Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances - Tamil Supplement ACTS (TAMIL) - Act No. 43 of 2025.--The Tamil Nadu Payment of Salaries (Amendment) Act, 2025, Act No. 44 of 2025.--The Tamil Nadu Repealing Act, 2025, Act No. 47 of 2025.--An Act further to amend the Tamil Nadu Fiscal Responsibility Act, 2003., Act No. 48 of 2025.--The Tamil Nadu Highways (Amendment) Act, 2025.,, Act No. 49 of 2025.--The Tamil Nadu Maritime Board (Amendment) Act, 2025.,, Act No. 50 of 2025.--The Tamil Nadu Tax on Consumption or Sale of Electricity (Amendment) Act, 2025.,, Act No. 51 of 2025.--The Tamil Nadu Private Colleges (Regulation) Amendment Act, 2025., AcT No. 52 of 2025.--The Tamil Nadu Panchayats (Fifth Amendment) Act, 2025., Act No. 53 of 2025.--The Tamil Nadu Panchayats (Fourth Amendment) Act, 2025., Act No. 54 of 2025.-- An Act to amend the Tamil Nadu Admission in Professional Educational Institutions Act, 2006.

Published 17 December 2025

Type
Ordinary
Gazette no.
50
Part
Part IV
Section
Section 2 T Sup
Identifier
in.gazette.tamilnadu.2025-12-17.Ordinary_50_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2025 [விலை: ரூ. 15.20 காசுவிலை: ரூ. 15.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 50] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 17, 2025 மார்கழி 2, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 43/2025.சட்ட எண். 43/2025.

1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்

மற்றும் தொடக்கம்மற்றும் தொடக்கம்.

வழங்கல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1 ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் தமிழ்நாடு சட்டம்

12-B 12-B XX/1951.XX/1951.

பிரிவிற்கான பிரிவிற்கான

திருத்தம்திருத்தம்.

2. 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின் 12-B பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "முப்பதாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக, "முப்பத்தைந்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

50—IV-2-(T-Sup)—1

[1]2 3 தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 44/2025.சட்ட எண். 44/2025.

குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு

சட்டம்.

இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பயன்படுத்தப்பட்ட அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக குறித்த வகையில் நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் அற்றுப்போனவையாக இருக்கும் இயற்றுச் சட்டங்கள் வெளிப்படையாக மற்றும் குறிப்பாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதால்;

இந்தியக் குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு.

1. இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல்

சட்டம் என்று வழங்கப்பெறும்.

குறித்த சில 2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்

இயற்றுச் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

சட்டங்களின்

நீக்கறவு.

காப்புரைகள்.

3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும், சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்;

மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத தன்மையையோ அல்லது செயல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டை அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை தண்டம், உதவியையோ, கடப்பாட்டையையோ, கோருதலையோ அல்லது தேவையையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது ;

கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகார வரம்பை அல்லது அமைவுமுறையோ அல்லது வாதுரையின் போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன் மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;

4

இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகார வரம்பு எதனையும் மீட்டெடுத்தல் அலுவலகம், பழக்க வழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.

5

இணைப்புப் பட்டியல்.இணைப்புப் பட்டியல்.

நீக்கறவுகள்.நீக்கறவுகள்.

(2 ஆம் பிரிவைக் காண்க)

வரிசை ஆண்டு எண் குறுந்தலைப்பு

எண்

(1) (3) (2)

(4)

தமிழ்நாடு ஒழுங்குமுறைவிதிகள்தமிழ்நாடு ஒழுங்குமுறைவிதிகள்

1. 1816 I 1816 ஆம் ஆண்டு தஞ்சாவூர் காவலர் ஒழுங்குமுறைவிதி.

2. 1816 XI 1816 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராம காவலர் ஒழுங்குமுறைவிதி.

3. 1821 IV 1821 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராம காவலர் ஒழுங்குமுறைவிதி.

தமிழ்நாடு சட்டங்கள்தமிழ்நாடு சட்டங்கள்

4. 1898 V 1898 ஆம் ஆண்டு மலபார் உயில் சட்டம்.

5. 1899 III 1899 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம்.

6. 1933 XXII 1932 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருமக்கத்தாயம் சட்டம்.

7. 1949 IX 1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு அலியசந்தன சட்டம்.

8. 1950 XXVI 1950 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொகுநிதியச் (விதிக்கப்பட்ட செலவீனங்கள்) சட்டம்.

9. 1953 II 1953 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொகுநிதியச் (பணங்களைப் பெறுதல்) சட்டம்.

10. 1954 XXIX 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் வழங்கல் நிறுவனங்கள் (கையகப்படுத்துதல்) சட்டம்.

11. 1970 24 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் தீர்வை (செல்லுந்தன்மை) சட்டம்.

12. 1979 1 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்னியல் ஆற்றல் வழங்கல் மீதான கட்டண விகிதங்கள் திருத்தம் செய்தல் சட்டம்.

13. 1986 26 1986 ஆம் ஆண்டு சென்னை குதிரைப் பந்தயச் சங்கச் (நிறுவனத்தை கையகப்படுத்துதல் மற்றும் உரிமைமாற்றம் செய்தல்) சட்டம்.

14. 1996 27 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு தொகுதி (நீக்கறவு) சட்டம்.

15. 2007 39 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் (சிறப்பு வகையங்கள்) சட்டம்.

16. 2008 20 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகரக் காவல் (நீக்கறவு) சட்டம்.

17. 2008 56 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் (சிறப்பு வகையங்கள்) சட்டம்.

6

18. 2010 7 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் (சிறப்பு வகையங்கள்) சட்டம்.

19. 2010 45 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டங்கள் (சிறப்பு வகையங்கள்) எண்.2 சட்டம்.

20. 2011 22 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (சென்னை மாநகர புறநகர் பகுதிக்கு நீட்டிப்பு செய்தல்) நீக்கறவுச் சட்டம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

7

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 27 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 47/2025.சட்ட எண். 47/2025.

2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமைச்

சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு

மற்றும் (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

4-ஆம் பிரிவிற்கான 2. 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாக

16/2003.

திருத்தம்.

பொறுப்புடைமைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,-

(i) (a) கூறில், "2025-2026" எனும் எண்ணுருக்காக, "2026- 2027" எனும் எண்ணுருவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (b) கூறில், "2025 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி" எனும் சொற்றொடருக்காக, "2026-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் தேதி" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

8 9

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 48 / 2025.சட்ட எண். 48 / 2025.

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின், எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு

மற்றும் நெடுஞ்சாலைகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

19 ஆம் 34/2002.

பிரிவிற்கான

திருத்தம்.

2. 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்), 19 ஆம் பிரிவின், (8) ஆம் உட்பிரிவில், "இந்திய தண்டனை சட்டத் தொகுப்பின் (மையச் சட்டம் XLV/1860) 175 ஆம் பிரிவு மற்றும் 176 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 210 ஆம் பிரிவு மற்றும் 211 ஆம் பிரிவு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

47 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 47 ஆம் பிரிவானது, அந்தப் பிரிவின்

பிரிவிற்கான (1) ஆம் உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும்,-

திருத்தம்.

