© தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 1.60 காசு[விலை: ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 21] சென்னை, புதன்கிழமை, மே 28, 2025 வைகாசி 14, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 52, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன(வனம்.5)த் துறை, 12 மார்ச் 2025.] 2002-ஆம் ஆண்டு உயிரியல் பல்வகைமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் எண் 18/2003) 37-ஆம் பிரிவு குறிப்பிட்ட பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலங்களாக (BHS) அறிவிப்பதற்கு வகை செய்வதாலும்
மேலும் தேசிய உயிரிப் பல்வகைமை ஆணையத்தால் (NBA) வெளியிடப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய தலங்களைத் தெரிவு செய்து நிருவகிப்பதற்கான வழிகாட்டிக் குறிப்புகளின் 4(c)ஆம் வழிகாட்டிக் குறிப்பில் உயிரிப் பல்வகைமை குறித்த கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவும் கோயில் காடுகள் / மரங்கள் மற்றும் தலங்கள் அல்லது ஏனைய பெரிய சமூக காப்புப்பகுதிகள் போன்ற முக்கிய பண்பாட்டுத் தலங்களாகவும் உள்ள இடங்கள்", பல்லுயிர் பாரம்பரிய தலங்களாக அடையாளம் காணப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாலும் 4(e)ஆம் வழிகாட்டிக் குறிப்பில் பல்லுயிர் பாரம்பரிய தலங்களை உருவாக்குவது உள்ளூர் சமூகங்கள் தாமாகவே தீர்மானித்தவை நீங்கலாக அவர்களின் செயலிலுள்ள நடைமுறைகள் மற்றும் பயன்பாடுகளில் யாதொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது குறிப்பிடப்பட்டிருப்பதாலும்.
மேலும், அருகி வரும் மற்றும் அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களைக் கொண்டிருக்கிற உயிரியல் பல்வகைமையை அவை வாழும் இடத்திலேயே பாதுகாப்பதற்கான முக்கியமான இயற்கை வாழ்விடங்களாக தமிழ்நாட்டின் கோவில் காடுகள் தனித்துவம் மிக்கவையாக விளங்குவதாலும் இத்தகைய அமைவிடங்கள் பரிணாம வளர்ச்சியில் தொடர்ச்சியான சுற்றுச்சூழல், பண்பாடு மற்றும் உயிரியல் செய்முறைகளையும் அடையாளப்படுத்துவதாலும் மேற்சொன்ன 2002-ஆம் ஆண்டு உயிரியல் பல்வகைமைச் சட்டத்தின் (மத்தியச் சட்ட எண்:18/2003) விதித்துறைகளின்படி, மாநிலத்தின் பண்பாடு மற்றும் இயற்கை பாரம்பரியம் அங்கீகரிக்கப்படுவதற்குத் தகுதி பெறுவதாலும்,
மேலும், கீழ்க்காணும் விவர அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள காசம்பட்டி (வீர கோயில்) கோயில் காடு, சமூக சூழலியல் சூழல் இறையியல், இறை நம்பிக்கை ஆகியவற்றுடன் கூடிய சிறப்பான பகுதியாக விளங்குவதுடன் அப்பகுதி பேரளவிலான பல்லுயிர்பெருக்கத்தைக் கொண்டிருப்பதாலும், மேற்சொன்ன பகுதி உள்ளூர் சமூகத்தால் பாதுகாக்கப்படும் கணிசமான பகுதிகளைக் கொண்டிருப்பதுடன் அவற்றின் முக்கியத்துவம். தனித்தன்மை மற்றும் பல்வகைமை ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குவதாலும்,
மேலும், உள்ளூர் மக்கள் ஒரு சிறு குச்சியையோ இலையையோ கூட எடுத்துச் செல்வதில்லை என்பதுடன் இக்கோயில் காட்டைக் கடந்து செல்லும் போதும் அல்லது நுழையும்போதும் கூட காலணிகளைப் பயன்படுத்தாமல் தங்களது உயரிய ஒழுக்கத்தை வெளிப்படுத்தி வருவதாலும்,
II-2-(21) (T Sup)—1
[ 1 ]2 மேலும் உயிரிபல்வகைமைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும். அப்பகுதியில் விரைவாக அழிந்துவரும் உயிரிப் பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும். தமிழ்நாடு உயிரிப்பலவகைமை வாரியத்தின் பரிந்துரையின் பேரில், மாநில அரசு இப்பகுதியை காசம்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க வேண்டியது அவசியமெனக் கருதுவதாலும்.
