Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications issued by the Heads of Departments, which are of interest to a Section of the public. District Collectors - Tamil Nadu Panchayats Act - State Election Commission Notification - Removal of Panchayat Chairman, Tamil Nadu Legal Services Notification - Tamil Nadu Electricity Regulatory Commission - Government Examination Loss of Certificates. Tamil Nadu Electricity Regulatory Commission, (Renewable Energy Purchase Obligation) (Amendments) Regulations. - Notification No. VI(2)/7/2025.--(TNERC/REPO/1-1/2023/12-08-2024)

Published 26 March 2025

Type
Ordinary
Gazette no.
12
Part
Part VI
Section
Section 2
Identifier
in.gazette.tamilnadu.2025-03-26.Ordinary_12_Part-VI_Section-2
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.

2025 [Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY

No. 12] CHENNAI, WEDNESDAY, MARCH 26, 2025 Panguni 12, Kurothi, Thiruvalluvar Aandu–2056

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு) (திருத்தங்கள்) ஒழுங்குமுறைவிதி .. .. .. 28-30 கொள்முதல் கடப்பாடு) (திருத்தங்கள்) ஒழுங்குமுறைவிதி

DTP—VI-2 (12)

[27]28 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னை

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு)

(திருத்தங்கள்) ஒழுங்குமுறைவிதி

(அறிவிக்கை எண் தமிஒஆ/புகொக/1-1/2023/12-08-2024)

No. VI(2)/7/2025.

2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 36/2003) 181 ஆம் பிரிவுடன் சேர்த்துப் படிக்கப்படும் பிரிவுகள் 61, 66 மற்றும் 86 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (e) கூறின்படி, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் மற்றும் இதன் பொருட்டு அதனை இயல்விக்கும் அனைத்துப் பிற அதிகாரங்களையும் செலுத்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , இதன் மூலம் , 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு) (இனிமேல் "முதன்மை ஒழுங்குமுறைவிதிகள்" என்று குறிப்பிடப்படும்), ஒழுங்குமுறைவிதிகளுக்கு பின்வரும் திருத்தத்தை செய்கிறது. இத் திருத்தத்தின் வரைவானது மேற்சொன்ன 181 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்படி வேண்டுறுத்தப்பட்டவாறு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தங்கள்திருத்தங்கள்

1. (a) இந்த ஒழுங்குமுறைவிதி, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு) (திருத்தங்கள்) ஒழுங்குமுறைவிதி என வழங்கப்பெறும்;

(b) இது 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு) ஒழுங்குமுறைவிதிகள் செயல்முறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.

2. முதன்மை ஒழுங்குமுறைவிதிகளின் 2ம் ஒழுங்குமுறை விதியில் திருத்தம்:

முதன்மை ஒழுங்குமுறைவிதிகளின் 2 ம் ஒழுங்குமுறைவிதியின் (1) ம் உள் ஒழுங்குமுறைவிதி (1) ல் கூறு (i) க்கு பதிலாக பின்வரும் கூறு மாற்றி அமைக்கப்பட வேண்டும்:-

(i) 'ஒருங்கிணைந்த மின்கொள்முதல் விலை என்பது நீண்ட கால மின் வழங்குபவர்கள் அனைவரிடமிருந்தும் முந்தைய ஆண்டில் சுய மின் உற்பத்தி செலவு உள்ளடங்கலாக, ஆனால் நீர்ம எரிபொருள், வணிகர்களிடமிருந்து கொள்முதல், குறுகிய கால கொள்முதல்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்முதல் நீங்கலாக மின் பகிர்மான உரிமதாரர் மின் கொள்முதல் செய்துள்ள சராசரி கூட்டு விலை என்று பொருள்படும்.

வரம்புரையாக மின் பகிர்மான உரிமதாரரின் சராசரி ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலை (APPC), தொடர்புடைய ஆண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியாளர்களின் வகை/ உள்வகைக்கு, ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமையுடைய மின்கட்டணத்தை விட அதிகரிக்கும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்கள் மின் உற்பத்தி தொடங்கிய அந்தந்த ஆண்டுகளுக்கான, ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமையுடைய மின்கட்டணத்தில், 75% தொகையை மின் பகிர்மான உரிமதாரரால் செலுத்தப்பட வேண்டும்:

(தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி)

C. VEERAMANI,

சென்னை-600 032, 2025 மார்ச் 11.

