Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.- Tamil Supplement Notifications by Government - Tamil Translations--CO-OPERATION, FOOD AND CONSUMER PROTECTION DEPARTMENT--ENVIRONMENT, CLIMATE CHANGE AND FOREST DEPARTMENT--LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT--LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT - G.O. Ms. No. 44, Labour Welfare and Skill Development (H2) Department, 12th February 2025--G.O. Ms. No. 85, Environment, Climate Change and Forest (Forest-5) Department, 4th June 2025--G.O. (Pa) No. 210, Labour Welfare and Skill Development (J1) Department,, 8th May 2025--G.O. (Pa) No. 265, Labour Welfare and Skill Development (J1) Department,, 27th May 2025--G.O. (Pa) No. 267, Labour Welfare and Skill Development (J1) Department,, 27th May 2025.

Published 13 August 2025

Type
Ordinary
Gazette no.
32
Part
Part II
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-08-13.Ordinary_32_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2025

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 6.40 காசு[விலை: ரூ. 6.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 32] சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 13, 2025 ஆடி 28, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை.

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 44, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (H2)த் துறை, 30 மே 2025] 2019 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 35/2019) 6 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 30.05.2025ஆம் நாளிலிருந்து, செயலுக்கு வரும் வகையில், பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு மாநிலத்திற்கான மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழுவை இதனால் அமைக்கிறார்:-

குழுவின் விவரம் வருமாறு:-

1. மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், - 600 009. தலைவர்
2. திரு. D.M. கதிர் ஆனந்த், நாடாளுமன்ற உறுப்பினர், வேலூர் தொகுதி. உறுப்பினர்
3. திரு. S. முரசொலி, நாடாளுமன்ற உறுப்பினர். தஞ்சாவூர் தொகுதி. உறுப்பினர்
4. திரு. S.R. ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தாம்பரம் தொகுதி. உறுப்பினர்
5. திரு. அன்னியூர் சிவா, சட்டமன்ற உறுப்பினர், விக்கிரவாண்டி தொகுதி. உறுப்பினர்
6. அரசு முதன்மைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னை-600 009. உறுப்பினர் செயலர்
7. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், சென்னை 600 005. உறுப்பினர்
8. பதிவாளர். தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை-600 003. உறுப்பினர்
9. தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), சென்னை-600 002. உறுப்பினர்
10. மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், இந்திய எண்ணெய் நிறுவனம், சென்னை-600 034. உறுப்பினர்
11. உதவி பொது மேலாளர். மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு, சென்னை-600 002. உறுப்பினர்
12. துணை இயக்குநர், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) தென் மண்டல அலுவலகம், X6WV+5JX, 4ஆவது குறுக்குத் தெரு. CIT வளாகம், தரமணி, சென்னை-600 013. உறுப்பினர்

II-2-(32) (T Sup)—1

[ 1 ]2

13. ஆணையர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாகத் துறை, முதல் மற்றும் 2ஆவது தளம், பழைய மீன்வளத்துறைக் கட்டடம், DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 006. உறுப்பினர்
14. தலைவர், ஈரோடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் நவ பவனம் கட்டடம் முதல் தளம், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் அருகில், பரோ சாலை, ஈரோடு-638 001. உறுப்பினர்
15. தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமை உரிமைகள் சங்கம், 4/158, PRP கட்டடம். அரசுமூடு, குலசேகரம், கன்னியாகுமரி-629 161. உறுப்பினர்
16. தலைவர், இந்திய நுகர்வோர் விழிப்புணர்வுக் கூட்டமைப்பு, எண்.91. செங்குன்றம் புதூர், அம்பத்தூர், சென்னை-600 053. உறுப்பினர்
17. தலைவர், நுகர்வோர் ஆராய்ச்சி கல்வி, செயல்பாடு, பயிற்சி மற்றும் அதிகாரமளித்தல் (CREATE) அறங்காவலர், எண் 2/84, மேலசத்திரம் தெரு, பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்-623 707. உறுப்பினர்
18. தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கம், 41, முத்து கிருஷ்ணா தெரு, கிடங்கல், திண்டிவனம்-604 001. விழுப்புரம் மாவட்டம். உறுப்பினர்
19. திரு.V.சத்தியநாராயணன், காவிரி டெல்டா உழவர் குழு, 1-136, அக்ரஹாரம் தெரு, செருவாமணி, திருவாரூர்-610 205. உறுப்பினர்
20. தலைவர், சென்னை தொழில் வர்த்தக சபை, கருமுத்து மையம், முதல் தளம், பழைய எண்.498, புதிய எண்.634, அண்ணாசாலை, சென்னை-600 005. உறுப்பினர்
21. தலைவர், தமிழ்நாடு உணவகங்கள் சங்கம், பிளாட் எண்.38, மோனித் மேன்சன். 4ஆவது தளம், 27, மோனித் சாலை, எழும்பூர், சென்னை-600 008. உறுப்பினர்
22. தலைவர், குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு (CAG)- அறங்காவலர், பழைய எண்.277B/ புதிய எண்.246, டி.டி.கே. சாலை ஜெ. ஜெ. சாலை,ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. உறுப்பினர்
23. முதல்வர், எத்திராஜ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எண்.70, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை-600 008. உறுப்பினர்

