© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2025 [விலை: ரூ. 38.40 காசுவிலை: ரூ. 38.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 30] சென்னை, புதன்கிழமை, ஜூலை 30, 2025 ஆடி 14, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 2 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.30/2025. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற
தொடக்கம்.
உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கான 9/1999.
திருத்தம்.
2. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2 ஆம் பிரிவின் (27) ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
மையச் சட்டம்
49/2016.
"(27-A) ''மாற்றுத்திறனாளி'' என்பது, 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் உள்ளவாறு அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;".
30—IV-2-(T-Sup)—1
[1]2 37 ஆம் பிரிவிற்கான
3. முதன்மைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1). (1) ஆம் உட்பிரிவில்,-
(a). (i) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(i-a) மாநகராட்சியைப் பொறுத்த வரையில் அரசாலும் நகராட்சி மன்றம் மற்றும் பேரூராட்சியைப் பொறுத்த வரையில் இயக்குநராலும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், உறுப்பினராக நியமனம் செய்யப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, மன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையானது, நூறுக்கு மேற்படுமிடத்து, மாற்றுத்திறனாளிகள் இருவரை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுதல் வேண்டும்.";
(b) முதலாம் வரம்புரையில், "கூறுகள் (ii)" எனும் சொல்லுக்காக, "கூறுகள் (i-a), (ii)" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2). (1-A) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1-B). (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் ஓர் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான தகுதிகளானது, வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.";
(3). (2) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2-A). (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் பதவிக்காலமும் மன்றத்தின் பதவிக்காலமும் ஒரேநேரத்தில் முடிவடைதல் வேண்டும்.".
43-A பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 43-A ஆம் பிரிவானது, 43-B எனும் பிரிவாக மறுஎண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட 43-B பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "கூறுகள் (ii)" எனும் சொல்லுக்காக, "கூறுகள் (i-a), (ii)" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
43-A எனும்
புதிய பிரிவை
உட்புகுத்துதல்.
5. முதன்மைச் சட்டத்தில், அவ்வாறு மறுஎண்ணிடப்பட்ட 43-B பிரிவிற்கு முன்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"43-A. நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் அதிகாரங்கள் மற்றும் "43-A. நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள்.-கடமைகள்.- 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட ஓர் உறுப்பினர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்கள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.''.
48 ஆம் பிரிவிற்கான
6. முதன்மைச் சட்டத்தின் 48 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத் தலைப்பில், "துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்" எனும் சொற்றொடருக்காக, "துணைத் தலைமையாளர், மன்ற உறுப்பினர் மற்றும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
3(2). (1) ஆம் உட்பிரிவில், "துணைத் தலைமையாளர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்" எனும் சொற்றொடருக்காக, "துணைத் தலைமையாளர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3). (3) ஆம் உட்பிரிவில், "துணைத் தலைமையாளர் அல்லது மன்ற உறுப்பினர்கள்" எனும் சொற்றொடருக்காக, "துணைத் தலைமையாளர், மன்ற உறுப்பினர்கள் அல்லது 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
50 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
7. முதன்மைச் சட்டத்தின் 50 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவில், "கூறுகள் (ii)" எனும் சொல்லுக்காக, "கூறுகள் (i-a), (ii)" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
8. முதன்மைச் சட்டத்தின் 198 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்,- 198 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
(1). (xviii) ஆம் கூறின் இறுதியில் உள்ள, "மற்றும்" எனும்
சொல்லானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(2). (xix) ஆம் கூறுக்காக, பின்வரும் கூறுகளானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(xix) 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a)
கூறின்கீழ் நியமனம் செய்யப்படும் முறை குறித்து;
(xx) 37 ஆம் பிரிவின் (1-B) உட்பிரிவின்கீழ் ஓர்
உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான தகுதிகள் குறித்து;
(xxi) 43-A ஆம் பிரிவின்கீழ் நியமனம் செய்யப்படும்
உறுப்பினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து; மற்றும்
(xxii) இந்தச் சட்டத்தின்கீழ் வகுத்துரைக்கப்படலாகும் அல்லது வகுத்துரைக்கப்பட வேண்டிய ஏதேனும் பிற பொருட்பாடுகள்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
4 5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 2 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.31/2025.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு
மற்றும் ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக்
குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் 21/1994.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவின் (25) ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
மையச் சட்டம்
49/2016.
"(25-A) ''மாற்றுத்திறனாளி'' என்பது, 2016 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் உள்ளவாறு அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;".
புதிய துணைத்
தலைப்பு
மற்றும் 32-A 3. முதன்மைச் சட்டத்தின் III ஆம் அத்தியாயத்தில், 32 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் துணைத் தலைப்பு மற்றும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
எனும் பிரிவை
உட்புகுத்துதல்.
"மாற்றுத்திறனாளி நபரை நியமனம் செய்தல்.-
32-A. ஊராட்சியில் மாற்றுத்திறனாளி நபரை நியமனம் செய்தல்.- (1) 32-A. ஊராட்சியில் மாற்றுத்திறனாளி நபரை நியமனம் செய்தல். ஒவ்வொரு கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, மாவட்ட ஊராட்சியிலும் மாற்றுத்திறனாளி ஒருவரை, அரசு அல்லது அரசால் அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்பு எதனாலும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், உறுப்பினராக நியமனம் செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் செய்யப்படும் நியமனமானது, 6, 17 மற்றும் 25 ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தொடர்புடைய ஊராட்சிகளின் உறுப்பினர்களுடன் கூடுதலாக இருத்தல் வேண்டும்.
(3) ஓர் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான
தகுதிகளானது, வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
(4) அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் பதவிக்காலமானது, ஊராட்சியின் பதவிக் காலஅளவுடன் ஒரேநேரத்தில் முடிவடைதல் வேண்டும்.
(5) அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் உரிமைகளும் கடமைகளும் வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்; ஆனால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இருத்தலாகாது." .
6242 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 242 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (xlvii) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறுகளானது சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(xlviii) மாற்றுத்திறனாளி நபர் ஒருவரை உறுப்பினராக நியமனம்
செய்யும் முறை குறித்து;
(xlix) 32-A பிரிவின்கீழ் உறுப்பினராக நியமனம் செய்வதற்கான
தகுதிகள் குறித்து;
(l) 32-A பிரிவின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின்
உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
7தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 4 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.32/2025.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற
மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) (a) 2, 3, 5, 7, 10 மற்றும் 18 ஆம் பிரிவுகளானது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(b) 4, 6 மற்றும் 19 முதல் 23 வரையுள்ள பிரிவுகளானது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(c) மீதமுள்ள அனைத்து பிரிவுகளும், மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
4 ஆம் பிரிவிற்கான 9/1999.
திருத்தம்.
2. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான) 4 ஆம் பிரிவின், (1-A) ஆம் உட்பிரிவின் (i) கூறில் "சென்னை மாநகராட்சி" எனும் சொற்றொடருக்காக, "பெருநகர சென்னை மாநகராட்சி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3. முதன்மைச் சட்டத்தின் 70 ஆம் பிரிவின்,— 70 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, குறிப்பிடப்பட்ட கால அளவிற்குள், வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டை தாக்கல் செய்யாததற்கு நியாயமான காரணமிருப்பின், அந்த ஆண்டின் பிப்ரவரி திங்கள் 20 ஆம் நாளன்றோ அல்லது அதற்கு முன்போ, வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டை மன்றத்தின் முன் தாக்கல் செய்வதற்கு அரசானது, ஆணையாளருக்கு அதிகாரமளிக்கலாம்.'';
(2) (3) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, குறிப்பிடப்பட்ட கால அளவிற்குள், வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளாததற்கு நியாயமான காரணமிருப்பின், அந்த ஆண்டின் மார்ச்சு திங்கள் முடிவடையும் அன்றோ அல்லது அதற்கு முன்போ வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டை ஏற்றுக்கொள்வதற்கு அரசானது, மன்றத்திற்கு அதிகாரமளிக்கலாம்.";
84 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 84 ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவில் உள்ள "அரையாண்டு" மற்றும் "ஒரு விழுக்காடு" எனும் சொற்களுக்காக, முறையே, "நிதியாண்டு" மற்றும் "அரை விழுக்காடு" எனும் சொற்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
8100 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 100 ஆம் பிரிவில், (3) ஆம் உட்பிரிவிற்கான முதலாம் வரம்புரையில், "சென்னை மாநகராட்சி" எனும் சொற்றொடருக்காக, "பெருநகர சென்னை மாநகராட்சி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
102 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 102 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில் "மூன்று ஆண்டுகளுக்கு மிகாத" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
109-A எனும்
7. முதன்மைச் சட்டத்தின் 109 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவினை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"109-A. படகு சவாரிக்கான நடவடிக்கைகளைப் பதிவு செய்தலும் "109-A. படகு சவாரிக்கான நடவடிக்கைகளைப் பதிவு செய்தலும் உரிமம் வழங்குதலும்.-உரிமம் வழங்குதலும்.- நகராட்சிக்கு சொந்தமான நீர்நிலை எதிலும், துணைவிதிகளில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய முறையில், படகுகளை பதிவு செய்யாமலும் உரிமம் பெறாமலும், பொழுது போக்கிற்காக படகு சவாரி எதுவும் மேற்கொள்ளப்படுதலாகாது.".
114-A ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 114-A ஆம் பிரிவின் (c) கூறில், "நீதித்துறை குற்றவியல் நடுவர் முன் தண்டனையின் பேரில், அபராதம்" மற்றும் "அத்தகைய குற்றம்" எனும் சொற்றொடர்களுக்காக, முறையே "தண்டத்தொகைக்காக" மற்றும் "அத்தகைய செயல்" எனும் சொற்றொடர்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
117-Q ஆம்
9. முதன்மைச் சட்டத்தின் 117-Q ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(1) 117-Q ஆம் பிரிவானது, அந்தப் பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையில் "இந்தப் பிரிவின்" எனும் சொற்களுக்காக, "இந்த உட்பிரிவின்" எனும் சொற்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவுக்கு பின்னர்,
பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2) இந்த அத்தியாயத்தில் உள்ள எதுவும் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது ஆணையில் உள்ளடங்கிய எதிலும் மாநில அரசு, மைய அரசு, நகராட்சி அல்லது சட்டப்பூர்வ அமைப்பு அல்லது மாநில அல்லது மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்தால் நிறுவப் பெற்றுள்ள எந்தவொரு விளம்பரப்பலகை, மின்னணுத் திரை அல்லது விளம்பர அட்டை ஆகியவற்றிற்குப் பொருந்தாது:
வரம்புரையாக, இந்த உட்பிரிவின்படியான விலக்களிப்பானது, விளம்பரப்பலகை, மின்னணுத் திரை அல்லது விளம்பர அட்டையின், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அளவு மற்றும் தன்மைக்குட்பட்டு இருத்தல் வேண்டும்.".
126-A மற்றும்
10. முதன்மைச் சட்டத்தின் 126 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
126-B எனும் பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
புதிய பிரிவுகளை
உட்புகுத்துதல்9 "126-A. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் "126-A. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளிகளின் பட்டியலின் மாறுதல் அல்லது திரும்பப்பெறப்படுதல்.- திறந்தவெளிகளின் பட்டியலின் மாறுதல் அல்லது திரும்பப்பெறப்படுதல்.- (1) அரசு, எந்த நேரத்திலும், தாமாக முன்வந்தோ அல்லது தொடர்புடைய நகராட்சி அல்லது ஆர்வமுள்ள நபர் எவரின் வேண்டுகோளின் பேரிலோ, 126 ஆம் பிரிவின்கீழ் வெளியிடப்பட்டுள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளிகளின் பட்டியலை மாறுதல் செய்யலாம் அல்லது திரும்பப் பெறலாம்.
(2) அத்தகைய மாறுதலை அல்லது திரும்பப் பெறுதலை, செய்வதற்கு முன்பு, அத்தகைய மாறுதல் அல்லது திரும்பப் பெறுதல் பற்றிய வரைவை அரசு வகுத்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடுதல் வேண்டும். அத்துடன் அத்தகைய வரைவு எந்தத் தேதியன்று அல்லது அதற்குப் பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தேதியைக் குறிப்பிடும் அறிவிப்பு ஒன்றையும் வெளியிடுதல் வேண்டும். மேலும், அத்தகைய வரைவு தொடர்பாக நகராட்சியிடமிருந்தோ அல்லது அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட தேதிக்கு முன்பு ஆர்வமுள்ள எவரிடமிருந்தோ பெறப்படும் மறுப்புரை அல்லது கருத்துரை எதனையும் அரசு பரிசீலித்தல் வேண்டும்.
26-B. குறித்த சில நேர்வுகளில் பூங்காக்கள், விளையாட்டு 126-B. குறித்த சில நேர்வுகளில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் மைதானங்கள் மற்றும் திறந்தவெளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தல்.-தடைசெய்தல்.- 126 ஆம் பிரிவின்கீழ் வெளியிடப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பூங்கா, விளையட்டு மைதானம் அல்லது திறந்தவெளி எதனையும், அரசின் முன்அனுமதியின்றி, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதியன்று எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் அல்லது நோக்கங்களைத் தவிர, பிற எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்துதல் கூடாது.".
178 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
11. முதன்மைச் சட்டத்தின் 178 ஆம் பிரிவில், (3) ஆம் உட்பிரிவில், "தண்டத்தொகையுடன் தண்டிக்கப்படத்தக்கவர்" எனும் சொற்றொடருக்காக, "தண்டத்தொகைக்கு பொறுப்புடையவர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
179-F ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
12. முதன்மைச் சட்டத்தின் 179-F ஆம் பிரிவில் "முதலாம் குற்றத்திற்கு அபராதத்துடன் தண்டிக்கப்படத்தக்க" மற்றும் "பிந்தைய குற்றம்" எனும் சொற்றொடர்களுக்கு, முறையே, "முதலாம் மீறுகைக்கு தண்டத்தொகைக்கு பொறுப்புடைய" மற்றும் "பிந்தைய மீறுகை" ஆகிய சொற்றொடர்கள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
179-G ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
13. முதன்மைச் சட்டத்தின் 179-G ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், "இரண்டாம் குற்றம்" எனும் சொற்களுக்காக, "இரண்டாம் மீறுகை" எனும் சொற்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
14. முதன்மைச் சட்டத்தின் 179-H ஆம் பிரிவில்,- 179-H ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில், "ஒரு குற்றம்" மற்றும் "அத்தகைய குற்றம்" எனும் சொற்களுக்காக, முறையே "ஒரு மீறுகை" மற்றும் "அத்தகைய மீறுகை" எனும் சொற்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2) ஆம் உட்பிரிவில், "ஒரு குற்றம்" மற்றும் "அத்தகைய குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டாலும்" எனும் சொற்றொடர்களுக்காக, முறையே "ஒரு மீறுகை" மற்றும் "அத்தகைய மீறுகைக்காக நீதிமுறையில் தீர்ப்பளிக்க வழக்கு தொடரப்பட்டாலும்" எனும் சொற்றொடர்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
180 ஆம் 15. முதன்மைச் சட்டத்தின் 180 ஆம் பிரிவிற்காக, பின்வரும்
பிரிவிற்கான பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
மாற்றீடு.
10"180. தண்டத்தொகைகள்.-"180. தண்டத்தொகைகள்.- இந்தச் சட்டத்தில் பிறவாறு வகை செய்யப்பட்டிருந்தாலன்றி, இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் அல்லது அவற்றின் கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது துணை விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகள் அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது பணிப்புரை எவற்றையும் மீறுகின்ற நபர் எவரும், இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கும், தொடர்ச்சியான மீறுகையின் நேர்வில், முதல் மீறுகைக்காக தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பு அல்லது முதல் மீறுகையினை சமரசமாக தீர்த்த பின்பு, அத்தகைய மீறுகை தொடர்கின்ற ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் கூடுதல் தண்டத்தொகையை செலுத்துவதற்கு பொறுப்புடையவராதல் வேண்டும்:
வரம்புரையாக, எழுத்து மூலமாக பதிவு செய்யப்படக்கூடிய சிறப்பு மற்றும் போதுமான காரணம் முரணாக இல்லாதபோது, இந்தப் பிரிவின்படியான தண்டத்தொகையானது ஐந்நூறு ரூபாய்க்கு குறைவாக இருத்தல் கூடாது.
180-B, 180-C,
16. முதன்மைச் சட்டத்தின் 180-A ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
180-D மற்றும் பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
180-E எனும்
புதிய பிரிவுகளை
உட்புகுத்துதல்.
"180-B. நீதிமுறையில் தீர்ப்பளித்தல்.-"180-B. நீதிமுறையில் தீர்ப்பளித்தல்.- (1) இயக்குநர், 114-A, 134, 178, 179-F மற்றும் 180 ஆம் பிரிவுகளின்கீழ் தண்டத்தொகைகளை தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், அதனின் மீறுகைகளுக்கு விசாரணை நடத்தி தண்டத்தொகை விதிப்பதற்கு, ஓர் அலுவலரை, நீதிமுறையில் தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமிக்கலாம்:
வரம்புரையாக, தேவைப்படலாகும் அத்தகைய எண்ணிக்கையில், நீதிமுறையில் தீர்ப்பளிக்கும் அலுவலர்கள் பலரை இயக்குநர், நியமனம் செய்யலாம்.
(2) நீதிமுறையில் தீர்ப்பளிக்கும் அலுவலர், விசாரணையின் பொருட்பாடு பயனுள்ளதாகின்ற அல்லது தொடர்புடையதாக இருக்கக்கூடியதென நீதிமுறையில் தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்துரையிலுள்ள எந்தவொரு சாட்சியத்தை அளிப்பதற்கு அல்லது ஆவணத்தையும் முன்னிலைப்படுத்துவதற்கு, வழக்கின் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த எந்தவொரு நபருக்கும் அழைப்பாணை விடுத்து அவரின் வருகையை கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில் தொடர்புடைய நபர் 114-A, 134, 178, 179-F மற்றும் 180 ஆம் பிரிவுகளில் சுட்டப்பட்டுள்ள ஏதேனும் வகைமுறைகளுக்கு இணங்கி நடக்க தவறியுள்ளார் என்று அவர் மனநிறைவடைவாராயின், அவர் பொருத்தமெனக் கருதுகின்ற அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:
வரம்புரையாக, தொடர்புடைய நபருக்கு விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல், அத்தகைய தண்டத்தொகை எதுவும் விதிக்கப்படுதல் கூடாது.
180-C. மேல்முறையீடு.-180-C. மேல்முறையீடு.- (1) 180-B ஆம் பிரிவின் கீழ் நீதிமுறையில் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், அரசால் அறிவிக்கப்படலாகும் மேல்முறையீட்டு அலுவலரிடம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மேல்முறையீடு செய்யலாம்:
வரம்புரையாக, மேல்முறையீட்டாளர், அந்தக் காலஅளவிற்குள் மேல்முறையீடு செய்யாமலிருப்பதற்குப் போதிய காரணம் இருந்திருக்கிறது என மேல்முறையீட்டு அலுவலர் மனநிறைவடைந்தால், அறுபது நாள் காலஅளவு கழிந்த பின்பும் மேல்முறையீட்டை ஏற்கலாம்.
11(2) மேல்முறையீட்டு அலுவலர், மேல்முறையீட்டின் தரப்பினருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.
(3) மேல்முறையீட்டு அலுவலர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் மேல்முறையீட்டை முடித்து வைத்தல் வேண்டும்.
180-D. மீறுகைகளைச் சமரசமாக தீர்த்தல்.- (1) இந்தச் சட்டத்தின் 180-D. மீறுகைகளைச் சமரசமாக தீர்த்தல்.- 114-A, 134, 178, 179-F மற்றும் 180 ஆகிய பிரிவுகளின்கீழ் மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆனால் தண்டத்தொகை விதிக்கப்படுவதற்கு முன்பு, அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட அந்த அலுவலரால் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய தொகையைச் செலுத்துவதன் பேரில், இயக்குநரால், இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்படக்கூடியவாறான அத்தகைய அலுவலரால் சமரசம் செய்யப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, அவ்வாறு சமரசமாக தீர்க்கப்படும் மீறுகைக்கான தண்டத்தொகையானது, எந்நேர்விலும், இந்தச் சட்டத்தின்கீழ் மீறுகைக்காக விதிக்கப்படலாகும் அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதல் கூடாது.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ், மீறுகை எதுவும் சமரசமாக தீர்க்கப்படுகின்றபோது, அவ்வாறு சமரசமாக தீர்க்கப்பட்ட மீறுகையைப் பொறுத்து, இந்தச் சட்டத்தின்கீழ் பிற நடவடிக்கை எதுவும் தொடரவோ அல்லது தொடர்ந்து நடத்தப்படவோ கூடாது.
180-E. வசூலித்தல்.-180-E. வசூலித்தல்.- நேர்விற்கேற்ப, 180-B பிரிவின் கீழ் அல்லது 180-C பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்தப்படவேண்டிய தொகையானது, 116-A பிரிவின்கீழ் நிலுவை வரித் தொகையாக வசூலிக்கப்படுதல் வேண்டும்.".
188-A எனும் 17. முதன்மைச் சட்டத்தின் 188 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"188-A. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகை.-
"188-A. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகை.- (1) இச்சட்டத்தின் வகைமுறைகள் எதுவும் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி, துணை விதி அல்லது ஒழுங்குமுறை விதி எதுவும் அல்லது அதன் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது பணிப்புரை எதனின் மீறுகை, ஒரு நிறுமத்தால் செய்யப்பட்டிருப்பின், அம்மீறுகையின்போது, அந்நிறுமத்தின் அலுவல் நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின் பொறுப்பிலிருந்த மற்றும் பொறுப்பைக் கொண்டிருந்த நபர் எவரும், மற்றும் அந்நிறுமமும், அம்மீறுகையைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தண்டத்தொகைக்கு பொறுப்புடையவராகுதல் வேண்டும்:
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபர் எவரும், அம்மீறுகை தமக்குத் தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய மீறுகையை தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யப்பட்டதாக மெய்ப்பித்தால், அத்தகைய நபருக்கு, இந்தச் சட்டத்தில் வகைசெய்யப்பட்ட தண்டத்தொகை எதுவும் விதிக்கப்படுதல் ஆகாது.
12(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின் கீழ் மீறுகை எதனையும் நிறுமமொன்று செய்திருக்கிறவிடத்து, அந்த மீறுகையானது, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் அனுமதியுடன் அல்லது உடந்தையுடன் அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் அந்த மீறுகையைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தண்டத்தொகைக்கு பொறுப்புடையவராகுதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக,-
(a) நிறுமம் என்பது, எந்தவொரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும் மற்றும் ஒரு அறக்கட்டளை, நிறுவகம், சங்கம் அல்லது பிற தனி நபர்களின் கழகத்தையும் உள்ளடக்கும்; மற்றும்
(b) "இயக்குநர்" என்பவர்,-
(i) ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், நிறுவகத்தில் ஒரு
பங்குதாரர் ஆவார்;
(ii) ஒரு சங்கம், ஒரு அறக்கட்டளை அல்லது தனிநபர்களின் பிற கழகத்தைப் பொறுத்தவரையில் சங்கம், அறக்கட்டளை அல்லது பிற கழகத்தின் விதிகளின் கீழ் நேர்விற்கேற்ப, சங்கம், அறக்கட்டளை அல்லது பிற கழகத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக பொறுப்பளிக்கப்பட்ட நபர் என்று பொருள்படும்.".
198 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
18. முதன்மைச் சட்டத்தின் 198 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் A மற்றும் B இனங்களுக்காக, பின்வரும் இனங்களானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"A பிரிவு - பெருநகர சென்னை மாநகராட்சி;
B பிரிவு - பெருநகர சென்னை மாநகராட்சி தவிர பிற மாநகராட்சி
மற்றும் சிறப்பு நிலை நகராட்சி மன்றங்கள்;".
199-B எனும்
19. முதன்மைச் சட்டத்தின் 199-A ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"199-B. பணிப்புரைகளை வழங்குவதற்கான அதிகாரம்.- இந்தச் "199-B. பணிப்புரைகளை வழங்குவதற்கான அதிகாரம்.- சட்டத்தின் வகைமுறைகளுக்கு செயல்விளைவு அளிக்க, இந்தச் சட்டத்தின்கீழ் நகராட்சி அல்லது நகராட்சி அதிகாரஅமைப்பு எதற்கும், அரசானது, தான் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய பணிப்புரைகளை அவ்வப்போது வழங்கலாம் மற்றும் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பது நகராட்சி அல்லது நகராட்சி அதிகார அமைப்பின் கடமையாயிருத்தல் வேண்டும்.".
சென்னை
மாநகராட்சிக்கான
பொருள்கோள்
குறிப்பு.
20. சட்டம் எதிலும் அல்லது அத்தகைய சட்டத்தின்கீழ் அல்லது முதன்மைச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட விதி, அறிவிக்கை, செயல்முறை, ஆணை, ஒழுங்குமுறை விதி, துணை விதிகள் அல்லது பிற முறை ஆவணங்களில் எதிலும் உள்ள, "சென்னை மாநகராட்சி", "சென்னையின் மாநகராட்சி" அல்லது "சென்னை மாநகராட்சி" என்று குறிப்பிடப்படுவது, "பெருநகர சென்னை மாநகராட்சி" என்று குறிப்பாகப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.
சட்ட
நடவடிக்கைகள்.
21. முதன்மைச் சட்டத்தின் தொடக்க தேதிக்கு உடனடி முன்பு, "சென்னை மாநகராட்சி", "சென்னையின் மாநகராட்சி" அல்லது "சென்னை மாநகராட்சி" ஒரு தரப்பினராக உள்ள சட்ட நடவடிக்கைகள் எதுவும் நிலுவையில் இருக்குமிடத்து, அந்த நடவடிக்கைகளில் "பெருநகர சென்னை மாநகராட்சி" ஒரு தரப்பினராக மாற்றீடு செய்யப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
13அரசாணையின்
செல்லுந்தன்மை.
தமிழ்நாடு சட்டம்
IV/1919
22. நீதிமன்றம் அல்லது அதிகார அமைப்பு எதனின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் உள்ளடங்கியது எது எவ்வாறிருப்பினும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட 26 அக்டோபர் 2015 ஆம் தேதியிட்ட அரசாணை (நிலை) எண்.152-ஆனது 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டம் அல்லது முதன்மைச் சட்டத்திற்கு இணங்கவில்லை என்ற காரணத்திற்காக மட்டுமே கூறப்பட்ட அரசாணையானது செல்லுபடியாகாது என்று கருதப்படுதல் ஆகாது மற்றும் எப்போதுமே செல்லுபடியாகாது என்று கருதப்படுதலும் ஆகாது மற்றும் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இச்சட்டம் வெளியிடப்பட்ட தேதிவரையில் மேற்கூறப்பட்ட அரசாணையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயல்கள், செயல்பாடுகள் அல்லது செய்யப்பட்ட செயல்கள் அல்லது மேற்கூறிய அரசாணையின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியன, அனைத்து நோக்கங்களுக்காக, சட்டத்திற்கிணங்கிய வகையில், எப்பொழுதும் ஏற்கத்தக்க வகையில், செய்யப்பட்டது அல்லது எடுக்கப்பட்டதாகவே கருதப்படுதல் வேண்டும்.
குறித்த சில
நடவடிக்கைகளின்
செல்லுந்தன்மை.
23. முதன்மைச் சட்டத்தில் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள ஏதேனும் பிற சட்டம் அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அல்லது ஏதேனும் நீதிமன்றத்தின் அல்லது வேறு அதிகார அமைப்பின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யாததற்கோ அல்லது ஏற்றுக்கொள்ளாமைக்கோ அல்லது படகுசவாரி நடவடிக்கைகளைப் பதிவுசெய்தல் மற்றும் உரிமம் வழங்குதல் அல்லது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்தவெளிகளை அவை ஒதுக்கப்பட்ட நோக்கத்தைத் தவிர, பிறவற்றிற்காக, மன்றத்தால் அல்லது ஏதேனும் அதிகார அமைப்பினால், 2023 ஏப்ரல் 13 ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இச்சட்டம் வெளியிடப்பட்ட தேதியுடன் முடிவடையும் காலத்தில், அரசின் ஒப்புதலுடன், செய்யப்பட்ட அனைத்து செயல்களும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், அனைத்து நோக்கங்களுக்காகவும், இச்சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தைப்போன்று, அத்தகைய செயல்கள் அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய நேரங்களிலும் நடைமுறையில் இருந்ததைப் போன்று, சட்டத்திற்கிணங்கிய வகையில், எப்பொழுதும் ஏற்கத்தக்க வகையில், செய்யப்பட்டது அல்லது எடுக்கப்பட்டதாகவே கருதப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
14 15தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 4 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.33/2025.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
மற்றும் (மூன்றாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் மூலம் குறித்திடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
131-A பிரிவினை 21 /1994.
விட்டுவிடுதல்.
2. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 131-A பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
IX-B எனும் புதிய 3. முதன்மைச் சட்டத்தின் IX-A அத்தியாயத்திற்கு பின்பு,
அத்தியாயத்தை பின்வரும் அத்தியாயமானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்தல்.
""அத்தியாயம் IX-B.
விளம்பரப்பலகைகள், மின்னணுத்திரைகள் மற்றும் விளம்பர அட்டைகள் ஆகியவற்றை முறைப்படுத்துதல்.
198-J. பொருள் வரையறைகள்.-198-J. பொருள் வரையறைகள்.- இந்த அத்தியாயத்தில்,-
(a) "மின்னணுத்திரை" என்பது திருமணம், சமயச் சடங்கு, பிறந்தநாள் அல்லது இறந்த நாள் குறித்த ஆண்டு விழா, அல்லது அரசியல், மதம் அல்லது வகுப்புவாத அமைப்பு, வணிக ஊக்குவிப்பு எதனின் கூட்டம் அல்லது மாநாடு தொடர்பான விளம்பரம் எதனையும் அல்லது தகவல் எதனையும் காட்சிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட, பொது அல்லது தனியார் இடம் எதிலும் மின்னணு அச்சுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வடிவமைத்து அச்சடிக்கப்பட்ட பலகைத் தட்டிகள் எதுவும் எனப் பொருள்படும்;
(b) "விளம்பரப்பலகை" என்பது நிலம், கட்டடம், சுவர் அல்லது கட்டமைப்பு எதனின் மீதும் அல்லது அதன் மீது முழுவதுமோ அல்லது பகுதியாகவோ அல்லது பொது மக்களுக்கு முழுவதுமாக அல்லது பகுதியாக காட்சிப்படுத்தப்பட்ட ஊர்தி உள்ளடங்கலான விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட பொது அல்லது தனியார் இடம் எதிலும் வைக்கப்பட்ட மின்னணுத்திரை மற்றும் விளம்பர அட்டை அல்லாத பலகைத் தட்டிகள் அல்லது பிற கட்டமைப்பு எதுவும் என்று பொருள்படும்;
16(c) "விளம்பர அட்டை" என்பது, திருமணம், சமயச் சடங்கு, பிறந்தநாள் அல்லது இறந்த நாள் குறித்த ஆண்டு விழா, அல்லது அரசியல், மதம் அல்லது வகுப்புவாத அமைப்பு, வணிக ஊக்குவிப்பு எதனின் கூட்டம் அல்லது மாநாடு தொடர்பான விளம்பரம் எதையும் அல்லது தகவல் எதனையும் காட்சிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தக் கருதப்பட்ட, பொது அல்லது தனியார் இடம் எதிலும் மின்னணு அச்சுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைத்து அச்சடிக்கப்பட்ட, எட்டு அடி உயரம் மற்றும் நான்கு அடி அகலத்திற்கு மேற்படாத அளவிலான பலகைத் தட்டிகள் எதுவும் எனப் பொருள்படும்.