(1) அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவில், "தண்டனைத்தீர்ப்பின் பேரில், ஆறு மாதம் வரை நீட்டிக்கப்படலாகும் ஒரு கால அளவிற்கு சிறைத்தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு பின்வரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், ஓர் அலுவலரை அல்லது அதிகாரமைப்பை செயல்பட தடுப்பது அல்லது எதிர்ப்பது தொடர்பான 53-A பிரிவின்கீழான ஒரு நடவடிக்கையில், தீர்ப்பளிக்கும் அதிகார அமைப்பானது, பொருத்தமெனக் கருதினால், எழுத்து மூலமான காரணங்களைப் பதிவு செய்த பின்பு, வழக்குத் தொடுப்பதற்குப் பரிந்துரைக்கலாம், மற்றும் அந்த நிருவாகி, அதிகார வரம்பு கொண்ட குற்றவியல் நடுவர் முன் அக்குற்ற புகாரைத் தாக்கல் செய்யலாம். தண்டனைத் தீர்ப்பின் பேரில், குற்றவாளிக்கு ஆறு மாதம் வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.".

10

48 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 48 ஆம் பிரிவில், "தண்டனைத்தீர்ப்பின் பேரில், ஐந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதத்துடனும் அத்தகைய தண்டனைத்தீர்ப்புக்குப் பின்பு நாள் ஒவ்வொன்றிற்கும் ஐம்பது ரூபாய் வரை நீட்டிக்கலாகும் மேலுமான அபராதத்துடன் தண்டிக்கப்படுதல்" என்ற சொற்றொடருக்காக, "ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு மற்றும் மீறுகை தொடருகின்ற நேர்வில், தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பு, அத்தகைய மீறுகையின் தொடருகின்ற நாள் ஒவ்வொன்றிற்கும் ஐந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கலாகும் கூடுதல் தண்டத்தொகைக்கு உள்ளாதல்" என்ற சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

49, 50, மற்றும்

51 ஆம்

பிரிவுகளுக்கான

5. முதன்மைச் சட்டத்தின் 49, 50 மற்றும் 51 ஆம் பிரிவுகளுக்காக, பின்வரும் பிரிவுகளானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

மாற்றீடு.

"49. நெடுஞ்சாலையில் முறையற்ற ஆக்கிரமிப்பு.- 26 ஆம் "49. நெடுஞ்சாலையில் முறையற்ற ஆக்கிரமிப்பு.- பிரிவினை மீறி, நெடுஞ்சாலை எதிலும் ஆக்கிரமிப்பு செய்த அல்லது கையகப்படுத்திய அல்லது 28 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ii) கூறின் கீழ் அவருக்கு சார்வு செய்யப்பட்ட அறிவிக்கைக்கு இணங்கத் தவறிய எவரும், முதல் மீறுகையினைப் பொறுத்து, இரண்டாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கும், இரண்டாவது அல்லது அடுத்தடுத்த மீறுகையினைப் பொறுத்து, ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கும் உள்ளாதல் வேண்டும் மற்றும் மீறுகையானது தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்தால், அவ்வாறு தொடர்ந்த மீறுகையின் பேரில், நாள் ஒவ்வொன்றிற்கும் ஐந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் மேலுமான தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.

விளக்கம்.- இந்தப் பிரிவு மற்றும் 51 ஆம் பிரிவின் நோக்கத்திற்காக, "இரண்டாவது அல்லது அடுத்தடுத்த மீறுகை" என்பது, தண்டத்தொகை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டு கால அளவிற்குள் ஒரு நபரால் செய்யப்பட்ட ஒரேவகையான அல்லது அதை போன்ற மீறுகை என்று பொருள்படும்.

50. நெடுஞ்சாலைகளுக்கு சேதம் விளைவித்தல்.- 46 ஆம் 50. நெடுஞ்சாலைகளுக்கு சேதம் விளைவித்தல்.- பிரிவின் வகைமுறைகளை மீறி, நெடுஞ்சாலை எதற்கும் சேதம் எதனையும் விளைவிக்க, அவரது பொறுப்பில் உள்ள வாகனம் அல்லது விலங்கு எதனையும், வேண்டுமென்றே பயன்படுத்துகிற அல்லது அனுமதிக்கிற எவரும், ஒரு இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்:

வரம்புரையாக, மேற்சொன்ன மீறுகை எதனின் தொடர்பான 53-A பிரிவின்கீழான ஒரு நடவடிக்கையில், தீர்ப்பளிக்கும் அலுவலர், பொருத்தமெனக் கருதினால், எழுத்து மூலமான காரணங்களைப் பதிவு செய்த பின்பு, வழக்குத் தொடுப்பதற்குப் பரிந்துரைக்கலாம், மற்றும் அந்த நிருவாகி, அதிகார வரம்பு கொண்ட குற்றவியல் நடுவர் முன் அக்குற்ற புகாரைத் தாக்கல் செய்யலாம். தண்டனைத் தீர்ப்பின் பேரில், குற்றவாளிக்கு மூன்று மாதம் வரை நீட்டிக்கலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத்தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று அல்லது ஒரு இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.

11

51. குறிப்பாக தண்டத்தொகை வழங்கப்படாத மீறுகைக்கான 51. குறிப்பாக தண்டத்தொகை வழங்கப்படாத மீறுகைக்கான தண்டத்தொகை.-தண்டத்தொகை.- இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையுமோ அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது ஆணைகள் எதனையுமோ மீறுகின்ற எவரும், அத்தகைய மீறுகைக்காக, இந்தச் சட்டத்தின்கீழ் பிற தண்டத்தொகை எதுவும் வழங்கப்படாதவிடத்து, முதல் மீறுகையினைப் பொறுத்து, ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கும் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த மீறுகையினைப் பொறுத்து இரண்டாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கும் உள்ளாதல் வேண்டும்.

52-A எனும் 6. முதன்மைச் சட்டத்தின் 52 ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும்

புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"52-A. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகைகள்.- இச்சட்டத்தின் "52-A. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகைகள்.- வகைமுறைகள் எதனின் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் எதனின், மீறுகையானது நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, தகுந்த மாறுதல்களுடன் 52 ஆம் பிரிவில் அடங்கியுள்ள வகைமுறைகளானது, பொருந்துதல் வேண்டும்.".

53 ஆம்

பிரிவிற்கான 7. முதன்மைச் சட்டத்தின் 53 ஆம் பிரிவிற்காகப் பின்வரும் பிரிவுகளானது, மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

மாற்றீடு.

"53. மீறுகைகளைச் சமரசமாகத் தீர்த்தல்.-(1) 47 ஆம் பிரிவின் "53. மீறுகைகளைச் சமரசமாகத் தீர்த்தல்.- (1) ஆம் உட்பிரிவில் (b) கூறு மற்றும் 50 ஆம் பிரிவு தவிர, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின் மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆனால் தண்டத்தொகை விதிக்கப்படுவதற்கு முன்பு, அவர் குறிப்பிடப்படலாகும் அத்தகைய தொகையைச் செலுத்துவதன்பேரில், நிருவாகியால் சமரசம் செய்யப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, அத்தகைய தொகையானது, எந்நேர்விலும், அந்த மீறுகைக்காக, இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படலாகும் அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதல் கூடாது.

(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் மீறுகை சமரசமாக தீர்க்கப்பட்டிருப்பின், அந்த மீறுகை தொடர்பாக, இந்தச் சட்டத்தின்கீழ் வேறு எந்த நடவடிக்கையும் தொடங்கப்படுதலோ அல்லது தொடர்ந்து நடத்தப்படுதலோ கூடாது''.