சத்ய பிரதா சாகு, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூபொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.85, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (வனம்.5)த் துறை 4 ஜீன் 2025] இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 524.78 எக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதாலும், இப்பகுதி, மத்திய ஆசிய வலசை போகும் பறவைகள் வழித்தடத்தில் உணவூட்டல் மற்றும் ஓய்வு இடங்களைக் கொண்டு வலசை போகும் பறவைகளுக்கும் அதே இடத்தில் வசிக்கிற பறவைகளுக்கும் ஒரு முக்கிய இடைத்தங்கல் இடமாக விளங்குவதாலும் ஏறத்தாழ 128 வகையான வலசைபோகும் பறவைகள் மற்றும் அதே இடத்தில் வசிக்கிற பறவைகள் இங்கு வந்து செல்வது பதிவு செய்யப்பட்டிருப்பதாலும், கடந்த ஈரநிலப் பறவைக் கணக்கெடுப்பின் போது (2023-2024), இப்பகுதியில் 10,761 ஈரநிலப் பறவைகள் வந்து செல்வது பதிவு செய்யப்பட்டிப்பதாலும்,3 மேலும், இப்பகுதி அபரிமிதமான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டு பறவைகளின் பன்னாட்டு வலசைப் பாதையில் அமைந்திருப்பதாலும் கீழ்க்காணும் விவர அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமேஸ்வரம் கிராமத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதி, வனவிலங்குகள் மற்றும் அதன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் போதுமான சுற்றுச்சூழல், விலங்கின தாவர, இயற்கை மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதாலும்,

தற்போது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் (மத்திய சட்டம் 53 / 1972) 18 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடியில் அமைந்துள்ள பகுதியை ஒரு பறவைகள் சரணாலயமாக, அதாவது பெரும் பூநாரைப் (ஃபிளமிங்கோ) பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான தனது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

விவர அட்டவணை.

1. மாவட்டத்தின் பெயர் : இராமநாதபுரம்
2. வட்டத்தின் பெயர் : இராமேஸ்வரம்
3. கிராமத்தின் பெயர் மற்றும் எண் : 2. இராமேஸ்வரம்
4. நில அளவை எண் மற்றும் பரப்பளவு : நில அளவை எண் 1054/1 1054/7 1142/5 1133/2 1063(RF) பரப்பளவு எக்டேரில் 380.18 131.40 4.88 4.75 3.57
5. சரணாலயத்தின் பரப்பளவு : 524.78 எக்டேர்
6. சரணாலயத்தின் பெயர் : பெரும் பூநாரைப் பறவைகள் (ஃபிளமிங்கோ) சரணாலயம்

வடக்கு.- இவ்வெல்லையானது கிராம எண்.2, இராமேஸ்வரம் கிராம நில அளவை எண் 1054/8 இன் கிழக்குப் பக்கம் மற்றும் நில அளவை எண் 1054/1 இன் வடக்குப் பக்கத்தில் தொடங்குகிறது. பின்னர். இவ்வெல்லையானது இராமேஸ்வரம் கிராமத்தின் நிலஅளவை எண்கள் 1054/1, 1054/6, 1054/7 ஆகியவற்றின் வடக்கு பக்கம் நெடுகிலும் கிழக்கு நோக்கிச் செல்கிறது.

வடகிழக்கு.- இவ்வெல்லையானது. இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண் 1054/7 இன் வடக்குப் பக்கமாக கிழக்கு நோக்கிச் சென்று தெற்கு நோக்கித் திரும்புகிறது. பின்னர் இவ்வெல்லையானது இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண் 1054/7 இன் கிழக்கு பக்கம், நில அளவை எண் 1153 இன் மேற்குப் பக்கம் நெடுகிலும் தெற்கு நோக்கிச் செல்கிறது.

கிழக்கு.- பின்னர் இவ்வெல்லையானது இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண்கள் 1054/7, 1055, 1144 மற்றும் 1142/5 இன் கிழக்குப் பக்கம் நெடுகிலும் தெற்கு நோக்கிச் சென்று, இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண்கள் 1153, 1152 1145 1142/3 ஆகியவற்றின் மேற்கு பக்கம் நெடுகிலும் தெற்கு நோக்கிச் செல்கிறது.

தென்கிழக்கு.- பின்னர், இவ்வெல்லையானது, இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண் 1142/5 இன் கிழக்குப் பக்கம் மற்றும் நில அளவை எண் 1142/3 இன் மேற்கு பக்கம் நெடுகிலும் தெற்கு நோக்கிச் சென்று, தேசிய நெடுஞ்சாலை 49 இலிருந்து 15 மீட்டர் முன்பாக மேற்கு நோக்கித் திரும்புகிறது. பின்னர், இவ்வெல்லையானது இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண் 1142/5 இன் தெற்குப் பக்கம் நெடுகிலும் மேற்கு நோக்கிச் செல்கிறது. இவ்வெல்லையானது. தேசிய நெடுஞ்சாலை 49 நெடுகிலும், 15 மீட்டருக்கு முன்பாக மேற்கு நோக்கிச் செல்கிறது.