செயலாளர் ,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

Mar. 26, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 29

விளக்க அறிக்கை

1. சமீபத்திய ஆண்டுகளில், மரபுசார்ந்த எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (குறிப்பாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி) க்கு ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமையுடைய கட்டணத்தை விட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. எனவே, நியாயமான ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலையினை கணக்கிடுவதற்கு ஒரு வரம்பை நிர்ணயிக்க வேண்டியது அவசியம்.

2. 2013 ஆம் ஆண்டு ரிட் மனு எண். 22097 இல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், 21-01-2013 தேதியிட்ட அறிவிப்பு எண். த.மி.ஒ.ஆ./பு.கொ.க./19/3 மூலம் ஆணையத்தால் வெளியிடப்பட்ட 2010ம் ஆண்டின் த.மி.ஒ.ஆ (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ெ காள்முதல் கடப்பாடு) விதிமுறையின் (சராசரி ஒருங்கிை ணந்த மின்கொள்முதல் விலையின் உச்சவரம்பினை முன்னுரிமையுடைய கட்டணத்தில் 75% அளவிற்கு நிர்ணயிப்பது தொடர்பானது) திருத்தத்தின் படி, ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமையுடைய கட்டணத்தை விட சராசரி ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலை (APPC) மீறப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தீர்ப்பளித்தது. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் தொடர்புடைய பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

"31. மனுதாரரின் அடுத்த வாதம் என்பது சராசரி ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலை (APPC) முன்னுரிமையுடைய கட்டணத்தை மீறாததால், முதல் பிரதிவாதி அறிவிப்பை செயல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சான்றிதழ் (Renewable energy Certificate)-ஐ அதிக விலைக்கு விற்க முடியும் என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சான்றிதழ்கள் விற்கப்படாமல் அதிகமாக தேங்கியுள்ளன. மீண்டும், சந்தையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சான்றிதழின் நம்பகத்தன்மையின்மை தொடர்பான காரணங்களை இந்த நீதிமன்றம் ஆராய முடியாது. காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தேவை தொடர்பாக உலகளவில் ஏற்படும் விவேகமுள்ள நிகழ்வுகளை காணும்போது, இந்த நீதிமன்றம், உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் கூறு அல்லது கரிபொருள் மதிப்புக்கான தொடர்ச்சியான சந்தையை மட்டுமே காண முடியும். எனவே மேற்கூறப்பட்ட அணைத்து காரணத்தால் 21.01.2013 தேதியிட்ட அறிவிக்கையின் எதிர்ப்பு தோல்வியடையும். 21.01.2013 தேதியிட்டு விசாரணையினை தொடர்ந்து மற்றும் 15.07.2013-ம் தேதியிட்ட உத்தரவில் முன்னுரிமையுடைய கட்டணமாக ரூ.3.11-ஐ சட்டம் மற்றும் ஒழுங்குமுறைவிதிகளின் உரிமையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட காரணத்தினாலும், இதற்கான எதிர்ப்பு தோல்வியடையும். இருப்பினும், வரம்பினை அறிமுகப்படுத்துவதற்கான பொருளைக் கருத்தில் கொண்டு, வரம்பினை அமல்படுத்த வேண்டிய அவசியம் வரவில்லை என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பிப்பதில் இந்த நீதிமன்றம் வலிமையைக் காண்கிறது. சராசரி ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலை (APPC) க்குக் கீழே முன்னுரிமையுடைய மின்கட்டணம் குறையும் பட்சத்தில், மின் உற்பத்தியாளர்கள் நியாயமற்ற முறையில் தங்களை வளப்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்காக, பொது நலன் கருதி, தடை செய்யப்பட்ட அறிவிப்பு இயற்றப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டபடி அத்தகைய மீறல் தேதியிலிருந்து அறிவிக்கையினை நடைமுறைப்படுத்தலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, தகுந்த உத்தரவுகளுக்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அணுக மனுதாரர்களுக்கு சுதந்திரம் அளித்து, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன."

