©
GOVERNMENT OF TAMIL NADU
2025
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 46] CHENNAI, WEDNESDAY, NOVEMBER 19, 2025 Karthigai 3, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS Pages.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் - பாண்டூர்
குறுவட்டத்திலுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமத்தினைப் பிரித்து எல்லப்பநாயுடுபேட்டை
எனும் புதிய வருவாய் கிராமம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.] .. 84-87
[83]
DTP—II-1—(46)84 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
No. II(1)/REVDM/30/2025.
[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் - பாண்டூர் குறுவட்டத்திலுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமத்தினைப் பிரித்து எல்லப்பநாயுடுபேட்டை எனும் புதிய வருவாய் கிராமம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண் 786, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 28 அக்போடர் 2025, ஐப்பசி 11, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
படிக்கவும்:-
1. அரசாணை (நிலை) எண் 2681, வருவாய்த்துறை. நாள் 01.12.1980.
2. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடித ந.க.எண்.22499/2018/அ1, நாள் 21.12.2020, 15.02.2023 மற்றும் 05.05.2025.
3. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண் ந.க.பணி6(1)/48499/2018, நாள் 12.03.2020 மற்றும் 09.07.2025.
ஆணை : எண் 786, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, ஆணை : எண் 786, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு, 28 அக்டோபர் 2025. 28 அக்டோபர் 2025.
மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம். பாண்டூர் குறுவட்டத்திலுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமத்தினைப் பிரித்து எல்லப்பநாயுடுபேட்டை எனும் புதிய வருவாய் கிராமம் உருவாக்குவது தொடர்பாக மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு தெரிவத்துள்ளார்:-
i. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், இராமஞ்சேரி வருவாய் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜி. ஆர். நாகபூஷணம் என்பவர் கிராமத்திற்குட்பட்ட எல்லப்பநாயுடுபேட்டையிலிருந்து இராமஞ்சேரி கிராம நிருவாக அலுவலரை பார்க்க வேண்டும் என்றால் கொசஸ்தலை ஆற்றை கடந்து சுமார் 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருப்பதாக தெரிவித்து, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், கிராம எண் 61 இராமஞ்சேரி வருவாய் கிராமத்தை இரண்டாகப் பிரித்து இராமஞ்சேரி மற்றும் எல்லப்பநாயுடு பேட்டை ஆகிய இரு வருவாய் கிராமங்களை உருவாக்கி தருமாறு மனு செய்துள்ளார்.
ii. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டத்தில் உள்ள கிராம எண் 61 இராமஞ்சேரி வருவாய் கிராமமானது, மிகப்பெரிய வருவாய் கிராமம் ஆகும். அதன் பரப்பு 1543.62.50 ஹெக்டேர் ஆகும். அதில் இராமஞ்சேரி ஊராட்சிக்கு 541.27.0 ஹெக்டேர்ஸ் ஆகவும் எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சிக்கு 1002.35.5 ஹெக்டேர்ஸ் ஆகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
iii. 15.02.1978-இல் வெளியிடப்பட்ட அரசிதழ் எண் பாகம் 4 பிரிவு-1-இன்படி தனி ஊராட்சியாக தொடர்ச்சியான புல எண்களின்படி பிரிக்கப்பட்டுள்ளதெனவும், 1981-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே இராமஞ்சேரி "அ" மற்றும் "ஆ" தனி வருவாய் கிராமமாக பிரித்து காட்டப்பட்டுள்ளது எனவும்.
