© [Regd. No. TN/CCN/467/2012-14. தமிழ்நாடு அரசு [R. Dis. No. 197/2009. 2026 [விலை: ரூ. 0.80 காசுவிலை: ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 3] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 21, 2026 தை 7, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் டிசம்பர் திங்கள் 15 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:- அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண். 55/2025.சட்ட எண். 55/2025.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்திய குடியரசின், எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர்
மற்றும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
தொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
19 ஆம் 43/1997.
பிரிவிற்கான
திருத்தம்.
2. 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 19 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில். "அல்லது காது கேளாதவர்-வாய் பேசாதவர்" எனும் சொற்றொடரானது விட்டு விடப்படுதல் வேண்டும்.
221 ஆம் பிரிவிற்கான
மையச் சட்டம் திருத்தம்.
45/2023.
3. முதன்மைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவில், "இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்பின் 21 ஆம் பிரிவு" எனும் சொற்றொடருக்காக, "2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மையச் சட்டம் 45/2023) 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
58 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 58 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், "அல்லது காது கேளாதவர்-வாய் பேசாதவர்" எனும் சொற்றொடரானது, விட்டு விடப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,, அரசு செயலாளர், சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார், இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த்துறை.