©
GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 8.80 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 190A] சென்னை, சனிக்கிழமை, ஏப்ரல் 26, 2025
சித்திரை 13, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்
பக்கங்கள் சட்டமுன்வடிவுகள்:
எண். 11/2024— தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாய நடவடிக்கைகளைத் 11/2025
தடுத்தல் சட்டம் .. .. .. .. .. .. .. .. .. 2-16 12/2025
எண்.12/2024— தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து
17-22 சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம்.
DTP—Ex-IV-1 (190A)
[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130–ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது. 130–ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 11/2025 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 11/2025
தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படும் குறு நிதி நிறுவனங்கள், தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படும் குறு நிதி நிறுவனங்கள், பணக்கடன் வழங்கும் முகமைகள் மற்றும் பணக்கடன் பணக்கடன் வழங்கும் முகமைகள் மற்றும் பணக்கடன் வழங்கும் அமைப்புகள் போன்ற பணக்கடன் வழங்கும் வழங்கும் அமைப்புகள் போன்ற பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் மூலம் கடன் எதனையும் வலுக்கட்டாய நிறுவனங்களின் மூலம் கடன் எதனையும் வலுக்கட்டாய முறையில் வசூலிப்பதினால் மிகுந்த இன்னல்களிலிருந்து முறையில் வசூலிப்பதினால் மிகுந்த இன்னல்களிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குழுக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குழுக்கள் மற்றும் தனிநபர்கள், குறிப்பாக விவசாயிகள், மகளிர் மற்றும் மற்றும் தனிநபர்கள், குறிப்பாக விவசாயிகள், மகளிர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை, விடுவிப்பதற்காகவும், மகளிர் சுய உதவிக் குழுக்களை, விடுவிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் பாதுகாப்பதற்காகவும் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்குமானதொரு அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்குமானதொரு சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் I.அத்தியாயம் I. முன்னுரை.முன்னுரை.
குறுந்தலைப்பு,
அளாவுகை மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (வலுக்கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருந்துகை. 2. இச்சட்டம், வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களைத் தவிர தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படும் அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்துதல் வேண்டும்:
வரம்புரையாக, கடன் பெறுபவருக்கு எதிரான 'கட்டாய நடவடிக்கை' தொடர்பான இந்த சட்டத்தின் வகைமுறைகளானது, மேற்கூறிய வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்துதல் வேண்டும்.
பொருள்
3. இச்சட்டத்தில், உள்ளடக்கம் வேறுவகையில் தெரிவிக்காத
வரையறைகள்.
வரையில், -
(a) "கடன் பெறுபவர்" என்பது எந்தவொரு பணக்கடன் வழங்கும் நிறுவனத்திடமிருந்தும், எந்த நோக்கத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்ற வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வாய்மொழியான அல்லது எழுத்துப்பூர்வமான உடன்படிக்கையின்கீழ் கடனாக பணம் பெறுகின்ற ஒரு தனிநபர் அல்லது தனிநபர்களின் குழு அல்லது ஒரு சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்புக் குழு என்று பொருள்படும்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3(b) "வலுக்கட்டாய நடவடிக்கைகள்" என்பது 20 ஆம் பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்று பொருள்படும்;
(தமிழ்நாடு சட்டம்
30/1983);
(c) "கூட்டுறவுச் சங்கம்" என்பது 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் ஒரு சங்கம் என்று பொருள்படும்;
(d) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(e) "கடன்" என்பது பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் வெளிப்படையாக வசூலிக்கப்படும் அல்லது பிறவாறான வட்டி வீதத்தில் கடன்பெறுபவருக்கு முன்தொகையாக கொடுக்கப்படும் பணம் என்று பொருள்படும்;
(f) "குறு நிதி நிறுவனம்" என்பது, கடன் பெறுவோருக்கு எவ்வகையிலும் கடன் வழங்குவதை அல்லது நிதி ஆதரவு வழங்குவதை முக்கிய அல்லது தன்னியல்பான நடவடிக்கையாக கொண்டு, கடன் பெறுவோருக்கு குறு கடன்கள் வழங்கும் ஒரு நிறுவனம் என்று பொருள்படும்;
(g) "குறுகடன்" என்பது மூன்று இலட்சம் ரூபாய் வரை ஆண்டு குடும்ப வருமானம் அல்லது அவ்வப்போது, அரசு, அறிவிக்கை மூலம் நிர்ணயிக்கும் அத்தகைய வரம்பு கொண்ட ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கடன் என்று பொருள்படும்.
விளக்கம்.- விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கத்திற்காக, ஒரு குடும்பம் என்பது, ஒரு தனிப்பட்ட குடும்ப அலகை, அதாவது, கணவன், மனைவி மற்றும் அவர்களின் திருமணமாகாத மகன் மற்றும் மகள் ஆகியோர் என்று பொருள்படும்.
(h) "பணக்கடன் வழங்கும் நிறுவனம்" என்பது எந்தவொரு குறு நிதி நிறுவனம் அல்லது பணக்கடன் வழங்கும் முகமை அல்லது பணக்கடன் வழங்கும் அமைப்பு அல்லது கூட்டாண்மை நிறுவகம் அல்லது நபர் அல்லது நபர்களின் குழு அல்லது எண்ம முறையில் கடன் வழங்கும் தளம் அல்லது பணக்கடன் வழங்குவதையும் அதனை திரும்பப்பெறுவதையும் அதன் முக்கிய அல்லது தற்செயலான நடவடிக்கைகளாகக் கொண்ட, எந்தப் பெயராலும் அழைக்கப்படுகின்ற ஏதேனும் பிற நிறுவனத்தையும் உள்ளடக்கும்.
விளக்கம்.- விளக்கம்.- இந்த கூறின் நோக்கத்திற்காக,-
தமிழ்நாடு சட்டம்
XXIII/1943.
(i) "பணக்கடன் வழங்கும் நடவடிக்கை" என்ற சொற்கூறானது, 1943 ஆம் ஆண்டு தமிழ்நாடு அடகு தரகர்கள் சட்டத்தின்கீழ் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அடகு தரகர்களின் தொழிலை உள்ளடக்காது;
(ii) "நபர்களின் குழு" என்ற சொற்கூறானது, சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், மாவட்ட அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்ற சமூக அடிப்படையிலான அமைப்புகளை உள்ளடக்காது.