iv. எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சியானது இராமஞ்சேரி வருவாய் கிராமத்தின் கீழ் வருவதால் பத்திரபதிவு செய்யப்படும் நிலங்களுக்கான தொகை, தனியார் கம்பெனிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளிலிருந்து கிடைக்கக்கூடிய வரி வசூல் மற்றும் கட்டிடம் கட்ட வழங்கப்படும் ஒப்புதலுக்கான வரி போன்றவை இராமஞ்சேரி கிராமத்திற்கே சென்று விடுவதால் எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும்,
V. மேலும், ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையிலிருந்து அடிக்கடி தண்ணீர் திறக்கப்படுவதாலும், பருவகாலங்களில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்பினாலும் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் மீது நீர்வரத்து அதிகமாக வரும் காலத்தில் எல்லப்பநாயுடு பேட்டை கிராம பொதுமக்கள் இராமஞ்சேரி கிராமத்திலுள்ள கிராம நிருவாக அலுவலரை சந்திக்க சுமார் 13 கி.மீ தூரம் போக்குவரத்து வசதியின்றி சுற்றி செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது எனவும், vi. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், கிராம எண் 61 இராமஞ்சேரி மதுரா எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்திற்கு தெற்கே கிராம எண்.63 குன்னவலம் கிராமம் அமைந்துள்ளதாகவும். குன்னவலம் கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் குன்னவலம் பெரிய ஏரி கரையை கடந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. மழைகாலங்களில், ஏரியின்Nov 19, 2025] TAMIL NADU GOVERNMENT GAZETTE 85 கலங்களிலிருந்து வெளியேறும் உபரி நீர் சுமார் 6 மாதங்களுக்கு மேல் செல்வதால் குன்னவலம் கிராமத்திற்கு செல்ல இயலாத சூழல் உள்ளது. மேலும், எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்திற்கு மேற்கே உள்ள கிராம எண். 62, காரணிநிசாம்பட்டு கிராமம் 15 கி.மீ தூரம் உள்ளதால் பொது மக்கள் அவசர தேவைக்கு கிராம நிருவாக அலுவலரை சந்திக்க இராமஞ்சேரி கிராமத்தினை கடந்து செல்ல வேண்டி உள்ளதால், பிரிக்கப்பட உள்ள எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தினை அருகிலுள்ள இதர கிராமங்களுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், vii. மேலும், இராமஞ்சேரி வருவாய் கிராமத்தில் உள்ள எல்லப்பநாயுடுபேட்டை பகுதியில் வசிக்கும் மக்கள் மழைகாலங்களில் கொசஸ்தலை ஆற்றை கடந்து தங்களின் அவசியத்திற்காக கிராம நிருவாக அலுவலரை சந்திக்க இராமஞ்சேரி கிராமத்திற்கு செல்ல 13 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால், எல்லப்பநாயுடுபேட்டை கிராமத்தினை தனி வருவாய் கிராமமாக உருவாக்க உத்தேசிக்கலாம் எனவும்,
viii. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 15.02.2023 நாளிட்ட கடிதத்தில், தற்போது இராமஞ்சேரி கியாமத்திலிருந்து பிரிக்கப்பட உள்ள எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சியில் ஏற்கெனவே கிராம நிருவாக அலுவலர் அலுவலக கட்டடம் மற்றும் அலுவலகத்திற்கு தேவையான தளவாடங்கள் ஊராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இராமஞ்சேரி கிராமம் பெரிய கிராமமாக உள்ளதால் கிராம உதவியாளர் பணியிடம் இராமஞ்சேரி மற்றும் எல்லப்பநாயுடுபேட்டை ஊராட்சிகளுக்கு தனித்தனியே உள்ளது. அதனால் கிராம உதவியாளர் பணியிடமும் புதியதாக உருவாக்க தேவையில்லை. ஆனால், தற்போது இரண்டு பணியிடமும் காலியாக உள்ளது. எல்லப்பநாயுடுபேட்டை தனி வருவாய் கிராமமாக பிரிக்கப்படும் பட்சத்தில் கிராம நிருவாக அலுவலருக்கான பணியிடமும் மறுபரவலமர்த்தல் முறையில் அருகிலுள்ள வருவாய் கிராமங்களின் கிராம நிருவாக அலுவலர் மூலம் கூடுதல் பொறுப்பு வகிக்க ஏற்பாடு செய்யலாம் எனவும்,
ix. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டத்தில் உள்ள கிராம எண்.61 இராமஞ்சேரி வருவாய் கிராமமானது மிகப்பெரிய வருவாய் கிராமமெனவும், அதன் மொத்த பரப்பு 1543.62.50 ஹெக்டேர் எனவும் தெரிய வருகிறது. இதனை தவிர்த்து 15.02.1978-ல் வெளியிடப்பட்ட அரசிதழ் எண். பாகம் 4 பிரிவு-1-இன்படி தனி ஊராட்சியாக தொடர்ச்சியான புலஎண்களின்படி பிரிக்கப்பட்டுள்ளதெனவும், 1981- ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே இராமஞ்சேரி "அ" மற்றும் "ஆ" தனி வருவாய் கிராமமாக பிரித்து காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிய வருகிறது.
