானதென அல்லது மொத்தத்தில் துல்லியமற்றதென அவர் அறியும் அல்லது அறிய நியாயமான காரணம் கொண்டிருக்கும் உரிமைக் கோரிக்கை எதையும் செய்யும் நபரெவரும், இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கலாகும் சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இவ்விரண்டுடனும் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

நல்லெண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைக்குப் 16. இந்தச் சட்டத்தின்படி நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதற்காகவும், அரசுக்கு அல்லது அரசு அலுவலர் எவருக்கும், எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.

பாதுகாப்பு.

அதிகாரங்களின்

ஒப்படைவு.

17. (1) அரசானது, அறிவிக்கையின் வாயிலாக 18-ஆம் பிரிவின் கீழுள்ள அதிகாரத்தைத் தவிர, இந்தச் சட்டத்தின்படி அதனால் செயல்படுத்தக்கூடிய அனைத்து அல்லது எந்தவொரு அதிகாரத்தையும், நபர் அல்லது நபர்கள் எவருக்கும் ஒப்படைவு செய்யலாம்.

10

(2) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அதிகார ஒப்படைவு எதுவும் செய்யப்படும் போது, அத்தகைய அதிகார ஒப்படைவு செய்யப்பட்ட நபர், அரசின் வழிகாட்டுதல், கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையின் கீழ் செயல்படுதல் வேண்டும்.

இடர்ப்பாடுகளை

நீக்குவதற்கான

அதிகாரம்.

18. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடுகள் எதுவும் எழுமானால், அரசு, தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானவையென்றோ, உகந்தவையென்றோ தனக்குத் தோன்றுகிற அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:

வரம்புரையாக, அத்தகைய ஆணை எதுவும் குறிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டு காலஅளவு முடிந்த பின்னர் செய்யப்படுதலாகாது.

அறிவிக்கையின்

தொடக்கம் மற்றும்

சட்டப்பேரவையின்

முன் வைத்தல்.

19. (1) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும் என வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்றே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(2) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அல்லது அதற்கு அடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்பு சட்டமன்றப்பேரவை அத்தகைய அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் செய்யுமாயின் அல்லது சட்டமன்றப்பேரவை அந்த அறிவிக்கை அல்லது ஆணை பிறப்பிக்கப்படுதல் கூடாது என்று முடிவு செய்யுமாயின் அந்த அறிவிக்கை அல்லது அவ்வாணை அதற்கு பின்னர் அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும், அத்தகைய மாறுதல் அல்லது நீக்கம் எதுவும் அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னர் செய்யப்பட்ட எதனின் செல்லும் தன்மைக்கும் குந்தகம் இன்றி இருத்தல் வேண்டும்.

11

இணைப்புப் பட்டியல்இணைப்புப் பட்டியல்

[2(b)-ஆம் பிரிவைக் காண்க]

நிலம் மற்றும் கட்டடங்களின் விவரங்கள்

வட்டம் : ஈரோடு

நகரம் : ஈரோடு

புல எண்கள் : 266, 267, 268, 269 மற்றும் 272

மொத்த பரப்பளவு : 52 ஏக்கர்

எல்லைகள் : கிழக்கு – சாலை புல எண்கள். 253, 255, 265

மேற்கு – புல எண்கள். 270, 271, 681

தெற்கு – புல எண்கள். 273, 274, 483, 484

வடக்கு – கி. எண். 35 ஈரோடு

கட்டமைப்புகள் : 11-தரை தள கட்டடங்கள்; மற்றும்

3-தரை தளம் + முதல் தள கட்டடங்கள்

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

12 13

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 20-ஆம் நாளன்று ஆளுநரின் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 20-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது.வெளியிடப்படுகிறது.

சட்ட எண். 9/2025சட்ட எண். 9/2025

கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின்

கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரி மீதான வரி விதித்தலுக்கும் வசூலித்தலுக்கும் விதித்தலுக்கும் வசூலித்தலுக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்காகவும் வகை இடைவிளைவான பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்வதற்கானதொரு சட்டம்செய்வதற்கானதொரு சட்டம்..