(i) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது இந்தச் சட்டத்தின் கீழ்
வகுக்கப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;
(j) "பதிவு செய்யும் அதிகார அமைப்பு" என்பது 4 ஆம் பிரிவின்கீழ்
நியமனம் செய்யப்பட்ட ஓர் அலுவலர் என்று பொருள்படும்;
(k) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஅத்தியாயம் II.அத்தியாயம் II. பணக்கடன் வழங்கும் நிறுவனங்களைப் பதிவு செய்தலும் பணக்கடன் வழங்கும் நிறுவனங்களைப் பதிவு செய்தலும் அதற்கான ஒழுங்குமுறையும்.அதற்கான ஒழுங்குமுறையும்.
பகுதி Iபகுதி I பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு. பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு.
பதிவு செய்யும்
அதிகார
அமைப்பினை
நியமனம் செய்தல்.
4. (1) அரசு, அறிவிக்கை வாயிலாக, பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பதிவு செய்யும் அதிகார அமைப்பாக இருக்கக்கூடிய அத்தகைய எண்ணிக்கையிலான அலுவலர்களை நியமனம் செய்யலாம் மற்றும் அத்தகைய அலுவலரின் அதிகார வரம்பினை வரையறுக்கலாம்.
(2) பதிவு செய்யும் அதிகார அமைப்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களை செலுத்துதலும் அத்தகைய கடமைகளைப் புரிதலும் வேண்டும்.
பணக்கடன் வழங்கும்
நிறுவனங்கள்
பதிவுச் சான்றிதழைப்
பெறுதல்.
5. (1) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று மாநிலத்தில் செயல்பட்டு வரும் அல்லது இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு பின்பு பணக்கடன் வழங்குதலை தொடங்க விரும்பும் பணக்கடன் வழங்கும் நிறுவனம் எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழ் பெறாமல், கடன் எதனையும் வழங்கவோ அல்லது கடன் எதனையும் வசூலிக்கவோ கூடாது:
வரம்புரையாக, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று மாநிலத்தில் செயற்பட்டு வரும், பணக்கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள், இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யும் அதிகார அமைப்பிடமிருந்து பதிவுச் சான்றிதழைப் பெறுதல் வேண்டும்.
(2) பணக்கடன் வழங்கும் நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் இணையவழி வலைவாயில் வழியாக, அத்தகைய மின்னணு படிவத்தில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(3) அத்தகைய விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில், பதிவு செய்யும் அதிகார அமைப்பு, பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்து, (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட இணையவழி வலைவாயில் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்ளும் அத்தகைய மின்னணு படிவத்திலும் பதிவுச் சான்றிதழை வழங்குதல் அல்லது வழங்க மறுத்தல் வேண்டும்:
வரம்புரையாக, அத்தகைய விண்ணப்பம் எதுவும், விண்ணப்பதாரருக்கு கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்படாமலும் பதிவு செய்வதற்கான காரணங்களுக்காகவும் மறுக்கப்படுதல் ஆகாது.
(4) விண்ணப்பமானது, தொடர்புடைய பதிவு செய்யும் அதிகார அமைப்பால் (3) ஆம் உட்பிரிவின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் முடிவு எதுவும் செய்யப்படாதவிடத்து, பதிவுச் சான்றிதழானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், தானே உருவாக்கப்பட்டு இணையவழியில் வழங்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5(5) (3) அல்லது (4) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சான்றிதழானது, அதில் குறிப்பிடப்பட்ட அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டு காலத்திற்கு செல்லுபடியாதல் வேண்டும்:
வரம்புரையாக, பணக்கடன் வழங்கும் நிறுவனம் எதுவும், தான் பதிவு செய்துள்ள மாவட்டம் அல்லது வட்டாரம் அல்லாத ஏதேனும் பிற மாவட்டம் அல்லது வட்டாரம் எதிலும் தனது தொழிலை நடத்த விரும்பினால், அத்தகைய பதிவின் விவரங்களை அந்நிறுவனம், தனது அலுவலை நடத்த விரும்பும் தொடர்புடைய மாவட்டத்தின் அல்லது வட்டாரத்தின் பதிவு செய்யும் அதிகார அமைப்பிடம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் அளித்தல் வேண்டும்.
பதிவுச் சான்றிதழைப்
புதுப்பித்தல்.
6. (1) ஒவ்வொரு பதிவுச் சான்றிதழும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், அத்தகைய கட்டணங்களைச் செலுத்துவதன் பேரில் மற்றும் அத்தகைய நிபந்தனைகள் பூர்த்தி செய்ததன் மூலம் மூன்று ஆண்டு காலத்திற்கு புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.
(2) இச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், அத்தகைய சான்றிதழின் காலஅளவு முடிவடையும் தேதிக்கு முன்பு அறுபது நாட்களுக்குக் குறையாதவாறு செய்யப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, விண்ணப்பதாரர், உரிய காலத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து போதிய காரணத்தினால் தடுக்கப்பட்டுள்ளார் என்று பதிவு செய்யும் அதிகார அமைப்பு, மனநிறைவு அடையுமாயின், மேற்கூறப்பட்ட காலஅளவு கழிவுற்ற பின்னரும், ஆனால் சான்றிதழின் காலஅளவு முடிவடைவதற்கு முன்னரும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
(3) (2) ஆம் உட்பிரிவின்கீழ் அத்தகைய விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில், பதிவு செய்யும் அதிகார அமைப்பு, பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்து, பதிவு முடிவடையும் தேதிக்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் பதிவுச் சான்றிதழை புதுப்பித்தல் அல்லது புதுப்பிக்க மறுத்தல் வேண்டும்.
வரம்புரையாக, அத்தகைய விண்ணப்பம் எதுவும், விண்ணப்பதாரருக்கு கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்படாமலும் பதிவு செய்வதற்கான காரணங்களுக்காகவும் மறுக்கப்படுதல் ஆகாது.
(4) தொடர்புடைய பதிவு செய்யும் அதிகார அமைப்பால் (3) ஆம் உட்பிரிவின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் விண்ணப்பத்தின் மீது முடிவு எதுவும் செய்யப்படாதவிடத்து, பதிவுச் சான்றிதழானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், தானே உருவாக்கப்பட்டு இணையவழியில் வழங்கப்படுதல் வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட 7. பணக்கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் இம்மாநிலத்தில்
அலுவலகம்.
பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுபதிவு செய்யும்
அதிகார அமைப்பால்
பதிவேடுகள்
பராமரிக்கப்படுதல்.
8. (1) ஒவ்வொரு பதிவு செய்யும் அதிகார அமைப்பும், பதிவுச் சான்றிதழை வழங்கும்போது அல்லது அதனை புதுப்பிக்கும் போது, பதிவு செய்யப்பட்ட பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பதிவேட்டை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் மற்றும் அத்தகைய முறையில் பராமரித்தல் வேண்டும்.