198-K. விளம்பரப்பலகைகள் வைப்பதற்கான ஒழுங்குமுறை-(1) 198-K. விளம்பரப்பலகைகள் வைப்பதற்கான ஒழுங்குமுறை-(1) கிராம ஊராட்சியில் எந்த இடத்திலும் விளம்பரப் பலகை நிறுவ விரும்பும் ஒவ்வொரு நபரும் தனது பெயரை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் அத்தகைய படிவத்தில் பதிவு செய்தல் வேண்டும்.
(2) எந்தவொரு விளம்பரப் பலகையையும் நிறுவுவதற்கு, (1) ஆம் உட்பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட நபர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) உரிமத்திற்காக விண்ணப்பித்தல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் உரிமத்திற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், அத்தகைய விவரங்களை உள்ளடக்கி, அத்தகைய விண்ணப்பக் கட்டணத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) செய்யப்படுதல் வேண்டும்.
(4) வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), உள்ளூரில் ஆய்வினை செய்த பின்பும், ஆண்டொன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு வகுத்துரைக்கப்படலாகும் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மிகாத, அத்தகைய கட்டணத்தை செலுத்துவதன் பேரிலும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுடனும் உரிமத்தினை வழங்கலாம்.
(5) வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), எழுத்துப்பூர்வமாக
பதிவு செய்யும் காரணங்களுக்காக, உரிமம் வழங்குவதை மறுக்கலாம்:
வரம்புரையாக, விண்ணப்பதாரருக்கு அவரின் முறையீட்டினை வழங்குவதற்கு வாய்ப்பொன்றை வழங்காமல், உரிமமானது மறுக்கப்படுதலாகாது.
(6) (4) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உரிமம் ஒவ்வொன்றும், மூன்று ஆண்டுகளுக்கு மிகாத அத்தகைய கால அளவிற்கு செல்லுபடியாகும். மேலும், அது வழங்கப்பட்ட காலஅளவிற்கு மிகாத அத்தகைய கால அளவிற்கு புதுப்பிக்கப்படலாம்.
(7) (1), (3) மற்றும் (4) ஆம் உட்பிரிவின்கீழ் செலுத்தப்படும் கட்டணத் தொகையானது, வகுத்துரைக்கப்படலாகும் முறையில், தொடர்புடைய கிராம ஊராட்சியின் கணக்கில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.
198-L . மின்னணுத் திரைகளையும் விளம்பர அட்டைகளையும் 198-L . மின்னணுத் திரைகளையும் விளம்பர அட்டைகளையும் நிறுவுவதை முறைப்படுத்துதல்.-நிறுவுவதை முறைப்படுத்துதல்.- (1) விளம்பரம் அல்லது தகவல் எதனையும் காட்சிப்படுத்துவதற்காக மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை எதுவும், கிராம ஊராட்சிக்குள், நபர் எவராலும், செயலாட்சி அலுவலரின் முன்அனுமதி பெறாமல் நிறுவப்படுதலாகாது.
17(2) (1) ஆம் உட்பிரிவின்படியான அனுமதிக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், விளம்பர அட்டை அல்லது மின்னணுத்திரை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மிகாத அத்தகைய கட்டணத்துடன் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் அத்தகைய விவரங்களை உள்ளடக்கி, மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டையை நிறுவுவதன் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக செயலாட்சி அலுவலரிடம் எழுத்துருவில் செய்யப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, அரசியல் நிகழ்வின் நேர்வில், அத்தகைய விண்ணப்பமானது மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை நிறுவப்படும் தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு செய்யப்படுதல் வேண்டும்.
(3) மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை நிறுவுவதற்கான அனுமதியானது, செயலாட்சி அலுவலரால் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு அத்தகைய நோக்கத்திற்காக ஆறு நாட்களுக்கு மேற்படாத அத்தகைய கால அளவிற்கு, வழங்கப்படலாம்.
(4) செயலாட்சி அலுவலர், எழுத்துருவில் பதிவு செய்யப்படவேண்டிய
காரணங்களுக்காக அனுமதியினை வழங்க மறுக்கலாம்.
(5) அனுமதி பெற்றதற்குப் பின்னர் மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டையை நிறுவுகின்ற ஒவ்வொரு நபரும், அத்தகைய அனுமதி முடிவுற்றதன் பேரில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இன்னல் எதுவும் ஏற்படாத வகையில் அதனை அகற்றி அழித்தல் வேண்டும்.
198-M. உரிமத்தினை இடைநிறுத்தம் அல்லது இரத்து செய்வதற்கான 198-M. உரிமத்தினை இடைநிறுத்தம் அல்லது இரத்து செய்வதற்கான அதிகாரம்:-அதிகாரம்:- (1) இந்த அத்தியாயத்தின் கீழ் உரிமதாரர் பொறுப்பாகும் பிற தண்டத்தொகை எதற்கும், குந்தகமின்றி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), எந்த நேரத்திலும்,
(a) அத்தகைய உரிமமானது, மோசடி, தவறான சித்தரிப்பு அல்லது பொருள் விவரங்களை வெளியிட மறுத்தலின் மூலம் பெற்றிருந்தால், அல்லது
(b) உரிமதாரர், இந்த அத்தியாயத்தின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் எதனையும் அல்லது எந்த நிபந்தனைகளுக்குட்பட்டு உரிமம் வழங்கப்பட்டதோ அந்த நிபந்தனைகள் எதனையும் மீறினால்,
198-K பிரிவின்கீழ் வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை, எழுத்துப்பூர்வமான ஆணையின் மூலம் இடை நிறுத்தலாம் அல்லது இரத்து செய்யலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் உரிமம் ஒன்றை இரத்து செய்வதற்கு முன்பு, வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) உரிமதாரருக்கு அவரின் முறையீட்டை செய்வதற்கு வாய்ப்பொன்றை வழங்குதல் வேண்டும்.
198-N. அதிகாரமளிக்கப் பெறாமல் அமைத்த விளம்பரப் பலகைகள், 198-N. அதிகாரமளிக்கப் பெறாமல் அமைத்த விளம்பரப் பலகைகள், மின்னணுத்திரைகள் அல்லது விளம்பர அட்டைகளை அகற்றுதல்.- மின்னணுத்திரைகள் அல்லது விளம்பர அட்டைகளை அகற்றுதல்.- உரிமம் இல்லாமல் அமைக்கப்பட்ட விளம்பரப் பலகை எதனையும் அல்லது அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை எதனையும், அறிவிப்பு ஏதுமின்றி நேர்விற்கேற்ப, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அல்லது செயலாட்சி அலுவலரால், அகற்றிப் பறிமுதல் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அகற்றுவதற்கான செலவினை அங்கீகரிக்கப்படாத, விளம்பர பலகை, மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை ஆகியவற்றை அமைத்த நபரிடமிருந்து நிலவருவாயின் நிலுவைத் தொகை வசூலிப்பது போல் வசூலித்தல் வேண்டும்.
18198-O. குறித்த சில நேர்வுகளில் விளம்பரப் பலகைகள், 198-O. குறித்த சில நேர்வுகளில் விளம்பரப் பலகைகள், மின்னணுத்திரைகள் அல்லது விளம்பர அட்டைகளை மின்னணுத்திரைகள் அல்லது விளம்பர அட்டைகளை அகற்றுதல்.-அகற்றுதல்.- (1) விளம்பரப் பலகை அல்லது மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை எதுவும் நேர்விற்கேற்ப உரிமத்தின் கால அளவு அல்லது அனுமதியின் காலஅளவு முடிவடைந்த பின்னரும் அகற்றாமல் வைக்கப்பட்டிருக்குமிடத்து, அல்லது உரிமம் அல்லது அனுமதியின் நிபந்தனைகளுக்கு முரணாக அமைக்கப்பட்டிருக்குமிடத்து, நேர்விற்கேற்ப, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அல்லது செயலாட்சி அலுவலர் எழுத்துருவிலான அறிவிப்பின் மூலமாக, உரிமதாரர் அல்லது அனுமதிப்பெற்றிருப்பவரை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவுக்குள்ளாக, அத்தகைய விளம்பரப் பலகை அல்லது மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டையினை அகற்றுமாறு கோரலாம்.
(2) அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள்ளாக விளம்பரப் பலகை அல்லது மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை அகற்றப்படாதவிடத்து, நேர்விற்கேற்ப, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அல்லது செயலாட்சி அலுவலர், மேற்கொண்டு அறிவிப்பு கொடுக்காமலேயே, அவற்றை அகற்றி மற்றும் அதற்கான செலவினங்களை தொடர்புடைய நபரிடமிருந்து நில வருவாயின் நிலுவைத்தொகை வசூலிப்பதுபோல் வசூலித்தல் வேண்டும்.
198-P. விலக்களித்தல்,- (1) 198-P. விலக்களித்தல்,- (1) இந்த அத்தியாயத்தில் அடங்கியுள்ள
எதுவும்,-
(a) அத்தகைய விளம்பரப்பலகை, மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டையானது அமைக்கப்பட்டுள்ள நிலம் அல்லது கட்டடத்திற்குள் அல்லது அதில் மேற்கொள்ளப்படும் வணிகம் அல்லது வர்த்தகம் அல்லது அத்தகைய நிலம் அல்லது கட்டடத்தின் விற்பனை அல்லது வாடகைக்கு விடுதல் எதுவும் அல்லது அதன் மீதான விளைவுகள் எதுவும் அல்லது அங்கு அல்லது அத்தகைய நிலம் அல்லது கட்டடத்தில் நடைபெறவிருக்கும் விற்பனை, கேளிக்கை அல்லது கூட்டம் எதற்கும்;
(b) அத்தகைய விளம்பரப்பலகை, மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை அமைக்கப்பட்டுள்ள நிலம் அல்லது கட்டடத்தின் பெயர் அல்லது அத்தகைய நிலம் அல்லது கட்டடத்தின் உரிமையாளர் அல்லது அனுபவத்திலிருப்பவரின் பெயர்;
ஆகியவற்றிற்கு தொடர்புடைய விளம்பரம் எதனையும் காட்சிப்படுத்தும் விளம்பரப் பலகை, மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை ஆகியவற்றிற்குப் பொருந்தாது:
வரம்புரையாக, இந்த உட்பிரிவின்கீழ், விலக்களிப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய விளம்பரப்பலகை, மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை ஆகியவற்றின் அளவு மற்றும் தன்மைக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.
(2) இந்த அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ள எதுவும், மாநில அரசு, மைய அரசு, ஊராட்சி அல்லது சட்டப்பூர்வ அமைப்பு அல்லது மாநில அல்லது மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களால் நிறுவப் பெற்றுள்ள விளம்பரப்பலகை, மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை எதற்கும் பொருந்தாது:
வரம்புரையாக, இந்த உட்பிரிவின்கீழான விலக்களிப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் விளம்பரப் பலகை, மின்னணுத் திரை அல்லது விளம்பர அட்டையின் அத்தகைய அளவு மற்றும் தன்மைக்குட்பட்டு இருத்தல் வேண்டும்.
19198-Q. மேல்முறையீடு.-198-Q. மேல்முறையீடு.- (1) இந்த அத்தியாயத்தின் கீழ், நேர்விற்கேற்ப, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அல்லது செயலாட்சி அலுவலரால் உரிமம் வழங்குவதற்கு அல்லது புதுப்பித்தலுக்கு மறுத்தல் அல்லது அனுமதி வழங்குதலை மறுத்தல் அல்லது இரத்து செய்தல் ஆகியவற்றின் ஆணைக்கெதிராக, அந்த ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் அத்தகைய அதிகார அமைப்பிடம் மேல்முறையீட்டினை செய்யலாம்.
(2) மேல் முறையீடானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும், படிவத்திலும் மற்றும் அத்தகைய கட்டணத்துடனும் இருத்தல் வேண்டும்.
(3) மேல் முறையீட்டு அதிகார அமைப்பானது, அத்தகைய மேல் முறையீட்டினை பெறுவதன் பேரில், தேவைப்படலாகும் அத்தகைய விசாரணையை செய்த பின்னர் மற்றும் மேல்முறையீட்டாளருக்கு விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்கிய பின்னர், அது தக்கதெனக் கருதலாகும் அத்தகைய ஆணையினை பிறப்பிக்கலாம்.
தமிழ்நாடு சட்டம்
2/1959
198-R. ஊராட்சியிடமுள்ள சொத்துகளில் விளம்பரம் செய்வதற்கான 198-R. ஊராட்சியிடமுள்ள சொத்துகளில் விளம்பரம் செய்வதற்கான உரிமையை வழங்குவதற்கான அதிகாரம்:-உரிமையை வழங்குவதற்கான அதிகாரம்:- 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தவெளி (சிதைவைத் தடுத்தல்) சட்டம் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதனின் வகைமுறைகளுக்குட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய கட்டணத்தை செலுத்துவதின் பேரில், ஊராட்சியிடம் உள்ள, அல்லது ஊராட்சிக்கு சொந்தமான சொத்துகளில் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கு, நேர்விற்கேற்ப, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அல்லது செயலாட்சி அலுவலர், நபர் எவருக்கும் அல்லது நபர்களின் வகையினர் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பு எதற்கும் உரிமையினை வழங்கலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஊராட்சிக்கு செலுத்தப்படும் எந்தத் தொகையும், நேர்விற்கேற்ப, 198-K பிரிவு அல்லது 198-L பிரிவின்கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களுடன் சேர்ந்ததாகவும், அதிலிருந்து வேறுபட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
(3) இந்தப் பிரிவில் உள்ளடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அல்லது தொடர்புடைய செயலாட்சி அலுவலர், எந்தவொரு நபரையும் அல்லது நபர்களின் வகையினரையும் அல்லது ஊராட்சிக்கு சொந்தமான அல்லது அதனிடம் உற்றமைத்துள்ள ஒரு பொதுச் சொத்தை பராமரிக்கும் எந்தவொரு நிறுவனம் அல்லது அமைப்பையும் தங்கள் சொந்த விளம்பரத்தை சொந்த செலவில் காட்சிப்படுத்த அனுமதிக்கலாம்.
198-S. குறித்த சில விளம்பரப் பலகைகளை, மின்னணுத்திரைகளை 198-S. குறித்த சில விளம்பரப் பலகைகளை, மின்னணுத்திரைகளை அல்லது விளம்பர அட்டைகளை வைப்பதற்கான தடை.-அல்லது விளம்பர அட்டைகளை வைப்பதற்கான தடை.- இந்தச் சட்டத்தில் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் அல்லது நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பு, தீர்ப்புரை அல்லது ஆணை எதிலும் அடங்கியுள்ளது எவ்வாறிருப்பினும்,-20 (a) (i) தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து இயக்கத்திற்குப் பாதிப்பு எற்படுத்துவதைப் போன்று சாலையில் போக்குவரத்திற்கு தெளிவாக தெரியக்கூடிய விளம்பரப் பலகை எதுவும் (போக்குவரத்து அடையாளக் குறி மற்றும் சாலை வழிகாட்டியைத் தவிர) பாதுகாப்பான சாலை போக்குவரத்து இயக்கத்திற்கு ஆபத்தாக மற்றும் இடையூறாக இருக்கிறவிடத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) எழுத்து மூலமான அறிவிப்பினால், அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ள அத்தகைய காலத்திற்குள் உரிமம் பெற்றவரை அல்லது அத்தகைய விளம்பரப் பலகையை வைத்துள்ள நபர் எவரையும் அத்தகைய விளம்பரப் பலகையை அகற்றுமாறு கோருதல் வேண்டும்:
வரம்புரையாக, அத்தகைய காலமானது அத்தகைய அறிவிப்பை வெளியிட்ட தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்கு குறையாது இருத்தல் வேண்டும்;
(ii) (i) ஆம் உட்கூறில் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரப் பலகையானது, அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலத்திற்குள் அகற்றப்படாதவிடத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), மேற்கொண்டு அறிவிப்பு கொடுக்காமலேயே, அத்தகைய விளம்பரப் பலகையை அகற்றி மற்றும் அதற்கான செலவினங்களை தொடர்புடைய நபரிடமிருந்து நிலவருவாயின் நிலுவைத்தொகை வசூலிப்பதுபோல் வசூலித்தல் வேண்டும்;
(b) (i) தடையற்ற மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து இயக்கத்திற்குப் பாதிப்பு எற்படுத்துவதைப் போன்று சாலையில் போக்குவரத்திற்கு தெளிவாக தெரியுமாறுவைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை அல்லது மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை எதுவும், (போக்குவரத்து அடையாளக் குறி மற்றும் சாலை வழிகாட்டியைத்தவிர) பாதுகாப்பான சாலை போக்குவரத்து இயக்கத்திற்கு ஆபத்தை மற்றும் இடையூறினை ஏற்படுத்த கூடுமென வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அல்லது தொடர்புடைய செயலாட்சி அலுவலர் மனநிறைவு அடைகிறவிடத்து, நேர்விற்கேற்ப, 198-K பிரிவு அல்லது 198-L பிரிவின்படி அவர் உரிமம் அல்லது அனுமதி எதையும் வழங்குதல் கூடாது;
(ii) (i) ஆம் உட்கூறுக்கு முரணாக விளம்பரப் பலகை அல்லது மின்னணுத்திரை அல்லது விளம்பர அட்டை எதுவும் அமைக்கப்பட்டிருக்கிறவிடத்து, அதனை அறிவிப்பு ஏதுமின்றி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அல்லது தொடர்புடைய செயலாட்சி அலுவலரால் அகற்றி பறிமுதல் செய்ய வேண்டும் மற்றும் அதற்கான செலவினங்களை தொடர்புடைய நபரிடமிருந்து நில வருவாயின் நிலுவைத்தொகை வசூலிப்பதுபோல் வசூலித்தல் வேண்டும்.
198-T தண்டத்தொகை.-198-T தண்டத்தொகை.- இந்த அத்தியாயத்தின் வகைமுறைகள் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது ஆணை எவற்றையும் மீறுபவர் அல்லது இந்த அத்தியாயத்தின் கீழ் அல்லது அத்தியாயத்தால் வழங்கப்பட்ட அதிகாரம் எதனின் சட்டப்பூர்வ செயல்பாட்டினை தடை செய்யும் நபரெவரும், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத் தண்டனை அல்லது இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகை விதித்தோ அல்லது அவை இரண்டும் விதித்தோ தண்டிக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, செயலாட்சி அலுவலரின் அனுமதியின்றி மின்னணுத்திரையை அல்லது விளம்பர அட்டையை அமைக்கின்ற நபர் எவரும், ஓராண்டு வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத் தண்டனையோ அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதமோ அல்லது அவை இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.".
21220 ஆம் 4. முதன்மைச் சட்டத்தின் 220 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்
பிரிவிற்கான வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
திருத்தம்.
256-A எனும் 5. முதன்மைச் சட்டத்தின் 256 ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"256-A. பணிப்புரைகள் வழங்கும் அதிகாரம்.- அரசானது, இந்தச் "256-A. பணிப்புரைகள் வழங்கும் அதிகாரம்.- சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்காக, இந்தச் சட்டத்தின்படி ஊராட்சி அல்லது அதிகாரஅமைப்பு எதற்கும் தான் பொருத்தமெனக் கருதுகிற அத்தகைய பணிப்புரைகளை அவ்வப்போது வழங்கலாம் மற்றும் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பது அத்தகைய ஊராட்சி அல்லது அதிகாரஅமைப்பின் கடமையாகும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
22 23தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 5 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.34/2025.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள்
மற்றும் மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) (i) 5 ஆம் பிரிவின் (i) கூறு மற்றும் 14 ஆம் பிரிவானது 2017 ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
(ii) 2 ஆம் பிரிவின் (i) கூறு மற்றும் 6 ஆம் பிரிவானது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
(iii) மீதமுள்ள அனைத்து பிரிவுகளும், மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கான 19/2017.
திருத்தம்.
2. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2 ஆம் பிரிவில், -
மையச் சட்டம்
13/2017
(i) (61) ஆம் கூறில், "9 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "இந்தச் சட்டத்தின் அல்லது 2017 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்கீழ்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(ii) (69) ஆம் கூறில்,-
(a) (c) உட்கூறில், "நகராட்சியின் மேலாண்மை" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "நிதியம்" எனும் சொல்லானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(b) (c) உட்கூறிற்குப் பின்பு, பின்வரும் விளக்கமானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
'விளக்கம்.- இந்த உட்கூறின் நோக்கங்களுக்காக-
(a) "உள்ளாட்சி நிதியம்" என்பது, ஊராட்சிப் பகுதி தொடர்பாக குடிமைப் பணிகளை ஆற்றுவதற்காக நிறுவப்பட்ட மற்றும் வரி, தீர்வை, சுங்கவரி, மேல்வரி அல்லது கட்டணம் என எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும், அவை எதனையும் விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும், பயன்படுத்துவதற்குமான அதிகாரங்களுடன் சட்டப்படி உற்றமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது மேலாண்மையின் கீழ் உள்ள ஏதேனும் நிதியம் என்று பொருள்படும்;
(b) "நகராட்சி நிதியம்" என்பது, ஒரு பெருநகரப் பகுதி அல்லது நகராட்சிப் பகுதி தொடர்பாக குடிமைப் பணிகளை ஆற்றுவதற்காக நிறுவப்பட்ட மற்றும் வரி, தீர்வை, சுங்கவரி, மேல்வரி அல்லது கட்டணம் என எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அவை எதனையும் விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும், பயன்படுத்துவதற்குமான அதிகாரங்களுடன் சட்டப்படி உற்றமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது மேலாண்மையின் கீழ் உள்ள ஏதேனும் நிதியம் என்று பொருள்படும்;';
24(iii) (116) ஆம் கூறிற்குப் பின்பு, பின்வரும் கூறானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
'(116A) "தனித்துவமான அடையாளக் குறியீடு" என்பது 148A பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (b) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள தனித்துவமான அடையாளக் குறியீடு என்று பொருள்படும் மற்றும் மின்னிலக்கமுறையிலான முத்திரை, மின்னிலக்கமுறையிலான குறியீடு அல்லது தனித்துவமான, பாதுகாப்பான மற்றும் அகற்ற முடியாத ஏதேனும் பிற ஒத்த குறியீடுகளையும் உள்ளடக்கும்;'.
12 ஆம்
3. முதன்மைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின், (4) ஆம் உட்பிரிவானது
பிரிவிற்கான விட்டுவிடப்படுதல் வேண்டும்.
திருத்தம்.
13 ஆம்
4. முதன்மைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின், (4) ஆம் உட்பிரிவானது
பிரிவிற்கான விட்டுவிடப்படுதல் வேண்டும்.
திருத்தம்.
17 ஆம்
5. முதன்மைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில், (5) ஆம் உட்பிரிவின்,
பிரிவிற்கான (d) கூறில்,-
திருத்தம்.
(i) "தொழிற்சாலை அல்லது இயந்திரத்தொகுதி" எனும் சொற்றொடருக்காக, "தொழிற்சாலை மற்றும் இயந்திரத்தொகுதி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) விளக்கம் என்பது அதனில் விளக்கம் 1 என்று மறு எண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட விளக்கம் 1-க்கு பின்பு, பின்வரும் விளக்கமானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"விளக்கம் 2.– (d) கூறின் நோக்கங்களுக்காக, எந்தவொரு நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற அதிகார அமைப்பின் எந்தவொரு தீர்ப்பு, தீர்ப்புரை அல்லது ஆணையில் முரணாக எதுவும் இருந்தபோதிலும், "தொழிற்சாலை அல்லது இயந்திரத்தொகுதி" பற்றிய எந்தவொரு சுட்டுகையும், "தொழிற்சாலை மற்றும் இயந்திரத்தொகுதி" பற்றிய சுட்டுகையாக பொருள்கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் எப்போதும் அவ்வாறே பொருள்கொள்ளப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும் என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது;".
20 ஆம்
6. முதன்மைச் சட்டத்தின் 20 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(i) (1) ஆம் உட்பிரிவில், "9 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "இந்தச் சட்டத்தின் அல்லது 2017 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் (மையச் சட்டம் 13/2017) 5 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்கீழ்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
(ii) (2) ஆம் உட்பிரிவில், "9 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "இந்தச் சட்டத்தின் அல்லது 2017 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் (மையச் சட்டம் 13/2017) 5 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவு அல்லது (4) ஆம் உட்பிரிவின்கீழ்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
34 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
7. முதன்மைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவின் வரம்புரைக்காக, பின்வரும் வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
25"வரம்புரையாக, வழங்குபவரின் வெளியீட்டு வரி பொறுப்பில் குறைப்பு
எதுவும்,
(i) அத்தகைய பெறுநர் பதிவு செய்யப்பட்ட நபராக இருக்குமிடத்து; அத்தகைய வரவுக் குறிப்பிற்கு காரணமான உள்ளீட்டு வரி வரவு, பெறப்பட்டு, பெற்றுக்கொள்பவரால் மாற்றப்படவில்லையாயின், அல்லது
(ii) பிற நேர்வுகளில், அத்தகைய வழங்கல் மீதான வரி விதிப்பு
வேறு எந்த நபருக்கும், மாற்றப்பட்டிருப்பின்,
அனுமதிக்கப்படலாகாது.".
38 ஆம் 8. முதன்மைச் சட்டத்தின் 38 ஆம் பிரிவில்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(i) (1) ஆம் உட்பிரிவில், "தானியங்கி விவர அறிக்கை" எனும் சொற்றொடருக்காக, "விவர அறிக்கை" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ii) (2) ஆம் உட்பிரிவில்,-
(a) "தானியங்கி விவர அறிக்கை" எனும் சொற்றொடருக்காக, "சுட்டப்பட்ட விவர அறிக்கை" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (a) கூறில், "மற்றும்" எனும் சொல்லானது
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(c) (b) கூறில், "பெற்றுக் கொள்பவரால்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "உள்ளடங்கலான" எனும் சொல்லானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(d) (b) கூறிற்குப் பின்பு, பின்வரும் கூறானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(c) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற விவரங்கள்".
39 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
9. முதன்மைச் சட்டத்தின் 39 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், "மற்றும் அத்தகைய காலத்திற்குள்" எனும் சொற்றொடருக்காக, "அத்தகைய காலத்திற்குள், மற்றும் அத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
107 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
10. முதன்மைச் சட்டத்தின் 107 ஆம் பிரிவில், (6) ஆம் உட்பிரிவின், வரம்புரைக்காக, பின்வரும் வரம்புரையானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, எந்தவொரு வரியையும் கோராமல் தண்டத்தொகையினை கோருகின்ற ஆணை ஏதேனும் இருக்கும் நேர்வில், மேல்முறையீட்டாளர், கூறப்பட்ட தண்டத்தொகையின் பத்து விழுக்காட்டிற்கு சமமான தொகையை செலுத்தினாலன்றி, அத்தகைய ஆணைக்கு எதிராக மேல்முறையீடு எதுவும் தாக்கல் செய்யப்படுதலாகாது.".
112 ஆம் 11. முதன்மைச் சட்டத்தின் 112 ஆம் பிரிவின், (8) ஆம் உட்பிரிவில்,
பிரிவிற்கான பின்வரும் வரம்புரையானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
திருத்தம்.
26"வரம்புரையாக, எந்தவொரு வரியையும் கோராமல் தண்டத்தொகையினை கோருகின்ற ஆணை ஏதேனும் இருக்கும் நேர்வில், மேல்முறையீட்டாளர், 107 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின் வரம்புரையின்கீழ் செலுத்தப்பட வேண்டிய தொகையுடன் சேர்த்து, கூறப்பட்ட தண்டத்தொகையின் பத்து விழுக்காட்டிற்கு சமமான தொகையும் செலுத்தினாலன்றி, அத்தகைய ஆணைக்கு எதிராக மேல்முறையீடு எதுவும் தாக்கல் செய்யப்படுதலாகாது." .
122B எனும்
12. முதன்மைச் சட்டத்தின் 122A ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
122 B. தடமறியும் மற்றும் சுவடறியும் இயந்திர அமைப்புடன் " 122 B. தடமறியும் மற்றும் சுவடறியும் இயந்திர அமைப்புடன் இணங்கத் தவறியதற்கான தண்டத்தொகை.இணங்கத் தவறியதற்கான தண்டத்தொகை.- இச்சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 148A பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (b) ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட எவரேனும், கூறப்பட்ட பிரிவின் வகைமுறைகளுக்கு முரணாகச் செயல்படுமிடத்து, அவர், அத்தியாயம் XV-ன் கீழ் அல்லது இந்த அத்தியாயத்தின் வகைமுறைகளின்கீழ் செலுத்தவேண்டிய ஏதேனும் தண்டத்தொகையுடன் சேர்த்து, ஒரு இலட்சம் ரூபாயோ அல்லது அத்தகைய சரக்குகள் மீது செலுத்த வேண்டிய வரியின் பத்து விழுக்காட்டிற்குச் சமமான தொகையையோ இதில் எது அதிகமோ அதை தண்டத்தொகையாகச் செலுத்துவதற்குப் பொறுப்புடையவராகுதல் வேண்டும்.".
148A எனும்
13. முதன்மைச் சட்டத்தின் 148 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
148A. குறித்த சில சரக்குகளுக்கான தடமறியும் மற்றும் " 148A. குறித்த சில சரக்குகளுக்கான தடமறியும் மற்றும் சுவடறியும் இயந்திர அமைப்பு.-சுவடறியும் இயந்திர அமைப்பு.- (1) அரசானது, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அறிவிக்கையின் மூலம் இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்கு பொருந்துகிற,-
(a) சரக்குகளை;
(b) அத்தகைய சரக்குளை உடைமையில் கொண்டுள்ள அல்லது அவற்றைக் கையாளுகிற நபர்கள் அல்லது நபர்களின் வகுப்பினரை, குறிப்பிடலாம்.
(2) அரசானது, (1) ஆம் உட்பிரிவின் (a) கூறில் சுட்டப்பட்டுள்ள
சரக்குகளைப் பொறுத்து,-
(a) தனித்துவமான அடையாளக் குறியீடுகளை ஒட்டுவதற்கும், அதில் அடங்கியுள்ள தகவல்களை அணுகுவதற்கும், மின்னணு முறையில் சேமிப்பதற்கும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நபர்கள் மூலம் ஒரு மின்னணு அமைப்பினை வழங்கலாம்; மற்றும்
(b) அதில் பதிவு செய்யப்பட வேண்டிய தகவல்கள் உட்பட, அத்தகைய சரக்குகளின் தனித்துவமான அடையாளக் குறியீடுகளை வகுத்துரைக்கலாம்.
(3) (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள்,
வகுத்துரைக்கப்படலாகும்,-
(a) அத்தகைய தகவலைக் கொண்ட, ஒரு தனித்துவமான அடையாளக் குறியினை கூறப்பட்ட சரக்குகள் அல்லது அதன் பொதிகளில், அத்தகைய முறையில் ஒட்டுதல் வேண்டும்;
(b) அத்தகைய காலத்திற்குள் அத்தகைய தகவல் மற்றும் விவரங்களை சமர்ப்பித்தல் மற்றும் அத்தகைய பதிவேடுகள் அல்லது ஆவணங்களை அத்தகைய வடிவத்திலும் முறையிலும் பராமரித்தல் வேண்டும்;
27(c) அத்தகைய சரக்குகளை உற்பத்தி செய்யும் வணிக இடத்தில் நிறுவப்பட்ட இயந்திரங்களின் அடையாளம், திறன், செயல்பாட்டின் காலம் உள்ளடங்கலான விபரங்கள் மற்றும் அத்தகைய பிற விவரங்கள் அல்லது தகவலானது அத்தகைய நேரத்திற்குள் மற்றும் அத்தகைய வடிவத்திலும் மற்றும் முறையிலும் சமர்ப்பித்தல் வேண்டும்;
(d) (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட அமைப்பு
தொடர்பாக அத்தகைய தொகையைச் செலுத்துதல் வேண்டும்.".