தெற்கு.- பின்னர், இவ்வெல்லையானது, இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண்கள் 1142/5 மற்றும் 1133/2 இன் தெற்கு பக்கம் நெடுகிலும் மேற்கு நோக்கிச் செல்கிறது, மேலும் தேசிய நெடுஞ்சாலை 49 நெடுகிலும் 15 மீட்டருக்கு முன்பாக மேற்கு நோக்கிச் செல்கிறது. பின்னர் இவ்வெல்லையானது. இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண்கள் 1054/7, 1063 மற்றும் 1054/1 இன் தெற்கு பக்கம் நெடுகிலும் மேற்கு நோக்கிச் செல்கிறது.

தென்மேற்கு.- பின்னர், இவ்வெல்லையானது, இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண் 1054/1 இன் தெற்கு பக்கம் நெடுகிலும் மேற்கு நோக்கிச் சென்று வடக்கு நோக்கித் திரும்புகிறது. பின்னர் இவ்வெல்லையானது, இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண் 1054/1 இன் மேற்கு பக்கம் நெடுகிலும் வடக்கு நோக்கிச் செல்கிறது.

மேற்கு.- பின்னர், இவ்வெல்லையானது, இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண் 1054/1 இன் மேற்கு பக்கம் மற்றும் நில அளவை எண் 1054/8 இன் கிழக்கு பக்கம் நெடுகிலும் வடக்கு நோக்கிச் செல்கிறது.

வடமேற்கு.- பின்னர், இவ்வெல்லையானது, இராமேஸ்வரம் கிராமத்தின் நில அளவை எண் 1054/1 இன் மேற்கு பக்கம் நெடுகிலும் வடக்கு நோக்கிச் சென்று தொடக்கப் புள்ளியை அடைகிறது.

4

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் கிராமத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதியின் புவியியல் ஆயத்தொலைவுகள் வருமாறு:-

முதன்மைப் புள்ளிகள் முதன்மைப் புள்ளிகளின் திசை அட்சரேகை தீர்க்கரேகை
1 வட-மேற்கு 9°13′34.37"N 79°21'45.48"E
2 வடக்கு 9º13'31.20"N 79°19′22.27"E
3 வடக்கு 9°13′4.12"N 79°22′22.72"E
4 வடக்கு 9°12'39.22"N 79°22'52.73"E
5 வடக்கு 9°12'16.75"N 79°23'18.92"E
6 வடக்கு 9°11'54.02"N 79°23'45.50"E
7 வடகிழக்கு 9°11'32.82"N 79°24'10.29"E
8 வடகிழக்கு 9°11'30.80"N 79°24'12.64"E
9 வடகிழக்கு 9°11'29.15"N 79°24'11.61"E
10 கிழக்கு 9°11'22.18"N 79°24'7.23"E
11 கிழக்கு 9°11'20.19"N 79°24'6.06"E
12 தென்-கிழக்கு 9°11'16.93"N 79°24'4.50"E
13 தென் கிழக்கு 9°11'16.25"N 79°24'4.16"E
14 தென் கிழக்கு 9°11'16.70"N 79°24'3.38"E
15 தெற்கு 9°11'19.70"N 79°23'58.29"E
16 தெற்கு 9 11:20.92 N 79°23′59.06″E
17 தெற்கு 9°11 22.44"N 79°23'56.12"E
18 தெற்கு 9°11'21.35"N 79°23' 55.44"E
19 தெற்கு 9°11'24.20"N 79°23'50.68"E
20 தெற்கு 9°11′25.01"N 79°23'51.19"E
21 தெற்கு 911 25.53"N 79°23'50.39"E
22 தெற்கு 9°11'24.73"N 79°23′49.81"E
23 தெற்கு 9°11'26.61"N 79°23' 46.74"E
24 தெற்கு 9°11'44.98 N 79°23' 16.15"E
25 தெற்கு 9°11′52.10"N. 79°23'4.15"E
26 தெற்கு 9°11'52.53"N 79°23' 4.29"E
27 தெற்கு 911'56.17"N 79°22' 57.22"E
28 தெற்கு 9°11'58.54"N 79°22'53.13"E
29 தெற்கு 9°12'2.00"N 79°22′46.85"N
30 தெற்கு 9°12'20.97"N 79 22'21.56"E
31 தெற்கு 9°12'36.80"N 79°22' 0.45"E
32 தென் மேற்கு 9°13'10.96"N 79°21'15.56"E
33 தென் மேற்கு 9°13'12.37"N 79°21'13.68"E
34 தென் மேற்கு 9°13'13.46"N 79°21' 15.27"E
35 மேற்கு 9°13'22.35"N 79°21' 28.24" E
36 மேற்கு 9°13'29.33"N 79°21'38.41"E
37 வட-மேற்கு 9°13′32.64"N 79°21' 43.06"E

சுப்ரியா சாஹு. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

5

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை.