(2) 5 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளின் கீழ் தேவைப்பட்டவாறு, பணக்கடன் வழங்கும் நிறுவனத்திடமிருந்து தகவல் பெறப்பட்டதன் பேரில், பதிவு செய்யும் அதிகார அமைப்பு, தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஆனால், பிற மாவட்டம் அல்லது வட்டாரம் எதிலும் பதிவு செய்யப்பட்ட பணக்கடன் வழங்கும் நிறுவனங்களை, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்திலும் அத்தகைய முறையிலும் பதிவு செய்வதற்காக, பராமரிக்கப்பட வேண்டிய ஒரு தனி பதிவேட்டில் தேவையான பதிவுகளைச் செய்தல் வேண்டும்.
(3) (1) ஆம் மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின்கீழ் பராமரிக்கப்படும் பதிவேடுகள், 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வலைவாயிலில் பதிவு செய்யும் அதிகார அமைப்பால் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அவ்வப்போது புதுப்பிக்கப்படுதல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் தொடர்புடைய பதிவு செய்யும் அதிகார அமைப்பின் வரம்பிற்குட்பட்ட பகுதியில் செயல்பட்டுவரும் பதிவுபெற்ற பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பட்டியலின் விபரங்கள் பொதுமக்கள் அணுகும் வகையில் இருத்தல் வேண்டும்.
பகுதி IIபகுதி II பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கான ஒழுங்குமுறை விதிகள். பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கான ஒழுங்குமுறை விதிகள்.
பணக்கடன் வழங்கும்
நிறுவனத்தின்
அலுவலில்
வெளிப்படைத்
9. (1) பணக்கடன் வழங்கும் நிறுவனம் வசூலிக்கும் பயனார்ந்த வட்டி வீதமானது, அதன் அனைத்து அலுவலகங்கள், அதன் வலைதளம், தகவல்தொகுப்பு அல்லது சிற்றேடு அல்லது விளம்பர அறிவுப்புகளில் தெளிவாக வெளியிடப்படுதல் வேண்டும்.
தன்மை.
(2) கடன் விலையில் நான்கு கூறுகள் மட்டுமே இருத்தல் வேண்டும். அவையாவன, வட்டி வீதம், செயலாக்க கட்டணம், காப்பீட்டுத் தொகை மற்றும் தாமதத்திற்கான அபராதக் கட்டணம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7(3) ஒவ்வொரு கடன் விண்ணப்ப படிவமும், கடன் பெறுபவரின் நலனை பாதிக்கக்கூடிய தேவையான தகவல்களை கொண்டிருத்தல் வேண்டும். இதனால் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உண்மையான ஒப்பீடு செய்யப்பட்டு கடன் பெறுபவரால் சரியான முடிவை எடுக்க முடியும். அத்தகைய விண்ணப்ப படிவத்தில் அத்தகைய விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பெயர்கள் குறிப்பிடுதல் வேண்டும்.
(4) ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும், கடன் வழங்கப்பட்ட தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பு, கடன் தொகை, கடன் வழங்கப்படும் தேதி மற்றும் அதன் முதிர்வு தேதி, பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, கடன் பெறுபவர் மற்றும் வசூலிக்கும் பயனார்ந்த வட்டி வீதம், செயலாக்க கட்டணம், காப்பீட்டுத் தொகை மற்றும் தாமதத்திற்கான அபராதக் கட்டணம் ஆகியவற்றைத் தெளிவான மற்றும் தனித்துவமான சொற்கூறுகளில், குறிப்பிட்ட படிவத்தில் ஒரு அறிக்கையை, கடன் பெறுபவருக்கு வழங்க வேண்டும் அல்லது வழங்க செய்தல் வேண்டும்.
(5) நிலையான கடன் உடன்படிக்கை ஒன்று இருத்தல் வேண்டும்.
(6) பணக்கடன் வழங்கும் நிறுவனம், கடன் பெறுபவருக்கு பின்வரும்
விவரங்கள் அடங்கிய கடன் அட்டையை வழங்குதல் வேண்டும்,-
(i) வசூலிக்கப்படும் பயனார்ந்த வட்டி விகிதம், செயலாக்க கட்டணம், காப்பீட்டுத் தொகை மற்றும் தாமதத்திற்கான அபராதக் கட்டணம்;
(ii) கடனுடன் இணைக்கப்பட்ட அனைத்து பிற வரையறைகள்
மற்றும் நிபந்தனைகள்;
(iii) கடன் பெறுபவரை போதுமான அளவு அடையாளம்
காணுகிற தகவல்; மற்றும்
(iv) பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் பெறப்பட்ட தவணைகள் மற்றும் இறுதி விடுவிப்பு உட்பட அனைத்து திருப்பிச் செலுத்தல்களுக்காக அளிக்கப்பட்ட ஒப்புகைகள்.
(7) பணக்கடன் வழங்கும் நிறுவனம் எதுவும், கடனைத் திருப்பிச் செலுத்தியதற்காக முறையான கையொப்பமிட்ட ரசீதை வழங்காமல் கடன் பெறுபவரிடமிருந்து கடனைத் திருப்பிச் செலுத்துதலைப் பெறுதல் கூடாது.
(8) ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும், கடன் பெறுபவரால் எழுத்துப்பூர்வமாகக் கோரப்பட்டதன் பேரில், அவரால் பெறப்பட்ட கடன் தொடர்பான எந்தவொரு ஆவணத்தின் படியையும், அல்லது கடன் பெறுபவர் அவ்வாறு கோரினால், கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நபருக்கும் வழங்குதல் வேண்டும்.
(9) கடன் அட்டையில் உள்ள உள்ளீடுகள் உட்பட கடன் பெறுபவருடனான அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழிலும் இருத்தல் வேண்டும்.
கடன் வழங்கும்
விதிமுறைகள்.
10. கடன் வழங்கும் விதிமுறைகள், வசூலித்தல் மற்றும் வசூல் செய்யும் நடைமுறைகள் குறித்து அரசு, அறிவிக்கை வாயிலாக குறிப்பிடலாம்.
விளக்கம்.-விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, கடன் வழங்கும்
விதிமுறைகள் வட்டி வீதத்தை உள்ளடக்காது.
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுபணக்கடன் வழங்கும்
நிறுவனம்
பிணையத்தை
11. பணக்கடன் வழங்கும் நிறுவனம், எந்த அளவிற்கு கடன்பெற்றவரிடமிருந்து பிணையத்தை நாடக்கூடாது என்பது வகுத்துரைக்கப்படலாகும் அந்த அளவிற்கு இருத்தல் வேண்டும்.
நாடலாகாது.
