Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT--Bills (Tamil)

Published 16 April 2025

Department
Legislative Assembly Department
Type
Extraordinary
Gazette no.
170
Part
Part IV
Notification no.
L.A. Bill No. 9 of 2025—The Tamil Nadu Urban Local Bodies (Amendment) Act, 2025. -- L.A. Bill No. 10 of 2025—The Tamil Nadu Panchayats (Second Amendment) Act, 2025.
Extraordinary Type
Tamil Nadu Bills (Tamil Supplement)
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-04-16.Extraordinary_170_Part-IV_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© GOVERNMENT OF TAMIL NADU 2025

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.00 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 170A] சென்னை, புதன்கிழமை, ஏப்ரல் 16, 2025 சித்திரை 3, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம்பொருளடக்கம்

பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்: சட்டமுன்வடிவுகள்:

எண். 9/2025—தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டம் .. .. 2-6 எண். 10/2025—2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் .. 7-9 DTP—Ex-IV-1 (170A)

[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 16-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 9/2025எண். 9/2025

1998–ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி 1998–ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு அமைப்புகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.

இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும்

1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர

தொடக்கம்.

உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும்

அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2 ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

9/1999.

2. 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2 ஆம் பிரிவின் (27) ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

மையச் சட்டம்

49/2016.

"(27-A) ''மாற்றுத்திறனாளி'' என்பது, 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் உள்ளவாறு அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;".

37 ஆம் பிரிவிற்கான

3. முதன்மைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1). (1) ஆம் உட்பிரிவில்,-

(a). (i) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும், அதாவது:-

"(i-a) மாநகராட்சியைப் பொறுத்த வரையில் அரசாலும் நகராட்சி மன்றம் மற்றும் பேரூராட்சியைப் பொறுத்த வரையில் இயக்குநராலும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், உறுப்பினராக நியமனம் செய்யப்படுதல்:

வரம்புரையாக, மன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையானது, நூறுக்கு மேற்படுமிடத்து, மாற்றுத்திறனாளிகள் இருவரை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுதல் வேண்டும்.";

(b) முதலாம் வரம்புரையில், "கூறுகள் (ii)" எனும் சொல்லுக்காக, "கூறுகள் (i-a), (ii)" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2). (1-A) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1-B). (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் ஓர் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான தகுதிகளானது, வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.";

(3). (2) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2-A). (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் பதவிக்காலமும் மன்றத்தின் பதவிக்காலமும் ஒரேநேரத்தில் முடிவடைதல் வேண்டும்.".

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3

43-A பிரிவிற்கான

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 43-A ஆம் பிரிவானது, 43-B எனும் பிரிவாக மறுஎண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட 43-B பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "கூறுகள் (ii)" எனும் சொல்லுக்காக, "கூறுகள் (i-a), (ii)" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

43-A எனும்

புதிய பிரிவை

உட்புகுத்துதல்.

5. முதன்மைச் சட்டத்தில், அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட 43-B பிரிவிற்கு முன்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"43-A. நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் அதிகாரங்கள் மற்றும் "43-A. நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள்.-கடமைகள்.- 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட ஓர் உறுப்பினர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்கள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.''.

48 ஆம் பிரிவிற்கான . 6. முதன்மைச் சட்டத்தின் 48 ஆம் பிரிவில்,-

திருத்தம் (1) ஓரத் தலைப்பில், "துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்" எனும் சொற்றொடருக்காக, "துணைத் தலைமையாளர், மன்ற உறுப்பினர் மற்றும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2). (1) ஆம் உட்பிரிவில், "துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்" எனும் சொற்றொடருக்காக, "துணைத் தலைமையாளர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3). (3) ஆம் உட்பிரிவில், "துணைத் தலைமையாளர் அல்லது மன்ற உறுப்பினர்கள்" எனும் சொற்றொடருக்காக, "துணைத் தலைமையாளர், மன்ற உறுப்பினர்கள் அல்லது 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

50 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

7. முதன்மைச் சட்டத்தின் 50 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவில், "கூறுகள் (ii)" எனும் சொல்லுக்காக, "கூறுகள் (i-a), (ii)" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

8. முதன்மைச் சட்டத்தின் 198 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்,- 198 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

(1). (xviii) ஆம் கூறின் இறுதியில் உள்ள, "மற்றும்" எனும்

சொல்லானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2). (xix) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறுகளானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(xix) 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a)

கூறின்கீழ் நியமனம் செய்யப்படும் முறை குறித்து;

(xx) 37 ஆம் பிரிவின் (1-B) உட்பிரிவின்கீழ் ஓர்

உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான தகுதிகள் குறித்து;

(xxi) 43-A ஆம் பிரிவின்கீழ் நியமனம் செய்யப்படும்

உறுப்பினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து; மற்றும்

(xxii) இந்தச் சட்டத்தின்கீழ் வகுத்துரைக்கப்படலாகும் அல்லது வகுத்துரைக்கப்பட வேண்டிய ஏதேனும் பிற பொருட்பாடுகள்.".