அறிவிக்கைகள்

[அரசாணை (ப) எண்.210, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 08 மே 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடப்படுவதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு. மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக எவரிடமிருந்தேனும் வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எவையேனுமிருப்பின், அதனை டி.எம்.எஸ்.வளாகம், சென்னை 600 006 -இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 07.07.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2இல் 248 மற்றும் 249 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2) தொ.வே/381/2021 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலீட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். தமிழ்நாடு மாநிலத்தில், காலணி தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

காலணி தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு)
மண்டலம்-A மண்டலம்-B
( ரூ . காசு) ( ரூ . காசு)
( 1 ) ( 2 )
1.நிருவாகப் பணியாளர்கள்:
(1) கணக்காளர் (உயரளவு பயிற்சி பெற்றவர்கள்) 7872.00 7760.00
(2) கண்காணிப்பாளர் / பண்டகக் காப்பாளர் 7431.00 7321.00
(3) எழுத்தர்/காசாளர்/தட்டச்சர்/நேரங்குறிப்பவர் / கணினி இயக்குபவர் 6994.00 6882.00
(4) வாகன ஓட்டுநர்/ இயந்திரக் கம்மியர் / மின்கம்மியர் 6994.00 6882.00
(5) காவலாள்/உதவியாள்/பெருக்குபவர்/தோட்டக்காரர் (பயிற்சி பெறாதவர்கள்) 6117.00 6005.00
II. தொழில்நுட்பப் பணியாளர்கள்:
(1) பயிற்சி பெற்றவர்கள் 6994.00 6882,00
(2) ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் 6555.00 6444.00
(3) பயிற்சி பெறாதவர்கள் 6117.00 6005.00

விளக்கங்கள்: (1) மண்டலம் A மற்றும் மண்டலம் B ஆகியவை பின்வரும் பகுதிகளை கொண்டிருக்கும்:-

மண்டலம்-A: அனைத்து மாநகராட்சிகள்

மண்டலம்-B: மாநகராட்சிகள் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகள்

(2) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

6

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூபாய் 37.20 (முப்பத்தேழு ரூபாய் மற்றும் இருபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அண்மைக்கால நுகர்வோர் விலைக்குறியீட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு திங்களும் அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது. ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியங்களை, 26 ஆல் வகுக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (2ப) எண் 21, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 26 மே 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும். 02.03.2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு வெளியீட்டில் பாகம் II, பிரிவு - 2 இல் 1 முதல் 18 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொவேவா/204(e)/2018 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின்கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையைக் கருதிப்பார்த்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் (அரசு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக) பணியமர்த்தப்பட்டுள் கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடுப்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளன்றும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் பணிபுரிவோர் (அரசு மருத்துவமனைகள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக)

படுக்கைகளின் எண்ணிக்கை 1-50
பணியார்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) ( 2 )
மண்டலம் -A மண்டலம் -B மண்டலம் -C
ரூ . கா. ரூ . கா. ரூ . கா.
தொகுதி-1 16,057,00 15,455.00 14,875.00
தொகுதி-2 14,425.00 13,884.00 13,363.00
தொகுதி-3 13,903.00 13,382.00 12,880.00
தொகுதி-4 13,392.00 12,890.00 12,407.00
தொகுதி-5 11,773.00 11,332.00 10,907:00
தொகுதி-6 11,087.00 10,671.00 10,271.00
தொகுதி-7 10,550.00 10,154.00 9,773.00
தொகுதி-8 படுக்கைகளின் எண்ணிக்கை 51-100 10,327.00 9,954.00 9,594.00
பணியாளர்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( 2 )
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
ரூ . கா. ரூ . கா. ரூ . கா.
தொகுதி-1 16,218.00 15,610.00 15,025.00
தொகுதி-2 14,569.00 14,023.00 13,497.00
தொகுதி-3 14,042.00 13,515.00 13,008.00
தொகுதி-4 13,526.00 13,019.00 12,531.00
தொகுதி-5 11,891,00 11,445.00 11,016.00
தொகுதி-6 11,198.00 10,778.00 10,374.00
தொகுதி-7 10,656.00 10,256.00 9,871.00
தொகுதி-8 படுக்கைகளின் எண்ணிக்கை 101-250 10,430.00 10,039.00 9,663.00
பணியாளர்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( 2 )
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
ரூ . கா. ரூ . கா. ரூ . கா.
தொகுதி-1 16,380.00 15,766.00 15,175.00
தொகுதி-2 14,715.00 14,163.00 13,632.00
தொகுதி-3 14,182.00 13,650.00 13,138.00
தொகுதி-4 13,661.00 13,149.00 12,656.00
தொகுதி-5 12,010.00 11,560.00 11,127.00
தொகுதி-6 11,310.00 10,886.00 10,478.00
தொகுதி-7 10,763.00 10,359.00 9,971.00
தொகுதி-8 படுக்கைகளின் எண்ணிக்கை 251-500 10,534.00 10,139.00 9,759.00
பணியாளர்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( 2 )
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
ரூ . கா. ரூ . கா. ரூ . கா.
தொகுதி-1 16,544.00 15,924.00 15,327.00
தொகுதி-2 14,862.00 14,305.00 13,769.00
தொகுதி-3 14,324.00 13.787.00 13,270.00
தொகுதி-4 13,798.00 13.281.00 12.783.00
தொகுதி-5 12,130.00 11,675.00 11.237.00
தொகுதி-6 11,423.00 10,995.00 10.583.00
தொகுதி-7 10,871.00 10,463.00 10.071.00
தொகுதி-8 படுக்கைகளின் எண்ணிக்கை 501-1000 10,639.00 10.240.00 9,856.00
பணியாளர்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( 2 )
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
ரூ . கா. ரூ . கா. ரூ . கா.
தொகுதி-1 16,709.00 16,082.00 15,479.00
தொகுதி-2 15,011.00 14,448.00 13,906.00
தொகுதி-3 14,467.00 13,924.00 13,402.00
தொகுதி-4 13,936.00 13,413.00 12,910.00
தொகுதி-5 12,251.00 11,792.00 11,350.00
தொகுதி-6 11,537.00 11,104.00 10,688.00
தொகுதி-7 10,980.00 10,568.00 10,172.00
தொகுதி-8 படுக்கைகளின் எண்ணிக்கை 1000-க்கு மேல் 10,745.00 10,342.00 9,954.00
பணியாளர்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) ( 2 )
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
ரூ . கா. ரூ . கா. ரூ . கா.
தொகுதி-1 16,876.00 16,243.00 15,634.00
தொகுதி-2 15,161.00 14,592.00 14,045.00
தொகுதி-3 14,612.00 14,064.00 13,537.00
தொகுதி-4 14,075.00 13,547.00 13,039.00
தொகுதி-5 12,374.00 11,910.00 11,463.00
தொகுதி-6 11,652.00 11,215.00 10,794.00
தொகுதி-7 11,090.00 10,674.00 10,274.00
தொகுதி-8 10,852.00 10,445.00 10,053.00
7 8