விளக்கம்.-விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "பிணையம்" என்பது
எந்த வகையான துணைப் பிணையத்தையும் குறிக்கிறது.
பணக்கடன் வழங்கும்
நிறுவனத்தால்
பராமரிக்கப்பட
வேண்டிய கணக்குப்
12. ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் அத்தகைய முறையிலும் பணகுறிப்பேடு, பேரேடு மற்றும் பிற கணக்குப் புத்தகங்களை வைத்துப் பராமரிக்க வேண்டும்.
புத்தகங்கள்.
கணக்குகள், விவர
அறிக்கைகள்
போன்றவற்றை
சமர்ப்பித்தல்.
13. ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும், ஒவ்வொரு நிதியாண்டிற்கும் வருடாந்திர ஆண்டறிக்கையை, 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வலைவாயிலில் வகுத்துரைக்கப்படலாகிற அத்தகைய படிவத்திலும் அத்தகைய காலத்திற்குள்ளும் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
பகுதி IIIபகுதி III பதிவு செய்யும் அதிகார அமைப்பின் அதிகாரங்கள். பதிவு செய்யும் அதிகார அமைப்பின் அதிகாரங்கள்.
பதிவை இரத்து
அல்லது
இடைநிறுத்தம்
செய்யும் அதிகாரம்.
14. (1) பதிவு செய்யும் அதிகார அமைப்பு, எந்த நேரத்திலும், தானாக முன்வந்தோ அல்லது கடன் பெறுபவரிடமிருந்து அல்லது வேறு எந்த நபரிடமிருந்து புகார் பெற்றதன் பேரிலோ, பணக்கடன் வழங்கும் நிறுவனம் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் எதனையும் மீறியுள்ளது எனக் கருதுமாயின், பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கு, அந்நிறுவனத்தின் பதிவை ஏன் இரத்து செய்யக்கூடாது என்ற காரணத்தை வழங்கக்கோரி அறிவிப்பு ஒன்றை அளிக்கலாம்.
(2) பதிவு செய்யும் அதிகார அமைப்பானது அவ்வாறு பதில் ஏதேனும் பெறப்பட்டால், அதனை பரிசீலனை செய்தும், அந்த பணக்கடன் வழங்கும் நிறுவனம் கூறப்பட்ட வகைமுறைகளை மீறியுள்ளது என மனநிறைவடைவதன் பேரிலும், அத்தகைய இரத்து செய்வதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த பின்பு அந்த பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவினை இரத்து செய்யலாம்.
(3) (1) ஆம் உட்பிரிவின்கீழ் விசாரணை நிலுவையில் இருப்பதால், பதிவு செய்யும் அதிகார அமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டிய போதுமான காரணங்களுக்காக, அந்த பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவை நிறுத்தி வைக்கலாம்.
(4) பதிவுச் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அல்லது இரத்து செய்யப்பட்டுள்ள பணக்கடன் வழங்கும் நிறுவனம், கடன் வழங்குதலாகாது.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9பதிவேடுகள் அல்லது (மையச் சட்டம்
ஆவணங்களை 46/2023)
சமர்ப்பிக்க
வேண்டுவதற்கான
அதிகாரம் மற்றும்
உள் நுழைந்து
ஆய்வு செய்தல்
மற்றும் பறிமுதல்
செய்வதற்கான
அதிகாரம்.
15. (1) 2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் VII ஆம் அத்தியாயம் மற்றும் 185 ஆம் பிரிவின்கீழ் காவல்துறை அதிகாரிகளின் அதிகாரங்களுக்கு குந்தகமின்றி, பதிவு செய்யும் அதிகார அமைப்பு அல்லது இதன் பொருட்டு எழுத்து மூலமாக அதனால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும், இச்சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்க பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் தொழில் நடைபெறுகிறதா என்பதைச் சரிபார்ப்பதற்காக, பணக்கடன் வழங்கும் நிறுவனம் எவற்றிலும் நுழையலாம் அல்லது அவரின் கருத்துப்படி அந்த பணக்கடன் வழங்குகின்ற நபரிடம் அத்தகைய தொழில் தொடர்பான பதிவேடு அல்லது ஆவணம் எதனையும் சமர்ப்பிக்குமாறு அவரைக் கோரலாம். அத்தகைய ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும் அல்லது அத்தகைய நபரும் அத்தகைய ஆய்வை அனுமதித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய ஆய்வின் போது மற்றும் தேவைப்படும் போது அத்தகைய பதிவேடுகள் அல்லது ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
(2) பதிவு செய்யும் அதிகார அமைப்பு அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பட்ட எந்த அலுவலரும், (1) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, வளாகத்தை சோதனையிடலாம் மற்றும் தேவைப்படலாகிற பதிவேடுகள், ஆவணங்கள் எதனையும் பறிமுதல் செய்யலாம். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பதிவேடுகள் அல்லது ஆவணங்களானது, ஆய்வு, வழக்குத் தொடர்தல் அல்லது பிற சட்ட நடவடிக்கையின் நோக்கங்களுக்காக, தேவைப்படலாகிற அத்தகைய காலத்திற்கு மட்டுமே வைத்திருத்தல் வேண்டும்.
(3) பதிவு செய்யும் அதிகார அமைப்பு அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பட்ட எந்த அலுவலரும், எந்த ஒரு பணக்கடன் வழங்கும் நிறுவனத்தையும் அல்லது அவரது கருத்தில் தொடர்புடைய தகவலை அளிக்கும் நிலையிலுள்ள அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரையும் அழைப்பாணை விடுத்து ஆய்வு செய்யும் அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.
பகுதி IV பகுதி IV பூசல்களை தீர்த்தல்.பூசல்களை தீர்த்தல்.
புகார்கள்.
16. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதுவும், பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் மீறப்பட்டுள்ளது குறித்து, கடன்பெறுபவர் எவரும், பணக்கடன் வழங்கும் நிறுவனத்தை பதிவு செய்த பதிவுசெய்யும் அதிகார அமைப்பிடம் அல்லது எதனுடைய அதிகார வரம்பிற்குள் பணக்கடன் வழங்கும் நிறுவனம் செயல்படுகிறதோ அந்த பதிவுசெய்யும் அதிகார அமைப்பிடம் அல்லது அதிகார வரம்பிற்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
(2) பதிவு செய்யும் அதிகார அமைப்பு, 14 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அத்தகைய புகாரை விசாரித்து, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையை பிறப்பித்தல் வேண்டும்.
