© தமிழ்நாடு அரசு 2025
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை: ரூ. 7.20 காசு[விலை: ரூ. 7.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 31, 2025 மார்கழி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அ றிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை.
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண். 195, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன [வனம்(5)]த் துறை, 15 செப்டம்பர் 2025.] 2002ஆம் ஆண்டு உயிரியல் பல்வகைமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் எண். 18/2003) 37ஆம் பிரிவு, குறிப்பிட்ட பகுதிகளை பல்லுயிர் பாரம்பரியத் தலங்களாக (BHS) அறிவிப்பதற்கு வகை செய்வதாலும்;
மேலும், தேசிய உயிரிப் பல்வகைமை ஆணையத்தால் (NBA) வெளியிடப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய தலங்களைத் தெரிவு செய்து, நிருவகிப்பதற்கான வழிகாட்டிக் குறிப்புகளின் 4(g) ஆம் வழிகாட்டிக் குறிப்பில், காலமுறையாக புலம்பெயர்ந்த இனங்களுக்கு உணவளிப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் நீர்வாழ் அல்லது நிலப்பரப்பு வாழ்விடங்களை வழங்கும் பகுதிகள், பல்லுயிர் பாரம்பரிய தலங்களாக அடையாளம் காணப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாலும். 2(e)ஆம் வழிகாட்டிக் குறிப்பில், உள்ளூர் சமூகங்கள் தாமாகவே தீர்மானித்தவை நீங்கலாக, பல்லுயிர் பாரம்பரிய தலங்களை உருவாக்குவது குறித்து அவர்களின் செயலிலுள்ள நடைமுறைகள் மற்றும் பயன்பாடுகளில், யாதொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருப்பதாலும், மேலும், நாகமலைக் குன்று வறண்ட இலையுதிர்காடுகளைக் கொண்ட நாட்டு பன்முக தாவர வகைகள், முட்புதர் மற்றும் புதர் காடுகளுடன் ஆங்காங்கே புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புடன் வளமான தாவரங்கள் மற்றும் தனித்துவமான சூழலில் மட்டுமே வாழக்கூடிய முதன்மை இனங்களான இராசாளிக் கழுகு, பெரிய புள்ளி கழுகு மற்றும் பூனைப்பருந்து போன்ற பறவை பல்லுயிர் இனங்களால் சூழப்பட்டுள்ளதாலும், நாகமலைக் குன்று, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் (இரும்புக் காலத்தின்) கல் நினைவுச்சின்னம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பாறைக் குகைகள் மற்றும் இயற்கை நீரூற்றுகள்/நீர்நிலைகள் போன்றவை அவ்விடத்தின் தன்மையை எடுத்துரைக்கும் வரலாற்றுக்கு முந்தைய சான்றுகளைக் கொண்டுள்ளதாலும், தொல்பொருள் துறையின் பதிவின்படி, 700 ஆண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயரின் பெரிய கல் சிற்பம் நாகமலைக்குன்றின் வலுவான பண்பாட்டு முக்கியத்துவத்தை குறிக்கிறது என்பதாலும்,
உயிரியியல் பல்வகைமைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு உயிரிப்பலவகைமை வாரியத்தின் பரிந்துரையின் பேரில், நில அளவை எண்.725/1 இல் உள்ள 31.66.00 எக்டேர் பரப்பளவு மற்றும் நில அளவை எண் 725/2 இல் உள்ள 00.56.50 எக்டேர் பரப்பளவு புவியிடங்காட்டி ஆயத்தொலைவுகளில் அமைந்துள்ள நாகமலைக்குன்றினை நாகமலைக் குன்று பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க வேண்டியது அவசியமென மாநில அரசு கருதுவதாலும்,
கீழேயுள்ள விவர அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டத்தின் நாகமலைக்குன்று போதுமான உயிரியியல் பல்வகைமை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ்நாடு அரசு கருதுவதாலும்,
எனவே, தற்போது, 2002ஆம் ஆண்டு உயிரிப் பல்வகைமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 18/2003) 37ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு உயிரிப்பலவகைமை வாரியத்தின் பரிந்துரையின் பேரில், கீழ்க்காணும் விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அப்பகுதிகளை பல்லுயிர் பாரம்பரியத் தலமாக இதனால் அறிவிக்கிறார்:-
II-2-(52) (T Sup)—1
[ 1 ]2
| 1. | பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் பெயர் | : | நாகமலைக் குன்று உயிரியியல் பல்வகைமை பாரம்பரிய தலம் | |
| 2. | மாவட்டத்தின் பெயர் | : | ஈரோடு | |
| 3. | வட்டாரத்தின் பெயர் | : | நம்பியூர் | |
| 4. | பேரூராட்சியின் பெயர் | : | ஏலத்தூர் பேரூராட்சி | |
| 5. | நில அளவை எண்கள் மற்றும் பரப்பளவு | : | நில அளவை எண் பரப்பளவு எக்டேரில் | |
| 725/1 | 31.66.00 | |||
| 725/2 | 00.56.50 | |||
| 6. | எல்லை விவரம் | : : | வடக்கு : நில அளவை எண்: 709, 710,713, 714, 716, 717 மற்றும் 719 தெற்கு நில அளவை எண் : 724, 726, 728, 731 மற்றும் 732 கிழக்கு : நில அளவை எண்: 690, 688 மற்றும் 687 மேற்கு: நில அளவை எண்: 720, 723 மற்றும் 722 | |
| புவியிடங்காட்டி ஆயத்தொலைவுகள் | : | 11.382867, 77.291538 |
சுப்ரியா சாகு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 159, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறை, 13 ஆக்டோபர் 2025.] 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 10.04.1974 ஆம் நாளிட்ட தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் பாகம் II பிரிவு 2-இல் 208 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊள்ளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2016/74-ஆம் எண் அறிவிக்கையில் உள்ளூர் திட்டமிடல் பகுதியாக, அறிவிக்கப்பட்டுள்ள கடையநல்லூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமத்தைச் சேர்ப்பதற்கான அவரது நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
"வருவாய் கிராமத்தின் எண்ணும் பெயரும்.
