© தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 2.40 காசு[விலை: ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 25] சென்னை, புதன்கிழமை, ஜூன் 25, 2025 ஆனி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை(ப) எண்.115, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 28 பிப்ரவரி 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு, வெளியிடப்படுவதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக மேற்சொன்ன கால அளவான இரண்டு திங்கள் முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை டி.எம்.எஸ் வளாகம், சென்னை 600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை -600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 07.07.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II -பிரிவு 2 இல் 246 மற்றும் 247 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/378/2019 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலீட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் கீழே விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் கையால் தயாரிக்கப்படும் காகிதம் தொழிலகத்துடன் தொடர்புடைய காகிதம் மற்றும் ஏனைய இடைநிகழ்வு செய்முறைகள் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
II-2-(25) (T Sup)—1
[ 1 ]2
விவர அட்டவணைவிவர அட்டவணை
கையினால் தயாரிக்கப்படும் காகிதம் தொழிலகத்துடன் தொடர்புடைய காகிதம் மற்றும் ஏனைய இடைநிகழ்வு செய்முறைகள்
தொழிலில் வேலைவாய்ப்பு
| பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( ரூ . காசு) |
| ( 1 ) | ( 2 ) |
| (1) (1) பயிற்சி பெறாதோர்: பயிற்சி பெறாதோர்: | 6928.00 |
| (i) வகைப்படுத்துபவர் | |
| (ii) அழுத்துபவர் | |
| (iii) அடிப்பவர் | |
| (iv) காகிதத்தை உருளை இயந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுபவர் | |
| (v) தூக்குபவர் | |
| (vi) வெட்டுபவர் | |
| (vii) சீராக்குபவர் | |
| (viii) சிப்பமாக்குபவர் | |
| (2) (2) ஓரளவு பயிற்சி பெற்றோர்: ஓரளவு பயிற்சி பெற்றோர்: | 7181.00 |
| (i) மின் பணியாளர் | |
| (ii) பொருத்துநர் | |
| (iii) பற்றவைப்பவர் | |
| (3) (3) பயிற்சி பெற்றவர்கள்: பயிற்சி பெற்றவர்கள்: | |
| (i) மேலாளர் | 7687.00 |
| (ii) மேற்பார்வையாளர் / கணக்காளர் | 7434.00 |
| (4) (4) பொது வகையினர் பொது வகையினர் | |
| (i) ஓட்டுநர் | 7181.00 |
| (ii) ஏவலாள் / காவலாள் | 7119.00 |
விளக்கங்கள்: (1) அகவிலைப்படி:விளக்கங்கள்: (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ. 43.00 நாற்பத்து மூன்று ரூபாய் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது. சனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
3(3) நாள் ஊதியத்தை கணக்கிட மாத ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
(4) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே அதிகளவு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை(ப) எண்.209, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 8 மே 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948)3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக, இதனால் வெளியிடப்படுகிறது.
2 இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை 600 006, டீ.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக, 'அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 07.07.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு -2 இல் 247 மற்றும் 248 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவேவா/380/2021 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், கோணி தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு, வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
கோணித் தொழிலில் வேலைவாய்ப்புகோணித் தொழிலில் வேலைவாய்ப்பு
| பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.கா) |
| ( 1 ) | ( 2 ) |
| (1) கோணிப்பை தைப்பவர் | 414.00 (நாளொன்றுக்கு) |
| (2) மேஸ்திரி | 429.00 (நாளொன்றுக்கு) |
| (3) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறுபவர்கள் | 5.05 (கோணிப்பை ஒன்றுக்கு) |
விளக்கங்கள்விளக்கங்கள் (1) அகவிலைப்படி.- அகவிலைப்படி.- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ.2.07 காசுகள் (இரண்டு ரூபாய் மற்றும் ஏழு காசுகள் மட்டும் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம். அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை(ப) எண்.211, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 8 மே 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடப்படுவதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
42. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர். இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை 600 006, டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 18.08.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் || பிரிவு 2-இல், 314 மற்றும் 315ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ.ந.தி.மே/529/2021 ஆம் எண்ணிட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அறிவிக்கைக்கு பதிலீட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், மட்பாண்டத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (1)-ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதியவீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
மட்பாண்டத் தொழில்களில் வேலைவாய்ப்பு
மட்பாண்டத் தொழில்களில் வேலைவாய்ப்பு
| பணியாளர் வகையினர் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (திங்களொன்றுக்கு) ( ரூ . காசு) |
| ( 1 ) | ( 2 ) |
| (1) பயிற்சி பெற்றோர் | 15506.00 |
| (2) பயிற்சி பெறாதோர் | 7989.00 |