(3) விசாரணைக்குப் பின்பு, பதிவு செய்யும் அலுவலர், பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கு எதிராக, சட்டவிரோதக் குற்றத்தை உள்ளடக்கும் முதல் நோக்கு வழக்கு உள்ளதென கண்டறிவாராயின், பதிவு செய்யும் அலுவலரானவர், அதிகாரவரம்பு கொண்டிருக்கும் காவல் நிலையத்திற்கு புகாரை மேலனுப்புதல் வேண்டும்.
(4) காவல் அலுவலர் எவரும், அத்தகைய புகாரை வாங்க
மறுத்தலாகாது.
10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுகுறை தீர்ப்பாயரை
நியமனம் செய்தல்.
17. (1) கடன்பெறுவோரின் பாதுகாப்பிற்காகவும், கடன் பெறுபவருக்கும் பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள உரிமையியல் தன்மையிலான பூசல்களைத் தீர்த்து வைப்பதற்காகவும், பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் வழங்கப்படும் கடன்களைப் பொறுத்த வரையில், அரசானது அறிவிக்கை வாயிலாக, பொருத்தமெனக் கருதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைதீர்ப்பாயரை, நியமனம் செய்யலாம். அவர், பூசலை தீர்வு செய்வதற்காக, கடன் பெறுபவருக்கும் கடன் கொடுப்பவருக்கும் இடையே பொதுவராக செயல்படலாம்.
(2) குறை தீர்ப்பாயரின் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள்
வகுத்துரைக்கப்படலாகிற அத்தகையவாறு இருத்தல் வேண்டும்.
வரம்புரையாக, இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும், பூசலை கேட்பதற்கும் விசாரணை செய்வதற்குமான உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பை தடை செய்தல் ஆகாது.
அத்தியாயம் III. அத்தியாயம் III. குற்றங்களும் தண்டனைகளும்.குற்றங்களும் தண்டனைகளும்.
பதிவு செய்யாமல்
தொழிலை
மேற்கொள்வதற்கான
தண்டனை.
18. 5 ஆம் பிரிவின்கீழ் பதிவுச் சான்றிதழ் பெறாமல், கடன் வழங்கும் தொழிலை மேற்கொள்ளும் ஒரு பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் அன்றாட கட்டுப்பாடு, தொழில் மற்றும் மேலாண்மைக்கு தொடர்புடைய மற்றும் பொறுப்புடைய எந்தவொரு நபரும், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
13 ஆம் பிரிவை
மீறுவதற்கான தண்டத்தொகை
19. 13 ஆம் பிரிவின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் ஆண்டறிக்கையை பதிவேற்றம் செய்யத்தவறும் பணக்கடன் வழங்கும் நிறுவனமானது, பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாத ஆனால் ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
வலுக்கட்டாய
நடவடிக்கைகளைத்
தடுத்தல்.
20. (1) கடன் பெறுபவரிடமிருந்து கடனை வசூலிக்கும் போது, கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும், பணக்கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால் வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுதலாகாது.
(2) பின்வரும் சூழ்நிலைகளில், பணக்கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால் கடன் பெறுபவரிடமிருந்து கடனை வசூலிப்பது தொடர்பாக அல்லது அதனுடன் தொடர்புடையதாக இருந்தால் அல்லது ஏற்பட்டால், அது வலுக்கட்டாய நடவடிக்கையாக கருதப்படுதல் வேண்டும்:-
(a) கடன் பெறுபவருக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ இடையூறு விளைவித்தல் அல்லது வன்முறையைப் பயன்படுத்துதல் அல்லது அவர்களை அவமதித்தல் அல்லது மிரட்டுதல்; அல்லது
(b) கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களில் எவரையும் இடத்திற்கு இடம் தொடர்ந்து பின்தொடர்தல், அல்லது அவர்களுக்குச் சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்திய எந்தவொரு சொத்திலும் தலையிடுதல் அல்லது அத்தகைய எந்தவொரு சொத்தையும் அவர்களிடமிருந்து பறித்தல் அல்லது பயன்படுத்துவதில் அவர்களுக்கு இடையூறு விளைவித்தல்; அல்லதுதமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11 (c) வலுக்கட்டாயப்படுத்தும் நடவடிக்கை எடுக்கின்ற நோக்கத்துடன், கடன் பெறுபவரின் வீடு அல்லது அவர் வசிக்கும் அல்லது வேலை செய்யும் அல்லது தொழிலை மேற்கொள்ளும் அல்லது அவ்வாறு நடைபெறும் பிற இடத்திற்கு அடிக்கடி செல்வது; அல்லது
(d) பேச்சுவார்த்தை நடத்த அல்லது வலுக்கட்டாயப்படுத்தி மற்றும் தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் செலுத்துமாறு கடன் பெறுபவரை வலியுறுத்துவதற்காக தனியார் அல்லது வெளித்தரப்பு அல்லது வெளிப்புற முகமைகளின் சேவையைப் பயன்படுத்துதல்; அல்லது
(e) கடன் பெறுபவருக்கு, எந்தவொரு அரசு திட்டத்தின் கீழுள்ள ஒரு நலப்பயனையும் பெற உரிமை அளிக்கும் எந்தவொரு ஆவணத்தையும், ஏதேனும் பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள் அல்லது வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருதல்.
20 ஆம் பிரிவை
மீறியதற்கான
தண்டனை.
21. இந்தச் சட்டத்தின் 20 ஆம் பிரிவை மீறி, கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் எதிராக, பணத்தை வசூலிப்பதற்காக எந்தவொரு வலுக்கட்டாய நடவடிக்கையையும், பயன்படுத்தும் எவரொருவரும்,
(i) அத்தகைய மீறுகை, 20 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (a) அல்லது (b) அல்லது (c) கூறுடன் தொடர்புடையதாக இருக்குமிடத்து, மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இரண்டும்; மற்றும்
(ii) அத்தகைய மீறுகை, 20 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (d) அல்லது (e) கூறுடன் தொடர்புடையதாக இருக்குமிடத்து, ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இரண்டும்,
விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(மையச் சட்டம்
தற்கொலைக்குத் 45/2023)
தூண்டுதல்.
22. கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலைக்கு உடனடி முன்பு, கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் எவரேனும் கடன் முன்பணம் கொடுத்த பணக்கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால், வலுக்கட்டாய நடவடிக்கைக்கு ஆளானார் என்பது நிரூபிக்கப்பட்டால், அத்தகைய பணக்கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்கள் அத்தகைய தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கருதப்படுவார்கள். அதனால் 2023 ஆம் ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதாவின் 108 ஆம் பிரிவின்கீழ் ஒரு குற்றத்தைப் புரிந்ததாகக் கருதப்படுவார்கள்.