13. போகநல்லூர்".
2. இந்த அறிவிக்கை, தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன பகுதிகளிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு, அவ்வாறு கூடுதலாகச் சேர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்து மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் யாதொரு மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் பெறப்படுமாயின். மேற்சொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அவை பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாக, 'அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை- 600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 179, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறை, 19 நவம்பர் 2025.] 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மயிலாடுதுறை உள்ளுர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை இதனால் சேர்ப்பதுடன், 10.04.1974 ஆம் நாளிட்ட தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் பாகம் II பிரிவு 2-இல் 206 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் நிருவாகத் துறையின்3 II(2/RUL/2005/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, அவ்வாறு செய்வதற்கான நோக்கம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில் அட்டவணையில், "74.மன்னம்பந்தல் என்ற பதிவிற்குப் பின்னர், பின்வரும் பதிவுகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் அவையாவன:-
43. மணக்குடி
29. மயிலாடுதுறை ஊரகம்
37. நீடூர்
58. நல்லத்துக்குடி
35. மகாராஜபுரம்
36. அருண்மொழித்தேவன்
47. சோழம்பேட்டை
49. மூவலூர்
60. கோவங்குடி
59. அகரகீரங்குடி
56. செருதியூர்
காகர்லா உஷா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர் (கூ.பொ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை.
அறிவிக்கைகள்
[அரசாணை (ப) எண். 544, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 22 செப்டம்பர் 2025.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடப்படுவதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு. அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 22.06.2022 ஆம் நாளிட்ட தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் பாகம் II பிரிவு 2-இல் 799 மற்றும் 800 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2/தொ.ந.தி.மே/488/2022 ஆம் எண்ணிட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அறிவிக்கைக்கு பதிலீட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பந்தல்கள் அமைக்கும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு, வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
4விவர அட்டவணைவிவர அட்டவணை
அமைக்கும் தொழிலில் வேலைவாய்ப்பு
பந்தல்பந்தல்கள்கள் அமைக்கும் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண். | பணியாளர் வகையினர் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (நாளொன்றுக்கு) | |||
| ( 1 ) | ( 2 ) | (3) | |||
| மண்டலம் | மண்டலம் | மண்டலம் | மண்டலம் | ||
| A | B | C | D | ||
| ரூ. காசு | ரூ. காசு | ரூ. காசு | ரூ. காசு | ||
| 1. | மேற்பார்வையாளர் | 595.00 | 528.00 | 432.00 | 384.50 |
| 2. | குழி தோண்டுபவர், கம்பம் நடுபவர் | 575.00 | 480.00 | 413.50 | 365.00 |
| 3. | பந்தல் கூரை வேய்பவர் | 556.00 | 451.50 | 394.00 | 346.00 |
| 4. | கூரை/வேய்பவர் கல்நார் (அஸ்பெஸ்டாஸ்) கண்ணாடி/மெல்லிய கூரை | 537.00 | 441.50 | 384.50 | 327.50 |
| 5. | பந்தல் அலங்காரத் துணி கட்டுபவர் | 537.00 | 441.50 | 384.50 | 327.50 |
| 6. | மலர் அலங்காரம் செய்பவர், பந்தல் அலங்காரம் செய்பவர் | 518.50 | 432.00 | 365.00 | 317.50 |
| 7. | தோரண வாயில் அமைப்பவர் | 499.00 | 423.00 | 356.00 | 309.00 |
| 8. | வண்ணத் துணிப்பந்தல் (ஷாமியானா) அமைப்பவர் | 480.00 | 404.00 | 346.00 | 299.00 |
| 9. | பந்தலுக்கான தென்னை ஓலை பின்னுபவர் | 461.00 | 384.50 | 337.50 | 289.00 |
| 10. | கூரை பிரிப்பவர் | 441.50 | 365.00 | 327.50 | 280.00 |
| 11. | பந்தல் பொருட்கைள எடுத்துச் செல்பவர் | 423.00 | 356.00 | 309.00 | 270.50 |
| 12. | ஒலிப்பெருக்கி / அலங்கார மின் விளக்கு அமைப்பாளர், மின்னாக்கி இயக்குபவர், | 404.00 | 346.00 | 299.00 | 260.50 |
| 13. | பந்தல் கூரையை எடுத்துச் செல்பவர் மற்றும் வழங்குபவர் | 384.50 | 337.50 | 289.00 | 250.50 |
| 14. | காவலாளி | 384.00 | 337.50 | 289.00 | 250.50 |
விளக்கங்கள்: (1) மண்டலங்களின் வகைப்பாடு:-விளக்கங்கள்: (1) மண்டலங்களின் வகைப்பாடு:-A, B, C மற்றும் D மண்டலங்களில் கீழ்க்காணும் பகுதிகள் அடங்கும்.