மேலும், கீழேயுள்ள விவர அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் காசம்பட்டியில் உள்ள கோவில் காடு, பேரளவில் உயிரிப்பல்வகைமை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ்நாடு அரசு கருதுவதாலும்.
எனவே தற்போது, 2002-ஆம் ஆண்டு உயிரிப் பல்வகைமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 18/2003) 37ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு. தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்தப் பின்னர். அப்பகுதியில் அமைந்துள்ள "வீர கோவில்" என்ற கோயிலில் பொதுமக்கள் வழிபடுவதற்கு யாதொரு தடையும். இல்லாதவாறு கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அப்பகுதிகளை பல்லுயிர் பாரம்பரியத் தலமாக இதனால் அறிவிக்கிறார்
அட்டவணை
| (1) | பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் பெயர் | காசம்பட்டி உயிரிப் பல்வகைமை பாரம்பரிய தலம் |
| (2) | கோயில் காட்டின் பெயர் | காசம்பட்டி கிராமம் வீர கோயில் கோயில் காடு |
| (3) | மாவட்டத்தின் பெயர் | திண்டுக்கல் |
| (4) | வட்டத்தின் பெயர் | நத்தம் |
| (5) | கிராம ஊராட்சியின் பெயர் | ரெட்டியாப்பட்டி |
| (6) | வன சரகத்தின் பெயர் | அழகர் கோயில் சரகம் |
| (7) | நில அளவை எண் | 52/2 |
| (8) | பரப்பளவு எக்டேரில் | 4.97.50 |
| (9) | புவியிடங்காட்டி ஆயத்தொலைவுகள் | STA1 வடக்கு 10.1551088 கிழக்கு 078.2356519 STA2 வடக்கு 10.1549676 கிழக்கு 078.2356821 STA3 வடக்கு 10:1549359 கிழக்கு 078.2362477 STA4 வடக்கு 10.1543917 கிழக்கு 078.2363124 STA5 வடக்கு 10.154311 கிழக்கு 078.2369417 STA6 வடக்கு 10.1534102 கிழக்கு 078.2369065 STA7 வடக்கு 10.1528452 கிழக்கு 078.2369568 STA8 வடக்கு 10.1529155 கிழக்கு 078.2377705 STA9 வடக்கு 10:1529158 கிழக்கு 078.2385014 STA10 வடக்கு 10.1539956 கிழக்கு 078.2386697 STA11 வடக்கு 10.1546332 கிழக்கு 078.2388635 STA12 வடக்கு 10.1553557 கிழக்கு 078.2389259 STA13 வடக்கு 10.1552517 கிழக்கு 078.2378919 STA14 வடக்கு 10.1552402 கிழக்கு 078.2367891 STA15 வடக்கு 10.1551065 கிழக்கு 078.235688 |
சுப்ரியா சாஹு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூபொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு) துறை.
3வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 43, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறை, 12 மார்ச் 2025.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் 'தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் போடிநாயக்கனூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்ப்பதற்கும். 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் 11—பிரிவு 2 இல் 204 ஆம் பக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/1995/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை செய்வதற்கான அவரது நோக்கத்தையும் இதனால் அறிவிக்கிறார். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்.
மேற்சொன்ன அறிவிக்கையில். அட்டவணையில் 50. மேலச்சொக்கநாதபுரம் (பகுதி) என்ற சொற்றொடருக்குப் பின்னர், பின்வருவன சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
5. மேலச்சொக்கநாதபுரம் (பகுதி)
8. போடி
காகர்லா உஷா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மொழிபெயர்ப்பு) (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 78, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (C2) துறை, 13 பிப்ரவரி 2025.] 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்ந்த 3 உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். 26.04.2023 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 -இல் 359ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்)(ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையங்கள் துறையின் Il(2)/TCRE/407/2023 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் "தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்கள்" என்ற தலைப்பின் கீழ் "அலுவல்சாரா உறுப்பினர்கள்" என்ற துணைத் தலைப்பின் கீழ் தொடர் எண். 16 மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகரான பதிவுகளுக்குப் பின்னர் பின்வரும் பதிவு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-
"17. திரு.எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், இசை நாடகக் கலைஞர்.
மதுரை-உறுப்பினர்"
கே. மணிவாசன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (மொழிபெயர்ப்பு) (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.