x. மேலும், அரசாணை (நிலை) எண் 2681, வருவாய்த்துறை, நாள் 01.12.1980-இன்படி ஒரு வருவாய் கிராமத்திற்கென புதிய கிராம நிருவாக அலுவலர் பணியிடம் உருவாக்க பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| வ. எண் | அரசாணை (நிலை) எண் 2681 வருவாய்த்துறை நாள் 01.12.1980- இன்படி அளவுகோலின் விவரங்கள் | தற்போதைய இராமஞ்சேரி வருவாய் கிராமம் | பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எல்லப்பநாயுடுபேட்டை வருவாய் கிராமம் | எஞ்சிய இராமஞ்சேரி கிராமம் |
| 1 | மக்கள் தொகை (3500-5000) | 10542 | 4542 (நிபந்தனை பூர்த்தியாகிறது) | 6000 (நிபந்தனை பூர்த்தியாகிறது) |
| 2 | பட்டதாரர்களின் எண்ணிக்கை (1500-2000) | 2699 | 1578 (நிபந்தனை பூர்த்தியாகிறது) | 1121 |
| 3 | நிலத்தின் பரப்பு நன்செய் 2000-2500 ஏக்கர், புன்செய் எனில் 4000-5000 ஏக்கர் வரை (1 ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்) | 348.4 | 2475.81 நிபந்தனை பூர்த்தியாகிறது | 1008.13 |
| 4 | நில வருவாய் ரூ.20000 முதல் 25000 வரை | ரூ. 5877 | ரூ. 2231 | ரூ. 3646 |
அரசாணை (நிலை) எண் 223, வருவாய் வ.நி 1(1) துறை நாள் 07.07.2009 மற்றும் அரசாணை (நிலை) எண் 544 முதல் 549 வரை வருவாய் [வ.நி-1(1)] துறை, நாள் 20.10.2010 ஆகிய அரசாணையில் தலவரி, தலமேல்வரி, தண்ணீர் தீர்வை, கூடுதல் தண்ணீர் வரி போன்ற வரிகளை கலைந்து நிலவரி என்ற பெயரால் மட்டுமே வசூலிக்கப்படுவதால் தற்போதைய நிலவருவாய் குறைந்து காணப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
xi. மேலும், இராமஞ்சேரி மற்றும் எல்லப்பநாயுடுபேட்டை தனித்தனி ஊராட்சிகளாக பூண்டி ஒன்றியத்தின் ஆளுகையில் அமைய பெறுகிறது எனவும், வேறொரு ஒன்றியத்தின் ஆளுகைக்கு மாற்றப்பட வேண்டிய அவசியம் எழவில்லை எனவும் புதியதாக பிரிக்கப்படும் எல்லப்பநாயுடுபேட்டை வருவாய் கிராமத்திற்கு தற்போது உள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமத்தின் கிராம நிருவாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கட்டுப்பாட்டிலேயே வைக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
86 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1xii. எனவே, எல்லப்பநாயுடுப்பேட்டை வருவாய் கிராமம் தோற்றுவிக்கும் நேர்வில் கிராம நிருவாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடம் புதியதாக தோற்றுவிக்க வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை என்பதால் அரசுக்கு தொடரும் மற்றும் தொடரா செலவினம் எதும் எழவில்லை. எனவே, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கோரிக்கையினை ஏற்று பொதுமக்களின் நலன் கருதி, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம். பாண்டூர் குறுவட்டம் கிராம எண் 61 இராமஞ்சேரி வருவாய் கிராமத்தினை இரண்டாக பிரித்து கிராம எண். 146 எல்லப்பநாயுடுப்பேட்டை வருவாய் கிராமம் தனியாக தோற்றுவிக்க வருவாய் நிருவாக ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
2. கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர், மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்டம் ஆகியோரின் கருத்துருக்களை அரசு நன்கு ஆய்வு செய்து, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம். பாண்டூர் குறுவட்டத்திலுள்ள கிராம எண் 61 இராமஞ்சேரி வருவாய் கிராமத்தினை இரண்டாக பிரித்து கிராம எண் 146 எல்லப்பநாயுடுப்பேட்டை (பிற்சேர்க்கை- I (ம) II-இல் உள்ளவாறு) எனும் புதிய வருவாய் கிராமம் உருவாக்க அரசு முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடுகிறது.
3. இவ்வரசாணை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வருவாய் கிராமம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் செயல்படும்.