மண்டலம்-A: மாநகராட்சிகள்
மண்டலம்-B: நகராட்சிகள்
மண்டலம்-C: பேரூராட்சிகள்
மண்டலம்-D: கிராமங்கள்
(2) அகவிலைப்படி: (2) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுகிறது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 1.55 (ஒரு ரூபாய் ஐம்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில் ல் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) ஒரே பணியை மேற்கொள்ளும்போது அல்லது பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) மாத ஊதியங்கங்களைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியங்களை 30ஆல் பெருக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
5[அரசாணை (ப) எண். 545, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(J1)த் துறை 22 செப்டம்பர் 2025] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/ 1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதப்பட்டுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் இது தொடர்பாக எவரிடமிருந்தேனும் வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை தொழிலாளர் ஆணையர், டி.எம்.எஸ்.வளாகம், சென்னை 600 006, வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 08.12.2021 ஆம் நாளிட்ட தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழின்ழின் பாகம் II பிரிவு 2 இல், 493 மற்றும் 494 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/LWSD/851/2021 ஆம் எண் அறிவிக்கையின் பதிலீட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். தமிழ்நாடு மாநிலத்தில் வீட்டுப் பயன்பாட்டுத் துணி வகை உற்பத்தித் தொழில் அதாவது, படுக்கையறைத் துணி வகைகள் குளியலறைத் துணி வகைகள், வரவேற்பறைத் துணி வகைகள், அலங்காரத் துணி வகைகள், சமையலறைத் துணி வகைகள் மற்றும் அவற்றையொத்த இனங்கள் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
வீட்டுப் பயன்பாட்டுத் துணி வகை உற்பத்தித் தொழில், அதாவது, படுக்கையறைத் துணி வகைகள், குளியலறைத் வீட்டுப் பயன்பாட்டுத் துணி வகை உற்பத்தித் தொழில், அதாவது, படுக்கையறைத் துணி வகைகள், குளியலறைத் துணி வகைகள், வரவேற்பறைத் துணி வகைகள், அலங்காரத் துணி வகைகள், சமையலறைத் துணி வகைகள் மற்றும் துணி வகைகள், வரவேற்பறைத் துணி வகைகள், அலங்காரத் துணி வகைகள், சமையலறைத் துணி வகைகள் மற்றும் அவற்றையொத்த இனங்களைச் சேர்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு. அவற்றையொத்த இனங்களைச் சேர்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு.
| தொடர் எண் | பணி / பணியாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (மாதமொன்றுக்கு) | ||
| (1) | (2) | (3) | ||
| மண்டலம்-A | மண்டலம்-B | மண்டலம்-C | ||
| (i) | (ii) | (iii) | ||
| (ரூ.காசு) | (ரூ.காசு) | (ரூ.காசு) | ||
| முக்கிய தயாரிப்பு பணிகளில் நேரடியாக ஈடுபடாதவர்கள் | ||||
| (1) | மேலாளர் | 14124 | 14000 | 13876 |
| (2) | கணக்காளர் | 11024 | 10900 | 10776 |
| (3) | மேற்பார்வையாளர் | 10404 | 10280 | 10156 |
| (4) | ஓட்டுநர் | 10404 | 10280 | 10156 |
| (5) | கணினி இயக்குபவர் | 9908 | 9784 | 9660 |
| (6) | பண்டகக் காப்பாளர் | 9908 | 9784 | 9660 |
| (7) | மின் கம்மியர் | 9908 | 9784 | 9660 |
| (8) | பாதுகாவலர் காவலாள் | 9474 | 9350 | 9226 |
| (9) | எழுத்தர் | 9474 | 9350 | 9226 |
| முக்கிய தயாரிப்பு பணிகளில் நேரடியாக ஈடுபடாதவர்கள் | ||||
| (10) | துணி கத்தரிப்பவர் | 8916 | 8792 | 8668 |
| (11) | கிழிசலைத் தைப்பவர் | 8916 | 8792 | 8668 |
| (12) | தையற்காரர் | 8792 | 8668 | 8544 |
| (13) | இஸ்திரி போடுபவர்/இயந்திரத்தை இயக்குபவர் | 8792 | 8668 | 8544 |
| (14) | சிப்பம் கட்டுபவர் | 7924 | 7800 | 7676 |
| (15) | சரிபார்ப்பவர் | 7924 | 7800 | 7676 |
| (16) | பெருக்குபவர் / சுத்தம் செய்பவர் | 7291 | 7167 | 7043 |
| (17) | துணி நேர்த்தியாளர் | 7291 | 7167 | 7043 |
| (18) | உதவியாள்/சுமைதூக்கி | 7291 | 7167 | 7043 |
விளக்கங்கள்: (1) மண்டலங்கள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்:-
மண்டலம் A : இதில் அனைத்து மாநகராட்சிகளும் அடங்கும்:
மண்டலம் B : இதில் அனைத்து நகராட்சிகளும் அடங்கும்:
மண்டலம்-C : மண்டலம் A மற்றும் மண்டலம் B நீங்கலாக ஏனைய அனைத்துப் பகுதிகளும் அடங்கும்.