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு, 1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக்

அளாவுகை கொண்டுள்ள நில வரிச் சட்டம் என்று வழங்கப்பெறும்.

மற்றும்

தொடக்கம்.

(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.

(3) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பொருள் 2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,-

வரையறைகள்.

(a) "மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு" என்பது, 6 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் நியமனம் செய்யப்பட்ட மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு என்று பொருள்படும்;

(b) "அனுப்புதல்" என்பது, கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்திலிருந்து கனிமம் எதனையும் உடைமையாளாரால் அனுப்புதல் என்று பொருள்படும்;

(c) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;

(d) "உடைமையாளர்" என்பவர், கனிமங்களைக் கொண்டுள்ள நிலம் தொடர்பாக வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த உரிமம் அல்லது நில ஆய்வு உரிமம் அல்லது கனிம ஆய்வு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகை அல்லது கற்சுரங்க குத்தகை அல்லது ஏதேனும் பிற கனிமச் சலுகை போன்றவற்றை உடைமையில் கொண்டுள்ளவர் ஆவார்;

(e) "கனிமம்" என்பது, இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள

கனிமம் எதுவும் என்று பொருள்படும்;

மையச்சட்டம்

67/1957.

மையச்சட்டம்

53/1948.

(f) "கனிமங்களைக் கொண்டுள்ள நிலம்" என்பது, கனிமங்கள் எதனையும் கொண்டுள்ள நிலம் எதுவும் மற்றும் அது தொடர்வாக 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குறுத்துதல்) சட்டம், 1948 ஆம் ஆண்டு எண்ணெய் வயல்கள் (ஒழுங்குறுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டத்தின்கீழ், அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி, ஒருங்கிணைந்த உரிமம் அல்லது நில ஆய்வு உரிமம் அல்லது கனிம ஆய்வு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகை அல்லது கற்சுரங்க குத்தகை அல்லது ஏதேனும் பிற கனிமத்தின் சலுகையானது நேர்விற்கேற்ப, வழங்கப்பட்டுள்ள அல்லது வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிற நிலம் என்று பொருள்படும்;

(g) "அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரஅமைப்பு" என்பது, 4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரஅமைப்பு என்று பொருள்படும்;

(h) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது, இந்தச் சட்டத்தின்கீழ்

வகுத்துரைக்கப்பட்ட என்று பொருள்படும்;

14

(i) "இணைப்புப்பட்டியல்" என்பது, இந்தச் சட்டத்தின்கீழ் உள்ள

இணைப்புப்பட்டியல் என்று பொருள்படும்;

(j) "வரி" என்பது 3 ஆம் பிரிவின்கீழ் விதிக்கத்தக்க,

கனிமங்களைக் கொண்டுள்ள நில வரி என்று பொருள்படும்.

கனிமங்களைக்

கொண்டுள்ள

நிலத்தின் மீது

வரி விதித்தல்.

3. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீது, அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அத்தகைய வீதத்தில், கனிமங்களைக் கொண்டுள்ள நில வரி என்றழைக்கப்படும் ஒரு வரி விதிக்கப்படுதல் வேண்டும்.

வரி மதிப்பீடு, வசூல்

மற்றும் செலுத்தம்.

4. (1) தமிழ்நாடு அரசிதழில்,தமிழ்நாடு அரசிதழில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும், தொடர்புடைய மாவட்டத்தின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் படிநிலைக்குக் குறையாத அத்தகைய அலுவலரால், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், வரி மதிப்பீடு செய்யப்படுதல், விதிக்கப்படுதல் மற்றும் வசூலிக்கப்படுதல் வேண்டும்.