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் (அரசு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக) பணி மற்றும் தகுதி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களின் வகைப்பாடுகள் தொகுதி 1

வகைப்பாடு :-அலுவலகம் மற்றும் பொது வகைப்பாடு

1. பொது மேலாளர்

2. நிருவாகத் தலைவர்கள்

3. நிருவாக அலுவலர்

வகைப்பாடு II - பதிவுபெற்ற செவிலியர்கள்

1. செவிலியர் இயக்குநர்

2. தலைமைச் செவிலியர் அலுவலர்

வகைப்பாடு III -மருத்துவம் / துணை மருத்துவம் / துணை சுகாதாரப் பிரிவில்

பணிபுரிவோர்

1. நுண்ணுயிரியலாளர்

2. பணி மருத்துவ அலுவலர்கள்9 தொகுதி 2

வகைப்பாடு I - அலுவலகம் மற்றும் பொது வகைப்பாடு

1. தலைமைக் கணக்காளர் / கணக்கலுவலர்

2. முதுநிலை மேலாளர்

3. மேலாளர்

4. செயலாளர்

வகைப்பாடு II - பதிவுபெற்ற செவிலியர்கள்

1. செவிலியர் கண்காணிப்பாளர்

2. தலைமைச் செவிலி

3. உதவி செவிலியர் இயக்குநர்

4. துணை செவிலியர் கண்காணிப்பாளர்

5. உதவி செவிலியர் கண்காணிப்பாளர்

6. செவிலியர் பயிற்றுநர்

வகைப்பாடு III - மருத்துவம் / துணை மருத்துவம் / துணை சுகாதாரப் பிரிவில்

பணிபுரிவோர்

1. தலைமை இயன்முறை மருத்துவர்

2. தலைமை மருத்துவ உளவியலாளர்

3. தலைமை உணவியல் வல்லுநர்

4. தலைமை மருந்தாளுநர்

5. தலைமை உயிர்வேதியியலாளர்

6. தலைமை செயற்கை இதயம்-நுரையீரல் கருவியாளுநர்

தொகுதி 3

வகைப்பாடு I - அலுவலகம் மற்றும் பொது வகைப்பாடு

1. நிருவாக உதவியாளர்

2. துணை மேலாளர்

3. உதவி மேலாளர்

4. தலைமைக் காசாளர் / முதன்மைக் காசாளர்

5. துறைத் தணிக்கையாளர்

6. மக்கள் தொடர்பு அலுவலர்

7. தள மேலாளர் / வரவேற்பு அலுவலர்

8. பராமரிப்புப் பொறுப்பாளர்

வகைப்பாடு II - பதிவுபெற்ற செவிலியர்கள்

1. செவிலியர் ஆசிரியர் / பயிற்றுநர்

2. செவிலியர் மேற்பார்வையாளர்

3. சிறப்பு செவிலியர்

4. முதுநிலை செவிலியர் (பதிவுபெற்றவர்)

5. செவிலியர் (பதிவுபெற்றவர்)

வகைப்பாடு III - மருத்துவம் / துணை மருத்துவம் / துணை சுகாதாரப் பிரிவில் பணிபுரிவோர்

1. முதுநிலை உணவியலாளர்

2. முதுநிலை மருந்தாளுநர்

3. முதுநிலை உயிரிவேதியியலாளர்

4. முதுநிலை செயற்கை இதய - நுரையீரல் கருவியாளுநர்

5. முதுநிலை செவிப்புலன் வல்லுநர்.