(2) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
i. அகவிலைப்படியானது 2016 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 255 புள்ளிகள்) 255 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூபாய் 27.61 (இருபத்தேழு ரூபாய் மற்றும் அறுபத்தோரு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
ii. முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு. ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
iii. முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கைதாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் யாதொரு வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியங்களை, 26 ஆல் வகுக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை (2ப) எண்.41, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை 30 செப்டம்பர் 2025] (2) 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 09.01.2019 ஆம் நாளிட்ட தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழின்ழின் பாகம் II பிரிவு 2-இல், 32-33ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ||(2)/ தொ.வே/27/2019 ஆம் எண்ணிட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கைக்கு பதிலீட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், உப்பளங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதியவீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரப்பட்டுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் வெளியிடப்படும் நாளன்றும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
உப்பளங்களில் வேலைவாய்ப்பு
| தொடர் எண். | பணியாளர்களின் வகையினர் | குறைந்த அளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூபாய். காசு) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | உப்பைச் சுரண்டி எடுத்தல் | நாளொன்றுக்கு ரூ. 284.00 |
| 2. | உப்பளத்திலிருந்து உலர்த்தும் தளத்திற்குக் கொண்டு செல்லுதல் | |
| (i) உத்தரவாதமளிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | நாளொன்றுக்கு ரூ. 280.00 | |
| (ii) செய்யும் வேலைக்கேற்ற ஊதிய வீதம் | ||
| (a) 45 மீட்டர் தொலைவு வரை (lead) கொண்டு செல்ல மெட்ரிக் டன் ஒன்றுக்கு | 42.62 | |
| (b) 45 மீட்டருக்கு மேல் 105 மீட்டர் வரையிலான தொலைவுக்குக் கொண்டு செல்ல மெட்ரிக் டன் ஒன்றுக்கு | 25.87 | |
| (c) 105 மீட்டர் தொலைவுக்கு மேல் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவுக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு | 25.87 | |
| 3 | பராமரிப்பு | நாளொன்றுக்கு ரூ. 280.00 |
| 4 | நீரிறைக்கும் எந்திரம் இயக்குபவர் | நாளொன்றுக்கு ரூ. 283.00 |
| 5 | நீரிறைக்கும் எந்திர உதவிப் பணியாளர் | நாளொன்றுக்கு ரூ. 280.00 |
| 6 | மேலாள் (Maistry) | திங்களொன்றுக்கு ரூ. 8286.00 |
| 7 | காவலாள் | திங்களொன்றுக்கு ரூ. 7895.00 |
| 8. | (i) இயந்திரக் கலப்பை (Tractor) ஓட்டுநர் (கிருஷி இயந்திரக் கலப்பை (tractor) உட்பட) (ii) நீரிறைக்கும் இயந்திரத்தை இயக்கும் கம்மியர் (டீசல் அல்லது மின்சக்தியில் உப்பைப் பொடியாக்கும் இயந்திரம்) | திங்களொன்றுக்கு ரூ. 8286.00 |
| 9. | எழுத்தர் | திங்களொன்றுக்கு ரூ. 8286.00 |
| 10. | உப்பளத்திலுள்ள உப்பை எடுத்தகற்றி, எடையிட்டு, மூட்டைக்கான பைகளில் நிரப்புதல் | 100 மூட்டைகளுக்கு ரூ. 285.70 |
| 11. | உப்பளத்திலுள்ள உப்பை எடுத்தகற்றி, எடையிட்டு, மூட்டைக்கான பைகளில் நிரப்புதல். தைத்தல் மற்றும் ஏற்றி அனுப்புதல் (30 மீட்டர் தொலைவுக்கு 75 கிலோ கிராம் முதல் 80 கிலோ கிராம் வரை எடையுள்ள மூட்டை) | 100 மூட்டைகளுக்கு ரூ. 806.89 |
| 12. | பொதுவான பணிவகைகள் (மேற்சொன்ன எந்தவொரு பணிவகையின் கீழும் வராதவை) | நாளொன்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியமான ரூ. 280.00 என்ற வரையறைக்கு உட்பட்டுச் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் |
விளக்கங்கள்.- (1) அகவிலைப்படி மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 1.73 (ஒரு ரூபாய் எழுபத்து மூன்று காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான, சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படியின் முதல் கணக்கீடு. இந்த அறிவிக்கை தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதிய வீதங்களை 26- ஆல் வகுக்க வேறுபாடும் வேண்டும்.