விளக்கம்.- விளக்கம்.- 20, 21 மற்றும் 22 ஆம் பிரிவுகளின் நோக்கங்களுக்காக, "குடும்ப உறுப்பினர்கள்" என்ற சொற்கூறானது, கடன் பெறுபவரின் பெற்றோர், கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் என்று பொருள்படும்.
சட்டத்தின் பிற
வகைமுறைகளை
மீறுவதற்கான தண்டனை 23. இச்சட்டத்தின் வகைமுறைகளில் எதனையும் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளில் எதனையும் மீறுகின்ற எவரும், அதற்காக இந்தச் சட்டத்தில் தனியாக தண்டத்தொகை எதுவும் விதிக்கப்படாதிருந்தால், அவர் பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுகைது செய்யக்கூடிய
மற்றும் பிணையில்
வெளிவர முடியாத
24. 19 மற்றும் 23 ஆம் பிரிவுகளைத் தவிர இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் கைது செய்யக்கூடிய மற்றும் பிணையில் வெளிவர முடியாத தன்மையுடையதாகும்.
குற்றம்.
இச்சட்டத்தின்
கீழ் தண்டனை
விதிக்கப்படுவதன்
பேரில் பதிவை
இடைநிறுத்துதல்
அல்லது இரத்து
செய்தல்.
25. இச்சட்டத்தின் வகைமுறைகளின்கீழ், ஒரு பணக்கடன் வழங்கும் நிறுவனம் தண்டிக்கப்படும்போது, பணக்கடன் வழங்கும் நிறுவனத்தை பதிவு செய்த பதிவுசெய்யும் அதிகார அமைப்பு அல்லது எதனுடைய அதிகார வரம்பிற்குள் பணக்கடன் வழங்கும் நிறுவனம் செயல்படுகிறதோ அந்த பதிவுசெய்யும் அதிகார அமைப்பு, இச்சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் அத்தகைய பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தம் செய்யவோ அல்லது இரத்து செய்யவோ அல்லது இரத்து செய்ய பரிந்துரை செய்யவோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
நிறுமங்களால்
செய்யப்படும்
குற்றங்கள்.
26. (1) இச்சட்டத்தின் கீழ் குற்றமொன்று ஒரு நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, அக்குற்றம் இழைக்கப்பட்டபோது, அந்நிறுமத்தின் அலுவல் நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின் பொறுப்பிலிருந்த மற்றும் பொறுப்பைக்கொண்டிருந்த ஒவ்வொருவரும், மற்றும் அந்நிறுமமும், அக்குற்றத்தை செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுதலும் வேண்டும்: வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபர் எவரும், அக்குற்றம் தமக்குத் தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய குற்றத்தை தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ததாக மெய்ப்பித்தால், இச்சட்டத்தின் கீழ் வகைசெய்யப்பட்டுள்ள எந்தவிதமான தண்டனையும் அத்தகைய நபருக்கு அளிக்கப்படுதல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின்கீழ் குற்றம் எதுவும் நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்தக் குற்றமானது, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் அனுமதியுடன் அல்லது உடந்தையுடன் அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் அக்குற்றத்தைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுதல் வேண்டும்.
விளக்கம்.-விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-
(a) "நிறுமம்" என்பது, ஒரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகம் அல்லது பிற தனி நபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்
(b) "இயக்குநர்" என்பவர், ஒரு நிறுவகத்தைப்
பொறுத்தவரையில், நிறுவகத்தில் ஒரு பங்குதாரர் ஆவார்.
அத்தியாயம் IV.அத்தியாயம் IV. பல்வகை.பல்வகை.
ஒவ்வொரு அலுவலரும்
(மையச் சட்டம் பொது ஊழியராக
45/2023);
இருத்தல்.
27. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் செயல்படும் ஒவ்வொரு அலுவலர் அல்லது நபரும் 2023 ஆம் ஆண்டு பாரதிய நியாய சன்ஹிதாவின் 2 ஆம் பிரிவின் (28) ஆம் உட்பிரிவின் பொருளுக்குள் ஒரு பொது ஊழியராகக் கருதப்படுவார்.
பிற சட்டங்களின்
செயல்பாடு
பாதிக்கப்படாது.
28. இச்சட்டத்தின் வகைமுறைகள், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள ஏதேனும் பிற சட்டத்துடன் கூடுதலாகவும் அவற்றை திறக்குறைவு செய்யாததாகவும் இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 13பணிப்புரைகளை
வழங்குவதற்கான
அதிகாரம்.
29. இச்சட்டத்தின் வகைமுறைகளுக்கு செயல்விளைவை அளிக்க பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், பதிவு செய்யும் அதிகார அமைப்பு அல்லது குறைதீர்ப்பாயர் அல்லது இந்தச் சட்டத்தின் அமலாக்கம் தொடர்பாக பணியமர்த்தப்பட்டுள்ள பிற நபர்கள் எவருக்கும், சட்டத்தின் வகைமுறைகளுக்கோ, அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கோ முரணாக இல்லாத, அது தக்கதெனக் கருதலாகும் அத்தகைய பணிப்புரைகளை அரசானது அவ்வப்போது வழங்கலாம்.
விதிகளைச் 30. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக
செய்வதற்கான விதிகளைச் செய்யலாம்.
அதிகாரம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின் 31 ஆம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது எனச் சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையானது அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
இடர்ப்பாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.
31. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில், இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசு, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையான அல்லது உகந்ததாக அதற்குத் தோன்றுகிற, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரையாக, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டுக் காலஅளவு முடிவடைந்த பின்னர், இந்தப் பிரிவின்கீழ் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
பணக்கடன் வழங்குபவர்கள் மற்றும் அடகுக் கடைக்காரர்களின் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடனின் மீதான கடும் வட்டியிலிருந்து மக்களைக் காப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. 1943 ஆம் ஆண்டு தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் XXIII/1943), 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணக்கடன் வழங்குபவர்கள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் XXVI/1957) மற்றும் 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு கந்துவட்டி விதித்தல் தடைச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 38/2003) ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது. எனினும், சமீப காலமாக, சமூகத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர் குறிப்பாக விவசாயிகள், மகளிர், சுய உதவிக் குழுக்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணைத் தொழிலாளர்கள், கட்டிடப் பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் எண்ம முறையில் வழங்கல் தளங்கள் உள்ளடங்கலாக பணக்கடன் வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்படும் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆட்படுகின்றனர். மேலும், பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கனவே நிதிச் சுமையில் இருக்கும் கடன் பெற்றவர்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை நாடுகின்றனர்; அது, துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்வதற்கு தூண்டுதலாய் அமைந்து, அதன்மூலம் பலரின் குடும்பங்களை அழித்து சமூக ஒழுங்கை பாதிப்படையச் செய்கிறது.