6. முதுநிலை மருத்துவ மருந்தாளுநர்

7. முதுநிலை கதிர்ப்படப் பதிவாளர்

8. முதுநிலை ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்

9. முதுநிலை பார்வைத்திறன் பரிசோதகர்

10. உயிரி மருத்துவப் பொறியாளர்

11. மருத்துவ ஆவணப் பராமரிப்பு அலுவலர்

12. கதிர்வீச்சு பாதுகாப்பு அலுவலர்10 தொகுதி 4

வகைப்பாடு I அலுவலகம் மற்றும் பொது வகைப்பாடு

1. உதவி மக்கள் தொடர்பு அலுவலர்

2. கணினி நிரலாளர் / இயக்குபவர்

3. பண்டகப் பொறுப்பாளர் / எழுத்தர்

4. தலைமைப் பாதுகாப்பு அலுவலர்

5. தலைமை வரவேற்பாளர்

6. வார்டு செயலாளர்

வகைப்பாடு II - பதிவுபெற்ற செவிலியர்கள்

1. பதிவுபெற்ற துணைச் செவிலியர் மற்றும் பேறுகால உதவியனார்

வகைப்பாடு III - மருத்தவம் / துணை மருத்துலம் / துணை சுகாதாரப் பிரிவில் பணிபுரிவோர்

1. இயன்முறை மருத்துவர்

2. உணவியல் வல்லுநர்

3. மருந்தாளுநர்

4. உயிரிவேதியியலாளர்

5. கதிர்ப்படப் பதிவாளர்

6. ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்

7. எக்ஸ் கதிர் தொழில்நுட்பவியலாளர்

8. பார்வை பரிசோதனை தொழில்நுட்பவியலாளர்

9. பார்வைத் திறன் பரிசோதகர்

10. கூழ்மப்பிரிப்பு தொழில்நுட்பவியலாளர்

11. உயிரி மருத்துவப் பொறியாளர்

12. மருத்துவ ஆவணப் பராமரிப்பு அலுவலர்

தொகுதி 5

வகைப்பாடு I - அலுவலகம் மற்றும் பொது வகைப்பாடு

1. எழுத்தர்

2. காப்பீட்டு உதவியாளர்

3. கணக்காளர் / கணக்கு அலுவலர்

4. காசாளர்

5. துறைத் தணிக்கையாளரின் உதவியாளர்

வகைப்பாடு II - பதிவுபெற்ற செவிலியர்கள்

வகைப்பாடு III - மருத்துவம் / துணை மருத்துவம் / துணை சுகாதாரப் பிரிவில் பணிபுரிவோர்

1. மருத்துவ ஆவணப் பராமரிப்பு தொழில்நுட்பவியலாளர்

2. காது, மூக்கு, தொண்டை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்

3. உடற்குழாய் உள்நோக்கல் தொழில்நுட்பவியலாளர்

4. இதய அறுவை ஆய்வக தொழில்நுட்பவியலாளர்

5. இதய அறுவை மயக்க மருந்து தொழில்நுட்பவியலாளர்

தொகுதி 6

வகைப்பாடு I - அலுவலகம் மற்றும் பொது வகைப்பாடு

1. பாதுகாப்பு அலுவலர்

2. வரவேற்பாளர் / வரவேற்பக உதவியாளர்

3. உதவி பண்டக காப்பாளர் / பண்டக உதவியாளர்

4 மின் கம்மியர் /சீர்வளிச்சாதன இயந்திரக் கம்மியர்

5. குழாய் கம்மியர்

6. தையல்காரர்

7. முடிதிருத்தும் பணியாளர்

8. பற்றவைப்பவர்11 9. தொலைபேசி தொடர்பு இணைப்பாளர்

10 தட்டச்சர் / தரவு உள்ளீட்டாளர்

11. ஓட்டுநர் / அவசர ஊர்தி ஓட்டுநர்

12. சமையல்காரர்

13. சலவை இயந்திரம் இயக்குபவர்

வகைப்பாடு II - பதிவுபெற்ற செவிலியர்கள்

1. செவிலியர் உதவியாளர்

வகைப்பாடு III - மருத்துவம் / துணை மருத்துவம் / துணை சுகாதாரப் பிரிவில்

பணிபுரிவோர்

1. அறுவை அரங்கு தொழில்நுட்பவியலாளர்

2. இதய மின்னலை வரைவு தொழில்நுட்பவியலாளர்

3 மூளை மின்னலை வரைவு தொழில்நுட்பவியலாளர்

4. பல் தொழில்நுட்பவியலாளர்

5. மைய கிருமிநீக்கம் செய்யப்பட்ட சிகிச்சை கருவிகள் வழங்கும் துறை (CSSD) தொழில்நுட்பவியலாளர்

