Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments.- Tamil Supplement Notifications by Government - Tamil Translations - G.O. Ms. No. 54, Labour Welfare and Skill Development (I2) Department, 3rd June 2025, G.O. Ms. No. 59, Labour Welfare and Skill Development (I2) Department, 11th June 2025.

Published 13 August 2025

Type
Ordinary
Gazette no.
32
Part
Part II
Section
Section 1 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-08-13.Ordinary_32_Part-II_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
© தமிழ்நாடு அரசு 2025 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு[விலை : ரூ. 0.80 காசு
தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 32] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 13, 2025 ஆடி 28, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு–2056

பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண்.54, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I2)த் துறை, 3 ஜூன் 2025.] 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர். 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார்.

திருத்தம்.

மேற்சொன்ன திட்டத்தில், பகுதி 15-இல், உட்பகுதி (1) இல் உள்ள அட்டவணையில், நெடும்பத்தி (1) இல் தொடர் எண் 10- க்கு நிகராக நெடும்பத்தி (3) இல், "தொழிற்பயிற்சி நிறுவனத்தில் அல்லது பல்தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் பயில்வோர் (ஒவ்வொரு கல்வியாண்டிற்கும்)" என்ற சொற்றொடருக்குப் பதிலாக. தொழிற்பயிற்சி நிறுவனத்தில் அல்லது பல்தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் பயில்வோர் அல்லது செவிலியர் பட்டயப் படிப்பு அல்லது உணவளிப்பு மற்றும் சேவைகளில் பட்டயப் படிப்பு பயில்வோர்" (ஒவ்வொரு கல்வியாண்டிற்கும்)" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண்.59, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I2)த் துறை, 11 ஜூன் 2025.] 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்:-

திருத்தங்கள்

மேற்சொன்ன திட்டத்தில், பகுதி 11 இல்-

(1) உட்பகுதி (1)-க்குப் பதிலாக, அதன் கீழுள்ள விளக்கம் நீங்கலாக, பின்வரும் உட்பகுதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

[ 1 ] II-1-(T Sup) (32)—1 2

"(1) உடலுழைப்புத் தொழிலாளர்கள் அனைவரும். விபத்து ஏற்படும் நேர்வில், தனிநபர் விபத்து நிவாரணத் தொகை பெறுவதற்கு தகுதியுடையவராவர். விபத்து காரணமாகப் பணியிடத்தில் மரணம் ஏற்பட்டால் அல்லது சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணம் ஏற்பட்டால் அல்லது அத்தகைய விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போது மரணம் ஏற்பட்டால் அவர்களின் நேமகதாரர்கள் தனிநபர் விபத்து நிவாரணத் தொகை பெறுவதற்குத் தகுதியுடையவராவர்.

(2) உட்பகுதி (2)-இல், இனம் (a)-க்குப் பதிலாக, பின்வரும் இனம் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"(a) மரணம் ரூ. 8,00,000"

K. வீரராகவ ராவ், அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-13.Ordinary_32_Part-II_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-13.Ordinary_32_Part-II_Section-1-T-Sup.