53-A. தீர்ப்பளித்தல்.-53-A. தீர்ப்பளித்தல்.- (1) அரசானது, இந்தச் சட்டத்தின்கீழ் மீறுகைகளைத் தீர்க்கும் மற்றும் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், விசாரணையை நடத்தவும் தண்டத்தொகையை விதிக்கவும், அலுவலர் ஒருவரைத் தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமனம் செய்யலாம்:

வரம்புரையாக, அரசானது, தேவைப்படலாகிறவாறு, பல

தீர்ப்பளிக்கும் அலுவலர்களை நியமனம் செய்யலாம்.

12

(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாக அல்லது அதற்கு தொடர்புடையதாக இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்குமாறு அல்லது சாட்சியம் அளிக்குமாறு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து, வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் மீறியுள்ளார், என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:

வரம்புரையாக, அத்தகைய தண்டத்தொகை எதுவும், விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் விதிக்கப்படுதலாகாது.

53-B. மேல்முறையீடு.-53-B. மேல்முறையீடு.- (1) 53-A பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற மேல்முறையீட்டு அலுவலரிடம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மேல்முறையீடு செய்யலாம்:

வரம்புரையாக, மேல்முறையீட்டாளர், அந்தக் காலஅளவிற்குள் மேல்முறையீடு செய்யாமலிருப்பதற்குப் போதிய காரணம் இருந்திருக்கிறது என மேல்முறையீட்டு அலுவலரை மனநிறைவடையச் செய்தால், அறுபது நாள் காலஅளவு கழிந்த பின்பு மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

(2) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீட்டின் தரப்பினருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(3) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அதனை முடித்து வைத்தல் வேண்டும்.

53-C. வசூலித்தல்.-53-C. வசூலித்தல்.- நேர்விற்கேற்ப, 53-A பிரிவு அல்லது 53-B பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்தவேண்டிய தொகையானது, நிலவருவாயின் நிலுவைத் தொகையை வசூலிப்பது போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.".

62 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

8. முதன்மைச் சட்டத்தின் 62 ஆம் பிரிவில், "இந்திய தண்டனை சட்டத் தொகுப்பின் 21 ஆம் பிரிவின் (மையச் சட்டம் XLV/1860)" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 2 ஆம் பிரிவின், (28) ஆம் கூறின்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

13

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 49/2025.சட்ட எண். 49/2025.

1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்சார் வாரியச் சட்டத்தை

மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்சார்

வாரிய (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 4/ 1996.

96 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

2. 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்சார் வாரியச் சட்டத்தின் (இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 96 ஆம் பிரிவில், "இந்தியத் தண்டனைச் சட்டத்தொகுப்பின் (மையச் சட்டம் XLV/1860) 21 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறு" என்ற சொற்றொடரனது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

3. முதன்மைச் சட்டத்தின் 97 மற்றும் 98 ஆம் பிரிவுகளுக்காக, பின்வரும் பிரிவுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

97 மற்றும் 98 ஆம் பிரிவுகளுக்கான

மாற்றீடு.

"97. 27 , 28 , 29 மற்றும் 30 ஆம் பிரிவுகளின் மீறுகைக்கான "97. 27 , 28 , 29 மற்றும் 30 ஆம் பிரிவுகளின் மீறுகைக்கான தண்டத்தொகை .தண்டத்தொகை .- நபர் எவரும் , 27 ஆம் பிரிவு அல்லது 28 ஆம் பிரிவு அல்லது 29 ஆம் பிரிவின்படி செய்யப்பட்ட ஆணை எதனையும் மீறுவாராயின் அல்லது 30 ஆம் பிரிவின்படி விதிக்கப்பட்ட நிபந்தனை எதற்கும் இணங்கத் தவறுவாராயின் , முதல் மீறுகையைப் பொறுத்து, ஒரு இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கும், இரண்டாம் அல்லது அடுத்தடுத்த மீறுகையைப் பொறுத்து, மூன்று இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்; மேலும் தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பும் மீறுகை தொடரும் நேர்வில், அத்தகைய மீறுகை தொடரும் நாள் ஒவ்வொன்றுக்கும் ஐந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் கூடுதல் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.

14

விளக்கம்விளக்கம்.— இந்தப் பிரிவின் மற்றும் 98 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, "இரண்டாம் அல்லது அடுத்தடுத்த மீறுகை" என்பது, தண்டத்தொகை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டு காலஅளவிற்குள் ஒரு நபரால் செய்யப்பட்ட ஒரே வகையான அல்லது அதை போன்ற மீறுகை என்று பொருள்படும்.

98. சரக்குத்துறைகள் , கப்பல்துறைகள் முதலியவற்றை 98. சரக்குத்துறைகள் , கப்பல்துறைகள் முதலியவற்றை அனுமதியின்றி நிறுவுவதற்கான தண்டத்தொகை.அனுமதியின்றி நிறுவுவதற்கான தண்டத்தொகை.- (1) நபர் எவரும் , 35 ஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுவாராயின் , இரண்டு இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்; மேலும் தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பும், மீறுகை தொடரும் நேர்வில், அந்த மீறுகை தொடர்கின்ற வரையில் நாள் ஒவ்வொன்றுக்கும் ஐந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் கூடுதல் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.

(2) நபரெவரும், (1) ஆம் உட்பிரிவின் கீழான மீறுகைக்காக தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பு, இரண்டாம் அல்லது அடுத்தடுத்த மீறுகையைப் புரிந்தால், ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறையாத, ஆனால் மூன்று இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்; மேலும் தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பும் மீறுகை தொடரும் நேர்வில், அத்தகைய மீறுகை தொடரும் நாள் ஒவ்வொன்றுக்கும் ஐந்நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் கூடுதல் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.".

99 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 99 ஆம் பிரிவில், "செலுத்த வேண்டிய தொகையை விட இரண்டு மடங்கு வரை நீட்டிக்கலாகும் அபராதத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்; ஆயினும், இது குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய்க்கும் குறையாதவாறு இருக்க வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "செலுத்த வேண்டிய தொகையை விட இரண்டு மடங்கு வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்; ஆயினும், இது அதிகபட்சம் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் மிகாதவாறு இருத்தல் வேண்டும்" என்ற சொற்றொடரனது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

101 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

5. முதன்மைச் சட்டத்தின் 101 ஆம் பிரிவில், "இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பின் (மையச் சட்டம் XLV /1860) 168 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம். 45/2023) 202 ஆம் பிரிவு" எனும் சொற்றொடரனது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

6. முதன்மைச் சட்டத்தின் 102 ஆம் பிரிவில்,-

102 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

(1) ஓரத் தலைப்பில், "பிற குற்றங்கள்" எனும் சொற்றொடருக்காக, "பிற மீறுகைகள்" எனும் சொற்றொடரனது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) "இருநூறு ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும் " எனும் சொற்றொடருக்காக, "இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்" எனும் சொற்றொடரனது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

15

7. முதன்மைச் சட்டத்தின் 102 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்

பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

102-A, 102-B, 102-C மற்றும் 102-D எனும்

"102-A. மீறுகைகளைச் சமரசமாகத் தீர்த்தல்.-

புதிய பிரிவுகளை உட்புகுத்துதல்.