விளக்கங்கள்: (1) அகவிலைப்படிவிளக்கங்கள்: (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது. 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூபாய் 49.60 (நாற்பத்து ஒன்பது ரூபாய் அறுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான, சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் ஊதியங்களைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியங்களை, 26 ஆல் வகுக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள். இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியவீதங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை(ப) எண்.266, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 27 மே 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/ 1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடப்படுவதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு. அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர். இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை 600 006, டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 18.08.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2.இல், 315 மற்றும் 316ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட II(2) தொ.ந.தி. மே/530/2021 ஆம் எண்ணிட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அறிவிக்கைக்கு பதிலீட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். தமிழ்நாடு மாநிலத்தில், கயிறு தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதியவீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
கயிறு தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்புகயிறு தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு) |
| (1) | (2) | (3) |
| I.I. | பயிற்சி பெற்றோர். பயிற்சி பெற்றோர். | |
| (1) ஓட்டுநர் | மாதமொன்றுக்கு 7968.00 | |
| (2) எந்திரப் பணியாளர் | ||
| (3) இயந்திரக் கம்மியர் | ||
| (4) இயக்குபவர் | ||
| II. II. | ஓரளவு பயிற்சி பெற்றோர்: ஓரளவு பயிற்சி பெற்றோர்: | |
| (1) ஓட்டுநர் (உதவியாள்) | மாதமொன்றுக்கு 7766.00 | |
| (2) உதவி இயந்திரக்கம்மியர் | ||
| (3)மட்டை உரிக்கும் இயந்திரக் கம்மியர் | ||
| (4) மட்டைகளை அடித்து நசுக்குபவர் (crusher) | ||
| III. III. | பயிற்சி பெறாதோர்: பயிற்சி பெறாதோர்: | |
| (1) டர்போ கிளீனர் (Turbo Cleaner) | மாதமொன்றுக்கு 7363.00 | |
| (2) இயந்திரத்தை சுத்தப்படுத்துபவர் | ||
| (3) உலர் செய்முறை இடத்திற்குக் கொண்டு செல்பவர் Drying Yard Carrier) | ||
| IVIV | தேங்காய் மட்டை உரித்தெடுப்பதில் உள்ள துணைப்பணிகள்: தேங்காய் மட்டை உரித்தெடுப்பதில் உள்ள துணைப்பணிகள்: | |
| (1) தேங்காய் மட்டைகளை உரித்தெடுத்து, உருளை எந்திரப் பகுதிக்குக் கொண்டு சென்று அவற்றைக் குழியில் போட்டு ஊறவைப்பதற்கு (1000 தேங்காய் மட்டைகளுக்கு) | 388.29 | |
| (2) தேங்காய் மட்டைகளை எண்ணுவதற்கு (1000 தேங்காய் மட்டைகளுக்கு) | 65.22 | |
| (3) பிளவுபட்ட தேங்காய் மட்டைகளைக் குழியிலிருந்து அகற்றுவதற்கு 1000 தேங்காய் மட்டைகளுக்கு | 103.42 | |
| (4) ஊறிய தேங்காய் மட்டைகளை அடித்தெடுப்பதற்கு (100 தேங்காய் மட்டைகளுக்கு) | 100.99 | |
| V V | (1) முப்பிரி கயிறு திரித்தல்: (1) முப்பிரி கயிறு திரித்தல்: | |
| (1 )1.80 மீட்டர்-ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு. | 620.53 | |
| (2) 215 மீட்டர் ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 620.53 | |
| (3) 2.88 மீட்டர்-ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 868.27 | |
| (4) 3.60 மீட்டர்-ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 1110.73 | |
| (5) 4.32 மீட்டர்-ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 1363.88 | |
| VIVI | (2) இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு நார் திரித்தல் (2) இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு நார் திரித்தல் | |
| (1) 180 மீட்டர் ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு. | 494.65 | |
| (2) 16 மீட்டர் ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 494,65 | |
| (3) 88 மீட்டர்-ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 695.88 | |
| (4) 60 மீட்டர் ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 889.04 | |
| (5) 32 மீட்டர் ஒவ்வொன்றும் 100 கயிறுகள் கொண்ட ஒரு கட்டு | 1080.15 | |
| VIVI | கயிறு தயாரித்தல்: கயிறு தயாரித்தல்: | |
| (1) 33 கிலோ கிராம் தென்னை நாரினை 4.50 செ.மீ.நீளமுள்ள கயிறுகளாகத் திரித்தல் | 479.11 | |
| (2) 33 கிலோ கிராம் தென்னை நாரினை 5.00 செ.மீ.நீளமுள்ள கயிறுகளாகத் திரித்தல் | 434.12 | |
| (3) 33 கிலோ கிராம் தென்னை நாரினை 10.00 செ.மீ.நீளமுள்ள கயிறுகளாகத் திரித்தல் | 373.50 | |
| (4) 33 கிலோ கிராம் தென்னை நாரினை 3.80 செ.மீ.நீளமுள்ள கயிறுகளாகத் திரித்தல் | 494,65 | |
| VIIVII | பாய் முடைதல்: பாய் முடைதல்: | நாளொன்றுக்கு 273.42 |
| VIIIVIII | கட்டு கட்டுதல்: கட்டு கட்டுதல்: | நாளொன்றுக்கு 273.42 |
| IXIX | தென்னை நார் கட்டு: தென்னை நார் கட்டு: | |
| (1) எந்திரங்கள் வாயிலாகக் கட்டுதல் (30 அல்லது 35 கி.கி. தென்னை நார்க்கட்டு | ஒரு கட்டுக்கு 16.26 | |
| (2) கையால் கட்டுதல் (30 அல்லது 35 கி.கி. தென்னை நார்க்கட்டு) | ஒரு கட்டுக்கு 20.21 |
விளக்கங்கள்: (1) அகவிலைப்படிவிளக்கங்கள்: (1) அகவிலைப்படி மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்.) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியாக மாதமொன்றுக்கு ரூ 45.70 (நாற்பத்தைந்து ரூபாய் எழுபது காசுகள் மட்டும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு. ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3 (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள். இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
K.வீர ராகவ ராவ், அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூபொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.