3. மேலும் 2017ம் ஆண்டின் மேல்முறையீடு எண் 232ன் மனுவில் மாண்பமை மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் 31-05-2019 தேதியிட்ட உத்தரவில் சராசரி ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலை, தொடர்புடைய ஆண்டில் முன்னுரிமையுடைய கட்டணத்தை கடக்கும் பட்சத்தில், 75% முன்னுரிமையுடைய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மாண்பமை மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு தொடர்பான பகுதிகள் கீழே உள்ளன:

"12. கண்டறியப்பட்டவைகளின் சுருக்கம்:" "12. கண்டறியப்பட்டவைகளின் சுருக்கம்:"

மேற்கூறியவற்றின்படி எங்கள் கண்டறியப்பட்டவைகளின் தொகுப்பு பின்வருமாறு:-

12.1 சராசரி ஒருங்கிணைந்த மின்கொள்முதல் விலையின் (APPC) பொருள் வரையறையினைத் திருத்தம் செய்த 19.06.2013 தேதியிட்டு அறிவிக்கை, இன்று வரை ஓர் ஆண்டின் சராசரி ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலையானது (APPC) காற்றாலை மின் உற்பத்தியாளர்களின் தொடர்புடைய ஆண்டின் முன்னுரிமையுடைய கட்டணத்தை மிகாத வரையில் நடைமுறைப்படுத்தப்படலாகாது;

12.2 இயற்கையில் மாறுபடும் தன்மையுடையதால் (மேலும் கீழும் செல்லலாம்), சராசரி ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலையினை மாநில ஆணையத்தால் ஆண்டுக்கு ஆண்டு முறையில் ஒப்பிட்டு குறிப்பிட்ட ஆண்டில் திருத்தத்தில் நிர்ணயிக்கப்படவுள்ள 75% வரம்பினை தொடர்புடைய ஆண்டில் சராசரி ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலை முன்னுரிமையுடைய கட்டணத்தை கடக்கும் பட்சத்தில் நடைமுறைப் படுத்தப்படும்.

12.3 எரிசக்தி கொள்முதல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில் பிரதிவாதி மின் பகிர்மானதாரரால் வரம்பு கட்டண வீதம் விதிக்கப்பட்ட தேதியில் இருந்து மனுதாரருக்கு கட்டணம் செலுத்தப்படும் தேதி வரையிலான சாதாரண வட்டியுடன் சேர்ந்த தொடர்புடைய காலத்திற்கு எவ்வித வரம்பும் இன்றி முழுமையான சராசரி ஒருங்கிணைந்த மின்கொள்முதல் விலையில் மனுதாரருக்கு கட்டணம் செலுத்த முதல் பிரதிவாதிக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது 4. மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மேற்கூறிய தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு உரிமையியல் மேல்முறையீடு (Civil Appeal) எண் 9268 தாக்கல் செய்தது. மாண்பமை உச்சநீதிமன்றம் மேற்கூறிய மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு தடை விதிக்கவில்லை.

30 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part VI—Sec. 2

5. இதற்கிடையில், மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கருத்தினை, ஆணையம் அதனுடைய இதர மனு எண்.22/2016 மற்றும் தகராற்று தீர்வு மனு எண். 7/2021 ஆகியவற்றின் உத்தரவுகளில் ஏற்றுக்கொண்டுள்ளது.

6. இதன்படி, இந்தத் திருத்தம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் கடப்பாடு) விதிமுறைகள், 2023 இல் ஒருங்கிணைந்த மின் கொள்முதல் விலையின் திருத்தப்பட்ட வரையறையை இணைக்க முயல்கிறது.

(ஆணையத்தின் உத்தரவின்படி)

சென்னை-600 032, 2025 மார்ச் 11.

C. VEERAMANI, செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 26 March 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-03-26.Ordinary_12_Part-VI_Section-2/. Archive identifier in.gazette.tamilnadu.2025-03-26.Ordinary_12_Part-VI_Section-2.