(ii) மாத ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதிய வீதங்களை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை (ப) எண் 615, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2025.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதிய பின்வரும் வரைவு அறிவிக்கை சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
8(2) இந்த அறிவிக்கை தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழில்ழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்து பெறப்படும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை-600 006 தொழிலாளர் ஆணையர் வழியாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 06-07-2022 ஆம் நாளிட்ட தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழின்ழின் பாகம் II பிரிவு-2 இல் 836 மற்றும் 837 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின், II(2)/தொ.ந.தி.மே/540/2022 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாக தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தேங்காய் உரித்தல் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
தேங்காய் உரித்தல் தொழிலில் வேலைவாய்ப்பு
தேங்காய் உரித்தல் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | பணிகளின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. | தேங்காய் உரித்தல்: தேங்காய் உரித்தல்: | |
| (i) நேர விகித ஊதியம் | நாளொன்றுக்கு ரூ. 357.00 | |
| (ii) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் | 1000 தேங்காய்களுக்கு ரூ. 452.05 | |
| 2. | மரம் ஏறுதல் மற்றும் தேங்காய் பறித்தல்: மரம் ஏறுதல் மற்றும் தேங்காய் பறித்தல்: | |
| (i) நேர விகித ஊதியம் | நாளொன்றுக்கு ரூ. 357.00 | |
| (ii) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் | மரம் ஒன்றுக்கு ரூ. 6.34 | |
| 3. | தேங்காய்களை தரம் பிரித்தல் தேங்காய்களை தரம் பிரித்தல் | |
| (i) நேர விகித ஊதியம் | நாளொன்றுக்கு ரூ. 299.00 | |
| (ii) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் | 1000 தேங்காய்களுக்கு ரூ. 47.47 | |
| 4. | தேங்காய்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல் | 1000 தேங்காய்களுக்கு ரூ. 452.05 |
| 5. | பயிற்சி பெறாத தொழிலாளர்கள் | நாளொன்றுக்கு ரூ. 291.00 |
| 6. | மரங்களை சுத்தப்படுத்துதல், உரமிடுதல் மற்றும் பூச்சிக்கொல்லியிடுதல் தெளித்தல் | மரம் ஒன்றிற்க்கு ரூ. 15.07 |
விளக்கங்கள்: (1) அகவிலைப்படி:விளக்கங்கள்: (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாளொன்றுக்கு ரூ. 1.80 (ஒரு ரூபாய் எண்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில்) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழிழில்ல் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே அதிகளவு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
9[அரசாணை (ப) எண் 616, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2025.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அவைைரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தாதாழ்நாடுழ்நாடு அரஅரசிசிததழில் ழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர் கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை-600 006 டி.எம்.எஸ். வளாகத்தில், உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 06.07.2022 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 837 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/தொ.ந.தி.மே/541/2022 ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். தமிழ்நாடு மாநிலத்தில் அரிசி ஆலை, மாவு ஆலை மற்றும் பருப்பு ஆலையில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
யாதொருயாதொரு அரிசி ஆலை, மாவு ஆலை அரிசி ஆலை, மாவு ஆலை அல்லதுஅல்லது பருப்பு ஆலையில் வேலைவாய்ப்பு பருப்பு ஆலையில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | தொழிலாளர்களின் வகைகள் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( நாளொன்றுக்கு) ( ரூ . காசு.) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1 | ஹமாலிஸ் (மூட்டை சுமந்து செல்பவர்கள்) | 335.50 |
| 2 | மூட்டையை எடையிடும் கட்டா மஸ்தூர்கள் | 331.00 |
| 3 | மூட்டை தைப்பவர்கள் | 331.00 |
| 4 | உமியை சுமந்து செல்பவர்கள் | 324.00 |
| 5 | பலவகைத் தொழிலாளர்கள் உட்பட மஸ்தூர்கள் | 324.00 |
| 6 | அரிசியை சுமந்து செல்பவர்கள் | 324.00 |
| 7 | பொறி (இஞ்சின்) இயக்குபவர் | 346.00 |
| 8 | மின்கம்மியர் | 346.00 |
| 9 | தீயணைப்பவர் | 325.00 |
| 10 | பொருத்துநர் | 331.00 |
| 11 | உமிநீக்குபவர் | 325.00 |
| 12 | மேலாட்கள் (Maistries) | 335.50 |
| 13 | இயந்திரகம்மியர் | 335.50 |
| 14 | எண்ணெய் இடுபவர்கள் | 324.00 |
| 15 | நெல் கொதிகலன் பணியாளர் | 331.00 |
| 16 | நெல் இயந்திர ஓட்டுநர்கள் | 324.00 |
| 17 | நெல் அரைவையாளர்கள் | 324.00 |
| 18 | பெருக்குபவர்கள் | 324.00 |
| 19 | தோல் (ஓடு) நீக்குபவர் | 324.00 |
| 20 | புடைப்பவர்கள் | 324.00 |
| 21 | நெல் ஊறவைப்பவர்கள் | 324.00 |
| 22 | நீரை எடுத்துச்செல்பவர்கள் | 324.00 |
| 23 | காவலாள் | 324.00 |
| 24 | அரிசி தீட்டுவதற்கு பணியமர்த்தப்பட்டுள்ள மஸ்தூர்கள் | 324.00 |
| 25 | அரிசியை அளப்பவர் | 325.00 |
| 26 | தானியம் அரைப்பதற்கு பணியமர்த்தப்பட்டுள்ள மஸ்தூர்கள் | 324.00 |
| 27 | பருப்பு உற்பத்தியாளர்கள் | 324.00 |
| 28 | சுமைதூக்குபவர் | 324.00 |
| 29 | ஏவலாட்கள் | 324.00 |
| 30 | தச்சர்கள் | 331.00 |
| 31 | வறுகடலைத்தொழிலாளர்கள் | 335.50 |
| 32 | எழுத்தர் | 9464 திங்களொன்றுக்கு |
| 33 | துணையாள் | 9130.00 திங்களொன்றுக்கு |
விளக்கங்கள்: (1) அகவிலைப்படி :விளக்கங்கள்: (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், நாளொன்றுக்கு ரூ. 1.98 (ஒரு ரூபாய் தொண்ணூற்றெட்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில்) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டிணை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) (i) நாட்கூலி ஊதிய வீதங்களிலும் அகவிலைப்படியிலுல் விடுமுறை ஊதியங்களும் அடங்கும்.
(ii) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதிய வீதத்தை 26- ஆல் வகுக்க வேண்டும்.