(2) உடைமையாளரானவர், இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரியை, வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய முறையில் முன்வைப்புத்தொகையாக செலுத்துதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படுதல் வேண்டும். கனிமம் அனுப்புவதற்கு முன்னர், உடைமையாளர் வரி செலுத்தத்திற்கான பற்றுச்சீட்டை அறிவிக்கை செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

(3) உடைமையாளரானவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவத்தில், அத்தகைய காலஅளவிற்கு மற்றும் அத்தகைய முறையில் அத்தகைய விவரஅறிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.

(4) உடைமையாளரானவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வடிவத்தில் மற்றும் அத்தகைய முறையில் வரி விதிப்பு தொடர்பான கணக்குகள், பதிவேடுகள், பதிவாவணங்கள் மற்றும் பிற ஆவணங்களைப் பராமரித்து வருதல் வேண்டும்.

வரி மற்றும் தண்டத்

தொகையை

வசூலித்தல்.

5. (1) உடைமையாளர், வரிச் செலுத்தமின்றி அல்லது வரிப்பாக்கிக்கும் குறைவான தொகையைச் செலுத்தி, கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்திலிருந்து ஏதேனும் கனிமங்களை அனுப்பியிருப்பாராயின், அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரஅமைப்பானது, நிலுவை வரி மற்றும் அதனுடன் சேர்த்து அத்தகைய வரியின் மீதான ஐந்து விழுக்காடு என்ற வீதத்தில் ஒரு தண்டத்தொகை செலுத்தத்திற்கு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், கேட்புக்கான ஓர் அறிவிப்பினை, உடைமையாளருக்கு பிறப்பித்தல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

II/1864.

(2) வரித்தொகை மற்றும் விதிக்கப்பட்ட தண்டத்தொகை, ஏதேனுமிருப்பின், அவை செலுத்தப்படவில்லையாயின், அது, நில வருவாய் நிலுவை போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய வசூலித்தலுக்கு, 1864 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில வருவாய் வசூலிப்புச் சட்டத்தின் வகைமுறைகள் பொருந்துதல் வேண்டும்.

மேல்முறையீடு. 6. (1) அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரஅமைப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற எந்தவொரு நபரும், அத்தகைய ஆணை கிடைக்கப்பெற்ற முப்பது நாட்களுக்குள், அரசால், அறிவிக்கையின் வாயிலாக நியமனம் செய்யப்பட்ட மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பிடம், மேல்முறையீட்டை முன்னிடலாம்:

வரம்புரையாக, கூறப்பட்ட காலஅளவிற்குப் பின்பு மேல்முறையீட்டை அளிக்காததற்கு, மனுதாரர் போதுமான காரணம் கொண்டிருக்கிறார் என்று மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு, மனநிறைவு கொள்கிறவிடத்து, மேற்சொன்ன காலஅளவிற்குப் பின்னரும், மேல்முறையீட்டினை ஏற்றுக்கொள்ளலாம்.

மேலும் வரம்புரையாக, எந்த நிலுவை வரிக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதோ அந்த நிலுவை வரியின் முப்பது விழுக்காடு செலுத்தப்பட்டதற்கான சான்று இணைக்கப்பட்டிருந்தாலன்றி, மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பானது, மேல்முறையீட்டு எதனையும் ஏற்றுக்கொள்ளுதல் கூடாது.

15

(2) மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, மேல்முறையீட்டாளருக்கு, கேட்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கிய பின்பு, அது நியாயமெனக் கருதும் அத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும்.

சீராய்வு.

7. அரசு அல்லது அரசால் அறிவிக்கையின் வாயிலாக நியமனம் செய்யப்படலாகும் ஏதேனும் பிற சீராய்வு அதிகாரஅமைப்பானது, எந்நேரத்திலும் தாமாக முன்வந்தோ, அல்லது 6 ஆம் பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையால் இடருற்ற நபரெவரும், அத்தகைய ஆணை கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், செய்த விண்ணப்பத்தின் பேரிலோ, பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அதில் எடுக்கப்பட்ட முடிவின் சீர்மை அல்லது முறை குறித்து தாமே மனநிறைவு கொள்வதற்கு அது தொடர்பான பதிவேடுகளை வரவழைக்கலாம் மற்றும் அத்தகைய ஆணை எதுவும் மாற்றியமைக்கப்படுதல், நீக்கப்படுதல் அல்லது மறுபரிசீலனைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுதல் வேண்டும் என சீராய்வு அதிகாரஅமைப்பிற்குத் தோன்றுகிறவிடத்து, சீராய்வு அதிகாரஅமைப்பானது, இடருற்ற நபருக்கு, கேட்பதற்கான வாய்ப்பொன்று வழங்கிய பின்னர் சீராய்வு அதிகார அமைப்பானது, அது நியாயமெனக் கருதும் அத்தகைய ஆணையை பிறப்பிக்கலாம்.

தண்டத்தொகை.

8. 4 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உட்பிரிவுகளின் வகைமுறைகள் எதனையும் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்டுள்ள விதிகளை மீறுகின்ற எந்தவொரு நபரும், அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரஅமைப்பினால், வகுத்துரைக்கப்படலாகும், ஐந்தாயிரம் ரூபாய்க்கு மிகாத ஒரு தண்டத்தொகை விதிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய மீறுகை தொடர்கிறவிடத்து, அத்தகைய மீறுகை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும், மேலும் ஐந்நூறு ரூபாய்க்கு மிகாத தண்டத்தொகை விதிக்கப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, மீறுகை எதனையும் பொறுத்து இந்தப் பிரிவின்கீழ் அவ்வாறு விதிக்கப்படும் தண்டத்தொகை முழுமொத்தமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மிகுதியாக இருத்தல் கூடாது.

இணைப்புப்

பட்டியலைத்

திருத்தம்

செய்வதற்கான 9. அரசு, அவ்வப்போது, அறிவிக்கையின் வாயிலாக ஏதேனும் கனிமங்களைச் சேர்ப்பதற்கு, நீக்குவதற்கு அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரி வீதத்தை மாற்றியமைப்பதற்கு இணைப்புப்பட்டியலைத் திருத்தம் செய்யலாம்:

அதிகாரம்.

வரம்புரையாக, இந்தப் பிரிவின்கீழ் வரிவீதத்தின் உயர்வானது, முழுமொத்தமாக இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிவீதத்தின் ஐம்பது விழுக்காட்டிற்கு மிகுதியாக இருத்தல் கூடாது.

விதிகளைச் 10. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக

செய்வதற்கான விதிகளைச் செய்யலாம்.

அதிகாரம்.

(2) குறிப்பாகவும் மேற்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்கு குந்தகமின்றியும், அத்தகைய விதிகள், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது எதற்கும் வகைசெய்யலாம்.-

(a) வரி விதிப்பு, மதிப்பீடு மற்றும் வசூலிப்பு முறை;

(b) வரி செலுத்தும் முறை;

(c) விவர அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவம்,

காலஅளவு மற்றும் முறை;

(d) உடைமையாளரால் பராமரிக்கப்பட வேண்டிய கணக்குகள், பதிவேடுகள், பதிவாவணங்கள் மற்றும் பிற ஆவணங்கள் மற்றும் அவை பராமரிக்கப்பட வேண்டிய முறை;

(e) வரி செலுத்தத்திற்கான பற்றுச்சீட்டின் படிவம்;

(f) 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட

வேண்டிய கேட்பு அறிவிப்பின் முறையும், படிவமும்;

16

(g) 8 ஆம் பிரிவின்கீழ் தண்டத்தொகையின் அளவு;

(h) வேண்டுறுத்தப்படும் அல்லது வகுத்துரைக்கப்படலாகும் பிற

பொருட்பாடு எதுவும்.

(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் மற்றும் அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி, பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

பிற சட்டங்களின்

கீழ் உள்ள

உரிமையாளரின்

11. இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதனின் கீழ் நிலுவை தொகை எதனையும் செலுத்துவதற்கான உடைமையாளரின் பொறுப்பை பாதிக்காது.