102-A. மீறுகைகளைச் சமரசமாகத் தீர்த்தல்.- (1) 97, 98, 99, 102 அல்லது 110 ஆம் பிரிவின்கீழ் தண்டத்தொகைக்கு உள்ளாகக் கூடிய மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆனால் தண்டத்தொகை விதிக்கப்படுவதற்கு முன்பு, அத்தகைய அலுவலரால் குறிப்பிடலாகும் அத்தகைய தொகையைச் செலுத்துவதன் பேரில், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும், அத்தகைய அலுவலரால் சமரசம் செய்யப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, அத்தகைய தொகையானது, எந்நேர்விலும், அந்த மீறுகைக்காக, இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படக்கூடிய குறைந்தபட்ச தண்டத்தொகை ஏதேனுமிருப்பின் அதற்கு குறைவாகவும் அல்லது அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதலும் கூடாது.

(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் மீறுகை சமரசமாகத் தீர்க்கப்பட்டிருப்பின், அந்த மீறுகை தொடர்பாக, இந்தச் சட்டத்தின் கீழ் வேறு எந்த நடவடிக்கையும் தொடங்கப்படுதலோ அல்லது தொடர்ந்து நடத்தப்படுதலோ கூடாது.

102-B. தீர்ப்பளித்தல்.102-B. தீர்ப்பளித்தல்.- (1) அரசானது, இந்தச் சட்டத்தின்கீழ் மீறுகைகளைத் தீர்க்கும் மற்றும் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், விசாரணையை நடத்தவும் தண்டத்தொகையை விதிக்கவும், அலுவலர் ஒருவரைத் தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமனம் செய்யலாம்:

வரம்புரையாக, அரசானது, தேவைப்படலாகிறவாறு, பல

தீர்ப்பளிக்கும் அலுவலர்களை நியமனம் செய்யலாம்.

(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாக அல்லது அதற்கு தொடர்புடையதாக இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்குமாறு அல்லது சாட்சியம் அளிக்குமாறு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து, வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதற்கும் இணங்கத் தவறியுள்ளார், என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:

வரம்புரையாக, அத்தகைய தண்டத்தொகை எதுவும், விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் விதிக்கப்படுதல் ஆகாது.

16

102-C. மேல்முறையீடு.102-C. மேல்முறையீடு.- (1) 102-B பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற மேல்முறையீட்டு அலுவலரிடம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மேல்முறையீடு செய்யலாம்:

வரம்புரையாக, மேல்முறையீட்டாளர், அந்தக் காலஅளவிற்குள் மேல்முறையீடு செய்யாமலிருப்பதற்குப் போதிய காரணம் இருந்திருக்கிறது என மேல்முறையீட்டு அலுவலரை மனநிறைவடையச் செய்தால், அறுபது நாள் காலஅளவு கழிந்த பின்பு மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

(2) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீட்டின் தரப்பினருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(3) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அதனை முடித்து வைத்தல் வேண்டும்.

102-D. வசூலித்தல்.102-D. வசூலித்தல்.- நேர்விற்கேற்ப, 102-B பிரிவு அல்லது 102-C பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்த வேண்டிய தொகையானது, நிலவருவாயின் நிலுவைத் தொகையை வசூலிப்பது போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.

8. முதன்மைச் சட்டத்தின் 103 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்

103 ஆம் பிரிவை விட்டுவிடுதல். வேண்டும்.

104 ஆம்

9. முதன்மைச் சட்டத்தின் 104 ஆம் பிரிவிற்காக, பின்வரும்

பிரிவிற்கான பிரிவுகளானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

மாற்றீடு.

"104. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகை.- (1) இந்தச் "104. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகை. சட்டத்தின் வகைமுறைகள் எதையும் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி, ஒழுங்குமுறை விதிகள் அல்லது ஆணை எதனையும் ஒரு நிறுவனம் மீறுமிடத்து, அம்மீறுகையின்போது, அந்நிறுமத்தின் அலுவல் நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின் பொறுப்பிலிருந்த மற்றும் பொறுப்பைக் கொண்டிருந்த நபர் ஒவ்வொருவரும், அந்நிறுமமும் அம்மீறுகையைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்; மேலும் இந்தச் சட்டத்தின்கீழ் குறிப்பிடப்படலாகும் தண்டத் தொகைக்கு உள்ளாதல் வேண்டும்:

வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபர், தமக்குத் தெரியாமலேயே அம்மீறுகை செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய மீறுகையைத் தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ததாக மெய்ப்பித்தால், இந்தச் சட்டத்தின்கீழ் வகைசெய்யப்பட்டுள்ள தண்டத்தொகைக்கு அத்தகைய நபர் உள்ளாகார்.

17

(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின் கீழான மீறுகை எதனையும் நிறுமமொன்று செய்திருக்கிறவிடத்து, அந்த மீறுகையானது, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் இசைவுடன் அல்லது உடந்தையுடன் அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்த மீறுகையைச் செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின்கீழ் குறிப்பிடப்படலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.

விளக்கம்.விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-

(a) "நிறுமம்" என்பது, எந்தவொரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும்; மேலும், ஒரு பொறுப்புக்கட்டளை, ஒரு நிறுவகம், சங்கம் அல்லது பிற தனி நபர்களின் கழகத்தையும் உள்ளடக்கும்; மற்றும்

(b) "இயக்குநர்" என்பவர்,-

(i) ஒரு நிறுவகத்தைப் பொறுத்தவரையில், அந்நிறுவகத்தின்

ஒரு பங்குதாரர் ஆவார்,

(ii) ஒரு சங்கம், ஒரு பொறுப்புக்கட்டளை அல்லது பிற தனி நபர்களின் கழகம் என்பது சங்கம், பொறுப்புக்கட்டளை அல்லது பிற தனி நபர்களின் கழகத்தின் விதிகளின்கீழ், நேர்விற்கேற்ப, சங்கம், பொறுப்புக்கட்டளை அல்லது பிற தனி நபர்களின் கழகத்தின் விவகாரங்களை மேலாண்மை செய்வதற்காக பொறுப்பளிக்கப்பட்ட நபர் எவரும் என்று பொருள்படும்.".

110 ஆம் பிரிவிற்கான திருத்தம்.

10. முதன்மைச் சட்டத்தின் 110 ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவில், "இருநூறு ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய பணத்தண்டம் விதிப்பதோடு, தொடர் மீறுகையாக இருப்பின், முதல் நாளுக்குப் பின்னர் அவ்வாறு மீறுகை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் ஐம்பது ரூபாய் வரை நீடிக்கக்கூடிய மேலுமான பணத்தண்டம் விதித்துத் தண்டிக்கப்படுதலுக்கு வகைசெய்தல் வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும். மேலும், தண்டத்தொகை விதிக்கப்பட்ட பின்பும் அத்தகைய மீறுகை தொடரும் நேர்வில், அத்தகைய மீறுகை தொடரும் நாள் ஒவ்வொன்றுக்கும் இரு நூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் கூடுதல் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்" எனும் சொற்றொடரனது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

18 19

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 50/2025.சட்ட எண். 50/2025.

2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை மீதான வரிச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்

இந்திய குடியரசின், எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையில் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் நுகர்வு

மற்றும் அல்லது விற்பனை மீதான வரி (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கக்

கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

12 ஆம் 12/2003.

பிரிவிற்கான

திருத்தம்.

2. 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை மீதான வரிச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்), 12 ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவில் "இந்திய தண்டனைத் சட்டத்தொகுப்பின் (மையச் சட்டம் XLV/1860) 21 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

13 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின், (2) ஆம் உட்பிரிவில், "1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டம் (மையச் சட்டம் 2/1974)" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா (மையச் சட்டம் 46/2023)" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

17-A எனும்

4. முதன்மைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும்

புதிய பிரிவை பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

உட்புகுத்துதல்.