4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக்காரண விளக்கவுரை.நோக்கக்காரண விளக்கவுரை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு முறையில் மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையிலும், உள்ளாட்சி நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்புகளை வகிக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக நியமனம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேற்காணும் அறிவிப்பானது, மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும், வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் சமூக நீதியை அடைவதற்கு வழிவகுத்துள்ளது. அதற்கிணங்கியவாறு, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 9/1999) தக்கவாறு திருத்தம் செய்வதன் மூலம் அனைத்து பேரூராட்சிகள், நகராட்சி மன்றங்கள் மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளி நபர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

கே.என்.நேரு, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5

சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு. சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.

இந்தச் சட்டமுன்வடிவின் 1(2), 3(1)(a), 3(2), 5 மற்றும் 8(2) ஆகிய கூறுகள் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கையை வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.

கே.என்.நேரு, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,

முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம்,, சென்னை-9, 2025 ஏப்ரல் 16.

6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7

2025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 16-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளில் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 10/2025

1994–ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் 1994–ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு

தொடக்கம்.

ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக்

குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

2 ஆம் 21/1994.

பிரிவிற்கான திருத்தம்.

2. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவின் (25) ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

மையச் சட்டம்

49/2016.

"(25-A) ''மாற்றுத்திறனாளி'' என்பது, 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் உள்ளவாறு அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;".

புதிய துணைத் 3. முதன்மைச் சட்டத்தின் III ஆம் அத்தியாயத்தில், 32 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் துணைத் தலைப்பு மற்றும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

தலைப்பு மற்றும் 32-A எனும் பிரிவை உட்புகுத்துதல்.

""மாற்றுத்திறனாளி நபரை நியமனம் செய்தல்.- மாற்றுத்திறனாளி நபரை நியமனம் செய்தல்.-

32-A. ஊராட்சியில் மாற்றுத்திறனாளி நபரை நியமனம் செய்தல்.- (1) 32-A. ஊராட்சியில் மாற்றுத்திறனாளி நபரை நியமனம் செய்தல். ஒவ்வொரு கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, மாவட்ட ஊராட்சியிலும் மாற்றுத்திறனாளி ஒருவரை, அரசு அல்லது அரசால் அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு எதனாலும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், உறுப்பினராக நியமனம் செய்தல் வேண்டும்.

(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் செய்யப்படும் நியமனமானது, 6, 17 மற்றும் 25 ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தொடர்புடைய ஊராட்சிகளின் உறுப்பினர்களுடன் கூடுதலாக இருத்தல் வேண்டும்.

(3) ஓர் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான

தகுதிகளானது, வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.

(4) அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் பதவிக்காலமானது, ஊராட்சியின் பதவிக் காலஅளவுடன் ஒரேநேரத்தில் முடிவடைதல் வேண்டும்.

(5) அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் உரிமைகளும் கடமைகளும் வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்; ஆனால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இருத்தலாகாது." .

242 ஆம்

பிரிவிற்கான திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 242 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (xlvii) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறுகளானது சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(xlviii) மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை உறுப்பினராக நியமனம்

செய்யும் முறை குறித்து;

(xlix) 32-A பிரிவின்கீழ் உறுப்பினராக நியமனம் செய்வதற்கான

தகுதிகள் குறித்து;

(l) 32-A பிரிவின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின்

உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து.".

8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக்காரண விளக்கவுரைநோக்கக்காரண விளக்கவுரை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உள்ளாட்சி அமைப்பு முறையில் மாற்றுத்திறனாளிகளின் குரல்கள் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையிலும், உள்ளாட்சி நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்புகளை வகிக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையிலும், மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேற்காணும் அறிவிப்பானது, மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து குடிமக்களுக்கும், வாய்ப்புகளையும் சிறப்புரிமைகளையும் சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் சமூக நீதியை அடைவதற்கு வழிவகுத்துள்ளது. அதற்கிணங்கியவாறு, 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 21/1994) தக்கவாறு திருத்தம் செய்வதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை நியமனம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

இ. பெரியசாமி,

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9

சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு. சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.

இந்தச் சட்டமுன்வடிவின் 1(2), 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றன.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.

இ. பெரியசாமி,

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,

முதன்மைச் செயலாளர்.

தலைமைச் செயலகம்,, சென்னை-9, 2025 ஏப்ரல் 16.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 16 April 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-04-16.Extraordinary_170_Part-IV_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-04-16.Extraordinary_170_Part-IV_Section-1-T-Sup.