6. மேற்பார்வையாளர்

7. முதுநிலை உதவியாளர்

தொகுதி 7

வகைப்பாடு I - அலுவலகம் மற்றும் பொது வகைப்பாடு

1. நீரேற்றுக் கருவி இயக்குபவர்

2. மின்தூக்கி இயக்குபவர் / மின்தூக்கி மின்கம்மியர்

3. சலவைக்காரர்

4. சமையலறை உதவியாளர்

5. கழிவு சுத்திகரிப்பு இயந்திரம் இயக்குபவர்

6. வீட்டுப் பணியாளர் / பணிப்பெண்

7. மின்னாக்கி இயக்குபவர்

வகைப்பாடு II - பதிவுபெற்ற செவிலியர்கள்

வகைப்பாடு III - மருத்துவம் /துணை மருத்துவம் / துணை சுகாதாரப் பிரிவில் பணிபுரிவோர்

1. எக்ஸ் கதிர் உதவியாளர்

2. மருந்தக உதவியாளர்

3. ஆய்வக உதவியாளர்

4. இதய மின்னலை வரைவு உதவியாளர்

5. அறுவை அரங்கு உதவியாளர்

6. புற நோயாளிகள் பிரிவு உதவியாளர்

7. கண் மருத்துவம் / பல் மருத்துவ உதவியாளர்

தொகுதி 8

வகைப்பாடு I - அலுவலகம் மற்றும் பொது வகைப்பாடு

1. உதவியாளர் / உதவியாள்

2. வார்டு பணியாள்

3. பாதுகாவலர் / காவலாளி

4. தூய்மைப் பணியாளர்

வகைப்பாடு II - பதிவுபெற்ற செவிலியர்கள்

வகைப்பாடு III - மருத்துவம் / துணை மருத்துவம் / துணை சுகாதாரப் பிரிவில் பணிபுரிவோர்

1. சுகாதாரப் பணியாளர்

2. ஏனைய யாதொரு வகைப்பாட்டைச் சேர்ந்தவர்12 விளக்கங்கள்:-

(1) மண்டலங்களின் வகைப்பாடு பின்வருமாறு:-

மண்டலம் - A - அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து சிறப்பு நிலை நகராட்சிகளை உள்ளடக்கும்.

மண்டலம் - B - சிறப்பு நிலை நகராட்சிகள் நீங்கலாக அனைத்து வகை நகராட்சிகளை உள்ளடக்கும்.

மண்டலம் - C - மண்டலம் A, மண்டலம் B, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக பிற பகுதிகளை உள்ளடக்கும்.

(2) அகவிலைப்படி : பணியாளர்களுக்கு மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-

(i) அகவிலைப்படியானது, 2013 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தற்போது கணக்கிடப்பட்ட 218 புள்ளிகள் ஆகும்) 218 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், மாதமொன்றுக்கு கூடுதலாக ரூ.44 (ரூபாய் நாற்பத்துநான்கு மட்டும்) அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.

(ii) இந்த அகவிலைப்படி முந்தைய 12 (பன்னிரண்டு) மாதங்களுக்கு. அதாவது ஜனவரி திங்கள் முதல் டிசம்பர் திங்கள் வரையிலான காலகட்டத்தின் நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.

3) "மருத்துவமனை" என்பது, நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லக்கூடிய இடமென்று பொருள்படும். ஆனால், அகநோயாளிகளாக சிகிச்சையளிக்காமல் மருத்துவ உதவி அல்லது அறுவைச் சிகிச்சையுதவி மட்டும் வழங்குகின்ற மற்றும் பணத்திற்காக அத்தகைய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுகின்ற மருந்தகம் இதில் அடங்காது.

4) "மருத்துவ இல்லம்" என்பது மனதளவில் அல்லது உடலளவில் நோய் காயம், பலவீனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவம் மற்றும் சிகிச்சை நோக்கத்திற்காக, வந்து தங்கி சிகிச்சை பெறுகின்ற இடம் என்று பொருள்படும்.

5) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.

6) நாட்கூலியைக் கணக்கிட, மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்

7) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களில்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

[அரசாணை (ப) எண்.265, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 27 மே 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 /1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடப்படுவதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை 600 006, டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 07.07.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல், 249-250ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ.வே/382/2021 ஆம் எண்ணிட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், தச்சுத் தொழில் மற்றும் கருமான் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பணி வகைகளுக்கு / பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதியவீதங்களை, அந்த விவர அட்டவணையின் நெடும்பத்தி (3)-இன் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