(iii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் தற்போது வழங்கப்பட்டு வரும் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
[அரசாணை (ப) எண் 617, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2025.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடுவதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோரப்பட்டுள்ளவாறாக அதனால் பாதிக்கப்படக்கூடிய அவைைரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர் இந்த வரைவு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறும் யாதொரு மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, டி.எம்.எஸ். வளாகம், சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
11வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 06.07.2022 ஆம் நாளிட்ட தமிழ்நாடுதமிழ்நாடு அரசிதழின்அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 833 முதல் 834 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/தொ.ந.தி.மே/538/2022 ஆம் எண் அறிவிக்கைக்குப் பதிலிட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் இரசாயன உரத் தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்காணும் விவர அட்டவணையின் நெடும்பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)க்கு நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
இரசாயன உரத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்புஇரசாயன உரத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு
| பணியாளர்களின் வகைகள் ( 1 ) | குறைந்தளவு ஊதிய வீதங்கள் ( திங்களொன்றுக்கு) ரூ . காசு. ( 2 ) |
| 1. நிருவாகப் பணியாளர்கள்: | |
| (1) மேலாளர் | 11187.00 |
| (2) எழுத்தர்/தட்டச்சர்/கணக்காளர் | 9424.00 |
| (3) ஓட்டுநர்/பண்டக சாலைக் காப்பாளர் | 9170.00 |
| (4) அலுவலக உதவியாளர் | 8668.00 |
| 2. 2. பணியா பணியாளர்கள் வகை ளர்கள் வகைப்பாடு ப்பாடு:: | |
| (1) நன்கு பயிற்சிபெற்றவர்கள்: தொழில்நுட்பமேற்பார்வையாளர்/வேதியியலர் | 10557.00 |
| (2) பயிற்சிபெற்றவர்கள்: இயக்குநர்/தொழில்நுட்பவியலர்/மின்னியலர் | 9676.00 |
| (3) பயிற்சி பெறாதவர்கள்: பொதுவான பணியாளர்கள்/ உதவியாளர்/நிரப்புபவர் | 9169.00 |
விளக்கங்கள்:-(1) அகவிலைப்படி.-விளக்கங்கள்:-(1) அகவிலைப்படி.- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது, 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்), 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், திங்கள் ஒன்றுக்கு ரூ. 53.80 (ஐம்பது மூன்று ரூபாய் எண்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, முந்தைய 12 மாதங்களுக்கான அதாவது ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட, முதல் கண் க்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) நாள் ஊதியத்தை கணக்கிடுவதற்கு மாத ஊதியத்தை 26ஆல் பெருக்க வேண்டும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது ஆண், பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
(5) இரசாயன உரத் தொழிற்சாலையில் பணிபுரியும் பாதுகாப்புப் பணிகளின் வகைப்பாட்டினருக்கு பாதுகாப்புக் காவலர்கள் பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட/திருத்தியமைக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்கள் பொருந்தும்.
[அரசாணை (ப) எண். 618, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2025.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு வெளியிடக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து நபர்களின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு பின்னர் பின்வரும் வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும், என்றும் மேற்சொன்ன கால அளவு12 முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறுக்கூடிய யாதொரு மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, தொழிலாளர் ஆணையர், டி.எம்.எஸ். வளாகம், சென்னை-600 006 வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 06-07-2022ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழிதமிழ்நாடு அரசிதழின்ன் பாகம் II—பிரிவு-2 இல் 844 மற்றும் 845 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LWSD/543/2022 ஆம் எண்ணிட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். தமிழ்நாடு மாநிலத்தில் அச்சகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
அச்சகத் தொழிலில் வேலைவாய்ப்புஅச்சகத் தொழிலில் வேலைவாய்ப்பு
| பணியாளர்களின் வகைகள் ( 1 ) | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் மாதமொன்றுக்கு) ( 2 ) | ||
| மண்டலம்-A | மண்டலம்-B | மண்டலம்-C | |
| ரூ . காசு | ரூ . காசு | ரூ . காசு | |
| i ( ) | i i ( ) | i i ( ) | |
| தொகுதி-II தொகுதி- கணக்காளர், முதலாள் மற்றும் மேற்பார்வையாளர் | 8087.00 | 7712.00 | 7554.00 |
| தொகுதி-IIII தொகுதி- எழுத்தர், காசாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், நேரக்காப்பாளர், ஒற்றை வண்ண அச்சு இயந்திரத்தை இயக்குபவர் (Mono -operator), தனி அச்சு வார்ப்பாளர் (Mono-caster), லைன்-ஆபரேட்டர், மறுதோன்றி (off-Set) அச்சிடுபவர், ஓவியர், ஒளிப்படம் பிடிப்பவர் (கேமராமேன்), அச்சு பதிப்பவர் மற்றும் தானியங்கி இயந்திரத்தை இயக்குபவர். | 7872.00 | 7508.00 | 7322.00 |
| III தொகுதி-III தொகுதி- ஒப்பு நோக்கர், உருளை மிதியச்சு இயந்திரத்தை இயக்குபவர், நிலை அச்சுப்பதிவுத்தகடு உருவாக்குபவர் (Plate Maker), மின் கம்மியர், அச்சு கோப்பவர், கட்டுநர், கோடு வரைபவர், கடைபவர் மற்றும் ஃபீடர். | 7656.00 | 7291.00 | 7118.00 |
| தொகுதி-IVIV தொகுதி- சுழற்றுபவர், (wheeler), உதவியாள், அலுவலக வேலையாள் (ஏவலாள், காவலாள்) சிப்பமிடுபவர் மற்றும் தொழில் பழகுநர். | 7366.00 | 6985.00 | 6944.00 |
விளக்கங்கள்: (1) மண்டலங்களின் வகைப்பாடுகள்விளக்கங்கள்: (1) மண்டலங்களின் வகைப்பாடுகள்-A, B மற்றும் C மண்டலங்கள் கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
(i)(i) மண்டலம்- மண்டலம்-AA: : அனைத்து மாநகராட்சிகள் மற்றும் சிறப்புநிலை நகராட்சிகள்
(ii)(ii) மண்டலம்- மண்டலம்-BB:: சிறப்பு நிலை நகராட்சிகள் நீங்கலாக அனைத்து நகராட்சிகள்
(iii) (iii) மண்டலம்- மண்டலம்-CC:: மண்டலம்-A மற்றும் மண்டலம்-B இல் குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்கலாக ஏனைய அனைத்துப் பகுதிகள்
(2) அகவிலைப்படி:அகவிலைப்படி: மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
13(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூ. 43.10 (நாற்பத்து மூன்று ரூபாய் மற்றும் பத்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளில் அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.