பொறுப்புடமையை

பாதிக்காது.

நல்லெண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைக்கு

பாதுகாப்பு.

12. இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி எதனையுமொட்டி அரசு அலுவலர் அல்லது பணியாளரால் நல்லெண்ணத்தில் செய்த அல்லது செய்யக்கருதிய அல்லது செய்யத்தோன்றுகிற செயல் எதனையும் பொறுத்து அத்தகைய அலுவலர் அல்லது பணியாளருக்கு எதிராக உரிமை வழக்கு, குற்றவியல் வழக்கு அல்லது பிற நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.

இடர்ப்பாடுகளை

நீக்குவதற்கான

அதிகாரம்.

13. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில், இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசு, தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையான அல்லது உகந்ததாக அதற்குத் தோன்றுகிற, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:

வரம்புரையாக, இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டாண்டுக் காலஅளவு முடிவடைந்த பின்னர் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.

17

இணைப்புப்பட்டியல்இணைப்புப்பட்டியல்

(3 ஆம் பிரிவைக் காண்க)

(3 ஆம் பிரிவைக் காண்க)

கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் வரி வீதம். கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் வரி வீதம்.

பகுதி-Aபகுதி-A

நிலம் கொண்டுள்ள பெருவகை கனிமங்கள்.நிலம் கொண்டுள்ள பெருவகை கனிமங்கள்.

வரிசை எண் (1) கனிமத்தின் பெயர் (2) வரி வீதம் (ரூபாயில்) (3)
ஒரு மெட்ரிக் டன்னுக்கு. ஒரு கன மீட்டருக்கு.
1. பழுப்பு நிலக்கரி 250 -
2. சுண்ணாம்புக்கல் 160 -
3. சுண்ணாம்புக்களி 160 -
4. மேக்னசைட் 260 -
5. காரீயம் 40 -
6. வெர்மிகுலைட் 250 -
7. கார்னெட் 1250 -
8. இல்மனைட் 950 -
9. ரூட்டில் 5500 -
10. சிர்கான் 6600 -
11. மோனாசைட் 250 -
12. சில்லிமனைட் 7000 -
13. லுகோக்சீன் 3500 -
18

பகுதி-Bபகுதி-B நிலம் கொண்டுள்ள சிறுவகை கனிமங்கள்.நிலம் கொண்டுள்ள சிறுவகை கனிமங்கள்.

வரிசை எண் (1) கனிமத்தின் பெயர் (2) வரி வீதம் (ரூபாயில்) (3)
ஒரு மெட்ரிக் டன்னுக்கு. ஒரு கன மீட்டருக்கு.
1. கரட்டுக்கல் 90 140
2. சரளை/மண் 45 85
3. வண்ண கருங்கல் 300 800
4. கருப்பு கருங்கல் 420 1300
5. கூழாங்கற்கள் 150 390
6. மணல் - 400
7. படிகக்கல் 345 -
8. களிக்கல் 200 -
9. தீக்களிமண் 70 -
10. உருட்டுக் களிமண் 150 -
11. களிமண் 40 -
12. நொறுங்கிய கல் 160 -
13. ஆற்று மணல் 240 -
14 படுகப்பாறை 150 -
15. சுதைக்கல் 160 -
16. டுனைட் 225 -
17. சுண்ணப்பாறை 165 -

பகுதி-Cபகுதி-C

நிலம் கொண்டுள்ள கனிம எண்ணெய்கள்.நிலம் கொண்டுள்ள கனிம எண்ணெய்கள்.

வரிசை எண் (1) கனிமத்தின் பெயர் (2) வரி வீதம் (ரூபாயில்) (3)
ஒரு மெட்ரிக் டன்னுக்கு. ஒரு கன மீட்டருக்கு.
1. கச்சா எண்ணெய் 8500 -
2. இயற்கை எரிவாயு - 3.5

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 19 March 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-03-19.Ordinary_11_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-03-19.Ordinary_11_Part-IV_Section-2-T-Sup.