III ஆம் இணைப் 14. முதன்மைச் சட்டத்தின் III ஆம் இணைப்பட்டியலில்,-
பட்டியலுக்கான (i) 8 ஆம் பத்தியில், (a) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது
திருத்தம்.
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(aa) ஏற்றுமதிகளுக்காக அல்லது உள்நாட்டு வரிக்கட்டணப் பகுதிக்கான அனுமதிக்கு முன்னர் நபர் எவருக்கும், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அல்லது ஒரு தடையற்ற வர்த்தக சேமிப்புக் கிடங்கு மண்டலத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சரக்குகளை வழங்குதல்;";
(ii) 2 ஆம் விளக்கத்தில், "நோக்கங்களுக்காக" எனும் சொல்லுக்கு பின்பு, "(a) கூறின்" எனும் சொல்லானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(iii) 2 ஆம் விளக்கத்திற்குப் பின்பு, பின்வரும் விளக்கமானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
" விளக்கம்விளக்கம் 3.- 8 ஆம் பத்தியின் (aa) கூறின் நோக்கங்களுக்காக, முறையே "சிறப்பு பொருளாதார மண்டலம்", "தடையற்ற வர்த்தக சேமிப்புக்கிடங்கு மண்டலம்" மற்றும் "உள்நாட்டு வரிக்கட்டணப் பகுதி" ஆகிய சொற்றொடர்கள், 2005 ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் 28/2005) 2 ஆம் பிரிவில், அவைகளுக்கு குறித்தளிக்கப்பட்டுள்ள அதே பொருள்களைக் கொண்டிருத்தல் வேண்டும்".
வசூலிக்கப்பட்ட
வரியை திருப்பிக்
கொடுத்தல் 15. 14 ஆம் பிரிவு நடைமுறையிலிருந்த அனைத்து முக்கிய நேரங்களிலும், அவ்வாறு வசூலிக்கப்படாத ஆனால், பிறவாறு வசூலிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் திருப்பிக் கொடுத்தலாகாது.
ஆகாது.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
28 29தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 5 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.35/2025.
1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்தூக்கிகள்
மற்றும் தொடக்கம்.
மற்றும் நகரும் படிக்கட்டுகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கான 35/1997.
திருத்தம்.
2. 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2 ஆம் பிரிவின் (a) கூறில், "தலைமை ஆய்வாளர்" எனும் சொற்றொடருக்காக, "தலைமை மின் ஆய்வாளர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (2) முதல் (5) வரையிலான உட்பிரிவுகளுக்காக, பின்வரும் உட்பிரிவுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் அனுமதி பெறும் நோக்கத்திற்காக, உரிமையாளரானவர், வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய படிவத்தில் ஒரு தகுதிவாய்ந்த நபருக்கு அதிகாரம் அளித்தல் வேண்டும். அவ்வாறு அதிகாரம் அளிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர், உரிமையாளரின் சார்பாக, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், அரசால் அறிவிக்கப்படலாகும் இணைய வலைவாயில் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் ஒரு மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டை அமைக்க, அனுமதி கோரி விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணம் மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.
(4) (2) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பத்துடன் சேர்த்து அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் உண்மைத் தன்மைக்கு உட்பட்டு, அனுமதியானது, தானாக உருவாக்கப்பட்டு மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் இணையவழியில் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதியானது, அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆறு மாத காலத்திற்குச் செல்லுந்தன்மை உடையதாக இருத்தல் வேண்டும்.
30(5) உரிமையாளர், ஆறு மாத காலத்திற்குள் ஒரு மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டு அமைக்கும் பணியை முடிக்க முடியாவிட்டால், கூறப்பட்ட காலஅளவு முடிவுறுவதற்கு முன்பு, அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில், அத்தகைய அனுமதியின் செல்லுந்தன்மை நீட்டிக்க விண்ணப்பம் ஒன்றைச் செய்யலாம். மேலும், அனுமதி நீட்டிப்பானது, தானாக உருவாக்கப்பட்டு மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் மேலும் ஆறு மாத காலத்திற்கு இணையவழியில் வழங்கப்படுதல் வேண்டும்.
(6) அத்தகைய மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி முடிவடைந்த தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், ஒவ்வொரு உரிமையாளரும், அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர் மூலம், அத்தகைய அமைக்கும் பணி முடிந்ததற்கான அறிக்கையை, (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயிலில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.".
5 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (2) முதல் (6) வரையுள்ள உட்பிரிவுகளுக்காக, பின்வரும் உட்பிரிவுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமம் பெறும் நோக்கத்திற்காக, உரிமையாளரானவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் ஒரு தகுதிவாய்ந்த நபருக்கு அதிகாரம் அளித்தல் வேண்டும். அவ்வாறு அதிகாரம் அளிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர், உரிமையாளரின் சார்பாக, 4 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில், (1) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமத்திற்கான விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணம் மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.
(4) (2) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பத்துடன் சேர்த்து அளிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, உரிமமானது, தானாக உருவாக்கப்பட்டு மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில், இணையவழியில் வழங்கப்படுதல் வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்ட உரிமமானது, உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஐந்து ஆண்டு காலத்திற்குச் செல்லுந்தன்மை உடையதாக இருத்தல் வேண்டும்.".
6 ஆம் பிரிவை
5. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்
விட்டுவிடுதல். வேண்டும்.
8 ஆம்
6. முதன்மைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவில்,—
பிரிவிற்கான
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில், "உரிமம் எதனையும் இரத்து செய்யலாம் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(2) (2) ஆம் உட்பிரிவில், "எழுத்து வடிவில் உரிமம் எதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்" எனும் சொற்றொடருக்காக, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் உரிமம் எதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
31(3) (3) ஆம் உட்பிரிவில்,-
(a) "தாமாக முன்வந்து அல்லது விண்ணப்பத்தின் பேரில்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில்" எனும் சொற்றொடரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(b) வரம்புரைக்காக, பின்வரும் வரம்புரையானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, இந்த உட்பிரிவின் கீழ் ஆய்வாளர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தல் வேண்டும், மற்றும் அத்தகைய நபருக்குத் தனது விளக்கத்தை அளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்று வழங்கப்பட்டாலன்றி, எந்தவொரு நபருக்கும் குந்தகமான ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதலாகாது.".
9 ஆம் 7. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
பிரிவிற்கான மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்:-
மாற்றீடு.
"9. மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டு நிறுவுதலில் கூடுதலாக "9. மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டு நிறுவுதலில் கூடுதலாக
சேர்த்தல் அல்லது அதனை மாற்றியமைத்தல்.—சேர்த்தல் அல்லது அதனை மாற்றியமைத்தல்.—
(1) 11 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் செய்யப்பட வேண்டியவைத் தவிர வேறு எதனையும் கூடுதலாக சேர்த்தல் அல்லது மாற்றியமைத்தலானது இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிக்கிணங்க மற்றும் அதன் கீழ் தவிர, மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் நிறுவுதல் எதிலும் செய்யப்படக்கூடாது.
(2) இந்தப் பிரிவின்கீழ் அனுமதி பெறும் நோக்கத்திற்காக, உரிமையாளரானவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் ஒரு தகுதிவாய்ந்த நபருக்கு அதிகாரமளித்தல் வேண்டும். அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர், உரிமையாளரின் சார்பாக, 4 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள இணையவலைவாயில் மூலம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு வடிவில் அனுமதிக்கான விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும், மற்றும் அத்தகைய அனுமதி தானாகவே உருவாக்கப்பட்டு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் இணையவழியில் வழங்கப்படுதல் வேண்டும்.".
10 ஆம் 8. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில்,—
பிரிவிற்கான
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில், "தலைமை ஆய்வாளர் அதிகாரம் அளிக்கலாம்" எனும் சொற்றொடருக்காக, "தலைமை மின் ஆய்வாளர் அத்தகைய மின்னணு படிவத்தில் அதிகாரம் அளிக்கலாம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (2) ஆம் உட்பிரிவில், "அத்தகைய படிவத்தில் தலைமை ஆய்வாளருக்கு" எனும் சொற்றொடருக்காக, "அத்தகைய மின்னணு படிவத்தில் தலைமை மின் ஆய்வாளருக்கு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) விளக்கத்திற்காக, பின்வரும் விளக்கமானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"விளக்கம். "விளக்கம்.-இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "நிறுமம்" என்பது எந்தவொரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும், மற்றும் பதிவுசெய்யப்பட்டாலும் இல்லாவிடிலும் ஒரு நிறுவகம் அல்லது பிற தனிநபர்களின் கழகத்தையும் உள்ளடக்கும்.".
3211 ஆம்
9. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில்,—
பிரிவிற்கான
(1) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
திருத்தம்.
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) ஆய்வாளர் அல்லது அவருக்கு உதவுவதற்காக 14 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட நபர் எவரும், உரிமையாளருக்கு நியாயமான அறிவிப்பைக் கொடுத்த பின்பு, எந்நேரத்திலும், மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது வேலை செய்யப்பட்டு வரும் எந்த இடத்திலும் ஆய்வு செய்யும் நோக்கத்திற்காக நுழையலாம். ஆய்வாளருக்கு உதவுவதற்காக 14 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட நபர், அத்தகைய ஆய்வை மேற்கொண்ட பின்பு, அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைத்தலின் நிலை குறித்து, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் ஆய்வாளருக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும்.";
(2) (2) ஆம் உட்பிரிவில், "எழுத்து வடிவிலான" எனும் சொற்றொடர் வருகின்ற இரண்டு இடங்களில், "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு முறையின் மூலம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) (3) ஆம் உட்பிரிவில், "அரசு" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில்" எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்.
13 ஆம்
10. முதன்மைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
பிரிவிற்கான மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
மாற்றீடு.
"13. விபத்துகள் பற்றிய அறிக்கை.
"13. விபத்துகள் பற்றிய அறிக்கை.— மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் எதனையும் அமைக்கும் போது அல்லது இயக்கும் போது விபத்து ஏதேனும் நிகழ்ந்தால், அது உயிர் இழப்பு அல்லது காயத்தை விளைவிக்கக்கூடியதாக அல்லது ஏற்படுத்தக்கூடியதாக இருந்தால், அதிகாரம் அளிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர் அல்லது உரிமையாளர் அத்தகைய விபத்திற்கு பின்பு, உடனடியாக ஆய்வாளருக்கு, அத்தகைய விபத்து நிகழ்ந்தது மற்றும் அத்தகைய இழப்பு அல்லது காயம் குறித்து, விபத்து குறித்த முழு விவரங்களுடன், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு வடிவில் ஆய்வாளருக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், அருகிலுள்ள காவல் நிலையத்தின் பொறுப்பிலுள்ள அலுவலருக்கு இணையவழியாகவோ அல்லது நேரடி தொடர்பு முறை மூலமாகவோ தெரிவித்தல் வேண்டும். அத்தகைய விபத்துக்குப் பின்பு, அத்தகைய மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் நிறுவுதலில் எந்த வகையிலும் குறுக்கிடக்கூடாது, மேலும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு வடிவில் ஆய்வாளரால் வழங்கப்பட்ட அனுமதியின்றி, அத்தகைய மின்தூக்கி அல்லது நகரும் படிக்கட்டினை அமைக்கவோ அல்லது வேலையை மீண்டும் தொடங்கவோ கூடாது.".
15 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
11. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில், "ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய பணத்தண்டமும், மீறுகை தொடர்ந்து செய்யப்படுவதைப் பொறுத்த நேர்வில், அவ்வாறு தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டதன் பின்பு, அத்தகைய மீறுகை தொடர்கின்ற ஒவ்வொரு நாளுக்கும், ஐம்பது ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய மேலுமான பணத்தண்டமும் விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்" எனும் சொற்றொடருக்காக, "முதல் மீறுகைக்கு, பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய தண்டத்தொகையும் இரண்டாவது அல்லது பிந்தைய மீறுகைக்கு இருபதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய தண்டத்தொகையும், தொடர்ந்து மீறும் நேர்வில், இந்தச் சட்டத்தின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பு, அத்தகைய மீறுகை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் ஐந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய கூடுதல் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுத்தல் வேண்டும்.
3315-A, 15-B, 12. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
15-C மற்றும் பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
15-D எனும்
புதிய பிரிவுகளை
உட்புகுத்துதல்.
"15-A. தீர்ப்பளிக்கும் அலுவலர்.-"15-A. தீர்ப்பளிக்கும் அலுவலர்.- (1) இந்தச் சட்டத்தின்கீழ் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, அதிகாரஎல்லைக்கு உட்பட்ட முதுநிலை மின் ஆய்வாளரானவர், தீர்ப்பளிக்கும் அலுவலராக இருத்தல் வேண்டும். அவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் விசாரணையை மேற்கொண்டு தண்டத்தொகையை விதித்தல் வேண்டும்.
(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், சாட்சியம் அளிக்க அல்லது வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாக அல்லது அதற்கு தொடர்புடையதாக இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்குமாறு தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் மீறியுள்ளார் என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:
வரம்புரையாக, தொடர்புடைய நபருக்கு விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் அத்தகைய தண்டத்தொகை எதுவும் விதிக்கப்படுதலாகாது.
15-B. மேல்முறையீடு.-15-B. மேல்முறையீடு.- (1) 15-A பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், தலைமை மின் ஆய்வாளரிடம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
வரம்புரையாக, தலைமை மின் ஆய்வாளர், மேற்சொன்ன அறுபது நாள் காலஅளவு கழிந்த பின்பு, அந்தக் காலஅளவிற்குள் மேல்முறையீடு செய்யப்படாததற்குப் போதிய காரணம் இருந்திருக்கிறது என அவர் மனநிறைவடைந்தால், மேல்முறையீட்டை ஏற்கலாம்.
(2) தலைமை மின் ஆய்வாளர், மேல்முறையீட்டின் தரப்பினருக்குக் விளக்கமளிப்பதற்கான வாய்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.
(3) தலைமை மின் ஆய்வாளர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட
நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் அதனை முடித்து வைத்தல் வேண்டும்.
15-C. வசூலித்தல்.-15-C. வசூலித்தல்.- 15-A பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்தவேண்டிய தொகையானது, நிலவருவாயின் நிலுவைத் தொகை வசூலிப்பது போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.
15-D. மீறுகைகளைச் சமரசமாக தீர்த்தல்.- (1) இந்தச் சட்டத்தின்கீழ் 15-D. மீறுகைகளைச் சமரசமாக தீர்த்தல்.- அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதியின்கீழ் மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆய்வாளரால் தீர்மானிக்கப்படலாகும் அத்தகைய தொகையைச் செலுத்துவதன் பேரில், ஆய்வாளரால் சமரசம் செய்யப்படலாம்:
34வரம்புரையாக, அவ்வாறு சமரசமாக தீர்க்கப்பட்ட மீறுகைக்கான அத்தகைய தண்டத்தொகையானது, எந்நேர்விலும், இந்தச் சட்டத்தின்கீழ் மீறுகைக்காக விதிக்கப்படலாகும் அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதல் கூடாது:
மேலும் வரம்புரையாக, இந்தப் பிரிவின் வகைமுறைகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட சமரசம் எதுவும், பிற எந்தச் சட்டத்தின் கீழும் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அதனைப் பாதிக்காது.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ், மீறுகை எதுவும் சமரசமாக தீர்க்கப்பட்டபோது, அவ்வாறு சமரசமாக தீர்க்கப்பட்ட மீறுகையைப் பொறுத்து, இந்தச் சட்டத்தின்கீழ் பிற நடவடிக்கை எதுவும் தொடரவோ அல்லது தொடர்ந்து நடத்தப்படவோ கூடாது:
வரம்புரையாக, இந்தப் பிரிவின்கீழ் சமரசமாக தீர்க்கப்படுவது எவ்வாறிருப்பினும், அத்தகைய மீறுகையானது, பிந்தைய மீறுகை செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தீர்மானிக்கும் நோக்கத்திற்காக அதே மீறுகையின் முந்தைய செயலாகவே கருதப்படுதல் வேண்டும்.".
16 ஆம் பிரிவிற்கான 13. முதன்மைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"16. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகை.-
16. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகை.- (1) இச்சட்டத்தின் வகைமுறைகளில் மீறுகை எதுவும் நிறுமத்தால் செய்யப்பட்டிருப்பின், அம்மீறுகையின்போது, அந்நிறுமத்தின் அலுவல் நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின் பொறுப்பிலிருந்த மற்றும் பொறுப்பைக் கொண்டிருந்த நபர் எவரும், மற்றும் அந்நிறுமமும் அம்மீறுகையைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைத்தொகை விதிக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபர் எவரும், அம்மீறுகை தமக்குத் தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய மீறுகையை தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ததாக மெய்ப்பித்தால், அத்தகைய நபருக்கு, இந்தச் சட்டத்தில் வகைசெய்யப்பட்ட தண்டத்தொகை எதுவும் விதிக்கப்படுதல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின் கீழ் மீறுகை எதனையும் நிறுமமொன்று செய்திருக்கிறவிடத்து, அந்த மீறுகையானது, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் அனுமதியுடன் அல்லது உடந்தையுடன் அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் அந்த மீறுகையைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தண்டத்தொகை விதிக்கப்படுதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-
(a) "நிறுமம்" என்பது, எந்தவொரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகம் அல்லது பிற தனி நபர்களின் கழகத்தையும் உள்ளடக்கும்; மற்றும்
(b) "இயக்குநர்" என்பவர், ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில்,
நிறுவகத்தில் ஒரு பங்குதாரர் ஆவார்.
3517 ஆம் பிரிவை 14. முதன்மைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்
விட்டுவிடுதல்.
வேண்டும்.
18 ஆம் பிரிவிற்கான 15. முதன்மைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
மாற்றீடு.
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"18. அறிவிப்புகள், ஆணைகள் அல்லது ஆவணங்களைச் சார்வு "18. அறிவிப்புகள், ஆணைகள் அல்லது ஆவணங்களைச் சார்வு செய்தல்.செய்தல்.- இந்தச் சட்டத்தால் அல்லது அதன்கீழ் சார்வு செய்யப்படுவதற்குத் தேவைப்படும் அல்லது அதிகாரமளிக்கப்படும் அறிவிப்பு, ஆணை அல்லது பிற ஆவணம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் சார்வு செய்யப்படுதல் வேண்டும்.".
22 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
16. முதன்மைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(2) குறிப்பாகவும், மேற்சொன்ன அதிகாரத்தின் பொதுப்பாங்கிற்குக்
குந்தகமின்றியும், அத்தகைய விதிகளானது,-
(a) மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளுக்கான விவர
குறிப்புகள்;
(b) மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைப்பதற்கான
வரைபடங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முறை;
(c) மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட, இயக்கப்பட, மாற்றியமைக்கப்பட, பேணப்பட அல்லது ஆய்வுசெய்யப்பட வேண்டியதற்கு உட்படும் வரையறைகள் மற்றும் முறை;
(d) 4, 5 மற்றும் 9 ஆம் பிரிவுகளின்கீழ் உரிமையாளர்,
தகுதிவாய்ந்த நபர் ஒருவருக்கு அதிகாரமளிக்கும் படிவம்;
(e) 4 ஆம் பிரிவின்கீழ் அனுமதிக்கான விண்ணப்பத்தின் படிவம்;
(f ) 4 ஆம் பிரிவின்கீழ் அனுமதி வழங்கப்பட வேண்டிய படிவம்;
(g) 4 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவின்கீழ் அனுமதி செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டிய படிவம்;
(h) 4 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவின்படி அனுமதி
செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய படிவம்;
(i) 4 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின்கீழ் நிறைவு
செய்யப்பட்டதற்கான அறிக்கையைப் பதிவேற்றப்பட வேண்டிய படிவம்;
(j) 5 ஆம் பிரிவின்கீழ் உரிமத்திற்கான விண்ணப்பத்தின் படிவம்;
(k) 5 ஆம் பிரிவின்கீழ் உரிமம் வழங்கப்பட வேண்டிய படிவம்;
( l) பல்வேறு வகையான மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளுக்காக, 4, 5 மற்றும் 10 ஆம் பிரிவுகளின்கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள், மற்றும் அத்தகைய கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டிய முறை;
36(m) 8 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமம் இரத்து
செய்யப்படுவதற்கான ஆணையின் படிவம்;
(n) 8 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமம் இடைநிறுத்தம்
செய்யப்படுவதற்கான ஆணையின் படிவம்;
(o) 8 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமம் இடைநிறுத்தம்
செய்யப்படுவதற்கான ஆணையின் படிவம்;
(p) 8 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் மறுஆய்வு
செய்யப்படுவதற்கான விண்ணப்பப் படிவம்;
(q) 8 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணையின் படிவம்;
(r) 9 ஆம் பிரிவின்கீழ் கூடுதலாக சேர்த்தல் அல்லது
மாற்றியமைப்பதற்கான விண்ணப்பத்தின் படிவம்;
(s) 9 ஆம் பிரிவின்கீழ், கூடுதலாக சேர்த்தல் அல்லது
மாற்றியமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டிய படிவம்;
(t) 10 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அதிகாரம் அளிக்க
வழங்கப்பட வேண்டிய படிவம்;
(u) 10 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அதிகாரம்
அளிக்கப்படுவதற்கான வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்;
(v) 10 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ் அதிகாரம்
அளிக்கப்படுவதற்கான விண்ணப்பத்தின் படிவம்;
(w) 10 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் அதிகாரம்
அளிக்கப்படுவதற்கான தகுதிகள் மற்றும் பிற தேவைப்பாடுகள்;
(x) 11 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிக்கை அனுப்பப்பட
வேண்டிய படிவம்;
(y) 11 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ் பழுதுநீக்குதல் அல்லது மாற்றங்களைச் செய்வதற்கு ஆய்வாளர் உரிமையாளரை அறிவுறுத்தும் ஆணையின் படிவம்;
(z) 11 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமையாளரால்
வழங்கப்பட வேண்டிய இணக்க அறிக்கையின் படிவம்;
(za) 11 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ் மேல்முறையீடு தாக்கல்
செய்யப்படும் படிவம்;
(zb) 13 ஆம் பிரிவின்கீழ் விபத்துகள் குறித்த அறிக்கையை
ஆய்வாளருக்குத் தெரிவிக்க வேண்டிய படிவம்;
(zc) 13 ஆம் பிரிவின்கீழ் அனுமதி வழங்கப்பட வேண்டிய படிவம்;
(zd) 14 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் தொழில்நுட்ப அல்லது
பிற நபர்களை நியமிப்பதற்கான தகுதிகள்;
(ze) 14 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் நியமிக்கப்பட்ட நபர்களின் அதிகாரங்களும் செயற்பணிகளும் மற்றும் வரையறைகளும் நிபந்தனைகளும்;
(zf) 15-A பிரிவின்கீழ் விசாரணை மற்றும் தீர்ப்பளிக்கப்பட நடத்தப்பட
வேண்டிய மற்றும் தண்டத்தொகை விதிக்கப்பட வேண்டிய முறை;
37(zg) 15-B பிரிவின்கீழ் மேல்முறையீடு செய்யப்பட வேண்டிய படிவம்;
(zh) 15-A பிரிவின்கீழ் விதிக்கப்பட்ட தண்டத்தொகையை வைப்பீடு
செய்யும் முறை;
(zi) 18 ஆம் பிரிவின்கீழ் அறிவிப்பு, ஆணை அல்லது பிற ஆவணத்தைச்
சார்வு செய்யும் முறை;
(zj) 24 ஆம் பிரிவின்கீழ் நிலுவையிலுள்ள விண்ணப்பத்தைத்
திரும்பப்பெற வேண்டிய முறை; மற்றும்
(zk) வகுத்துரைக்கப்பட வேண்டிய அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய
ஏதேனும் பிற பொருட்பாடு,
ஆகியவற்றிற்கு வகை செய்யலாம்.
24 எனும் புதிய 17. முதன்மைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்
பிரிவினைச் பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது :-
சேர்த்தல்.
"24. மாறுதல்கால வகைமுறை.-24. மாறுதல்கால வகைமுறை.- 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (திருத்தச்) சட்டத்தின்,
தொடக்க தேதியன்று நிலுவையில் உள்ள மின்தூக்கிகள் அல்லது நகரும்
படிக்கட்டுகள் அமைப்பதற்கான அனுமதி அல்லது மின்தூக்கிகள் அல்லது
நகரும் படிக்கட்டுகளை இயக்குவதற்கான உரிமம் அல்லது உரிமத்தைப்
புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் எதுவும் அல்லது மறுத்தலுக்கு அல்லது
மறுஆய்வுக்கு எதிரான மேல்முறையீடு எதுவும், 2025 ஆம் ஆண்டு
தமிழ்நாடு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (திருத்தச்)
சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு உடனடி முன்பு நடைமுறையில் உள்ளவாறு,
இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கியவாறு தீர்வு செய்யப்படுதல்
வேண்டும்:
வரம்புரையாக, உரிமையாளர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய
முறையில், நேர்விற்கேற்ப, அனுமதி அல்லது உரிமம் அல்லது உரிமத்தைப்
புதுப்பித்தல் அல்லது மேல்முறையீடு அல்லது மறுஆய்வு கோரி நிலுவையில்
உள்ள அத்தகைய விண்ணப்பத்தைத் திரும்பப் பெறலாம் மற்றும் 4 ஆம்
பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் வழியாக புதிய
விண்ணப்பத்தைச் செய்யலாம்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
38 39தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.36/2025.
1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தினை மேலும் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக்
குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
நெடுந்தலைப்பிற்கான
திருத்தம்.
2. 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை பகுதி நில அபகரிப்பாளர்கள் மற்றும் காணொலி திருடர்கள் ஆகியோரின் அபாயகரமான நடவடிக்கைகளைத் தடுத்தல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 14/1982) (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) நெடுந்தலைப்பில், "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
முன்னுரைக்கான 3. முதன்மைச் சட்டத்தின், முன்னுரையில்,-
திருத்தம்.
(1) முதலாம் பத்தியில், "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
40(2) இரண்டாம் பத்தியில், "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
1 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 1 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) இந்தச் சட்டம், 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு தடுப்புக் காவல்
சட்டம் என வழங்கப்பெறும்.".
2 ஆம் பிரிவிற்கான 5. முதன்மைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (a) கூறில்,—
(a) (i) மற்றும் (i-A) உட்கூறுகளானது, முறையே (i-A) மற்றும் (i-B) உட்கூறுகளாக மறுஎண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறாக மறுஎண்ணிடப்பட்ட (i-A) உட்கூறுக்கு முன்பு, பின்வரும் உட்கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(i) ஓர் உயிரி-மருத்துவக் கழிவுகளைக் குவிக்கும் குற்றவாளியின் நேர்வில், பொது ஒழுங்கு பேணுவதை எதிர்மாறாக பாதிக்கின்ற அல்லது பெரும்பாலும் எதிர்மாறாக பாதிக்கக்கூடிய தனது நடவடிக்கைகள் எதிலும், ஓர் உயிரி-மருத்துவக் கழிவுகளைக் குவிக்கும் குற்றவாளியாக ஈடுபட்டுள்ளபோது அல்லது ஈடுபட தயார்படுத்திக் கொண்டிருக்கிறபோது;";
(b) (ii-A) உட்கூறானது, (ii-B) உட்கூறாக மறுஎண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறாக மறுஎண்ணிடப்பட்ட (ii-B) உட்கூறுக்கு முன்பு, பின்வரும் உட்கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(ii-A) ஒரு பொருளாதாரக் குற்றவாளியின் நேர்வில், பொது ஒழுங்கு பேணுவதை எதிர்மாறாக பாதிக்கின்ற அல்லது பெரும்பாலும் எதிர்மாறாக பாதிக்கக்கூடிய தனது நடவடிக்கைகள் எதிலும், ஒரு பொருளாதாரக் குற்றவாளியாக ஈடுபட்டுள்ளபோது அல்லது ஈடுபட தயார்படுத்திக் கொண்டிருக்கிறபோது;";
(2) (a) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(aa) "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளி" என்பது, 2016 ஆம் ஆண்டு உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறி, எந்தவொரு உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் அல்லது குவிக்க முயலுகின்ற ஒரு நபரைக் குறிக்கிறது; இது 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், (மையச் சட்டம் 29/1986) இன் கீழ் தண்டனைக்குரியது;";
(3) (ee) கூறானது, (eee) கூறாக மறுஎழுத்திடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறுஎழுத்திடப்பட்ட (eee) கூறுக்கு முன்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
41"(ee) "பொருளாதாரக் குற்றவாளி" என்பவர், 1982 ஆம் ஆண்டு சீட்டு நிதியச் சட்டம் (மையச் சட்டம் 40/1982) அல்லது 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு (நிதி நிறுவனங்களில்) வைப்பீட்டாளர்களின் நலன்கள் பாதுகாப்புச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 44/1997) அல்லது 2019 ஆம் ஆண்டு ஒழுங்குபடுத்தப்பட்டிராத வைப்பீட்டுத் திட்டங்களைத் தடைவிதித்தல் சட்டம் (மையச் சட்டம் 21/2019) ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் எதனையும் செய்கிற அல்லது செய்ய முயல்கின்ற அல்லது செய்வதற்கு உடந்தையாக இருக்கிற நபரெவரும் ஆவார்;";
(4) (f) கூறில், "இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) அத்தியாயம் VIII இன்கீழ் உள்ள 153 ஆம் பிரிவு அல்லது 153-A பிரிவு அல்லது அத்தியாயம் XVI இன் கீழுள்ள 354, 376, 376-A, 376-B, 376-C, 376-D மற்றும் 377-ஆம் பிரிவுகள் தவிர்த்து அல்லது அத்தியாயம் XVII அல்லது அத்தியாயம் XXII இன்கீழ் தண்டிக்கப்படக்கூடிய" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) அத்தியாயம் V இன்கீழ் உள்ள 80, 87 முதல் 97 வரையிலான பிரிவுகளின்கீழ் அல்லது அத்தியாயம் VI இன் கீழுள்ள 113 ஆம் பிரிவைத் தவிர்த்து அல்லது அத்தியாயம் XI இன்கீழ் உள்ள 192 ஆம் பிரிவு அல்லது 196 ஆம் பிரிவு அல்லது அத்தியாயம் XVII இன்கீழ் அல்லது அத்தியாயம் XIX இன் கீழுள்ள 356 மற்றும் 357 ஆம் பிரிவுகளைத் தவிர்த்து தண்டிக்கப்படக்கூடிய" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(5) (g) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
''(g) "விபச்சாரத் தொழில் குற்றவாளி" என்பவர், 2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 98 மற்றும் 99 ஆம் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்படக்கூடிய அல்லது 1956 ஆம் ஆண்டு விபச்சாரத் (தடுப்புச்) சட்டத்தின்கீழ் (மையச் சட்டம் 104/1956) தண்டிக்கப்படக்கூடிய குற்றம் எதனையும் செய்கிற அல்லது செய்வதற்கு உடந்தையாய் இருக்கிற நபரொருவர் ஆவார்;";
(6) (ggg) கூறில், "இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் (மையச் சட்டம் XLV/1860) 354, 376, 376-A, 376-B, 376-C, 376-D அல்லது 377 ஆம் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) அத்தியாயம்-V இன்கீழ் உள்ள 64 முதல் 71 வரையிலான பிரிவுகள் அல்லது 74 முதல் 79 வரையிலான பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "கள்ளச்சாராயக்காரர்கள், அல்லது கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், அல்லது மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், அல்லது கள்ளச்சாராயக்காரர்கள், அல்லது கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், அல்லது மருந்து சரக்குக் குற்றவாளிகள், அல்லது பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
7. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், "1973 ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணைமுறை தொகுப்புச் சட்டம் (மையச் சட்டம் 2/1974)" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (மையச் சட்டம் 46/2023)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
427 ஆம் பிரிவிற்கான 8. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) நபரொருவர், தொடர்பாக தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கையில், அவர் தலைமறைவாகியுள்ளார் அல்லது அந்த ஆணையை நிறைவேற்ற முடியாதவாறு தன்னை மறைத்துக்கொண்டுள்ளார் என மாநில அரசு அல்லது 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர் நம்புவதற்குக் காரணம் இருப்பின், இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களுக்கு உட்பட்டு அத்தகைய நபர் மற்றும் அவரது சொத்துகளைப் பொறுத்தமட்டில், 2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (மையச் சட்டம் 46/2023) 84 முதல் 89 வரையிலான பிரிவுகளின் வகைமுறைகளானது பொருந்துதல் வேண்டும், மற்றும் அத்தகைய நபர் சாதாரணமாக வசிக்கின்ற இடம் எதுவாகயிருப்பினும், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் ஆணையானது, ஒரு தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையாகக் கருதப்படுதல் வேண்டும். தடுப்புக் காவல் ஆணையானது, நேர்விற்கேற்ப, மாநில அரசால், மாவட்ட குற்றவியல் நடுவர் படிநிலைக்குக் குறையாத ஓர் அலுவலரால் அல்லது காவல் துறை ஆணையரால், இதன் பொருட்டு மாநில அரசால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவரால் பிறப்பிக்கப்பட்டிருக்குமிடத்து, அல்லது தடுப்புக் காவல் ஆணையானது, 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட ஓர் அலுவலரால் பிறப்பிக்கப்பட்டிருப்பின்,
அத்தகைய அலுவலர், அவரது வழக்கமான அதிகாரவரம்பு எதுவாகயிருப்பினும், அத்தகைய நபருக்கு எதிராக பொது அறிவிப்பு ஒன்றை பிறப்பிப்பதற்கு மற்றும் மாநிலத்தின் பகுதி எதிலும் அமைந்துள்ள அவரது சொத்தினைக் கண்டறிதல், பற்றுகை செய்தல் விற்பனை செய்தலுக்கு மற்றும் கூறப்பட்ட பிரிவுகளின் கீழ் ஏதேனும் பிற நடவடிக்கை எடுப்பதற்கு, கூறப்பட்ட சன்ஹிதாவின் 84, 85, 86, 87 மற்றும் 88 ஆம் பிரிவுகளின் கீழ் தகுதிவாய்ந்த நீதிமன்றத்திற்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் செலுத்துவதற்கு அதிகாரம் கொண்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும். பற்றுகை செய்யப்பட்ட சொத்தினைத் திருப்பிக்கொடுப்பதற்கான மனுவினைத் தள்ளுபடி செய்யும் அத்தகைய அலுவலர் எவராலும் பிறப்பிக்கப்படும் ஆணை எதனின் மேல்முறையீடானது, கூறப்பட்ட சன்ஹிதாவின் 89 ஆம் பிரிவில் வகைசெய்யப்பட்டுள்ளவாறு, கூறப்பட்ட நபர் சாதாரணமாக வசிக்கின்ற இடத்தின் அதிகாரவரம்பு உடைய அமர்வு நீதிமன்றத்திடம் செய்யப்படுதல் வேண்டும்.";
(2) (2) ஆம் உட்பிரிவின் (c) கூறில், "கூறப்பட்ட தொகுப்புச் சட்டம்" எனும் சொற்றொடருக்காக, "கூறப்பட்ட சன்ஹிதா" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4317 ஆம் பிரிவிற்கான 9. முதன்மைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பில், "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) "கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடருக்காக, "உயிரி மருத்துவக் கழிவுகளை குவிக்கும் குற்றவாளிகள், கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்டக் குற்றவாளிகள், மருந்து சரக்குக் குற்றவாளிகள், பொருளாதாரக் குற்றவாளிகள்" எனும் சொற்றொடரானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
44 45தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.37/2025.