"17-A. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகைகள்.- இச்சட்டத்தின் "17-A. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகைகள்.- வகைமுறைகள் எதனையும் அல்லது இதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் எதனையும், ஒரு நிறுவனம் மீறுகை செய்கிறவிடத்து, தகுந்த மாறுதல்களுடன் 17 ஆம் பிரிவில் அடங்கியுள்ள வகைமுறைகளானது பொருந்துதல் வேண்டும்.".

20

19 ஆம்

5. (1) முதன்மைச் சட்டத்தின் 19 ஆம் பிரிவானது, அந்தப் பிரிவின்

பிரிவிற்கான (1) ஆம் உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும்;

திருத்தம்.

(2) அவ்வாறு மறு எண்ணிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவில், "பத்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதத்துடன் தண்டித்தல்" எனும் சொற்றொடருக்காக, "ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) அவ்வாறு திருத்தப்பட்ட (1) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும்

உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், 19-B பிரிவின்கீழ் ஒரு நடவடிக்கையில் தீர்ப்பளிக்கும் அலுவலர் பொருத்தமெனக் கருதினால், அவர் எழுத்து மூலமான காரணங்களைப் பதிவு செய்த பிறகு, வழக்குத் தொடுப்பதற்குப் பரிந்துரைக்கலாம், மேலும் அரசால் அறிவிக்கப்படலாகும் அத்தகைய அலுவலர், அதிகார வரம்பு கொண்ட குற்றவியல் நடுவர் முன்பு புகார் ஒன்றைத் தாக்கல் செய்யலாம். தண்டனைத் தீர்ப்பின் பேரில், குற்றவாளிக்கு மூன்று மாதம் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை வகைகளில் ஏதேனும் ஓன்று அல்லது ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.".

19-A, 19-B,

19-C மற்றும்

19-D எனும்

6. அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட முதன்மை சட்டத்தின் 19ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-

புதிய பிரிவுகளை

உட்புகுத்துதல்.

"19-A. மீறுகைகளைச் சமரசமாக தீர்த்தல்.- (1) 19 ஆம் பிரிவின் "19-A. மீறுகைகளைச் சமரசமாக தீர்த்தல்.- (1) ஆம் உட்பிரிவின்படி தண்டத்தொகைக்கு உள்ளாகும் மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆனால் தண்டத்தொகை விதிக்கப்படுவதற்கு முன்பு, அந்த அலுவலரால் குறிப்பிடப்படலாகும் அத்தகைய தொகையைச் செலுத்துவதன்பேரில் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் அத்தகைய அலுவலரால் சமரசம் செய்யப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, அத்தகைய தொகையானது, எந்நேர்விலும், அந்த மீறுகைக்காக, இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படலாகும் அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதல் கூடாது.

(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் மீறுகை சமரசமாக தீர்க்கப்பட்டிருப்பின், அந்த மீறுகை தொடர்பாக, இந்தச் சட்டத்தின்கீழ் வேறு எந்த நடவடிக்கையும் தொடங்கப்படுதலோ அல்லது தொடர்ந்து நடத்தப்படுதலோ கூடாது.

19-B. தீர்ப்பளித்தல்.-19-B. தீர்ப்பளித்தல்.- (1) அரசானது, இந்தச் சட்டத்தின்கீழ் மீறுகைகளைத் தீர்க்கும் மற்றும் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், விசாரணையை நடத்தவும், தண்டத்தொகையை விதிக்கவும், அலுவலர் ஒருவரைத் தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமனம் செய்யலாம்:

21

வரம்புரையாக, அரசானது, தேவைப்படலாகிறவாறு, பல

தீர்ப்பளிக்கும் அலுவலர்களை நியமனம் செய்யலாம்.

(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், சாட்சியம் அளிக்க அல்லது வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாக அல்லது அதற்கு தொடர்புடையதாக இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்குமாறு தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து, வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், 19 ஆம் பிரிவில் சுட்டப்பட்டுள்ள வகைமுறைகள் எதனையும் இணங்கத் தவறியுள்ளார், என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:

வரம்புரையாக, அத்தகைய தண்டத்தொகை எதுவும், விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் விதிக்கப்படுதலாகாது.

19-C. மேல்முறையீடு.-19-C. மேல்முறையீடு.- (1) 19-B ஆம் பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற மேல்முறையீட்டு அலுவலரிடம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மேல்முறையீடு செய்யலாம்:

வரம்புரையாக, மேல்முறையீட்டாளர், அந்தக் காலஅளவிற்குள் மேல்முறையீடு செய்யாமலிருப்பதற்குப் போதிய காரணம் இருந்திருக்கிறது என மேல்முறையீட்டு அலுவலரை மனநிறைவடையச் செய்தால், அறுபது நாள் காலஅளவு கழிந்த பின்பு மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

(2) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீட்டின் தரப்பினருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(3) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அதனை முடித்து வைத்தல் வேண்டும்.

19-D. வசூலித்தல்.-19-D. வசூலித்தல்.- நேர்விற்கேற்ப, 19-B ஆம் பிரிவு அல்லது 19-C ஆம் பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்தவேண்டிய தொகையானது, நிலவருவாயின் நிலுவைத் தொகையை வசூலிப்பது போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

22 23

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 51/2025.சட்ட எண். 51/2025.

1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லுரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின், எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையில் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லுரிகள்

மற்றும் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கக் கூடிய அத்தகைய நாளன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

குடியரசுத்

42 ஆம் தலைவரின்

பிரிவிற்கான சட்டம் 19/1976.

திருத்தம்.

2. 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லுரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்), 42 ஆம் பிரிவில், "நூறு ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதத்துடன் தண்டிக்கப்படுதல்" எனும் சொற்றொடருக்காக, "ஒரு இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

43 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 43 ஆம் பிரிவில்,-

பிரிவிற்கான (1) (1) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

திருத்தம்.

அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

" (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி எதனையும், நபரெவரும் வேண்டுமென்றே மீறுகைகள் அல்லது மீறுகைகளுக்கு முயலுதல் அல்லது மீறுகைகளுக்கு அறிந்தே உடந்தையாயிருந்துள்ளார் எனில், அவர், இரண்டு இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கும் உள்ளாதல் வேண்டும்; மேலும் தண்டத்தொகை விதித்த பிறகும் மீறுகையும் தொடரும் நேர்வில், அத்தகைய மீறுகை தொடரும் நாள் ஒவ்வொன்றுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் கூடுதல் தண்டத்தொகைக்கும் உள்ளாதல் வேண்டும்".

(2) (2) ஆம் உட்பிரிவில், "ஒரு மாதம் வரை நீட்டிக்கலாகும் ஒரு கால அளவிற்கு சிறைத்தண்டனை, அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம், அல்லது இரண்டும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "ஐந்து லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

24

43-A, 43-B.

4. முதன்மைச் சட்டத்தின் 43 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும்

43-C மற்றும் பிரிவுகள் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-

43-D எனும்

புதிய பிரிவுகளை

உட்புகுத்துதல்.