2. எனவே, தனிநபர் அல்லது தனிநபர்கள் குழு, சுயஉதவிக் குழுக்கள் அல்லது கூட்டுப்பொறுப்புக் குழுக்கள் ஆகியவற்றிற்குக் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின், வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் மிகுந்த இன்னல்களிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்க ஒரு சட்ட வரையறைக்கு வகைசெய்வது அவசியமென கருதப்படுகிறது. அதற்கிணங்க பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 15சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு. சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 1(3), 4, 5, 6, 8, 10, 11, 12, 13, 17, 29 மற்றும் 30 ஆகிய பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக, நேர்விற்கேற்ப, அறிவிக்கைகளை வெளியிடுவதற்கு அல்லது ஆணைகளை பிறப்பிப்பதற்கு அல்லது விதிகளைச் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கின்றது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்.
கி. சீனிவாசன்,
தலைமைச் செயலகம்,, சென்னை-9, முதன்மைச் செயலாளர். 2025 ஏப்ரல் 26.
16 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 172025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 26-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130–ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது. 130–ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 12/2025 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 12/2025
1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தினை மேலும் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு
தொடக்கம்.
கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
நெடுந்தலைப்பிற்கான 2. 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள்,
14/1982.
திருத்தம்.
கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) நெடுந்தலைப்பில், "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
முன்னுரைக்கான 3. முதன்மைச் சட்டத்தின், முன்னுரையில்,-
திருத்தம்.
(1) முதலாம் பத்தியில், "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
18 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(2) இரண்டாம் பத்தியில், "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
1 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 1 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) இந்தச் சட்டம், 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு தடுப்புக் காவல்
சட்டம் என வழங்கப்பெறும்.".
2 ஆம் பிரிவிற்கான 5. முதன்மைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (a) கூறில்,—
(a) (i) மற்றும் (i-A) உட்கூறுகளானது, முறையே (i-A) மற்றும் (i-B) உட்கூறுகளாக மறுஎண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறாக மறுஎண்ணிடப்பட்ட (i-A) உட்கூறுக்கு முன்பு, பின்வரும் உட்கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(i) ஓர் உயிரி-மருத்துவக் கழிவுகளைக் குவிக்கும் குற்றவாளியின் நேர்வில், பொது ஒழுங்கு பேணுவதை எதிர்மாறாக பாதிக்கின்ற அல்லது பெரும்பாலும் எதிர்மாறாக பாதிக்கக்கூடிய தனது நடவடிக்கைகள் எதிலும், ஓர் உயிரி-மருத்துவக் கழிவுகளைக் குவிக்கும் குற்றவாளியாக ஈடுபட்டுள்ளபோது அல்லது ஈடுபட தயார்படுத்திக் கொண்டிருக்கிறபோது;";
(b) (ii-A) உட்கூறானது, (ii-B) உட்கூறாக மறுஎண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறாக மறுஎண்ணிடப்பட்ட (ii-B) உட்கூறுக்கு முன்பு, பின்வரும் உட்கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(ii-A) ஒரு பொருளாதாரக் குற்றவாளியின் நேர்வில், பொது ஒழுங்கு பேணுவதை எதிர்மாறாக பாதிக்கின்ற அல்லது பெரும்பாலும் எதிர்மாறாக பாதிக்கக்கூடிய தனது நடவடிக்கைகள் எதிலும், ஒரு பொருளாதாரக் குற்றவாளியாக ஈடுபட்டுள்ளபோது அல்லது ஈடுபட தயார்படுத்திக் கொண்டிருக்கிறபோது;";
(2) (a) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(aa) "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளி" என்பது, 2016 ஆம் ஆண்டு உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறி, எந்தவொரு உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் அல்லது குவிக்க முயலுகின்ற ஒரு நபரைக் குறிக்கிறது; இது 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், (மையச் சட்டம் 29/1986) இன் கீழ் தண்டனைக்குரியது;";
(3) (ee) கூறானது, (eee) கூறாக மறுஎழுத்திடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறுஎழுத்திடப்பட்ட (eee) கூறுக்கு முன்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 19"(ee) "பொருளாதாரக் குற்றவாளி" என்பவர், 1982 ஆம் ஆண்டு சீட்டு நிதியச் சட்டம் (மையச் சட்டம் 40/1982) அல்லது 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில்) வைப்பீட்டாளர்களின் நலன்கள் பாதுகாப்புச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 44/1997) அல்லது 2019 ஆம் ஆண்டு ஒழுங்குபடுத்தப்பட்டிராத வைப்பீட்டுத் திட்டங்களைத் தடைவிதித்தல் சட்டம் (மையச் சட்டம் 21/2019) ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் எதனையும் செய்கிற அல்லது செய்ய முயல்கின்ற அல்லது செய்வதற்கு உடந்தையாக இருக்கிற நபரெவரும் ஆவார்;";
(4) (f) கூறில், "இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) அத்தியாயம் VIII இன்கீழ் உள்ள 153 ஆம் பிரிவு அல்லது 153-A பிரிவு அல்லது அத்தியாயம் XVI இன் கீழுள்ள 354, 376, 376-A, 376-B, 376-C, 376-D மற்றும் 377-ஆம் பிரிவுகள் தவிர்த்து அல்லது அத்தியாயம் XVII அல்லது அத்தியாயம் XXII இன்கீழ் தண்டிக்கப்படக்கூடிய" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) அத்தியாயம் V இன்கீழ் உள்ள 80, 87 முதல் 97 வரையிலான பிரிவுகளின்கீழ் அல்லது அத்தியாயம் VI இன் கீழுள்ள 113 ஆம் பிரிவைத் தவிர்த்து அல்லது அத்தியாயம் XI இன்கீழ் உள்ள 192 ஆம் பிரிவு அல்லது 196 ஆம் பிரிவு அல்லது அத்தியாயம் XVII இன்கீழ் அல்லது அத்தியாயம் XIX இன் கீழுள்ள 356 மற்றும் 357 ஆம் பிரிவுகளைத் தவிர்த்து தண்டிக்கப்படக்கூடிய" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(5) (g) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
''(g) "விபச்சாரத் தொழில் குற்றவாளி" என்பவர், 2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 98 மற்றும் 99 ஆம் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்படக்கூடிய அல்லது 1956 ஆம் ஆண்டு விபச்சாரத் (தடுப்புச்) சட்டத்தின்கீழ் (மையச் சட்டம் 104/1956) தண்டிக்கப்படக்கூடிய குற்றம் எதனையும் செய்கிற அல்லது செய்வதற்கு உடந்தையாய் இருக்கிற நபரொருவர் ஆவார்;";
(6) (ggg) கூறில், "இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) 354, 376, 376-A, 376-B, 376-C, 376-D அல்லது 377 ஆம் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) அத்தியாயம்-V இன்கீழ் உள்ள 64 முதல் 71 வரையிலான பிரிவுகள் அல்லது 74 முதல் 79 வரையிலான பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "கள்ளச்சாராயக்காரர்கள், அல்லது கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், அல்லது மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், அல்லது கள்ளச்சாராயக்காரர்கள், அல்லது கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், அல்லது மருந்து சரக்குக் குற்றவாளிகள், அல்லது பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
7. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், "1973 ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணைமுறை தொகுப்புச் சட்டம் (மையச் சட்டம் 2/1974)" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (மையச் சட்டம் 46/2023)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
20 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு7 ஆம்
8. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
(1) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
திருத்தம்.