(5) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களை, காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை (ப) எண் 619, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2025.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதப்பட்டுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் யாதொரு மறுப்புரையை அல்லது கருத்துைரயை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எதேனுமிருப்பின், அதனை தொழிலாளர் ஆணையர், சென்னை-600 006 வழியாக அரசு செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 06-07-2022 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு 2 இல் 848 மற்றும் 849 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/LWSD/546/2022 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் அப்பளம் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (2)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
அப்பளம் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்புஅப்பளம் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
| பணியாளர் வகையினர் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | ||
| மண்டலம்-1 ( ரூ . காசு) | மண்டலம்-2 ( ரூ . காசு) | ||
| (1) | (2) | ||
| (1) | சிப்பமிடுபவர் | மாதமொன்றிற்கு 9116.00 | மாதமொன்றிற்கு 8917.00 |
| (2) | கணக்காளர் | மாதமொன்றிற்கு 9302.00 | மாதமொன்றிற்கு 9116.00 |
| (3) | எடையிடுபவர்/உதவியாள் | மாதமொன்றிற்கு 9116.00 | மாதமொன்றிற்கு 8917.00 |
| (4) | நறுக்குதல் (100 கிலோ கிராம் ஒன்றுக்கு) | 749.00 | 565.27 |
| (5) | கலவை (100 கிலோ கிராம் ஒன்றுக்கு) | 876.79 | 646.05 |
| (6) | அப்பளம் தாயாரித்தல் | 14.53 | 10.44 |
| (i) அப்பளங்கள் (3 அங்குலம்) அல்லது 7.6 செ.மீ. (விட்டம்), 100 எண்ணிக்கை (300 கிராம்) | |||
| (ii) அப்பளங்கள் (4 அங்குலம்) அல்லது 10.2 செ.மீ. (விட்டம்), 100 எண்ணிக்கை (400 கிராம்) | 18.56 | 13.69 | |
| (iii) அப்பளங்கள் (5 அங்குலம்) அல்லது 12.7 செ.மீ. (விட்டம்), 100 எண்ணிக்கை (500 கிராம்) | 27.47 | 20.20 | |
| (iv) அப்பளங்கள் (6 அங்குலம்) அல்லது 15.2 செ.மீ. (விட்டம்), 100 எண்ணிக்கை (700 கிராம்) | 30.68 | 22.67 |
விளக்கங்கள்:விளக்கங்கள்:-(1) மண்டலம்-I மற்றும் மண்டலம்-II இல் பின்வரும் பகுதிகள் அடங்கும் :—
மண்டலம்:-மண்டலம்:-I:I: அனைத்து மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை மற்றும் தேர்வுநிலை நகரியங்கள் உட்பட சிறப்பு நிலை மற்றும் தேர்வுநிலை நகராட்சிகள்.
மண்டலம்:மண்டலம்:-II: ஏனைய பகுதிகள்.
(2) அகவிலைப்படி: அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:—
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ. 55.38 (ஐம்பத்தைந்து ரூபாய் முப்பத்தெட்டு காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளன்று கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டில் சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிட மாத ஊதியத்தை 26ஆல் வகுக்கவேண்டும்.
(5) இங்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை (ப) எண் 620, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 07 நவம்பர் 2025.] 1948ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதப்பட்டுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், என்றும் மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்தும் வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை தொழிலாளர் ஆணையர், டி.எம்.எஸ்.வளாகம், சென்னை-600 006 வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 29-06-2022 ஆம்15 நாளிட்ட தமிழ்நாடுதமிழ்நாடு அரசிதழின்அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல் 821 மற்றும் 822 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின், II(2)/LWSD/517/2022 ஆம் எண் அறிவிக்கையின் பதிலிட்டகற்றீடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். தமிழ்நாடு மாநிலத்தில் அடுமனைகள் மற்றம் பிஸ்கெட் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புத்தொழிலில் வேலைவாய்ப்பு
அடுமனைகள் மற்றும் பிஸ்கெட் தயாரிப்புத்தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | பணியாளர் வகையினர் | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ.காசு) |
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| 1. பொது வகைப்பாடுகள் 1. பொது வகைப்பாடுகள் | ||
| 1. | மேலாளர் | மாதமொன்றுக்கு 10231.00 |
| 2. | உதவி மேலாளர் | மாதமொன்றுக்கு 9717.00 |
| 3. | காசாளர் / எழுத்தர் | மாதமொன்றுக்கு 9066.00 |
| 4. | தட்டச்சர் | மாதமொன்றுக்கு 9066.00 |
| 5. | விற்பனையாளர் | மாதமொன்றுக்கு 9066.00 |
| 6. | பண்டக சாலை உதவியாளர் | மாதமொன்றுக்கு 8898.00 |
| 7. | ஓட்டுநர் | மாதமொன்றுக்கு 8898,00 |
| 8. | காவலாள்/ஏவலாள் | மாதமொன்றுக்கு 8464.00 |
| 2. ஏனைய வகைப்பாடுகள்: 2. ஏனைய வகைப்பாடுகள்: உயரளவு பயிற்சி பெற்றோர்: உயரளவு பயிற்சி பெற்றோர்: | ||
| 1. | அடுமனை மேலாள் | நாளொன்றுக்கு 342.00 |
| 2 | ஏனைய யாதொரு உயரளவு பயிற்சி பெற்ற வகையினர் | |
| பயிற்சி பெற்றோர்: பயிற்சி பெற்றோர்: | ||
| 1 | மேற்பார்வையாளர் | நாளொன்றுக்கு 321.00 |
| 2. | தலைமை அடுமனையாளர் | |
| 3. | மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு பயிற்சி பெற்ற வகையினர் | |
| ஓரளவு பயிற்சி பெற்றோர்: ஓரளவு பயிற்சி பெற்றோர்: | ||
| 1. | அடுமனையாளர் | நாளொன்றுக்கு 303.00 |
| 2. | அடுப்பு பராமரிப்பாளர் | |
| 3. | மேசைப்பணியாளர் | |
| 4 | மாவு தயாரிப்பவர் | |
| 5. | பன்னை வட்டமாக்குபவர் | |
| 6. | ரொட்டி வார்ப்பவர் | |
| 7. | மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு ஓரளவு பயிற்சி பெற்ற வகையினர் | |
| பயிற்சி பெறாதோர்: பயிற்சி பெறாதோர்: | ||
| 1 1 | உதவி அடுமனையாளர் | நாளொன்றுக்கு 283.00 |
| 2.2. | துணையாளர்/உதவியாளர்கள் | |
| 3.3. | அனைத்து வகையைச் சேர்ந்த தூய்மை செய்பவர் | |
| 4.4. | அனைத்து வகையைச் சேர்ந்த உதவியாளர் | |
| 5.5. | மேற்சொன்னவற்றின் கீழ் இடம் பெறாத ஏனைய யாதொரு பயிற்சி பெறாத வகையினர் |
விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி :விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
16(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ. 1.74 (ஒரு ரூபாய் எழுபத்து நான்கு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில், சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள். இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
[அரசாணை (2ப) எண். 44, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2025.] 1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 07.07.2021 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II - பிரிவு 2-இல் 246 மற்றும் 247 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/378/2021ஆம் எண் அறிவிக்கைக்கு பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கையால் தயாரிக்கப்படும் காகிதம் தொழிலகத்துடன் தொடர்புடைய காகிதம் மற்றும் ஏனைய இடைநிகழ்வு செய்முறைகள் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அதன் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவை சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
கைகளால் தயாரிக்கப்படும் காகிதம் தொழிலகத்துடன் தொடர்புடைய காகிதம் மற்றும் ஏனைய இடைநிகழ்வு செயல்முறைகள் தொழிலில் வேலைவாய்ப்பு
| பணியாளர்களின் வகைகள் ( 1 ) | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் மாதமொன்றுக்கு ( ரூ . காசு) ( 2 ) |
| (1) பயிற்சி பெறாதோர்: (1) பயிற்சி பெறாதோர்: | 6928.00 |
| (i) வகைப்படுத்துபவர் | |
| (ii) காகிதக் கட்டுகளை அழுத்துபவர் | |
| (iii) கூழ்ப்படுத்துவர் | |
| (iv) காகிதத்தை உருளை இயந்திரத்தில் அழுத்தி மெருகேற்றுபவர் | |
| (v) காகிதக் கட்டுகளை சுமப்பவர் | |
| (vi) தாள் நறுக்குபவர் | |
| (vii) சீராக்குபவர் | |
| (viii) சிப்பமாக்குபவர் | |
| (2) ஓரளவு பயிற்சி பெற்றோர்: (2) ஓரளவு பயிற்சி பெற்றோர்: | |
| (i) மின் பணியாளர் | 7181.00 |
| (ii) பொருத்துநர் | |
| (iii) பற்றவைப்பவர் (3) பயிற்சி பெற்றவர்கள்: (3) பயிற்சி பெற்றவர்கள்: | |
| (i) மேலாளர் | 7687.00 |
| (ii) மேற்பார்வையாளர் / கணக்காளர் | 7434.00 |
| (4) பொது வகையினர்: (4) பொது வகையினர்: | |
| (i) ஓட்டுநர் | 718100 |
| (ii) ஏவலாள் / காவலாள் | 7119.00 |
விளக்கங்கள்:—விளக்கங்கள்:— (1) அகவிலைப்படி மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது. 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ. 43.00 (நாற்பத்து மூன்று ரூபாய் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது. சனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
(3) நாள் ஊதியத்தை கணக்கிட மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(4) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே அதிகளவு ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
கொ.வீர ராகவ ராவ்,
அரசுச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், (மொழிபெயர்ப்பு) (கூ.பொ) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.