"43-A. மீறுகைகளைச் சமரசமாகத் தீர்த்தல்.- (1) 42 அல்லது 43 "43-A. மீறுகைகளைச் சமரசமாகத் தீர்த்தல். ஆம் பிரிவுகளின்கீழ் தண்டத் தொகைக்கு உள்ளாகக்கூடிய, மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆனால் தண்டத்தொகை விதிக்கப்படுவதற்கு முன்பு, அத்தகைய அலுவலரால் குறிப்பிடக்கூடிய அத்தகைய தொகையைச் செலுத்துவதன் பேரில், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும், அந்த அலுவலரால் சமரசம் செய்யப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, அத்தகைய தொகையானது, எந்நேர்விலும், அந்த மீறுகைக்கு, இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதல் கூடாது.

(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் மீறுகை சமரசமாக தீர்க்கப்பட்டிருப்பின், அந்த மீறுகை தொடர்பாக இந்தச் சட்டத்தின் கீழ் வேறு எந்த நடவடிக்கையும் தொடங்கப்படுதலோ அல்லது தொடர்ந்து நடத்தப்படுதலோ கூடாது.

43-B. தீர்ப்பளித்தல்.43-B. தீர்ப்பளித்தல்.- (1) அரசானது, இந்தச் சட்டத்தின் கீழ் மீறுகைகளைத் தீர்க்கும் மற்றும் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கங்களுக்காக, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், விசாரணையை நடத்தவும் தண்டத் தொகையை விதிக்கவும் அலுவலர் ஒருவரை தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமிக்கலாம்:

வரம்புரையாக, அரசானது, தேவைப்படலாகும், பல தீர்ப்பளிக்கும்

அலுவலர்களை நியமனம் செய்யலாம்.

(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாக அல்லது அதற்கு தொடர்புடையதாக இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்குமாறு அல்லது சாட்சியம் அளிக்குமாறு அல்லது வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து, வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் இணங்கத் தவறியுள்ளார், என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:

வரம்புரையாக, அத்தகைய தண்டத்தொகை எதுவும், விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் விதிக்கப்படுதலாகாது.

43-C. மேல்முறையீடு.43-C. மேல்முறையீடு.- (1) 43-B பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற மேல்முறையீட்டு அலுவலரிடம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மேல்முறையீடு செய்யலாம்:

25

வரம்புரையாக, மேல்முறையீட்டாளர், அந்தக் காலஅளவிற்குள் மேல்முறையீடு செய்யாமலிருப்பதற்குப் போதிய காரணம் இருந்திருக்கிறது என மேல்முறையீட்டு அலுவலரை மனநிறைவடையச் செய்தால், அறுபது நாள் காலஅளவு கழிந்த பின்பும் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

(2) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீட்டின் தரப்பினருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்ப்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(3) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அதனை முடித்து வைத்தல் வேண்டும்.

43-D. வசூலித்தல்.43-D. வசூலித்தல்.- நேர்விற்கேற்ப, 43-B பிரிவு அல்லது 43-C பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்த வேண்டிய தொகையானது, நில வருவாயின் நிலுவைத் தொகையை வசூலிப்பது போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.".

44 ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 44 ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவானது

பிரிவிற்கான மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

மாற்றீடு.

"44. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகை.- (1) இந்தச் சட்டத்தின் "44. நிறுமங்களால் செய்யப்படும் மீறுகை. வகைமுறைகள் எதையும் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதி எதனையும் ஒரு நிறுமம் மீறுமிடத்து, அம்மீறுகையின் போது, அந்நிறுமத்தின் அலுவல் நடைபெறுவதற்கு அந்நிறுமத்தின் நேரடிப் பொறுப்பிலிருந்த மற்றும் பொறுப்பைக் கொண்டிருந்த ஒவ்வொருவரும், அந்நிறுமமும், உட்பட்ட அம்மீறுகையை செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மேலும் இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.

வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபர், அம்மீறுகை தமக்குத் தெரியாமலேயே செய்யப்பட்டிருப்பதாக அல்லது அத்தகைய மீறுகையை தடுக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ததாக மெய்ப்பித்தால், இந்தச் சட்டத்தின் கீழ் வகை செய்யப்பட்டுள்ள எந்தவொரு தண்டத் தொகைக்கும் அத்தகைய நபர், உள்ளாகார்.

(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், அத்தகைய மீறுகை எதுவும் நிறுமத்தால் செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்த மீறுகையானது, அந்நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரின் அனுமதியுடன் அல்லது உடந்தையுடன் அல்லது அவருடைய கவனமின்மை காரணமாக செய்யப்பட்டிருப்பதாக மெய்ப்பிக்கப்பட்டால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் அம்மீறுகையை செய்திருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தண்டத் தொகைக்கு உள்ளாதல் வேண்டும்.

26

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக,-

(a) "நிறுமம்" என்பது, எந்தவொரு கூட்டு நிறுவனம் என்று பொருள்படும் மேலும் பொறுப்புக்கட்டளை, ஒரு நிறுவகம், சங்கம் அல்லது பிற தனி நபர்களின் கழகத்தையும் உள்ளடக்கும்; மற்றும்

(b) "இயக்குநர்" என்பவர்,

(i) நிறுவகத்தை பொறுத்தவரை, அந்நிறுவகத்தின் பங்குதாரர்

என்று பொருள்படும்,

(ii) ஒரு சங்கம், ஒரு பொறுப்புக்கட்டளை அல்லது தனிநபர்களின் பிற கழகம் என்பது அந்தச் சங்கம், பொறுப்புக்கட்டளை அல்லது பிற கழகத்தின் விதிகளின் கீழ் நேர்விற்கேற்ப சங்கம், பொறுப்புக்கட்டளை அல்லது பிற கழகத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக பொறுப்பளிக்கப்பட்ட நபர் என்று பொருள்படும்.".

45 மற்றும் 46

6. முதன்மைச் சட்டத்தின் 45 மற்றும் 46 ஆம் பிரிவுகளானது

ஆம் பிரிவுகளை விட்டுவிடப்படுதல் வேண்டும்.

விட்டுவிடுதல்.

48 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

7. முதன்மைச் சட்டத்தின் 48 ஆம் பிரிவில், "இந்திய தண்டனை சட்டத் தொகுப்பின் (மையச் சட்டம் XLV/1860) 21 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

27

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 7 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 52/2025.சட்ட எண். 52/2025.

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்

மற்றும் (ஐந்தாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் மூலம் குறித்திடலாகும்

அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

144-A ஆம் 2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன் பின்பு

21/1994.

பிரிவிற்கான இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படும்) 144-A ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (1) ஆம் உட்பிரிவில்,-

(a) "1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 9/1999)" எனும் சொற்றொடருக்காக, "(1-B) ஆம் உட்பிரிவு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

28

(b) வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரையானது

சேர்க்கப்படுத்தல் வேண்டும், அதாவது,-

"மேலும் வரம்புரையாக, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) 179-B பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினை வைத்துள்ள நபரெவரும், கூறப்பட்ட உரிமத்தோடு தொடர்புடைய, நகராட்சி எல்லைகளுக்குள் மலக்கசடு அல்லது கழிவுநீரை அப்புறப்படுத்த அனுமதிக்கின்ற நேர்வில், ஊராட்சி எல்லைகளுக்குள் அவற்றைச் சேகரித்து கொண்டு செல்லலாம்.";

(2) அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டவாறான, (1) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவுகளானவை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(1-A). மலக்கசடு அல்லது கழிவுநீரை சேகரிக்க, கொண்டு செல்ல அல்லது அப்புறப்படுத்த கருதுகின்ற நபரெவரும், உரிமம் பெறுவதற்காக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய விவரங்கள், ஆவணங்கள் அடங்கிய அத்தகைய படிவத்திலும் அத்தகைய கட்டணத்துடனும், உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பிடம் விண்ணப்பித்தல் வேண்டும்.

(1-B). (1-A) ஆம் உட்பிரிவின்கீழ் விண்ணப்பம் ஒன்று பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், உரிமம் வழங்கும் அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு உரிமத்தை வழங்கலாம் அல்லது அதற்கான காரணத்தை பதிவு செய்து, உரிமம் வழங்குவதற்கு மறுக்கலாம்.

(1-C). (1-B) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமமானது, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் கால அளவிற்கு செல்லுபடியாகுதல் வேண்டும்.

(1-D). உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பமானது, அது முடிவடைவதற்கு முப்பது நாட்களுக்கு முன்பு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கட்டணத்துடன் அத்தகைய முறையில் உரிமம் வழங்கும் அதிகார அமைப்பிடம், சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

(1-E). (1-B) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள கால வரம்பும் செயல்முறையும், உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு சமமாக பொருந்துதல் வேண்டும்.";

(3) (3) ஆம் உட்பிரிவில்,-

(a) (a) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(a) உரிமத்தில் குறிப்பிடலாகும் நேரம், வழித்தடம் மற்றும் வடிகட்டும் இடம் ஆகியவை தொடர்பான நெறிமுறைகளையும் வரையறைகளையும் பின்பற்றுதல் வேண்டும்;";

(b) (b) கூறில், "முறை ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய்க்கு

மிகாத" எனும் சொற்றொடரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

29

(c) (c) கூறில், "ஆய்வாளர்" எனும் சொல்லுக்காக, "உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(d) அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டவாறான, (c) கூறுக்குப்

பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"(d) குறிப்பிடப்பட்ட வாகனம், வகுத்துரைக்கப்படலாகும் புவி இடங்காட்டியுடன் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும் மற்றும் புவி இடங்காட்டி கருவியானது இடையூறு ஏதும் இல்லாமல் செயல்படுவதையும், தரவினை அனுப்புவதையும் உறுதி செய்தல் வேண்டும்.".

(4) (4) ஆம் உட்பிரிவில்,-

(a) (a) கூறில்,-

(i) "ஆய்வாளர்" எனும் சொல்லுக்காக, "உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) (i) இனத்திற்காக, பின்வரும் இனமானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(i) மலக்கசடு அல்லது கழிவுநீரை வடிகட்டுதலுக்கான

இடங்கள்;";

(b) (b) கூறில், "செயலாட்சி அலுவலர்" எனும் சொற்றொடருக்காக, "உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) (c) கூறில், "வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய அலுவலர்களைக் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவானது, குறிப்பிட்ட ஊர்திகளின் இயக்கத்தைக் கண்காணித்தல் வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "உரிமம் வழங்கும் அதிகார அமைப்பானது, உரிமதாரர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, துணை வட்டார வளர்ச்சி அலுவலரின் படிநிலைக்கு குறையாத அத்தகைய அலுவலர்களை நியமித்தல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(5). (5) ஆம் உட்பிரிவில், "நபரெவரும் இந்தப் பிரிவை மீறினால் அல்லது அதனுடன் இணங்க தவறினால்" எனும் சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது வழங்கப்பட்ட உரிமத்திற்கு உட்பட்ட நிபந்தனைகள் மற்றும் வரையறைகளின்" எனும் சொற்றொடரானது சேர்க்கப்படுதல் வேண்டும்.

(6). (6) ஆம் உட்பிரிவில்,-

(a) (a) கூறில், "மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவானது, உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பிடம் கோரலாம்" எனும் சொற்றொடருக்காக, "உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பானது" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

30

(b) (b) கூறில், "மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவானது, உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பிடம் கோரலாம்" எனும் சொற்றொடருக்காக, "உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பானது" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டவாறான, (b) கூறுக்குப்

பின்பு, பின்வரும் வரம்புரையானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

வரம்புரையாக, உரிமத்தை இரத்து செய்வதற்கான ஆணையினை பிறப்பிப்பதற்கு முன்பு, உரிமதாரருக்கு பதினைந்து நாட்களுக்குள் அவரது தரப்பு முறையீட்டினை செய்வதற்கான வாய்ப்பு ஒன்று வழங்கப்படுதல் வேண்டும்.".

(7) விளக்கத்திற்காக, பின்வரும் விளக்கமானது மாற்றாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

" விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக,-

(a) "அகற்றும் வசதி" என்பது வகுத்துரைக்கப்படக்கூடியவாறு, மலக்கசடு மற்றும் கழிவுநீரை அறிவியல் பூர்வமாக சுத்திகரித்து அகற்றுவதற்கான ஏற்பாடுகள் என்று பொருள்படும்;

(b) "உரிமம் வழங்கும் அதிகாரஅமைப்பு" என்பது (1-B) ஆம் உட்பிரிவின்கீழ் உரிமம் வழங்குவதற்காக, அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் அதிகார அமைப்பு என்று பொருள்படும்;

(c) "மலக்கசடு" என்பது செரிமானமாகாத அல்லது பாதி செரிமானமான அரைநீர்ம அல்லது அரைதிண்ம வடிவிலுள்ள, மலக்கழிவு மற்றும் சாம்பல் நீருடனான அல்லது இல்லாத கருப்புநீரின் சேர்க்கை என்று பொருள்படும்;

(d) "உரிமதாரர்" என்பவர் (1-B) ஆம் உட்பிரிவின் கீழ்

வழங்கப்பட்ட உரிமம் ஒன்றினை வைத்துள்ள நபரெவரரும் ஆவார்;

(e) "கழிவுநீர்" என்பது, கழிவுநீர்த் தொட்டி அல்லது கழிவுநீர் குளங்களில் சேர்ந்தடைந்துள்ள அல்லது அடங்கியுள்ள திரவ மற்றும் திடப்பொருள் என்று பொருள்படும்;

மையச் சட்டம்

59/1988 (f) "குறிப்பிடப்பட்ட வாகனம்" என்பது, மலக்கசடு மற்றும் கழிவுநீரை சேகரித்தல் மற்றும் கொண்டுசெல்லுதலுக்காக, 1988 ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் கீழ் அவ்வப்போது ஒப்புதலளிக்கப்படலாகும், அத்தகைய விவரக்குறிப்புகளுடன் கூடிய மோட்டார் பொருத்தப்பட்ட விசைக்குழாய் மற்றும் சேமிப்புத் தொட்டியுடன் பொருத்தப்பட்ட உறிஞ்சு சரக்குந்துகள் அல்லது அத்தகைய பிற வாகனம் என்று பொருள்படும்;

31

144- B எனும் 3. அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின் 144-

புதிய பிரிவினை

உட்புகுத்துதல்.

A ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

"144- B. சாம்பல் நீர் மேலாண்மை.

144- B. சாம்பல் நீர் மேலாண்மை.- (1) எந்தவொரு வீடு, வணிக நிறுவனம் அல்லது அமைப்பும், சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் எந்த வகையிலும் திறந்த நிலத்திலோ அல்லது எந்தவொரு நீர்நிலைகளிலோ சாம்பல்நீரை வெளியேற்றக்கூடாது. சாம்பல்நீர் அகற்றுதலானது ஊராட்சியால் குறிப்பிடப்படலாகும் நடைமுறைகளுக்கிணங்கியவாறு கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

(2) ஊராட்சியானது சாம்பல்நீரைக் கொண்டு செல்லும் வடிகால்களின் வெளியேற்றப் பகுதிகளில், அரசால் அவ்வப்போது குறிப்பிடப்படலாகும் அத்தகைய முறையில் சாம்பல் நீருக்கான இறுதி சுத்திகரிப்பு முறையை நிறுவி பராமரித்தல் வேண்டும்.