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) நபரொருவர், தொடர்பாக தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கையில், அவர் தலைமறைவாகியுள்ளார் அல்லது அந்த ஆணையை நிறைவேற்ற முடியாதவாறு தன்னை மறைத்துக்கொண்டுள்ளார் என மாநில அரசு அல்லது 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர் நம்புவதற்குக் காரணம் இருப்பின், இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உட்பட்டு அத்தகைய நபர் மற்றும் அவரது சொத்துகளைப் பொறுத்தமட்டில், 2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (மையச் சட்டம் 46/2023) 84 முதல் 89 வரையிலான பிரிவுகளின் வகைமுறைகளானது பொருந்துதல் வேண்டும், மற்றும் அத்தகைய நபர் சாதாரணமாக வசிக்கின்ற இடம் எதுவாகயிருப்பினும், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் ஆணையானது, ஒரு தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையாகக் கருதப்படுதல் வேண்டும். தடுப்புக் காவல் ஆணையானது, நேர்விற்கேற்ப, மாநில அரசால், மாவட்ட குற்றவியல் நடுவர் படிநிலைக்குக் குறையாத ஓர் அலுவலரால் அல்லது காவல் துறை ஆணையரால், இதன் பொருட்டு மாநில அரசால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் பிறப்பிக்கப்பட்டிருக்குமிடத்து, அல்லது தடுப்புக் காவல் ஆணையானது, 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட ஓர் அலுவலரால் பிறப்பிக்கப்பட்டிருப்பின்,
அத்தகைய அலுவலர், அவரது வழக்கமான அதிகாரவரம்பு எதுவாகயிருப்பினும், அத்தகைய நபருக்கு எதிராக பொது அறிவிப்பு ஒன்றை பிறப்பிப்பதற்கு மற்றும் மாநிலத்தின் பகுதி எதிலும் அமைந்துள்ள அவரது சொத்தினைக் கண்டறிதல், பற்றுகை செய்தல் விற்பனை செய்தலுக்கு மற்றும் கூறப்பட்ட பிரிவுகளின் கீழ் ஏதேனும் பிற நடவடிக்கை எடுப்பதற்கு, கூறப்பட்ட சன்ஹிதாவின் 84, 85, 86, 87 மற்றும் 88 ஆம் பிரிவுகளின் கீழ் தகுதிவாய்ந்த நீதிமன்றத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் செலுத்துவதற்கு அதிகாரம் கொண்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும். பற்றுகை செய்யப்பட்ட சொத்தினைத் திருப்பிக்கொடுப்பதற்கான மனுவினைத் தள்ளுபடி செய்யும் அத்தகைய அலுவலர் எவராலும் பிறப்பிக்கப்படும் ஆணை எதனின் மேல்முறையீடானது, கூறப்பட்ட சன்ஹிதாவின் 89 ஆம் பிரிவில் வகைசெய்யப்பட்டுள்ளவாறு, கூறப்பட்ட நபர் சாதாரணமாக வசிக்கின்ற இடத்தின் அதிகாரவரம்பு உடைய அமர்வு நீதிமன்றத்திடம் செய்யப்படுதல் வேண்டும்.";
(2) (2) ஆம் உட்பிரிவின் (c) கூறில், "கூறப்பட்ட தொகுப்புச் சட்டம்" எனும் சொற்றொடருக்காக, "கூறப்பட்ட சன்ஹிதா" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2117 ஆம் பிரிவிற்கான 9. முதன்மைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
22 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 2024-2025 ஆண்டின் காவல் துறைக்கான மானியக் கோரிக்கையை சட்டமன்ற பேரவையில் எடுத்துரைக்கையில், பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதன் பொருட்டு, அத்தகைய நபர்கள், 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தின்கீழ் (தமிழ்நாடு சட்டம் 14/1982) தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்றும், கூறப்பட்ட சட்டமானது தக்கவாறு திருத்தம் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
2. மேலும், உயிரி-மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது, பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தும். நமது அண்டை மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்குள் அத்தகைய கழிவுகளை கொட்டுவது குறித்து அடிக்கடி புகார்கள் எழுப்பப்படுகின்றன. மாண்பமை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, Crl.R.C (MD) No.957/2023 மற்றும் Crl.M.P (MD) No.12436/2023 என்ற வழக்கில், 15.11.2023 தேதியிட்ட அதன் ஆணையில், 2016 ஆம் ஆண்டு உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறுபவர்களை, தமிழ்நாடு சட்டம் 14/1982-ஐ தக்கவாறு திருத்தம் செய்வதன் மூலம், கூறப்பட்ட சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய இதுவே சரியான நேரம் என்று கருத்து தெரிவித்துள்ளது.
3. மேலும், 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனை தொகுப்புச் சட்டம் (மையச் சட்டம் XLV/1860) மற்றும் 1973 ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறை தொகுப்புச் சட்டம் (மையச்சட்டம் 2/1974) ஆகியன நீக்கறவு செய்யப்பட்டு, முறையே 2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதா (மையச் சட்டம் 45/2023) மற்றும் 2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (மையச்சட்டம் 46/2023) என மீண்டும் இயற்றப்பட்டுள்ளது. எனவே, கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 14/1982-லும் குறித்த சில இடைவிளைவான திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியமாகும்.
4. அதற்கிணங்கியவாறு, கூறப்பட்ட நோக்கங்களுக்காக, தமிழ்நாடு சட்டம் 14/1982-ஐத் தக்கவாறு திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
5. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
V செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,
முதன்மைச் செயலாளர்.
தலைமைச் செயலகம்,, சென்னை-9, 2025 ஏப்ரல் 26.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.