1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்புப் பணிகள் அமைப்புச் சட்டத்தை நீக்கறவு செய்து அதை மீண்டும் சட்டமியற்றுவதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் – I.
முன்னுரை.
குறுந்தலைப்பு, 1. (1) இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்
அளாவுகை மீட்புப் பணிகள் சட்டம் என்று வழங்கப்பெறும்.
மற்றும் (2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
தொடக்கம்.
(3) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடலாகும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருள் 2. இந்தச் சட்டத்தின் தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி, -
வரையறைகள்.
(a) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது 54 ஆம் பிரிவின்கீழ் அரசால் அறிவிக்கை செய்யப்படும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்;
(b) "கட்டடம்" என்பது, 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டட விதிகளின் 2 ஆம் விதியின் (15) ஆம் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான கட்டடம் என்று பொருள்படும் மற்றும் பெட்ரோல், டீசல் அல்லது வாயு இணைப்புகள், நிறுவல்கள் அல்லது குழாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்;
(c) "துணை விதி" என்பது இந்திய தேசிய கட்டட விதித் தொகுப்பு, 2016 ஆம் ஆண்டு மாதிரி கட்டிட துணை விதிகளின் கீழ், இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தீ பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகள் அல்லது விதிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள், எண்ணெய் தொழில்துறை பாதுகாப்பு இயக்குநரக வழிகாட்டுதல்கள், பெட்ரோலிய சட்டம் மற்றும் விதிகள், வெடிபொருள் சட்டம் மற்றும் தீ தடுப்பு தொடர்பான விதிகள், அல்லது அவ்வப்போது திருத்தப்படும் அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பின் ஏதேனும் தொடர்புடைய வழிகாட்டுதல்கள் மற்றும் 31 ஆம் பிரிவின்கீழ் வகுத்துரைக்கப்படலாகும் விதிகள் என்று பொருள்படும்;
(d) "இயக்குநர்" என்பவர், 6 ஆம் பிரிவின்கீழ் பணியமர்த்தப்பட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குநர் ஆவார்;
மையச் சட்டம்
53/2005.
(e) "பேரிடர்" என்பது, 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (d) கூறில், பொருள் வரையறை செய்யப்பட்டவாறான ஒரு பேரிடர் என்று பொருள்படும்;
(f) "கட்டமைப்பவர்" என்பது, மக்கள் பயன்பாட்டிற்காக பந்தல் அல்லது ஏதேனும் கட்டமைப்பினை ஒரு நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் நிறுவுகின்ற அல்லது செய்கின்ற நபரொருவர் அல்லது கூட்டுநிறுவனம் அல்லது பிறவாறாக உள்ள நபர்களின் கழகம் என்று பொருள்படும்;
46(g) "தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர்" என்பவர், 9 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் பணியமர்த்தப்பட்ட ஓர் அலுவலர் என்று பொருள்படும்;
(h) "தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அல்லது மீட்புப் பணிகள் நிலையம்" என்பது, 8 ஆம் பிரிவின்கீழ் அரசால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அல்லது மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் பிற கள அமைப்புகள் என பொதுவாக அல்லது குறிப்பாக அமைக்கப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட அல்லது மறுசீரமைக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள், சாதனங்கள் மற்றும் பணியாளர்களுக்காக கட்டப்பட்ட ஒரு கட்டடம் என்று பொருள்படும்;
(i) "தீ ஏற்படாமல் தடுத்தல் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள்" என்பது, தீ, புகை, நீர்ம ஆவி மற்றும் இவை அல்லது இவைப் போன்ற காரணங்களால் எழும் அச்சத்திலிருந்து தனிப்பட்ட அல்லது கூட்டாக உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அத்தகைய நடவடிக்கைகள் என்று பொருள்படும்; மேலும் தீயைக் கட்டுக்குள் வைத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் அணைத்தல் ஆகியவற்றிற்கான உபகரணங்களை வழங்குதல் மற்றும் தீ ஏற்படும் நேர்வுகளில் அல்லது ஏதேனும் பிற அவசர காலங்களில் அவ்வப்போது துறையால் வகுத்துரைக்கப்படலாகும் உயிர் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்;
(j) "தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை முகமை" என்பது, 32 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அரசால் பட்டியலிடப்பட்ட நபர் அல்லது நிறுமம் என்று பொருள்படும்;
(k) "தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலர்" என்பவர் 33 ஆம் பிரிவின்கீழ் அத்தகைய தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலராக பணியமர்த்தப்பட்ட நபர் ஆவார்;
(l) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;
(m) "உள்ளாட்சி அமைப்பு" என்பது, 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டட விதிகளின் 2 ஆம் விதியின் (66) ஆம் கூறில், பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளவாறான ஓர் உள்ளாட்சி அமைப்பு என்று பொருள்படும்;
(n) "தேசிய கட்டட விதித்தொகுப்பு" என்பது இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் கட்டடங்கள், இடங்கள், வளாகங்கள், பட்டறைகள், கிடங்குகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட வேண்டிய தீ தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கிய புத்தகம் அல்லது புத்தகங்கள் என்று பொருள்படும்;
(o) "குடியிருப்பு" என்பது, அதனைச் சார்ந்துள்ள துணைக் குடியிருப்புகள் உள்ளடங்கலாக, குடியிருப்பாக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஒரு கட்டடம் அல்லது கட்டடத்தின் ஒரு பகுதியின், முதன்மைக் குடியிருப்பு என்று பொருள்படும்;
(p) "குடியிருப்பவர்" என்பவர்,-
(i) நிலம் அல்லது கட்டடத்தைப் பொறுத்து, செலுத்தப்படுகிற அல்லது செலுத்த வேண்டிய அந்த நிலத்தின் அல்லது கட்டடத்தின் அல்லது அதன் பகுதி எதனின் வாடகையை அப்போதைக்கு உரிமையாளரிடம் செலுத்தி வருகின்ற அல்லது செலுத்த வேண்டிய பொறுப்பு கொண்டுள்ள எந்தவொரு நபரும்;
47(ii) தனது நிலம் அல்லது கட்டடத்தின் பயன்பாட்டைக்
கொண்டிருக்கும் அல்லது பிறவாறாக பயன்படுத்தும் ஓர் உரிமையாளர்;
(iii) நிலம் அல்லது கட்டடம் எதிலும் வாடகையின்றி
குடியிருப்பவர்;
(iv) நிலம் அல்லது கட்டடம் எதனின் பயன்பாட்டைக்
கொண்டுள்ள ஓர் உரிமதாரர்; மற்றும்
(v) நிலம் அல்லது கட்டடம் எதனின் பயன்பாட்டிற்கும் மற்றும் குடியிருப்பதற்கும், உரிமையாளரிடம் இழப்பீடு செலுத்த பொறுப்புக் கொண்டுள்ள எந்தவொரு நபரும் என்று பொருள்படும்.
(q) "உரிமையாளர்" என்பவர், நிலம் அல்லது கட்டடம் அல்லது அவற்றின் ஒரு பகுதியை ஒரு வாடகைதாரருக்கு வாடகைக்கு விடப்பட்டால், அப்போதைக்கு, நிலம் அல்லது கட்டடத்தின் வாடகையை அவர் சொந்த கணக்கிலோ அல்லது மற்றொருவர் சார்பாக அல்லது தன்னுடைய சார்பாக மற்றும் பிறரது கணக்கில், அல்லது ஒரு முகவர், அறங்காவலர், பாதுகாவலர் அல்லது சொத்து பேணுநர் அல்லது பிற நபர் எவரும் அல்லது அதன் வாடகையைப் பெறுவதற்கு அல்லது பெற உரிமையுடைய ஒரு நபர் என்பதையும் உள்ளடக்கும்;
(r) "பந்தல்" என்பது நிரந்தர அல்லது தொடர்ச்சியான குடியிருப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படாத தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல், உலர்ந்தபுல், ஏதேனும் புல் வகை, பாய், திரைச்சீலை, துணி அல்லது இவை போன்ற பிற மூலப்பொருட்களினால் ஆன கூரை அல்லது சுவர்களுடனான ஒரு தற்காலிக அமைப்பு என்று பொருள்படும்;
(s) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட
விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;
(t) "மீட்பு" என்பது, பேரிடர் உள்ளடங்கலான, எந்தவொரு தீவிர சூழல் அல்லது நிகழ்விலும் தேவைப்படும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் உடனடி நடவடிக்கை என்று பொருள்படும்;
(u) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;
அத்தியாயம் II.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் அமைப்பு, கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு.
தீயணைப்பு மற்றும்
மீட்புப் பணிகள்
துறையை 3. மாநிலத்தில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் என்று அழைக்கப்படும், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது அரசால் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுதல் வேண்டும்.
நிறுவுதல்.
தமிழ்நாடு
தீயணைப்பு
மற்றும் மீட்புப்
பணிகள்
துறையின்
கண்காணிப்பு 4. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் அரசிடம் உற்றமைதல் வேண்டும்; மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு இணங்க, இதன்பொருட்டு அரசால் அவ்வப்போது பணியமர்த்தப்படும் அத்தகைய அலுவலர்களின் வாயிலாக, அரசால் நிருவகிக்கப்படுதலும் வேண்டும்.
மற்றும்
கட்டுப்பாடு.
48தீயணைப்பு மற்றும்
மீட்புப் பணிகள்
துறையின்
அமைத்துருவாக்கம்
மற்றும் வகைப்பாடு.
5. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பல்வேறு நிலைகளில் அத்தகைய எண்ணிக்கையிலான பணியிடங்களையும் அத்தகைய அமைப்புகளையும் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் அரசானது பொது அல்லது சிறப்பு ஆணையின் மூலம் தீர்மானிக்கலாகும் அத்தகைய அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(2) (i) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில்
உள்ளடங்கியுள்ள பதவிகள்; மற்றும்
(ii) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பணியாளர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்பாடுகள் ஆகியவற்றை ;
அரசானது விதிகளில் பரிந்துரைக்கலாம்.
(3) அரசானது, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் வாயிலாக, மாநிலத்தில் தற்போதுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் அமைப்பை மறுஆய்வு செய்யலாம், மேலும் பொருத்தமெனக் கருதினால் அதனை மாற்றியமைக்கலாம்.
(4) இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது வேறுவிதமாக வழங்கப்பட்டாலன்றி, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு உடனடி முந்தைய தேதியில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் அந்தப் பதவியை வகிக்கும் ஒவ்வொரு நபரும், அந்தத் தேதிக்கு முன்பு அவருக்குப் பொருந்தக்கூடிய அதே வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருத்தல் வேண்டும்; மேலும், இந்தச் சட்டத்தின்கீழ் அல்லது அதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டவற்றுடன் கூடுதலாக முன்பு இருந்தாற்போன்று அத்தகைய அதிகாரங்களைச் செயல்படுத்துதலும் அத்தகைய கடமைகளைப் புரிதலும் வேண்டும்.
தீயணைப்பு
மற்றும் மீட்புப்
பணிகள் துறை
இயக்குநரை
6. (1) அரசானது, காவல் துறை தலைமை இயக்குநர் அல்லது காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் படிநிலையில் உள்ள ஓர் அலுவலரைத் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநராக நியமனம் செய்தல் வேண்டும்.
நியமனம்
செய்தல்.
(2) இயக்குநரானவர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்
துறையின் தலைவராக இருத்தல் வேண்டும்.
(3) அரசின் கட்டுப்பாடு, பணிப்புரைகள் மற்றும் மேற்பார்வைகளுக்குட்பட்டு இயக்குநரானவர், இந்தச் சட்டத்தினால் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளினால் மற்றும் வழங்கப்பட்டு மற்றும் விதிக்கப்பட்டுள்ளவாறு அத்தகைய அதிகாரங்களைச் செயல்படுத்தலும் அத்தகைய கடமைகளைப் புரிதலும் வேண்டும்.
இயக்குநரின்
அதிகாரங்கள்,
கடமைகள் மற்றும்
செயற்பணிகள்.
7. (1) இயக்குநரானவர், அரசின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, தீப்பாதுகாப்பு மற்றும் தீ ஏற்படாமல் தடுத்தல், தீயணைப்பு உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள், பயிற்சி, கடமைகளைப் பகிர்ந்தளித்தல், சட்டங்களைப் பயிலுதல், நடைமுறைகளின் சீர்மை, நடவடிக்கைகளின் ஆணைகள் மற்றும் முறைகள் குறித்த அனைத்து பொருட்பாடுகள் தொடர்பான மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் நிர்வாக விவரங்கள் அல்லது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் கடமைகளை நிறைவேற்றுதல் மற்றும் ஒழுங்குமுறை பேணுதல் தொடர்பான அனைத்து பொருட்பாடுகளையும் நெறிப்படுத்துதலும் ஒழுங்குமுறைப்படுத்துதலும் வேண்டும்.
49(2) 6 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு குந்தகமின்றி, இயக்குநர் பதவி இடத்தில், இயக்குநரானவர் துறையின் தலைவராக செயல்படுவார், மற்றும்-
(i) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் மேம்பாட்டிற்கு,
அரசுடன் ஒருங்கிணைப்பில் இருத்தல்;
(ii) மாநிலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மேம்பாடு தொடர்பான கொள்கைகளை வகுத்தல் மற்றும் அக்கொள்கைகளுக்கு அரசு ஒப்புதல் அளிப்பதன் பேரில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்தல்;
(iii) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளைத் திறம்பட செயல்படுத்துவதற்குத், தீயணைப்பு உபகரணங்கள், சொத்துகள் மற்றும் மனித ஆற்றலின் காலமுறையிலான மறுஆய்வு தொடர்பாக திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளைத் தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தல்;
(iv) மிகப்பெரும் தீ விபத்துகள், கட்டட இடிபாடுகள் மற்றும் பிற மீட்புப் பணிகளின் நேர்வுகளில் அத்தகைய திறன்மிகு நடவடிக்கைகள் மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தல் அல்லது எடுக்கச் செய்தல்;
(v) தீப்பற்றிய காரணத்தை விசாரணை செய்தல் அல்லது காரணத்தை ஆராய்தல் மற்றும் அரசு தடய அறிவியல் ஆய்வுக்கூடங்களின் உதவியை நாடுதல் மற்றும் தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்த அதிகார அமைப்புகளுக்கு அறிவுரை வழங்குதல்;
(vi) இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளின் கீழ் அவரது அதிகாரத்தைச் செலுத்துகையில் அல்லது அவரது கடமையைப் புரிகையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணியாளர் எவருக்கும் உதவிபுரிய தேவைப்படலாகும் அத்தகைய எண்ணிக்கையிலான அலுவலர்கள் மற்றும் பணியாளர் தொகுதி அல்லது பணியாளர்களை வழங்குதல்;
(vii) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பணியாளர்களின் ஒவ்வொரு நிலையிலும், ஒப்படைக்கப்பட்ட பணிகளுக்கு இணங்க திறன்மிகு மனிதவள மேம்பாடு கொள்கைகளைச் செயல்படுத்துதல் மற்றும் அந்த நோக்கத்திற்காக, அரசின் ஒப்புதலுடன் பயிற்சி மையங்களை அவர் நிறுவலாம்;
(viii) மாநிலத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தரத்தினைக் காலத்திற்கேற்றவாறு தரம் உயர்த்தும் ஒரு நோக்கத்தோடு, தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் அரசை சார்பாற்றம் செய்தல்; மற்றும்
(ix) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற அதிகாரங்களைச் செலுத்தல் மற்றும் அத்தகைய பிற கடமைகளையும், செயற்பணிகளையும் புரிதல் வேண்டும்.
50தீயணைப்பு மற்றும்
மீட்புப் பணி
நிலையங்கள்,
மீட்புப் பணி
நிலையம்
மற்றும் பிற கள
அமைப்புகளை
அமைத்தல்.
8. (1) மக்கள் தொகை, சில தொழிற்சாலைகள், பெரிய அளவிலான வணிக மற்றும் வணிகம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கட்டடங்களில் ஏற்படக்கூடிய தீ அபாயங்களைக் கருத்தில் கொண்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு வகைசெய்ய மற்றும் பராமரிக்கப்பட தேவையான, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான போதிய எண்ணிக்கையிலான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை வழங்கும் நோக்கத்திற்காக, மாநிலத்தில் தீ ஏற்படாமல் தடுத்தல் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யும் நோக்கத்திற்காக, அரசானது ஆணையின் வாயிலாக பொருத்தமெனக் கருதும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள், மீட்பு பணி நிலையங்கள் மற்றும் பிற கள அமைப்புகளை அமைக்கலாம், முறைப்படுத்தலாம் அல்லது மறுசீரமைக்கலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள், மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் அது தொடர்புடைய பிற கள அமைப்புகளின் எல்லைகளை வரையறை செய்தல் வேண்டும்.
தீயணைப்பு
மற்றும் மீட்புப்
பணி அலுவலர்
மற்றும் பிற
அலுவலர்களை
நியமனம்
செய்தல்.
9. (1) அரசு, ஒவ்வொரு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம், மீட்பு பணிகள் நிலையம் மற்றும் பிற கள அமைப்புகளுக்கு, அத்தகைய நிலையம் அல்லது கள அமைப்பின் பொறுப்பில் உள்ள, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும்; மற்றும் அவர், அத்தகைய நிலையம் அல்லது கள அமைப்புகளின் பகுதிகளுக்குள் தகவல்தொடர்பு அமைப்பு, நெடுநீர்க்குழாய் உள்ளிட்ட நீர் ஆதாரங்களின் பராமரிப்பிற்குப் பொறுப்புடையவராய் இருத்தல் வேண்டும் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பாளராக இருத்தல் வேண்டும்.
(2) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் திறன்மிகு செயல்பாட்டிற்குத் தேவைப்படலாகும் அத்தகைய பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர் தொகுதியினரைப் பணியமர்த்துதல் வேண்டும்; மற்றும் அவர்களின் தகுதிகள் மற்றும் பிற பணி நிபந்தனைகளானது வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
தீயணைப்பு
மற்றும் மீட்புப்
பணிகள் துறை
அலுவலரின்
அதிகாரங்கள்,
கடமைகள் மற்றும்
10. இயக்குநரின் கட்டுப்பாடு, பணிப்புரை மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றிற்கு உட்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர், இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது ஆணைகளின்படி வழங்கப்பட்ட மற்றும் விதிக்கப்பட்ட அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துதலும் அத்தகைய கடமைகள் மற்றும் செயற்பணிகளைப் புரிதலும் வேண்டும்.
செயற்பணிகள்
தீயணைப்பு மற்றும்
மீட்புப் பணிகள்
பணியாளருக்கு
சான்றிதழ்
வழங்குதல்.
11. (1) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குப் பணியமர்த்தப்படுகிற ஒவ்வொரு நபரும், இயக்குநர் அல்லது அரசால் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட ஓர் அலுவலரின் கையொப்பத்துடன், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் ஒரு சான்றிதழைப் பெறுதல் வேண்டும் மற்றும் அதன்பின்னர், அத்தகைய நபர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணியாளருக்குரிய அனைத்து அதிகாரங்கள், செயற்பணிகள் மற்றும் சிறப்புரிமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
51(2) (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட சான்றிதழானது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர், எந்தக் காரணத்திற்காகவும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணியாளராக இருப்பது அற்றுப் போய்விட்டால், அச்சான்றிதழ் பயன்விளைவைக் கொண்டிருப்பதிலிருந்து அற்றுப் போய்விடும், மற்றும் அத்தகைய பணியாளராக இருப்பது அற்றுப் போனவுடன், அவர் உடனடியாக சான்றிதழைப் பெற்றுக்கொள்ள அதிகாரமளிக்கப்பெற்ற அலுவலரிடம் ஒப்படைத்துவிடுதல் வேண்டும்.
(3) பணியமர்த்த சான்றிதழானது, அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணியாளராக இருப்பது அற்றுப்போய்விட்டால், அது இல்லாநிலையதும் செல்லாநிலையதும் ஆகிவிடுதல் வேண்டும் மற்றும் அவரது இடைநீக்க காலத்தின்போது செயல்படா நிலையில் இருத்தல் வேண்டும்.
(4) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணியாளரானவர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சார்பு பணிகளுக்கான சிறப்பு விதிகளால் முறைப்படுத்தப்படுதல் வேண்டும். எந்தவொரு பொருட்பாட்டிலும் எந்தவொரு சிறப்பு விதிகளும் வகுத்துரைக்கப்படாதவிடத்து, அரசு அலுவலர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் அனைத்துப் பிற பொருட்பாடுகள் பொறுத்து அவர்களுக்குப் பொருந்துகிறவாறான சட்டங்களும் விதிகளும் பொருந்துதல் வேண்டும்.
பணியிடை
நீக்கத்தின்
விளைவு.
12. (1) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் எந்தவொரு பணியாளரிடமும் உற்றமைந்துள்ள அதிகாரங்கள், செயற்பணிகள் மற்றும் சிறப்புரிமைகளானது பணியிடை நீக்கத்தின் காலஅளவின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
(2) அத்தகைய நபரானவர், அவர் பணியிடை நீக்கத்தில் இல்லாதிருக்கையில், எந்த அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்திருப்பாரோ அதே அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு இணங்கி தொடர்ந்து பணியில் இருத்தல் வேண்டும்.
துணை தீயணைப்பு
மற்றும் மீட்புப்
பணிகள்.
13. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை மேம்படுத்துவது தேவையென அரசுக்கு தோன்றுகிறபோதெல்லாம்,வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில், அவர்கள் அத்தகைய பகுதிக்குத் தன்னார்வலர்களின் பெயரைப் பதிவு செய்தல் மூலம் துணைப்பணிகளை வழங்கலாம்.
அத்தியாயம் III.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் ஏற்புத்தன்மை.
அழைப்புகளின்
ஏற்புத்தன்மை.
14. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைப் பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு, பிற அவசர காலங்கள் எதிலும் தொடர்புடைய அனைத்து அழைப்புகளையும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
பணியாளர்கள்
மற்றும்
உபகரணங்களின்
அளவுகோல்.
15. எந்தவொரு தீயணைப்பு நடவடிக்கையின் போதும் அல்லது பிற எந்த மீட்புப் பணி அழைப்பின் போதும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், வளங்கள், உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் ஈடுபடுத்துதலை இயக்குநர் உறுதி செய்தல் வேண்டும்.
52இயக்க மேலாண்மை. 16. (1) இயக்குநர், திட்டமிடல், ஒருங்கிணைத்தலின் விபரங்களை வழங்குதலும், பணியாளர்களை ஈடுபடுத்துதலும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், களத்தின் வழக்கமான கண்காணிப்பை உறுதி செய்தலும் வேண்டும்.
(2) இயக்குநர், தொடர்புடைய மாவட்ட பேரிடர் மேலாண்மைத் திட்டங்களுக்கு இணங்கி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள், மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் பிற கள அமைப்புகளின் தீயணைப்பு மற்றும் மீட்பு மேலாண்மைத் திட்டங்கள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
தீ விபத்து
அல்லது மீட்பு
நடவடிக்கையின்
போது தமிழ்நாடு
17. எந்தவொரு பகுதியிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் போது, தீயணைப்பு அல்லது மீட்பு நடவடிக்கைகளின் பொறுப்பு கொண்டுள்ள, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர் எவரும் அவ்விடத்திலேயே -
தீயணைப்பு
மற்றும் மீட்புப்
பணிகள் துறை
பணியாளருக்குள்ள
அதிகாரங்கள்.
(i) தீயை அணைக்கும் அல்லது உயிர் அல்லது உடைமையைக் காக்கும் நடவடிக்கையில், குறுக்கிடுகின்ற அல்லது மட்டுப்படுத்துகின்ற எந்தவொரு நபரையும், தனது வருகையின் மூலம் நீக்கலாம் அல்லது நீக்கும்படி செய்யலாம் அல்லது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் ஏதேனும் பிற பணியாளரிடம் நீக்கும்படி ஆணையிடலாம்;
(ii) மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீ ஏற்பட்ட இடத்தில் அல்லது அதன் அருகில் உள்ள எந்தவொரு தெரு அல்லது பாதையையும் மூடிவிடலாம் அல்லது மூடிவிடும்படி செய்யலாம்;
(iii) தீயை அணைக்கும் மற்றும் மீட்புப் பணியை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக, நெளிவுக் குழாய் அல்லது பிற சாதனங்களுக்கு வழி ஏற்படுத்த, எந்தவொரு வளாகத்தையும் உடைக்கலாம் அல்லது நுழையலாம் அல்லது இடித்துத் தள்ளலாம் அல்லது தீயை அணைக்கும் நோக்கத்திற்காக, முடிந்தளவு குறைவான சேதம் ஏற்படுத்தி எந்தவொரு வளாகத்தையும் உடைக்கும்படி அல்லது நுழையும்படி அல்லது இடித்துத் தள்ளும்படி செய்யலாம்;
வரம்புரையாக, நேர்விற்கேற்ப, அத்தகைய வளாகங்களின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவருக்கு, அவ்வாறு ஏற்பட்ட சேதத்தின் அளவிற்கு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் உரிய இழப்பீடு வழங்கப்படுதல் வேண்டும்.
(iv) தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் நீர் வழங்குவதற்காக, நீர் ஆதாரத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும், அத்தகைய தீப் பரவலைத் தடுக்கவும் அல்லது மட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக, பொது அல்லது தனியாரைச் சேர்ந்த ஏதேனும் நீரோடை, நீர்த்தேக்கத் தொட்டி, கிணறு அல்லது தொட்டி அல்லது கிடைக்கக்கூடிய நீர் ஆதாரம் எதனையும் பயன்படுத்துவதற்கு மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு, அந்தப் பகுதியில் நீர் வழங்கலுக்கு பொறுப்புடைய அதிகாரியை வேண்டுறுத்தலாம்;
(v) தீயணைப்பு அல்லது மீட்புப் பணிகளை அநேகமாக இடையூறு செய்யும், நபர்களின் கூட்டத்தைக் கலைப்பதற்கு, அவர் ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பு அலுவலராக இருந்தாற்போன்று, அதே அதிகாரங்களைச் செலுத்தலாம் மற்றும் அந்தக் கூட்டமானது சட்டத்திற்குப் புறம்பான ஒரு கூட்டமாக இருந்தால், அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துவது பொறுத்து, அத்தகைய அலுவலருக்கு கிடைக்கக்கூடிய அதே சட்டவிலக்களிப்புகள் மற்றும் பாதுகாப்பிற்கு உரிமையுடையவராய் இருத்தல் வேண்டும்;
53(vi) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களுக்கு வேண்டுமென்றே இடையூறு செய்கின்ற மற்றும் தடுக்கின்ற எந்தவொரு நபரையும், கைது செய்யலாம் மற்றும் ஒரு காவல் அலுவலரிடம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில், தவிர்க்கக்கூடிய எவ்வித தாமதமுமின்றி, கைது செய்த நேரம், தேதி மற்றும் காரணத்தைக் குறிப்பிட்டு ஒரு சிறு குறிப்புடன் சேர்த்து அவரை ஒப்படைக்கலாம்;
(vii) தீயணைப்பு நோக்கங்களுக்காக பணியாளர்கள் அல்லது உபகரணங்கள் அல்லது இரண்டையும் பணியமர்த்தும் மற்றும் பராமரிக்கும் எந்தவொரு நபருடனும், எந்தவொரு பகுதியிலும் ஏற்படும் தீயைக் அணைக்கும் நோக்கத்திற்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகளின் பேரில், அத்தகைய பணியாளர் அல்லது உபகரணத்தைப் பாதுகாக்க, உடன்படிக்கை செய்து கொள்ளலாம்; மற்றும்
(viii) தீயை அணைப்பதற்கு அல்லது உயிர் அல்லது உடைமையைப் பாதுகாப்பதற்கு அல்லது இரண்டிற்கும் தேவையானதென அவருக்குத் தோன்றலாகும் அத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
அத்தியாயம் IV.
நீர் வழங்கல்.
தீயணைப்பின்
போது நீர்
வழங்கலுக்கு
ஏற்பாடு செய்யும்
அதிகாரம்.
18. தீயணைப்பு செயல்பாட்டின் போது, தேவையென அவர் கருதும் மற்றும் தேவைப்படலாகும் அத்தகைய நிகழ்வுகளிலும், அந்தப் பகுதியில் உள்ள எந்தவொரு நீர் ஆதாரத்தில் இருந்தும், தீயணைப்பு நடவடிக்கைகளின் இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் நீர் எடுத்தல் சட்டப்படியானதாக இருத்தல் வேண்டும்; மற்றும் அத்தகைய நீர் ஆதாரத்தின் மீது கட்டுப்பாடு கொண்டுள்ள அதிகாரஅமைப்பு அல்லது உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், அந்த நோக்கத்திற்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் நீர் வழங்குதல் வேண்டும்.
நீர் வழங்கலுக்கு
ஏற்பாடு
செய்வதற்கான
கடமை.
19. இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், தீப்பிடித்த நேர்வில், பயன்படுத்துவதற்குப் போதுமான அளவு நீர் இருப்பதை உறுதி செய்வதற்கு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அனைத்து உரிய நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும்.
நீர் வழங்கலுக்கான
உடன்படிக்கை
மேற்கொள்ளும்
அதிகாரம்.
20. இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மூன்றாம் நபருக்குப் பணம் செலுத்துவதற்கான நடைமுறை மற்றும் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி நீர் வழங்கலின் தேவை மற்றும் நீரின் அவசர தேவையை எதிர்கொள்ளும் பொருட்டு, உள்ளாட்சி அமைப்பு, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியம் அல்லது தமிழ்நாடு நீர்வளத் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட எந்தவொரு முகவாண்மையுடனும், ஓர் உடன்படிக்கையை மேற்கொள்ளலாம்.
நீர் வழங்கலின்
தடைகளுக்கு
இழப்பீடு இல்லை.
21. எந்தவொரு பகுதியிலும், நீர் வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ள அதிகார அமைப்பு எதுவும், 17 ஆம் பிரிவின் (iv) கூறில் குறித்துரைக்கப்பட்ட தேவைப்பாட்டிற்கு இணங்கலாக மட்டுமே ஏற்பட்ட ஏதேனும் நீர் வழங்கல் தடையின் காரணத்தினால் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டிற்கான கோருரிமை எதற்கும் பொறுப்பு கொண்டிருத்தலாகாது.
நீரைப்
பயன்படுத்துதல்.
22. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளால் தீயணைப்புப் காரணத்திற்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு, நீர் வழங்கலை பொறுப்பில் கொண்டுள்ள அதிகார அமைப்பு அல்லது உள்ளாட்சி அமைப்பு எதனாலும் கட்டணம் எதுவும் விதிக்கப்படுதலோ அல்லது வசூலிக்கப்படுதலோ கூடாது.
54அத்தியாயம் V
தீ ஏற்படாமல் தடுத்தல் மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பொது நடைமுறைகள்.
தடுப்பு
நடவடிக்கைகள்.
23. அரசு அறிவிக்கையின் வாயிலாக, பகுதி எதிலும் உள்ள வளாகம் எதனின் அல்லது வளாகத்தின் வகைகள் எதனின் உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பவர்கள் அல்லது பந்தல் அமைப்பாளர்கள், அவர்களது கருத்தில், அங்கு, தீ அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதினால், அத்தகைய அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர்களைக் கோரலாம்.
பந்தல்களில்
தீத்தடுப்பு மற்றும்
உயிர்ப் பாதுகாப்பு
நடவடிக்கைகள்
24. (1) இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ளவை எது எவ்வாறிருப்பினும், பந்தல்களை அமைப்பவர்கள், வகுத்துரைக்கப்படலாகும் தீத்தடுப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்குச் சுய ஒழுங்குமுறை உடையவர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.
சுய
ஒழுங்குமுறைக்கு
உடையதாக
இருத்தல்.
(2) பந்தல் அமைப்பவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும், அதில் வகுத்துரைக்கப்படலாகும் மற்றும் அனைத்து தீத்தடுப்பு மற்றும் தீப்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவரின் சொந்த கையெழுத்துடனும், ஓர் அறிவிப்பை பந்தலின் முக்கியமான இடத்தில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.
(3) இயக்குநர் அல்லது நிலைய அலுவலர் படிநிலைக்குக் குறையாத தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், (2) ஆம் உட்பிரிவின்படி அமைப்பாளரால் அவ்வாறு செய்யப்பட்ட அறிவிக்கையின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் பொருட்டும், பந்தலுக்குள் நுழைந்து ஆய்வு செய்வதும், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட நேரத்திற்குள் அத்தகைய குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளைச் செய்வதற்குச் சட்டப்படி அதிகாரமுடையவர் ஆவார். அவ்வாறு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆய்வு அலுவலரின் வழிமுறைகளுக்கு இணங்கவில்லை எனில், அது குறித்து வட்டார நிர்வாக நடுவருக்கு புகார் அளித்தல் வேண்டும் மற்றும் அவர், தனது தரப்பில் கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்கிய பின்னர் பந்தலை மூடி முத்திரையிடுதல் வேண்டும்.
(4) பந்தல் அமைப்பாளர் எவரும், பந்தலில் வகுத்துரைக்கப்பட்ட தீத்தடுப்பு மற்றும் தீப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கியதாக பொய்யாக அறிவிக்கிறாரெனில், அவர் இந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்கத்தக்க ஒரு குற்றம் இழைத்துள்ளதாக கருதப்படுதல் வேண்டும்.
தீ அபாயத்தை
ஏற்படுத்தக்கூடிய
அல்லது தீயை
அணைப்பதற்கு
ஏதேனும் தடையாக
இருக்கக்கூடிய
ஆக்கிரமிப்புகள்
அல்லது
பொருள்கள்
அல்லது
சரக்குகளை
அப்புறப்படுத்துதல்.
25. (1) 23 ஆம் பிரிவின்கீழ் ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்குமிடத்து, தீ அபாயம் அல்லது தீயை அணைப்பதற்கு ஏதேனும் தடையை ஏற்படுத்தக்கூடிய ஆக்கிரமிப்புகள் அல்லது சரக்குகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும்படி, இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் கட்டளையிடுவது சட்டப்பூர்வமாக இருத்தல் வேண்டும். நேர்விற்கேற்ப, உரிமையாளர், குடியிருப்பவர் அல்லது அமைப்பாளர் அவ்வாறு செய்யத் தவறுவாராயின், இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், நேர்விற்கேற்ப உரிமையாளர், குடியிருப்பவர் அல்லது அமைப்பாளருக்கு, எடுத்துரைப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, எந்த அதிகாரவரம்பில் வளாகம் அல்லது கட்டடம் அல்லது பந்தல் அமைந்துள்ள நிலப்பகுதி அமைந்துள்ளதோ அந்த வட்டார நிர்வாக நடுவரிடம் அறிக்கை அளிக்க கோரலாம்;
55வரம்புரையாக, இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், அத்தகைய ஆக்கிரமிப்புகள் அல்லது பொருள்கள் அல்லது சரக்குகள் தீ அபாயம் அல்லது தீயணைப்புப் பணிகளுக்கு தடையை ஏற்படுத்தும் உடனடிக் காரணம் எனக் கருதுமிடத்து, அவர் அத்தகைய வளாகம் அல்லது கட்டடத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் அல்லது அமைப்பாளர் ஆக்கிரமிப்பை அல்லது பொருள்கள் அல்லது சரக்குகளை உடனடியாக அகற்றுமாறு பணிக்கலாம். நேர்விற்கேற்ப, உரிமையாளர், குடியிருப்பவர் அல்லது அமைப்பாளர் அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், நேர்விற்கேற்ப, இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர், அப்பணியை நீக்கிவிட்டு, சம்பந்தப்பட்ட வட்டார நிர்வாக நடுவருக்கு அறிக்கை செய்யலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படியான ஓர் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பேரில், வட்டார நிர்வாக நடுவர், நேர்விற்கேற்ப, உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் அல்லது அமைப்பாளருக்குத், தீ அபாயம் அல்லது தீ அணைப்பிற்குத் தடை ஏற்படுத்தக்கூடியதாக உள்ள ஆக்கிரமிப்பு அல்லது பொருட்கள் அல்லது சரக்குகளை அப்புறப்படுத்துவதற்கு எதிராக காரணம் கேட்பதற்கு நியாயமான வாய்ப்பினை வழங்கிய பின்னர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அத்தகைய ஆக்கிரமிப்புகள் அல்லது பொருட்கள் அல்லது சரக்குகளைக் கைப்பற்றுவதற்கு, தடுத்து வைப்பதற்கு அல்லது அப்புறப்படுத்துவதற்கு ஓர் ஆணையைப் பிறப்பிக்கலாம்.
(3) (2) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுவதற்குப் பொறுப்புக் கொண்டுள்ள நபர், அத்தகைய ஆணையின்படி அவர் கைப்பற்றுகை செய்கின்ற பொருட்கள் மற்றும் சரக்குகளின் ஒரு விவரப்பட்டியலை உடனடியாக தயார் செய்தல் வேண்டும்; மற்றும் அதே நேரத்தில், கைப்பற்றுகை செய்யும்போது, அவற்றின் உடைமையைக் கொண்டிருக்கும் நபருக்கு, கூறப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் அவை கோருரிமை செய்யப்படவில்லை எனில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களும் சரக்குகளும் விற்பனை செய்யப்படும் என்று, இதன் பொருட்டு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் ஓர் எழுத்து வடிவிலான அறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.
(4) கைப்பற்றுகை செய்யப்பட்ட நேரத்தில் பொருட்களை அல்லது சரக்குகளை தனது உடைமையில் கொண்டிருந்த நபர், (3) ஆம் உட்பிரிவின்படி கொடுக்கப்பட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாக கைப்பற்றுகை செய்யப்பட்ட பொருட்களின் மீது உரிமைக்கோரல் செய்ய தவறியதன் பேரில், வட்டார நிர்வாக நடுவர் பொது ஏலத்தின் மூலம் அவற்றை விற்பனை செய்தல் வேண்டும்.
கட்டடங்களின்
வகைப்பாடு.
26. (1) இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, இம்மாநிலத்திலுள்ள ஒவ்வொரு கட்டடங்களும், வகுத்துரைக்கப்படலாகிறவாறு வகை A அல்லது வகை B அல்லது வகை C கட்டடங்களாக வகைப்படுத்தப்படுதல் வேண்டும்.
(2) நேர்விற்கேற்ப, கட்டடத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்போர், கட்டடத்தில் குடியிருப்பதற்கு முன்பு வகுத்துரைக்கப்படலாகும் நேரத்திற்குள், நேர்விற்கேற்ப, A வகை கட்டடங்களுக்குத் தீயணைப்பு உரிமம் அல்லது B வகை கட்டடங்களுக்குத் தீப்பாதுகாப்பு சான்றிதழ் அல்லது C வகை கட்டடங்களுக்கு சுய சான்றளிக்கப்பட்ட தீப்பாதுகாப்பு நெறிமுறை சான்றிதழ் ஆகியவற்றைப் பெறுதல் வேண்டும்; மற்றும் நேர்விற்கேற்ப தீயணைப்பு உரிமம் அல்லது தீப்பாதுகாப்பு சான்றிதழ் அல்லது சுய சான்றிடப்பட்ட தீப்பாதுகாப்பு நெறிமுறையைப் புதுப்பித்தல் வேண்டும்.
56தீயணைப்பு உரிமம்
வழங்குதல்.
27. (1) நேர்விற்கேற்ப, A பிரிவு கட்டடங்களின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் எவரும், தீயணைப்பு உரிமம் பெறுவதன் நோக்கத்திற்காக, அரசால், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கப்படலாகும் இணையவலை வாயிலின் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணுப் படிவத்தில், விண்ணப்பம் செய்தல் வேண்டும், மற்றும் நேர்விற்கேற்ப, தீயணைப்பு உரிமம் அல்லது தீப்பாதுகாப்பு சான்றிதழ் அல்லது சுயசான்றிளிக்கப்பட்ட தீப்பாதுகாப்பு நெறிமுறையைப் புதுப்பித்தல் வேண்டும்.
வரம்புரையாக, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று இருந்துவரும் எந்தவொரு கட்டடத்திற்கு இந்தச் சட்டத்தின் கீழ் தீயணைப்பு உரிமம் தேவைப்படுகிறதோ, அந்தக் கட்டடம் ஒவ்வொன்றையும் பொறுத்த வரையில், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து நூற்று எண்பது நாட்களுக்குள் அல்லது இருந்துவரும் தீயணைப்பு உரிமம் முடிவுறும் தேதிக்குள் இதில் எது பிந்தையதோ அத்தேதியில் தீயணைப்பு உரிமத்திற்கான விண்ணப்பம் செய்யப்படுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பமும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணம் மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.
(3) அத்தகைய விண்ணப்பம் பெறப்பட்டவுடன், அரசால், அறிவிக்கையின் மூலம் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், கட்டடத்தை ஆய்வு செய்து, விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து உரிமம் வழங்க வேண்டும் அல்லது அத்தகைய காலத்திற்குள் அத்தகைய மின்னணு படிவத்தில் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக அத்தகைய உரிமத்தை வழங்க மறுத்தல் வேண்டும்.
(4) (3) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாதவிடத்து, அறிவிக்கை வாயிலாக அரசால் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய உயர்நிலை அலுவலரிடம் மேலனுப்புதல் வேண்டும். அவர், கூறப்பட்ட விண்ணப்பத்தைப் பரிசீலித்து, பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் அத்தகைய உரிமத்தை வழங்குதல் அல்லது வழங்க மறுத்தல் வேண்டும்.
(5) விண்ணப்பமானது, (4) ஆம் உட்பிரிவில் குறிப்பிப்பட்ட காலத்திற்குள் முடிவு எதுவும் எடுக்கப்படாதவிடத்து, உரிமமானது வழங்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்; மற்றும் அது இணைய வழியில் தானாக உருவாக்கப்படுதல் வேண்டும்.
(6) இந்தப் பிரிவின்கீழ் வழங்கப்படும் உரிமமானது, அந்த உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் காலஅளவிற்குச் செல்லுபடியாகும். உரிமமானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வளாகத்தின் முக்கியமான ஓர் இடத்தில் காட்சிப்படுத்தப்படுதல் வேண்டும்.
(7) உரிமம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணங்களைச் செலுத்துவதன் பேரிலும், அத்தகைய முறையிலும், அத்தகைய காலஅளவிற்கும் புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.
57(8) நேர்விற்கேற்ப, உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலரால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் எதனையும் அல்லது உரிமத்தில் குறிப்பிடப்பட்ட வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் எதற்கும் இணங்கத் தவறினால், இதன் பொருட்டு அரசால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், கேட்பதற்கான வாய்ப்பொன்றை வழங்கிய பின்னர், உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் அல்லது இரத்து செய்யலாம்.
(9) உரிமம் இரத்து செய்யப்பட்ட, கட்டடத்தின் உரிமையாளர்
அல்லது குடியிருப்பவர், கட்டடத்தில் குடியிருத்தல் ஆகாது.
(10) (3) ஆம், (4) ஆம் அல்லது (8) ஆம் உட்பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணையொன்றினால் இடருற்ற நபரெவரும், இதன் பொருட்டு அரசால் அறிவிக்கை செய்யப்பட வேண்டிய மேல்முறையீட்டு அதிகாரமைப்பின் முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நேரத்திற்குள், அத்தகைய மின்னணு படிவிலும் முறையிலும் அத்தகைய ஆணைக்கெதிராக மேல்முறையீட்டினைத் தாக்கல் செய்யலாம்.
(11) மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது கூறப்பட்ட மேல்முறையீட்டினை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நேரத்திற்குள் முடித்து வைத்தல் வேண்டும்.
தீப்பாதுகாப்பு
தணிக்கை
முகமைகளால்
வழங்கப்படும்
தீப்பாதுகாப்புச் 28. (1) நேர்விற்கேற்ப, B வகை கட்டடத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் எவரும், தீப்பாதுகாப்புச் சான்றிதழ் பெறும் நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தீப்பாதுகாப்பு தணிக்கை முகமையிடம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் முறையிலும், விண்ணப்பம் செய்தல் வேண்டும்:
சான்றிதழ்.
வரம்புரையாக, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று இருந்துவரும் எந்தவொரு கட்டடத்திற்கு இந்தச் சட்டத்தின் கீழ் தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறதோ, அந்தக் கட்டடம் ஒவ்வொன்றையும் பொறுத்த வரையில், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து நூற்று எண்பது நாட்களுக்குள் விண்ணப்பம் செய்யப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
40/1985.
மேலும் வரம்புரையாக, அத்தகைய கட்டடம், 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்பு பணிகள் சட்டத்தின்படி செல்லுபடியாகும் தீயணைப்பு உரிமத்தை கொண்டிருப்பின், விண்ணப்பம், அத்தகைய தீயணைப்பு உரிமம் முடிவுறும் தேதிக்குள் அல்லது இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து நூற்று எண்பது நாட்களுக்குள், இவற்றில் எது பிந்தியதோ அதற்குள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பமும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணம் மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.
(3) அத்தகைய விண்ணப்பம் கிடைக்கப்பெற்றவுடன், தீப்பாதுகாப்பு தணிக்கை முகமையானது, கட்டடத்தில் தீப்பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புறநிலை மதிப்பீடு செய்தல் மற்றும் நிகழக்கூடிய இடர்ப்பாடு எவையேனும் இருப்பின், அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல் வேண்டும்; மற்றும் பரிந்துரைக்கு இணங்கிய பின்பு மட்டுமே, தீப்பாதுகாப்பு தணிக்கை முகமையானது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் தீயணைப்புப் பாதுகாப்புச் சான்றிதழை வழங்கலாம்.
(4) இந்தப் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சான்றிதழ், அது வழங்கப்பட்ட
தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
58(5) சான்றிதழ் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்தைச் செலுத்துவதன் பேரிலும், அத்தகைய முறையிலும், அத்தகைய காலஅளவிற்கும் புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.
(6) நேர்விற்கேற்ப, உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், 27 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள இணையவலை வாயிலில், அத்தகைய முகமையால் வழங்கப்பட்ட தீப்பாதுகாப்புச் சான்றிதழை, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வளாகத்தின் முக்கியமான இடத்தில் அச்சான்றிதழை காட்சிப்படுத்துதலும் வேண்டும்.
சுயசான்றிடப்பட்ட
தீப்பாதுகாப்பு
நெறிமுறை.
29. (1) நேர்விற்கேற்ப, C வகை கட்டடத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் எவரும், சுயசான்றிடப்பட்ட தீப்பாதுகாப்பு நெறிமுறையைப் பெறுவதன் நோக்கத்திற்காக 27 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள இணையவலை வாயிலில் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய ஆவணங்களுடன் சேர்த்து அத்தகைய முறையில், அத்தகைய மின்னணுப் படிவத்தில், விண்ணப்பித்தல் வேண்டும்:
வரம்புரையாக, இந்தச் சட்டத்தின்கீழ் சுய சான்றிடப்பட்ட தீ பாதுகாப்பு நெறிமுறை தேவைப்படும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியில் இருக்கும் அத்தகைய கட்டடம் எதனையும் பொறுத்தவரையில், அவை, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து நூற்று எண்பது நாட்களுக்குள் விண்ணப்பித்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ், பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, சுய சான்றிடப்பட்ட தீப்பாதுகாப்பு நெறிமுறையானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் அத்தகைய முறையிலும், தானே உருவாக்கப்படுதல் வேண்டும்.
(3) நேர்விற்கேற்ப, உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், வளாகத்தின் முக்கியமான இடத்தில் சுய சான்றிடப்பட்ட தீப்பாதுகாப்பு நெறிமுறையை காட்சிப்படுத்துதல் வேண்டும்.
(4) நேர்விற்கேற்ப, உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூறப்பட்ட நெறிமுறைக்காக விண்ணப்பித்தல் வேண்டும்.
தற்காலிக
தீயணைப்பு
உரிமம்.
30. (1) நேரடி நிகழ்ச்சிகள், கண்காட்சி, கேளிக்கைகள் அல்லது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் எதிலும், தீப்பற்றக்கூடிய அல்லது அபாயகரமான பொருட்களைப் பயன்படுத்தினாலும் பயன்படுத்தப்படாவிட்டாலும் தற்காலிக தீயணைப்பு உரிமம் இல்லாமல் நடத்தப்படுதல் ஆகாது.
(2) நிகழ்விடம் அல்லது களம் முழுவதின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் எவரும், தற்காலிக தீயணைப்பு உரிமத்தைப் பெறும் நோக்கத்திற்காக, 27 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் மூலம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில், அரசால், இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணம் மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.
59(4) அத்தகைய விண்ணப்பத்தைப் பெற்றதன் பேரில், இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், நிகழ்விடம் அல்லது களம் ஆகியவற்றை ஆய்வு செய்தும் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்தும் தற்காலிக தீயணைப்பு உரிமம் வழங்கப்பட வேண்டும் அல்லது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவிலும் முறையிலும் அத்தகைய காலத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக அத்தகைய தற்காலிக தீயணைப்பு உரிமத்தை வழங்க மறுத்தல் வேண்டும்.
(5) இந்தப் பிரிவின்கீழ் வழங்கப்படும் தற்காலிக தீயணைப்பு உரிமம், அந்த உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுதலுக்கு உட்பட்டு, உரிமத்தில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய காலத்திற்குச் செல்லுபடியாதல் வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் நிகழ்விடம் அல்லது களத்தின் முக்கியமான இடத்தில் தற்காலிக தீயணைப்பு உரிமத்தை காட்சிப்படுத்துதல் வேண்டும்.
(6) நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், தற்காலிக தீயணைப்பு உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறினால், அலுவலர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்குக் கேட்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கிய பிறகு, அந்த உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது இரத்து செய்யலாம்.
(7) (4) ஆம் உட்பிரிவு அல்லது (6) ஆம் உட்பிரிவின்கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், அத்தகைய ஆணைக்கு எதிராக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள், அத்தகைய மின்னணுப் படிவத்திலும் முறையிலும், இதன்பொருட்டு, அரசால் அறிவிக்கை செய்யப்பட வேண்டிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் முன்பு மேல்முறையீட்டைத் தாக்கல் செய்யலாம்.
(8) மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் கூறப்பட்ட மேல்முறையீட்டைத் தீர்வு செய்தல் வேண்டும்.
தீத்தடுப்பு மற்றும்
உயிர்ப் பாதுகாப்பு
நடவடிக்கைகளுக்கு
வகைசெய்வதற்கான
உரிமையாளர்
அல்லது
குடியிருப்பவரின்
பொறுப்பு.
31. (1) அவ்வப்போது திருத்தம் செய்யப்படும் இந்திய தேசிய கட்டட விதித் தொகுப்பின் வகைமுறைகளுக்கு அல்லது ஏதேனும் பிற சட்டம் அல்லது துணை விதி அல்லது இந்தச் சட்டத்தில் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தீ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு குந்தகமின்றி, இந்தச் சட்டத்தால் வகைப்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பொறுப்புடைய உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், அதில் தீத்தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வகை செய்தல் வேண்டும்.
(2) நேர்விற்கேற்ப, அத்தகைய உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், வகுத்துரைக்கப்படலாகும் தீத்தடுப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு வகைசெய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மற்றும் விளக்கக் குறிப்புகளில் தீத்தடுப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்பாட்டிலுள்ள நிலையில் பராமரித்தல் வேண்டும்.
(3) நேர்விற்கேற்ப, கட்டடத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் தீயைத் தடுக்க அல்லது அணைப்பதற்குத் தனது கட்டடத்தில் தீப்பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
60(4) எந்தவொரு நபரும், அத்தகைய கட்டடத்திலோ அல்லது அதன் பகுதியிலோ நிறுவப்பட்ட எந்தவொரு தீத்தடுப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு உபகரணங்களையும் சேதப்படுத்தவோ, மாற்றவோ, அகற்றவோ அல்லது சிதைக்கவோ அல்லது சேதத்தை ஏற்படுத்தவோ அல்லது வேறு எந்த நபரையும் அவ்வாறு செய்யத் தூண்டவோ கூடாது.
தீயணைப்புப்
பாதுகாப்பு
தணிக்கை
32. (1) இந்தச் சட்டத்தின்கீழ், அரசால் வழங்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டதன் சான்றிதழின்றி, நபர் எவருமோ அல்லது நிறுமம் எதுவுமோ தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை முகமையாக செயல்படுதலாகாது.
முகமையை
பட்டியலில்
சேர்த்தல்.
(2) அரசு, அறிவிக்கை வாயிலாக, தேவை ஏற்படும்போது தீப்பாதுகாப்பு தணிக்கை முகமையை பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரலாம்.
(3) (1) ஆம் உட்பிரிவின்கீழ் தீப்பாதுகாப்பு தணிக்கை முகைமையைப் பட்டியலில் சேர்ப்பதற்கான சான்றிதழை வழங்குவதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், 27 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவலை வாயில் வழியாக அத்தகைய மின்னணு படிவத்தில் செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணம் மற்றும் அத்தகைய ஆவணங்களுடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.
(4) அத்தகைய விண்ணப்பம் கிடைக்கப்பெற்றவுடன், அரசு, பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், பட்டியலில் சேர்ப்பதற்கான சான்றிதழை வழங்கலாம் அல்லது அத்தகைய சான்றிதழை வழங்க மறுக்கலாம்.
(5) நபரெவரும் அல்லது நிறுமம் எதுவும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய தகுதிகள் மற்றும் பிற தேவைப்பாடுகளை அவர்கள் கொண்டிருந்தாலன்றி, (4) ஆம் உட்பிரிவின்கீழ் சான்றிதழ் வழங்கப்படுதல் ஆகாது.
(6) (4) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான சான்றிதழ், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலஅளவிற்குச் செல்லுபடியாகுதல் வேண்டும்.
(7) பட்டியலில் சேர்க்கப்பட்டதன் சான்றிதழ் வழங்கப்பட்ட நபரெவரும் அல்லது நிறுமம் எதுவும் இந்தச் சட்டத்தின் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகள் எதனையும் மீறியிருப்பதாக அல்லது சான்றிதழின் நிபந்தனைகளுடன் இணங்கத் தவறியிருப்பதாக அல்லது தகுதியின்மை, ஒழுக்கக்கேடு அல்லது மோசடி அல்லது பிற காரணங்கள் எதனாலும் அவர், தகுதியற்றவராக உள்ளார் என நம்புவதற்கு, அரசு காரணம் கொண்டிருப்பின், அரசு, கேட்பதற்கு நியாயமான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, ஆணையின் மூலம் சான்றிதழை இடைநிறுத்தம் அல்லது இரத்து செய்யலாம்.
(8) பட்டியலில் சேர்க்கப்பட்ட ஏதேனும் ஒரு தீயணைப்பு பாதுகாப்பு தணிக்கை முகமை, அத்தகைய சான்றிதழை மோசடியாக வழங்கினால், அந்த முகமைமீது, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுதல் வேண்டும், மேலும் அந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, கொடுங்காயம் அல்லது உயிர் இழப்பு ஏற்பட்டால், தீ விபத்துக்கான காரணம் அத்தகைய மோசடி செயலாக இருந்தால், அந்த முகமைக்கு ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனையும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
மையச் சட்டம்
45/2023.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, 'கொடுங்காயம்' என்ற சொல், 2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் 116 ஆம் பிரிவின்கீழ் உள்ள அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
61(9) இந்தச் சட்டத்தின்கீழ் பட்டியலில் சேர்க்கப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை முகமை தவிர நபர் எவரும் அல்லது நிறுவனமும், வகுத்துரைக்கப்படலாகும் கண்காணித்தல் பணி அல்லது தீப்பாதுகாப்பு சான்றிதழை வழங்குதல் அல்லது எந்த இடத்திலும் அல்லது கட்டடத்திலும் அல்லது அதன் பகுதி எதிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தகைய பிற தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "நிறுமம்" என்பது, கூட்டு நிறுவனம் எதுவும் என்று பொருள்படும் மற்றும் பதிவு செய்யப்பட்டிருப்பினும் இல்லாவிடினும் நிறுமம் அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை உள்ளடக்கும்.
தீயணைப்புப்
பாதுகாப்பு
அலுவலரின்
பணியமர்த்தம்
மற்றும்
செயற்பணிகள்.
33. (1) அடிப்படையான தீ அபாய வகைகளின்கீழ் அபாயகரமான தொழிற்சாலை அல்லது தொழிற்கூடம், வணிக அல்லது பொதுக் கட்டடங்கள் அல்லது இதன் பொருட்டு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வளாகங்களில் ஆற்றல் வாய்ந்த தீத்தடுப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய, நேர்விற்கேற்ப ஒவ்வொரு உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் அல்லது அத்தகைய உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பவர்களின் சங்கம்,-
(a) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய தகுதிகளைக் கொண்டுள்ள தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலர் ஒருவரை நியமித்தல் வேண்டும்; மற்றும்
(b) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் இயக்குநருக்கு அத்தகைய நியமனம் குறித்த இணக்க அறிக்கையை அனுப்புதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ், அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலர் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்திலும் அத்தகைய முறையிலும் பெயர் பதிவுச் சான்றிதழ் ஒன்று இயக்குநரால் வழங்கப்படுதல் வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின்படி நியமனம் செய்யப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலரின் பணியிடமானது, பதவி விலகல் காரணமாகவோ அல்லது பிறவாறாகவோ, காலியாக உள்ள நேர்வில், நேர்விற்கேற்ப, உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் அல்லது அத்தகைய உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பவர்களின் சங்கமானது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலரை நியமனம் செய்தல் வேண்டும்.
(4) (1) ஆம் உட்பிரிவு அல்லது (3) ஆம் உட்பிரிவுக்கு இணங்கத்தவறும் நேர்வில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், அது குறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காகவும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இயக்குநரிடம் அறிக்கையை அனுப்பலாம்.
(5) தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலர், இதன் பொருட்டு அரசால் குறிப்பிடப்படும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாநிலப் பயிற்சி மையத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுதல் வேண்டும்.
வரம்புரையாக, நாக்பூர், தேசிய தீயணைப்புப் பணிகள் கல்லூரியில் அல்லது அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட அதற்கு இணையான பிற நிறுவனம் எதிலும், ஏற்கனவே அத்தகைய பயிற்சியினை மேற்கொண்டுள்ள ஒருவர், அத்தகைய பயிற்சி ஒன்றைப் பெறத் தேவைப்படுதல் ஆகாது.
(6) தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலரின் செயற்பணிகள்
வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
62ஆய்வு
செய்வதற்கான
அதிகாரம்.
34. (1) இயக்குநர் அல்லது உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் அதற்கு மேற்பட்ட படிநிலையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், இடம் அல்லது கட்டடம் அல்லது அதன் பகுதியில் குடியிருப்பவருக்கு அல்லது குடியிருப்பவர் எவரும் இல்லாதிருக்கும் போது, உரிமையாளருக்கு பன்னிரெண்டு மணிநேர அறிவிப்பு கொடுத்த பின்பு, தீத்தடுப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போதியதன்மை அல்லது மீறுகையை உறுதி செய்வதற்கு, அத்தகைய ஆய்வு தேவையானதெனத் தோன்றுமாயின், சூரிய உதயத்திலிருந்து சூரிய மறைவிற்குள் எந்நேரத்திலும் அத்தகைய இடம் அல்லது கட்டடம் அல்லது அதன் பகுதி எதனிலும் நுழைந்து ஆய்வு செய்யலாம்.
வரம்புரையாக, இயக்குநர் அல்லது அத்தகைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலருக்கு அத்தகைய இடம் அல்லது கட்டடம் அல்லது அதன் பகுதி எதிலும், வேலை நடைபெற்றுக் கொண்டிருக்குமாயின், அல்லது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு அவ்வாறு செய்வது உகந்தது மற்றும் தேவையானதெனத் தோன்றுமாயின், அவர், எந்நேரத்திலும் அத்தகைய இடம் அல்லது கட்டடம் அல்லது அதன் பகுதி எதிலும் நுழைந்து ஆய்வு செய்யலாம்:
(2) இயக்குநர் அல்லது அத்தகைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆய்வினை மேற்கொள்வதற்கு, நேர்விற்கேற்ப, அத்தகைய இடம் அல்லது கட்டடம் அல்லது அதன் பகுதி எதனின், உரிமையாளர் அல்லது குடியிருப்பவரால் இயன்றளவிலான அனைத்து உதவிகளும் செய்யப்படுதல் வேண்டும்.
(3) உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் அல்லது பிற நபர் எவரும், இந்தப் பிரிவின்படி ஆய்வுக்காக அதிகாரமளிக்கப்பெற்ற அல்லது உரிமை வழங்கப்பெற்ற ஒரு நபர், எந்தவொரு நிலம் அல்லது கட்டடத்தில் நுழைவதைத் தடுக்கவோ அல்லது தடையை ஏற்படுத்தவோ கூடாது; மற்றும் ஆய்விற்கான அத்தகைய நுழைவிற்குப் பின்னர், அவர்களை தவறாக நடத்துதல் அல்லது துன்புறுத்துதல் கூடாது.
(4) மனிதர்கள் வசிப்பிடமாக பயன்படுத்தப்படும் அத்தகைய இடம் அல்லது கட்டடம் அல்லது அதன் பகுதி எதனுள்ளும் (1) ஆம் உட்பிரிவின்கீழ் நுழையப்பட்டிருக்குமிடத்து, அதில் குடியிருப்பவர்களின் சமூக மற்றும் மத உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படுதல் வேண்டும்; பழக்கவழக்க முறைப்படி, பொது வெளியில் தோன்றாத ஏதேனும் பெண்ணின் உண்மையான குடியிருப்பில் உள்ள கட்டடம் அல்லது அத்தகைய கட்டடத்தின் பகுதி எதனிலும் அவ்வாறு நுழைவதற்கு முன்பு, அவர் அவ்விடத்திலிருந்து விலக உரிமை கொண்டுள்ளார் என்று அறிவிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அவர் விலகிச் செல்வதற்குரிய நியாயமான வாய்ப்பு ஒன்று வழங்கப்படுதல் வேண்டும்.
(5) இயக்குநர் அல்லது அத்தகைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், இந்தப் பிரிவின்கீழ், இடம் அல்லது கட்டடம் அல்லது அதன் பகுதியின் ஆய்வினை முடித்த பின்னர்,-
(i) தீத்தடுப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொறுத்த தேவைகளிலிருந்து விலகிச் செல்லுதல் அல்லது மீறல்கள்; அல்லது
(ii) கட்டடத்தின் உயரத்துடன் வகை செய்யப்பட்டுள்ள அல்லது அது தொடர்பாக வகை செய்யப்பட வேண்டிய அத்தகைய நடவடிக்கைகளின் போதாமை அல்லது இணங்காமை; அல்லது
(iii) அத்தகைய இடத்தில் அல்லது கட்டடத்தில் அல்லது
அதன் பகுதி எதிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளின் தன்மை,63 மீதான தனது கருத்தைப் பதிவு செய்து கொண்டு, நேர்விற்கேற்ப, அத்தகைய கட்டடம் அல்லது அதன் பகுதி எதனின், உரிமையாளர் அல்லது குடியிருப்பவருக்கு ஓர் அறிவிப்பை வழங்கி, அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படலாகும் அத்தகைய நேரத்திற்குள் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கட்டளையிடுதல் வேண்டும்.
(6) இந்தப் பிரிவின் முந்தைய வகையங்களின்படி, அத்தகைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலரால் ஆய்வு மேற்கொள்ளப்படுமிடத்து, அவர், இயக்குநர் அல்லது தொடர்புடைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் எவருக்கும், அத்தகைய ஆய்வு எதனையும் குறித்து ஓர் அறிக்கையை அளித்தல் வேண்டும்.
கட்டடங்கள்
அல்லது
வளாகத்தை மூடி
முத்திரையிடு
வதற்கான
அதிகாரம்.
35. (1) 34 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவின்கீழ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டிருக்குமிடத்து, அல்லது தாமாக முன்வந்து, கட்டடம் அல்லது வளாகம் எதனின் நிலையானது, உயிருக்கு அல்லது சொத்துகளுக்கு ஆபத்து என இயக்குநருக்குத் தோன்றுமிடத்து, இந்தச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குக் குந்தகமின்றி, ஆணையின் மூலம் அத்தகைய கட்டடம் அல்லது வளாகத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர், அத்தகைய கட்டடம் அல்லது வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றக் கோருதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் இயக்குநரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இணங்கவில்லையெனில், அத்தகைய நபர்களை அந்தக் கட்டடம் அல்லது வளாகத்திலிருந்து வெளியேற்ற, இயக்குநரானவர், அந்தப் பகுதியில் அதிகார வரம்புடைய காவல்துறை அலுவலர் எவருக்கும் கட்டளையிடலாம் மற்றும் அத்தகைய காவல்துறை அலுவலர் அத்தகைய கட்டளைகளுக்கு இணங்குதல் வேண்டும்.
(3) நேர்விற்கேற்ப, (1) ஆம் உட்பிரிவு அல்லது (2) ஆம் உட்பிரிவின்கீழ் நபர்களை வெளியேற்றிய பின்பு, இயக்குநர், தொடர்புடைய மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட நடுவருக்கு அறிக்கையொன்றினை அனுப்புதல் வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் மாவட்ட நடுவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், அந்தக் கட்டடம் அல்லது வளாகத்தை மூடி முத்திரையிடுதல் வேண்டும்.
(4) நபரெவரும், கூடுதல் மாவட்ட நடுவரின் ஆணையின்றி,
அத்தகைய முத்திரையை அகற்றக்கூடாது.
(5) கூடுதல் மாவட்ட நடுவரின் ஆணையின்றி, அத்தகைய முத்திரையை அகற்றிய நபரெவரும், மூன்று மாதம் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத்தண்டனை அல்லது இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
தீ விபத்து குறித்த
தகவல்.
36. தீ விபத்து தொடர்பாக தகவல் கொடுக்க சட்டப்படி கட்டுப்பட்டுள்ள எந்தவொரு நபரும், எவ்வித தாமதமுமின்றி அதுகுறித்து அருகில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அல்லது அரசால் அறிவிக்கை செய்யப்படும் அவசரகால ஏற்புத்தன்மை ஆதரவு அமைப்பிற்கு தகவல் தெரிவித்தல் வேண்டும்.
64அத்தியாயம் VI.
குற்றங்களும் தண்டத்தொகைகளும்.
குறித்தசில
வகையங்களின்
மீறுகைக்கான
தண்டத்தொகைகள்.
37. 25, 27 மற்றும் 28 ஆகிய பிரிவுகளின் வகையங்கள் எதனையும் மீறுகிற எந்தவொரு நபரும், இந்தச் சட்டத்தின்படியும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படியும் அவருக்கெதிராக எடுக்கப்பட்டுள்ள ஏதேனும் பிற நடவடிக்கைக்கு குந்தகமின்றி, மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத் தண்டனை அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இவை இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும், மற்றும் குற்றமானது தொடருமாயின் முதல் தண்டனைத்தீர்ப்பிற்குப் பின்னர் நாள் ஒவ்வொன்றுக்கும் மூவாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் கூடுதல் அபராதத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
கடமையை
மீறுவதற்கான
தண்டத்தொகை.
38. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின் கீழ் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை எது எவ்வாறிருப்பினும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் உறுப்பினர் எவரும்,-
(1) இந்தச் சட்டத்தின் வகைமுறை எதையும் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதனையும் கடமை மீறுகை அல்லது வேண்டுமென்றே மீறியிருப்பதாக கண்டறியப்பட்டால்; அல்லது
(2) கோழைத்தனமான குற்றவாளியாகக் கண்டறியப்பட்டால்;
அல்லது
(3) கடமையிலிருந்து விலகுவது அல்லது அனுமதியின்றி அல்லது குறைந்தது இரண்டு மாத முன்னறிவிப்பு கொடுக்காமல் தனது பதவியிலிருந்து விலகினால்; அல்லது
(4) விடுப்பின் பேரில் வாராமையில் இருந்து, அத்தகைய விடுப்பு முடிவுற்ற பின்பும், எவ்வித நியாயமான காரணமின்றி தன்னை பணியில் ஈடுபடுத்திக்கொள்ள தவறினால்; அல்லது
(5) 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின் வகைமுறைகளுக்கு முரணாக, வேறு எந்த வேலையையும் அல்லது பதவியையும் ஏற்றுக்கொண்டாலோ அல்லது ஏதேனும் தொழில் ஒன்றில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டாலோ,
மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத்தண்டனை அல்லது அத்தகைய உறுப்பினரின் மூன்று மாத ஊதியத்திற்கு மேற்படாத தொகை வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இவை இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
தீயணைப்புப்
பாதுகாப்பு
அலுவலர்களை
நியமிக்கத்
தவறும் நேர்வில்
தண்டத்தொகை.
39. (1) ஒரு கட்டடத்தின் அல்லது வளாகத்தின் உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பவர்கள் எவரும் அல்லது அத்தகைய உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பவர்களின் சங்கம் எதுவும், நேர்விற்கேற்ப, இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலரால் இதன்பொருட்டு 33 ஆம் பிரிவின்கீழ் கொடுக்கப்பட்ட அறிவிப்பை பெற்ற முப்பது நாட்களுக்குள், தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலர்களை நியமிக்கத் தவறினால், அவர்கள் ஒவ்வொருவரும் கூட்டாகவும் தனித்தனியாகவும் தவறிழைத்தவராகக் கருதப்படுவர்.
65(2) தீயணைப்புப் பாதுகாப்பு அலுவலரை நியமிக்க பொறுப்புகொண்டுள்ள நபர், தவறிழைத்ததாகக் கருதப்படுகிறபோது, இயக்குநரால் தீர்மானிக்கப்பட்டவாறு, வளாகத்தில் உள்ள பொதுவான பகுதிகளின் வீதம் உள்ளடங்கலாக, அவருக்குச் சொந்தமான அல்லது அவரின் குடியிருப்புப் பகுதியின் சதுரமீட்டர் ஒன்றுக்குப் பத்து ரூபாய்க்குக் குறையாத மற்றும் ஐம்பது ரூபாய்க்கு மேற்படாத தொகையை, ஒவ்வொரு மாதத் தவறுகைக்கும் அல்லது அதன் பகுதி ஒவ்வொன்றுக்கும் தண்டத்தொகையாக அவரிடமிருந்து வசூலிக்கலாம்.
(3) அவர், அத்தகைய தண்டத்தொகையைச் செலுத்தத் தவறினால், செலுத்த வேண்டிய தொகையானது, நில வருவாய் நிலுவைத் தொகை வசூலிப்பது போன்று அல்லது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற முறையில் வசூலிக்கப்படுதல் வேண்டும்.
இழப்பீடுச்
செலுத்துவதற்கு
உரிமையாளரின்
பொறுப்பு.
40. (1) நபரெவரின் சொத்தானது, அவர் தன்னுடைய சொந்த அல்லது அவருடைய முகவரின் கவனக்குறைவால் அல்லது வேண்டுமென்ற செய்கையின் விளைவாக தீப்பற்றி, அவர், பிற நபரின் சொத்திற்குச் சேதம் ஏற்படுத்துவாராயின், 17 ஆம் பிரிவின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பேரில், அவர், அந்த நபருக்கு இழப்பீடு செலுத்துவதற்கு பொறுப்பு உடையவராவார்.
(2) (1) ஆம் உட்பிரிவின் கீழ் அனைத்து கோருரிமைகளும், சேதம் எந்தத் தேதியில் விளைவிக்கப்பட்டதோ அந்தத் தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் அந்த மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட நடுவருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
(3) கூடுதல் மாவட்ட நடுவரானவர், தரப்பினருக்குக் விளக்கமளிப்பதற்கான வாய்ப்பொன்றை அளித்த பின்பு, செலுத்தக்கூடிய இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானித்து மற்றும் இழப்பீட்டுத் தொகையையும் அதற்குப் பொறுப்புடைய நபரையும் குறிப்பிட்டு ஆணை ஒன்றைப் பிறப்பித்தல் வேண்டும். பிறப்பிக்கப்பட்ட ஆணையானது இந்த உட்பிரிவின்கீழ் ஓர் உரிமையியல் நீதிமன்றத்தின் தீர்ப்பாணையின் செயல்திறனைக் கொண்டிருக்கும்.
தகவல் அளிக்க
தவறுதல்.
41. தகவல் அளிப்பதற்குச் சட்டத்தின்படி கட்டுப்பட்டிருந்து, நியாயமான காரணமின்றி, தீ விபத்து குறித்து தன்னிடம் உள்ள தகவல்களைத் தெரிவிக்கத் தவறுகிற எந்தவொரு நபரும், ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்குச் சாதாரண சிறைத் தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை
எடுக்கத்
தவறுதல்.
42. 23 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு தேவைப்பாடுகளுக்கும், நியாயமான காரணமின்றி இணங்கத் தவறுகிற எவரும், பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகை மற்றும் அத்தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பும் மீறுகை தொடருமாயின், அத்தகைய தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பு, நாள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் கூடுதல் அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
தீயணைப்பு
அல்லது மீட்பு
நடவடிக்கைகளை
வேண்டுமென்றே
இடையூறு
செய்வதற்கான 43. தீயணைப்பு அல்லது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர் எவரையும், வேண்டுமென்றே இடையூறு செய்யக்கூடிய அல்லது குறுக்கிடக்கூடிய நபர் எவரும், மூன்று மாதம் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இவை இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
தண்டத்தொகை.
66தவறான அறிக்கை. 44. ஒரு விவர அறிக்கை, செய்தி அல்லது பிறவாறாக அத்தகைய அறிக்கையைப் பெற அதிகாரமளிக்கப்பட்ட எந்தவொரு நபரிடமும், தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக, அறிந்தே தவறான அறிக்கை அளிக்கிற அல்லது அளிக்கச் செய்கிற எந்தவொரு நபரும், மூன்று மாதம் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத்தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இவை இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
மீறுகையின் தண்டத்
தொகைக்குரிய
பொது வகைமுறை.
45. தண்டனை எதற்கும் வகைசெய்யப்பட்டிராத, இந்தச் சட்டத்தின் பிற வகைமுறை எதனையும் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது அறிவிக்கை எதனையும் மீறுகின்ற நபர் எவரும், இந்தச் சட்டம் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின் கீழ் அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட பிற நடவடிக்கை எதற்கும் குந்தகமின்றி, பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகை விதிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பும் மீறுகை தொடருமாயின், அத்தகைய தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பு, நாள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் கூடுதல் அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
நிறுமங்களால்
செய்யப்படும்
குற்றங்கள்.
46. (1) இச்சட்டத்தின் கீழ் குற்றமொன்று நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, அக்குற்றம் இழைக்கப்பட்டபோது, அந்நிறுமத்தின் அலுவல் நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின் பொறுப்பிலிருந்த மற்றும் பொறுப்பைக்கொண்டிருந்த ஒவ்வொருவரும், மற்றும் அந்நிறுமமும், அக்குற்றத்தைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபர் எவரும், அக்குற்றம் தமக்குத் தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய குற்றத்தை தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ததாக மெய்ப்பித்தால், அத்தகைய நபருக்கு எந்தவிதமான தண்டனையும் அளிக்கப்படுதல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின்கீழ் குற்றம் எதுவும் நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்தக் குற்றமானது, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் அனுமதியுடன் அல்லது உடந்தையுடன் அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் அக்குற்றத்தைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்; மற்றும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுதல் வேண்டும்.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-
(a) "நிறுமம்" என்பது, ஒரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகம் அல்லது பிற தனி நபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்
(b) "இயக்குநர்" என்பவர், ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில்,
நிறுவகத்தில் ஒரு பங்குதாரர் ஆவார்.
குற்றங்களைச்
சமரசமாக
தீர்த்தல்.
47. (1) 35, 37, 41, 43 மற்றும் 44 ஆம் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றச்செயல் எதுவும், குற்றவழக்கைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ அத்தகைய அலுவலர்களால் மற்றும் அரசால் அறிவிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் இதன்பொருட்டு குறிப்பிடக்கூடிய அத்தகைய தொகையைச் செலுத்துவதன் மூலம் சமரசமாக தீர்க்கப்படலாம்:
67வரம்புரையாக, அரசாலோ அல்லது அதன் சார்பாகவோ அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் அதிகாரமளிக்கப்பெற்ற எந்தவொரு அலுவலர்களாலோ பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு, ஆணை அல்லது கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறுவதால் செய்யப்பட்ட குற்றம் எதுவும், இணங்கி நடக்க முடியுமாயின், அவ்வாறாக இணங்கி நடக்கும் வரை சமரசமாக தீர்க்கப்படுதல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் குற்றமொன்று சமரசமாக தீர்க்கப்படும்போது, குற்றவாளி, காவலில் இருந்தால், விடுவிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய குற்றத்தைப் பொறுத்து, அவருக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல் ஆகாது.
மீறுகைகளைச்
சமரசமாக
தீர்த்தல்.
48. (1) 42 மற்றும் 45 ஆம் பிரிவின்கீழ் அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதி எதனின் மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆனால் தண்டத்தொகை விதிக்கப்படுவதற்கு முன்பு, அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட அந்த அலுவலரால் குறிப்பிடப்படலாகும் அத்தகைய தொகையைச் செலுத்துவதன் பேரில், இதன் பொருட்டு, அரசால் அதிகாரமளிக்கப்படலாகும் அத்தகைய அலுவலரால் சமரசமாக தீர்க்கப்படலாம்:
வரம்புரையாக, அவ்வாறு சமரசமாக தீர்க்கப்பட்ட மீறுகைக்கான அத்தகைய தொகையானது, எந்நேர்விலும், இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படலாகும் அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதல் கூடாது.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ், மீறுகை எதுவும் சமரசமாக தீர்க்கப்பட்டபோது, அவ்வாறு சமரசமாக தீர்க்கப்பட்ட மீறுகையைப் பொறுத்து, இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எதுவும் தொடங்கப்படுதலோ அல்லது தொடர்ந்து நடத்தப்படுதலோ கூடாது.
தீர்ப்பளிக்கும்
அலுவலர்.
49. (1) அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின்கீழ் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய முறையில் விசாரணையை நடத்தவும் தண்டத்தொகையை விதிக்கவும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் படிநிலைக்குக் குறையாத அலுவலர் ஒருவரைத் தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமிக்கலாம்:
வரம்புரையாக, அரசானது, தேவைப்படலாகும் எண்ணிகையில்
தீர்ப்பளிக்கும் அலுவலர் பலரை நியமிக்கலாம்.
(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாகவோ அல்லது அதற்கு தொடர்புடையதாகவோ இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் தாக்கல் செய்ய அல்லது சாட்சியம் அளிக்க, வழக்கின் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், 48 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட வகைமுறைகள் அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகள் எதனையும் இணங்கத் தவறினார் என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:
வரம்புரையாக, தொடர்புடைய நபருக்கு விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் அத்தகைய தண்டத்தொகை எதுவும் விதிக்கப்படுதலாகாது.
நிலுவைகளை
வசூலித்தல்.
50. 49 ஆம் பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படாவிட்டால், நிலுவைத் தொகையானது நில வருவாயின் நிலுவைத் தொகை வசூலிப்பது போன்று அல்லது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற முறையில் வசூலிக்கப்படுதல் வேண்டும்.
68நல்லெண்ணத்தில்
எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப்
பாதுகாப்பு.
51. இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதனின் விளைவாக நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்ய கருதப்பட்ட எதனையும் பொறுத்து, எந்தவொரு நபருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்றவியல் வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
குற்றங்களை
விசாரணைக்கு
எடுத்துக்
கொள்ளுதல்.
52. இயக்குநர் அல்லது அவரால் இதன் பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் அல்லாமல், இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றவியல் எதனையும் நீதிமன்றம் எதுவும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல் ஆகாது.
நீதிமன்றத்தின்
53. நீதித்துறை நடுவர் நீதிமன்றம், இந்தச் சட்டத்தின்கீழ்
அதிகாரவரம்பு. தண்டனைக்குரிய எந்தவொரு குற்றத்தையும் விசாரித்தல் வேண்டும்.
அத்தியாயம் VII
மேல்முறையீடு.
மேல்முறையீடு. 54. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்பு அல்லது ஆணை அல்லது பணிப்புரை எதனாலும் இடருற்ற நபரெவரும், அந்த அறிவிப்பு அல்லது ஆணை அல்லது பணிப்புரை அவருக்குத் தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், இதன் பொருட்டு அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பிடம் அத்தகைய அறிவிப்பு அல்லது ஆணை அல்லது பணிப்புரைக்கு எதிராக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு வடிவத்தில் மேல்முறையீட்டினைத் தாக்கல் செய்யலாம் மற்றும் அரசானது அது பொருத்தமெனக் கருதலாகும் பல மேல்முறையீட்டு அதிகாரஅமைப்புகளை நியமிக்கலாம்.
(2) மேல்முறையீட்டாளர், உரிய காலத்தில் மேல்முறையீடு செய்வதிலிருந்து போதிய காரணங்களால் தடுக்கப்பட்டார் என அது மனநிறைவு கொள்கிறவிடத்து, கூறப்பட்ட காலஅளவிற்குப் பின்னரும், செய்யப்பட்ட ஒரு மேல்முறையீட்டினை ஏற்றுக்கொள்ளலாம்.
(3) மேல்முறையீட்டு அதிகாரமைப்பானது, மேல்முறையீட்டாளருக்கு விளக்கமளிப்பதற்கு நியாயமான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நேரத்திற்குள் முடிவு செய்தல் வேண்டும்.
(4) மேல்முறையீடானது நிலுவையிலுள்ளபோது, மேல்முறையீட்டு அதிகாரமைப்பானது அந்த அறிவிப்பு அல்லது ஆணை அல்லது பணிப்புரை எதுவும் மேல்முறையீடு முடிவு செய்யப்படும் வரையில் நடைமுறைக்கு வராது என ஆணையிடலாம்.
சீராய்வு. 55. (1) அரசு அல்லது இதன் பொருட்டு அறிவிக்கையின் மூலம் அரசால் அதிகாரமளிக்கப்பெற்ற அலுவலர் எவரும் அவர்களது அல்லது அவரின் சொந்த முடிவினாலோ அல்லது இணையவழி விண்ணப்பத்தின் பேரிலோ, இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அறிவிப்பு அல்லது பணிப்புரை எதனையும் பொறுத்து, அழைப்பாணை விடுத்து பதிவுகளை ஆய்வு செய்யலாம் மற்றும் அவர்கள் அல்லது அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணைகளைப் பிறப்பிக்கலாம்:
வரம்புரையாக, இந்தப் பிரிவின்கீழ் அதிகாரங்களைச் செயல்படுத்துவதற்காக, அரசிடம் அல்லது கூறப்பட்ட அதிகார அமைப்பிடம் செய்யப்படும் ஒவ்வொரு இணையவழி விண்ணப்பமும், அது தொடர்பான ஆணை விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் தாக்கல் செய்யப்படுதல் வேண்டும்.
69(2) நபரெவருக்கும், ஊறுவிளைவிக்கின்ற அத்தகைய ஆணை எதுவும், அவர் தனது விண்ணப்பத்தைச் செய்வதற்கான நியாயமான வாய்ப்பொன்றை அவருக்கு வழங்கப்பட்டாலன்றி பிறப்பிக்கப்படுதலாகாது.
(3) நேர்விற்கேற்ப, அரசோ அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரோ, (1) ஆம் உட்பிரிவின்கீழ், அவரின் அல்லது அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் வகையில், கூறப்பட்ட ஆணை அல்லது அறிவிப்பு அல்லது பணிப்புரையினை நிறுத்தி வைக்கலாம்.
அத்தியாயம் VIII
கட்டணம் மற்றும் பிற செலவினங்களை விதித்தல்.
மாநில
எல்லைகளுக்கு
அப்பால் தமிழ்நாடு
தீயணைப்பு
மற்றும் மீட்புப்
பணி துறையை
ஈடுபடுத்து
வதற்கான 56. (1) தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பணியாளர்களை, இம்மாநிலத்தின் எல்லைகளுக்கு அப்பால், அனுப்புமிடத்து, மாநில அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரஅமைப்பின் வேண்டுகோளின் பேரில், தீயை அணைப்பதன் பொருட்டு அனுப்பப்பட்டால், அத்தகைய வேண்டுகோள் விடுக்கும் அதிகாரஅமைப்பானது, இதன்பொருட்டு, அவ்வப்போது அரசால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்தைச் செலுத்த பொறுப்பு கொண்டிருத்தல் வேண்டும்.
கட்டணம் மற்றும்
நிலுவைத்
தொகையை
வசூலித்தல்.
(2) (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட கட்டணமானது, இயக்குநரால் ஒரு கோரிக்கை அறிவிப்பு சார்வு செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், நேர்விற்கேற்ப, அத்தகைய அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரஅமைப்பினால் செலுத்தப்படுதல் வேண்டும்.
(3) அத்தகைய அதிகார அமைப்பு, இந்தச் சட்டத்தின்கீழ் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தத்தவறுமிடத்து, நில வருவாயின் நிலுவைகள் போன்று அல்லது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வசூல் செய்யப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் IX
பல்வகை.
பிற தீயணைப்பு
மற்றும் மீட்பு
பணிகளுடன்
பரஸ்பர
தீயணைப்பு
ஏற்பாடுகள்.
57. தீயணைக்கும் நோக்கத்திற்காக, பணியாளர்கள் அல்லது உபகரணங்கள் அல்லது இரண்டையும் வழங்குவதற்காக இந்த மாநிலத்தின் எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அல்லது கூறப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளைப் பராமரிக்கும் அதிகாரமைப்பு எதனுடனும் பொது நலன் கருதி, பரஸ்பர அடிப்படையில், அத்தகைய உடன்படிக்கையின் மூலம் வழங்கப்படலாகும் அத்தகைய வரையறை மற்றும் நிபந்தனைகளின் பேரில், இயக்குநர், அரசின் முன் ஒப்புதலுடன், ஓர் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
தீயணைப்பு
உடைமைகளைக்
கோருதல்.
58. இயக்குநர் அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பு வகிக்கும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், பிற அதிகார அமைப்பு எதனின் அல்லது நிறுவனம் எதனின் அல்லது தனிநபரின் தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் அல்லது உடைமைகளைக் கோருமிடத்து, அவர், ஆணையின் மூலம், எந்தவொரு பகுதியிலும் தீயை அணைக்கும் அல்லது ஏதேனும் பிற அவசரநிலை நோக்கத்திற்காக, அத்தகைய உபகரணங்கள் அல்லது உடைமையைக் கோரலாம் மற்றும் நேர்விற்கேற்ப, அவற்றை கூறப்பட்ட அதிகார அமைப்பு அல்லது எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் அல்லது தனிநபரிடமிருந்தும், உடைமையில் எடுத்துக் கொள்ளலாம்.
70பிற கடமைகளில்
வேலைவாய்ப்பு.
59. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினரின் கருவிகள், உபகரணங்கள் மற்றும் பயிற்சி ஆகியவற்றின் காரணமாக எந்தவொரு மீட்பு, அழிவு மீட்பு அல்லது பிற பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு ஈடுபடுத்துவது, அரசு அல்லது அவர்களால் இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவருக்கும், சட்டப்பூர்வமாயிருத்தல் வேண்டும்.
தகவல் பெறும்
அதிகாரம்.
60. இதன்பொருட்டு பொது அல்லது சிறப்பு ஆணையினால் அரசால் அதிகாரமளிக்கப்பட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் இயக்குநர் அல்லது பணியாளர்கள், இந்தச் சட்டத்தின்கீழ் அவரது கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக, குறிப்பிடப்படலாகும் கட்டடத்தின் அல்லது பிற சொத்தின், உரிமையாளர் அல்லது குடியிருப்பவரைக் குறிப்பிடப்படலாகும் அந்தக் கட்டடத்தின் அல்லது பிற சொத்தின் தன்மை தொடர்பான தகவல்களை வழங்க கோரலாம், கிடைக்கக்கூடிய நீர் வழங்கல்கள் மற்றும் அதனை அணுகுவதற்கான வழிமுறைகள் அல்லது வேறு ஏதேனும் பொருள் விவரங்கள் மற்றும் அத்தகைய உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் தம்மிடம் உள்ள அனைத்து தகவல்களை அளித்தல் வேண்டும்.
காவல்
அலுவலர்களின்
உதவி.
61. தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை எதிலும் அல்லது தீ அபாயத்தை உள்ளடக்கிய எந்தவொரு சரக்குகளை பறிமுதல் செய்தல் அல்லது தடுத்துவைத்தல் அல்லது அகற்றுதல் தொடர்பான பிற ஏதேனும் கடமைகளிலும், இந்தச் சட்டத்தின் கீழ் இயக்குநர் அல்லது அத்தகைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர், தங்களது கடமைகளை நிறைவேற்றுவதில் உதவுவதும், பங்குகொள்வதும் அனைத்து படிநிலைகளிலுள்ள காவல்துறை அலுவலர்களின் கடமையாயிருத்தல் வேண்டும்.
இருந்துவரும்
தீயணைப்பு
பணிகள் மற்றும்
தீயணைப்பு
62. (1) இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் இம்மாநிலத்தில் இருந்த தமிழ்நாடு தீயணைப்பு பணிகளானது, 3 ஆம் பிரிவின்கீழ் அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளாகவே கருதப்படுதல் வேண்டும்.
நிலையங்
களுக்கான
வகைமுறைகள்.
(2) இந்தச் சட்டத்தின் தொடக்கத்தில் இருந்த தமிழ்நாடு தீயணைப்புப் பணி அல்லது துணைப் பணியின் பணியாளர்கள் இந்தச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் பணியாளர்களாக நியமிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின் தொடக்கத்தில் இருந்த தீயணைப்பு பணி நிலையங்கள், மீட்பு பணி நிலையங்கள் மற்றும் பிற கள அமைப்புகள் இந்தச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின்கீழ் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு உடனடி முன்பு, தமிழ்நாடு தீயணைப்பு துறையின் பணியாளர் எவரிடமும் நிலுவையிலுள்ள நடவடிக்கைகள் அனைத்தும், (2) ஆம் உட்பிரிவின்கீழ் அவர் எந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறாரோ அப்பதவியினை வகிப்பவர் என்ற முறையில் அவரது முன்பு நிலுவையிலுள்ளதாகவே கருதப்படுதல் வேண்டும் மற்றும் அது அதற்கிணங்கிய வகையில், கையாளப்படுதல் வேண்டும்.
பணியாளர்கள் அரசு
மையச் சட்டம் ஊழியர்களாய்
45/2023.
இருத்தல்.
63. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் செயல்படுகின்ற தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் பணியாளர் ஒவ்வொருவரும், 2023 ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறிலுள்ள பொருளின்படி ஓர் அரசுப் பணியாளராக கருதப்படுதல் வேண்டும்.
71விளக்க அறிக்கைகள்,
அறிக்கைகள்,
விவர அறிக்கைகள்
போன்றவற்றைக்
கோருதல்.
64. இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள், செயல்பாட்டிலுள்ள பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டிலுள்ள சார்நிலை பணியாளர் ஆகியோரின் தீத்தடுப்பு மற்றும் தீப்பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கை, ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் கடமைகளைப் புரிதல் ஆகியவை தொடர்பான பொருட்கள் எதனைப் பற்றியும், அத்தகைய விளக்க அறிக்கைகள், அறிக்கைகள் மற்றும் விவர அறிக்கைகளை அரசு கோரலாம்; மற்றும் அவை உடனடியாக வழங்கப்படுதல் வேண்டும்.
அதிகாரங்களை
ஒப்படைவு
செய்தல்.
65. (1) (a) அரசானது, அறிவிக்கையின் மூலம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசிதழில்அரசிதழில், 67 ஆம் பிரிவின் கீழுள்ள இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம் மற்றும் 68 ஆம் பிரிவின் கீழுள்ள விதிகளைச் செய்வதற்கான அதிகாரம் ஆகியவற்றைத் தவிர, இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்கீழ் அவருக்கு உற்றமைந்த அதிகாரங்கள் எதனையும் செயல்படுத்துவதற்கு, அதிகாரஅமைப்பையோ அல்லது அலுவலர் எவருக்குமோ அதிகாரமளிக்கலாம் மற்றும் அதே வகையில், அத்தகைய அதிகாரமளித்தலை திரும்பப் பெறலாம்.
(b) அரசானது, அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு அல்லது அலுவலர் எவரின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் சீராய்வு செய்வதற்கும் அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.
(2) (a) இயக்குநரானவர், ஆணையின் மூலம், இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்கீழ் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் எதனையும் அல்லது விதிக்கப்பட்ட கடமை எதனையும், அந்த ஆணையில் குறிப்பிடப்படலாகிறவாறு, அத்தகைய சூழ்நிலையில் மற்றும் எவையேனுமிருப்பின் அத்தகைய நிபந்தனைகளின்கீழ் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அலுவலர் எவராலும் கூட செயல்படுத்துதலும் புரியப்படுதலும் வேண்டும்.
(b) அரசானது, அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரஅமைப்பு அல்லது அலுவலர் எவரின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் சீராய்வு செய்வதற்கும் அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.
சட்டத்தின்
மீதூர்ந்தியங்கும்
தன்மை. மற்றும்
பிற சட்டங்களின் 66. தீத்தடுப்பு மற்றும் உயிர்ப் பாதுகாப்பு தொடர்பான வகைமுறைகளைப் பொறுத்தவரையில், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளானது, அப்போதைக்கு நடைமுறையிலுள்ள, பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள முரண்பாடு எது எவ்வாறிருப்பினும், மீதூர்ந்த தன்மையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
விளைவு
இடர்ப்பாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.
67. இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதையும் செயற்படுத்துவதில், இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஓர் ஆணையின் வாயிலாக, அத்தகைய இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானவை அல்லது உகந்தவை என அரசுக்குத் தோன்றுகிற வகைமுறைகளை, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரையாக, இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டாண்டு காலஅளவு முடிவடைந்த பின்னர் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
விதிகளைச் 68. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக
செய்வதற்கான விதிகளைச் செய்யலாம்.
அதிகாரம்.
72(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) 67 ஆம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது எனச் சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையானது அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
பணிப்புரைகளை
வழங்க
அரசுக்குரிய
அதிகாரம்
69. அரசானது, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்திறப்படுத்துவதற்கு அரசு தான் உகந்ததெனக் கருதும் அத்தகைய பணிப்புரைகளை அவ்வப்போது இயக்குநருக்கு வழங்கலாம் மற்றும் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்கி நடப்பது இயக்குநரின் கடமையாகும்.
நீக்கறவு மற்றும்
தமிழ்நாடு சட்டம் 70. (1) 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்பு பணிகள்
காப்புரைகள்.
40/1985.
சட்டமானது இதன்மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.
(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், கூறப்பட்ட சட்டத்தின்படி செயல் எதுவும் அல்லது செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் தொடர்புடைய வகைமுறைகளின்கீழ் தொடரலாம் மற்றும் முடிவடையலாம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
73தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.38/2025.
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும்
தொடக்கம்.
ஊரமைப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாகக் குறித்திடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கான 35/1972.
திருத்தம்.
2. 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் ( இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 2 ஆம் பிரிவின் (48) ஆம் கூறுக்கு, பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"வரம்புரையாக, இந்தக் கூறின்கீழ் அத்தகைய அறிவிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, அத்தகைய பகுதியில் வசிப்பவர்களுக்கு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்புக்கு அல்லது நிறுவனத்திற்கு, முன்மொழிவுக்கு எதிராக விளக்கம் அளிப்பதற்கு ஒரு நியாயமான வாய்ப்பை அரசு வழங்க வேண்டும்; மற்றும் அவர்களின் மறுப்புரைகள் அல்லது பரிந்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை பரிசீலனை செய்தல் வேண்டும்.".
9-A பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 9-A பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (i) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது: -
"(j) சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து
ஆணையத்தின் உறுப்பினர்- செயலாளர், பதவிவழி.".
9-F பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின் 9-F பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(1) (a) கூறுக்காக, பின்வரும் கூறுகளானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன :-
(a) நகர்ப்புற திட்ட பரப்பிடத்தின் பெரும் பகுதியினை தமது அதிகார எல்லைக்குள் கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர், ஆணையத்தின் பதவிவழி தலைவராக இருத்தல் வேண்டும்;
(aa) அரசால் நியமனம் செய்யப்படும் ஆறு நபர்களில்-
(i) மூன்று நபர்கள் அரசு அலுவலர்களாக இருத்தல்
வேண்டும்;
(ii) ஒருவர், மாநிலச் சட்டமன்றத்தின் உறுப்பினராக
இருத்தல் வேண்டும்;
(iii) ஒருவர், நகர்ப்புற திட்ட பரப்பிடத்தின் வணிகம் மற்றும்
தொழிற்துறையை சார்பாற்றம் செய்தல் வேண்டும்; மற்றும்
(iv) ஒருவர், நகர்ப்புற திட்ட பரப்பிடத்தின் பெரும் பகுதியினை தமது அதிகார எல்லைக்குள் கொண்டுள்ள மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியர் படிநிலைக்கு குறையாத ஓர் அலுவலராக இருத்தல் வேண்டும்; அவர் உறுப்பினர் செயலாளராக இருத்தல் வேண்டும்;
74(2) (c) கூறிற்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
"(c) நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை திட்டமிடலாளர் அல்லது தலைமை திட்டமிடலாளர் இல்லாதவிடத்து, முதுநிலை திட்டமிடலாளர்;";
(3) (e) கூறிற்கு பின்பு, பின்வரும் கூறுகளானது சேர்க்கப்படுதல்
வேண்டும், அவையாவன:-
"(f) நகர்ப்புற திட்டமிடல், நகர்ப்புற போக்குவரத்து, நிதி அல்லது
சட்டத்துறைகளில் அரசால் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒரு வல்லுநர்;
(g) நகர்ப்புற திட்டமிடல் துறையில் ஒரு கல்விசார் நிறுவனத்திலிருந்து அரசால் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒரு பிரதிநிதி.".
9-I பிரிவிற்கான
5. முதன்மைச் சட்டத்தின் 9-I பிரிவின் (21) ஆம் கூறிற்குப் பின்பு,
திருத்தம்.
பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(22) 124 ஆம் பிரிவில்,-
(a) ஓரத்தலைப்பிறக்காக, "நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் தொடர்பாக விதிகளை செய்வதற்கான அதிகாரம்" எனும் ஓரத்தலைப்பானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) அரசு, நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் தொடர்பாக இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, முன்தேதியிட்டோ அல்லது பின்தேதியிட்டோ விதிகளைச் செய்யலாம்.";
(c) (2) ஆம் உட்பிரிவில்,-
"(i) "ஒழுங்குமுறை விதிகள்" எனும் சொற்களுக்காக,
"விதிகள்" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) "திட்டக் குழுமம்" எனும் சொற்றொடருக்காக, அது காணப்படும் இடங்களிலெல்லாம், "நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்; மற்றும்
(iii) (h) கூறிற்குப் பின்பு, பின்வரும் கூறுகளானது
சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(i) நகர்ப்புற வளர்ச்சி ஆணையாளரின் கடமைகளும்,
செயற்பணிகளும்;
(j) 9-k பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ்
மேல்முறையீட்டை தாக்கல் செய்யும் முறை.";
(d) (3) ஆம் உட்பிரிவானது, விட்டுவிடப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் II-C ஐ 6. முதன்மைச் சட்டத்தின் II-B அத்தியாயத்திற்கு பின்பு,
புதிதாக
பின்வரும் அத்தியாயமானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
75"அத்தியாயம் II-C.
நகர்ப்புற வளர்ச்சி ஆணையர்.
9-K. நகர்ப்புற வளர்ச்சி ஆணையர்.— (1) அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் நகர்ப்புற வளர்ச்சி ஆணையர் ஒருவர் இருத்தல் வேண்டும்; மற்றும் அவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கடமைகளையும் பொறுப்புகளையும் செயற்படுத்துதல் வேண்டும்.
(2) நகர்ப்புற வளர்ச்சி ஆணையரானவர், நகரப்புற வளர்ச்சிக் குழுமங்களின் கீழுள்ள பதவிகளுக்கான பணிநிலையைக் கட்டுப்படுத்தும் அலுவலராக இருத்தல் வேண்டும் என்பதுடன், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அந்தப் பணியிடங்களுக்கு நியமனங்கள், பணியமர்த்தல்கள் மற்றும் பணியிட மாறுதல்கள் செய்தல் வேண்டும். பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் அத்தகைய பதவிகளைப் பொறுத்து பணியமர்த்தல்களையும் பணியிட மாறுதல்களையும் அவர் மேற்கொள்ள வேண்டும்.
(3) நகர்ப்புற வளர்ச்சி ஆணையரின் முடிவினால் அல்லது ஆணையால் இடருற்ற நபர் எவரும், ஆணை அல்லது பணிப்புரை பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.".
47-A பிரிவிற்கான
திருத்தம்.
7. முதன்மைச் சட்டத்தின் 47-A பிரிவின் (1) ஆம் மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளுக்காக பின்வரும் உட்பிரிவுகளானது மாற்றாக அமைக்கப்படுத்தல் வேண்டும், அவையாவன:-
"(1) திட்டப் பரப்பிடத்தைத் தவிர பிற பரப்பிடத்தின் நிலம் எதிலும் மேம்பாடு எதனையும் மேற்கொள்ள விரும்பும் நபர் எவரும், தமிழ்நாடு தமிழ்நாடு அரசிதழில்அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் இணையவழி ஒற்றைச் சாளர வலைவாயில் மூலம் அத்தகைய மின்னணு படிவத்தில், உள்ளாட்சி அமைப்பின் அனுமதிக்காக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய ஆவணங்களுடன் விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும்.
(2) உள்ளாட்சி அதிகாரஅமைப்பானது, (1) ஆம் உட்பிரிவின்கீழ் அனுமதி வழங்குவதற்கு முன்பு, இயக்குநரின் முன் ஒப்புதலைப் பெறுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்தை அத்தகைய வீதத்தில் வசூலித்தலும் வேண்டும் மற்றும் அத்தகைய அனுமதியானது கூறப்பட்ட இணையவழி ஒற்றைச் சாளர வலைவாயில் மூலம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு வடிவத்தில் வழங்கப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, நன்செய் நிலங்களைப் பொறுத்த நேர்வில், தொடர்புடைய
மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதல் தேவையானதாகும்.".
48 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 48 ஆம் பிரிவில், "தகுதிவாய்ந்த திட்டக் குழுமத்தின் எழுத்துவடிவிலான அனுமதி" எனும் சொற்றொடருக்காக, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் வழங்கப்பட்ட தகுதிவாய்ந்த திட்டக் குழுமத்தின் அனுமதி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
7649 ஆம்
9. முதன்மைச் சட்டத்தின் 49 ஆம் பிரிவின்,-
பிரிவிற்கான
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவில் "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய விளக்கங்களைக் கொண்ட மற்றும் அத்தகைய ஆவணங்களுடன், அனுமதிக்காக எழுத்துவடிவில் தகுதிவாய்ந்த திட்டக் குழுமத்திற்கு" எனும் சொற்றொடருக்காக, பின்வரும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுத்தல் வேண்டும், அதாவது:-
"அனுமதிக்காக தகுதிவாய்ந்த திட்டக் குழுமத்திடம், 47-A பிரிவில் சுட்டப்பட்டுள்ள இணையவழி ஒற்றைச் சாளர வலைவாயில் மூலம், அத்தகைய மின்னணு படிவத்தில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய ஆவணங்கள் மற்றும் கட்டணத்துடன்.";
(2) (3) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுத்தல் வேண்டும், அதாவது:-
"(3) தகுதிவாய்ந்த திட்டக் குழுமமானது, நபரெவருக்கும் அனுமதியளிக்க மறுக்குமிடத்து, 47-A பிரிவில் சுட்டப்பட்டுள்ள இணையவழி வலைவாயில் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில், அத்தகைய மறுப்பிற்கான காரணங்களை பதிவு செய்து தெரிவித்தல் வேண்டும்.".
112-A எனும்
10. முதன்மைச் சட்டத்தின் 112 ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும்
புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
"112-A. நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் நிறுவப்படுவதால் ஏற்படும் விளைவுகள்:- இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இந்தச் சட்டத்தின்கீழ் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் நிறுவப்பட்ட தேதியிலிருந்து, பின்வரும் விளைவுகள் ஏற்படுதல் வேண்டும், அதாவது:-
(i) நகர்ப்புற வளர்ச்சிக் குழுமமானது, நகர்ப்புற
திட்டப்பரப்பிடத்திற்கான திட்டக் குழுமமாக இருத்தல் வேண்டும்;
(ii) நகர்ப்புற வளர்ச்சிக் குழுமமானது, நகர்ப்புற திட்டப்பரப்பிடத்தில், இந்தச் சட்டத்தின்கீழ் அதிகாரங்களை செலுத்துதலும், செயற்பணிகளைப் புரிதலும், கடமைகளை ஆற்றுதலும் வேண்டும்;
(iii) நகர்ப்புற திட்டமிடல் பரப்பிடத்திற்குட்பட்ட எந்தவொரு உள்ளாட்சி திட்டக் குழுமமும் கலைக்கப்படுதல் வேண்டும், மற்றும் அத்தகைய கலைத்தலின் பேரில்,-
(a) உள்ளாட்சி திட்டக் குழுமத்தால் செய்யப்பட்ட எதுவும் அல்லது வெளியிடப்பட்ட அல்லது செய்யப்பட்ட எந்தவொரு நியமனம், அறிவிக்கை, ஆணை, திட்டம், துணை விதி அல்லது ஒழுங்குமுறை விதி உள்ளடங்கலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது அனுமதி எதுவும், நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தால் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி செய்யப்பட்டதாக, உருவாக்கப்பட்டதாக, வெளியிடப்பட்டதாக அல்லது வழங்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவை இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தால் செய்யப்பட்ட நடவடிக்கை எதனாலும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும் மாற்றியமைக்கப்படும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருத்தல் வேண்டும்;
(b) உள்ளாட்சி திட்டக் குழுமத்தால் ஆட்பட்ட அனைத்து கடமைப்பாடுகளும் பொறுப்படைவுகளும், ஈடுபட்ட அனைத்து ஒப்பந்தங்களும், அதனால், அதனுடன் அல்லது அதற்காக செய்யப்படுவதற்கு உள்ளான அனைத்து செயல்களும், நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தால் ஆட்பட்டதாக, ஈடுபட்டதாக, செய்யப்படுவதற்கு உள்ளானதாக கருதப்படுதல் வேண்டும்;
77(c) உள்ளாட்சி திட்டக் குழுமத்திடம் உற்றமைந்துள்ள அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் மற்றும் எத்தன்மையதான இயல்பு மற்றும் வகையினையுடைய அனைத்து நலன்களும், உள்ளாட்சி திட்டக் குழுமத்தால் பயன்படுத்தப்பட்ட, துய்க்கப்பட்ட மற்றும் உடைமையில் கொண்டிருந்த எத்தன்மையதான அனைத்து உரிமைகளும், நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்திடம் உற்றமைதல் வேண்டும்;
(d) உள்ளாட்சி திட்டக் குழுமத்தால் அல்லது அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட அல்லது தொடுக்கப்பட்டிருக்கக்கூடிய உரிமையியல் வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் பிற சட்டமுறையிலான நடவடிக்கைகள் அனைத்தும் நகர்ப்புற வளர்ச்சிக் குழுமத்தால் அல்லது அதற்கு எதிராக தொடரப்படலாம் அல்லது தொடுக்கப்படலாம்.''.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
78 79தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.39/2025.
1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள்
மற்றும் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக்
குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
அத்தியாயம் XXXVI/1947.
IX-ற்கான மாற்றீடு.
2. 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), அத்தியாயம் IX-ற்காக, பின்வரும் அத்தியாயமானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"அத்தியாயம் IX
தண்டத்தொகைகளும் தீர்ப்பளிக்கின்ற செயல்முறையும்.
45. தண்டத்தொகைகள்.- 45. தண்டத்தொகைகள்.- (1) 3, 7 முதல் 11 வரை, 13 முதல் 23 வரை, 25, 26, 29 முதல் 41 வரை, 47, 47-A மற்றும் 50-A ஆகிய பிரிவுகளின் வகைமுறைகள் எதனையும் மீறுகின்ற எவரொருவரும், முதல் முறை மீறலுக்காக, ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்; மற்றும் இரண்டாவது முறை அல்லது அடுத்தடுத்த மீறுகைக்கு, பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.
விளக்கம்.— விளக்கம்.— இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "இரண்டாவது முறை அல்லது அடுத்தடுத்த மீறுகை" என்பது முதல் முறை மீறுகை செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு வேலைவழங்குநரால் செய்யப்பட்ட ஒரேவகையான அல்லது அதைப் போன்ற மீறல் என்று பொருள்படும்.
(2) 41-A பிரிவுக்கு இணங்கத் தவறுகிற எந்தவொரு வேலைவழங்குநரும், ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்; மற்றும் அத்தகைய தவறுகை தொடருமாயின், நேர்விற்கேற்ப, தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பு அல்லது மீறுகையை இணக்கமாக தீர்த்த பின்பு, அத்தகைய தவறுகை தொடருகின்ற நாள் ஒவ்வொன்றுக்கும், இருநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் மேலும் ஒரு தண்டத்தொகை விதிக்கப்படுதல் வேண்டும் மற்றும் மொத்தத்தில் அந்தத் தண்டத்தொகையானது ஒரு இலட்ச ரூபாய்க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். வேலைவழங்குநர் செலுத்துகிற தண்டத்தொகை முழுவதையும் அல்லது பகுதி எதனையும் பாதிக்கப்பட்ட பணியாளருக்கு இழப்பீடாக வழங்குவதற்கு, தீர்ப்பளிக்கும் அலுவலர் ஆணையிடலாம்.
80(3) (a) (i) இந்தச் சட்டத்தின்கீழ் ஆய்வாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் எதனையும் அவர் செயல்படுத்துகிறபோது அவரையோ; அல்லது
(ii) அவரது அதிகாரத்தைச் செயற்படுத்துவதில்
ஆய்வாளருக்குச் சட்டப்பூர்வமாக உதவுகின்ற நபர் எவரையுமோ,
வேண்டுமென்றே தடுக்கிற அல்லது;
(b) ஆய்வாளரால் செய்யப்பட்ட சட்டப்பூர்வ ஆணை
எதனையும் இணங்கத் தவறுகிற,
நபரெவரும், ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.
46. மீறுகைகளை இணக்கமாக தீர்த்தல்.- (1) 45 ஆம் பிரிவின்கீழ் 46. மீறுகைகளை இணக்கமாக தீர்த்தல்.- அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதி எதனின் மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆனால் தண்டத்தொகை விதிக்கப்படுவதற்கு முன்பு, அவ்வாறு அதிகாரமளிக்கப்பட்ட அந்த அலுவலரால் குறிப்பிடப்படலாகும் அத்தகைய தொகையைச் செலுத்துவதன் பேரில், இதன் பொருட்டு, தொழிலாளர் ஆணையரால் அதிகாரமளிக்கப்படலாகும் அத்தகைய அலுவலரால் இணக்கம் செய்யப்படலாம்:
வரம்புரையாக, அவ்வாறு இணக்கமாக தீர்க்கப்பட்ட மீறுகைக்கான அத்தகைய தொகையானது, எந்நேர்விலும், இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படலாகும் அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதல் கூடாது.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ், மீறுகை எதுவும் இணக்கமாக தீர்க்கப்பட்டபோது, அவ்வாறு இணக்கமாக தீர்க்கப்பட்ட மீறுகையைப் பொறுத்து, இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எதுவும் தொடங்கப்படுதலோ அல்லது தொடர்ந்து நடத்தப்படுதலோ கூடாது.
46-A. தீர்ப்பளிக்கும் அலுவலர்.-46-A. தீர்ப்பளிக்கும் அலுவலர்.- (1) மாநில அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின்கீழ் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய முறையில் விசாரணையை நடத்தவும், தண்டத்தொகையை விதிக்கவும், தொழிலாளர் இணை ஆணையர் படிநிலைக்குக் குறையாத அலுவலர் ஒருவரைத் தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமிக்கலாம்:
வரம்புரையாக, மாநில அரசானது, தேவைப்படலாகும் எண்ணிகையில்
தீர்ப்பளிக்கும் அலுவலர் பலரை நியமிக்கலாம்.
(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாகவோ அல்லது அதற்கு தொடர்புடையதாகவோ இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் தாக்கல் செய்ய அல்லது சாட்சியம் அளிக்க, வழக்கின் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம்; மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், 45 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட வகைமுறைகள் அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகள் எதனையும் இணங்கத் தவறினார் என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:
வரம்புரையாக, தொடர்புடைய நபருக்கு, விளக்கமளிப்பதற்கு நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் அத்தகைய தண்டத்தொகை எதுவும் விதிக்கப்படுதலாகாது.
8146-B. மேல்முறையீடு.-46-B. மேல்முறையீடு.- (1) 46-A பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், அரசால், அறிவிக்கையின் மூலம், நியமனம் செய்யப்பட்ட கூடுதல் தொழிலாளர் ஆணையர் படிநிலைக்குக் குறையாத அலுவலர் ஒருவராக இருக்கின்ற மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
(2) மேல்முறையீட்டாளர், அறுபது நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாததற்குப் போதுமான காரணம் இருப்பதாக மேல்முறையீட்டு அலுவலரை மனநிறைவடையச் செய்தால், மேல்முறையீடானது, அந்தக் காலஅளவு முடிவடைந்த பின்பும் ஏற்றுக்கொள்ளப்படலாம்.
(3) மேல்முறையீட்டு அலுவலர், மேல்முறையீட்டின் தரப்பினருக்கு விளக்கமளிப்பதற்கு வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.
(4) மேல்முறையீட்டு அலுவலர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், அதனை முடித்து வைக்க வேண்டும்.
46-C. வசூலித்தல்.-46-C. வசூலித்தல்.- நேர்விற்கேற்ப, 46-A பிரிவின்கீழ் அல்லது 46-B பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்த வேண்டிய தொகையானது, நில வருவாயின் நிலுவைத் தொகையை வசூலிப்பது போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.".
49 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 49 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், "அபராதம்" எனும் சொல்லுக்காக, "தண்டத்தொகை" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
82 83தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.40/2025.
தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படும் குறு நிதி நிறுவனங்கள், பணக்கடன் வழங்கும் முகமைகள் மற்றும் பணக்கடன் வழங்கும் அமைப்புகள் போன்ற பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் மூலம் கடன் எதனையும் வலுக்கட்டாய முறையில் வசூலிப்பதினால் மிகுந்த இன்னல்களிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த குழுக்கள் மற்றும் தனிநபர்கள், குறிப்பாக விவசாயிகள், மகளிர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை, விடுவிப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்குமானதொரு சட்டம்
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் I.
முன்னுரை.
குறுந்தலைப்பு,
அளாவுகை மற்றும்
தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (வலுக்கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருந்துகை.
2. இச்சட்டம், வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களைத் தவிர தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படும் அனைத்து பணக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்துதல் வேண்டும்:
வரம்புரையாக, கடன் பெறுபவருக்கு எதிரான 'வலுக்கட்டாய நடவடிக்கை' தொடர்பான இந்த சட்டத்தின் வகைமுறைகளானது, மேற்கூறிய வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்துதல் வேண்டும்.
பொருள் 3. இச்சட்டத்தில், உள்ளடக்கம் வேறுவகையில் தெரிவிக்காத
வரையறைகள்.
வரையில், -
(a) "கடன் பெறுபவர்" என்பது எந்தவொரு பணக்கடன் வழங்கும் நிறுவனத்திடமிருந்தும், எந்த நோக்கத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்ற வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வாய்மொழியான அல்லது எழுத்துப்பூர்வமான உடன்படிக்கையின்கீழ் கடனாக பணம் பெறுகின்ற ஒரு தனிநபர் அல்லது தனிநபர்களின் குழு அல்லது ஒரு சுய உதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்புக் குழு என்று பொருள்படும்;
(b) "வலுக்கட்டாய நடவடிக்கைகள்" என்பது 20 ஆம் பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்று பொருள்படும்;
84தமிழ்நாடு சட்டம்
30/1983 (c) "கூட்டுறவுச் சங்கம்" என்பது 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படும் ஒரு சங்கம் என்று பொருள்படும்;
(d) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(e) "கடன்" என்பது பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் வெளிப்படையாக வசூலிக்கப்படும் அல்லது பிறவாறான வட்டி வீதத்தில் கடன்பெறுபவருக்கு முன்தொகையாக கொடுக்கப்படும் பணம் என்று பொருள்படும்;
(f) "குறு நிதி நிறுவனம்" என்பது, கடன் பெறுவோருக்கு எவ்வகையிலும் கடன் வழங்குவதை அல்லது நிதி ஆதரவு வழங்குவதை முக்கிய அல்லது தன்னியல்பான நடவடிக்கையாக கொண்டு, கடன் பெறுவோருக்கு குறு கடன்கள் வழங்கும் ஒரு நிறுவனம் என்று பொருள்படும்;
(g) "குறுகடன்" என்பது மூன்று இலட்சம் ரூபாய் வரை ஆண்டு குடும்ப வருமானம் அல்லது அவ்வப்போது, அரசு, அறிவிக்கை மூலம் நிர்ணயிக்கும் அத்தகைய வரம்பு கொண்ட ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் கடன் என்று பொருள்படும்.
விளக்கம்.- விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கத்திற்காக, ஒரு குடும்பம் என்பது, ஒரு தனிப்பட்ட குடும்ப அலகை, அதாவது, கணவன், மனைவி மற்றும் அவர்களின் திருமணமாகாத மகன் மற்றும் மகள் ஆகியோர் என்று பொருள்படும்.
(h) "பணக்கடன் வழங்கும் நிறுவனம்" என்பது எந்தவொரு குறு நிதி நிறுவனம் அல்லது பணக்கடன் வழங்கும் முகமை அல்லது பணக்கடன் வழங்கும் அமைப்பு அல்லது கூட்டாண்மை நிறுவகம் அல்லது நபர் அல்லது நபர்களின் குழு அல்லது எண்ம முறையில் கடன் வழங்கும் தளம் அல்லது பணக்கடன் வழங்குவதையும் அதனை திரும்பப்பெறுவதையும் அதன் முக்கிய அல்லது தற்செயலான நடவடிக்கைகளாகக் கொண்ட, எந்தப் பெயராலும் அழைக்கப்படுகின்ற ஏதேனும் பிற நிறுவனத்தையும் உள்ளடக்கும்.
விளக்கம்.- விளக்கம்.- இந்த கூறின் நோக்கத்திற்காக,-
தமிழ்நாடு சட்டம்
XXIII/1943.
(i) "பணக்கடன் வழங்கும் நடவடிக்கை" என்ற சொற்கூறானது, 1943 ஆம் ஆண்டு தமிழ்நாடு அடகு தரகர்கள் சட்டத்தின்கீழ் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட அடகு தரகர்களின் தொழிலை உள்ளடக்காது;
(ii) "நபர்களின் குழு" என்ற சொற்கூறானது, சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், மாவட்ட அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்ற சமூக அடிப்படையிலான அமைப்புகளை உள்ளடக்காது.
(i) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது இந்தச் சட்டத்தின் கீழ்
உருவாக்கப்பட்ட விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;
(j) "பதிவு செய்யும் அதிகார அமைப்பு" என்பது 4 ஆம் பிரிவின்கீழ்
நியமனம் செய்யப்பட்ட ஓர் அமைப்பு என்று பொருள்படும்;
(k) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்.
85அத்தியாயம் II.
பணக்கடன் வழங்கும் நிறுவனங்களைப் பதிவு செய்தலும் அதற்கான ஒழுங்குமுறையும்.
பகுதி I
பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு.
பதிவு செய்யும்
அதிகார
அமைப்பினை
நியமனம் செய்தல்.
4. (1) அரசு, அறிவிக்கையின் வாயிலாக, பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பதிவு செய்யும் அதிகார அமைப்பாக இருக்கக்கூடிய அத்தகைய எண்ணிக்கையிலான அலுவலர்களை நியமனம் செய்யலாம் மற்றும் அத்தகைய அலுவலரின் அதிகார வரம்பினை வரையறுக்கலாம்.
(2) பதிவு செய்யும் அதிகார அமைப்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துதலும் அத்தகைய கடமைகளைப் புரிதலும் வேண்டும்.
பணக்கடன்
வழங்கும்
நிறுவனங்கள்
பதிவுச்
சான்றிதழைப்
பெறுதல்.
5. (1) இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று மாநிலத்தில் செயல்பட்டு வரும் அல்லது இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு பின்பு பணக்கடன் வழங்குதலை தொடங்க விரும்பும் பணக்கடன் வழங்கும் நிறுவனம் எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்றிதழ் பெறாமல், கடன் எதனையும் வழங்கவோ அல்லது கடன் எதனையும் வசூலிக்கவோ கூடாது:
வரம்புரையாக, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று மாநிலத்தில் செயற்பட்டு வரும், பணக்கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள், இந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யும் அதிகார அமைப்பிடமிருந்து பதிவுச் சான்றிதழைப் பெறுதல் வேண்டும்.
(2) பணக்கடன் வழங்கும் நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் இணையவழி வலைவாயில் வழியாக, அத்தகைய மின்னணு படிவத்தில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(3) அத்தகைய விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில், பதிவு செய்யும் அதிகார அமைப்பு, பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்து, (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட இணையவழி வலைவாயில் வழியாக, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள்ளும் அத்தகைய மின்னணு படிவத்திலும் பதிவுச் சான்றிதழை வழங்குதல் அல்லது வழங்க மறுத்தல் வேண்டும்:
வரம்புரையாக, அத்தகைய விண்ணப்பம் எதுவும், விண்ணப்பதாரருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படாமலும் பதிவு செய்வதற்கான காரணங்களுக்காகவும் நிராகரிக்கப்படுதல் ஆகாது.