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, சாம்பல் நீர் என்பது, கழிப்பறை அல்லது சிறுநீர் கழிப்பிடத்திலிருந்து திரவமாக வழிந்தோடுகிற தண்ணீரைத் தவிர்த்து, குளியல் தொட்டிகள், பீய்ச்சுக் குழாய்கள், கழுவுத் தொட்டிகள், சமையலறை தொட்டிகள், பாத்திரங்கழுவிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் சலவை தொட்டிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை உள்ளடக்கின்ற சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் என்று பொருள்படும்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

32 33

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 53/2025.சட்ட எண். 53/2025.

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்

மற்றும் (நான்காம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, 2025 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 06 ஆம்

நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

261-A 21/1994.

பிரிவிற்கான

திருத்தம்.

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 261-A ஆம் பிரிவில், "2025 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 05 ஆம் நாள் வரையில்" எனும் சொற்றொடருக்காக, "2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 05 ஆம் நாள் வரையில்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

செல்லுந்தன்மை.

3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2025 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 06 ஆம் நாளன்றும் அதுமுதற்கொண்டும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைத் தவிர்த்து, பிற கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் அல்லது மாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் அவற்றின் செயற்பணிகளைப் புரிவதற்கும், அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின் 261-A பிரிவின்கீழ் அத்தகைய தனி அலுவலர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் 2025 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 06 ஆம் நாள் தொடங்கியும் அதுமுதற்கொண்டும், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில், இந்தச் சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும் கால அளவின்போது, கூறப்பட்ட தனி அலுவலர்களால் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

34 35

தமிழ்நாாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 12 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண். 54/2025.சட்ட எண். 54/2025.

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி

மற்றும் நிலையங்களில் சேர்க்கை (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாகக் குறித்துரைக்கக்

கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

9 ஆம் 3/2007.

பிரிவிற்கான

திருத்தம்.

2. 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி நிலையங்களில் சேர்க்கைச் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 9 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், "ஐந்து இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்" எனும் சொற்றொடருக்காக, "பத்து இலட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் தண்டத்தொகைக்கு உள்ளாதல் வேண்டும்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

36

9-A, 9-B,

3. முதன்மைச் சட்டத்தின், 9 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும்

9-C மற்றும் பிரிவுகளானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவைகளாவன,-

9-D எனும்

"9-A. மீறுகைகளைச் சமரசமாகத் தீர்த்தல்.

பிரிவுகளை

உட்புகுத்துதல்.

9-A. மீறுகைகளைச் சமரசமாகத் தீர்த்தல்.- (1) 9 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி தண்டத்தொகைக்கு உள்ளாகும் மீறுகை எதுவும், தீர்ப்பு நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன்போ அல்லது பின்போ, ஆனால் தண்டத்தொகை விதிக்கப்படுவதற்கு முன்பு, அந்த அலுவலர் குறிப்பிடப்படலாகும் அத்தகைய தொகையைச் செலுத்துவதன்பேரில் தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் அத்தகைய அலுவலரால் சமரசம் செய்யப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, அத்தகைய தொகையானது, எந்நேர்விலும், அந்த மீறுகைக்காக, இந்தச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படலாகும் அதிகபட்ச தண்டத்தொகைக்கு மேற்படுதல் கூடாது.

(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஏதேனும் மீறுகை சமரசமாகத் தீர்க்கப்பட்டிருப்பின், அந்த மீறுகை தொடர்பாக, இந்தச் சட்டத்தின்கீழ் வேறு எந்த நடவடிக்கையும் தொடங்கப்படுதலோ அல்லது தொடர்ந்து நடத்தப்படுதலோ கூடாது.

9-B. தீர்ப்பளித்தல்.- (1) அரசானது, இந்தச் சட்டத்தின்கீழ் மீறுகைகளைத் தீர்க்கும் மற்றும் தண்டத்தொகைகளைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் மூலம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில், விசாரணையை நடத்தவும் தண்டத்தொகையை விதிக்கவும், அலுவலர் ஒருவரைத் தீர்ப்பளிக்கும் அலுவலராக நியமனம் செய்யலாம்:

வரம்புரையாக, அரசானது, தேவைப்படலாகிறவாறு, தீர்ப்பளிக்கும்

அலுவலர்கள் பலரை நியமனம் செய்யலாம்.

(2) தீர்ப்பளிக்கும் அலுவலரின் கருத்தில், விசாரணையின் பொருட்கூறுகளுக்குப் பயனுள்ளதாக அல்லது அதற்கு தொடர்புடையதாக இருக்கும் எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்குமாறு, அல்லது சாட்சியம் அளிக்குமாறு அல்லது வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்த நபரெவரையும், தீர்ப்பளிக்கும் அலுவலர், அழைப்பாணை விடுத்து, வருகை தருமாறு கட்டாயப்படுத்தலாம் மற்றும் அத்தகைய விசாரணையின் பேரில், தொடர்புடைய நபர், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதனையும் இணங்கத் தவறியுள்ளார், என அவர் மனநிறைவடைந்தார் எனில், அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய தண்டத்தொகையை விதிக்கலாம்:

வரம்புரையாக, அத்தகைய தண்டத்தொகை எதுவும், விளக்கமளிப்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றை வழங்காமல் விதிக்கப்படுதலாகாது.

9-C. மேல்முறையீடு.9-C. மேல்முறையீடு.- (1) 9-B பிரிவின்கீழ் தீர்ப்பளிக்கும் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் இடருற்ற நபரெவரும், ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகிற மேல்முறையீட்டு அலுவலரிடம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் மேல்முறையீடு செய்யலாம்:

37

வரம்புரையாக, மேல்முறையீட்டாளர், அந்தக் காலஅளவிற்குள் மேல்முறையீடு செய்யாமலிருப்பதற்குப் போதிய காரணம் இருந்திருக்கிறது என மேல்முறையீட்டு அலுவலரை மனநிறைவடையச் செய்தால், அறுபது நாள் காலஅளவு கழிந்த பின்பு மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படலாம்.

(2) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீட்டின் தரப்பினருக்கு விளக்கமளிப்பதற்கான வாய்பொன்றை வழங்கிய பின்பு, அவர் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(3) மேல்முறையீட்டு அலுவலரானவர், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அதனை முடித்து வைத்தல் வேண்டும்.

9-D. வசூலித்தல்.9-D. வசூலித்தல்.- நேர்விற்கேற்ப, 9-B ஆம் பிரிவு அல்லது 9-C பிரிவின்கீழ் தண்டத்தொகை விதிக்கப்பட்டிருப்பின், அது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வைப்பீடு செய்யப்படவில்லையெனில், செலுத்தவேண்டிய தொகையானது, நிலவருவாயின் நிலுவைத் தொகையை வசூலிப்பது போன்று வசூலிக்கப்படுதல் வேண்டும்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 17 December 2025. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2025-12-17.Ordinary_50_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2025-12-17.Ordinary_50_Part-IV_Section-2-T-Sup.