4. மேலே பத்தி 2-இல் புதிய வருவாய் கிராமம் உருவாக்குவது குறித்த ஆணையினை செயல்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5. இந்த அரசாணை நிதித்துறையின் கோ.எண்.10224/நிதி(வருவாய்)/2025, நாள் 23.10.2025-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.
பிற்சேர்க்கை - I
தற்போதுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமம், புதிய எல்லப்பநாயுடுபேட்டை வருவாய் கிராமம் மற்றும் எஞ்சியுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமங்களின் கிராம கணக்குகளில் புல எண்களில் ஏற்படும் மாறுதல்களின் விவரம் கீழ்க்கண்டவாறு அமையும்.
| தற்போதுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமத்தில் உள்ள மொத்த புல எண்கள் | புதிய எல்லப்பநாயுடுபேட்டை வருவாய் கிராமத்தில் அமையும் புல எண்கள் | எஞ்சியுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமத்தில் அமையும் புல எண்கள் |
| 1 முதல் 1619 வரை | 1 முதல் 793 வரை | 794,797 முதல் 806 வரை |
| 795, 796 மற்றும் 807 முதல் 814 வரை | 815 முதல் 819 வரை | |
| 820, 823, 824, 913 மற்றும் 915 முதல் 980 வரை | 821, 822 மற்றும் 825 முதல் 912 வரை மற்றும் 914 | |
| 984, 1000, 1412 முதல் 1437 வரை | 981 முதல் 983 வரை | |
| 1441 முதல் 1474 வரை | 985 முதல் 999 வரை மற்றும் 1001 முதல் 1411 வரை | |
| 1489 முதல் 1493 வரை மற்றும் 1600 முதல் 1602 வரை | 1438 முதல் 1440 வரை மற்றும் 1475 முதல்1488 வரை | |
| 1606 முதல் 1618 வரை | 1494 முதல் 1599 வரை மற்றும் 1603 முதல் 1605 வரை மற்றும் 1619 |
பிற்சேர்க்கை - II
தற்போதுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமம், புதிய எல்லப்பநாயுடுபேட்டை வருவாய் கிராமம் மற்றும் எஞ்சியுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமங்களின் ஆட்சி எல்லைப் பட்டியல் கீழ்க்கண்டவாறு அமையும்.
| வ . எண் | ஆட்சி எல்லை விவரம் | தற்போதுள்ளபடி இராமஞ்சேரி வருவாய் கிராமம் | புதிய எல்லப்பநாயுடுபேட்டை வருவாய் கிராமம் | எஞ்சியுள்ள இராமஞ்சேரி வருவாய் கிராமம் |
| 1. | தலைமையிடம் | இராமஞ்சேரி | எல்லப்பநாயுடுபேட்டை | இராமஞ்சேரி |
| 2. | பரப்பளவு (ச.கி.மீ) | 15.43 | 10.02 | 5.41 |
| 3. | நன்செய் | 133.46.0 (ஹெக்) | _ | 133.46.0 |
| 329.6462 (ஏக்கர்) | _ | 329.6462 | ||
| 4. | புன்செய் | 496.89.0 (ஹெக்) | 278.22.0 | 218.67.0 |
| 1227.3183 (ஏக்கர்) | 687.2034 | 540.1149 | ||
| 5. | புறம்போக்கு | 913.61.5 (ஹெக்) | 724.13.5 | 189.48.0 |
| 2256.629 (ஏக்கர்) | 1788.613 | 468.015 | ||
| 6. | மொத்தம் | 1543.62.5 (ஹெக்) | 1002.35.5 | 541.27.0 |
| 3812.753 (ஏக்கர்) | 2475.816 | 1336.936 | ||
| 7. | மக்கள் தொகை | 10542 | 4542 | 6000 |
| 8. | பட்டாதாரர்களின் எண்ணிக்கை | 2699 | 1578 | 1121 |
| 9. | நில வருவாய் | ரூ. 5877 | ரூ. 2231 | ரூ. 3646 |
| 10. | வருவாய் வட்டத்தின் பெயர் | திருவள்ளூர் | ||
| 11. | வருவாய் கோட்டத்தின் பெயர் | திருவள்ளூர் | ||
| 12. | சட்டமன்றம் | திருவள்ளூர் | ||
| 13. | பாராளுமன்றம் | திருவள்ளூர் | ||
| 14. | கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை | பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது |
பெ. அமுதா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU