Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.- Tamil Supplement ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS DEPARTMENT--Notification -- HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT--Notification - G.O. Ms. No. 165, Environment, Climate Change and Forests [Forest (5)] Department, 28 August 2025. -- G.O. Ms. No. 133, Housing and Urban Development [Nov4(2)] Department, 10 September 2025.

Published 05 November 2025

Type
Ordinary
Gazette no.
44
Part
Part II
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-11-05.Ordinary_44_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2025

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 1.60 காசு[விலை: ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 44] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 5, 2025 ஐப்பசி 19, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 165, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன [வனம்(5)]த் துறை, 28 ஆகஸ்ட் 2025.] 2002ஆம் ஆண்டு உயிரிப் பல்வகைமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2003) 37ஆம் பிரிவு, பகுதிகளைப் பாரம்பரிய உயிரிப்பல்வகைமைத் தலங்களாக (BHS) அறிவிப்பதற்கு வகைசெய்வதாலும்;

தேசிய உயிரிப்பல்வகைமை ஆணையத்தால் வெளியிடப்பட்ட பாரம்பரிய உயிரிப்பல்வகைமைத் தலங்கள் தெரிவு மற்றும் மேலாண்மைக்கான வழிகாட்டிக் குறிப்புகளின் 4(g)ஆம் வழிகாட்டிக் குறிப்பு, காலமுறைக்கேற்ப புலம்பெயர் உயிரினங்களுக்கு உணவிற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் நீர் அல்லது நிலம் சார்ந்த வசிப்பிடங்களை வழங்கும் பகுதிகள் உயிரிப்பல்வகைமைத் தலங்களாக அடையாளங்கண்டறியப்படலாம் என வகைசெய்வதாலும், மேற்சொன்ன வழிகாட்டிக்குறிப்புகளைச் சேர்ந்த 2(e)ஆம் வழிகாட்டிக் குறிப்பு, பாரம்பரிய உயிரிப்பல்வகைமைத் தலங்கள் உருவாக்கம். உள்ளூர் மக்கள் தாமாக முன்வந்து முடிவு செய்தவை நீங்கலாக, ஏற்கெனவே உள்ள அவர்களின் நடைமுறைகள் மற்றும் பயன்பாடுகள் மீது யாதொரு கட்டுப்பாட்டையும் விதிக்கக் கூடாது என வகைசெய்வதாலும்:

எலத்தூர் ஏரி பறவைகளின் முக்கிய வாழ்விடங்களுள் ஒன்றாகவும், அவ்விடத்திலேயே வாழும் பறவைகளுக்கும் வலசை போகும் பறவைகளுக்கும் குளிர்காலத்திற்கேற்ற பகுதியாகவும் இனப்பெருக்கத்திற்கேற்ற பகுதியாகவும் அறியப்படுவதாலும், மேலும் ஊசிவால் வாத்து (Northern Pintail), வரித்தலை வாத்து (Bar-headed goose).பச்சை சிறகுகள் கொண்ட கிளுவை (Green-winged Teal ) போன்ற தனித்துவமிக்க இனங்களைக் கொண்டுள்ளதாலும், எலத்தூர் ஏரி, அழிவுநிலையிலுள்ள பறவையினத்திற்கும் [புல்வெளிக் கழுகு (Steppe Eagle), பாதிப்பிற்குள்ளாகக் கூடிய இரண்டு பறவையினங்களுக்கும் [ஆற்று ஆலா (River Tern) மற்றும் பெரிய புள்ளிக் கழுகு (Greater Spotted Eagle)] அச்சுறுத்த நிலையிலுள்ள ஐந்து பறவையினங்களுக்கும் [ஆசிய கம்பளி கழுத்து நாரை (Asian Wolly-Necked Stork), செங்கழுத்து வல்லூறு (Red Necked Falcon), சித்திர நாரை (Painted Stork), பாம்புத்தாரா (Oriental Datrer) மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன் (Black-headed Ibis)] ஆகிய பறவை இனங்களுக்கு பறவைகள் அதிகமாக வலசை போகும் காலங்களில் வசிப்பிடங்களாக அமைவதாலும்:

மேலும், மாநில அரசு, பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழ்நாடு மாநில உயிரிப்பல்வகைமை வாரியத்தின் பரிந்துரையின் பேரில், நில அளவை எண்.436-இல் அமைந்துள்ள 37.42.50 எக்டேர் பரப்பளவுடைய புவியிடங்காட்டி ஒருங்கிணைப்பு அமைப்புகளால் அமைவிடம் அறியப்பெற்ற எலத்தூர் ஏரியை, எலத்தூர் ஏரி பாரம்பரிய உயிரிப்பல்வகைமைத் தலமாக அறிவிப்பது அவசியமெனக் கருதியுள்ளதாலும்,

மேலும், மாநில அரசு. கீழேயுள்ள விவர அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள, ஈரோடு மாவட்டத்திலுள்ள எலத்தூர் ஏரி போதிய உயிரிப்பல்வகைமை முக்கியத்துவதைக் கொண்டுள்ளது எனக் கருதுவதாலும்:

II-2-(44) (T Sup)—1

[ 1 ]2 எனவே, தற்போது. 2002ஆம் ஆண்டு உயிரிப்பல்வகைமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2003) 37ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (1)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில், கீழே விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை பாரம்பரிய உயிரிப்பல்வகைமைத் தலமாக இதனால் அறிவிக்கிறார்:-

1. பாரம்பரிய உயிரிப்பல்வகைமைத் தலத்தின் பெயர் : எலத்தூர் ஏரி பாரம்பரிய உயிரிப்பல்வகைமைத் தலம்
2. மாவட்டத்தின் பெயர் : ஈரோடு
3. வட்டாரத்தின் பெயர் : நம்பியூர்
4. பேரூராட்சியின் பெயர் : எலத்தூர் பேரூராட்சி
5. நில அளவை எண் : 436
6. பரப்பளவு (எக்டேரில்) : 37.42.50
7. எல்லை விவரம் : வடக்கு : நில அளவை எண்: 437, 439, 462, 463, 464 மற்றும் 466 தெற்கு நில அளவை எண் : 434, 435, 809, 808 மற்றும் 807 கிழக்கு : நில அளவை எண்: 424, 426, 427, 429, 430, 431 மற்றும் 432 மேற்கு: நில அளவை எண்: 467 மற்றும் 806
8. புவியிடங்காட்டி ஒருங்கிணைப்பு அமைப்புகள் : 11.385139, 77.225314

சுப்ரியா சாஹு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 133, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறை, 10 செப்டம்பர் 2025.] தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 14.07.1982 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 456-457 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் II(2)/HOU/3256/82 -ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள குமாரபாளையம் உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:

"வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெயர்.

02. குமாரபாளையம் அக்ரஹாரம் (பகுதி)

03. குமாரபாளையம் (பகுதி)".

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம், அவ்வாறு கூடுதலாக சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது3 கருத்துரைகள். மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனுமிருப்பின், அவை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை- 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 134, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறை, 10 செப்டம்பர் 2025.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 17.04.1974ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 219 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II(2/RUL/2144/74 ஆம் எண் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசி உள்ளூர் திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெயர்.

20. ஈஞ்சார்

32. அனுப்பன்குளம்

11. மேலாமத்தூர்

14. காரிசேரி

13. ஏ. மீனாட்சிபுரம்

26. கொங்கலாபுரம்

25. பேர்நாயக்கன்பட்டி

34. தாயில்பட்டி"

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனம், அவ்வாறு கூடுதலாக சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பாக யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க

மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அரசால் பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எதேனுமிருப்பின், அவை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டை சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

காகர்லா உஷா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 05 November 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-11-05.Ordinary_44_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-11-05.Ordinary_44_Part-II_Section-2-T-Sup.