(4) தொடர்புடைய பதிவு செய்யும் அதிகார அமைப்பால் (3) ஆம் உட்பிரிவின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் விண்ணப்பத்தின் மீது, முடிவு எதுவும் செய்யப்படாதவிடத்து, பதிவுச் சான்றிதழானது, தானே உருவாக்கப்பட்டு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், இணையவழியில் வழங்கப்படுதல் வேண்டும்.
(5) (3) அல்லது (4) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சான்றிதழானது, அதில் குறிப்பிடப்பட்ட அத்தகைய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டு காலத்திற்கு செல்லுபடியாதல் வேண்டும்:
86வரம்புரையாக, பணக்கடன் வழங்கும் நிறுவனம் எதுவும், தான் பதிவு செய்துள்ள மாவட்டம் அல்லது வட்டாரம் அல்லாத ஏதேனும் பிற மாவட்டம் அல்லது வட்டாரம் எதிலும் தனது தொழிலை நடத்த விரும்பினால், அத்தகைய பதிவின் விவரங்களை அந்நிறுவனம், தனது அலுவலை நடத்த விரும்பும், தொடர்புடைய மாவட்டத்தின் அல்லது வட்டாரத்தின் பதிவு செய்யும் அதிகார அமைப்பிடம் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் அளித்தல் வேண்டும்.
பதிவுச் சான்றிதழைப்
புதுப்பித்தல்.
6. (1) ஒவ்வொரு பதிவுச் சான்றிதழும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், அத்தகைய கட்டணங்களைச் செலுத்துவதன் பேரில் மற்றும் அத்தகைய நிபந்தனைகள் பூர்த்தி செய்ததன் மூலம் மூன்று ஆண்டு காலத்திற்கு புதுப்பிக்கப்படுதல் வேண்டும்.
(2) இச்சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஒவ்வொரு விண்ணப்பமும், அத்தகைய சான்றிதழின் காலஅளவு முடிவடையும் தேதிக்கு முன்பு அறுபது நாட்களுக்குக் குறையாதவாறு செய்யப்படுதல் வேண்டும்:
வரம்புரையாக, விண்ணப்பதாரர், உரிய காலத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து போதிய காரணத்தினால் தடுக்கப்பட்டுள்ளார் என்று பதிவு செய்யும் அதிகார அமைப்பு, மனநிறைவு அடையுமாயின், மேற்கூறப்பட்ட காலஅளவு கழிவுற்ற பின்னரும், ஆனால் சான்றிதழின் காலஅளவு முடிவடைவதற்கு முன்னரும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
(3) (2) ஆம் உட்பிரிவின்கீழ் அத்தகைய விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில், பதிவு செய்யும் அதிகார அமைப்பு, பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விவரங்களை சரிபார்த்து, பதிவு முடிவடையும் தேதிக்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் பதிவுச் சான்றிதழை புதுப்பித்தல் அல்லது புதுப்பிக்க மறுத்தல் வேண்டும்.
வரம்புரையாக, அத்தகைய விண்ணப்பம் எதுவும், விண்ணப்பதாரருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படாமலும் பதிவு செய்வதற்கான காரணங்களுக்காகவும் நிராகரிக்கப்படுதல் ஆகாது.
(4) தொடர்புடைய பதிவு செய்யும் அதிகார அமைப்பால் (3) ஆம் உட்பிரிவின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் விண்ணப்பத்தின் மீது முடிவு எதுவும் செய்யப்படாதவிடத்து, பதிவுச் சான்றிதழானது, தானே உருவாக்கப்பட்டு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், இணையவழியில் வழங்கப்படுதல் வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட
7. பணக்கடன் வழங்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் இம்மாநிலத்தில்
அலுவலகம்.
பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
பதிவு செய்யும்
அதிகார
அமைப்பால்
பதிவேடுகள்
பராமரிக்கப்படுதல்
8. (1) ஒவ்வொரு பதிவு செய்யும் அதிகார அமைப்பும், பதிவுச் சான்றிதழை வழங்கும்போது அல்லது அதனை புதுப்பிக்கும் போது, பதிவு செய்யப்பட்ட பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பதிவேட்டை வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்தில் மற்றும் அத்தகைய முறையில் பராமரித்தல் வேண்டும்.
87.
(2) 5 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளின் கீழ் தேவைப்பட்டவாறு, பணக்கடன் வழங்கும் நிறுவனத்திடமிருந்து தகவல் பெறப்பட்டதன் பேரில், பதிவு செய்யும் அதிகார அமைப்பு, தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஆனால், பிற மாவட்டம் அல்லது வட்டாரம் எதிலும் பதிவு செய்யப்பட்ட பணக்கடன் வழங்கும் நிறுவனங்களை, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய மின்னணு படிவத்திலும் அத்தகைய முறையிலும் பதிவு செய்வதற்காக, பராமரிக்கப்பட வேண்டிய ஒரு தனி பதிவேட்டில் தேவையான பதிவுகளைச் செய்தல் வேண்டும்.
(3) (1) ஆம் மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின்கீழ் பராமரிக்கப்படும் பதிவேடுகள், 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி வலைவாயிலில் பதிவு செய்யும் அதிகார அமைப்பால் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அவ்வப்போது புதுப்பிக்கப்படுதல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் தொடர்புடைய பதிவு செய்யும் அதிகார அமைப்பின் வரம்பிற்குட்பட்ட பகுதியில் செயல்பட்டுவரும் பதிவுபெற்ற பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் பட்டியலின் விபரங்கள் பொதுமக்கள் அணுகும் வகையில் இருத்தல் வேண்டும்.
பகுதி II
பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கான ஒழுங்குமுறை விதிகள்.
பணக்கடன்
வழங்கும்
நிறுவனத்தின்
அலுவலில் 9. (1) பணக்கடன் வழங்கும் நிறுவனம் வசூலிக்கும் பயனார்ந்த வட்டி வீதமானது, அதன் அனைத்து அலுவலகங்கள், அதன் வலைதளம், தகவல்தொகுப்பு அல்லது சிற்றேடு அல்லது விளம்பர அறிவுப்புகளில் தெளிவாக வெளியிடப்படுதல் வேண்டும்.
வெளிப்படைத்
தன்மை.
(2) கடன் குறித்தலில் நான்கு கூறுகள் மட்டுமே இருத்தல் வேண்டும். அவையாவன, வட்டி வீதம், செயலாக்க கட்டணம், காப்பீட்டுத் தொகை மற்றும் தாமதத்திற்கான அபராதக் கட்டணம்.
(3) ஒவ்வொரு கடன் விண்ணப்ப படிவமும், கடன் பெறுபவரின் நலனை பாதிக்கக்கூடிய தேவையான தகவல்களை கொண்டிருத்தல் வேண்டும். இதனால் மற்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கும் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உண்மையான ஒப்பீடு செய்யப்பட்டு கடன் பெறுபவரால் சரியான முடிவை எடுக்க முடியும். அத்தகைய விண்ணப்ப படிவத்தில் அத்தகைய விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பெயர்கள் குறிப்பிடுதல் வேண்டும்.
(4) ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும், கடன் வழங்கப்பட்ட தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பு, கடன் தொகை, கடன் வழங்கப்படும் தேதி மற்றும் அதன் முதிர்வு தேதி, பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, கடன் பெறுபவர் மற்றும் வசூலிக்கும் பயனார்ந்த வட்டி வீதம், செயலாக்க கட்டணம், காப்பீட்டுத் தொகை மற்றும் தாமதத்திற்கான அபராதக் கட்டணம் ஆகியவற்றைத் தெளிவான மற்றும் தனித்துவமான சொற்கூறுகளில், குறிப்பிட்ட படிவத்தில் ஓர் அறிக்கையை, கடன் பெறுபவருக்கு வழங்க வேண்டும் அல்லது வழங்க செய்தல் வேண்டும்.
88(5) நிலையான கடன் உடன்படிக்கை ஒன்று இருத்தல் வேண்டும்.
(6) பணக்கடன் வழங்கும் நிறுவனம், கடன் பெறுபவருக்கு பின்வரும்
விவரங்கள் அடங்கிய கடன் அட்டையை வழங்குதல் வேண்டும்,-
( i) வசூலிக்கப்படும் பயனார்ந்த வட்டி விகிதம், செயலாக்க கட்டணம், காப்பீட்டுத் தொகை மற்றும் தாமதத்திற்கான அபராதக் கட்டணம்;
( ii) கடனுடன் இணைக்கப்பட்ட அனைத்து பிற வரையறைகள்
மற்றும் நிபந்தனைகள்;
( iii) கடன் பெறுபவரை போதுமான அளவு அடையாளம்
காணுகிற தகவல்; மற்றும்
( iv) பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் பெறப்பட்ட தவணைகள் மற்றும் இறுதி விடுவிப்பு உட்பட அனைத்து திருப்பிச் செலுத்தல்களுக்காக அளிக்கப்பட்ட ஒப்புகைகள்.
(7) பணக்கடன் வழங்கும் நிறுவனம் எதுவும், கடனைத் திருப்பிச் செலுத்தியதற்காக முறையான கையொப்பமிட்ட ரசீதை வழங்காமல் கடன் பெறுபவரிடமிருந்து கடனைத் திருப்பிச் செலுத்துதலைப் பெறுதல் கூடாது.
(8) ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும், கடன் பெறுபவரால் எழுத்துப்பூர்வமாகக் கோரப்பட்டதன் பேரில், அவரால் பெறப்பட்ட கடன் தொடர்பான எந்தவொரு ஆவணத்தின் படியையும், அல்லது கடன் பெறுபவர் அவ்வாறு கோரினால், கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நபருக்கும் வழங்குதல் வேண்டும்.
(9) கடன் அட்டையில் உள்ள உள்ளீடுகள் உட்பட கடன் பெறுபவருடனான அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழிலும் இருத்தல் வேண்டும்.
கடன் வழங்கும்
விதிமுறைகள்.
10. கடன் வழங்கும் விதிமுறைகள், வசூலித்தல் மற்றும் வசூல் செய்யும் நடைமுறைகள் குறித்து அரசு, அறிவிக்கை வாயிலாக குறிப்பிடலாம்.
விளக்கம்.-விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, கடன் வழங்கும்
விதிமுறைகள் வட்டி வீதத்தை உள்ளடக்காது.
பணக்கடன் வழங்கும்
நிறுவனம்
பிணையத்தை
11. பணக்கடன் வழங்கும் நிறுவனம், எந்த அளவிற்கு கடன்பெற்றவரிடமிருந்து பிணையத்தை நாடக்கூடாது என்பது வகுத்துரைக்கப்படலாகும் அந்த அளவிற்கு இருத்தல் வேண்டும்.
நாடலாகாது.
விளக்கம்.-விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, "பிணையம்" என்பது
எந்த வகையான துணைப் பிணையத்தையும் குறிக்கிறது.
பணக்கடன் வழங்கும்
நிறுவனத்தால்
பராமரிக்கப்பட
வேண்டிய கணக்குப்
12. ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் அத்தகைய முறையிலும் பணிக்குறிப்பேடு, பேரேடு மற்றும் பிற கணக்குப் புத்தகங்களை வைத்துப் பராமரிக்க வேண்டும்.
புத்தகங்கள்.
கணக்குகள், விவர
அறிக்கைகள்
போன்றவற்றை
சமர்ப்பித்தல்.
13. ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும், ஒவ்வொரு நிதியாண்டிற்குமான ஆண்டறிக்கையை, 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வலைவாயிலில், வகுத்துரைக்கப்படலாகிற அத்தகைய படிவத்திலும் அத்தகைய காலத்திற்குள்ளும் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
89பகுதி III
பதிவு செய்யும் அதிகார அமைப்பின் அதிகாரங்கள்.
பதிவை இரத்து
அல்லது
இடைநிறுத்தம்
செய்யும்
அதிகாரம்.
14. (1) பதிவு செய்யும் அதிகார அமைப்பு, எந்த நேரத்திலும், தாமாக முன்வந்தோ அல்லது கடன் பெறுபவரிடமிருந்து அல்லது வேறு எந்த நபரிடமிருந்து புகார் பெற்றதன் பேரிலோ, பணக்கடன் வழங்கும் நிறுவனம் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் எதனையும் மீறியுள்ளது எனக் கருதுமாயின், பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கு, அந்நிறுவனத்தின் பதிவை ஏன் இரத்து செய்யக்கூடாது என்ற காரணத்தை வழங்கக்கோரி அறிவிப்பு ஒன்றை அளிக்கலாம்.
(2) பதிவு செய்யும் அதிகார அமைப்பானது அவ்வாறு பதில் ஏதேனும் பெறப்பட்டால், அதனை பரிசீலனை செய்தும், அந்தப் பணக்கடன் வழங்கும் நிறுவனம் கூறப்பட்ட வகைமுறைகளை மீறியுள்ளது என மனநிறைவடைவதன் பேரிலும், அத்தகைய இரத்து செய்வதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த பின்பு அந்தப் பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவினை இரத்து செய்யலாம்.
(3) (1) ஆம் உட்பிரிவின்கீழ் விசாரணை நிலுவையில் இருப்பதால், பதிவு செய்யும் அதிகார அமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டிய போதுமான காரணங்களுக்காக, அந்தப் பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவை இடை நிறுத்தம் செய்யலாம்.
(4) பதிவுச் சான்றிதழ் இடை நிறுத்தம் செய்யப்பட்ட அல்லது இரத்து செய்யப்பட்ட பணக்கடன் வழங்கும் நிறுவனம், கடன் வழங்குதலாகாது.
பதிவேடுகள் அல்லது மையச் சட்டம்
ஆவணங்களைச் 46/2023
சமர்ப்பிக்க
வேண்டுவதற்கான
அதிகாரம் மற்றும்
உள் நுழைந்து
ஆய்வு செய்தல்
மற்றும் பறிமுதல்
செய்வதற்கான
அதிகாரம்.
15. (1) 2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் VII ஆம் அத்தியாயம் மற்றும் 185 ஆம் பிரிவின்கீழ் காவல்துறை அலுவலர்களின் அதிகாரங்களுக்கு குந்தகமின்றி, பதிவு செய்யும் அதிகார அமைப்பு அல்லது இதன் பொருட்டு எழுத்து மூலமாக அதனால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும், இச்சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்க பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் தொழில் நடைபெறுகிறதா என்பதைச் சரிபார்ப்பதற்காக, பணக்கடன் வழங்கும் நிறுவனம் எவற்றிலும் நுழையலாம் அல்லது அவரின் கருத்துப்படி அந்த பணக்கடன் வழங்குகின்ற நபரிடம் அத்தகைய தொழில் தொடர்பான பதிவேடு அல்லது ஆவணம் எதனையும் சமர்ப்பிக்குமாறு அவரைக் கோரலாம். அத்தகைய ஒவ்வொரு பணக்கடன் வழங்கும் நிறுவனமும் அல்லது அத்தகைய நபரும் அத்தகைய ஆய்வை அனுமதித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய ஆய்வின் போது மற்றும் தேவைப்படும் போது அத்தகைய பதிவேடுகள் அல்லது ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
(2) பதிவு செய்யும் அதிகார அமைப்பு அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பட்ட எந்த அலுவலரும், (1) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, வளாகத்தை சோதனையிடலாம் மற்றும் தேவைப்படலாகிற பதிவேடுகள், ஆவணங்கள் எதனையும் பறிமுதல் செய்யலாம். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பதிவேடுகள் அல்லது ஆவணங்களானது, ஆய்வு செய்தல், வழக்குத் தொடர்தல் அல்லது பிற சட்ட நடவடிக்கையின் நோக்கங்களுக்காக, தேவைப்படலாகிற அத்தகைய காலத்திற்கு மட்டுமே வைத்திருத்தல் வேண்டும்.
90(3) பதிவு செய்யும் அதிகார அமைப்பு அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பட்ட எந்த அலுவலரும், எந்த ஒரு பணக்கடன் வழங்கும் நிறுவனத்தையும் அல்லது அவரது கருத்தில் தொடர்புடைய தகவலை அளிக்கும் நிலையிலுள்ள அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரையும் அழைப்பாணை விடுத்து ஆய்வு செய்யும் அதிகாரம் கொண்டிருத்தல் வேண்டும்.
பகுதி IV
பூசல்களைத் தீர்த்தல்.
புகார்கள். 16. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதுவும், பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் மீறப்பட்டுள்ளது குறித்து, கடன்பெறுபவர் எவரும், பணக்கடன் வழங்கும் நிறுவனத்தைப் பதிவு செய்த பதிவுசெய்யும் அதிகார அமைப்பிடம் அல்லது எதனுடைய அதிகார வரம்பிற்குள் பணக்கடன் வழங்கும் நிறுவனம் செயல்படுகிறதோ அந்தப் பதிவுசெய்யும் அதிகார அமைப்பிடம் அல்லது அதிகார வரம்பிற்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
(2) பதிவு செய்யும் அதிகார அமைப்பு, 14 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அத்தகைய புகாரை விசாரித்து, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பித்தல் வேண்டும்.
(3) விசாரணைக்குப் பின்பு, பதிவு செய்யும் அதிகார அமைப்பு, பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கு எதிராக, சட்டவிரோதக் குற்றத்தை ஈடுபடுத்துகின்ற முதல் நோக்கு வழக்கு உள்ளதென கண்டறியுமாயின், பதிவு செய்யும் அதிகார அமைப்பானது அதிகாரவரம்பு கொண்டிருக்கும் காவல் நிலையத்திற்கு புகாரை மேலனுப்புதல் வேண்டும்.
(4) காவல் அலுவலர் எவரும், அத்தகைய புகாரை வாங்க
மறுத்தலாகாது.
குறை தீர்ப்பாயரை
நியமனம் செய்தல்.
17. (1) கடன்பெறுவோரின் பாதுகாப்பிற்காகவும், கடன் பெறுபவருக்கும் பணக்கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள உரிமையியல் தன்மையிலான பூசல்களைத் தீர்த்து வைப்பதற்காகவும், பணக்கடன் வழங்கும் நிறுவனத்தால் வழங்கப்படும் கடன்களைப் பொறுத்த வரையில், அரசானது அறிவிக்கை வாயிலாக, பொருத்தமெனக் கருதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைதீர்ப்பாயரை, நியமனம் செய்யலாம். அவர், பூசலை தீர்வு செய்வதற்காக, கடன் பெறுபவருக்கும் கடன் கொடுப்பவருக்கும் இடையே பொதுவராக செயல்படலாம்.
(2) குறைதீர்ப்பாயரின் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள்
வகுத்துரைக்கப்படலாகிற அத்தகையவாறு இருத்தல் வேண்டும்.
வரம்புரையாக, இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும், பூசலைக் கேட்பதற்கும் விசாரணை செய்வதற்குமான உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகார வரம்பை தடை செய்தல் ஆகாது.
அத்தியாயம் III.
குற்றங்களும் தண்டனைகளும்.
பதிவு செய்யாமல்
தொழிலை
மேற்கொள்
வதற்கான
தண்டனை.
18. 5 ஆம் பிரிவின்கீழ் பதிவுச் சான்றிதழ் பெறாமல், கடன் வழங்கும் தொழிலை மேற்கொள்ளும் ஒரு பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் அன்றாட கட்டுப்பாடு, தொழில் மற்றும் மேலாண்மைக்கு தொடர்புடைய மற்றும் பொறுப்புடைய எந்தவொரு நபரும், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
9113 ஆம் பிரிவை
மீறுவதற்கான தண்டத்தொகை 19. 13 ஆம் பிரிவின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் ஆண்டறிக்கையை பதிவேற்றம் செய்யத்தவறும் பணக்கடன் வழங்கும் நிறுவனமானது, பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாத ஆனால் ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
வலுக்கட்டாய
நடவடிக்கைகளைத்
தடுத்தல்.
20. (1) கடன் பெறுபவரிடமிருந்து கடனை வசூலிக்கும் போது, கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும், பணக்கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால் வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுதலாகாது.
(2) பின்வரும் சூழ்நிலைகளில், பணக்கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால் கடன் பெறுபவரிடமிருந்து கடனை வசூலிப்பது தொடர்பாக அல்லது அதனுடன் தொடர்புடையதாக இருந்தால் அல்லது ஏற்பட்டால், அது வலுக்கட்டாய நடவடிக்கையாக கருதப்படுதல் வேண்டும்:-
(a) கடன் பெறுபவருக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ இடையூறு விளைவித்தல் அல்லது வன்முறையைப் பயன்படுத்துதல் அல்லது அவர்களை அவமதித்தல் அல்லது மிரட்டுதல்; அல்லது
(b) கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களில் எவரையும் இடத்திற்கு இடம் தொடர்ந்து பின்தொடர்தல், அல்லது அவர்களுக்குச் சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்திய எந்தவொரு சொத்திலும் தலையிடுதல் அல்லது அத்தகைய எந்தவொரு சொத்தையும் அவர்களிடமிருந்து பறித்தல் அல்லது பயன்படுத்துவதில் அவர்களுக்கு இடையூறு விளைவித்தல்; அல்லது
(c) வலுக்கட்டாய நடவடிக்கை எடுக்கின்ற நோக்கத்துடன், கடன் பெறுபவரின் வீடு அல்லது அவர் வசிக்கும் அல்லது வேலை செய்யும் அல்லது தொழிலை மேற்கொள்ளும் அல்லது அவ்வாறு நடைபெறும் பிற இடத்திற்கு அடிக்கடி செல்வது; அல்லது
(d) பேச்சுவார்த்தை நடத்த அல்லது வலுக்கட்டாயப்படுத்தி மற்றும் தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தி பணம் செலுத்துமாறு கடன் பெறுபவரை வலியுறுத்துவதற்காக தனியார் அல்லது வெளித்தரப்பு அல்லது வெளிப்புற முகமைகளின் சேவையைப் பயன்படுத்துதல்; அல்லது
(e) கடன் பெறுபவருக்கு, எந்தவொரு அரசு திட்டத்தின் கீழுள்ள ஒரு நலப்பயனையும் பெற உரிமை அளிக்கும் எந்தவொரு ஆவணத்தையும், ஏதேனும் பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள் அல்லது வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்க கோருதல்.
9220 ஆம் பிரிவை
மீறுவதற்கான
தண்டனை.
21. இந்தச் சட்டத்தின் 20 ஆம் பிரிவை மீறி, கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் எதிராக, பணத்தை வசூலிப்பதற்காக எந்தவொரு வலுக்கட்டாய நடவடிக்கையையும், பயன்படுத்தும் எவரொருவரும்,
(i) அத்தகைய மீறுகை, 20 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (a) அல்லது (b) அல்லது (c) கூறுடன் தொடர்புடையதாக இருக்குமிடத்து, மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இரண்டும்; மற்றும்
(ii) அத்தகைய மீறுகை, 20 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (d) அல்லது (e) கூறுடன் தொடர்புடையதாக இருக்குமிடத்து, ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதம் அல்லது இரண்டும்,
விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
தற்கொலைக்குத்
தூண்டுதல்.
மையச் சட்டம்
45/2023 22. கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால், அத்தகைய தற்கொலைக்கு உடனடி முன்பு, கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் எவரேனும் கடன் முன்பணம் கொடுத்த பணக்கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்களால், வலுக்கட்டாய நடவடிக்கைக்கு ஆளானார் என்பது நிரூபிக்கப்பட்டால், அத்தகைய பணக்கடன் வழங்கும் நிறுவனம் அல்லது அதன் முகவர்கள் அத்தகைய தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாகக் கருதப்படுவார்கள். அதனால் 2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் 108 ஆம் பிரிவின்கீழ் ஒரு குற்றத்தைப் புரிந்ததாகக் கருதப்படுவார்கள்.
விளக்கம்.- விளக்கம்.- 20, 21 மற்றும் 22 ஆம் பிரிவுகளின் நோக்கங்களுக்காக, "குடும்ப உறுப்பினர்கள்" என்ற சொற்கூறானது, கடன் பெறுபவரின் பெற்றோர், கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் என்று பொருள்படும்.
சட்டத்தின் பிற
வகைமுறைகளை
மீறுவதற்கான தண்டனை
23. இச்சட்டத்தின் வகைமுறைகளில் எதனையும் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளில் எதனையும் மீறுகின்ற எவரும், அதற்காக இந்தச் சட்டத்தில் தனியாக தண்டத்தொகை எதுவும் விதிக்கப்படாதிருந்தால், அவர் பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
கைது செய்யக்கூடிய
மற்றும் பிணையில்
வெளிவர முடியாத
24. 19 மற்றும் 23 ஆம் பிரிவுகளைத் தவிர இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் கைது செய்யக்கூடிய மற்றும் பிணையில் வெளிவர முடியாத தன்மையுடையதாகும்.
குற்றம்.
இச்சட்டத்தின்
கீழ் தண்டனை
விதிக்கப்படுவதன்
பேரில் பதிவை
இடைநிறுத்துதல்
அல்லது இரத்து
செய்தல்.
25. இச்சட்டத்தின் வகைமுறைகளின்கீழ், ஒரு பணக்கடன் வழங்கும் நிறுவனம் தண்டிக்கப்படும்போது, பணக்கடன் வழங்கும் நிறுவனத்தை பதிவு செய்த பதிவுசெய்யும் அதிகார அமைப்பு அல்லது எதனுடைய அதிகார வரம்பிற்குள் பணக்கடன் வழங்கும் நிறுவனம் செயல்படுகிறதோ அந்த பதிவுசெய்யும் அதிகார அமைப்பு, இச்சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் அத்தகைய பணக்கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தம் செய்யவோ அல்லது இரத்து செய்யவோ அல்லது இரத்து செய்ய பரிந்துரை செய்யவோ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
93நிறுமங்களால்
செய்யப்படும்
குற்றங்கள்.
26. (1) இச்சட்டத்தின் கீழ் குற்றமொன்று ஒரு நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, அக்குற்றம் இழைக்கப்பட்டபோது, அந்நிறுமத்தின் அலுவல் நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின் பொறுப்பிலிருந்த மற்றும் பொறுப்பைக்கொண்டிருந்த ஒவ்வொருவரும், மற்றும் அந்நிறுமமும், அக்குற்றத்தை செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுதலும் வேண்டும்:
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபர் எவரும், அக்குற்றம் தமக்குத் தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய குற்றத்தை தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ததாக மெய்ப்பித்தால், இச்சட்டத்தின் கீழ் வகைசெய்யப்பட்டுள்ள எந்தவிதமான தண்டனையும் அத்தகைய நபருக்கு அளிக்கப்படுதல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின்கீழ் குற்றம் எதுவும் நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்தக் குற்றமானது, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் அனுமதியுடன் அல்லது உடந்தையுடன் அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் அக்குற்றத்தைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுதல் வேண்டும்.
விளக்கம்.-விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-
(a) "நிறுமம்" என்பது, ஒரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும் மற்றும் ஒரு நிறுவகம் அல்லது பிற தனி நபர்களின் கழகத்தை உள்ளடக்கும்; மற்றும்
(b) "இயக்குநர்" என்பவர், ஒரு நிறுவகத்தைப்
பொறுத்தவரையில், நிறுவகத்தில் ஒரு பங்குதாரர் ஆவார்.
அத்தியாயம் IV.
பல்வகை.
மையச் சட்டம்
ஒவ்வொரு 45/2023
அலுவலரும்
பொது ஊழியராக
இருத்தல்.
27. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் செயல்படும் ஒவ்வொரு அலுவலர் அல்லது நபரும் 2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறின் பொருளுக்குள் ஒரு பொது ஊழியராகக் கருதப்படுவார்.
பிற சட்டங்களின்
செயல்பாடு
பாதிக்கப்படாது.
28. இச்சட்டத்தின் வகைமுறைகள், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள ஏதேனும் பிற சட்டத்துடன் கூடுதலாகவும் அவற்றை திறக்குறைவு செய்யாததாகவும் இருத்தல் வேண்டும்.
பணிப்புரைகளை
வழங்குவதற்கான
அதிகாரம்.
29. இச்சட்டத்தின் வகைமுறைகளுக்கு செயல்விளைவை அளிக்க பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், பதிவு செய்யும் அதிகார அமைப்பு அல்லது குறைதீர்ப்பாயர் அல்லது இந்தச் சட்டத்தின் அமலாக்கம் தொடர்பாக பணியமர்த்தப்பட்டுள்ள பிற நபர்கள் எவருக்கும், சட்டத்தின் வகைமுறைகளுக்கோ, அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கோ முரணாக இல்லாத, அது தக்கதெனக் கருதலாகும் அத்தகைய பணிப்புரைகளை அரசானது அவ்வப்போது வழங்கலாம்.
விதிகளைச் 30. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக
செய்வதற்கான விதிகளைச் செய்யலாம்.
அதிகாரம்.
94(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின் 31 ஆம் பிரிவின்கீழ் செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது எனச் சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையானது அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
இடர்ப்பாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.
31. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில், இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசு, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக, அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையான அல்லது உகந்ததாக அதற்குத் தோன்றுகிற, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்:
வரம்புரையாக, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டாண்டுக் காலஅளவு முடிவடைந்த பின்னர், இந்தப் பிரிவின்கீழ் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசுச் செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
95தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண்.41/2025.
1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான தொரு சட்டம்
இந்திய குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச்சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன (திருத்தச்)
மற்றும் சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிப்பிடப்படலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
7 ஆம் பிரிவிற்கான V/1882.
திருத்தம்.
2. 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 7 ஆம் பிரிவில், ''வருவாய் வாரியம்" எனும் சொற்றொடருக்காக, "அரசால் அறிவிக்கப்படலாகும், மாவட்ட ஆட்சியர் படிநிலைக்குக் குறையாத வருவாய்த் துறையின் அத்தகைய அலுவலர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
16-B-எனும் 3. முதன்மைச் சட்டத்தின் 16-A பிரிவுக்குப் பின்பு, பின்வரும்
பிரிவினை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
மையச் சட்டம்
69/1980.
16B. ஈடுசெய்யக்கூடிய காடுவளர்ப்பு நிலத்தினை ஒதுக்கக் காடாக 16B. ஈடுசெய்யக்கூடிய காடுவளர்ப்பு நிலத்தினை ஒதுக்கக் காடாக அறிவித்தல்.-அறிவித்தல்.- இந்தச் சட்டத்தில் உள்ளடங்கியது எது எவ்வாறு இருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக, 1980 ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு ) சட்டம் மற்றும் அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளின் கீழ், ஈடுசெய்யக்கூடிய காடுவளர்ப்பு நோக்கத்திற்காக, எந்த நிலத்தையும் வனத்துறைக்கு ஒதுக்கக் காடு என மாற்றப்பட்டதாக அறிவிக்கலாம்."
18 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 18 ஆம் பிரிவின் வரம்புரையில், "வருவாய் வாரியம்" எனும் சொற்றொடருக்காக, "அரசால் அறிவிக்கப்படலாகும், மாவட்ட ஆட்சியர் படிநிலைக்குக் குறையாத வருவாய்த்துறையின் அத்தகைய அலுவலர்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
9665 ஆம்
5. முதன்மைச் சட்டத்தின் 65ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது
பிரிவிற்கான மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—
மாற்றீடு.
"65. அரசு அதிகாரங்களை ஒப்படைவு செய்யலாம்.-— அரசு, "65. அரசு அதிகாரங்களை ஒப்படைவு செய்யலாம்.- அறிவிக்கையின் வாயிலாக 16, 19, 20, 22, 27 மற்றும் 58 ஆம் பிரிவுகளின் கீழ் தங்களிடம் உற்றமைந்த எந்தவொரு அதிகாரத்தையும், கூறப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்படலாகிறவாறு, மாவட்ட ஆட்சியர் படிநிலைக்குக் குறையாத வருவாய்த்துறையின் அத்தகைய அலுவலருக்கு ஒப்படைவு செய்யலாம்."
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.