13

விவர அட்டவணை

தச்சுத் தொழில் மற்றும் கருமான் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் எண் பணியின் /பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (நாளொன்றுக்கு)
( 1 ) ( 2 ) ( 3 )
மண்டலம்-A ( ரூ . காசு) மண்டலம்-B ( ரூ . காசு) மண்டலம்-C ( ரூ . காசு)
1. தச்சுத்தொழில்
(A) உயரளவு பயிற்சி பெற்றோர்
(1) மேற்பார்வையாளர் 575.00 509.00 474.00
(2) வடிவமைப்பாளர் (Pattern Maker)
(3) உள் அலங்கார வல்லுநர்
(4) மெத்தை - திண்டு வேலை செய்பவர்
(5) மரம் செதுக்குபவர்
(B) பயிற்சி பெற்றோர்
தச்சர் / கடைசல் பிடிப்பவர்/இழைத்தல் (மெல்லொட்டுப் பலகைப் பணிகள்) 539.00 491.00 459.00
(C) ஓரளவு பயிற்சி பெற்றோர்
(1) உதவி தச்சர் 509.00 474.00 441.50
(2) சிப்பமாக்குபவர்
(3) மெருகிடுபவர்
(4) மேலடை மெல்லொட்டுப் பலகையிடுதல் (மெல்லொட்டுப் பலகைப் பணிகள்)
(D) பயிற்சி பெறாதோர்
(1) பயிற்சியாள் 459.00 441.50 424.00
(2) உதவியாள்
(3) மெல்லொட்டுப் பலகைப் பணிகளில் ஏனைய தொழிலாளர் வகையினர்
(E) மேற்சொன்னவற்றின் கீழ் இடம்பெறாத ஏனைய யாதொரு வகையினர் 459.00 441.50 424.00
II கருமான் தொழில்
(A) பயிற்சி பெற்றோர்
(1) மேற்பார்வையாளர் 539.50 491.00 459.00
(2) பூட்டு தயாரிப்பவர்கள் உட்பட கருமான்
(3) பற்றவைப்பவர்
(4) மென்னுருக்குப் பாத்திரங்கள் செய்பவர்
(5) வேளாண் கருவிகள் செய்பவர் (கால்நடைகளுக்கான இலாடம் தயாரிப்பவர் உட்பட)
(B) ஓரளவு பயிற்சி பெற்றோர்
(1) வெட்டுதல் 509.00 474.00 441.50
(2) வளைத்தல்
(3) வண்ணம் பூசுபவர்
(C) பயிற்சி பெறாதோர் 459.00 441.50 424.00
(D) மேற்சொன்னவற்றின் கீழ் இடம்பெறாத ஏனைய யாதொரு வகையினர் 459.00 441.50 424.00
III அலுவலகப் பணியாளர்கள் (மாதமொன்றுக்கு)
(1) மேலாளர் 16713.00 15710.00 14711.00
(2) கணக்காளர்/காசாளர் 15378.00 13872.00 12884.00
(3) எழுத்தர்/தட்டச்சர்
(4) பண்டகசாலைக் காப்பாளர்
(5) அலுவலக உதவியாள் 13380.00 12710.00 12376.50
(6) காவலாள்
(7) துப்புரவுத் தொழிலாளர்/பெருக்குபவர் 12376.50 12045.00 11709.00
(8) மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு வகையினர்
14

விளக்கங்கள்விளக்கங்கள்.- (1) மண்டலங்களின் வகைப்பாடு.- மண்டலம் A, B மற்றும் C மண்டலங்களில் கீழ்க்காணும் பகுதிகள் அடங்கும்.

மண்டலம் A: அனைத்து மாநகராட்சிகள்

மண்டலம் B: அனைத்து நகராட்சிகள்

மண்டலம் C: ஏனைய பகுதிகள்

(2) அகவிலைப்படி :அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்படுகிறது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூபாய் 72.70 (எழுபத்து இரண்டு ரூபாய் எழுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான, சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு மாத ஊதியங்களை 26- ஆல் வகுக்க வேண்டும்.

(5) மாத ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதிய வீதங்களை 30-ஆல் பெருக்க வேண்டும்.

(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியதங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்

[அரசாணை (ப) எண்.267, தொழிலனர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 27 மே 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு. அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக, இதனால் வெளியிடப்படுகிறது.

15

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எதேனுமிருப்பின் அதனை சென்னை – 600 006, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக, அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 18.08.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு - 2 - இல் 314 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/தொநதிமே/528/2021 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் துணிகளை மடிக்கும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

துணிகளை மடிக்கும் தொழிலில் வேலைவாய்ப்பு

தொழிலாளர்களின் வகைகள் ( 1 ) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( மாதமொன்றுக்கு) (ரூ பை) ( 2 )
துணிகளை மடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 7534.00

விளக்கங்கள். (1) அகவிலைப்படிவிளக்கங்கள். (1) அகவிலைப்படி மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளாகும்) மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ46.79 காசுகள் நாற்பத்தாறு ரூபாய் எழுபத்தொன்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில்) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) அகவிலைப்படியின் முதல் கணக்கீடு. முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிட, மாதாந்திர ஊதியங்களை26 ஆல் வகுக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள். இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

K. வீர ராகவ ராவ், அரசு செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 13 August 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-08-13.Ordinary_32_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-08-13.Ordinary_32_Part-II_Section-2-T-Sup.